நாம் சில சமயங்களில் நினைப்பதைக் காட்டிலும், அதிகமான சந்தர்ப்பங்களில் நாம் தத்துவ ஞானத்தின் உதவியை நாடுகிறோம் என்று தோன்றுகிறது. இது வேறெந்த முறையிலும் இருக்க முடியாது. “நிகழ்ச்சிகளை அவன் கட்டுப்படுத்தி, அவற்றால் அவன் கட்டுப் படுத்தப் படாமல் இருக்க வேண்டுமானால், ஒரு சோசலிஸ்டுக்கு,நன்கு சிந்திக்கப்பட்டதும், உறுதியுடன் கடைப்பிடிக்கப் படுவதுமான உலகக் கண்ணோட்டம் தேவை!” என்று லெனின் எழுதினார்.
மார்க்ஸீய தத்துவியலின் அடிப்படைப் (பிரச்சினைகள் பற்றிய புத்தகம் இது. மார்க்சியத்தின் பொருளை இது விவரிப்பதோடு, பிற விஞ்ஞானங்களிலிருந்து இது எவ்வாறு வேறு படுகிறதென்பதையும் விளக்குகிறது. தத்துவார்த்தத்தின் அடிப்படைப் பிரச்சினையையும், பொருள், தன்னுணர்வு ஆகியவற்றின் பொருளையும் இது வெளிப்படுத்துகிறது. முரண் தர்க்கத்தின் அடிப்படை விதிகளையும், அதாவது, எண்ணியலான மாற்றங்கள் பண்பிய மாற்றங்கள் ஆவதையும், எதிர்நிலைகளின் ஐக்கியமும், போராட்டமும், மறுப்பின் மறுப்பு ஆகியவற்றையும்பற்றிக் கூறுகிறது. முரண்தர்க்க வகைகளுக்கும், அறிவின் தத்துவத்திற்கும் உண்மையின் நடைமுறையின் பிரச்சினைகளுக்கும் பங்கிற்கும், பெருங் கவனம் அளிக்கப்பட்டுள்ளது. முரண்தர்க்கப் பொருள் முதல் வாதத்தின் நடைமுறைப் பலனை இதன் ஆசிரியர் வலியுறுத்துவதோடு, அதன் விதிகள், இனங்கள் குறித்தும் விளக்கியுள்ளார். கால ஓட்டத்துடன் எழுதப்பட்டுள்ள இந்நூல், மார்க்சிய தத்துவியலைக் கற்க ஆரம்பிப்பவர்கள் அனைவரும் அவசியம்படிக்க வேண்டிய ஒரு நூலாகும்.
முரண்தர்க்க பொருள்முதல்வாதம் நூல் PDF வடிவில் இந்த இணைப்பில்
“நான் தத்துவஞானத்தின் ஒருதலைச் சார்பு
தான் செய்ய என்ன விரும்பியதை எல்லாம் முடியுமானால் என்ன செய்வீர்? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதும் படி மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் கேட்டுக் கொள்ளப் பட்டார்கள். அவர்கள் எழுதிய விடைகள் என்ன?
“உலகில் உள்ள பள்ளிக்கூடங்களை எல்லாம் நான் வெடிவைத்துத் தகர்ப்பேன்”, என்று ஒரு குழந்தை எழுதியது. “நான் எல்லா இடங்களிலும் வெடி. குண்டுகளை வீசுவேன்; வீட்டிற்குத் தீ வைத்து விட்டு ஆற்றிலே குதித்து விடுவேன்”, என்று இன்னொரு குழந்தை எழுதியது.
சோவியத் பள்ளிக் குழந்தைகள் அதே கேள்விக்கு எழுதிய விடைகள் இவைதான். “முதலாளிகளாலும், தொழிற்சாலை முதலாளிகளாலும் அடிமைப் படுத்தப்பட்ட நீக்ரோக்களை தான் விடுதலை செய்வேன்,” என்று ஒரு குழந்தை எழுதியது, “அணு குண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும், செய்வது தான் நான் செய்யும் முதல் காரியமாக இருக்கும்,” என்று மற்றொரு குழந்தை எழுதியது.
குழந்தைகளின் விடைகள் இந்த அளவிற்கு வேறு படுவானேன்? மக்களிடத்தில் வெறுப்புணர்சசியுடன் வளர்க்கப்பட்டு, பூர்ஷுவா உலகக் கண்ணோட்டத்தில் ஊறிய குழந்தைகளின் மத்தியிலிருந்து வந்தவர் முன்னவர். தங்கள் தாய்நாட்டை நேசிக்கும்படியும், உலகெங்கிலும் சமாதானத்தை நிலைநாட்டும் படியும் பள்ளிகளில் போதிக்கப்பட்ட குழந்தைகளின் மத்தியிலிருந்து வந்தவர் இரண்டாமவர்.
கம்யூனிஸ உலகக் கண் ணோட்ட உணர்ச்சியுடன் தங்கள் குழந்தைகளை சோவியத் பள்ளிகள் வளர்க்கின்றன. வாழ்க்கையின் பொருள் என்ன?, மகிழ்ச்சி என்பது என்ன?, என்பன போன்ற கேள்விகளுக்கு சோசலிஸ சமூகத்திலும் , பூர்ஷுவா சமூகத்திலும் விடைகள் கிடைக்கின்றன. அவை வெவ்வேறானவை ஆம் வெவ்வேறு சமூக அமைப்பு. சமூகத்தில் நிலவும் கருத்துகள் ஆளும் வர்க்க கருத்துகளே என்ற ஆசான்களின் வழி மொழிதலை புரிந்துக் கொள்ளாதவர்கள் கம்யூனிஸ்டுகளா?
நாம் வாழும் வர்க்க சமூகத்தில் இவ்விதமாகப் பிரச்சினைக்கு இரண்டு அணுகல் முறைகள் இருப்பதை காணலாம். பூர்ஷ்வா கண்ணோட்டம், பாட் டாளி வர்க்கக் கண்ணோட்டம் என்ற இரு உலகக் கண் ணோட்டங்கள் இருப்பதை நாம் மீண்டும் காண்கிறோம். சமுகம் வர்க்கங்களாகப் பிரிக்கப்பட் டிருந்தால், எந்தப் பொதுவானதொரு உலகக் கண்ணோட்டமும் இருக்க முடியாது, ஒரு வர்க்கத்திற்கு ஒரு தத்துவஞானமும், மற்றொன்றிற்கு வேறொரு தத்துவ ஞானமும் உள்ளன. இது புரிந்து கொள்ளக்கூடியதே. பாட்டாளிகள், உழைக்கும் மக்கள் இவர்களது வாழ்க்கையும், அந்தஸ்தும், பூர்ஷுவாக்கள், சுரண்டுபவர்கள் இவர்களது வாழ்க்கையிலிருக்தும், அந்தஸ்திலிருக்தும் உலகில் வேறுபடுகின்றன. நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் வெவ்வேறு வழிகளில் மறுவினைபுரிகிறார்கள். ஒவ்வொரு வர்க்கமும் தனக்கே உரித்தான வழியில் அவற்றைப் புரிந்து கொள்கின்றது. எனவே அவர்கள் தங்கள் உலகக் கண்ணோட்டத்தில், அல்லது தத்துவஞானத்தில் வேறுபடுகிறார்கள். பாட்டாளி வர்க்க தத்துவமும் பூர்ஷுவா தத்துவ ஞானத்திலிருந்து வேறுபட்டது.
வர்க்கத்தின் நடுநிலைத் தத்துவ ஞானம் என்று, அதாவது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்குத் தொண்டு செய்யாத தத்துவ ஞானம் என்று, ஒன்றுமே இல்லை. லெனின் போதித்தது போல, தத்துவஞானம் எப்பொழுதும் ஒருதலைச் சார்புடையதுதான். அதாவது அது ஒருதலைச் சார்பான, வர்க்க நலன்களைப் பா துகாக் கிறது. எனவே ஒவ்வொரு வரலாற்றுக் காலத்திலும் தத்துவஞானத்தில் போட்டியிடும் இரண்டு கட்சிகள் இருப்பதைக் காண்கிறோம்.