நேற்றைய கிளப் அவுஸ் விவாதம் இங்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தி ஒலி வடிவில் கேட்கவும் தோழர்களே.
இன்றைய சமூகத்தில் காணும் பண்பாடுகள் பற்றியும் மேலும் நாம் புரிந்துக் கொள்ளவை என்னவென்று நான் விவாதத்தை தொடங்கி வைத்த பின் தோழர் ஞானசூரியன் அவர்கள் வெகு விரிவாக தெளிவாக பண்பாட்டை பற்றியும் நாம் கைகொள்ள வேண்டிய பணியையும் முன் வைத்து பேசினார். அவரை தொடர்ந்து தோழர் ரவீந்திரன் மற்றும் தோழர் வேலன் பேசினார்.
பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட மனிதக் கூட்டம் காலம் காலமாக
கடைப்பிடித்து வரும் வாழ்க்கை முறைகள் அவை பிரதானமாக ஆளும் வர்க்கத்தால்
தீர்மானிக்கப் படுபவை. எனினும் அக்கம் பக்கமாக அவற்றின் நிழல்களும் அந்த மனிதக்
கூட்டத்தில் இருந்தன பண்பாடு எப்போதும் பன்முகத்தன்மை கொண்டது.
சிறு சிறு கண குழுக்களாக இருந்த மனிதன் ஒரு மொழி பேசும் குழுவினராக
மாறியது என்பது அவர்களது வரலாற்றில் ஒரு மகத்தான பாய்ச்சல். அது அவர்களுடைய சிந்தனையை பரிமாற்றத்தை அகல
படுத்தியது அளப்பரியது அப்படி விரிந்த சிந்தனையை புதிய தலைமுறைக்கு சேர்த்துவிட
மேலும் வசதியானது.
இப்படி மொழிவழி மனித குழுக்கள் உருவாகிய உலகில் அந்தக் குழுக்களின்
விதவிதமான வாழ்க்கை முறைகள் பண்பாடுகள் உதயமாயின. மனிதன் என்ற முறையில் இவற்றுக்கு
இடையே சில பொதுமக்கள் இருக்கலாம் அவை இவற்றின் தனித்தன்மைகளை தூக்கலாக இருந்தன
அதனால் அவை தனித்தனி பண்பாடாக அறியப்பட்டன.
இன்றைய உலகமயமாக்கலில் பண்பாட்டுத்தளத்தில் நிலப்பிரபுத்துவத்திற்கு முதலாளித்துவத்துக்கும் இடையிலான துல்லிய முரண் முறைகளை இன்றைய காதலர் தினத்தில் காணலாம். காதலர் தினத்தை கொண்டாடுவதை சங்பரிவாரங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. அவர்களின் வர்ணாசிரம நிலவுடமை சமூக ஆதிக்கத்தை இந்த மேற்கத்திய கலாச்சாரம் உடைப்பதுதான் அவர்களுக்கு கடும் கோபத்திற்கு உள்ளாகின்றன. காரணம் ஜாதி மதம் வர்க்கம் என்ற வேறுபாடுகள் உடைவதை அவர்கள் ஏற்பதில்லை ஆகவே உண்மையான சாத்தியமான பண்பாட்டு கலாச்சார முறைகளை வளர்க்காமல் இதற்குத் தீர்வு இல்லை. பண்பாடு பற்றி எப்படி வரையறை செய்தாலும் அவை ஆகாயத்திலிருந்து குதித்தவர் அல்ல அவை சமூகத்தில் உள்ளவையே.
பொருளாதார அமைப்பு கொள்கைகளும் பண்பாட்டின் மீது குறிப்பிடத்தக்க
செல்வாக்கு கொண்டுள்ளன என்பது உண்மையே.
நவீன தாராளமயம் கல்வி மக்கள் நல்வாழ்வு ஆகிய வாழ்வின் பண்பாட்டு
ரீதியான முக்கிய அம்சங்களை வணிக மயமாகி விட்டது இதன் பொருள் ஏழைகளுக்கு இவை
எட்டாக்கனியாகி விட்டது என்பதே ஆகும்.
இன்றைய சமூக வாழ்வில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் என்பது மட்டுமல்லாமல்
எதிர்காலத்தில் இது மேலும் தீவிரமடையும் என்பது பெரும் பகுதி மக்கள் கல்வியும்
அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு சமூகத்தில் பண்பாடு எப்படி இருக்கும் என்பது
கணிக்க முடியாத அளவுக்கு வேறுபாடுகள் நம்முன் தோன்றியுள்ளது.
உலகமயம் என்ற பெயரில் ஏகாதிபத்தியம் வளரும் நாடுகள் மீது வேளாண்மை
மக்கள் இயற்கை வளம் கனிம வளம் சார்ந்த
மக்கள் மீது கடும் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் இந்த தாக்குதல்
கிராமப்புற வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் இயல்பாகவே பலவீனப்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் ஏகாதிபத்திய உலகம்; ஊடகங்கள் வாயிலாக நுகர்வு
கலாச்சாரத்தை ஊக்குவிப்பதும் உணவு உடை உறைவிடம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும்
உள்நாட்டு உற்பத்தியையும் சரக்குகளையும் தனது விளம்பர வலுவையும் பண பலத்தையும்
பயன்படுத்தி பின்னுக்குத்தள்ளி மேலைநாட்டு பொருட்களையும் சரக்குகளையும் சந்தையில்
குவித்து உணவு உடை உறைவிடம் உள்ளிட்ட அனைத்து அன்றாட வாழ்வு சார்ந்த பண்பாட்டு
அம்சங்களையும் தலைகீழாக தனக்கு சாதகமாக மாற்றி வரும் காட்சி நம் கண்முன் நிகழ்ந்து
வருகிறது. ஊடகங்கள் வாயிலாக ஏகாதிபத்திய உலகமய சமூக விழுமியங்களை வேகமாக
மாற்றுகிறது நம்மைப் பொறுத்தவரையில் உள்ளூர் பிற்போக்கு கலாச்சாரங்கள் தவறானவை
தான் அதற்கு பதிலாக ஏகாதிபத்திய பிற்போக்கு கலாச்சாரங்களை ஏற்க முடியாது அதற்கு
முற்போக்கான மக்கள் நல பண்பாடுகள் விதைக்கப்பட வேண்டும்.
நமது பண்பாட்டு தளங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன இதற்கு முன் நிகழ்ந்திராத மாற்றங்கள் நாம் சந்தித்துக்
கொண்டிருக்கிறோம் சமுதாயத்தில் அடிப்படையான மாற்றங்கள் எதுவும் நிகழாமல்
பண்பாட்டுத்தளத்தில் மறுபடியும் மறுபடியும் பிற்போக்குத்தனமான மாற்றங்கள்
நிகழ்கின்றன. மத இன அடிப்படைவாத மாற்றங்கள் நிகழ்கின்றன . 17ஆம் நூற்றாண்டில்
தொழிற்புரட்சி காலகட்டத்தில் ஏற்பட்டதை விட ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது இவை
பெரிதும் சிறிதுமாக இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்
என்றாலும் கூட அவற்றில் நாமும் பங்கேற்று கொண்டுதான் இருக்கிறோம்.
சமுதாயத்தின் உண்மைகள் குறித்தும் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற
மாற்றங்கள் குறித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்துகிறது கடமைகள் இருக்கிறது
ஏனென்றால் பண்பாட்டுத்தளத்தில் செயல்படுவது என்பது ஒரு நோக்கம் இருக்கிறது.
நாம் முற்போக்குப் பண்பாடு பற்றியும் முற்போக்கு கலைகள் பற்றியும்
முற்போக்கு இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம்.
அதாவது முற்போக்கு என்பது கால காலத்திற்கு மாற்றத்துக்கு
உட்பட்டது.
No comments:
Post a Comment