1916ஆம் ஆண்டு ஏகாதிபத்தியம் பற்றி ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்றநூலை லெனின் எழுதினார். முதலாளித்துவ வளர்ச்சில் மிகவும் உயர்ந்த ஒரு கட்டம்தான்ஏகாதிபத்தியம் என்ற உண்மையை தகுந்த ஆதாரங்களுடன் லெனின் நிறுவினார். சமூகவளர்ச்சியில் ஏகாதிபத்திய காலகட்டத்திற்குப் பிறகு சோசலிசக் கட்டமாகத்தான் சமூகம் மாறும்என்றும் அதற்கு இடையில் வேறு எந்தவொரு கட்டமும் இல்லை என்றும் லெனின் விளக்கியுள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனாவில் புரட்சிகள் நடந்து அங்கு சோசலிச சமூகம் உருவானது. அங்கு உருவானசோசலிசமும் வீழ்த்தப்பட்டது. அங்கு முதலாளிகளின் ஆட்சி வீழ்த்தப்பட்டாலும், முதலாளித்துவவர்க்கங்கள் வீழ்த்தப்படவில்லை. முதலாளித்துவ கருத்துக்களின் செல்வாக்கிலிருந்து மக்கள்முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், சோசலிசத்தை கட்டியமைப்பதற்கு முன் அனுபவங்கள் இல்லாததாலும் அங்கு சோசலிசம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவம் மீட்க்கப்பட்டது. ஆகவே தற்போது உலகில் எங்கும் சோசலிச ஆட்சி இல்லை. ஆகவே உலகெங்கிலும் ஏகாதிபத்திய முதலாளிகளின் ஆட்சியே நடந்துகொண்டிருக்கிறது. இந்தஏகாதிபத்தியங்களின் ஆட்சியை வீழ்த்தி சோசலிச ஆட்சியைப் படைப்பதுதான் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளின் கடமையாக உள்ளது. அந்த லட்சியத்தை கம்யூனிஸ்டுகள் அடைய வேண்டுமானால் ஏகாதிபத்தியம் பற்றி லெனின் சொன்ன கருத்துக்களை ஆழமாகப் படித்து புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.
ஏகாதிபத்தியம் பற்றிய கருத்துக்களை லெனின் முன்வைத்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டபடியாலும், இந்த நூறு ஆண்டுகளில் ஏகாதிபத்தியமானது பல்வேறு மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும், ஆகவே இன்றைய சூழலுக்கு ஏகாதிபத்தியம் பற்றி லெனினால் வகுத்துக்கொடுத்த கோட்பாடுகள் பொருந்தாது என்றும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக்கொள்கைகளை முழுமையாக சிலர் மறுக்கிறார்கள்.
இரண்டாவது வகையினர், ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கோட்பாடுகள் இன்றும்பொருந்தும் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். எனினும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கருத்துக்களை திருத்தி லெனினுக்கு எதிரான கொள்கைகளை லெனினது கொள்கைபோல் சித்தரித்து லெனினியக் கொள்கைகளை நரித்தந்திரமாக மறுக்கிறார்கள். லெனினைத் திருத்தும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனென்றால் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கொள்கைகளை ஆதரிப்பதாக நடித்து லெனினியவாதிகளை இவர்கள் தந்திரமாகஏமாற்றுகிறார்கள்.
மூன்றாவது பிரிவினர்தாம் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கொள்கைகளை உள்ளது உள்ளபடி பார்த்து தெளிவாக புரிந்துகொண்டு அவர்களின் அரசியல் கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கொள்கைகளை உண்மையிலேயே லெனினுக்கு விசுவாசமாகப் பயன்படுத்துகிறார்கள்.
நேற்றைய வகுப்பு ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் விவாதம் ஒலிவடிவில்
ஆகவே ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கொள்கைகளை அறிய ஏகாதிபத்தியம் பற்றி லெனின்எழுதியவற்றை படித்து நமக்கிடையே விவாதித்து தெளிவான முடிவிற்கு வருவது இன்றையகாலத்தில் அவசியமான பணிகளில் ஒன்றாகும். ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக்கொள்கைகளை மறுப்பவர்களும், லெனினை திருத்தி ஏமாற்றுபவர்களும் உழைக்கும் மக்களின்எதிரிகள்தாம் என்ற உண்மையை புரிந்துகொள்ள இந்த படிப்பு மிகவும் அவசியமாகும்.
அதற்கான அறிமுகமாகவே இந்த கட்டுரையை இலக்கு கொண்டுவருகிறது.
"ஏகாதிபத்தியக் காலகட்டம் சோசலிசப் புரட்சியின் தறுவாயாகும்" என்றார் லெனின். அதாவதுஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்கள், பாட்டாளி வர்க்கமும்மற்ற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு சோசலிசப் புரட்சியை நடத்துவதைத் தவிர தங்களதுவிமோசனத்திற்கு வேறு வழியில்லை என்று உணர்வதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. இந்தசூழலை நன்கு உணர்ந்த கம்யூனிஸ்டுகள் அதனை உழைக்கும் மக்களிடம் கொண்டுசென்றுமக்களைத் திரட்டி சோசலிசப் புரட்சியை நடத்துவதற்கு பாடுபட வேண்டும். இவ்வாறுகம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டி போராடுவதன் மூலம் மட்டுமே சமூகம் சோசலிச சமூகமாகமாறும் என்றே லெனின் கூறுகிறார்.
"சமூக தேசிய வெறியானது (சொல்லில் சோசலிசமும், செயலில் தேசிய வெறியும்) சோசலிசத்திற்குஅறவே துரோகமிழைத்து முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்புக்கு முழுமையாகத்துறந்தோடிவிடுவதாகும்" என்றார் லெனின். ஏகாதிபத்தியக் காலகட்டமானது சோசலிசத்தின்
அவசியத்தை உணர்த்தக்கூடியதாக இருக்கும் அதே வேளையில் சோசலிசத்துக்கு அறவேதுரோகமிழைக்கும் அரசியல் சக்திகள் உருவாவதற்கும் காரணமாக இருக்கிறது என்பதை லெனின்இங்கே நமக்கு நினைவூட்டுகிறார். முரண்பாடு அனைத்தும் தழுவியது என்ற பொருள்முதல்வாதக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே இங்கே இரண்டு எதிர்எதிரான சூழல்கள் ஏற்படுகிறது என்றுலெனின் நமக்கு விளக்குகிறார். இந்த இரண்டு எதிர்மறைகளுக்கு இடையிலான போராட்டத்தில்சோசலிசத்திற்காகப் போராட விரும்பும் சக்திகள் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கே சோசலிசப்புரட்சி நடக்கும். ஆகவே நாம் இந்த எதிர்மறைகளில் சோசலிசத்திற்காக போராடும்சக்திகளையும், அதற்கான கொள்கைகளையும் அடையாளம் காணவேண்டும். அதற்கு நமக்குலெனின் மட்டுமே வழிகாட்டுகிறார்.
தொழிலாளி வர்க்கத்திற்காக, சோசலிசத்திற்காகப் பாடுபடுபவர்கள் ஒருபுறமும், தொழிலாளிவர்க்கத்திற்கும், சோசலிசத்திற்கும் துரோகம் செய்து எதிரியாகமாறி முதலாளிகளுக்காகப்பாடுபடுபவர்களும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள்ளேயே இரண்டு பிரிவாக பிளவுண்டுஇருப்பதற்கு காரணமே இந்த ஏகாதிபத்திய முதலாளிகள்தான் என்று லெனின் கூறினார்.
தொழிலாளி வர்க்க இயக்கம் பல பிரிவுகளாக பிளவுண்டு இருப்பதற்கு இந்த ஏகாதிபத்தியம்தான்முக்கியமான காரணம் என்பதை இப்போதும் கம்யூனிச அமைப்பின் தலைவர்கள்புரிந்துகொள்ளவில்லை. ஆகவே ஏகாதிபத்தியத்தைப் பற்றி புரிந்துகொள்வதும் அதன் சதிச்செயல்களை புரிந்துகொண்டு உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களைஎச்சரித்து பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
ஏகாதிபத்திய காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் பிற பின்தங்கிய நாடுகளின் மீது போர் தொடுத்துஅந்த நாடுகளை கைப்பற்றுவது நடந்தது. அத்தகைய பிரதேசங்களை கைப்பற்றுதலைமுதலாளிகளின் தரப்புக்கு ஓடிவிட்ட சில கம்யூனிஸ்டுகள் (போலி கம்யூனிஸ்டுகள்)வெட்க்கமில்லாமல் மூடிமறைத்து பல பொய்களைச் சொன்னார்கள்.
தற்போதும் ஏகாதிபத்திய நாடுகள் பின்தங்கிய நாடுகளின் மீது வெளிப்படையாக பொருளாதாரஆதிக்கத்தையும் இராணுவ ஆதிக்கத்தையும் செய்து வருகிறார்கள். மேலும் மறைமுகமாகஅரசியல் ஆதிக்கம், இரகசியமான ஒப்பந்தங்கள் போடுவதன் மூலம் செய்து வருகிறார்கள்.இவர்களால் போடப்படும் மூலதனத்தின் மூலம் நாடு தொழில்துறையில் முன்னேறும் என்றபொய்யைச் சொல்லி ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்தை மூடிமறைக்கும் போலிகம்யூனிஸ்டுகளை இப்போதும் நாம் பார்க்கலாம்.
அடிப்படை பொருளாதாரப் பிரச்சனையை, அதாவது ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரசாராம்சத்தை பற்றி நாம் தெரிந்துகொள்வதற்காக லெனினால் எழுதப்பட்ட நூல்தான்ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலாகும். எனினும் பொருளாதாரத்திற்குதொடர்பான அரசியல், இராணுவம் போர் போன்ற பிரச்சனைகளையும் அந்த நூலில் லெனின்அலசி ஆராய்கிறார். இந்தப் பிரச்சனைகளை ஆராய்ந்து அறிந்துகொள்ளாமல், தற்காலயுத்தங்களையும், தற்கால அரசியலையும் நாம் புரிந்துகொள்ளவும் முடியாது, மதிப்பீடு செய்யவும்முடியாது என்று லெனின் விளக்கியுள்ளார். ஆகவே இந்தியத் துணைக்கண்டத்தின்பொருளாதாரம், அரசியல் போன்றவற்றை நாம் புரிந்துகொண்டு, மதிப்பீடு செய்து நாம் செல்லவேண்டிய பாதையை தீர்மானித்து செயல்பட வேண்டுமானால் ஏகாதிபத்தியம் பற்றிய லெனியகோட்பாடுகளை படித்து உள்வாங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மறுக்கமுடியாத முதலாளித்துவ புள்ளிவிவரச் சுருக்கத் தொகுப்புகளையும், எல்லா நாடுகளையும்சேர்ந்த முதலாளித்துவ அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்படும் உண்மைகளையும்அடிப்படையாகக் கொண்டு, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அதாவது முதல் உலகஏகாதிபத்திய யுத்தத்தின் தறுவாயில், உலக முதலாளித்துவ அமைப்பை அதன் சர்வதேச உறவுமுறைகளில் காட்டும் ஒரு தொகுப்புச் சித்திரத்தை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின்உச்சகட்டம் என்ற நூலில் வகுத்தளித்தார்.
இப்போதும் 21ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய முதலாளிகள் அவர்களின் அடிப்படைபண்புகளை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் கொடூரமான முறையிலான ஆட்சிக்கு அதாவதுபாசிசத்தை கட்டியமைக்கும் முறைக்குத்தான் மாறி இருக்கிறார்கள். அவர்களின் பொருளாதாரநிலைமைகளும் அளவுரீதியாக பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறார்கள் என்பதை முதலாளித்துவபுள்ளிவிவரங்களிலிருந்து லெனின் செய்தது போல் ஆய்வு செய்து இப்போதும் ஏகாதிபத்தியம்பற்றிய லெனினது கோட்பாடுகள் பெருந்தும் என்பதை நாம் நிருபிக்க வேண்டியது நமதுகடமையாகும். ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாட்டை அவர்கள் எப்படிகையாளுகின்றார்கள் என்பது பற்றிய ஆய்வு முதன்மையாகும். அதனை தெரிந்துகொள்வதன்மூலமே நமது போர்த்தந்திர திட்டத்தை நாம் வகுக்க முடியும்.
No comments:
Post a Comment