இலக்கு இதழின் தொடக்க உறை மனிதகுல வரலாற்றில் மனித சமூகம் வளர்வதற்கான அதன் வளர்ச்சி விதிகளை கண்டுபிடித்து உழைக்கும் மக்களுக்கு வழங்கியவர்கள்
காரல்மார்க்சும், எங்கெல்சும் ஆவார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட
தத்துவத்தின் மூலம் சமூக வளர்ச்சிக்கு முரணின்றி பாடுபடக்கூடிய வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்றும் அந்த வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களின் மூலமே சமூகம் வளர்ச்சியடையும் என்று தெளிவாக விஞ்ஞானப் பூர்வமாக ஒரு சித்தாந்தத்தை முன்வைத்தார்கள்.
இந்த பொதுவான தத்துவத்தை உள்வாங்கி ரஷ்ய சமூகத்தை இந்த கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்து ரஷ்யப் புரட்சிக்கான சித்தாந்தத்தை
லெனின் தலைமையிலான தொழிலாளர் கட்சி உருவாக்கி அந்த சித்தாந்தத்தை
அதாவது கட்சியின் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியை கட்டி, ரஷ்ய தொழிலாளர்களையும் விவசாயிகளையும்
அணிதிரட்டி புரட்சிகரமான போராட்டங்களை
நடத்தியதன் மூலம் அங்கே தொழிலாளி வர்க்கத்தின்
ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.
இந்தப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு உலகில் பல நாடுகளிலும் கம்யூனிஸ்டு கட்சிகள் கட்டப்பட்டது. இந்தியாவிலும்
கம்யூனிஸ்டு கட்சி கட்டப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர்களும் விவசாயிகளும்
திரட்டப்பட்டு பல போராட்டங்கள்
நடத்தப்பட்டது. பிரிட்டீஷ் ஆட்சியின் பயங்கரவாதத்தால் தொழிலாளர்களும்
விவசாயிகளும் கம்யூனிஸ்டுகளும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு பல தியாகங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி செய்தபோதும் அதனால் ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்டுகள்
போல் வெற்றியடைய முடியவில்லை.
அதற்கு முதன்மையான காரணம் மார்க்சிய லெனினிய தத்துவ வெளிச்சத்தில் இந்திய சமூகத்தை பருண்மையாக ஆய்வு செய்து இந்திய சுதந்திரத்திற்கான ஒரு விஞ்ஞானப்பூர்வமான சித்தாந்தத்தை
உருவாக்க (வேலைத்திட்டத்தை) இந்திய பொதுவுடமை இயக்கம் தவறியதுதான். அத்தகைய திட்டத்தை உருவாக்க வேண்டுமானால் பொதுவுடமையின்
மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் ஒரு பொது தளத்தில் விவாதித்து ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செய்தது போன்ற முயற்சியில் ஈடுபடுவதன் மூலமே அதனை சாதிக்க முடியும். அதற்கு நாம் அனைவரும் விவாதிப்பதற்கு ஒரு பத்திரிக்கை தேவை. இந்த தேவையை இலக்கு இணையதள பத்திரிக்கை மூலம் துவங்க வேண்டும் என்ற நிலையிலிருந்தே
இலக்கு கொண்டுவரப்படுகிறது.
இலக்கு என்ற இந்த இணைய இதழின் நமது நோக்கம்:- இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளை
விஞ்ஞான பூர்வ கண்ணேட்டத்தில்
அணுகி மார்க்சிய லெனினிய புரட்சிகர அரசியல் அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை
நடுவதும், நடை முறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மார்க்சிய லெனினிய அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர அறிவு ஜீவிகளை வளர்ப்பதும், “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்.”.
இதில் முதற்கண் புரட்சிகர அறிவு ஜீவிகளோடு விவாதிப்பதும்,சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்க்கும் வகையில் புரிய வைப்பதுமேயாகும்.
"இலக்கு” இதழில் தங்களது விமர்சனங்களை
விவாதங்களை மார்க்சிய லெனினிய முறையில் வைக்கும் படி அழைக்கும் அதே நேரத்தில் தங்களின் நிலையை சரிப்படுத்துவதோடு மற்ற தோழர்களின் அறிவு மேலும் செழுமைப்படுத்தப்படுவதுடன் புரட்சிகர சக்திகளின் மீதான விமர்சனத்தின் அவசியம் தவறுகளில் இருந்து விடுபட்டு மீண்டும் தவறுகள் வராத முறையில் இருப்பதற்காகவே
ஆகும். அதாவது “மருத்துவர் ஒருவர் நோய்க்கு சிகிச்சை அளித்தல் என்பது; நோயாளியைக் காப்பாற்றுவதே அன்றி அவர் இறப்பதற்கு சிகிச்சை அளிப்பதல்ல”.
பாட்டாளி வர்க்கத்தின்
அரசியல், பொருளாதாரம், தத்துவம் ஆகிய துறைகளில் மார்க்சிய லெனினிய வாதிகளை வளர்க்க முயற்சிப்போம், சமூக நிகழ்வுகளையும் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில்
விவாதித்து சரியான வழிமுறையை முன்வைத்து பேசுவோம்.
இதழில் வரும் கருத்துகளை விமர்சிப்பதன்
மூலம், கட்டுரைகளைத் தந்துதவுவதன்
மூலம், இதழ்களைப் பரப்புவதன் மூலம், பிற சகல முயற்சிகளின்
மூலம் இவ்விதழ் வேட்கையை வளரச் செய்யுங்கள்!
வாழச் செய்யங்கள்! நன்றி.
இப்படிக்கு
ஆசிரியர் குழு.
No comments:
Post a Comment