சன் தொல்லைகாட்சியில் ராமயணம் ஒளிப்பரப்பு

 இராமயணம் TV யில் காட்டப்படுவதை பற்றி

++++++++++++++++++++++++++++++++++++
தேர்தல் நேரத்தில் காவடிதூக்கிய பலர் இந்த அயோக்கிய கூட்டத்தை ஒருப்பக்கம் தூற்றுகிறார்கள் என்றால் இன்னும் சிலர் அவர்களின் கொள்ளைகார கொள்கைகளை மூடிமறைக்க திராவிட முகமூடியை பார்பன எதிர்ப்பை ஆயுதமாக ஏமாற்ற நினைக்கின்றனர்.
உண்மையில் இராமயணம் TV யில் காட்டப்படுவதின் நோக்கம் ஆளும் வர்க்கதிற்கும் கார்ப்ரேட்டுகளும் பெரிய வேறுபாடு இல்லை என்பேன்.. இவன் மக்களின் கொந்தளிப்பை மட்டுபடுத்த மது போதை போல ஆன்மீக போதை தேவைப்படுகிறது அவனுக்கு நல்ல கல்லா கட்டும் கதை வேண்டும் அவை முன்னரே மக்களின் ஆன்மீக போதைதான் அதை தானே பிஜேபி செய்துக் கொண்டுள்ளது அதை திராவிடத்தின் பெயரில் இவர்கள் செய்வது என்ன தவறு என்று கேட்கவா வேண்டும்???
இவர்களின் நோக்கமும் செயலையும் புரிந்துக் கொள்ளாமல் இவர்களை புனித படுத்த கிளம்பியவர் கள்தான் புலம்ப வேண்டும் ஏனெனில் அந்த முற்போக்காளர்களின் பச்சோந்திதனம் அம்பலப்பட்டுள்ளது ஆக.
எல்லா ஆட்சியாளர்களும் உழைக்கும் மக்களின் எதிரிதான் அவன் நோக்கம் மூளை சலவையும் உழைப்பை சுரண்டுவதுதான் அவனை உழைக்கும் வர்க்க விரோதியாக புரிந்துக் கொள்ளாதவரை அவனின் அடிமைகள் ஏமாற்றிக் கொண்டேயிருப்பர்
புரிந்துக் கொள்ளாத வரை இவை நிகழ்ந்துக் கொண்டேயிருக்கும்...
May be a graphic of 2 people, television and text that says 'VIDY TV இராமயணம் TV யில் காட்டப்படுவதை பற்றி கார்பரேட்டுகளின் குகளின் நோ நோக்கமும் கார்ப்ரேட் செயலையும் புரிந்துக் கொள்ளாமல் அவர்களை புனித படுத்து கிளம்பியவர் கள்தான் புலம்ப வேண்டும் அவன் உழைக்கும் மக்களின் எதிரிதான் அவன் நோக்கம் மூளை சலவையும் உழைப்பை சுரண்டுவதுதான் அவனை உழைக்கும் வர்க்க விரோதியாக புரிந்துக் கொள்ளாதவரை அவனின் அடிமைகள் ஏமாற்றிக் கொண்டேயிருப்பர்'
நூலாகவும், செவிவழிக் கதையாகவும், வெகுமக்கள் பரப்பை எட்டிய ராமாயணம், தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்துமக்களை மூடறாக்கியது
வர்க்கம் அறியாவிட்டால் இப்படிதான் போக வேண்டும்
ஆளும் வர்க்கதின் ஒரு பிரிவுடன் கூட்டணி வைத்தவர்களே...
பாசிசத்தை ஒழிக்க ஒன்று சேர்ந்தவர்களே...
இன்று அவர்கள் பின் அணி திரள்கிறார்கள் முதலாளிகள் உங்கள் பாயசம் என்னவாகிவிட்டது சொல்வீர்களா??

திராவிட அரசியல்

பகுத்தறிவு பாசறை

எப்படியெல்லாம் உழைக்கும் மக்களின் உதிரத்தை உறிஞ்சுவது இதுதான் முதலாளிகளின் நலன்... சுரண்ட பிறந்தவன் சுரண்டாமல் உயிர்வாழ முடியாது இவை நியதி இவர்களை ஒழித்துக் கட்டாமல் உழைக்கும் மக்களுக்கு விடுதலை இல்லை..
ராமயணம் அல்ல இங்கே பிரச்சினை

உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை பிரச்சினை அதற்கு யாராவது பதில் சொல்வீர்களா???.

செய்தி அப்படியே கீழே

இந்நிலையில், தமிழின் முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் "இராமாயணம்" மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. "சீதையின் இதயநாயகன்.. இராமாயணம்.. விரைவில்" எனக் குறிப்பிட்டு ப்ரொமோ வீடியோ சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் இந்த ஆண்டு பிப்ரவரியில் திறப்பு விழா கண்ட நிலையில், ராமர் பற்றிய பேச்சுகள் புழக்கத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மீண்டும் 'இராமாயணம்' இதிகாசத் தொடரை ஒளிபரப்பு செய்ய இருக்கிறது சன் தொலைக்காட்சி. முன்பு சன் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 'ராமாயணம்’ ஒளிபரப்பானது. இந்நிலையில், தற்போது ஒளிபரப்பாக உள்ள ராமாயணம் அதேதானா? அல்லது மீண்டும் எடுக்கப்பட்டதா என்பது அறிவிக்கப்படவில்லை.

மேலும், “இராமாயணம்” தொடர் எந்தெந்த நாட்களில் ஒளிபரப்பாகும், எப்போது முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது என்ற தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/television/sun-tv-to-telecast-ramayanam-serial-soon-602151.html





இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்