இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கம் முதல் இன்றைய குழுக்கள் வரை சிறிய தேடல்

இந்தியாவில் கம்யூனிச இயக்கங்களின் நிலையைப் பற்றி கூறவேண்டும் என்றால் நமக்கு  ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைதான் நினைவுக்கு வருகிறது. அங்கே ஒரு புரட்சிகர கட்சி உருவாகிய பொழுது அவை எதிர்க் கொண்ட சித்தாந்த போராட்டங்களை இங்கே கணக்கில் கொள்ளவே இல்லை. லெனின் அங்கிருந்த பல்வேறு போக்குகளை எதிர்த்து போராடி சாதித்தார் லெனின் வழிவந்தவர்களாக கூறிக் கொள்வோர் அவரின் எந்த வழிக்காட்டுதலையும் புரிந்துக் கொள்ளவே இல்லை. லெனின் தன் நாட்டில் மட்டுமின்றி உலக நாடுகளின் புரட்சிக்கான தத்துவ நடைமுறையை மார்க்சிய லெனினியவாதிகளுக்கு முன் வைத்துள்ளார் அதனை ஏற்றுக் கொள்ளாத பலரும் பல்வேறு வகையில் மார்க்சியவாதிகளாக வலம் வருகின்றனர்.

அதில்  நவீன திருத்தல்வாதல்வாதமும் அடங்கும்

நவீன திருத்தல்வாதத்தின் ஆணி வேர் எங்கு உள்ளது? ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் குருசேவ்வால் முன்வைக்கப்பட்ட அறிக்கைதான் நவீன திருத்தல்வாதத்தின் அடிப்படையாகும்.

குருச்சேவ் தலைமையிலான 20வது காங்கிரஸ் அறிக்கையில், உலக நிலைமைகளில் “புரட்சிகர மாற்றங்கள்” ஏற்பட்டுள்ளன என்ற சாக்குப்போக்கின் அடிப்படையில், குருச்சேவ் “சமாதான வழியில் மாற்றம்” என்ற கோட்பாட்டை முன்வைத்து, “பாராளுமன்றப் பாதையின் மூலம்” முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்வது சாத்தியமாகியுள்ளது என்று கூறினார்.

சாராம்சத்தில் இந்தத் தவறான கோட்பாடு, அரசு மற்றும் புரட்சி பற்றிய மார்க்சிய லெனினிய போதனைகளின் தெளிவான திரிபு ஆகும். இதன் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியம், போர், அமைதி பற்றிய லெனினிய போதனைகளைக் கேள்விக்குள்ளாக்கி “அமெரிக்க அரசாங்கமும்; அதன் தலைமையும் யுத்தத்தை எதிர்க்கும் சக்திகளேயன்றி, அவை யுத்தத்தை உருவாக்கும் ஏகாதிபத்தியச் சக்திகளின் பிரதிநிதிகள் அல்ல” என்று கூறித் தனது ஏகாதிபத்தியத் தாசத் தன்மையை வெளிப்படுத்தினார் குருச்சேவ்.
குருச்சேவ்வின் நவீன திருத்தல்வாதத்திற்கு இரையாகி உலக முழுவதிலும் உள்ள கம்யூனிச இயக்கங்கள் பெரும் பின்னடைவும், பிளவும் சந்தித்தன. இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கல்ல.

மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேசப் போக்கைக் குறித்து ஒரு சரியான திசை வழியை முன்வைத்து, ஸ்டாலின் எதிர்ப்பு என்ற பெயரால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு, மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை திருத்தியதன் மூலம் தனது ஏகாதிபத்திய ஆதரவை வெளிப்படுத்திய குருச்சேவ்வின் நவீன திருத்தல்வாதத்தை முறியடித்து மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடித்து முன்வைக்கப்பட்ட மாபெரும் கருத்தாயுதம்தான் இந்த “மாபெரும் விவாதம்” நூல். இதனை இந்திய கம்யூனிச இயக்கங்கள் எவையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் இல்லை அதனை செயல்படுத்தவும் முனையவும் எந்த கட்சியும் தயார் இல்லை.

சி.பி.ஐ கட்சி 1925 டிசம்பர் 28- 30-ஆம் நாட்கள் தோன்றியது.

புரட்சிக்கான தயாரிப்பில் பல்வேறு குழுக்களாகவும் பல்வேறு பிரிவினர்களாகவும் ஆரம்பத்தில் தோன்றிய கம்யூனிஸ்டுகள் ஆனது தாஸ்கன்டில் 1920 இல் மற்றும் பல்வேறு பிரிவுகள் தோன்றியிருந்தாலும்; பிரிட்டிஷ் இந்தியாவில் நாடு தழுவிய ஒரே கட்சியாக 1925 டிசம்பரில் தான் தோன்றியது.


அதன் ஆரம்ப கால பணியானது பல்வேறு நிறுவனங்களில் தனது கலைகளை கட்டியதும் உணர்வுபூர்வமாக கம்யூனிச சமூகத்தை படிப்பதற்கான முயற்சியாகவும் இருந்தது. இருந்தும் இவர்கள் முறையாக மார்க்சிய வகைப்பட்ட புரட்சியை முழுமையாக ஏற்றுக் கொண்டோ அல்லது மூன்றாம் அகிலம் காலனி நாடுகளுக்கு காட்டிய வழிமுறையில் பின்பற்றி ஒரு திட்டம் சம்பந்தமான பணியில் முழுமையாக செயல்படாத தான் விளைவுகள் தான் பல்வேறு விதமான தோல்விக்கு முதன்மையான காரணமாகும். சோவியத் ரஷ்யாவின் திருத்தல்வாத போக்கை எதிர்த்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (ரசிய - சீன) கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலே நடந்த விவாதங்களை கிரகித்துக் கொள்ளவே இல்லை.


இருந்தும் நாடு தழுவிய பல்வேறு விதமான போராட்டங்களையும் தியாகங்களையும் உண்மையான ஒரு கம்யூனிஸ்டுகளில் பாரம்பரியத்தை பதிந்து செய்ய துணிந்து செயல்பட்டார்கள்.  அவை முழுமையாக மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்ததின் பணியாக இல்லாமல் மார்க்சியத்தை அவர்களின் தேவையை ஒட்டியே பயன்படுத்தினார்கள்.


தரகு வர்க்க ஆளும் வர்க்க கட்சியான காங்கிரஸ் உடன் ஆரம்பத்திலிருந்து தன் திடமான நிலைப்பாட்டை வைக்காததன் விளைவு தான் காங்கிரசை இடதுசாரிகள் ஒரு முற்போக்காக இன்றும் கருதுவதில் வெளிப்பாடையாக தெரிந்துக்கொள்ளலாம்.

குருசேவின் வழியை பின்பற்றி 1960 ன் தொடக்கத்திலேயே "வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு சமாதான வழியில் சோசலிசத்தை அடைவது என்ற நோக்கில் நடை போட்டாலும் 1964 ல் அமைப்புத்துறையில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை முன்வைத்து கட்சிக்குள் எதிர்ப்பு தோன்றியது. திருத்தல் வாதத்தை எதிர்ப்பதாக 1964 ஏப்ரல் 11 ல் கூடிய தலைமை குழு கூட்டத்தில் 32 உறுப்பினர்கள் கூட்டு அறிக்கையை ஒன்றை பத்திரிகைகளுக்கு  அளித்தனர் அது கட்சி உடைவதற்கான காரணமாக அமைந்தது எனலாம்.


இரு குழுக்களின் பிரதிநிதிகளும் ஜூலை 14 1964 அன்று டில்லியில் கூட்டினர். அக்கூட்டத்தில் சித்தாந்த பிரச்சனையோ அரசியல் பிரச்சினையோ பேசப்படாமல் அமைப்பு பிரச்சினை மட்டுமே விவாதிக்கப்பட்டது.


கட்சியின் செயலகத்தை கட்சி இயந்திரத்தை யார் நிர்வகிப்பது  என்பதுதான் முதன்மையான பிரச்சினையாக இருந்தது. இந்தப் பிரச்சினை ஒற்றுமைக்கு வழி வகுக்கவில்லை .


டாங்கேவுக்கு எதிரான போட்டி குழு ஆந்திராவில் உள்ள  தெனாலியில் ஒரு மாநாட்டு கூட்டியது. 


இ.எம்.எஸ் சின் ஆலோசனைப்படி மாற்றத்திற்கான வடிவங்கள் மற்றும் அமைதியான கூட்டு வாழ்வு போன்ற அரசியல் சித்தாந்த பிரச்சனைகளை விவாதிக்கப்பட்டு திட்ட முன்வரையுடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 


30 டிசம்பர் 1964 அன்று கட்சியின் ஐந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதும் சிபிஎம் இன் உண்மையான முகம் இந்திய அரசுக்கு கொடுத்த கடிதத்தில் தெரிந்தது. "கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் மயக்குவதற்காக பேசப்பட்ட வீரவசனங்கள் புதுடெல்லியில் உள்ள எஜமானர்களுக்கு முன் வெறும் முனங்களாக மாறின " சிபிஐ எப்படி அவர்கள் குருசேவின் சகாக்கள் என்று கூறி வெளியேறி வந்த சிபிஎம் அதே கடந்தெடுத்த குருசேவ்வாதிகளாக மாறி உள்ளதை காண முடிந்தது.


சோசலிசத்தை நோக்கி அமைதியான மாற்றம் என்ற அடிப்படையில் நிலவுகின்ற அமைப்பு முறைக்குள்ளேயே தங்களுக்கான இடத்தை தேடிக்கொண்டார்கள். 


நன்னடத்தை கடைப்பிடிப்பதாக உறுதிமொழி வழங்கிய பிறகும் கூட புதிய கட்சியின் பல்வேறு தலைவர்களும் ஊழியர்களும் டிசம்பர் 1964 இறுதிவாக்கிலும் 1965 தொடக்கத்திலும் கைது செய்யப்பட்டார்கள். சிலர் தலைமுறைவாக சென்றதன் மூலம் கைதியிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.  இவ்வாறாக தொடங்கிய சி.பி.எம் ன் ஆரம்ப காலம் .


புரட்சி நிறைவேற்றுவதை விட அதனை தடுப்பது தான்  சி.பி.ஐ மற்றும் சிபிஎம் இன் நோக்கமாக இருந்தது.


இத்தகைய சூழலில் தான் நக்சல்பாரி எழுச்சியும் பின்பு இந்தியாவில் நிலவி அதற்கான அமைப்பு ரீதியான ஆயத்த பணிகள் 1967 மேற்குவங்க ஐக்கிய முன்னணி அமைச்சரவை பதிவேற்ற சிறிது காலத்தில் தொடங்கின.

 

நக்சல்பாரியின் தோற்றம் 


1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கேரளாவில் சிபிஐ தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. சோசலிசத்தை அடைவதற்கான வழியாக கேரளா பாதையில் புரட்சிக்கு பதில் அமைதியான பாராளுமன்ற பாதையை அன்றைய சிபிஐயும் பின்னர் சிபிஎம் -மும் பின்பற்றி கொண்டது.


பாராளுமன்ற பாதை என்பது சுரண்டலும் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் நிறைந்த அமைப்புகுள் புரட்சிக்கு பதில் சமரச பாதையை வர்க்க கூட்டை போதித்தது.

இதனை எதிர்த்து உருவான புரட்சிக்கான கட்சியாக மாவோ வின் சிந்தனையை உயர்த்திப் பிடித்து தெள்ளத் தெளிவாக சோசலிசத்திற்கான பாதையை கடைப்பிடிப்பதற்கு உரக்க அறிவித்தது. நக்சல்பாரியும் அதன் தொடர்சியும் அதற்கான படிப்பினைகள் நமக்கு தெரிந்தவை தான்.


தமிழக cpi ml அரசியல்


L. அப்பு 1970 செப்டம்பர் 28 -30-ம் தேதிகளில் கொல்லப்பட்ட பின்னர் ஏஎம்கே தமிழக பிரிவுக்கு தலைமை பொறுப்பேற்றார். அவர் சாரு இறக்கும் வரை அவரை சந்திக்கவில்லை. AMK அழித்தொழிப்பு நடைமுறை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தலைமை பொறுப்பில் அதற்கான செயல்பாட்டில் இருந்தார். அவரின் கொள்கை கோட்பாட்டில் ஊசலாட்டமும் நடைமுறை செயல்பாடும் அவர்களின் ஆவணத்தில் உள்ளன. 


1972 ஜூலை 28 சாரு கொல்லப்பட்டதோடு இந்திய தழுவிய கட்சியின் செயல்பாடும் ஒற்றுமையும் சிதந்தது போலவே தமிழ்நாட்டில் அதன் தமிழக அணி 1972 நவம்பரில் தஞ்சையில் கூடியது. அதில் பல்வேறு விவாதங்கள் இருந்தாலும் AMK வை செயலாளராக கொண்டு செயல்படும் அமைப்பு முறை தொடர்ந்தது.


அதற்கிடையே பல்வேறு விதமான கருத்துக்கள் தோன்றினாலும் அதன் அமைப்பில் இருந்துதான் மற்றவை தோன்றின.


1973 ல் மாநில குழுவில் மூன்றுவித போக்கு முன்னுக்கு வந்தது.


1). கூட்டகுழு நிலையை தோழர்கள் தமிழரசன், தமிழ்வாணன் சின்னதுரை ஆகியோர் பின்பற்றினர்.


2). அழித்தொழிப்புநிலையை பழனியப்பன் மற்றும் தாத்தா பாண்டியன் பின்பற்றினர்.

இவை பிவிஎஸ் தலைமையில் வினோத் மிஸ்ரா குழுவில் இணைகிறாது.


3). கனி வலது சந்தர்ப்பவாத நிலையை எடுத்தார்.

கனியின் நிலைப்பாடே கோவை மாவட்டத்தில் தோன்றிய மேற்கு பிராந்திய குழுவின் நிலைப்பாடும் ஆகும். இதில் தோழர்கள் ராமானுஜம், ராகவன் ஆகியோர் அழித்தொழிப்பை எதிர்த்து வெளியேறியது 1974 பின்னர். அதன் சுருக்கம் கீழே.


3-1). தமிழக மா-லெ அமைப்பில் முதல் உடைப்பு 1974 தோன்றிய மேற்கு பிராந்திய குழு இதில் தோன்றியது அதன் பிரிவில் உண்டாகிய பல்வேறு பிரிவுகள் 1975 அமைப்பு கமிட்டி, 1976 (31 டிசம்பர் 1976- 01 ஜனவரி 1977 மாநில அமைப்பு கமிட்டி(SOC)) நவம்பர் 1979 மா.நி.அ பிளவு, 1981 TNOC(ML) தோற்றம் 1983 TNOC(ML) மாற்றம் TNOC யாக.

கூட்ட குழுவில் பயணித்தவர்கள் 1980 களில் ஆந்திர குழுவுடன் இணைந்து செயல்பட தொடங்கினர். அவர்கள் பல்வேறு வெகுஜன அமைப்புகளை கட்டினர். அதற்கு முன்னர் இவர்கள் வழிவந்தவர்களே தர்மபுரி வடற்காடு மாவட்டங்களில் பண்ணையார்களுக்கு எதிரான போராட்டங்களில் தீரமுடன் செயல்பட்டனர்.


தொடரும்..................


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்