இந்திய இடதுசாரி இயக்கங்களின் மீதான ஒர் ஆய்வு

 இன்று இந்தியாவில் இடதுசாரி கட்சிகள் என்பது கம்யூனிசத்தின் பெயரால் முதலாளித்துவ கும்பலின் ஒரு பிரிவினராக ஆட்சியதிகாரத்தில் தங்களின் பங்கில் வாழ்ந்து கொண்டுள்ளனர். புரட்சி பேசும் புரட்சியாளர்களும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான மூலதனத்திற்கு எதிராக பெரும் முதலாளிகளை சரியான வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கு அமைப்பதில் திறமையற்றவர்களாக இருக்கின்றனர். கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்றர் ஆக மக்கள் கம்யூனிசத்திற்கு பக்கம் வரத் தயங்குகின்றனர். 

இதனை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இரண்டாம் அகிலத்தில் காவுத்ஸகி போன்ற துரோகிகள் செய்த அந்தப் பெரும் துரோகத்தை இரண்டாம் அகிலத்தில் தவறுகளை களைந்து மூன்றாம் அகிலத்தை லெனின் எப்படி கட்டியமைத்தார் என்பதும் ரசிய புரட்சிக்கு முன் அங்கிருந்த பல்வேறு மார்க்சிய விலகல் போக்குகளை லெனின் அம்பலப் படுத்தி ஒரு சரியான புரட்சிகர கட்சியின் அவசியம் அதன் பணியினை வரையறுத்து ரசிய புரட்சியை நடத்தினாரோ அதுபோன்று இங்கே ஒரு சரியான தலைவர் உதிக்கவே இல்லை என்பேன்,   அதனை பற்றி தேடும் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி போக்கை ஆராய்வோம்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற இந்திய மக்களின் மனநிலை எரிமலையின் விளிம்பில்எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில் கல்கத்தா நகரமே போர்கோலம் பூண்டிருந்தது. பிப்ரவரி 22, 1946 அன்று மும்பாயில் கடற்படையினர், ஆங்கிலேயே கடற்படையினுடைய துணைத்தலைவரின் முன்னணி கப்பல் உள்ளிட்டமும்பாயில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்கள்ளுடைய கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்தனர். 20,000 கடற் படைவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், விமானப்படை வீரர்களும் ஆதரவு தெரிவித்தனர். இராணுவப்படை வீரர்கள், போராடும் கப்பல்படை வீரர்களை சுடமறுத்துவிட்டனர். இந்திய பொதுவுடைமை இயக்கமும் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத் தது இதேகாலக்கட்டத்தில். இந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது.அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமை யிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமை யிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமை யிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான போல்ஷ்விக்சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது.

1933-ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்பு கட்சியாக இணைந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர செயல்தந்திரங்களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது. திரிபுவாதத் தலைமையின் வலது சந்தர்ப்பவாத துரோகத்தனமும் புரட்சிகர அணிகளின் அளப்பரிய தியாகமும் நிறைந்ததுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் கடந்தகால வரலாறாக உள்ளது. பின்னர் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.

உலக அளவில் திருத்தல்வாதமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் சோவியத் ரஷ்யாவில் குருஷ்சேவின் திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலகஅளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல் வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுகளை சந்தித்தது. இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குருச்சேவின் திரிபுவாதத்தை ஆர்வமாக வரவேற்றனர். ஏப்ரல் 1956- ல் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி..யின் நான்காவது பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தை மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிஎன்று போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் இங்குசில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின் வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்து வருகின்றன. தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும், வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் முன்னெப் போதையும் விட இயக்கத்தை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ஏற்றவகையிலும் சோவியத்துக் கம்யூனிஸ்டு கட்சியின் இருபதாவது மாநாடு சில பழைய கோட்பாடுகளை மாற்றி புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது "என்று கூறி குருச்சேவின் திருத்தல் வாதத்தை ஆதரித்தார். இவ்வாறாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது உலதுசாரி பாதையை உகந்தே ஏற்தது இவை சுரண்டும் வர்க்கதுடனான இணக்கமான சரணாகதி பாதையாக உழைக்கும் மக்களுக்கு விரோதமான சீரழிவுக்கு இட்டு சென்றது வெறும் தேர்தல் அரசியலோடு தன்னை சுருக்கிக் கொண்டது.

1952க்கு முன்பான வரலாற்றில் இ..க யின் தியாகத்தையும், போராட்டத்தையும் யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. சி.பி.. கட்சியின் மையக் குழுவால் முன்வைக்கப்பட்ட திருத்தல்வாதக் கோட்பாட்டுகளினால் கட்சியில் உள்ள புரட்சிகரமான சக்திகள் தொடர்ந்து அதிருப்தி அடையத் தொடங்கினர். அணிகளின் எந்த வித கருத்துக்களுக்கும் காது கொடுக்காமல் மதுரை மாநாடு, அமிதசரஸ் பேராயம், விஜயவாடா பேராயம் என கட்சியின் தியாகத்தையும் லட்சிய உணர்வையும் மெல்ல மெல்ல டாங்கே, அஜய்கோஷ் உள்ளிட்ட திரிபுவாத குப்பல்கள் பலிகொடுக்கத் தொடங்கினர்.

1. இந்தியாவின் சுதந்திரம் போலியானது என்ற தோழர். இராஜேஸ்வரராவ் 1950 ம் ஆண்டில் பழைய வரையரைகளை காற்றில் பறக்கவிடப்பட்டு 1955-ம் ஆண்டுக்குள்ளாக சி.பி.. இந்தியாவை முழுசுதந்திரம் படைத்த இறையாண்மையுடன் கூடியநாடு என ஏற்றுக்கொண்டது.

2. எந்த வரையரையும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய உள்நாட்டு முதலாளிகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என வகைபடுத்தியது.

3. மக்கள் ஜனநாயகத்தை அடையவும், பிறகு சோசலிசத்தை எட்டவும் பராளுமன்ற தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்தது. கட்சியின் இப்போக்கினால் மெல்ல மெல்ல புகையத் தொடங்கிய உட்கட்சிப் பூசல் 1962ம் ஆண்டுவாக்கில் வெடிக்கத் தொடங்கியது. நேரு தலைமையிலான இந்திய அரசு இந்திய- சீனப்போரில் தேசதுரோகம் இழைத்துவிட்தாகக் கூறி கம்யூனிஸ்டுகளை கைது செய்யத் துவங்கியது.

நாடு முழுவதும் சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 80 தோழர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

சி.பி.எம். கட்சி தோன்றுதல்...

கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி போக்கானது மெல்ல மெல்ல வளர்ந்து கட்சியே பிளவுபடும் சூழலுக்கு இட்டுச் சென்றது. ஏற்கனவே தெனாலியில் கூட்டப்பட்ட அதிருப்தியாளர்களின் மாநாட்டில் அறிவித்தற்கு ஒப்ப, ல்கத்தாவில் 1964-ம் ஆண்டு ஆக்டோபர் 31 முதல் 7 நாட்களுக்கு நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பேராயம் கட்சி இரண்டாக பிளவு பட்டதை உணர்த்தியது. ஒப்பற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக நாடகமாடிய நேருவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தோடு தொடங்கியது பேராயம் சி.பி.ஐ யின் வெளிப்படையான துரோகத்தை எதிர்த்து, புதியதாக அழைப்பு விடுத்திருக்கும் தலைவர் களின் உணர்ச்சி மயமான உரைகளும் ஆக்கபூர்வமாக செயல்பட்ட தோழர்கள் பலரையும் அதில் இணைத்தது. ஏறத்தாழ சுமார் ஒரு வருடகாலமாக புதியதாக உருவாக்கப்பட்ட கட்சிக்கென தோழர்கள் உழைத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் புதிய கட்சியின் (தொடக்கத்தில் இரு கட்சிகளுக்குமே சி.பி.ஐ எனத்தான் பெயர் இருந்தது. சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த சிக்கலில் தேர்தல் கமிஷனின் ஆலோசனைப்படியே புதிய கட்சி சி.பி..(எம்) என ஆனது.) சி.பி.(எம்) கட்சியின் தலைமைக் குழுவானது 1967-ம் ஆண்டு தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறும், காங்கிரஸ் அமைச்சரவையை தூக்கியெறியுமாறும் அணிகளுக்கும், மக்களுக்கும் அரைகூவல் விடுத்தது. மேலும் எதிர் கூட்டணி உருவாக்க பிற கட்சிகளோடு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதன்மூலம் தெலுங்கானா பாணியிலான ஆயுதம் தாங்கிய வர்க்கப் போராட்டம் என்பதை நடைமுயைில் அது கைவிட்டது. சி.பி..யோடு ஆழமாக கருத்து வேறுபாடுகளோடு வெளிவந்த தோழர்களுக்கு புதிய கட்சியின் இந்த அழைப்பு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. தேர்தலை சந்தித்த கட்சி எட்டு மாநிலங்களில் காங்கிரஸை தோற்கடித்தது. கம்யூனிஸ்டுகளின் கூட்டணி மூலம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

கட்சியின் அப்போதைய செயலாளர் சுந்தரையா மத்திய அமைச்சர் குல்சாரிலால் நந்தாவுக்கு சரணாகதி கடிதம் எழுதியது, .எம்.எஸ் பாக்கிஸ்தானுக்கு எதிராக போர் செய்த ஜவான்களுக்கு மக்களை இரத்த தானம் செய்யக் கோரியது என படிப்படியாக சி.பி.எம். மின் செயல்பாடுகளின் மீது புரட்சிகரத் தோழர்களுக்கும் அதிருப்தி தோன்றியது. சாரம்சத்தில் சி.பி., சி.பி.எம் ஆகிய இரண்டு திரிபுவாதிகளுக்கும் இடையே கோட்பாட்டு ரீதியில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை சி.பி.எம்மின் நடைமுறை உணர்த்தியது. தங்களின் புரட்சிகர நோக்கமானது நவீன திரிபுவாதிகளால் பாழாவது கண்டு மெய்யான புரட்சியாளர்கள் பதைபதைத்தனர். உட்கட்சியில் நவீன திரிபுவாதம் குறித்தும் அதை அம்பலப் படுத்தியும், புரட்சிகரத் தோழர்கள் போராடினர்.

வசந்தத்தின் இடிமுழக்கமான நக்சல்பாரி....

தோழர்களின் உட்கட்சிப் போராட்டம் இப்படியிருக்க இந்தச் சூழலில்தான் மேற்கு வங்கத்திலிருந்து செவி குளிரும் சேதியொன்று ஒட்டுமொத்த இந்திய புரட்சியாளர் உள்ளங்களிலும் வசந்தத்துக்கான இடி முழக்காமாய் இறங்கியது. அதுதான் நக்சல்பாரி.

1. நிலப்பிரபுத்துவம், தரகு முதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகிய நான்குமே இந்திய மக்களின் அடிப்படையான எதிரிகள்.

2. உழைக்கும் மக்களை ஒடுக்கும் அரசுயந்திரத்தை தூக்கியெறிய ஆயுதப் போராட்டம்ஒன்றே தீர்வு.

3. பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம். 

4.திரிபுவாதிகள் மற்றும் நவ திரிபுவாதிகளின் மக்கள் விரோதப் போக்கை சித்தாந்த ரீதியில் உறுதியாக அம்பலப் படுத்துவோம். என்ற பதாகையின் கீழ் பல புரட்சியாளர்கள் ஒன்றிணைந்தனர். அதன்பால் ஈர்க்கப்பட்டார். இது தொடர்பாக சி.பி.எம். முடன் நடைபெற்ற விவாதத்தின் போது எவ்வித ஜனநாயக மத்தியத்துவமும் அற்று தமிழகத்தில் அப்பு உள்ளிட்ட பல தோழர்கள் கட்சியில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். கோவை மாவட்டத்தில் மட்டும் கட்சியில் இருந்த மாவட்டக் குழு உறுப்பினர்களில் 21 பேரில் 14 பேர் நீக்கப்பட்டனர். பல கட்சி அமைப்புகள் கலைக்கப் பட்டன. இந்நிலையில்தான் தோழர் அப்பு கல்கத்தா சென்று நக்சல்பாரியின் முக்கியக் தலைவரான தோழர் சாருமஜூம்தாரைச் சந்தித்தார். நவம்பர் 11,1967ல் கல்கத்தாவில் உள்ள ஷாஹித்மினார் மைதானத்தில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் அப்பு நக்சல்பாரிப் பாதையின் உன்னதம் குறித்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்த நாட்களில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவிலும் பங்கெடுத்தார். மேலும் சாரு மஜூம்தாரைப் பொதுச் செயலாளராகக் கொண்ட சி.பி..(மா.லெ)மையக் குழுவிலும் தமிழகத்திலிருந்து தோழர் எல்.அப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் மக்களின் விடுதலைக்காக தீரமுடன் போராடிய முற்போக்கு இயக்கங்களில் தமிழக வரலாற்றில் நக்சல்பாரிகளுக்கு என்றைக்கும் முன்வரிசையில் இடம் உண்டு. படுகொலை செய்யப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள், சித்திரவதை செய்யப் பட்டவர்கள், ஆயுள்தண்டனைகளுக்கு ஆளாகி சிறைகளிலிலேயே தனது இளமைக் காலங்களைத் தொலைத்தவர்கள் என தனக்குள்ளே ஒரு மாபெரும் தியாகவரலாற்றை கொண்டிருக்கிறது இந்த நக்சல்பாரி இயக்கம். 

எல்லா தடைகளையும் கடந்து நக்சல்பாரி இயக்கம் மக்களை ஒளிமிகுந்த ஓர் வருங்காலத்திற்கு அது அழைத்துச் சென்றதா என்றால் அவர்களின் உயரிய அர்பணிப்பும் தியாகமும் சரியான மார்க்சிய லெனினிய புரிதல் இன்மையால் இடதுசாரி சாகசவாதத்தால் எதிரிக்கு ஏற்படத்த வேண்டிய பேரிழப்பிற்க்கு பதில் தன்னையே அழித்துக் கொண்டது.

மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை நக்சல்பாரி இயக்கமானது நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமை யளிக்க முன்னெடுத்த இயக்கம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப்பிடித்து, புரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்க அரசைத் தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகர பலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றியமைத்தல், புதிய ஜனநாயகப் புரட்சி, தொழிலாளி, விவசாயிகள் கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளை அங்கீகரித்தது. ஆனால் வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்தரீதியில் பலத்த அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்குவதற்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால் உருவாக்கப்பட்டதை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப்பட்டது. கொரிலாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக் கப்பட்டன. இடது குறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையானது பாட்டாளிவர்க்கப் போராட்டம் சந்தித்துக் கொண்டு இருக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும். இந்த சூழ்நிலைகளை மாற்ற வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அனுபவத்தின் வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப் படும் நிலைப்பாடுகளின் அடிப்படையில் செயல்படுத்தப் படும் நடைமுறைகள், மற்றும் ரசிய புரட்சியிக்கு முன்னும் பின்னும் எழுந்த திருத்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடிய அனுபவத்தை கிரகிக்காத நிலை, அதாவது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு லெனின் முறியடித்தார் என்பதை பார்க்காத தன்மை ஆகியவற்றை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனினியமும் இந்திய கம்யூனிஸ்டுகளின் அனுபவமும் நமக்கு சுட்டிகாட்டுகிறது. ஆகவே நமது தோழர்களின் உயரிய தியாகத்தை போற்றும் நாம், அதற்கு ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி வேண்டும் என்பதனை உணரவேண்டும். அதற்காக நாம் மார்க்சிய தத்துவத்தை பயில வேண்டும். அதன் அடிப்படையில் இந்தியப் புரட்சிக்கான குறிப்பான பொதுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்து நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் வெறுமனே பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டும் எடுத்துக் கொண்டு நமது அணிகளுக்கும் மக்களுக்கும் போதனை அளித்து அரசியல் அதிகாரத்திற்காகப் போராடுவதோடு நாம் நின்றுவிடக் கூடாது. அதற்கு மேலும் மார்க்சிய தத்துவம் மற்றும் கம்யூனிச பண்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். நமது மக்களுக்கு மார்க்சிய, கம்யூனிசத்தை போதித்து மக்களை சித்தாந்தரீதியாக வளர்க்க வேண்டும். மேலும் நம்மிடையே கம்யூனிச பண்புகளை திட்டமிட்டு வளர்க்க வேண்டும், கம்யூனிச பண்புகளுக்கு எதிரான தீய பண்புகள் நம்மிடம் இருக்குமானால் அதனை களைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் மேலும் மக்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். பல தியாகங்கள் செய்து புரட்சி நடத்திய, சோவியத்து ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தனிவுடமை சிந்தனையின் அடிப்படையிலான தீய பண்பாளர்கள் உள்ளே நுழைந்து இருந்ததால்தான் பல லட்சக்கணக்கான மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட சோவியத்து அரசை மிகவும் எளிதாக வீழ்த்த முடிந்தது என்ற வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் இதுவரை அடைந்துள்ள தோல்விகளுக்கு காரணம் தம்மிடமுள்ள குறைகள்தான் என்பதை உணரத் தவறுவது. தமது தோல்விகளுக்கு பிறரை காரணமாக காட்டிக்கொண்டு தமது தவறான வழியிலேயே செல்வது. தம்முடைய தவறுகளை சுட்டிக்காட்டி, தம்மை எதிர்த்துப் போராடுபவர்களின் மீது முத்திரை குத்தி அவர்களை எதிரிகளாக பாவித்து செயல்படுவது. இது போன்று பல குறைகள் கம்யூனிஸ்டுகளாகிய நம்மிடம் காணப்படுகிறது. இந்த தீய குணங்களிலிருந்து நாம் விடுபட வேண்டியது மிகமிக அவசியமாகும். தொடரும்…...

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்