தனிநபர் துதி

 கருணாநிதி அவர்களின் மறைவை ஒட்டி முகநூலில் பதியப்பட்ட சில பதிவுகளும் எனது கருத்தும்…பகுதி -2

இந்த தனிநபர் துதி ஏன் என்பதனையும் உண்மைகளையும் மார்க்சியம் நமக்கு கற்று தந்த பாதையில் இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் காண்போம்…

பிரிட்டிஷ் இந்தியா கட்டியமைக்காத பல பகுதிகளை இந்திய தரகு முதலாளிய அரசு வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்தது மேலும் பெரு முதலாளிகளின் தேவைக்காக
இந்தியச் சூழலில் இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களை சுரண்ட ஒற்றை கலவை பண்பாட்டை உருவாக்கி ஒற்றை கலாச்சாரம் என்று பெயர் சூட்ட விழைகின்றனர், இந்திய கலாச்சாரம் என்பது இல்லாத ஒன்றாகும், இருநூறு ஆண்டுகளுக்கு மேல் இராணுவ பலத்தாலும் சட்ட அடக்குமுறைகளாலும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கும் இந்த இந்தியா.

இதனை எதிர்த்து தேசிய இனங்களில் உள்ள பெரு முதலாளிகள், நிலவுடைமையாளர்கள் தம் கையில் உள்ள அரசு அதிகார துணைக் கொண்டு தமது தேவைகளை முழுமையாக்க மாற்று பண்பாட்டு தளத்தை உருவாக்கி அதில் வடவர்- தென்னவர் மோதலாக, தமிழ்மொழி -வடமொழி மோதலாக, ஆரியர்- திராவிட மோதலாக, இந்தி பேசும் இனம்- ஏனைய மொழிகள் பேசும் இனங்கள் மோதலாக மட்டுமே சித்தரித்து மாற்று பண்பாட்டை முன் வைத்து செயல்பட்டது.

தமிழ் பேசும் பகுதிகளில் பெரு முதலாளிகள், நிலவுடைமையாளர்கள், பணக்கார விவசாயிகள், நடத்தர வர்க்கத்தினர், உதிரி பாட்டாளிகள்… இன்னும் பல வர்கத்தினர் வாழும் இடத்தில் வெளியில் இருந்து உருவாக்கப்பட்ட பண்பாட்டு பாதிப்பு….

அவற்றில் சில தனிமனித அரசியலில் பங்களிப்பு…
1.தனிநபர் வழிபாட்டை பூதகரமாக்கி எல்லாவற்றுக்கும் ஓர் உயர் தனிமனிதனை மீட்பராக எவ்வித விமர்சனமின்றி ஏற்று கொள்ளும் மனநிலையை உருவாக்குதல்.
2. வெற்றியே பிரதானம் என்பதற்காக, அராஜகம், பொறுக்கிதனம், குறிகோளற்ற வாழ்க்கை.
3. வார்த்தை ஜால மாயையில் போலித்தனத்தில் சுகம் காணுதல்.(நிலவுடைமை, முதலாளிய உரிமைகளை காத்துக் கொண்டே, சனநாயகம், சுதந்திரம், சமத்துவம் பேசிய போலித்தனம்).(இவை அடுத்தப்பகுதியில் தொடரும்)…

இவை நான் எழுத வேண்டிய நோக்கம் கருணாநிதி அவர்களின் மறைவைப் பற்றிய மா-லெ அமைப்பு என்று சொல்லி கொள்ளும் ம.க.இ.க தன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இரங்கல் செய்தியும் கவிதையும் வெளியிட்டுள்ளமை அதற்கான எனது தேடுதல்.

மேலும் இது போன்றவர்களை பற்றிய ஆய்வு தேவையெனில் நமது மார்க்சிய ஆசான்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்..

நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளியாகளாகவும் தம்மை தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர் எப்போதும் இருப்பார்கள்.
பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டேயிருப்பார்கள்.-
(லெனின் நூல் திரட்டு, தொகுதி 23, பக் 40-48 ல்)

(இன்னும் தொடரும் , இவை மிக நீண்ட பதிவு ஆகவே இங்கே நிறுத்த வேண்டிய தேவை)…..

.(கீழ் உள்ள படங்கள் சம்பந்தப்பட்ட சிலரின் பக்கங்கள் அவர்களின் அனுமதி இன்றியே பகிர்ந்து கொள்கிறேன், நன்றி.)


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்