உளவியலாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய இன்னொரு புத்தகம்

 உளவியலாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய இன்னொரு புத்தகம்.

நாம் செய்யும் செயல்களை நாம் ஏன் செய்கிறோம்?
இதற்கு உளவியலாளர்கள் இரண்டு உந்துதல்களைச் (Drive)சொல்கிறார்கள்
1. Biological Drives- உயிரியல் ரீதியான காரணங்கள். பசி ,தாகம், காமம் போன்ற இயற்கை உந்துதல்களால் தூண்டப்பட்டு நாம் செயலாற்றுகிறோம்.
2. Extrinsic Drives - புறச்சூழலில் உள்ள உந்துதல்கள் - பணம், புகழ், அந்தஸ்து போன்றவை. இவை மறைமுகமாக உயிரியல் தேவைகளை நிறைவேற்றுகின்றன. ஆகவே இவற்றை நோக்கி நாம் செல்கிறோம்.
ஆனால் இவ்விரண்டும் தாண்டிய மூன்றாவது ஒரு உந்துதல் மனித உயிர்களுக்கு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். சிம்பன்ஸி போன்ற குரங்குகளுக்கும்கூட இந்த உந்துதல் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அது அறிவுப்பூர்வமான ஒரு சவாலான செயலில் ஈடுபட்டு தனது திறமையைப் பயனுள்ள முறையில் வெளிப்படுத்தி நிறைவடைவது.
இதனை Intrinsic Motivation என்கின்றனர். கிட்டத்தட்ட ஆத்ம திருப்தி என்கிறோமே அதே தான்.
ஒரு செயலைச் சிறப்பாகச் செய்தால் கிடைக்கும் நிறைவுக்காகவே அதனைச் செய்வது.
பணம், புகழ், பசி, தாகம் எல்லாம் மறந்து சில விஷயங்களில் ஈடுபடுவது இதனால்தான். கலைக்காகவே கலை என்போமே. அது இதுதான்.
பரிசுகளை எதிர்பார்த்து ( Reward Dependance) இல்லாமல் செயலாற்றுவது.
இதுபோல் ஆத்ம திருப்தி அளிக்கும் வேலைகளில் இருப்பவர்கள் அதிக உற்பத்தித்திறன் உள்ளவர்களாகவும் மகிழ்ச்சி உடையவர்களாகவும் இருக்கின்றனர். பணியாளர்களின் Intrinsic Motivation உக்கு தீனி போடும் நிறுவனங்களே வெற்றி பெறுகின்றன.
ஆனால் ஒரு விஷயம் !
அடிப்படைத் தேவைகள் ஓரளவாது நிறைவேறிய பின்னரே இத்தேவை முக்கியத்துவம் பெறுகிறது.
ஆப்ரஹாம் மாஸ்லோ என்னும் உளவியலாளர் மனிதனின் தேவைகளை ஐந்து அடுக்குகளாகப் பிரித்தார்
1. பசி, காமம் போன்ற உடல்தேவைகள்
2. உறைவிடம் போன்ற பாதுகாப்பு தேவைகள்
3. அன்பு காதல் போன்ற தேவைகள்
4. சமூக அந்தஸ்து
5. இறுதியாக வாழ்வின் நோக்கம் என்னும் தன்னை அறியும் தேவை ( Self Actualization). கிட்டத்தட்ட இதுதான intrinsic Motivation எனப்படுவதும்.
குழந்தை வளர்ப்பிலும் இக்கருத்துகள் பயன்படுகின்றன. ஒரு நல்ல செயலைச் செய்தால் சாக்லேட் அல்லது ஒரு பரிசினை அளித்தால் அது சரியான வழிமுறை அல்ல. ஒரு செயல் தரும் உள்ளார்ந்த நிறைவுதான் அதைச் செய்ய வைக்க வேண்டிய உண்மையான உந்துதல். அக்குழந்தையையே அந்தச் செயலின் மதிப்பை உணர்ந்து செய்ய வைப்பதுதான் சிறந்த வழிமுறை
Must Read
டாக்டர் ஜி ராமானுஜம்
(2024 இல் எழுதியது)

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்