காரல் மார்க்ஸின் பண்டமும், கிரிப்ட்டோ கரன்ஸியும் – சத்யா

 


2010 மே22ம் தேதி பத்தாயிரம் பிட்காயின்களைக் கொடுத்து இரண்டு பிட்ஸா வாங்குகிறார் ஒருவர். பதினோரு ஆண்டுகள் கழித்து இன்றைக்கு ஒரு பிட்காயினின் மதிப்பு  47 லட்சம் ரூபாய் சில நூறு கோடிகளை செலவிட்டு பிட்ஸா வாங்கிய அவர் இணைய மெங்கும் கிண்டலடிக்கப் படுகிறார். பிட்காயின் மட்டுமல்ல அதுபோலவே யிருக்கும் க்ரிப்டோ கரன்ஸிக்களின் வளர்ச்சி அந்த அளவு நிகழ்ந்திருக்கிறது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னால் 3 லட்சம் இருந்த பிட்காயின் மதிப்பு இன்று பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. (க்ரிப்டோ கரன்ஸி பற்றி தெரியாதவர்களுக்கு: அது இணையத்தில் புழங்கப்படும் ஒரு விர்ச்சுவல் கரன்ஸி. யாராவது பிட்காயின் என்று பளபளப்பான ஒரு நாணயத்தைக் கொண்டு வந்து விற்க முயன்றால் வாங்கவேண்டாம். அது ஒரு உருவ மற்ற பணம். ) அரசாங்கங்களின் கட்டுப்பாடுகளற்ற ஒரு நாணயத்தை பரிவர்த்தனைக்காக உருவாக்க வேண்டும் என்பதே கிரிப்டோ கரன்ஸி உருவாக்கியவர்களின் நோக்கமாக இருந்தது. பரிவர்த்தனைக்கு நாணயத்தை அல்லது பணத்தை பயன்படுத்துவது என்பது அரசாங்கங்களின் தோற்றத்தோடு தொடர்புடையது. அரசற்ற ஒரு சமூகம் பண்ட மாற்று முறையையே கொண்டிருந்தது.

பண்ட மாற்றுமுறை என்பதை என்ன என்று பார்ப்பதற்கு முதலில் பண்டம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். மனிதனுக்கு அன்றாட தேவைக்கோ, அல்லது உற்பத்திக்கோ பயன்படும் பொருட்கள்தான் பண்டம் என்று சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒருகட்டிலை எடுத்துக்கொண்டால், அது மனிதனின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுகிறது. ஒருமரம் கட்டிலை உற்பத்தி செய்யப்பயன்படுகிறது. ஆக இரண்டுமே பண்டங்கள்தான். ஆனால் இரண்டின் பயன்பாடும் வேறுவேறு. ஒவ்வொரு பண்டமும் தனக்கேயுரிய மதிப்பை உள்ளடக்கியுள்ளது. இன்று ஒருபண்டத்தின் மதிப்புவிலையாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒருகிலோ இரும்பின் விலையும் ஒருகிலோதங்கத்தின் விலையும் ஒன்றல்ல. இப்போது ஒருபொதுவான குறியீடான பணம் மதிப்பிடுவதற்கு பயன்பட்டாலும் பணம் புழக்கத்துக்கு வராத காலத்தில் அதாவது பண்ட மாற்று முறை நிலவிய காலகட்டத்திலும்கூட பண்டங்களின் மதிப்பு மீதான ஏற்றத்தாழ்வு நிலவியேவந்தது. அதாவது ஒரு காலத்திலும் ஒரு கிலோ தங்கத்தின் மதிப்பும் ஒருகிலோ இரும்பின்மதிப்பும் ஒன்றாக இருந்ததில்லை. ஆனால் அதற்காக இரும்பும், தங்கமும் பண்ட மாற்று செய்யப்பட்டதில்லை என்று ஆகாது.

அப்படியாயின் இரும்புக்கும் தங்கத்துக்கும் எப்படி வர்த்தகம் நிகழ்ந்திருக்கும்? ஒரு கிராம் தங்கத்துக்கு ஒருகிலோ இரும்பை பண்ட மாற்றம் செய்திருக்கலாம். அப்படியென்றால் ஒருபண்டத்தை இன்னொருபண்டத்தின் மதிப்பு மூலமாகவும் மதிப்பிடமுடியும் என்ற உண்மை இங்கே புலப்படுகிறது. அதாவது ஒருகிராம் தங்கத்தின் மதிப்பும் ஒருகிலோ இரும்பின் மதிப்பும் ஒன்று. இப்போது மூன்றாவதாக இன்னொரு பண்டம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஒரு மூட்டை அரிசியை அந்த மூன்றாவது பண்டமாக கொள்வோம். ஒரு மூட்டை அரிசியை ஒருகிலோ இரும்பிற்கு பண்டமாற்றம் செய்கிறோமென்று வைத்துக்கொண்டால் ஒருமுட்டை அரிசியின் மதிப்பானது ஒரு கிலோ இரும்பிற்கு சமமான மதிப்பைப் பெரும் அதே வேளையில் ஒரு கிராம் தங்கத்துக்கும் நிகரான மதிப்பைப் பெறுகிறது. அதாவது ஒரு மூட்டை அரிசியை ஒருகிலோ இரும்பைக் கொண்டோ, அல்லது ஒரு கிராம் தங்கத்தைக் கொண்டோ பெறமுடியும். இப்படி எத்தனை பண்டங்களையும் இணைக்கலாம், பண்டத்தின் அளவைக் கூட்டியோ குறைத்தோ எதிரிலுள்ள பண்டத்துக்கு நம்மால் பண்டமாற்றம் செய்து கொள்ளமுடியும்.

பண்டத்தின் மதிப்பை நிர்ணயிப்பதில் முக்கியபங்காற்றுவது அதன் பயன்-மதிப்பு. பயன்மதிப்புஎன்பதுஅந்தபண்டத்தின்பயன்பாட்டைப்பொறுத்தது. இரும்பின்பயன்பாடுபெட்டிசெய்வதுஎன்றுவைத்துக்கொள்வோம், அதேவேளையில்தங்கத்தின்பயன்பாடுஆபரணம்செய்வதுஎன்றும்கருதுவோம்.இயல்பாகவேஒருபெட்டியின்மதிப்பைவிடஆபரணத்தின்மதிப்புகூடுதல்.இப்படிபொருளின்பயன்பாட்டுக்குஏற்றாற்போல்அதன்மதிப்பும்கூடுகிறது.ஆனால்ஒவ்வொருபண்டமும்அதனதன்பயன்மதிப்பைஉள்ளடக்கியேஉள்ளது.பயன்பாடுகூடக்குறையஇருக்கலாமேயன்றிபயன்பாடேஇல்லாதபண்டம்என்றுஒன்றுஇருக்கவாய்ப்பில்லை.அல்லதுபயன்பாடேஇல்லாதஒன்றுபண்டமாய்இருக்கவாய்ப்பில்லை.எடுத்துக்காட்டாகஒருகல்லைஎடுத்துக்கொண்டால்அதற்குபயன்மதிப்புஒன்றும்இல்லை.அதனால்அதைஒருபண்டம்என்றுகொள்ளமுடியாது.அதேவேளையில்செங்கல்வீடுகட்டபயன்படுகிறதுஎன்பதால்அதற்குபயன்மதிப்புஉள்ளது.எனவேஅதை பண்டம்என்றுகொள்ளமுடியும்.

இப்போது பண்டத்தின் மதிப்பை அளவிட அந்த பண்டத்தின் பயன்பாடு முக்கிய பங்காற்றுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதைத் தவிர வேறெதுவும் பண்புகளால் பண்டத்தின் மதிப்பு மாற்றம் பெறுமா?ஆம்அதுதான் உழைப்புஒருபண்டத்தை உருவாக்க எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறதோ அவ்வளது அதிகமாக அதன் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது .ஆனால் வெறும் உழைப்பு மட்டுமே பண்டத்தின் மதிப்பை கூட்டுவதில்லைபயனுள்ள உழைப்பால் மட்டுமே பண்டத்தின் மதிப்பு கூடுகிறதுஎடுத்துக் காட்டாக ஒரு சிற்பி 18 மணி நேரமாக ஒரு சிலையை செதுக்கும் போது கடைசியில் உடைந்து மூளியாகிறது என்று வைத்துக்கொள்வோம்வெறும் உழைப்பு செலுத்தப்பட்டிருக்கிறது என்பதற்காக அந்த சிலையின் மதிப்பு கூடுமாஅல்லது 10 மணிநேரம் சிலையை செதுக்கி ஒரு நல்ல சிலையை உருவாக்கும்போது அந்த சிலையின் மீதுமதிப்பு கூடுமா?கண்டிப்பாக நல்ல சிலையின் மீதுதான் மதிப்பு கூடும்ஆக உழைப்புவெறும் உழைப்பாக மட்டு மன்றி, பயன் தரக் கூடிய உழைப்பாக செலுத்தப்படும் போதே பண்டத்தின் மதிப்பு கூடுகிறது.

என்னதான் மரத்தால்தான் கட்டில் செய்யப்படுகிறது என்றாலும் மரத்தின் மதிப்பும் கட்டிலின் மதிப்பும் ஒன்றாக இல்லைகட்டிலின் மதிப்பு மரத்தின் மதிப்பை விட இரண்டு மடங்கு கூடுதலாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அந்த கூடுதல் மதிப்பு என்பது உழைப்பால் ஏற்பட்ட மதிப்பே யாகும்இதைத்தான் மறைந்த இயக்குனர் ஜனநாதன் தனது பேராண்மை படத்தில், “சாக்பீஸ்ல இருந்து உழைப்பை கழிச்சுட்டா வெறும் சுண்ணாம்புதான் மிஞ்சும்டேபிள்ல இருந்து உழைப்பை கழிச்சுட்டா வெறும் மரம்தான் மிஞ்சும்,” என்று மிக எளிமையாக எடுத்தாண்டிருப்பார்.

இந்த பண்ட மாற்றில் உள்ள சிக்கல்களை தீர்க்க பொதுவான ஒரு அளவீடு தேவைப்படும் போதுபணம் அறிமுகமாகிறதுஆனால் பணம் என்பது பண்டமல்லஅது ஒரு அலகுதூரத்துக்கு கிலோமீட்டர் போலவும்எடைக்கு கிலோகிராம் போலவும்அது ஒரு அலகுஆனால் உலகம் முழுவதும் ஒரே அலகு(நாணயம்கடைபிடிக்கப்படுவதில்லை. அந்தந்த அரசாங்கங்களுக்கு ஏற்றாற்போல் நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதை விடுத்து உலகம் முழுவதும் ஒரே நாணயம் பயன்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் வெளிப்பாடுதான் க்ரிப்டோகரன்ஸி. எப்படி ஒருகரன்ஸியை அச்சிட்டு உலகம் முழுவதும் விநியோகிப்பது சாத்தியம் இல்லை என்பதாலும்முன்னேறிய இணையபயன்பட்டாலும் டிஜிட்டல் கரன்ஸியாக அது அறிமுகம் செய்யப்பட்டது.  ஆனால் சோகமயமாக அது எதிர்பார்த்த விளைவை அடையவில்லை. சில நாடுகளின் தடையாலும் சில நாடுகள் எந்த உறுதியான முடிவும் எடுக்காததாலும் க்ரிப்டோகரன்ஸியை ஏற்றுக் கொண்டு பொருட்களை வாங்க முடிவதில்லை. சமீபத்தில்  பிட்காயினைப் பற்றி நடந்த உலகளாவிய கருத்தரங்கம் நடந்த வளாகத்தில் கூட ஒரு காபியைக்கூட பிட்காயினைப் பயன்படுத்தி வாங்க முடியவில்லை.

ஆனால் க்ரிப்டோ கரன்ஸி எதிர்பாராத ஒருமாற்றத்தை அடைந்தது. முதலாளித்துவத்தின் ஊகவணிக வெறியால் நாணயமே ஒருபண்டமாகிப் போனதுஆம் வெறும் லாப நோக்குக்காய்க்ரிப்டோ கரன்ஸியை வாங்குபவர்கள் அதிகரித்துக் கொண்டே போயினர்சிலர் லட்சங்களை சம்பாதித்தனர்சிலர் லட்சங்களைத் தொலைத்தனர்ஆயினும் பிட்காயினின் மீதான மோகம் கூடிக்கொண்டே போகின்றது என்பதுதான் உண்மை. இன்னும் தினம் தினம் புதிய க்ரிப்டோ கரன்ஸிக்கள் எந்த ஒருவழிகாட்டுதலும் இல்லாமல் தோன்றிக் கொண்டேஇருக்கின்றன. 2008ல் வங்கிகளின் வீழ்ச்சியால் நிகழ்ந்த சங்கிலித் தொடரான பொருளாதார வீழ்ச்சி எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்தகால கட்டத்தில் மென்பொருள் தொழில் நுட்பநிறுவனங்களின் பெரும் வாடிக்கையாளர்களாய் இருந்தவர்கள் வங்கிகள். வங்கிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த வேலையிழப்பும் பொருளாதார வீழ்ச்சியும் உலகம் முழுவதும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின. இன்றைக்கு க்ரிப்டோ கரன்ஸிக்கள்தான் மென்பொருள் நிறுவனங்களின் பெரும்வாடிக்கையாளர்கள். வங்கிகளைப்போலவே ஒருநீர்க்குமிழி பொருளாதாரம் க்ரிப்டோகரன்சியை சுற்றி எழுந்துகொண்டிருக்கிறது. எது என்ன மாதிரியான விளைவை உருவாக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

இதையெல்லாம் விட்டுவிட்டுப்பார்த்தால். பிட்காயின் ஒருநாணயம். ஒருநாணயத்தின் பயன்மதிப்பு அதன்மூலம் வாங்கக் கூடிய பொருட்களைப் பொறுத்தே இருக்கிறது. அப்படிப்பார்த்தால் ஒருநாணயத்தைப் பயன்படுத்தி பீட்ஸா வாங்கி நின்றவர் கோமாளியா இல்லை அந்தநாணயத்தை பந்தயக் குதிரையாக்கி அதன்மீதுசூதாட்டம் ஆடுபவர்கள் கோமாளிகளா?

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்