திருத்தல்வாதம் ஒழிப்போம் மார்க்சியம் காப்போம்

 


"தோழர்களே இலக்கு இணைய இதழ் தொடங்கி நமது இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளோம் இதில் நமது அனுபங்களை தெரியப் படுத்த விளைகிறோம் தோழர்களே. இலக்கு இதழ் தொடங்கப் பட்டதே ஒரு சரியான மார்க்சிய புரிதலை உருவாக்குவதும் விவாதித்து சரியான பாதையில் பயணிக்க முயற்சி செய்வதும்தான்.

மார்க்சிய அடிப்படைகளை புரிய வைக்க முயற்சித்தே எழுதப் பட்ட கட்டுரைகள். அதில் சில கட்டுரைகள் மார்க்சியத்தின் பெயரிலே மார்க்சியத்தை குழப்புவதும். தான் பேசுவதுதான் மார்க்சியம் மற்றெல்லாம் மார்க்சியம் அல்ல என்று வாதிக்கும் சிலரை அம்பலப் படுத்தியும் கட்டுரை எழுத வேண்டி இருந்தது.

நமது நோக்கம் சரியான மார்க்சிய லெனினிய புரிதலை உருவாக்குவதே. அதற்க்கு எதிரான தடை கற்களை அகற்றி சரியான பாதையை செப்பனிடுவதே நமது பணி.

சரி இவர்களை பற்றி நமது ஆசான்கள் சொல்வதை பார்ப்போம்

திருத்தல்வாதம் என்பது தொழிலாளர் வர்க்கஇயக்கத்துள் இருக்கும் முதலாளித்துவ போக்கேயாகும். திருத்தல்வாதம் முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு வடிவமாகும்" என்றுநமது மூலவர்கள் சொல்லியுள்ளனர் .

சரி நவீனதிருத்தல்வாதம் என்றால் என்ன ?

1960 களில் குருசேவ் கும்பலின் 3 சமாதான கோட்பாடுகள்ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 பேராயத்தில்கொண்டு வரப்பட்டவை, அவையே சோசலிச சோவியத்தை சிதைக்கும்மார்க்சிய லெனினிய விரோத நிலைப்பாட்டைகையில் எடுத்தது . இவை தனது நாட்டில்மட்டுமல்லாமல் உலக கம்யூனிச இயக்கத்தில்திருத்தல்வாதத்தைப் புகுத்தி; உலகில் உள்ள. எல்லாநாட்டு கம்யூனிச இயக்கங்களையும் புரட்சி நடவடிக்கையை கைவிட்டு முதலாளித்துவதுடன் கைகோர்க்கும் சமரசப் பாதையை வகுத்துக்கொடுத்தது. இவைபெரும் சிதைவை உருவாக்கியது.

லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்பவாதிகளையும் மாவோ ரசியகுருசேவ் புரட்டல்வாதிகளையும் ' முதலாளி வர்க்கத்தினர்' என்றும் 'வர்க்க விரோதிகள்' என்றும் அடையாளம் காட்டினார்கள்.

"சோஷலிச நாடுகளில் திருத்தல்வாதிகள் முதலாளித்துவ பாதைக்காக போராடுகிறார்கள் மீண்டும் முதலாளித்துவத்தினை மீட்டெடுக்க முயல்கிறார்கள்" என்றார் மாவோ .

மாவோ குருசேவ் திருத்தல்வாத கும்பலுக்கு எதிரான போராட்டத்தின் போது குட்டிமுதலாளித்துவ சூழ்நிலைகளில் புதிய முதலாளித்துவ மூலகாரணங்கள் இடைவிடாது தாமாகவே உற்பத்தியாவது பற்றியும் முதலாளிய செல்வாக்கின் விளைவாகவும் குட்டி முதலாளிகளின் பரவலாக தீங்கு பயக்கும் சூழ்நிலைகளின் விளைவாகவும் அரசியல் சீரழிவுவாதிகளும் புதியமுதலாளித்துவ கர்த்தாகளும் தொழிலாளி அணிகளிலும் அரசு நிர்வாகிகள் மத்தியிலும் தோன்றுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

"கட்சி உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து புரட்சியை நடத்த விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மாவோ அவர்கள் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள் தமது அதிகாரத்தை காத்துக் கொள்ள விரும்புகிறார்கள்" என்றார்

இன்னொரு புறம் மாவோ" நீங்கள்சோசலிசப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் முதலாளிகள் எங்குஇருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லை, அவர்கள் கட்சிக்குள்ளாகவே இருக்கும் வலதுசாரிகள் அவர்கள் அதிகாரத்தில் இருந்துகொண்டு முதலாளித்துவப் பாதையை மேற்கொண்டிருக்கிறார்கள்" என்றார் கலாச்சாரப் புரட்சியின்போது .

ரஷ்யாவின் குருசேவ் கும்பல் போல சீனவின்டெங் கும்பல் உள்நாட்டில் வர்க்கப்போராட்டம்இனி தேவையில்லை என்றும் புரட்சிகர பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அனைத்துலக சீர்திருத்தவாத திருத்தல் வாத கட்சிகளுடன் நட்பும்சகோதரத்துவமும், புரட்சிகரஇயக்கங்களை கைவிட்டும் தனது உறவை துண்டித்துக்கொண்டும் முதலாளித்துவ பாதையில் சீரழிந்துபுதிய முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. "காவுட்ஸ்கி தொடங்கிகுருசேவ் டெங் வரையிலான திருத்தல்வாதிகள் சாராம்சத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப்போராட்டத்தையும் கைவிடுவதன் மூலம் முதலாளி வர்க்கத்துடன்அணி சேர்ந்து கொள்ளும் தொழிலாளி வர்க்கத்துக்குள் இருக்கும் முதலாளி வர்க்கமே என்பதுஎந்த வேறுபாடும் இல்லை.

மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்ற நூல் 1908 ஆம் ஆண்டு லெனின் ஆல் எழுதப்பட்டது. 1905 இல் இருந்து 1907 இடைப்பட்டகட்டத்தில் ரஷ்ய புரட்சி தோல்வியாடைந்ததால் பல்வேறு மார்க்சிய விரோத போக்குகள் தலைவிரித்தாடியது .

மார்சிக்சியம் இரு தரப்புகளில் இருந்துதாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறார் லெனின். ஒன்று மார்க்சியத்தை மறுக்கும் போக்கு முதலாளித்துவ தத்துவவாதிகளின்இப்போக்கு. இன்னொன்று மார்க்சியத்தைமறைமுகமாக திருத்தம் செய்யும் போக்கு இவை மார்க்சியபோதனைகளில் திருத்தம் செய்தல் மார்க்சியத்தை ஆராய்கிறேன் என்று மார்க்சியத்தை குழப்புதல்.

மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக்கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின்பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமை களுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது. “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற கோசத்தின் அடிப்படையில் திராவிட – தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர்.

இங்குள்ள அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் புறக்கணித்த தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின, தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பு கைவிட்டதை இப்பொழுது கையிலெடுத்ததுள்ளது வருத்ததிற்க்குறியது.

மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாதஅரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!

மாவோ ஒரு முறை சொன்னதுபோல் மார்க்சியம் என்பதே பொதுத் தன்மையைக் குறிப்பானதன்மையுடன் இணைப்பதாகவும். அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிர, குறிப்பான தன்மைகளுக்குமுதன்மை கொடுத்து பொதுத்தன்மைகளை மறந்து விடக்கூடாது.

ஆனால் இங்குள்ள சிலர் இதுபோன்ற பொதுத்தன்மைகளை அதாவது பொது உண்மைகளை புறக்கணித்துவிடுகின்றனர். அதன் மூலம் பொதுத்தன்மையை குறிப்பான தன்மையுடன் பொருத்திப்பார்த்து விஞ்ஞானப்பூர்வமான முடிவிற்கு வராமல் அகவயமான முடிவிற்குச் செல்கின்றனர்.

இங்குள்ள சிலரின் கோட்பாடு மட்டுமல்ல அவர்களுக்கு மார்க்சியமே அவர்களின் ஒவ்வொருவரின் தேவைகளை ஒட்டி மார்க்சியம் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

பொதுவான தன்மைகளை ஒவ்வொரு நாட்டின் குறிப்பான தன்மைகளுடன் பொருத்தி ஒவ்வொரு நாட்டின் குறிப்பான இயக்கத்தை புரிந்துகொண்டு செயல்படுவதுதான் மார்க்சியமாகும். இதற்கு மாறாக பொது உண்மைகளை மறுத்துவிட்டு, சீன மார்க்சியம், ரஷ்ய மார்க்சியம், தமிழக மார்க்சியம் என்று கருதுவது பேசுவது மார்க்சியம் அல்ல.

ஒவ்வொருநாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை.

ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுதரீதியிலான குறுகிய கால எழுச்சிப்பாதை மேற்கொள்ளப்பட்டது.

குடியேற்றஅரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் பாதை மேற்கொள்ளப்பட்டது.

இன்னும் சொல்லப்போனால் சமனற்ற வளர்ச்சி தன்மை கொண்டும் பல தேசிய இனங்களை கொண்டுள்ள ஒரு நாட்டில், குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல் கருதி தேசிய இனங்களின் தன்மைகளுக்கு ஏற்ப விடுதலைப்பாதையில் மாறலாமே தவிர ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித் தனி மார்க்சியமாவதில்லை.

தனித் தனியாக பார்பவர்கள் மார்க்சிய அரசியல் பொதுத்தன்மை மறுக்கிறார்கள்.

இவர்களின் கேள்விகளில் சில அதற்க்கு பதிலாக “சாதி ஒடுக்கு முறைக்கெதிராக என்னசெய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?” என்ற அவதூறுக்குத் தன்ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழ்தஞ்சை விவசாயிகள் இயக்கம். பண்ணையடிமைத் தனத்திற்கெதிரான போராட்டத்தில் சீனிவாசராவையும், இரணியனையும் தனுஷ்கோடியையும் இன்னும் ஆயிரக் கணக்கானோரையும் செங்கொடி தந்தது. மற்ற இன்றைய சாதி கட்சிகள்தராதது ஏன்?

கண்ணெதிரே நடந்த பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் களத்திலிறங்காமல், அரசு சன்மானங்களைப் பெறவும், அதிகாரத்தைப் பங்கு போடவும் பக்கவாட்டில்ஒதுங்கிக் கொண்டவர்களின் அரசியல் பிழைப்புவாதத்தை அறிந்துகொள்ள அன்றைய சமகால வரலாற்றைப்புரட்டிப் பார்க்கக் கோருகிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.

இன்று பேசப் படும் தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின, தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பே இடதுசாரிகள் வர்க்க ரீதியாக மக்களை அணிதிரட்டி இந்த சுரண்டல் அமைப்பு முறைக்கு முடிவுகட்ட முயற்சித்துள்ளனர்.

இதைக் காண மறுத்துக் கண்களை மூடிக் கொள்ளும் தமிழின, தலித்தியவாதிகள் பெரியாரிய, அம்பேத்கரியப் பார்வையை ஏற்றுக் கொண்டால்தான் தேசிய இன, சாதியப் பிரச்சினையை அணுகித் தீர்க்கும் “மண்ணுக்கேற்ப மார்க்சியம் இல்லையென்றால் மரபுவழி மார்க்சியம்” என்று அடாவடி பேசுகின்றனர்.இவற்றிக்கு காரணம் இவர்களின் மார்க்சிய குறைபாடுதானே ஒழிய மார்க்சியத்தில் குறைபாடு இல்லை.

மார்க்சிய கொள்கை கோட்பாடு, தலித்தியவாதிகள் மற்றும் தமிழினவாதிகளின் கொள்கை கோட்பாடுகளோடு ஒருபோதும் ஒத்துப்போக முடியாது. வேறுபட்ட கொள்கையோடு,மார்க்சிய கொள்கையை மார்க்சியவாதிகள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று மார்க்சியம் கம்யூனிஸ்டுகளுக்கு வழி காட்டுகிறது. ஆகவே தமிழினவாதிகள் மற்றும் தலித்தியவாதிகளின் கொள்கையோடு மார்க்சியவாதிகள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. அதே வேளையில் ஆட்சியாளர்கள் மக்களின் மீதும், தேசிய இனங்களின் மீதும் தாக்குதல்கள் தொடுக்கும்போது, அதனை எதிர்த போராட்டங்களில் நடைமுறையில் மார்க்சியவாதிகள், தலித்திய மற்றும் தமிழினவாதிகளோடு ஒன்றுபட்டு போராட வேண்டியது அவசியமாகும். அதாவது மார்க்சியவாதிகள் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் நடைமுறையில் விட்டுக்கொடுத்து சமரசம் செய்து கொள்ளலாம் என்று மார்க்சியம் கம்யூனிஸ்டுகளுக்கு வழி காட்டுகிறது.

ஆக தோழர்களே சரியான மார்க்சிய புரிதலை உண்டாக்குவோம்; நாமும் தொடர்ந்து விவாதிப்போம்... மார்க்சியம் மட்டுமே இன்றுள்ள சுரண்டல் அமைப்பு முறையிலிருந்து விடுவிக்கும் தத்துவமாகும்.

மார்க்சிய லெனினியத்தை தூக்கி பிடிப்போம்... 

ஆசிரியர் குழு......

2 comments:

  1. //அதாவது மார்க்சியவாதிகள் மார்க்சிய கொள்கையை விட்டுக்கொடுக்காமல்,நடைமுறையில் விட்டுக்கொடுத்து சமரசம் செய்து கொள்ளலாம் என்று கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்சியம் வழிகாட்டுகிறது//

    மார்சியத் தத்துவத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது என்பதே நடைமுறையில் அந்த தத்துவத்தை கறாராக நடைமுறைபடுத்துவதே தானே தவிர, நடைமுறையில் கொள்கையை சமரச படுத்திகொள்வது மார்க்சிய விரோதமாகும்.

    நான் புரிந்து கொண்ட வரையில் உங்களுக்கு லெனின் கூறிய சமரசம் என்பதில் புரிதல் சிக்கல் இருக்கலாம்.அல்லது தாங்கள் புரிந்து கொண்டதை வெளிப்படுத்துவதில் சிக்கல் நேரலாம்.நான் இங்கு சுட்டி மட்டுமே காட விரும்புகிறேன்.ஆசிரியர் குழு இதை பரிசீலிக்கவும். நன்றி தோழர்களே

    வணக்கம்
    😊😊😊
    🙏🙏🙏

    கதிரவன் .மு
    செஞ்சிறுத்தைகள் இயக்கம்
    ஒருங்கிணைப்பு குழு தோழர்
    --------------------------------------------
    செங்கொடி மையம் படிப்பு வட்டம்
    பொறுப்பாளர்கள் குழு
    ஒருங்கிணைப்பு செயலர்

    ReplyDelete
  2. உங்கள் கருத்துகளை பரிசீலிக்கிறோம் தோழர். கருத்துரைதமைக்கு நன்றி தோழர்.

    ReplyDelete

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்