ஆணவப்படுகொலையை முழுமையாக புரிந்துக் கொள்தல்

 ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் இடம் என்னவென்று நான் சொல்ல தேவையில்லை! அவை  தெரிந்துக் கொள்ள சற்று சமூக விஞ்ஞானம் அவசியம்

ஆணுக்கு பெண் அடிமையான பொழுதிலிருந்தே அவள் இச்சமூகதில் அடிமையாக வாழ்கிறாள். அதனைதான் மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ், "உடமை சமூகத்தில் முதன் முதலில் பெண்தான் அடிமையாக்கப்பட்டாள்"(பார்க்க குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலில்).
 இன்று பெண்ணுக்கானா விடுதலை என்பது இன்று ஏகாதிபத்திய காலகட்டத்தில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளது அவை சமூக தேவையை ஒட்டியே; பெண் கல்வி கற்க வேலைக்கு செல்ல இவ்வாறு  நிலைமை சற்று மேம்பட்டாலும் அதே ஆணாதிக்க சிந்தனைதான் மேலோங்கியுள்ளது. அவை கௌரவம், மானம், மரியாதை எல்லாம் பெண்ணின் காலுக்கு இடையில் வைத்து பராமறிக்கிறது இந்த சமூகம். இதனை புரிந்துக் கொள்ள இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பொழுது கொல்லப்பட்ட பெண்களை பற்றி தேடுங்கள் புரிந்துக் கொள்ள எளிதாக இருக்கும் வரலாற்றில் பெண்ணை எப்படி வைத்திருந்தனர் வைதுள்ளனர் புரிந்துக் கொள்ள!  

மேலும், இங்கு அவள் என்ன செய்ய வேண்டும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் யார் கூட பழக வேண்டும் என்பது சமூக அமைப்பான  ஆண் ஆதிக்கம்தான் தீர்மானிக்கிறது. இதில் அந்த குறிப்பிட்ட பெண் வீட்டார் மட்டுமல்ல இந்த சமூக அமைப்பின் நியதியாக இதனை கடைபிடிக்கும் பொழுது அந்த தனிமனிதர்களை தண்டிப்பதனால் தண்டனை தடுக்கப்பட்டு விடுமா? இந்த கேடுகெட்ட ஆணாதிக்க சமூகம் இல்லாதொழிக்க வேண்டி உள்ளது அதனை ஒழிப்பதை பற்றி பேசாமல் நல்ல வசதி படைத்த பையன் நல்ல சம்பளம் கல்யாணத்தில் என்ன பிரச்சினை என்று கேட்கும் சமூகத்தில் தனக்கான இடம் தேடும் மாறாநிலைவாதிகளே குறிப்பிட்டவர்கள் தான்வாழ மட்டும் நினைக்கும் இந்த கூட்டம் மற்றவர்கள் உழைத்து உழைத்து செத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களை பற்றி பேசதவர்களை என்ன சொல்ல? 

ஆணவப்படுகொலையும் அதன் பின்னணியும் யாரும் எழுதிவிடுவர்!

இதுவரை நடந்த ஆணவப்படுகொலைகள் பற்றி தேடினால் இழப்பு ஏற்பட்ட குடும்பத்தின் துயர் துடைக்க முடியா நிலையில் உள்ளது. அதேபோல் ஆணவப்படுகொலை செய்த நபர்கள் சாதரண நபர்களே அவர்கள் சமூகத்திலிருந்து வெளியே வாழ்பவர்கள் அல்ல!

ஆக இவை ஏன் ஏற்படுகிறது என்று பார்க்குமிடத்து சில முற்போக்காளர்களே அந்த தனி சம்பவத்தையும் அந்த தனிநபர்களையும் குற்றவாளியாக்கி குற்றம் நிகழ்வதற்கான சமூக அரசியல் பொருளாதார காரணங்களை புறம் தள்ளி விடுகின்றனர்.

 சீர்திருத்தவாதம் அடையாள அரசியல் இன்றைய சமூகத்தில் மலிந்து போய் உள்ள சீர்கேடுகளும் உண்மையைவிட தற்காலிக விடைதேடி அடுத்த நிகழ்விற்கு ஓட தயாராக உள்ளது. ஆனால் ஒரு மார்க்சிய மாணவன் இதற்கான தீர்வை தேட வேண்டும்.

 இன்றைய இணைய உலகத்தில் உண்மைக்கும் பொய்குமான வேறுபாடுகளை கூட முழுமையாக அறிந்து கொள்ள முடியாது யாருக்கு இதில் திறமையான பயன்பாட்டிற்கு இணையம் உள்ளதோ அவர்கள் பொய்யை கூட உண்மை என்று நிரூபிக்க முடியும் அந்த அளவிற்கு இன்று கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த இணைய வழி தகவல் தொழில்நுட்பம்,

 இங்கு மார்க்சியம் பேசும் நாம் மார்க்சிய ஆசான்கள் காட்டியுள்ள வழிமுறைகளை முழுமையாக ஏற்று நடக்க தயார் இல்லை! மார்க்சியம் வெல்வதற்கரிய ஓர் உலகத் தத்துவம் என்பதனை ரசிய புரட்சியின் ஊடாக நிரூபித்து விட்டது. அவை மானுட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆழ்ந்து ஆராய்ந்து விளக்கி சுரண்டலில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறையை நம் முன் வைத்துள்ளது. ஆனால் நாம் புரட்சியை மறுத்து அடையாள அரசியலிலும் மார்க்சியத்தை மறுத்து சீர்திருத்தவாதத்திலும் மூழ்கி உள்ள பொழுது என்ன சொல்ல இவர்களை போன்றவர்களை?.

 இங்குள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தனியாக தீர்வு தேடும் அடையாள அரசியல்வாதிகள்! பிரச்சினைக்கான ஆணிவேரை காண்பிப்பதோடு சரியான தீர்வை மார்க்சியம் மட்டுமே வழங்க முடியும்.

 இங்குள்ள கசடுகளான பழைமைவாதம் மத சாதிய கசடுகளை இச் சமூகம் சுமந்துக் கொண்டே தனக்கான விடியலில் இந்த அசுத்தங்களை கலைவதில் திறன் அற்று உள்ளார்கள். வர்க்க போரையும் புரட்சியையும் மறுக்கிறார்கள்.

லெனின் புரட்சிக்கு பிந்தைய சோவியத் நிர்மானத்தில் இது போன்ற கசடுகளை எப்படி கலைந்தெறிந்தோம் என்றுகுறிப்பிட்டிருப்பார் ஆனால் நம் தோழர்கள் மார்க்சியத்தை துறந்து விட்டு மார்க்சியம் அல்லா முதலாளித்துவ கடை சரக்கான சீர்திருத்தவாதமே இறுதி மூச்சாக செயல்படும் பொழுது இந்த கசடுகளை கடந்துதான் ஆக வேண்டும் அல்லது லெனின் சொன்னது போல் துர்நாற்றம் வீசும் இதனை வெட்டியெறிய வேண்டும் அதற்கான வழிமுறை நான் சொல்ல தேவையில்லை மார்க்சியவாதிகள் புரிந்திருக்க வேண்டாமா?!

 சரி ஆண்வப்படுகொலை பற்றி தெளிவாக தெரிந்துக் கொள்ள முயலுவோம்.

 ஆணவப்படுகொலை (Honour Killing) என்பது ஒரு குடும்பம் அல்லது சமூகம் தங்கள் "மரியாதை" அல்லது "கௌரவத்தை" காப்பாற்றுவதற்காக தங்கள் உறுப்பினர்களை கொலை செய்யும் ஒரு கொடூரமான சமூகப் பிரச்சினையாகும். இது பல காரணங்களால் நடைபெறுகிறது:

 வர்க்க சமூகத்தில் பெண்தான் முதன் முதலில் ஆணாதிக்க சமூகத்தில் அடிமையானால். ஒரு அடிமைக்கு விடுதலை என்பது அந்த அடிமை சங்கிலிகள் அறுதெறியப்பட வேண்டும் அவையின்றி சில சீர்திருத்தங்கள் மூலம் மாற்றி அமைக்க நடந்தேறிய நிகழ்வின் சில கோர விளைவே இவைகள்

சில முக்கிய காரணங்களை தேடுவோம்.

1. பாலின ஏற்றத்தாழ்வுகள் (Gender Inequality):- ஆணுக்கு அடிமையான பெண் குடும்பத்தின் கௌரவமாகவும் அவளே குடும்பத்தின் "மரியாதைக்கான பொறுப்பாளிகள்" என்று கருதப்படுகிறார்கள். காதல், திருமணம், ஆடை அல்லது சமூகத் தொடர்புகள் போன்றவற்றில் பெண்களின் தேர்வுகள் குடும்ப "கௌரவத்தை" கேவலப்படுத்தும் என்பதாக இச்சமுக செயல்முறைகள் உள்ளன.

 2. கலாச்சாரப் பழமைவாதம் (Rigid Cultural Norms):-   சாதி, மதம், குலம் அல்லது பொருளாதார நிலை ஆகியவற்றை மீறிய உறவுகள்/ திருமணங்கள் சமூகத்தால் "அனுமதிக்கப்படாதவை" எனக் கருதப்படுகின்றன. இதைத் தடுக்கவே கொலைகள் நிகழ்கின்றன.

 3. குலம்/சாதி மேன்மை (Caste and Clan Supremacy):-   சாதியால் ஏற்ற தாழ்வை கட்டிக்காக்கும் நடைமுறை உள்ள சமூகத்தில் தன் சாதியை விட தாழ்ந்தவர் என்று நம்பும் சாதிவாத மதவாத அடிப்படையில் இயங்கும் சமூகம், தன் சாதியைவிட தாழ்ந்த சாதியினர் என்பவரிடமோ அல்லது வேறு மதத்தினருடன் உறவு வைத்திருப்பது குடும்ப "பெருமைக்கு வில்லங்கம்" செய்கிறது கௌரவ குறைச்சல் என்ற சமூக மனோநிலையில் இதைத் "தண்டிக்க" ஆணவப்படுகொலை நடக்கிறது.

 4. ஆணாதிக்க மனநிலை (Patriarchal Mindset):-   பெண்களின் உடல், வாழ்க்கைத் தேர்வுகள் மீது குடும்ப ஆண்கள் (தந்தை, சகோதரர்கள்) "அதிகாரம்" செலுத்துவதை இது பிரதிபலிக்கிறது.

 5.சமூக அழுத்தம் (Community Pressure):-

    கிராமங்கள் மற்றும் பழைமையை பாதுகாக்கும் குடும்பங்களில், "சமூகம் என்ன சொல்லும்?" என்ற அச்சம் கொலைகளைத் தூண்டுகிறது. குற்றம் செய்தவர்கள் பெரும்பாலும் சமூக ஆதரவைப் பெறுகிறார்கள் (இன்றைய சாதிய சமூகம் அதாவது சாதி சங்கம் மற்றும் கட்சிகள் அதன் பின் நிற்கிறது).

 6. சட்டத்தின் பின்தங்கிய நிலை (Weak Law Enforcement):-  

   இந்தியாவின் இன்றைய நிலை மதவாத சாதிவாத கட்சிகள் தய்வில்தான் ஆட்சி அதிகாரம் எனும் பொழுது! உண்மை தகவல்களை மறைப்பு, காவல்துறையின் சம்பந்தப்பட்ட தாமதம் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் குற்றவாளிகள் தப்பிக்கின்றனர். இதனால் குற்றங்கள் தவிர்பதற்கு பதில் தொடர்கிறது.

 இந்திய சட்டத்தின் நிலை:

- ஆணவப்படுகொலை "கொலை" (IPC 302) மற்றும் "குழு திட்டமிட்டக் கொலை" (IPC 301) கீழ் குற்றமாகும்.

- 2018-ல் "மக்களாட்சி எதிர்ப்பு குற்றச்சட்டம்" பிரிவு 302(3) சேர்க்கப்பட்டது, இதன் கீழ் ஆணவக் கொலைகளுக்கு மரண தண்டனை வழங்க முடியும்.

- இருப்பினும், சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை.

 கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளின்படி, “குற்றம் மற்றும் அதற்கான சமூக சூழலை” கணக்கில் கொள்ள வேண்டும் அதாவது நாம் வாழும் வர்க்க சமூகத்தில் இயங்கும் அரசியல் பொருளாதார அடிப்படையிலே இந்த சமூகம் இயக்கப்படுகின்றன. மார்க்சிய அடிப்படையில்  குற்றத்திற்கான மூன்று முக்கிய விளக்கங்கள் உள்ளன:

 1. வர்க்க ஏற்றத்தாழ்வுகளின் விளைவு:

   -வர்க்க சமூகத்தில்  ஏற்றதாழ்வான சுரண்டல் மற்றும் சமத்துவமின்மை குற்றத்திற்கு அடிப்படைக் காரணங்களாகும்.

   இன்று எல்லாம் தனியார்மயமாகி விட்டது கல்வியும் வேலைவாய்பும் இல்லா நிலையில் அதற்காக போராடாமல் தடுக்க முட்டு கட்டையாக பல அரசு செயல்கள்  வேலைவாய்ப்பின்மை மூடிமறைக்க நடக்கும் குற்றம்.

 2. மூலதனத்தின் இயல்பு:- லாபத்திற்காக மட்டுமே" என்ற மூலதன சுரண்டலில் பெரும் பன்நாட்டு இன்நாட்டு நிறுவனங்கள் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

   - முதலாளிகள் சுரண்டுவதற்கு ஏதுவான சட்டங்கள் அவர்களின் "லாபத்திற்காக" மேற்கொள்கின்றனர்.அந்த சட்டங்கள் முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கவே  உருவாக்கப்படுகின்றன.

 3. சமூகக் கட்டுப்பாட்டுக் கருவி:-  குற்றம் என்பது  அதிகார வர்க்கம் உழைக்கும் ஏழை எளிய மக்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஒரு முறை.

   -அரசின் கருவிகளான காவல், நீதித்துறை ஆகியவை மூலதனத்தைப் பாதுகாக்கும் கருவிகள்தான் அவை வர்க்க ரீதியாக ஆளும் வர்க்க நலன் பயப்பதே.

   - எடுத்துக்காட்டாக:- சாதரண மக்கள்  மீதான குற்றங்களுக்கு வழங்கும் தண்டனை கண்காணிப்பையும் பெரும் முதலாளிகள் மற்றும் அரசு நிறுவனக் குற்றங்கள் கையாளப்படும்விதம் கைவிடப்படுகின்ற முறைகளையும் கவனத்தில் கொள்வது அவசியமாக உள்ளது.

 முடிவுரை:

ஆணவப்படுகொலை என்பது மனித உரிமைகள் மீதான கொடூரமான மீறலாகும். இது சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியாலும், கல்வி மற்றும் சட்டப் பலத்தாலுமே ஒழிக்க முடியும். இது "மரியாதை" அல்ல; இது ஒரு கொடிய குற்றம்.

 குற்றமும் அதன் அடிப்படைகளும் வர்க்க ஏற்றதாழ்வின் சுரண்டலின் வகைபட்டதே ஆகையால் இதற்கு காரணமான சமூக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் அதனை விடுத்து தற்காலிக சீர்திருத்தம் பயனளிக்காது .

குற்றமும் அதன் அடிப்படைகளும் வர்க்க ஏற்றதாழ்வின் சுரண்டலின் வகைபட்டதே என்றும் ஆகையால் இதற்கு காரணமான இந்த சமூக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மார்க்சியம் கூறுகிறது. இதனை ஏற்காத அடையாள அரசியல்வாதிகள் தற்காலிக சீர்திருத்தம் மூலம் எல்லாவற்றிக்கும் தீர்வு தேடுகின்றனர்! அவை பயனளிக்கவில்லை என்பதுதானே அம்பேத்கர் மற்றும் பெரியார் வழிமுறை. இதனை இறுகப்பற்றியுள்ள சீர்திருத்தவாதிகள் தன்னியல்பிற்கு தலைவணங்கி தங்களை இயக்கிக் கொள்ள ஏதோவகையில் யார் பின்னாலும் அணித்திரள தயங்காத இவர்கள் ஆளும் வர்க்க கருத்தியலுக்கு ஆட்பட்டு சோரம் போன கூட்டம் .
உண்மையில் சாதி பிரச்சினைக்கான அடிவேரை தேடாமல் தாங்கள் முற்போக்குவாதிகள் போர்வையில் பாதிக்கப்பட்டவர்கள் பின் அணி திரள்வதனால் தீர்வு கிடைத்து விடுமா? அம்பேத்கர் பெரியார் செய்யாத பணியா? மார்க்சியம் எல்லா சாதியிலும் உள்ள உழைக்கும் மக்கள் பிரிவின் இளைஞர்களை அரசியல் படுத்தவேண்டும். இதுபோன்ற கேவலமான கீழ்தரமான செயல்களுக்கு முடிவுகட்ட வர்க்க அணி சேர்க்கை அவசியம். எந்த சாதியாக ஒன்றுபட்டாலும் அவை தேர்தல் அரசியலுக்கே பயனளிக்கும். அந்த கட்சிகளுக்கு அதாவது தேர்தல் அரசியலுக்குச் சாதிய அடிப்படையிலான மோதல்கள் தேவை. எனவே அவை சாதிய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, மக்களைப் பிளவுபடுத்தத்தான் செய்யும். ஆக சாதி கடந்து வர்க்க அரசியலை போதிக்க வேண்டும்.
சாதிய அடிப்படையிலான வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியதுதான்! அதற்கு மாற்று வர்க்க அடிப்படையிலான அரசியல் உணர்வு ஊட்டி வளர்தெடுக்க வேண்டும் அவைதான் முக்கியமான பணியாகும். அதனை செய்யாமல் ஏதோ பிரிவினருடன் அணி சேர்வது எந்த வர்க்க நலனுக்கு? விரிவாக பேசப்பட வேண்டியவை 

 +++++++++++++++++++++++++++++++++++++++++++









இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்