ஏகாதிபத்திய காலகட்டத்தில் வர்க்க அரசியலை மூடிமறைக்கும் தந்திரம்

 ஏகாதிபத்திய காலகட்டத்தில் வர்க்க அரசியல் புரிந்துக் கொள்ளும் ஒரு முயற்சியே

"பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.

             உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!"
-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து
என்ற மார்க்சிய ஆசான்களின் வழிமுறையை புரிந்துக் கொள்ள.... பாட்டாளி வர்க்கதிற்குப் புரட்சிக்கு மாற்றாக அதனின் வேறாக ஒன்றிருப்பதாக மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டவில்லை.
வர்க்கப்போராட்டத்தின் நிகழ்முறைகளை ஆராய்ந்த மார்க்சிய ஆசான்கள் அதனை சமூக அறிவியலாக வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற தத்துவ போதனையை போராடும் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டியாக்கினர்.
" பாட்டாளி வர்க்கம் தன் துன்ப துயரங்களுக்கு காரணத்தை அறிந்துகொள்ளவும், தன்னை பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்",
மேலும் "கனவுகள் இருந்த இடத்தில் அறிவியலை நிலைநாட்டினார்கள்!" என்று கூறிய லெனின் தன் நாட்டில் உள்ள நிலைமைகளையோடு அன்று வளர்ந்து நின்ற ஏகாதிபத்தியம் மற்றும் புரட்சிக்கான கட்சி செயல்பாடுகளை முன்வைத்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாமல் உலகிற்கும் வழி காட்டினார்.
ஆனால் ரசிய புரட்சியும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட உலகில் ஏற்பட்ட சோசலிச தேவைகளையும் உணர்ந்த கொள்ளைகார ஏகாதிபத்தியம் விரித்துள்ள வலையில் சிக்குண்டு கிடக்கிறது இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றால் மிகையில்லை!
மார்க்சியத்தையே திரித்து புரட்டுவது தொடங்கி இன்று மார்க்சியம் காட்டிய வழிமுறைகளை மறுத்து ஏகாதிபத்திய வழிகாட்டுதலை தலையாய பணியாய் செயல் படுத்துவோர் எப்படி மார்க்சியவாதியாக இருக்க முடியும்!
நம் மத்தியில் உள்ள இடதுசாரிகள் தொடங்கி பன்நாட்டு நிறுவனங்களின் வளர்ப்பு பிராணிகள் வரை இங்கே மக்கள் மத்தியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு அதரவு கொடுப்பதுபோல் ஓடோடி வருகின்றன உண்மையில் அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அந்த பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள் அவர்களை கவ்வி பிடிக்கிறது ஆனால் அந்த செயல்பாட்டாளர்கள் அடுத்த பிரச்சினை வந்த உடன் இந்த பிரச்சினையை அம்போ என்று கைவிட்டுவிட்டு அடுத்த பிரச்சினைக்கு தாவி விடுகின்றனர்.
உண்மையில் இதற்கு பின்னால் அவர்கள் மூடிமறைக்க நினைப்பதை நாம் புரிந்துக் கொள்ள சில படங்கள் ஏகாதிபத்திய காலகட்டத்தில் எந்த சமூக அமைப்பாக இருந்தாலும் அவனின் மூலதன ஆதிக்கதால் உலக நாட்டு மக்கள் அவன் வலை பின்னலில் வீழ்ந்தே ஆக வேண்டும்.
ஏகாதிபத்தியம் தனக்கான அடிமைகளை உருவாக்குவாக்குவது அதன்படி வாழ்வதையையே விரும்புகிறது அதற்கு விலைபோகும் கூட்டம் இங்குள்ளஅமைப்பை ஒருதுளி அசைவையும் விரும்புவதில்லை.
ஆட்டி வைப்பதை ஏற்கும் அடிமைகளுகானதே இந்த அமைப்புமுறை இதனை எதிர்பவர்கள் சொர்பம் அவர்களே வரலாற்றை மாற்றி அமைகின்றனர். உள்ள அமைப்புமுறைக்கு முதுகு சொரியும் வேலை ஏழை எளிய மக்களை அடிமைகளாக வாழ சொல்வதே சீர்திருத்தவாதம் இன்னும் பல....
வர்க்க அரசியல் புரிந்துக் கொள்ளவிட்டால் இதோ இந்த ஆட்டிற்கு தெரியாமல் கசாப்பு கடைமுன்னே தான் கொல்லப்படுவதற்கு காத்துகிடப்பது போல்...
வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்க தேவைகானதே மதம் சட்டம் அரசியல் ஏன் இங்குள்ள எல்லாமே!!!
பிஜேபியின் இந்துத்துவ மத அரசியல் எப்படி மக்களை ஏய்கிறது பாருங்கள்
"என்ன எடுத்து வந்தாய் என்ன எடுத்துபோக" என பேசும் இந்த பெண் பேச்சாளர் சொகுசான வண்டியில் வலம் வந்துக் கொண்டே ஏழை எளிய மக்களை அடிமைகளாக வாழ சொல்வதே இந்த அமைப்புமுறையின் அயோக்கிய தனம். இவைதானே சீர்திருத்தவாதம் பேசுவோரின் நிலையாகவும் உள்ளது இந்த சமூகத்தில் தனக்கான இடம் தேடி அதில் தானும் சொகுசாக வாழத்துடிக்கும் இவர்கள் தங்க்களுக்கு இந்த பிற்போக்கு சமூகத்தில் இடர்பாடு ஏற்படும் பொழுது "குய்யோ முய்யோ" என்று கத்துகின்றனர். உண்மையில் இந்த சமூக அவலம்தானே இவை. இதனை துடைத்தெறியச் சொல்வதுதானே மார்க்சியம் அதனை ஏற்காமல் என் பிரச்சினை மட்டுதான் பிரதானமானது என்பவர்கள் சமூகத்தில் உள்ள மற்றவற்றை புரிந்துக் கொள்ள தயார் இல்லை!
அன்றிலிருந்து இன்று வரை பாராளுமன்றத்திற்கு வெளியே நிலவிய உழைக்கும் மக்களைச் சுரண்டும் முறையானது எந்த அளவிலாவது குறைக்கப்பட்டுள்ளதா? திட்டவட்டமான பதில் இல்லை என்பதேயாகும். ஏனெனில் சுரண்டலைப் பாராளுமன்றம் பாதுகாக்கவில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியே சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரமே சுரண்டலைப் பாதுகாக்கிறது
உழைக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதார பிரச்சினையுடன்
கூடிய அரசியல் பேசாமல்- தனித்தனியான போராட்டங்கள்! எதற்கு யாருக்கு? எந்த வர்க்க நலனுக்கு? யாரை பாதுகாக்கின்றது?.
ஏகாதிபத்திய பன்நாட்டு கம்பெனிகளின் காலடியில் இன்றைய ஆட்சியாளர்கள்.
பன் நாட்டு அடிமைகளாக அவர்களின்
நுகர்வோராக வாழ மட்டுமே உரிமை! இவை என்ன சமூகம்?
பன்நாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்க அரசு துறையின் எல்லா நிர்வாக அமைப்பையும் தனியாருக்கு திறந்து விட்டு கல்வி, மருத்துவம் வேலைவாய்ப்பு இப்படி எல்லாம் தனியாரிடம் கொடுத்த அரசு அதனை உன்னதமாக நினைப்போர் யார்?
ஏகாதிபத்திய காலகட்டதில் நம் சமூகத்தை புரிந்துக் கொள்ளவே இயலாத மார்க்சிய புரிதல் அற்ற பதர்கள் மட்டுமே!

முந்தைய தத்துவங்கள் அனைத்தும் உலகத்தை விமரிசிக்க மட்டுமே செய்தன. ஆனால் மார்க்சியம் மட்டுமே உலகத்தை விமரிசிக்கச் செய்வதோடு மாற்றவும் செய்கின்றது என மார்க்ஸ் கூறினார்.

தத்துவம், அரசியல், பொருளியல், மதம், அறிவியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிய அனைத்தையும் விளக்குவதாக மட்டுமின்றி அத்துறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதாகவும் ஆன தத்துவம் தான் மார்க்சியம் ஆகும்.

சரி இன்று மார்க்சியமல்லாத போக்கு ஏன் மலிந்துக் கிடக்கிறது என்றால் உலகில் எங்கும் சோசலிச நாடுகள் இல்லை ஏகாதிபத்தியம் சோசலிசத்தை வரவிடாமல் தடுக்க தன்னால் இயன்றவரை மார்க்சியதிற்கு எதிரான கருத்துகளை பரப்புவதும் மார்க்சியத்தை திரிபதும் குழப்புவதும் அவர்களின் வேலையாக உள்ளது ஏனெனில் தவறியும் உழைக்கும் ஏழை எளிய மக்கள் ஒன்றினையக் கூடாது. அதற்கான வேலையை மிக கட்சிதமாக செய்து முடிகின்றனர். அதற்கு சாதக சூழல் நிலவுகிறது

ஜார்ஜ் பொலிட்சரின் வார்த்தைகள் கீழே...."வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் சோறு கிடைக்க போராடினால் போதும் அரசியல் போராட்டம் தேவை இல்லை என்று சிலர் நினைக்கின்றனர் புரட்சிகரமான தெருச் சண்டை நடத்தினால் போதும் நிறுவனம் கட்சி ஒன்றும் தேவையில்லை என்று சிலர் நினைக்கின்றனர் அரசியல் போராட்டம் ஒன்று தான் இந்த வர்க்கப் போராட்ட பிரச்சினைக்கு பரிகாரம் தொழிற்சங்க இயக்கம் முதலான மற்றும் வேண்டியதில்லை என்று சிலர் எண்ணுகின்றனர்.ஆனால் ஒரு மார்க்சியவாதி இந்த வர்க்கப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறான் மூன்று அம்சங்களை கொண்ட ஒரே ஒரு பிரச்சினையாக பார்க்கிறான்.

1).பொருளாதார போராட்டம் 

2).அரசியல் போராட்டம் 

3).தத்துவ அறிவு போராட்டம் என்ற மூன்று அம்சங்களைக் கொண்ட வர்க்கப் போர் என்று மார்க்சியவாதி கருதுகிறான்.

ஆனால் சீர்திருத்தவாதிகளை புரிந்துக் கொள்ள...

சீர்திருத்தவாதத்துக்கும் மார்க்சியத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்போர் பற்றி

வர்க்கப் போராட்டத்தில் அங்கிருப்பதோடு நிற்காமல் இதனை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு அங்கீகரிக்கவும் எடுத்துச் செல்வர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார் (அரசும் புரட்சியும் லெனின்,பக்கம் 49).

 முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பலதரப்பட்டவை ஆனால் இவற்றின் சாராம்சம் ஒன்றுதான். வடிவம் எப்படி இருப்பினும் இந்த அரசுகள் எல்லாம் முடிவாய் பார்க்குமிடத்து தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் ஆகும் (அதேநூல் பக்கம் 51). 

பாரிஸ் கம்யூனில் தலைமையானது அடிப்படையான ஒரு படிப்பினையை கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய் புகும்படி அவ்வளவு பிரம்மாண்டமான முக்கியத்துவம் உடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர்."கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை அதாவது ஏற்கனவே உள்ள அரசு பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டு விட முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று". இந்த வாசகத்தில் ஒற்றை மேற்கோள் குறிப்பிட்டு காட்டப்படும் சொற்களை ஆசிரியர்கள் மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலிலிருந்து அப்படியே எடுத்து கையாளுகின்றனர்இவ்வாறாக பாரிஸ் கம்யூனில் தலைமையானது அடிப்படைதுமான ஒரு படிப்பினையை கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய் புகுத்தும்படி அவ்வளவு பிரம்மாண்டமான முக்கியத்துவம் உடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர் இந்த முக்கிய திருத்தம் சந்தர்ப்பவாதிகளால் திரித்துப் புரட்டப் பெற்றிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாசகர்களில் பத்தில் ஒன்பது பேருக்குஏன் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கும் கூட இதன் பொருள் அனேகமாக தெரிந்து இருக்காது எனலாம்இந்தப் புரட்டலைப் பிற்பாடுபுரட்டல்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனி அத்தியாயத்தில் நாம் பரிசீலிப்போம்மார்க்சியத்தின் புகழ்மிக்க வாக்கியத்திற்கு தற்போது சகஜமாய் அளிக்கப்படும் கொச்சையான வியாக்கியானத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறோம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மாறாய் மெதுவாய் பையப்பைய வளர்ச்சி காணும் கருத்தினை இங்கு வலியுறுத்துகிறார் என்பதாய் விளக்கம் அளிக்கப்படுகிறதுஆனால் இதற்கு நேர் எதிரானது உண்மை. " ஏற்கனவே உள்ள அரசு பொறியமைவைத்தொழிலாளர்கள் கைப்பற்றுவதோடு மட்டும் நிற்காமல் அதை அழித்தொழித்திடவும் நொறுக்கவும் வேண்டும் என்பதே மார்க்ஸ் கூறும் கருத்து .(அரசும் புரட்சியும் நூலிலிருந்து பக்கம் 52-52) சிலர் நினைப்பது போல் தனிநபர் களை தாக்குதோ தூக்கி பிடிப்பதோ எந்த பயனும் இல்லைஉண்மையில் அவர்களின் சித்தாந்தம் என்ன என்பதே நமது கேள்வியாக இருக்க வேண்டும்

 

ஒரு குடியரசு மிகமிக ஜனநாயக தன்மையுடைய குடியரசாக கூட எந்த வேஷம் போட்டாலும் இது முதலாளித்துவ குடியரசாக இருக்குமானால், இதில் நிலம், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீது தனியுடமை நிலவுமானால் சமுதாயம் முழுவதையும் தனிப்பட்ட மூலதனம் கூலி அடிமை நிலையில் வைக்குமானால், அப்பொழுது இந்த அரசு சிலர் மற்றவர்களை அடக்கி வைப்பதற்காக உள்ள இயந்திரமே ஆகும்.


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்