மேலும் நேற்றைய பேச்சின் மேலோட்டமான ஒரு பங்களிப்பு. 1.30 மணி நேரம் பேசப் பட்ட இந்த தலைப்பை முழுமையாக கொண்டு செல்ல தோழர் ஞானசூரியன் முயற்சித்தார் தோழர் ரவீந்திரன் இன்றுள்ள நிலையை பற்றி விளக்கினார் இருந்தும் விவாதம் முடியாமையால் அடுத்த வாரம் ஆம் 11/09/2022 அன்று இரவு 8.30 மணியளவில் இதன் தொடர்ச்சி இருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். தலைப்பை உள்வாங்கி விவாதித்தால் பயனளிக்கும் என்பதே எனது கருத்து.
நேற்றைய விவாதம் சுருக்கமாக:-
சாதியமைப்பு பற்றிய கருத்தாக்கங்கள் நான்கு விதமான ஆய்வு விளக்கங்களை கல்வியாளர் மட்டத்தில் பாமரமக்கள் மட்டத்திலும் நிலவுகின்றன இவை பற்றிப் பார்ப்போம்.
முதலாவதானது மிகவும் பரவலாக இருக்கிறது இவை ஆரிய சித்தாந்தமாகும் இக்கருத்தின் படி ஆரிய படையெடுப்பாளர்கள் சுதேசி மக்களை அடிமைப் படுத்திய விதத்தில் மூலமாக சாதிகள் தோன்றின என்பதாகும் இதனை ஒருசில மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொண்ட போதிலும் இதற்கு அடிப்படை தோற்றுவாய் ஜோதிராவ் புலே பெரியார் ஆகியோருடன் எழுத்துக்களும் பிராமண எதிர்ப்பு இயக்கமும் ஆகும். சாதிகள் கடவுளால் படைக்கப்பட்டது அவற்றை மாற்ற இயலாது என்ற பழமையான மதவாதிகள் கூறும் விளக்கத்தை காட்டிலும் முற்போக்கான கருத்தாக இது உள்ளது.
இனக் கோட்பாடு
ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்.
அம்பேத்கரின் கூற்று
ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்.
இந்திய சமூக அமைப்பை வர்க்கங்களாக ஒன்றிணைக்க முடியாது
என்று அம்பேத்கார் முதல் பலரும் வற்புறுத்தி வந்தனர். இன்னொரு பக்கத்தில் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி பல்வேறு விதமான போராட்டங்களில் மக்கள் ஜாதிகளை கடந்து தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி உள்ளனர் என்பதை கண்கூடாக
காணலாம். இவை ஜாதிகள் இங்கே தடையாக இல்லை என்பது மக்கள் போராட்டங்களை கட்டமைத்த போது கண்கூடான உண்மை அல்லவா?
சரி, ஜாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது, அகமணமுறை
ஏற்றுக்கொண்டது.
இந்திய சாதி
அமைப்பு முறையை ஆராய்ந்த பலரும் பல்வேறு கருத்துகளை முன் வைத்தாலும்,
மார்க்சிய தத்துவம் மட்டுமே இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கி கூறியதாகும்.
அதாவது உலகில் உள்ள
மற்றச் சமூகப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச்
சிறப்புகள் உண்டு.
இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.
நிலபிரப்புத்துவ
அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது
இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது.
சாதியை ஆரியர்கள்தான்
(பிராமணர்கள்தான்) உருவாக்கினர் என்பதோ
திராவிடர்கள் தமிழர்கள்தான் உருவாக்கினர் என்பதோ அறிவியல் பூர்வமான (இயக்கவியல் பொருள்முதல்வாத) மார்க்சிய விரோதமான
ஒன்றே.
சாதியானது இந்திய
சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக் கொண்டு சூழலுக்கேற்ப்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும்
சுரண்டல் வடிவமாக உருபெற்ற போது அதற்க்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின்
இருதலுக்கு பங்காற்றியது இந்து மத பிராமணியமே அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில்
அடங்கி உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுகமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது.
நிலப்பிரபுத்துவத்திற்க்கு
முந்தைய உற்பத்தி முறையிலேயே சாதி கருக் கொண்டிருந்தாலும் அவை திடமாக
நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது.
சாதியம் என்பது
மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்லா…
இவை தனி உடைமை தேவையை ஒட்டி சொத்து
சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல
வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும்,
அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த
சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை
உருபெற்றது.
சாதி மற்றும் தீண்டாமை என்பது இந்துமதம் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது. சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும்.
இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதால் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமய மாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்ற தாழ்வை போக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது..
No comments:
Post a Comment