கவிதா கிருஷ்ணன் அவர்கள் சிபிஅய்(எம்-எல்)லிபரெசனில் இருந்து வெளியேறிய பொழுது வைத்த குற்றசாட்டுகளுக்கு அந்த அணி பதிலளிக்கவில்லை அதே போன்று வலதுசாரிகள் அதனை தூக்கி நிறுத்தியிருந்தவை ஏன் என்பதனை பற்றி ஒரு சிறிய அலசல் இந்தக் கட்டுரை உங்களின் மேலான விவாதத்தை தொடக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கவிதா கிருஷ்ணன், ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர். தொண்டு நிறுவனம் என்பது உழைக்கும் மக்களுக்கு ஆதரவானவர்கள் போல் நடித்துக்கொண்டு, உழைக்கும் மக்களை சுரண்டி வாழும் முதலாளிகளுக்கு ஆதரவாக உழைக்கும் மக்களை ஏமாற்றும் கொள்கை கொண்டவர்கள்தான் இந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் கவிதா கிருஷ்ணன் என்பவர் உழைக்கும் மக்களுக்காக பாடுபடுவது போல் நடிக்கும், உழைக்கும் மக்களை ஏமாற்றும் துரோகிதான். தற்போது உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள்தான் உலகெங்கிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். இந்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் மக்கள் சந்திக்கும்
எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாத நிலையில் உள்ளார்கள். ஆகவேதான் உழைக்கும் மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தயாரில்லாத இந்த ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
உதாரணமாக இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம், வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம், தமிழ்நாட்டில் நடைபெற்ற மெரினா
கடற்கரை போராட்டம், தூத்துக்குடி போராட்டம் போன்றவைகளை ஒடுக்குவதற்கு பல்வேறு முறைகளை ஆளும் வர்க்க ஆட்சியாளர்கள் கையாண்டார்கள். ஆனாலும் இந்த அடக்கு முறைகளின் மூலம் மட்டுமே உழைக்கும் மக்களை அடக்கிவிட முடியாது. ஆகவே ஆளும் வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களும் கவிதாகிருஷ்ணன் போன்ற மக்களின் துரோகிகளை பயன்படுத்திமக்களிடையேயும்,மக்களுக்காகப் பாடுபடும் முன்னணிகளிடமும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் கோபத்திலிருந்து ஆளும் வர்க்கங்களும், அதன் அரசியல்வாதிகளும், அதன் ஆட்சியாளர்களும் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் சமூக இயக்கமானது இவர்கள் நினைப்பது போன்று இருக்காது. வறுமையில் வாடுபவர்கள் எப்போதும் ஒரே மாதிரி இவர்களை நம்பி ஏமாந்து கொண்டேஇருக்க மாட்டார்கள். மக்களை ஏமாற்றும் இத்தகைய துரோகிகளை நிச்சயமாக அடையாளம் கண்டு கொள்வார்கள். இவர்களை புறக்கணித்துவிட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும் அவர்களின் ஆட்சிக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவார்கள். ஒன்றுபட்ட உழைக்கும் மக்கள் புதிய உலகத்தை படைப்பார்கள்.
தோழர் ஸ்டாலினைப் பற்றியும் சோசலிச சோவியத்து ஆட்சியைப் பற்றியும் இந்த கவிதாகிருஷ்ணன் முன்வைக்கும் கருத்து என்ன? ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவில் சோசலிசம் என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சி நடந்ததாக இவர் கூறுகிறார். முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு அரசு முறை உண்டு அது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்தான் என்று மார்க்ஸ் முதல் லெனின், ஸ்டாலின் மாவோ வரை கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாகவே கூறியுள்ளார்கள். அதனை கம்யூனிஸ்டுகள் மூடி மறைத்தது இல்லை.
இதற்கு மாறாக முதலாளித்துவவாதிகள் தான் அனைத்து மக்களுக்கான ஜனநாயகம் என்று சொல்லி முதலாளித்துவ சர்வாதிகாரஆட்சியை உலகெங்கும் நடத்திவருகிறார்கள்.
முதலாளித்துவவாதிகள் எப்படி ஜனநாயகம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி முதலாளித்துவசர்வாதிகாரத்தைசெயல்படுத்து கிறார்களோ அதே கருத்தைத்தான் கவிதா கிருஷ்ணன் அவரது பாணியில் சொல்லி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை எதிர்க்கிறார்.
ஸ்டாலினை சர்வாதிகாரி என்று சொல்லி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பதுதான் இவர்களது கொள்கையாகும். அதன் மூலம் ஜனநாயகம் என்று பொதுவாகச் சொல்லிமுதலாளித்துவ சர்வாதிகாரத்துக்கு இவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள்.
எனினும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ரஷ்யாவில் நடைமுறைப் படுத்துவதில் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி தோல்வியடைந்தது. அதாவது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ சர்வாதிகாரத்தை கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் ஊடுருவிய அதிகார வர்க்கத் தன்மை கொண்டவர்கள் மாற்றிவிட்டார்கள் என்பது உண்மையே. தோழர் ஸ்டானினது கவனம் அதிகமாக சோசலிசத்துக்கும், கம்யூனிசத்துக்கும் அடிப்படையான பொருளாதார வளர்ச்சி அதாவது உற்பத்தியை மேலும் மேலும் சமூகமயமாக்குவதில் குவிந்துஇருந்தது. மேலும் ஜெர்மனியரின் ஆக்கிரமிப்புப் போரால் ரஷ்யா மிகக் கடுமையானஇழப்புகளை சந்தித்து இருந்தது. அந்த இழப்புகளை சீர்செய்து மீண்டும் ரஷ்யாவில்தொழில்துறையை முன்னேற்றும் பணியில் ஸ்டாலின் ஈடுபட்டார். அதனால் அவரால்கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் ஊடுருவிய அதிகாரவர்க்கத்தினரை கண்காணித்துநடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனாலும் ஸ்டாலின் இருக்கும்வரை ஊடுருவிய அதிகார வர்க்கத்தினர் அங்கு முதலாளித்துவ மீட்சியை கொண்டுவர முடியவில்லை என்பது வரலாறு.ஸ்டாலினை கொலை செய்த பின்புதான், இந்த அதிகார வர்க்க நபர்களுக்கு ஆதரவு கொடுக்கும் குருஷேவ் ஆட்சிக்கு வந்த பின்புதான் சிறிது சிறிதாக சோசலிச பொருளாதார கொள்கையை கைவிட்டுவிட்டு இந்த அதிகாரவர்க்க நபர்களின் நலன்களுக்கான கொள்கையை கொண்டுவந்தார்கள். அப்போதும் அங்கே தனிநபர்கள் முதலாளிகளாக இருந்து உழைப்பின் பலன்களை நுகரவில்லை. மாறாக உழைப்பின் பலனில் பெரும்பகுதியை இந்த அதிகாரவர்க்க நபர்கள்தான் அனுபவித்தார் கள். ரஷ்யாவில் இந்த அதிகாரவர்க்க நபர்களின் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார்கள். ஆகவே ஸ்டாலின் காலத்திலிருந்த சர்வாதிகாரம்பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகும். ஸ்டாலினது மறைவிற்குப் பிறகுதான் இந்த அதிகார வர்க்கங்களின் சர்வாதிகாரம் அங்கு ஏற்பட்டது. இந்த உண்மையை ஸ்டாலினையும்சோசலிசக் கொள்கைகளை எதிர்க்கும் ஏகாதிபத்தியவாதிகளும், டிராட்ஸ்கியவாதிகளும் மூடி மறைத்துவிட்டு ஸ்டாலினையும் சோசலிச ஆட்சியையும் சர்வாதிகாரம் என்று சொல்லி உழைக்கும் மக்கள் கம்யூனிச கொள்கையின் பக்கம் வரவிடாமல் தடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.
ஆகவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கம்யூனிசத்தின் முக்கியத்துவத்தை போதித்து அவர்களுக்கு புரியவைப்போம். மேலும் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டவர்கள் போல் நடித்துக் கொண்டு கம்யூனிச கொள்களுக்கு எதிரான கொள்கையை பிரச்சாரம் செய்யும் டிராட்ஸ்கியவாதிகளையும் கவிதா கிருஷ்ணன் போன்ற துரோகிகளின் உண்மையான கம்யூனிச விரோத முகத்தை தோலுரித்துக் காட்டுவோம். கவிதா கிருஷ்ணன் போன்ற கம்யூனிச துரோகிகளைக் கண்டு கம்யூனிஸ்டுகள் சோர்வடைய வேண்டாம். கம்யூனிச கொள்கையை நோக்கி மக்கள் உலகம் முழுவதும் வந்துகொண்டிருக்கிறார்கள். அவ்வாறு கம்யூனிசத்தின் பக்கம் மக்கள் வருவதை தடுப்பதற்காகவே இந்த துரோகிகள் ஸ்டாலின் சர்வாதிகாரி என்றும் சோசலிச ஆட்சியே சர்வாதிகார ஆட்சிதான் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளார்கள். இவர்களின் இந்த இழிவான செயல் ஏகாதிபத்தியவாதிகளின் அச்சத்தையும் பலவீனத்தையும்தான் வெளிப்படுத்துகிறது. ஆகவே நாம் மக்களிடம் செல்வோம், கம்யூனிச கொள்கைகளை பரப்புவோம். உழைக்கும் மக்கள் கம்யூனிச கொள்கையை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டமாட்டார்கள். ஏனெனில் உலகிலுள்ள அனைத்து மக்களும் சமத்துவமாக வாழ வேண்டும் என்ற கொள்கையை உழைக்கும் மக்கள் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வார்கள்.
ஆனால் கம்யூனிச கொள்கையை இந்த சுரண்டல் சமூகத்தில் பலன் பெறுபவர்களும்,முதலாளிகளும், ஆதிக்கவாதிகளும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகவே மக்களை சுரண்டி வாழ்பவர்களும் உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்களும் கம்யூனிசத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் செய்வார்கள் என்பதையும் அத்தகைய பிரச்சாரத்தை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் நாம் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். நமது பிரச்சாரமானது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, உழைக்கும் மக்களின் நலன் அடிப்படையிலேயே நமது பிரச்சாரம் இருக்கும். ஆகவே உழைக்கும் மக்கள் நம்மை நம்புவார்கள். கம்யூனிசத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள் மக்களிடம் அம்பலப்பட்டுப்போவார்கள்.
ஸ்டாலினுக்கு எதிராகவும் சோசலிசத்திற்கு எதிராகவும் சர்வாதிகாரம் என்ற பூச்சாண்டி காட்டிபிரச்சாரம் செய்பவர்களுக்கு ஆளும் வர்க்கங்கள், ஆட்சியாளர்கள் மற்றும் ஆளும்வர்க்கங்களின் செய்தி ஊடகங்களின் ஆதரவு மட்டுமே உண்டு இந்த ஆதரவின் பலத்திலேயே கம்யூனிசத்திற்கு எதிராக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று இவர்கள் கனவுகாணுகிறார்கள். ஆனால் இந்த துரோகிகளாலும், இவர்களுக்கு பின்புலமாக இருக்கும் ஆளும்வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களால் மக்களுக்கு ஒரு குண்டூசி அளவுகூட நன்மை செய்துவிட முடியாது மாறாக மக்களுக்கு மேலும் மேலும் துண்பங்கள்தான் கொடுக்க முடியும்.
இந்த உண்மையை மக்களிடம் நாம் எடுத்துச் சொன்னால், மக்கள் இவர்களை தெளிவாகப்புரிந்துகொள்வார்கள். மேலும் மக்களுடைய பிரச்சனைகளை யாரோ தீர்ப்பார்கள் என்றகருத்து உள்ளது. அது தவறான கருத்து என்பதையும் மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கூட்டாக ஒன்று சேர்ந்து பாடுபட்டு அவர்களது சொந்த முயற்சியின் மூலம்தான் தீர்க்க முடியும்என்ற உண்மையைச் சொல்லி பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மக்களும் ஒன்று சேர வேண்டும்என்ற உண்மையும், மக்களின் எதிரிகளை அடையாளங்கண்டு ஒன்றுபட்ட மக்கள்தான்போராட வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் மக்களுக்கு விளக்க வேண்டும். அதற்குவழிகாட்டுபவர்கள்தான் கம்யூனிஸ்டுகள் என்பதையும் நாம் மக்களுக்கு விளக்க வேண்டும்.
மேலும் மிகவும் முக்கியமான விசயம் கம்யூனிஸ்டுகளாகிய நாம் முதலில் ஒன்றுபட வேண்டும்.
கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒன்று பட்டால்தான் கம்யூனிச துரோகிகளை எதிர்த்துப் போராடமுடியும்.
ஜோசப் ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரியே. ஆனால், ஏகாதிபத்தியவாதிகளும், டிராட்ஸ்கியவாதிகள் சொல்வது போன்ற சர்வாதிகாரி அல்ல. மாறாக ஸ்டாலின் ஒரு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரி ஆவார். இந்த உண்மையை கம்யூனிஸ்டுகள் மறைத்தது இல்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகரம் என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் கொள்கை யாகும்.
ஆனால் முதலாளித்துவவாதிகள் ஜனநாயகம் என்று பொய் சொல்லிக்கொண்டு முதலாளிகளின் சர்வாதிகாரத்தை செயல்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் நடைபெறும் ஆட்சி, ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சிதான் மோடியின் ஆட்சி. இந்த ஆட்சியில் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், நடுத்தரமக்களுக்கும் எதிரான ஜிஎஸ்டி போன்ற சட்டங்களைப் போட்டு உழைக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்களைப் போட்டு மோடி கும்பல் ஆட்சி செய்கிறதே, இந்த சர்வாதிகார ஆட்சி எந்த வர்க்கத்திற்கானது என்பது தெளிவாக தெரிகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டு முதலாளிகளின் நலனுக்காகவே மோடி ஆட்சி நடக்கிறது.
ஆனால் ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலினது சர்வாதிகார ஆட்சியில் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்கள் போட்டதுண்டா? உழைக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்கள் போட்டதுண்டா? இல்லை என்பது வரலாறு. அதற்கு மாறாக பெருமுதலாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் சொத்தாக மாற்றப்பட்டது, அதனை அந்த முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தை ஏவியே செயல்படுத்தப்பட்டது. ஆகவே ஜோசப் ஸ்டாலினது ஆட்சியானது முதலாளிகளுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சிதான் என்று கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கிறோம்.
அதே வேளையில் ரஷ்யாவில் ஸ்டாலினது ஆட்சி காலத்தில் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கல்வி கொடுக்கப்பட்டது, அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டது,அனைவருக்கும் மருத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஜோசப் ஸ்டாலினதுஆட்சியானது உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கக் கூடிய அரசாக இருந்தது.ஆகவே ஓர் அரசானது முதலாளிகளுக்கு ஜனநாயகத்தை வழங்கக் கூடிய அரசாக இருந்தால்,அந்த அரசு நிச்சயமாக உழைக்கும் மக்களின் மீது சர்வாதிகாரத்தை ஏவுகின்ற அரசாகமட்டுமே இருக்க முடியும். அதேபோல் ஓர் அரசானது உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கக் கூடிய அரசாக இருந்தால் அந்த அரசானது முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தை ஏவக் கூடிய அரசாக மட்டுமே இருக்க முடியும். இதற்கு மாறாக முதலாளிகளுக்கும், உழைக்கு மக்களுக்கும் ஒரே நேரத்தில் ஜனநாயகத்தை வழங்கக் கூடிய அரசு உலகத்தில் எங்கும் இருக்க முடியாது என்ற உண்மையை கம்யூனிஸ்டுகள் நன்கு புரிந்துள்ளார்கள். இந்த உண்மையையே கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஆகவே ஜோசப் ஸ்டாலின் சர்வாதிகாரி என்றால், ஆம் அவர் முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தை ஏவிய சர்வாதிகாரிதான் என்று கம்யூனிஸ்டுகள் உரக்கச் சொல்லுவோம்.
அத்தகைய சர்வாதிகாரமே உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கும். ஆகவே கம்யூனிஸ்டுகளின் லட்சியம் உழைக்கும் மக்களை அரசியல் அதிகாரம் படைத்தவர்களாக மாற்றுவதே ஆகும்.
மக்களை அரசியல் அதிகாரம் படைத்தவர்களாக மாற்றுவதை எதிர்ப்பவர்கள்தான் ஜோசப்ஸ்டாலினை சர்வாதிகாரி என்றும், சோசலிச அரசை சர்வாதிகார அரசு என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். இத்தகைய கம்யூனிசத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை உழைக்கும் மக்கள் இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும்…
……………… தேன்மொழி
No comments:
Post a Comment