இந்தப் பகுதியின் தேவையானது ஒரு தோழரின் கேள்விக்கு பதில் தேடும் முகமாகவும் எனக்கும் ஒரு தேடுதலாக அமையவே உடனடியாக எழுதியுள்ளேன் முழுமையான சித்திரத்தை கொண்டுவரா விட்டாலும் புரிய வைக்க முயற்சித்துள்ளேன் வாசித்து தங்களின் கருத்துரைக்க அழைகிறேன் தோழர்களே...
உணவுதேடுவதற்கும் பாதுகாப்பிற்குமாக ஆதிமனிதன் எடுத்துக் கொண்ட கருவி களை உற்பத்திக் கருவிகள் என்போம்.
தடி, கல், கூரன கல், கவண், அம்பு வில்லு, செம்பு உலோகம், பின்னர் இரும்பால் ஆக்கப்பட்ட கருவிகள் என உற்பத்திக் கருவிகள் வளர்ந்து வந்துள்ளன.
(கருவிகள் வளர மக்கள் வாழக்கையும் வளர்ந்து வந்துள்ளது; சிந்தனையும் வளர்ச்சி பெற்றது. வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்பதே மார்க்சியம்; பொருள் முதல்வாதம்.)
ஆதிமனிதன் இயற்கையிற் கிடைக்கும் பழம், கொட்டை, கிழங்கு களையே தேடி உண்டு வந்தான். தன் தேவைக்கு மேலாக எதையும் சேகரிக்கவோ உற்பத்தி செய்யவோ முடியவில்லை. காரணம் அவனது உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையவில்லை.
ஆதிமனிதர் கணக்குழுக்களாக, குடிகளாக வாழ்ந்தனர் வரட்சி வெள்ளம் ஏற்படும் வேளை உணவு தேடி இடம் பெயர்ந்தனர் அவ்வேளை பிற கணக் குழுக்களுடன் மோத நேரிட்டது. முன்னேறிய உற்பத்திக் கருவிகளைக் கொண்டவர் வெற்றி பெற்றனர். தோல்வியடைந்த குழுவினரை முற்றாக கொன்று அழித்தனர், ஏனெனில் அவர்களால் எவ்வித பயனுமில்லை. ஆனால் உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைந்து தமது தேவைக்கு மேலால் உற்பத்தி செய்யும் காலம் வந்தது. இதையே உபரி உற்பத்தி செய்வதற்கேற்ற நிலைக்கு உற்பத்திக் கருவிகள் வளர்ந்து விட்டன என்போம் இக்கால கட்டத்தில் அலைந்து திரிந்த மக்கள் ஆற்றங் கரைகளில் நிலைபெயரத் தொடங்கி விட்டனர். மரத்தால், செம்பால் பின் இரும்புக் கலப்பையால் நிலத்தைக் கீறித் தானியம் விளைக்கத் தொடங்கினர்.இக்காலகட்டத்தில் குழுக்களின் மோதலின்போது தோல்வியடைந்தவர்களே அடிமைகளாக்கி உழைக்கச் செய்தனர்.
அடிமைநிலை என்பது உணவு மட்டும் தந்து உழைப்பு முழுவதையும் அபகரிக்கும் நிலை; அடிமை எசமான் சொத்து. ஆடு மாடுகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அப்படிச் செயல்படுத்துவது.
ஆடுமாடுகள் 4 கால் சொத்து. அடிமைகள் 2 கால் சொத்து. அடிமைகளை வாங்கி விற்றனர். அடிமைகளின் பிள்ளைகளும் பரம்பரையாக எசமானின் சொத்தே. அடிமைகளை தண்டிப்பதற்கும் கொல்வதற்கும் கூட எசமானுக்கு உரிமையிருந்தது. அரசுகளும் அதற்கு அனுமதி வழங்கின.
உரோமாபுரியில்அடிமைகளை விலங்கிட்டு வைத்தனர். உழைக்கும் வேளை மட்டும் விலங்குகளை எடுத்து விடுவர். அடிமைகளுக்கு பயிற்சி கொடுத்து ஓர் அடிமை மற்றோர் அடிமையை போரிட்டு கொல்வதை பொழுது போக்காக்கி ஆண்டைகள் பார்த்து; கை தட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.
அடிமைகள் சிங்கம், புலி போன்ற மிருகங்களுடன் போரிட்டு மடிவதையும் விளையாட்டாக்கினர்.
ஸ்பாட்டகஸ் என்ற அடிமை, அடிமைகளைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போரிட்டுத் தோல்வியடைந்தது அடிமை எழுச்சியைக் குறிக்கும் வரலாற்று நிகழ்ச்சியாகும். அடிமைகளால் ஆண்ட வர்க்கத்தைத் தூக்கி எறிய முடியவில்லை.
ஆபிரிக்காவிலிருந்து நீகிரோக்களை சிறைப்பிடித்து கப்பலில் ஏற்றிச் சென்று அமெரிக்காவில் ஏலங்கூறி விற்கும் வாணிபம் பெருந்தொழிலாக நடைபெற்ற காலம் கழிந்து 150 வருடங்கள் கூட ஆகவில்லை. : மார்கின்ஸ் என்ற ஆங்கிலேயன் இவ்வாணிபத்தில் பெரும் வணிகனாக விளங்கி எலிசபெத் (1558 - 1603) இராணியால் ‘சர்’ பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டான். 1800 வரை 1.5 கோடி அடிமைகள் அமெரிக்காவில் விற்கப்டட்டனர்; இவ்வடிமைச் சொத்துகளை இனங்கான மாடுகளை இங்கு செய்வது போல் குறியிட்டனர். :இந்தியாவிலும் இலங்கையிலும் அடிமைகள் விலங்கிடப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில்லை. ஆயினும் 3000 - 4000 ஆண்டுகளாக அடிமையுடைமைச் சமுதாயம்நிலவவே செய்தது. தமிழ் நாட்டிலும் கி. பி. 6 - 7 ம் நூற்றாண்டு வரையில், நிலப்பிரபுத்துவம் தலைதூக்கும் வரை அடிமை உற்பத்தி முறையே ஆதிக்கம் செலுத்தும் உற்பத்தி முறையாக இருந்தது.
இன்றையசாதிப் பிரிவினை அடிமைச் சமூக அமைப்பு முறையின் புதிய வடிவமே ஆகும். ஒருவர் உழைப்பை மற்றவர் வாய்ப்பாக அபகரிப்பதற்கு மனித வரலாற்றின் இடைக் காலத்தில் ஏற்பட்ட பிரிவினையே இதுவாகும்.
இக்காலகட்டத்தைப் “பொற்காலம்" என இன்றும் பாராட்டு பலரும் உள்ளனர்.
அடிமைச் சமூகத்துடனேயே மனித வரலாற்றின் குரூரமான வர்க்க சமுதாயம் முதன் முதலாக ஏற்பட்டது. இன்றும் தொடர்கிறது. இதை உடைப்பதுவே மனித சமுதாயத்தின் இன்றைய பிரச்சினை யாகவும் உள்ளது.
பண்டைய காலத்திலே மானுட சமூகம் சிறு சிறு குழுக்களாக வாழ்க்கை நடத்தியது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை தாங்களே தேடிக் கொண்டனர் உழைப்புப் பிரிவினை சமமாக இருந்தது ஆண்கள் வேட்டையாடினார்கள் உணவுப் பொருட்களை சேகரித்தனர். பெண்கள் உணவு தயாரித்தனர் வீட்டை கவனித்தனர் அந்தந்த துறையில் அவர்கள் மேலோங்கியிருந்தனர் அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன வேட்டையாடிய பொருள்களையும் இயற்கை உணவுப் பொருளையும் சேகரித்து எல்லாவற்றையும் பொதுவில் அனுபவித்தனர்.
இதனை உணவு சேகரிக்கும் நிலை (Food Gathering stage) என்பர் மானிடவியல் அறிஞர்கள்.
காட்டில் விலங்குகளை கண்டான் தானும் வளர்க்கக் கற்றுக்கொண்டான் அதனால் அது ஒரு தொழிலாகியது. கால்நடை வளர்ப்பும் குலங்கள் அதிக பொருள் உற்பத்தி கால்நடை மூலம் பலவிதங்களில் மனித தேவைகளை பயன்படுத்தும் ஒரு நிலையை உண்டாக்கியது.
ஆண்கள் வேட்டையாடுதல் ஈடுபடும்போது பெண்கள் கால்நடைகளை பராமரித்தலும் அதனை மேம்படுத்தும் ஈடுபட்டதால் சமுதாய பொருளாதார நிலையில் பெண்களுக்கான ஒரு நிலை இருந்தது. அந்த சமூகத்தில் கால்நடை வளர்ப்புதான் முக்கியமானதாக இருந்தது. கால்நடை அச் சமூக சொத்தென்பதனால் கால்நடைகளை திருடவே பல குழுக்களுக்கிடையே சண்டைகள் மூண்டது, அந்தக் கூட்டு சமுதாயத்தில் உற்பத்தித் திறன் மிகக்குறைவாகவே இருந்தது.
கால்நடைகளை வளர்த்தல் என்பது வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையை விட சற்று முன்னேறிய நிலை என்றாலும் கூட இரண்டு தொழில்களுக்கும் இடம் விட்டு இடம் நகர்ந்து செல்ல வேண்டியிருந்தது அங்கே மானுட சமுதாயம் நாகரிக உலகில் புக காத்துகிடந்தது.
கால்நடை தங்கள் இன்றியமையாத வாழ்க்கை ஆதாரமாக கொண்டிருந்த நிலை மாறியது. விலங்குகளை சார்ந்து இருக்க வேண்டிய ஓடூநர் நிலையிலிருந்து மனித சமுதாயம் தன்னை விடுவித்துக் கொண்டது பெரிய காட்டில் அலைந்து திரிந்து வேட்டையாடி சேகரிக்கும் பொருள்களையும் விட கால்நடைகளை மேய்த்து திரிந்து, அதன் மூலம் கிடைத்த உற்பத்திப் பொருள்களை விடவும், சிறிய நிலத்தை திருத்தப்படாத கருவிகளை வைத்துக் கொண்டு உழுது பெற்ற உற்பத்திப் பொருள் ஒரே இடத்தில் நிறைய கிடைத்தன. இது எண்ணிக்கை பெருகப்பெருக தன்மை ரீதியிலேயே மாற்றம் பெற்ற சமூகத்திற்கு வேளாண்மை வழிகாட்டியது.
வேளாண்மைக்கு தேவையான கைவினைத் தொழில்கள் தோற்றம் பெறலாயின இதை தொடர்ந்து ஏற்பட்ட உற்பத்தி மாற்றங்கள் மனிதனின் உழைப்பு சக்தியை பெருகியது இப்போது மனிதன் தன் தேவைகளுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்வதற்கான தன் உற்பத்தித் திறனை வளர்த்துக் கொண்டன.
கிமு 300 ஆண்டுகளில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக அறிகிறோம் தமிழ்நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளும் இரும்பின் பயன்பாட்டுக்கு சான்று பகிர்கின்றன அதிசயம் நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இரும்பு கத்திகள் கூர்வாள்கள், தீட்டிய அம்புகள், சிறு கோடாரி, கதிர் அரிவாள்கள், உளி, கைப்பிடிப்புள்ள இருமுனை வாள்கள், இரும்புத்தூண்டில், நீள் கைப்பிடிக் கரண்டி, மரம் செதுக்கும் கருவிகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவை இன்றளவும் சென்னை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மையில் இரும்பு கருவிகளின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தி பெருகி கொண்டு போயிற்று. இன்னும் திருத்தமான கருவிகளுடன் மனிதனின் உற்பத்தி திறனும் புதிதான நிலங்களும் சேர்ந்துகொண்டு உற்பத்தியில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. இந்த பாய்ச்சல் சமுதாய மாற்றங்களையும் உள்ளடக்கிக் கொண்டு வெளி வரலாயிற்று.
இந்நேரத்தில் வேளாண்மை கைத்தொழில் என்று இரு மாபெரும் கிளைகள் உற்பத்தியில் பிரிவினையாக ஏற்பட்டதில் இருந்து நேரடியாக பரிமாற்றத்துக்கான உற்பத்தி செய்யும் முறை அதாவது சரக்கு உற்பத்தி முறை பிறந்தது. அதன் உடன் நிகழ்வாகவே வியாபாரம் அதனுடைய உண்மையான பொருள் வந்து சேர்ந்தது பணக்காரன் ஏழை என்ற வேறுபாடும் புகுந்தது.
புதிய வேலைப் பிரிவினைகளின் கீழே சமுதாயம் வர்க்கங்களாக பிரிந்தது, கூட்டு சமுதாயத்தில் இருந்த பல்வேறு குடும்பத் தலைவர்களின் சொத்துடமைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள் அதாவது மேலே மேலே ஏறி வரும் தனிச்சொத்து கூட்டுச் சமுதாய அமைப்பில் முதல் உடைப்பை ஏற்படுத்தியது. தொடக்ககால கைத்தொழில்கள் சரக்கு உற்பத்திமுறை இவற்றோடு மக்கள் தொகையும் பெருகியது, இத்துடன் செல்வ விசயத்தில் பெருத்த வேறுபாடுகள் சேர்ந்தன. இதற்கு முன்னால் கூட்டுச் சமுதாய அமைப்புகுள் உயிரோட்டமாக நிலவிய ஜனநாயக முறைக்குள்ளெயே இச் செல்வ வேறுபாடுகள் எல்லாம் ஒரு தனிப்பட்ட பிரபுத்துவ அம்சத்தை தோற்றி வைத்தது.
இன்னும் நன்கு விளையக்கூடிய முறையிலான உற்பத்தி சாதனங்களை நிலங்களை விஸ்தீரணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே இடத்தை அதாவது நிலத்தை பிரதேசத்தை மையமாகக் கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது.
இந்தக்காலத்தில்ஒருநிலம்இன்னொருநிலத்தோடுகலந்து வரலாற்று நிர்ப்பந்தமாக இணைக்கப்படும் போது பிரதேசமாய் வளர்கிறது.
கூட்டு சமுதாயத்தில் கால்நடையை கவர்வது களவாடி செல்ல நடந்த போர்கள் போல இப்பொழுது நிலங்களை அபகரிப்பதற்கான போர்கள் நடைபெற்றன . அதாவது உற்பத்தி சாதனமாகிய நிலத்தை கொள்ளை யடிப்பதற்காக போர்கள் நடைபெற்றன.
இப் போர்களை நடத்திய தலைவர்கள் போர் வீரர்களாகவும் குடிகளையும் நிலங்களையும் காக்க போர்களின் தேவையும் காப்பதற்கான தொழிலும் மேற்கொண்டனர்.
எங்கெல்ஸின் வார்த்தைகளில் சொன்னாள், "செல்வத்தின் பால் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளின் விளைவாக சமுதாய அமைப்பு பாதிக்கப்பட்டது பரம்பரை பரப்புவதற்கும் அரசும் அரசு முறைக்கும் கொழுந்துகள் துளிர்த்தன, அடிமைமுறை போர்க் கைதிகளோடு நின்று இருந்தபோதிலும் , ஏற்கனவே குலத்தின் உறுப்பினர்களையும் கூட அடிமைப்படுத்துவதற்கு வழிவகை செப்பனிட்டு வந்தது. கால்நடைக்கு நடைபெற்ற சண்டைகள் நிலத்துக்கான திட்டமிட்ட படையெடுப்புகளாக இழிந்து ஒரு முறையான தொழிலாகிவிட்டது.
உயர்விலும் உயர்வான சம்பத்தாக செல்வம் புகழப்பட்டது..... தனிநபர்கள் புதிதாக சேர்த்த சொத்தை பாதுகாக்கவும் அதைப் பெருக்குவதற்கும் படிப்படியாக வளர்ந்து வரும் புதிய வடிவங்களுக்கும் பொதுமக்கள் அங்கீகாரம் எனும் முத்திரையைப் பதிக்க வைப்பதற்கும் வேண்டிய ஒரு நிறுவனம் இல்லாதிருந்தது. சமுதாயத்தில் ஆளும் வர்க்க பிரிவினையை நிரந்தமாகவதோடு மட்டுமல்லாமல் உடைமை அற்றவர்களை உடைமை உள்ளவர்கள் சுரண்டுவதற்கான உரிமையை நிரந்தரமாகும் நிறுவனம் வர தொடங்கியது அதுதான் அரசு என்பது".
தொடரும்.....
ஆதாரமாக பயன்படுத்திய் மூலநூல்கள்:-.. செ.கனேசலிங்கன் கட்டுரைகள் மற்றும் கோ.கேசவன் மன்னும் மனித உறவுகளும்.
No comments:
Post a Comment