இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் ஊரகப் பகுதியில் வசிக்கிறார்கள் என்கிறது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. அப்படியெனில், விவசாயத் துறையின் வீழ்ச்சியென்பது 72 சதவீதம் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடியது. அதாவது விசாயத்தை மட்டுமே பிழைப்பாக நம்பி கிட்டத்தட்ட 65 கோடி பேருக்கு மேல் இருக்கும் இந்தியாவில் விவசாயிகளை அழிக்கும் சட்டங்கள் எதற்க்கு என்பதனை விட விவசாயிகளின் நிலையை இந்தப் பகுதியில் அலசுவோம்.
1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 84 கோடி. இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 141 கோடி. கடந்த 32 வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 50% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்டகமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகமயமாக்கல் அமுல் படுத்தப்பட்டதற்கு பிந்தைய காலங்களில் தான் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த இருபத்திரண்டு வருட காலகட்டத்தில் நாளொன்றிற்கு சுமார் 2,035 விவசாயிகள் ‘காணாமல்’ போயுள்ளனர் என்பது தான் அரசின் இந்த அறிக்கையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது. இன்றைய நிலையில், கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 85 இந்தியர்கள் விவசாயத்திலிருந்து விலகிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
அரசு தரும் கணக்கின் படியே கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
நாட்டின் பெருபாண்மையில் உள்ள மக்கள் வாழ வழியில்லை ஆனால் இதனை வரவேற்க்கும் மேட்டுக் குடிகளோ இது குதூகலத்தின் காலமாய் இருக்கிறது. நாட்டின் நுகர்பொருள் கலாச்சாரம் அதிகரித்திருப்பது, ஒரு சிறு பிரிவினருக்கு சேவைத் துறையில் வளமான வேலைகள் கிட்டியிருப்பது, ஒரு புதிய மேல் நடுத்தர வர்க்கம் உதித்தெழுந்திருப்பது, நவீன மின்னணுப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் சந்தை விரிவடைந்திருப்பது மற்றும் இவற்றின் பயன்பாடு அதிகரித் திருப்பது உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டும் இவர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை களை விதந்தோதுகிறார்கள் இந்த உலகமய தாசர்கள்.
இவ்வாறாக கொண்டாடப்படும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் சுயேச்சையான பொருளாதாரக் கட்டமைப்பை சிதைத்துள்ளதோடு இதைப் பன்னாட்டு மூலதனத்தோடு நேரடியாக பிணைத் துள்ளது. தற்போது உலகளவில் முதலாளித் துவம் ஒரு கட்டமைப்பு நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளை இந்தியாவும் எதிர்கொண்டு நிற்கிறது. தற்போது ஆலைத் தொழில் துறையில் 2004-2007 காலகட்டத்தில் இருந்த 14 சதவீத கார்ப்பரேட் முதலீடு தற்போது 10 சதவீதமாக குறைந்துள்ளது என்கிறது வளர்ச்சி, இணக்கம் மற்றும் முன்னேற்றத் திற்கான முதலாளிகள் சங்கம் (P.H.D Chambers). தொழில்துறை வளர்ச்சி என்பது அனேகமாக பூஜ்ஜியத்தை அடைந்து விட்டது என்று கண்ணீர் வடிக்கிறது இன்று அச்சங்கம்.சேவைத் துறையில் பெரும் பங்காற்றும் ஐ.டி துறையோ தற்போது அமெரிக்காவின் தள்ளாட்டத்திற்கு தக்கவாறு ஆடிக் கொண்டிருக்கிறது. தொழில்துறையின் வளர்ச்சியும் தேக்கமடைந்து விட்டது. இச்சூழலில் விவசாயத்தின் அழிவும் அதைத் தொடர்ந்து கிராமப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் ஊரகப் பகுதிகளில் இருந்து விசிறியடிக்கப்பட்டு நகரங்களில் அத்துக் கூலிகளாய்க் குவிந்துள்ள மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மீண்டும் கிராமத்துக்கே சென்று விவசாயத்தை மீளவும் துவங்குவது சாத்தியமற்றதாகி விட்ட நிலையில், நகர்ப்புறங்களின் சேரிகளிலும் நடைபாதைகளிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயத்தின் அழிவு தேசத்தை உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறையையும் அதைத் தொடர்ந்த பஞ்சத்தையும் நோக்கி மெல்ல மெல்ல இழுத்துச் செல்கிறது. விவசாயத்திற்கும் உள்நாட்டுத் தொழில்துறைக்கும் துரோகமிழைத்து நாட்டை எகாதிபத்திய நலனுக்கு அடிமையாக்கத் துடிக்கும் காரணிகளை உடனடியாக வீழ்த்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் அழிவை நம்நாடு சந்திக்க வேண்டியிருக்கும்.
மோடி அரசின் விவசாய விரோத சட்டமானது ஒட்டு மொத்த நாட்டின் முதுகெலும்பானா கிராமபுறத்தை அழிக்க வகை செய்யும் அவை எதிர்கால இந்தியா முடமாகி போகவே வாய்புகள் உள்ளன வளர்ச்சிகானவை அல்ல.
(இவை செய்தி ஆதாரம் விகாஸ்பீடியா மற்றும் எனது பழைய பதிவே தேவைக் கருதி மறுப்பதிவு செய்கிறேன். இன்னும் இதனை குறித்து எனது கருத்துகளை எழுதுவேன் தோழமைகளே).
இன்றைக்கு நிதியாதாரம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப் படுவதால் விவசாயத் துறையிலான முதலீடு என்பது கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூரிலிருந்து தனது நானோ கார் தொழிற்சாலையை டாட்டா நிறுவனமானது குஜராத்திற்கு இடமாற்றம் செய்த போது 29000 கோடி ரூபாயை குஜராத் மாநில அரசு அந்நிறுவனத்திற்கு அளித்தது. கேட்பவர் வியந்திடும் வகையிலான மலிவு விலையில் நிலம் இவர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. சொல்லப்போனால் அனைத்தும் அவர்களுக்கு அநேகமாக இலவசமாகவே கிடைத்தது. ஆக, இன்றைக்குமுதலீடு என்பது பெருமளவில் விவசாயத் துறையிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தின் இதர துறைகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு வருகிறது
நாடு தழுவிய அளவில் 2010-ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் குறித்த ஆய்வு ஒன்றினை டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சைச் சார்ந்த பேராசிரியர் ராம்குமார் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்படி, சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ரூ.5000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களின் எண்ணிக்கை மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2000 முதல் 2008 வரையிலான ஆண்டுகளில் இத்தகைய கடன்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதே நேரத்தில், 10 கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்படும் கடன்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 10 கோடி, 25 கோடி என கடன் தொகை பெறும் விவசாயி யாரையேனும் உங்களுக்குத் தெரியுமா? அப்படி எந்த விவசாயியாவது உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளாரா? அப்படியானால் இந்தக் கடன் தொகையெல்லாம் எங்கே போகிறது என்று பார்த்தால் அவையெல்லாம் விவசாயிகளைச் சென்றடைவதில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களையே சென்றடைகின்றன. எல்லா வகையான கடன் தள்ளுபடி திட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக் குக் கிடைக்கின்றன.
என்னமாதிரியான தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? 2 ஆண்டுக்கு முன்பு 76 வயதான காசிராம் என்ற மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதி விவசாயி தான் பயிரிட்ட சோயாபீன் பயிரின் விளைச்சல் குறைவால் பயிர்களுக்கு தீமூட்டிவிட்டு தானும் அதில் விழுந்து மாண்டுபோய்விட்டார். சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் 7ம் வகுப்பு படிக்கும் தனது மகனை பள்ளியில் விட்டுவிட்டு "மகனே நீ ஒருபோதும் விவசாயி ஆகிவிடாதே" என துயர் தோய்ந்த முகத்தோடு சொல்லிவிட்டு வந்து தற்கொலை செய்துகொண்டார்.
மகாராஷ்டிராவில் மட்டும் (2021ல்) 1மாதத்தில் 120 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக "விதர்பா ஜன் ஆந்தோலன் சமிதி" என்ற இயக்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில்மட்டும் 24 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அது குறிப்பிடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேலான விவசாயிகள்விதர்பா பகுதியில் இறந்துபோயுள்ளனர். தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாகவும், அரசுகளின் பாராமுகம் காரணமாகவும் சுமார் 7000 கிராமங்கள் விதர்பா பகுதியில்மட்டும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சாவு இன்னும் உயரும்.
இதில் இன்னொரு கூத்தும் உள்ளது. நிலம் வைத்திருப்பவர் மட்டுமே விவசாயி , நிலமற்ற கூலி விவசாயிகள் இந்த பட்டியலில் வருவதில்லை. அவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 5 மடங்காகும்.
தற்கொலை விவசாயிகளிடம் மட்டுமல்ல... சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் நிழலாய் நீள்கிறது. தேசிய குற்ற ஆவண மையம்(சி.என்.ஆர்.பி) தரும் புள்ளி விவரங்கள் நெஞ்சை பதறவைக்கும் அளவுக்கு பயங்கரமாக உள்ளது. கடந்த 2013 ல் மட்டும் நாடெங்கும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறும் அது, தற்கொலை விகிதத்தில் தமிழகமும், மகாராஷ்டிரமும் 12.3% எனும் விகிதத்தில் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறது. கிராமப்புறங்களில் மட்டுமல்ல பெருநகரங் களிலும் இதுதான் நிலை. சென்னையில் கடந்த 2012ம் ஆண்டு 2183பேரும், பெங்களூருவில் 1989 எனவும் பட்டியல் தொடர்கிறது. வயதடிப்படையில் பார்த்தால் தற்கொலை செய்து கொள்வோரில் 15 முதல் 29 வயதுடையோரில் 33.8% என்றும் 30முதல் 44வயதுடையோரில் 34.4% என்றும் குறிப்பிடுகிறது.
தற்கொலைக்கு எதிரான விழப்புணர்வு பிரச்சாரம் என்பது விசித்திரமானது. பலமான பிரச்சாரம் தற்கொலையை கூட்டுவதாக மனோதத்துவ நிபுனர்கள் குறிப் பிடுகிறார்கள். "நோய்நாடி" என்பதுபோல சமூக பொருளியல் காரணிகளை அலசாமல் பூசி மொழுகுவது எந்த விதத்திலும் பயன் தராது.
ஏழைகளின் இரட்சகன் என்றும், இரும்புமனிதன் என்றும் வகைவகையான பட்டப்பெயர்களுடன் வலம்வரும் மோடி தனது தேனிலவு காலத்திலேயே கவனம் செலுத்தட்டும். இருக்கின்ற அரைகுறை மக்கள் பற்றாளர்களும் மோடியை விமர்சித்தால், அவர்களை மிரட்ட ராஜா, தமிழிசை போன்ற ஏவல்படை தயாராக இருக்கட்டும். நிலக்கரி, இரயில்வே போன்ற துறைகள் தனியாருக்கு தாரைவார்க்கப் படட்டும். மானியம், ரேசன் , மருத்துவம் என "சேம நல" அரசுக்கான அத்துனை அடையாளங்களும் அழிந்து போகட்டும். கொத்து கொத்தாய் அத்துனை மக்களும் மடிந்து போகட்டும். கார்ப்ரேட் கம்பெனிகளின்உதவியோடு, இறந்துபோகும் மக்களின் சடலங்களை அப்புறப்படுத்தி மோடி தனது "கிளீன் இந்தியா" திட்டத்தை கொண்டாடி மகிழட்டும்.
வாழ்க இந்தியா..... வாழ்க இந்து தேசியம்!
இவை இரண்டு ஆண்டுக்கு முன் எழுதியதே தேவைக்கருதி இங்கே எழுதுகிறேன்.
மேலும் இந்திய விவசாயிகள் பற்றி தேடுவோம்
நிலவுடமை பற்றி NSS ஆய்வறிக்கை அடிப்படையில் இந்திய விவசாயிகளைப் பற்றி ஆறு விதமான குறிப்புகள் உள்ளன அவை பின் வருபவன.
நில மற்றவர்கள் (landless) .
குறு விவசாயிகள் (sub marginal) .
ஒரு ஏக்கருக்கு குறைவாக நிலம் உடையவர்கள்
மிகச் சிறிய விவசாயிகள் (marginal).
இரண்டரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் உடையவர்கள்
சிறிய விவசாயிகள் (small Farmers) 5 ஏக்கர் குறைவாக நிலம் உடையவர்கள்)
மத்தியதர விவசாயிகள் (medium) 15 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உடையவர்கள்
பெரிய விவசாயிகள் ( large Farmers) 15 ஏக்கருக்கும் மேல் நிலம் உடையவர்கள்
1947க்குப் பிறகு நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி மேலோட்டமாக பார்ப்போம்.
1953 -54 ல் நிலமற்ற விவசாயிகள் 23.09 % ஆகும் அதே 1972-82 இடையில் 41% உயர்ந்துள்ளது . குறு விவசாயிகள் மத்தியில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை மிகச் சிறிய விவசாயிகள் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது 1953-54 ல் 13.98% இருந்த 1982 18.43% மாறி சற்று உயர்ந்துள்ளதை காட்டுகிறது. அதேபோல் சிறு விவசாயிகள் மத்தியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1953-54 10.09% லிருந்து 1982 16.49% நிலம் சொந்தமாக இருந்தது மற்றும் நடுத்தர விவசாயிகளிடம் 1952-53 31.18% லிருந்து 1982 38.03% உயர்ந்துள்ளது.
பெரிய விவசாயிகள் நிலம் 1953-54 ல் 52.51% இருந்தது 1982 ல் 33.26% குறைந்துள்ளது இந்த நிலத்தின் கையிருப்பை பற்றி என்எஸ்எஸ் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வறிக்கையை நிலவுடமை சமுகம் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை நமக்கு கொடுக்கிறது. நிலமற்ற விவசாயிகளின் நிலையானது பெரும் ஏற்றத்தாழ்வு காணமுடிகிறது. அதுபோல் அது பெரும் நிலம் உடையார்களின் சொத்தும் பெரும் மாற்றத்தைக் காண முடிகிறது. அதேநேரத்தில் மிகச்சிறிய மற்றும் சிறிய விவசாயிகளின் நிலம் அதிகரித்துள்ளது. இதனை பற்றி இப்பொழுது புரிதலுக்காகமட்டுமே வேறொரு நேரத்தில் விரிவாக பேசுவோம்.
நிலவுடைமையாளர்கள் அவன் நிலத்தை அன்று கூலிகளைக் கொண்டு பயிரிட்டான், பரம்பரை பரம்பரையாக அடிமைகளாக தன் நிலத்தில் கூலியாட்களை வைத்திருந்தான்; அன்று வெளிநாட்டவரால் நன்கு மதிக்கப்பட்ட இவன்; இன்று அரசியல் பங்காளியாகவும் உள்ளான். நிலவுடைமையின் வீழ்ச்சி இன்று தனது மூலதனத்தை வேறுவகையில் முதலீடு செய்து தனது இடத்தை முதலாளித்துவத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளான்.
இன்று அடிக்கடி இந்திய பிரதமர் மோடி டிவியில் தோன்றி ஏதோ விவசாய மக்களின் வாழ்வுக்கு தான் பங்கு அளிப்பதாக கூறி கொண்டுள்ளார். இவை ஆளும் வர்க்கம் தனக்கு எப்பொழுதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறது உணவுப்பஞ்சம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் விவசாயிகளை காப்பதாகவும் அவர்களுக்கு தங்களால் உதவி செய்வதாகவும் பேசுவது நடந்து கொண்டுதான் உள்ளது. அவை உண்மையில் பெரும்பான்மையான மக்களுக்கு போய் சேருவதேயில்லை ஏனெனில், அரசின் கடன் வசதி, வருமான வரி சலுகைகள் பணக்கார விவசாயகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. இவர்கள்தான் டிராக்டர் வங்கி கடன் வாங்குவது , கூட்டுறவு சங்கத்தில் ஆதிக்கம் அரசியல் ஆதிக்கம் இவை மென்மேலும் செல்வ செழிப்புக்கு சொத்து சேர்ப்பதில் வளர்ச்சி பெறுகிறான்.
இந்தியா ஒரு விவசாய நாடு நாட்டின் பெரும்பாலான மக்கள் விவசாயிகள் இந்திய அரசின் அண்மைய ஆய்வறிக்கையின் அடிப்படையில் 70% மக்கள் கிராமப்புறத்தில் தான் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளனர் அதில் 60 சதவீத மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டுள்ளதாக அதே அறிக்கை குறிப்பிடுகிறது அப்படி எனும்போது இந்தியாவின் முதன்மையான முரண்பாடாக எதை காண்பது என்பது இங்கு சிலர் விவாதித்து கொண்டுள்ளனர். அதனைப் பற்றி இங்கே நான் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் இன்று நமது சமூகத்திலுள்ள நேரடி பிரச்சனைகளுக்கான காரணங்களை விளக்குவதே இக்கட்டுரை யின் நோக்கமாக உள்ளது. (ஓரு சிறிய அறிமுகம் மட்டும் குறிப்பாக கீழே இணைக்கிறேன்).
விவசாயிகளின் வாழ்வு இன்றும் விடிந்தபாடில்லை. உணவு உற்பத்தியை உயர்த்தும் திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையைஉயர்த்தவில்லை. விவசாயிகள் அரைப் பட்டினியுடன் வாழ்கின்றனர் காரணம் என்ன? விவசாயிகளுக்கும் உற்பத்திக்கும் இடையில் முதல் முரண்படாக இந்நாட்டில் விளங்குவது நிலமாகும், உண்மையாக உழைக்க முன்வரும் விவசாயிகளிடம் நிலம் இல்லை.
இன்று நாம் பல்வேறு பெரும் சொத்து உடையவர்கள் என்பவர் தனது முதலீடாக ஆங்காங்கே நிலத்தை வாங்கி குவிப்பதும் ஒரு போக்காக் காணமுடிகிறது .நாட்டின் பெரும்பான்மையான நிலங்கள் இன்றும் அன்றைய நிலவுடைமையாளர்கள் இன்றைய பெருமுதலாளிகளுக்கு கையில் உள்ளது சில பன்னாட்டுக் கம்பெனிகள் வசமும் உள்ளது. மக்களிடையே காணப்படும் நிலமானது பெரும்பாலும் வானம் பார்த்த நிலமாக உள்ளது அப்படியே கிணற்று நீர் இன்றைய சுற்றுச்சூழல் சீர்கேட்டால் தண்ணீர் மாசுபட்டுள்ளதால் விவசாயம் செய்யவே பயன்படாத பல பகுதிகள் உருவாகியுள்ளது. இன்னொறுபுறம் இன்று பெரும்பகுதி நிலங்கள் யார் கையிலுள்ளதோ அவர் களுக்கு விவசாயம் சார்ந்த உழைப்பிற்கு ஊக்கம் இல்லை. உணவு உற்பத்திக்கு ஈடுபட உள்ள தொழிலாளர் விவசாயிகள் கையில் நிலம் இல்லை.
மறைந்துள்ள விசியம் விவசாய வர்க்கம் அரசியல் அதிகாரம் பெறும் வரை அவர்களுக்கு எவ்வித சலுகையும் பெறப் போவதில்லை; பணக்கார விவசாயிகள் மேலும் அரசியல் அதிகாரம் பெற கூலி விவசாயிகளை நாட்டில் பெருகி வருகிறார்கள். இதே நேரத்தில் நாம் நாட்டில் ஏற்பட்டு வரும் முதலாளித்துவ அமைப்பில் மக்களுக்கு எவ்விதமான பயனளித்துள்ளது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
வறுமையும் ஏற்றத்தாழ்வும் முதலாளித் துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் முதன்மையானது முதலாளித்துவம் வறுமை இரண்டுமே பகைமை உறவு கொண்டவை அதனால் தான் முதலாளித்துவம் அதன் பிறப்பிலேயே அதை அழிக்கும் கருவையும் கொண்டிருக்கிறது என்று நமது ஆசான் கூறியுள்ளார்.
முதலாளித்துவமானது கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக இந்த ஏற்றத்தாழ்வை கட்டிக் காக்கிறது .
1). கூலி விகித ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி பல்வேறு ரக இக்கட்டான வேலைகளையும் தொழிலாளர்கள் கொண்டு செய்விக்க முடிகிறது.
2). வேலையில் உள்ளவர்களுக்கு வறுமையைகாட்டி எச்சரித்து தொழிலாளர்களை பல்வேறு பணிகளில் பிரித்து வேலை வாங்குகிறது வேலை செய்யாவிடின் பட்டினியாக இருக்க நேரிடும் என்று எச்சரிக்கிறது.
3). வேலையற்ற ஏழைகளை காண்பித்து உழைப்போர் ஊதியத்தை குறைத்து தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்த முடிகிறது. உழைப்போர் லாபத்தில் அதிகப்பங்கு பெற முடியாது போகிறது.
4). குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளரும் வறியவர்களின் சேவையையும் உற்பத்தி பண்டங்களும் குறைந்த விலையில் பெற முடிகிறது. இவைதான் முதலாளித்துவ லாப வேட்டைக்கான அடிப்படை ..
நாட்டின் முன்னேறிய வர்க்கமான தொழிலாளர்களும் நலிவுற்று கொண்டுருக்கும் விவசாயிகளுடன் இணைந்து புதியஜனநாயக புரட்சிக்கு வழி தேட வேண்டும். அத்தகைய புரட்சியே நாட்டில் உண்மையான ஜனநாயக தன்மை நிலைநாட்ட முடியும். நிலம் அனைத்தும் மக்கள் சொத்தாகவும்; அனைவரும் நாட்டின் தேவையை ஒட்டி உழைப்பர். நாம் அனைத்திலும் தன்னிறைவு பெறுவோம் விலையேற்றம் பற்றாக்குறை பற்றிய துன்பம் அனைத்தும் அப்பொழுது மறைந்து போகும்.
· குறிப்பு:- “முதலாளித்துவம் வளர்ச்சி விவசாயத்தில் ஏதுவாகவும் பல வடிவங்களும் நுழைகின்றது மேலும் விவசாயத்தில் முதலாளித்துவம் அதன் தன்மையிலேயே தொழில்துறை போல் சமமாக வளர்ச்சி அடைய முடியாது ஒரு இடத்தில் ஒரு நாட்டில் ஒரு பகுதியில் ஒரு வடிவத்தில் விவசாயத்தில் ஒரு அம்சம் அது முன்னுக்கு எடுத்துச் செல்கிறது” - லெனின் .
தொழில்துறை முதலாளித்துவம் விவசாயத்துறை முதலாளித்துவம் இடையே உள்ள ஒப்பீட்டு ரீதியான வளர்ச்சியையும் இயங்கியல் உறவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியை ஆராய முடியும். தொழில்துறை முதலாளித்துவத்தில் வெளிப்படும் தெளிவான வர்க்க அணி சேர்க்கையும் வர்க்க முரண்பாடுகளும் விவசாயத்துறை முதலாளித்துவத்தில் காண்பது இயலாது. ஆனால் ஒப்பீட்டு ரீதியான அளவில் தொழில்துறை முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஏற்ப அதன் பலம் பலவீனம் உள்வாங்கிக்கொண்டு விவசாயத்துறையில் முதலாளித்துவம் வளரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது இதற்கு முந்தி எல்லா உற்பத்தி முறைகளில் உயர்ந்த கட்டமாகும். அதுமட்டுமல்லாமல்முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது மிகவும் சிக்கலான பரிணாமங்களை பல்வேறு விதமான வடிவங்களில் கொண்டதாக அமைந்திருக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் சீராகவும் ஒரே மாதிரியாக ஒத்த தன்மை உடையதாகவும் அமைந்திருக்க இயலாது. முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் மாற்றங்களை எளிய மற்றும் நேர்கோடான சூத்திரத்தில் · அடக்கிவிட முடியாது. அது இடத்திற்கு இடம் நாட்டிற்கு நாடு காலத்திற்கு ஏற்ப மாறுபட்ட வடிவங்களில் கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இட்டுச்செல்லும் வடிவங்கள் பல இருப்பினும் அவை பொதுவாக இரண்டாகப் பிரிக்கலாம் ஒன்று புரட்சியின் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையை உருவாக்குதல் இந்த வகையான தங்குதடையற்ற முதலாளித்துவ மாற்றங்கள் இங்கிலாந்திலும் அமெரிக் காவிலும் நடந்தேறின மற்றது மெதுவான படிப்படியான முதலாளித்துவ வளர்ச்சி இது பிரஷ்யன் ஷங்கர் பாணி முதலாளித்துவ வளர்ச்சி என்றழைக்கப்படுகிறது. இம்மாதிரி யான முதலாளித்துவ வளர்ச்சி இன்று நமது நாட்டில் நடந்தேறி வருகிறது.
இவை தொடரும்…