உலக இடதுசாரிகளின் இன்றைய நிலையும் இந்திய இடதுசாரிகள் போக்குகளும்

 நேற்றைய (21/08/2022) கிளப் அவுஸ் வகுப்பின் ஒலி வடிவத்தை கீழ் காணும் இணைப்பை அழுத்தி கேட்டுக் கொள்ளலாம் தோழர்களே...


உலக இடதுசாரிகளின் இன்றைய நிலையும் இந்திய இடதுசாரிகள் போக்குகளும் இந்த லிங்கை அழுத்தி கேட்கலாம்


ஏகாதிபத்திய கட்டமைப்பில் உழைப்புச் சுரண்டலும், இயற்கை வளங்களை சூறையாடுதலும், உலக மயமாக்கலும் ஏற்படுத்தியிருக்கும் மூலதன விரிவாக்கமும் கடும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளன. மேலும், வேலையின்மை, அதன் விளைவாக உழைப்புச் சுரண்டல் கடுமையாவது, வாழ்வாதாரம் இழப்பு ஆகியவை அதிகரித்து வருகின்றன.

பல்வேறு நாடுகளில் வலதுசாரி முதலாளித்துவ கட்சிகள் போல் இடதுசாரி கட்சிகளும் ஆட்சிக்கு வந்துள்ளன. தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் இடதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வருவதும் இவை பற்றிய மார்க்சிய ஆசான்கள் வழியில் புரிந்துக் கொள்வதோடு, வலதுசாரி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாவதும் நடந்தாலும் அவை உலக அளவிலான மாற்றை முன் வைக்க அல்லது பிற நாட்டு புரட்சிகர சக்திகளுக்கு முன் உதாரணமாக இல்லை அதற்க்கான பங்களிப்பு ஒன்றுமில்லை என்பதே கண்முன் காணகிடைக்கிறது.

அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் சீனா, ரசியா ஆகிய இரண்டு நாடுகளும் தத்தமது நாட்டு நலன்களை மையமாக வைத்து  வெளிப்படையான முதலாளித்துவ அமைப்பாகதான்  செயல்படுகின்றன.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி உள்ளது அவை என்ன செய்துக் கொண்டுள்ளது?. சீன அரசு, சோசலிசத்தை கட்டியமைப்பதாக சொல்லிக் கொள்கிறது. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த புரட்சிக்குப் பிந்தைய 70 ஆண்டுகளில் சீனா உலகின் மிகப்பெரிய அரசியல் பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. இவை எவ்வகையான பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி அங்கு ஒரு சிலரின் கையில் உடைமைகள் குவிந்துள்ளது தனி உடைமை இல்லையா? இப்படியாக சீனா கம்யூனிச கட்சி யாரின் தலைமையில் யாரின் தேவைக்காக பாடுபடுகிறது என்பதனை புரிந்துக் கொண்டு தெளிவடைய வேண்டும் நாம்.

உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் சோசலிச நாடும் கடைப்பிடிக்க வேண்டிய பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்காத, தன் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கான சர்வதேச உறவுகளின் மீது மட்டுமே சீன அரசு அக்கறை காட்டுகிறது ஆக அவை பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து நலுவி விட்டதென்றால் அவை பற்றி விமர்சினங்கள் பின் பார்ப்போம்.

இவ்வாறாக, உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு கோட்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வழிகாட்டும் அல்லது ஆதரவு அளிக்கும் சர்வதேச சோசலிச முகாம் எதுவும் இல்லாத நிலை உள்ளது.

நான்காவது அகிலம் முதலான பெயர்களில் செயல்படும் பல்வேறு டிராட்ஸ்கிய குழுக்கள் மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான கோட்பாட்டு அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன இவை மார்க்சியத்தை குலைக்கும் வேலையை செய்துக் கொண்டுள்ளது அப்படி என்னும் பொழுது இதன் பங்களிப்பு என்பது பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அல்ல ஏகாதியபத்திய உலகமயம் மற்றும் விரிவாக பின் பார்ப்போம்.

நேபாள மாவோயிஸ்டு கட்சி சர்வதேச அகிலம் ஒன்றை துவங்குவதற்கான முனைப்புடன் உலகின் பல்வேறு புரட்சிகரக் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முன்முயற்சி எடுத்தது. ஆனால் அக்கட்சியின் உள்முரண்பாடுகளாலும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தாக வேண்டிய நிலையாலும் அப்பணியானது அடுத்த கட்டத்திற்கு நகராமல் தேக்க நிலையை அடைந்து செயலிழந்து விட்டது.

மொத்தத்தில், இன்றைக்கு சர்வதேச அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி பிற்போக்கும் எதிர்ப்புரட்சியும் கோலோச்சுகின்றன, அவற்றை எதிர்த்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் முதலாளித்துவத்தின் எல்லைக்குள் செயல்படும் வகையில் பலவீனமாக உள்ளது என்றால் மிகையாகாது.


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்