தமிழகதேர்தல் களம்
நேற்று மூன்று இடத்தில் மூன்று கட்சி கூட்டதில் நேரடி கள ஆய்வு
தமிழகத் தேர்தல் களத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் மக்களின் மனநிலை குறித்த ஒரு நேரடி ஆய்வை இந்தத் தொகுப்பு வழங்குகிறது. அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி, த.வெ.க மற்றும் ஆளும் தி.மு.க ஆகிய கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளையும் அவற்றுக்கு வாக்காளர்கள் அளிக்கும் எதிர்வினைகளையும் இக்கட்டுரை ஒப்பிடுகிறது. இலவசங்கள் மற்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் உலகமயமாக்கலால் ஏற்படும் தனியார்மயமாக்கல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி, கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இக்கட்டுரை முன்வைக்கிறது. ஒட்டுமொத்தமாக, வாக்காளர்கள் கட்சி சார்பற்று தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
2). த.வெ.க முழக்கம் ஆரவாரம் பெரிதாக இருந்தது வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை வழங்கப்படும், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர போராடுவோம், ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வோம். ஒரு தடவை ஆட்சியில் உட்கார வையுங்கள்... என்ற பேச்சோடு நான் இவர்களின் பேச்சின் மீது கருத்து கேட்டால், அதிக பட்சம் கண்மூடிதனமாக சினிமா நடிகனின் கவர்சி முழகத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது விளங்கிக் கொண்டேன். நான் என் கேள்வியை முன்வைத்தேன் எந்த அதிகாரம் இல்லாத தமிழகம் எல்லாமே கார்ப்ரேட்கள் கைகளில் உள்ளது அதனை பற்றி உங்கள் தலைவன் ஒன்றுமே பேசவில்லையே என்றேன் அதற்கு எங்க தலைவன் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் செய்துடுவான் போங்கள் என்றனர்.
3).ஆளும் தி.மு.க நல்லாட்சி தொடர்ந்திட திமுக விற்கு வாக்களியுங்கள் என்று தொடங்கியவர்....மகளிர் உரிமைத் தொகை: தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும்உதவித்தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும்.சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் ₹2,000 ஆக உயர்வு.1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹5 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்.முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டப் பயன் ₹1 லட்சம் வரை வழங்கப்படும்.
இவர்களிடம் கேள்வி கேட்டதும் நீங்கள் எதிர்கட்சியின் நிலையில் உள்ளீர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் செய்வோம் என்று ஒற்றைகாலில் நிற்க நான் மேலே செல்லவில்லை.
4).இங்கே நாம் தமிழர் பெரியளவில் வாக்கு வங்கி இல்லை ஆகையால் நான் அவர்கள் கூட்டதிற்கு போகவில்லை.
வாக்குகளை கவர்வதற்கான அறிக்கைகளை பேசுகின்றனர். உண்மையில் இங்கே தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி ஆட்சியில் அமர்ந்து முதலில் அவர்கள் கூறியதை முழுமைகாக செயல்படும் அதிகாரம் உள்ளதா? அடுத்து இன்றைய ஏகாதிபத்திய உலகமயத்தால் எல்லாமே கார்ப்ரேட் மயம். கல்வி தனியாரிடம் வேலை தனியாரிடம் மருத்துவம் தனியாரிடம் எல்லாம் தனியார் மயமாகி போனதை பற்றி இவர்கள் யாரும் பேசவேவில்லை. பெரும்பான்மையிலான உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமை மற்றும் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் அளிக்க கடமைபெற்ற அரசு வழங்குமா? இலவசம் மக்களுக்கு வேண்டாம் இவ்வொரு குழந்தையும் கல்வியை பெற வேண்டும் என்ற பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அதேபோல் வேலை வாய்ப்பு என்பது தகுதியான ஒவ்வொருக்கும் அளிக்க வேண்டியது அரசின் கடமை. இதனை பேசாத இவர்கள் இதனை செய்ய சொல்லி ஒவ்வொரு வாக்காளரும் உங்களின் உரிமைக்கான குரல் கொடுங்கள் என்று நான் இறுதியில் சில பகுதியில் வலியுறுததினேன்.
அரசே இங்குள்ள மக்களின் வாழ்க்கை அடிப்படைகளை வழங்க, அதற்கு அவர்களின் அவர்களுக்கான வாழ்வியல் அடிப்படைகளை வழங்க அரசே கடமை பெற்றதல்லவா?
என்று சிலரிடம் கேள்விகேட்டேன் இலவசங்கள் அல்ல உங்களின் வாழ்க்கை தேவைகளுக்கு உத்திரவாதம் அளிக்கிறார்களா? இந்த ஆட்சியாளர்கள் சிந்தியுங்கள் என்று விடைப்பெற்றேன்....