தொடர்ச்சியாக
மார்க்ஸ்: (மூலதனம் - முதல் பாகம்)
உற்பத்திக் கருவிகளை உருவாக்கி
பயன்படுத்துவது மனித இனத்தின் தனிச்சிறப்பாகும். மனிதன் கருவிகளைப் படைக்கும் மிருகம் என்று
பிராங்க்ளின் வருணித்தார். மனித வரலாற்றை ஆராய்வதற்கு முந்தைய காலத்தின்
உற்பத்தி பொருட்களை ஆராய்வது பலன் தராது. அந்தந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட உற்பத்தி
கருவிகளை ஆராய்ச்சி செய்வது அப்போது நிலவிய உற்பத்தி முறைகளை, எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பது பற்றிய
விபரங்களை அறியத் தருகின்றன.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி
உற்பத்தி உறவுகளை பாதிக்கின்றன. கையினால் இயக்கப்படும் மில் நிலப்பிரபு
சமூகத்தையும், இயந்திரத்தினால்
இயக்கப்படும் மில் முதலாளித்துவ சமூகத்தையும் உருவாக்கின.
உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள், கருத்துக்கள் இவற்றின் வளர்ச்சி தொடர்ந்து
நடைபெறுகிறது. மாறாமல்
இருப்பது இயக்கம் மட்டும்தான்.
எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)
பொருளாதார உற்பத்தி முறையும் அதன்
அடிப்படையில் உருவாகும் சமுதாய அமைப்பும் அந்தந்த கால கட்டத்தின் அரசியல்
வரலாற்றுக்கும் சிந்தனையின் வரலாற்றுக்கும் அடிப்படையாக இருந்துள்ளன. வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின்
வரலாறாக, சுரண்டுபவர்களுக்கும்
சுரண்டப்படுபவர்களுக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாக இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளி வர்க்கம்
தமது வர்க்க ரீதியிலான விடுதலை முழு சமூகத்தையும் சுரண்டலிலிருந்து விடுவிப்பதன்
மூலம்தான் சாத்தியமாகும்.
ஈ. உற்பத்தியின் மூன்றாவது அம்சம், புதிய உற்பத்தி முறை உருவாகும் புரட்சி. புதிய உற்பத்தி சக்திகளும் உற்பத்தி
உறவுகளும் பழைய சமூகம் அழிந்த பிறகு அதிலிருந்து தனித்து நின்று உருவாவதில்லை. பழைய சமூகத்திலேயே அவை உருவாகின்றன.
1. எந்த உற்பத்தி முறை வேண்டும் என்று
தேர்ந்தெடுக்கும் வசதி மனிதர்களுக்கு இல்லை. அந்தந்த காலத்தில் நிலவும் உற்பத்தி
சக்திகளுக்கேற்ப உற்பத்தி உறவுகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறை
விட்டுச் சென்ற உற்பத்தி உறவுகளுக்கேற்ப தம்மை தகவமைத்துக் கொண்டு வாழ
வேண்டியிருக்கிறது.
மிகவும் நியாயமான கடுமையாக
உழைக்கக் கூடிய மக்கள் கூட இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் விதிகளுக்கேற்பத்தான்
வாழ வேண்டியிருக்கிறது.
2. உற்பத்தி சக்திகளை வளர்ப்பதால்
சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படும் என்று மனிதர்கள் சிந்திப்பதில்லை. தமது உழைப்பை எளிமைப்படுத்துவதற்காக மட்டும்
உற்பத்தி சக்திகளை மேம்படுத்துகிறார்கள். கல் கருவிகள், இரும்புக் கருவிகள், உலோகங்கள், இயந்திரங்கள் இவற்றை பயன்படுத்துவதன் மூலம்
சமூகத்தின் உற்பத்தி உறவுகள் அடுத்த கட்டத்துக்கு மாற்றப்படும் என்று
எதிர்பார்க்கவில்லை. அந்த கால கட்டத்தில் குறைவான உழைப்பின் மூலம் உற்பத்தியை
அதிகரிப்பதற்கான முயற்சியாக மட்டுமே அவற்றை செய்கிறார்கள்.
புராதன சமூகத்திலிருந்து அடிமை
முறைக்கு இட்டுச் சென்ற கருவிகளையும் நிலப்பிரபுத்துவ முறையிலிருந்து முதலாளித்துவ
முறைக்கு இட்டுச் சென்ற உற்பத்தி சாதனங்களையும் உருவாக்கியவர்கள் அந்தந்த காலத்து
ஆதிக்க வர்க்கங்களுக்கு அவை ஆப்பு வைப்பவையாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.
மார்க்ஸ் (அரசியல் பொருளாதரத்திற்கான விமர்னத்திற்கு
ஒரு பங்களிப்பு நூலின் முன்னுரை):
மனித சமூகத்தில் மனிதர்கள்
திட்டமான உற்பத்தி உறவுகளில் ஈடுபடுகிறார்கள். அந்த உறவுகள் உற்பத்தி முறைக்கு
அத்தியாவசியமானவை. மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவை.
ஆனால் உற்பத்தி உறவுகளில் ஏற்படும்
மாற்றம், பழைய
உற்பத்தி உறவுகளை தூக்கி எறிந்து புதிய உற்பத்தி உறவுகளை ஏற்படுத்துவது வலுவான
போராட்டங்களின் மூலம் புரட்சியின் மூலம்தான் நடைபெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் சமூகத்தின்
சுரண்டும் வர்க்கத்தினரின் நலன்களுக்கு பாதகம் ஏற்படாதது வரை உற்பத்தி சக்திகளின்
வளர்ச்சியும் உற்பத்தி உறவுகளில் மாற்றமும் மனித முயற்சிக்கு அப்பாற்பட்டு
நடைபெறுகின்றன. ஆனால்
இதிலும் ஆதிக்க வர்க்கங்கள் வளர்ச்சியை தமக்கு சாதகமாக திசை திருப்பிக்
கொள்கின்றனர். போகப்
போக இந்த முரண்பாடு இன்னும் தீவிரமாகிறது. ஆளும் வர்க்கங்கள் உற்பத்தி சக்திகளின்
வளர்ச்சிக்கு இடையூறாக குறுக்கே வருகின்றனர். இந்தக் கட்டத்தில் முற்போக்கு சக்திகள்
அமைப்பாக திரண்டு ஆளும் வர்க்கங்களை வலுக்கட்டாயமாக தூக்கி எறிவதன் மூலம்தான்
உற்பத்தி சக்திகளின் இயல்பான வளர்ச்சியை தொடர்ந்து சாத்தியமாக்க முடிகிறது.
மார்க்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)
பாட்டாளி வர்க்கம் பழைய உற்பத்தி
நிலைமைகளை பலத்காரத்தைக் கொண்டு துடைத்தெறிகிறது. தன்னை ஆளும் வர்க்கமாக அமைத்துக் கொள்கிறது.
முதலாளி வர்க்கத்திடமிருந்து
உற்பத்தி கருவிகளை கைப்பற்றுவதற்கு தனது அரசியல் மேலாதிக்கத்தை பாட்டாளி வர்க்கம்
பயன்படுத்தும்.
பலாத்காரமே புதிய சமுதாயம்
பிறப்பதற்கான மருத்துவச்சியாக இருக்கிறது.
இன்னும் பின்னர்