சரக்கு உற்பத்தி – பாகம் 3.

 ஸ்தூலமான உழைப்பும் அருவமான உழைப்பும்

சரக்கு என்பது உழைப்பின் உற்பத்திப் பொருள். இதில் பயன் மதிப்பும் பரிவர்த்தனை மதிப்பும் இணைந்துள்ளன.இதற்கு பயன் மதிப்பு ஏதும் இருக்காவிட்டால்,பரிவர்த்தனை மதிப்பும் ஏதும்இருக்கமுடியாது.அது பயன்ற்றதாக இருக்குமானால் அதை யாரும் வாங்க விரும்பமாட்டார்கள்.மற்றோர்புறம், விற்பதற்காகவே அது உற்பத்தி செய்யப்பட்டிருப்பதால், அது பரிவர்த்தனை - மதிப்பின்மூலமே அதன் பயன் மதிப்பு கைகூடிவரும்.எனவே நாம் ஒரு சரக்கின் மதிப்பைப் பற்றிப் பொதுவாகப்பேசும்போது, நாம் அதன் பரிவர்த்தனை மதிப்பையே குறிப்பிடுகிறோம். 

வெவ்வேறு சரக்குகளுக்கு வெவ்வேறு பயன் மதிப்புகள் உள்ளன. காரணம் அவை வெவ்வேறுவகை உழைப்புகளின் உற்பத்திப் பொருளாகும். எடுத்துக்காட்டாக, நார்ப்பட்டும் தோலும்.

வெவ்வேறு வகை உழைப்பின் உற்பத்திப் பொருள்களாக இருக்கும் பொருள்களே ஒன்றுக்கொன்று சரக்காக அமைகின்றன. இந்த உழைப்பு ஒவ்வொன்றும் சுயேச்சையாகவும், தனிப்பட்ட மனிதர் களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

அதே வேளையில்,பரிவர்த்தனை செய்யப்படக்கூடிய பொருள்கள் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அவை அளவால் ஒத்தவையாகவும் இருக்க வேண்டும். அதாவது, அவை ஏதோ ஒரு பொதுவான அம்சத்தை சமஅளவில் கொண்டிருக்க வேண்டும். இந்த அம்சம்தான்உழைப்பு.

பயன் மதிப்புகள் என்ற வகையில் சரக்குகள்,எல்லாவற்றுக்கும் மேலாக வெவ்வேறு பண்புகள் கொண்டவை;ஆனால் பரிவர்த்தனை மதிப்புகள் என்ற வகையில் அவை வெவ்வேறு அளவுகள் மட்டுமே. இதன் காரணமாக அவற்றில் பயன் மதிப்பு ஒரு அணுகூட இல்லை.

நாம் சரக்குகளின் பயன் மதிப்பைப் பரிசீலனையிலிருந்து விலக்கிவிட்டால் அவற்றில் ஒரேஒரு பொது அம்சம் மட்டுமே எஞ்சி நிற்கும்.அவை யாவும் உழைப்பின் உற்பத்திப் பொருள்கள் என்பதேஅந்த அம்சம்.ஆனால் உழைப்பின் உற்பத்திப் பொருள்கூட நம்மிடம் ஒரு மாற்றத்துக் குள்ளாகி இருக்கிறது.

அதன் பயன் மதிப்பிலிருந்து ஒரு அம்சத்தைப் பிரித்து எடுக்கிறோம் என்பதன் பொருள், நாம் அப்பொருளை பயன் மதிப்பாக்குகின்ற பொருண்மைக் கூறுகள், வடிவங்கள் ஆகியவற்றிலிருந்தும்அப்பொது அம்சத்தைப் பிரித்து எடுக்கிறோம் என்பதாகும். இனி அப்பொருளை நாம் ஒரு மேசையாகவோ, வீடாகவோ, நூலாகவோ அல்லது எந்த ஒரு பயனுள்ள பொருளாகவோகாண்பதில்லை; அது ஒரு பருப்பொருளாகப் பார்க்கப்படுவதில்லை; இனியும் அந்தப் பொருள் தச்சனின், கொத்தனாரின், நூல்நூற்பவனின் அல்லது வேறு ஸ்தூலமான (குறிப்பான) வகை உழைப்பின் உற்பத்திப் பொருளாகக் கருதப்படுவதில்லை. உற்பத்திப் பொருள்களின் பயனுள்ள தன்மைகளுடன், அவற்றில் பொதிந்துள்ள பல்வேறுவகை உழைப்புகளின் பயனுள்ள தன்மைகள் மற்றும் ஸ்தூலமான வடிவங்கள் ஆகியவற்றையும் சேர்த்தே நம் பார்வையிலிருந்து அகற்றிவிடுகிறோம்; அப்படி நீக்கிவிட்டால் எஞ்சி நிற்பது இவை அனைத்துக்கும் பொதுவான ஒன்றே; அவை அனைத்தும் ஒரேமாதிரியான உழைப்பாக, அருவமான உழைப்பு (abstract labour) என்பதற்குள் கொண்டுவரப்படுகிறது.

நார்ப்பட்டு,தோல் ஆகியவற்றையும் நாம் பயன் மதிப்புகளாகக் கருதும்போது அதனதன் வழியில் அவற்றைப் பயனுள்ளவையாக்கும் வெவ்வேறு பண்புகளையும்,நெய்தல்,பதனிடுதல் என்று இவற்றை உற்பத்தி செய்யக் காரணமாகிற வெவ்வேறு வகை உழைப்புகளையுமே கருத்தில் கொள்கிறோம்.இதுஸ்தூலமானஉழைப்பு(concrete-labour) ஆனால் நாம் அப்பொருள்களைச் சரக்குகளாக்க் கருதும்போது,அவற்றை ஒரேபடித்தான (homogenous) உழைப்பின் அளவுகள் என்றே கருதுகிறோம். இது அருவமான உழைப்பு (abstract labour).நார்ப்பட்டும் தோலும் வெவ்வேறு வகையில் பயன்படுகின்றன;அவை வெவ்வேறு வகை உழைப்பின் உற்பத்திப் பொருள்கள்; ஆனால் ஒரு பவுண்டு (பிரிட்டீஷ் நாணயம்) விலையுள்ள நார்ப்பட்டு ஒரு பவுண்டு விலையுள்ள தோலுக்குச் சமமாக உள்ளது. அருவமான உழைப்புதான் மதிப்பின் சாரமாகும் என்ற கருத்தை ஒரு உவமை கொண்டு விளக்குவோம். ரொட்டி ஒரு பொருள், அது எடை என்ற அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த அம்சத்தைப் பார்க்கவோ தொடவோ முடியாது. ஆனால் அதை அளக்க முடியும். முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட எடையைக்கொண்ட இரும்புத் துண்டுகள் பலவற்றை ஒரு பக்கமும் ரொட்டியை ஒரு பக்கமும் தராசில் நிறுத்துவோம்,நாம் இரண்டு பொருள்களையும் சரியான விகிதங்களில் எடுத்து தராசில் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும் வகையில் அளப்போமானால் அவை இரண்டும் சமமான அளவுகளில் எடை என்ற அம்சத்தைக் கொண்டுள்ளன என்பதை அங்கீகரிக்கிறோம். இதேபோல் இரண்டு சரக்குகள் சமமான மதிப்புடயவை என்று கூறும்போது, அவை இரண்டிலும் சம அளவில் ஏதோ ஒன்று இருக்கிறது.அதாவது அவை இரண்டிலும் சரிசமமான உழைப்பு உள்ளது என்ற பொருளில் இதைக் கூறுகிறோம்.ஆனால் இங்கு ஒரு வேறுபாடு உண்டு. ரொட்டிக்கும் இரும்புக்கும் பொதுவாக உள்ள அம்சம் ஒரு இயற்கை அம்சம்; சரக்குகளுக்குப் பொதுவாக உள்ள அம்சம் ஒரு சமூக அம்சம் சரக்கு மானிட உழைப்பிலிருந்து பெறப்படுவதால் அதில் சமூக அம்சம் இருக்கிறது. அருவமான உழைப்பு, ஸ்தூலமான உழைப்பிலிருந்து வேறுபடுகிறது.உதாரணமாக தச்சன்,கொத்தன்,நூல் நூற்பவன் இன்னபிறரின் உழைப்பிலிருந்து மாறுபடுகிறது. அதாவது அருவமான உழைப்பு ஒரேபடித்தானது. பண்புவகை வேறுபாடுகள் அனைத்தும் இதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. எனவே அந்த உழைப்பை அது நீடிக்கும் நோக்கத்தைக் கொண்டே அளக்க வேண்டும்.ஒரு சரக்கில் உருக்கொண்டுள்ள அருவமான உழைப்பின் அளவு,அதை உற்பத்தி செய்யத் தேவையான நேரத்துக்குஏற்றவாறு மாறுபடுகிறது. இதுதான் அச்சரக்கின் மதிப்பை அளவிடும் அளவையாகும். இந்தவரையரையை மேலும் துல்லியமாக்க் கூற,மேலும் இரு காரணிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

உற்பத்திக்குத் தேவையான நேரத்தின் அளவு மாறுகின்ற ஒன்றாகும்.சில தொழிலாளர்கள் மற்றவர்களை விட வேகமாக வேலை செய்வர்.ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்ய மெதுவாகவேலை செய்கிற தொழிலாளி,வேகமாக வேலை செய்கிற தொழிலாளியைவிட இருமடங்கு நேரத்தைஎடுத்துக்கொள்ளலாம்;ஆனால் இதன் பொருள் அவர் எடுத்துக்கொள்ளும் நேரம் மிகையாக இருப்பதால் அவர் இரண்டு மடங்கு ஊதியம் ஈட்டுவார் என்பதல்ல;பொருளின் மதிப்பு அதை உற்பத்தி செய்யத் தேவையான சராசரி நேரத்தின் அளவால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் இதுவுமே மாறக்கூடிய அளவுதான்.மேலும் சிறந்த கருவிகளைப் புகுத்துவதன் மூலமோ அல்லது உழைப்பைக் குறைக்கும் உத்திகள் மூலமோ இந்த நேரத்தைக் குறைக்கலாம். இங்குமே, பழையவகைக் கருவிகளைக் கைவிட மறுக்கும் தொழிலாளியால் செலவிடப்படும் நேரம் மிகையாகவே உள்ளது. எனவே சராசரி நேரம் என்று நாம் கூறுவதன் பொருள், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நிலவுகிற இயல்பான உற்பத்தி நிலைமைகளால் தீர்மானிக்கப்படும் சராசரி நேரம் என்பதாகும்.

எனவே ஒரு பொருளை உற்பத்தி செய்ய சமுதாயரீதியில் அவசியமான உழைப்பே, அல்லது சமுதாயரீதியில் அவசியமான உழைப்பு நேரமே அதன் மதிப்பைத் தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு சரக்கையும் உற்பத்தி செய்யத் தேவையான நேரத்தின் அலகு (unit) சமுதாயம் முழுவதன் மொத்த உழைப்பு நேரத்தின் ஒரு பகுதியாகும்.சமூகத்தின் உற்பத்தி ஆற்றல் வரம்புக்கு உட்பட்டதனால்,ஒவ்வொரு சரக்குக்கும் கிடைக்கக்கூடிய பங்கும் கூட அதை உற்பத்தி செய்யத் தேவையான நேரத்தின் அளவுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்ட எல்லாச் சரக்குகளின் மதிப்புகளின் ஒட்டுமொத்தத்தில் அச்சமூகத்தின் மொத்த உழைப்புச் சக்தியும் உருக்கொண்டுள்ளது.இந்த மொத்த உழைப்புச் சக்தி எண்ணற்ற தனித்தனி அலகுகளின் சேர்க்கையாக இருந்தாலும் இங்கு அது ஒரே ஒருபடித்தான மானிட உழைப்புச் சக்தித் தினாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.இந்த அலகுகள் எல்லாம் ஒரே மாதிரியானவை.காரணம் அவை ஒவ்வொன்றும் சமுதாயத்தின் சராசரி உழைப்புச் சக்தி என்ற தன்மை கொண்டுள்ளது.அவ்வாறே அது தாக்கம் ஏற்படுத்துகிறது.அதாவது ஒரு சரக்கை உற்பத்தி செய்யத் தேவையான நேரம் சராசரியாக எவ்வளவு தேவைப்படுமோ அதற்கும் அதிகமாக இருப்பதில்லை.

சமுதாயரீதியில் அவசியமான நேரம் எவ்வளவோ அதற்கும் அதிகமானதாக இருப்பதில்லை. சமுதாயரீதியில் அவசியமான உழைப்பு நேரம் என்பது குறிப்பிட்ட காலத்தில் நிலவுகிற இயல்பானஉற்பத்தி நிலைமைகளில் சராசரி உற்பத்தித் திறனையும் முனைப்பையும் கொண்டு ஒரு பொருளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் நேரம் ஆகும்.

மதிப்பின் அளவை (MEASURE OF VALUE)

பண்டமாற்று வடிவத்தில் நடக்கும் பரிவர்த்தனைகள் தற்செயலானவை;எப்போதாவது நிகழ்கிற செயல்கள். தற்செயலாகவே இரண்டு உற்பத்தியாளர்கள் சந்திக்கிறார்கள். இதில் ஒவ்வொருவனும் மற்றவனுக்குத் தேவைப்படுகிற பொருளை தனது தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்துள்ளான்.பரிவர்த்தனை நோக்கம் கருதி பொருள்கள் முறையாக உற்பத்தி செய்யப்படும் போதுதான் சரக்குகளின் புழக்கம் தொடங்குகிறது.இதற்குத் தேவைப்படுவது சரக்குகளுக்கான பொதுவான அளவையாகப் பயன்படக்கூடிய,அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைச் சாதனம் ஒன்றாகும்.

தங்கமும் வெள்ளியும் சரக்குகளாகும்.மற்ற சரக்குகளைப் போலவே அவற்றின் மதிப்பும் அவற்றைஉற்பத்தி செய்ய சமூதாயரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவால் நிர்ணயிக்கப்படுகிறது.

சுரங்கம் வெட்டி இவ்வுலோகங்களைத் தோண்டியெடுத்தல் என்பது மிகவும் சிரமமானது. இவ்வுலோகங்களும் அரிதாகக் கிடைப்பவையே.எனவே அவற்றின் மதிப்பும் உயர்ந்ததாக உள்ளது.

ஒரு சிறிய தங்கத் துண்டில் பெருமளவு உழைப்பு நேரம் பொதிந்துள்ளது. இவ்வுலோகங்கள் நீடித்துநிற்கக் கூடியவை.எளிதாகப் பகுக்கப்படக் கூடியவை.இக்குணங்களே அவற்றை பரிவர்த்தனைச் சாதனமாகச் செயல்படமிகவும் தகுதியான வை ஆக்குகின்றன. எனவே, தங்கமும் வெள்ளியும் மற்றசரக்குகளுக்கு ஒரு பொது அளவையாக,அல்லது அனைத்துக்கும் பொதுவான மாற்று மதிப்பாகப்பயன்படும் என்ற கருத்தில் மற்ற சரக்குகளிலிருந்து பிரித்துத் தனியாக வைக்கப்பட்டுவிட்டன.இப்படி மதிப்பை அளவிடுவதற்கான ஒரு பொது அளவையாக இருந்துமற்ற சரக்குகளிடையே பரிவர்த்தனைஏற்பட உதவுவதில் தான் பணம் என்ற சரக்கு பயன் மதிப்பாகின்றது.

ஒரு தங்க நாணயம் அல்லது வெள்ளி நாணயம் என்பது கையாள வசதியான வடிவத்தில்வார்த்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட அளவு உலோகம் ஆகும்.உலோகத்தூய்மையை உத்திரவாதம் செய்யும் அதிகாரப்பூர்வமான முத்திரையை இது தாங்கியுள்ளது.காலப் போக்கில் புழக்கத்தின் காரணமாக அதன் எடை குறைந்துவிடுகிறது.அதன் மதிப்பும் குறைகிறது.இவ்வாறு நாணயத்தின் உண்மை மதிப்புக்கும் அதன் பெயரளவு மதிப்புக்குமிடையே ஒரு வேறுபாடு தோன்றுகிறது. இந்த வேறுபாட்டைச் சமுதாயம் புரிந்துகொண்டவுடன் தங்கத்துக்கும் வெள்ளிக்கும் பதிலாக, குறிப்பாக சிறிய நாணயங்களில்,செப்பு அல்லது நிக்கல் போன்ற மலிவான உலோகங்களைப் பயன்படுத்துவது வசதியானதாகக் காணப்பட்டது.இத்தைய நாணயங்கள் மதிப்பின் இயல்புகள் அல்ல.மாறாக மதிப்பின் அடையாளச் சின்னங்களே.இவற்றை வெளியிடும் அதிகாரியிடம் குறிப்பிட்ட அளவு தங்கமோவெள்ளியோ உடைமையில் உள்ளது என்பதை இவை சான்றிடுகின்றன. இதே கோட்பாட்டின் தொடர்ச்சியாகவே காகிதப் பணம் வந்தது.

பணம் என்பது மதிப்பின் அளவை மட்டுமல்ல; விலையின் அளவுகோலும் (Standard of Price) ஆகும். ஒரு சரக்கின் மதிப்பை நாணயமாக்கப்பட்ட உலோகத்தில் தெரிவிப்பதே மதிப்பின் பண வடிவம் அல்லது விலை எனப்படும்.ஒரு சரக்கின் விலை என்பது வார்க்கப்பட்ட நாணயத்தில் உள்ள ஒரு கற்பனையான அளவு உலோகம் ஆகும்.அச்சரக்கில் எந்த அளவு அருவமான உழைப்பு பொதிந்துள்ளதோ அதே அளவு அருவமான உழைப்பு இந்த உலோக நாணயத்தில் இருக்க வேண்டும். மதிப்பின் அளவை என்ற வகையில் பணத்துக்குள்ள செயல்பாடு, உலோகத்தின் மதிப்பில் ஏற்படும் வேறுபாடுகளால் பாதிக்கப் படுவதில்லை. ஏனெனில் இந்த மாற்றங்கள் எல்லாச் சரக்குகளையும் சரிசமமாகப் பாதிக்கின்றன. எனவே சரக்குகளின் சார்புநிலை மதிப்புகளை (relative value) மாற்றமின்றி விட்டு வைத்து விடுகின்றன.

இதனால், ஒரு சரக்கின் விலையும் அதன் மதிப்பின் பரும அளவும் (Magnitude) ஒத்திருக்கின்றன என்றாகிவிடாது. ஏற்கனவே காட்டப்பட்டது போல, அதன் மதிப்பு அதனுள் உருக்கொண்டுள்ள,

சமுதாயரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவால் தீர்மானிக்கப் படுகின்றது. இந்த நேரத்தின்அளவோ அச்சரக்கு எந்தச் சமூக வரலாற்று நிலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறதோ அவற்றுக்கேற்ப மாற்றம் அடைகிறது. அத்தோடு உற்பத்தி நிலைமைகள், நுகர்வு நிலைமைகள் ஆகியவற்றின் குறுகியகால மாறுதல்களும் உள்ளன. அதாவது நல்ல விளைச்சல் அல்லது மோசமான விளைச்சல் போன்றவையே இவை. இவை சந்தையில் பொருள்களுக்கு இருக்கும் கிராக்கி (Demand), அளிப்பு (Supply) ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகளைத் தோற்றுவிக்கின்றன.கிராக்கியைவிட அளிப்பு அதிகமாக இருந்தால், சரக்கின் விலை அதன் மதிப்பைவிடக் குறைவானதாகும். கிராக்கியைவிட அளிப்பு

குறைவாக இருந்தாலோ, சரக்கின் விலை அதன் மதிப்பைக் காட்டிலும் அதிகமாகும். ஆனால்ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாய்த் தோற்றந்தரும் ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படையாக உள்ளதும், அவற்றை ஒழுங்குபடுத்துவதும் சரக்கின் சராசரி விலையே ஆகும். இது சரக்குகளிலுள்ள மதிப்பின் பரும அளவால் (Magnitude) தீர்மானிக்கப்படுகிறது. விலைகளின் தொடர்ச்சியான ஊசலாட்டத்தில் அவற்றின் ஏற்றமும் வீழ்ச்சியும் ஒன்றையொன்றுஈடு செய்து கொள்கின்றன. ஒரு சராசரி விலைக்குத் தம்மை இறக்கிக் கொள்கின்றன. இந்த சராசரிவிலையே அவற்றில் மறைத்துள்ள சமன்படுத்தியாகும்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

1. மனிதர்களின் உழைப்பின் மூலம் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு பொருள் விற்பனை செய்யப்படும் போது அது சரக்காகிறது.

2. மனிதர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் போது அந்தப் பொருளுக்கு பயன் மதிப்பு கிடைக்கிறது.இத்தகைய பயன் மதிப்பு இல்லாத பொருள்களை யாரும் வாங்க மாட்டார்கள். அதனால் அந்தப் பொருளை விற்க முடியாது. ஆகவே பயன் மதிப்பு இல்லாத பொருள்சரக்காக ஆக முடியாது.

3. ஒரு பொருளுக்கு பயன் மதிப்பு இருந்தால் மட்டும் அது சரக்காவதற்குப் போதாது. அதற்குபரிவர்த்தனை மதிப்பும் இருக்க வேண்டும்.பரிவர்த்தனை மதிப்பு இருந்தால்தான் ஒரு சரக்கைவேறுஒரு சரக்குக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

4.வெவ்வேறு சரக்குகளுக்கு வெவ்வேறு பயன் மதிப்பு உள்ளது.அதற்கு காரணம் அதுவெவ்வேறு வகையான உழைப்பின் மூலமாக உருவாக்கப்படுகிறது.

5.பொதுவான அம்சத்தில் சம அளவைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு சரக்கு மற்றறொருசரக்குக்கு பரிமாற்றிக்கொள்ள முடியும்.

6. ஒரு குறிப்பிட்ட எடையுள்ள கோதுமையை ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வெள்ளி கொலுசுக்குபரிமாற்றிக்கொள்ள வேண்டுமானால் இவ்விரண்டு சரக்குக்கும் சமமானவை ஆக இருக்க வேண்டுமானால் இவற்றுக்கு இடையில் ஒரு பொதுவான அம்சத்தால் அளக்கப்பட வேண்டும். அத்தகைய பொதுவான அம்சம்தான் இவ்விருவகையான பொருள்களையும் மனிதர்களின் குறிப்பான உழைப்பைக் கொண்டு அல்லாமல் பொதுவான உழைப்பு அதாவது அருவமானஉழைப்பு நேரத்தால் அளக்கப்பட வேண்டும்.7.உழைப்பு நேரத்தால் சரக்கின் மதிப்பை அளப்பது என்றால் திறமை குறைந்த ஒரு தொழிலாளி ஒரு பொருளை உற்பத்தி செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் அந்தப் பொருளின் மதிப்பை அதிகமாக கணக்கிடலாமா? அதே பொருளை ஒரு திறமையான தொழிலாளி குறைவான நேரத்தில் உற்பத்தி செய்துகொடுத்தால் அந்தப் பொருளுக்கு குறைவான மதிப்பு கொடுக்கலாமா? இது அபத்தமானது அல்லவா. ஆகவே ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வதற்கான சராசரி நேரத்தைக் கொண்டே அளக்க வேண்டும்.

8.இந்த சராசரி நேரமும் ஒரு திறமையான இயந்திரத்தைக்கொண்டு உற்பத்தி செய்வதற்கும் பழைமையான கருவியைக் கொண்டு உற்பத்தி செய்வதற்கும் ஆகும் நேரத்திலும் வேறுபாடு இருக்கும். ஆகவே குறிப்பிட்ட காலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உற்பத்திக் கருவியையும் கணக்கில் எடுத்துக்கொண்டே உழைப்பு நேரத்தை கணக்கிட்டு அந்த சரக்கின் மதிப்பை கணக்கிட வேண்டும்.

9. சரக்கை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு இரண்டு வகைப்பட்டது. ஒன்றுகுறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வதற்கான குறிப்பான உழைப்பு,அதாவது நாற்காலியைஉற்பத்தி செய்வதற்கு தேவையான உழைப்பு தச்சு உழைப்பு வகையைச் சேர்ந்தது. கட்டிடம் கட்டுவதற்கான உழைப்பு கொத்தனார் வகையான உழைப்பைச் சேர்ந்தது. இத்தகையஉழைப்பை ஸ்தூலமான உழைப்பு என்பார்கள்.இவ்விரண்டு வகையான உழைப்பிற்குள்ளும் பொதுவாக மனித உழைப்பு என்ற பொது அம்சம் உள்ளது இந்த பொது அம்சத்தின் அடிப்படையிலான உழைப்பை அருவமான உழைப்பு என்பார்கள்.

10.இரண்டு வெவ்வேறான சரக்குகளை நாம் அளப்பதற்கு நமக்கு உதவி செய்வதுதான் அருவமான உழைப்பாகும்.அருவமான உழைப்பு நேரத்தைக் கொண்டுதான் ஒரு சரக்கின் மதிப்பையும் பிறசரக்கின் மதிப்பையும் ஒப்பிட்டு அளக்க முடியும்.

11.ஒருவர் தனது தேவைக்கும் அதிகமாக ஒரு பொருளை உற்பத்தி செய்தால் மட்டுமே அவர் மிகுதியாக உற்பத்தி செய்த பொருளை சந்தைக்கு கொண்டுசென்று விற்ப்பார்

12.எனினும் பரிவர்த்தனையை நோக்கமாகக் கொண்டு முறையாக உற்பத்தி செய்யப்படுவதுஅதிகரிக்கும் போதுதான் சரக்கு உற்பத்தி தொடர்கிறது.

13.தங்கம் வெள்ளி போன்றவை சரக்குகளாக இருந்தாலும் அவை பிற பொருள்களுக்கு அதாவது சரக்குகளுக்கு பரிவர்த்தனை செய்துகொள்ளப்படும் நாணயங்களாக ஆரம்ப காலங்களில் பயன்பட்டது.

14.தங்கம் வெள்ளி போன்றவற்றிக்கு பதிலாக செப்பு நிக்கல் போன்ற உலோகத்தின் மூலமும் நாணயங்கள் தயாரிக்கப்பட்டு அது அரசு முத்திரையுடன் சரக்குகளை பரிமாற்றிக்கொள்வதற்கான அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.இத்தகைய நாணயத்தை பயன்படுத்தும் போது அதற்கு இணையான மதிப்பு கொண்ட தங்கமோ அல்லது வெள்ளியோஇந்த நாணயங்களை பயன்படுத்த அனுமதிப்ப வரிடம் அதாவது அரசிடம் கையிறுப்பில் இருக்க வேண்டும்.இந்த அடிப்படையிலேயே சரக்குகளின் மதிப்பின் அடையாளமாக காகிதப்பணத்தை அரசு நாணயமாக புழக்கத்தில் விட்டது.

15. பணம் என்பது மதிப்பின் அளவு மட்டுமல்ல, விலையின் அளவுகோலும் ஆகும்.

16.சந்தையில் கிராக்கியைக் காட்டிலும் ஒரு சரக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்தால் அந்த சரக்கின் தேவை அல்லது கிராக்கி குறைவாக இருப்பதால் அந்த சரக்கின் விலை அந்த சரக்கின் மதிப்பின் விலையைவிட குறைவாக இருக்கும். இதற்கு மாறாக ஒரு சரக்கின் தேவையைக் காட்டிலும் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வந்தால் அதாவது அதன் அளிப்பு குறைவாக இருந்தால் அந்த சரக்கின் விலை அதன்மதிப்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்……………….

தேன்மொழி.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்