இலக்கு 71 இணைய இதழ்

மார்க்சிய லெனினிய தத்துவத்தின் அடிபடையில் இன்றைய நமது கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டிய பணிகளை தேர்வு செய்து அதனை நமது ஆசான்கள் முன்னோடிகளின் எழுத்துகளிலிருந்து தேடிக் கொண்டுவந்து உங்கள் முன் வைக்கும் முயற்சிதான் இலக்கு இணைய இதழில் நோக்கம். அதன் அடிப்படையில் இந்த இதழில்...

இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1). இந்திய புரட்சியின் இலட்சியமாக தோன்றிய இயக்கங்கள்
2).இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும். - சுனிதிகுமார் கோஷ் பாகம்- 3
3). இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக்கோளாறு. பாகம்-8 சமரசம் கூடவே கூடாதா? தொடர்ச்சி
4). எமது ஆசான் லெனின்
5). மேதினம்-வரலாறு
ரஷ்யாவில்1883ம் ஆண்டில், முதல் மார்க்சிய குழு தோற்றுவிக்கப் பட்டது. 1895ல் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் 20 மார்க்சிய குழுக்கள் செயல்பட்டன. அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்த தொழிலாளர்களுக்கு லெனின் இங்கு மார்க்சியத்தை போதித்தார். 1895ல் 20 மார்க்சிய குழுக்களையும் ஒன்றுபடுத்தி "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கம்"என்பதனைத் தோற்றுவித்தார் லெனின். இந்தியாவில் 1920 தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இல்லை அதேபோல் தனக்கான சமூக பணியை ஆற்றவேயில்லை இதுவரை பிளவுண்டு கிடப்பதை விட.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1925 டிசம்பர் 26 ஆம் தேதி கான்பூரில் கூடிய மாநாட்டில் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவில் 99 வருடங்கள் கடந்த நெடிய பயணம் ஆனால் அதற்கான பணி நிறைவடையவில்லை.

கம்யூனிஸ்டுகளை தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு ஆளானது இல்லை என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. சட்டப் பூர்வமாக இயக்குவதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு அனுமதிக்கவில்லை. கட்சி தொடங்குவதற்கு முன்னாலேயே கடுமையான அடக்குமுறைகளை சந்தித்தது.

இன்றுள்ள பலபோக்குகளில்  இந்த குறுங்குழுவாதம் பற்றி பலமுறை சொல்லிவுள்ளவைதான் அதனை பேசுவதை விட இன்று நம்முன் உள்ள கடமையை பேசுவோம்.

ஆகவே அரசியல் பொருளாதார அறிவுள்ளதோடு மார்க்சிய சித்தாந்த அறிவுடன் கூடவே சிறந்த கம்யூனிச பண்புள்ளவர்கள் ஒரு சிலரே ஆயினும் அத்தகைய சிறந்த பண்புள்ளவர்கள் முதலில் ஒன்றுகூடி ஒரு சில குழுவாக உருவாக வேண்டும். அவர்கள் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்களை ஒன்றுதிரட்டி ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்க கூட்டாக முயற்சி செய்யவேண்டும். அதாவது ஆரம்பத்தில் முதலாளித்துவ வகைப்பட்ட தீய பண்புள்ளவர்களை சேர்த்துக்கொண்டு இயக்கத்தை துவங்கக் கூடாது. தோழர் ஸ்டாலின் சொல்வது போல உன்னதமான தலைவர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவைத்தான் முதலில் உருவாக்க வேண்டும். அத்தகைய உன்னத மானவர்கள்தான் ஒற்றுமைக்காகப் பாடுபடுவார்கள். அத்தகைய தலைவர்கள்தான் மக்களிடத்திலும் அணிகளிடத்திலுமுள்ள தீய பண்புகளைகளைவதற்கு பொறுமையாக வழிகாட்டுவார்கள். எனினும் இன்றைய கம்யூனிச இயக்கமானது பல குழுக்களாக பிளவுபட்டுள்ளது என்ற எதார்த்தத்தையும் நாம் புறக்கணிக்கக் கூடாது. ஆகவே இருக்கின்ற கம்யூனிச குழுக்களிலுள்ள இத்தகைய அன்னிய வர்க்க தீய பண்புகளை எதிர்த்து உறுதியாகப் போராடுவதற்கான கொள்கை வகுத்து அந்த குழுக்கள் செயல்பட வேண்டும். அன்னிய வர்க்க தீய பண்புகளை எதிர்த்துப் போராடிக்கொண்டே பிற குழுக்களுடன் ஒன்றுபட்டு இந்தியப் புரட்சிக்கான கொள்கை கோட்பாடு களிலுள்ள கருத்து வேற்றுமைகளை சிந்தாந்தப் போராட்டத்தின் மூலம் முடிவிற்கு கொண்டுவந்து ஒரு தெளிவான கருத்தொற்றுமைக்கு வரவேண்டும். அதன் அடிப்படையில் ஒரு கட்டுப்பாடான உறுதிமிக்க கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்க வேண்டும். விவாதிப்போம் தொடர்ந்து தோழர்களே.

இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும். - சுனிதிகுமார் கோஷ் பாகம்- 3

அவர்களது ஒற்றுமை கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டால்தான் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி நடைமுறைப்படுத்த முடியும். முதலாளிகளும், குட்டி முதலாளிகளும் அவர்களது வர்க்கத் தன்மையின் காரணத்தால், விவசாயிகளையும் தொழிலாளி வர்க்கத்தையும் திரட்ட முடியாமல் போகலாம். இவ்விழப்பினால், முதலாளிகளும் குட்டி முதலாளிகளும் தலைமையேற்று நடத்தக்கூடிய இயக்கங்கள் சில நேரங்களில் சீரழிவுற்று தனிநபர் அல்லது குழு பயங்கரவாதமாகி, எதிரிகளையோ அல்லது சில நேரங்கள் சாதாரண அப்பாவி மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட பிற தேசிய இனங்களுக்கு எதிராகக் கூட செயல்பட நேரிடும். (இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும், ஆளும் வர்க்கங்களும். சுனிதிகுமார் கோஷ், பக்கம் - 14, 15)

 இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் உருவாக்குகிறோம் என்று சொல்லி ஒவ்வொரு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் பல குழப்பங்களை ஏற்படுத்தி மொழிவழி தேசங்கள் உருவாகாமல் இருப்பதற்கான சதித்தனங் களில் நேரு அரசாங்கம் ஈடுபட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து மக்களிடை யே ஒற்றுமை வேண்டும் என்று நாடகமாடிக் கொண்டே இந்திய மக்களை சாதி, மதம், இன அடிப்படையில் பிளவுபடுத்தும் வேலைகளை காங்கிரசும் ஆர்.எஸ்.எஸ் கும்பலும் செய்தது. தற்போது இந்தியாவிலுள்ள இஸ்லாமிர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற பாஜக சதி செய்துகொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆகவே ஆளும் வர்க்கங் களின் பிளவுபடுத்தும் சதித்தனங்களை முறியடிக்க ஒவ்வொரு மொழிவழி மாநிலங்களுக்கும் பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமை வழங்கி, ஒவ்வொரு மாநிலத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட கூட்டரசாகவே இந்திய அரசை மாற்றுவதுதான் ஒரே வழியாகும்.

3).இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக்கோளாறு. பாகம் 8. சமரசம் கூடவே கூடாதா? தொடர்ச்சி

குறிப்பிட்ட எந்த ஒரு வரலாற்றுத் தருணத்திலும் அரசியலில் எழும் நடைமுறைப் பிரச்சனைகளில் புரட்சிகர வர்க்கத்துக்கு ஆபத்தான சந்தர்ப்பவாதத்தின் உருவாக அமைந்த சகிக்கவொண்ணாத, துரோகத்தனமான பிரதான வகை சமரசங்களாக இருப்பவற்றை இனம் கண்டு கொள்வதும், அவற்றை விளக்கிக் கூறவும் எதிர்த்துப் போராடவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதும் முக்கியமாகும்.

4). எமது ஆசான் லெனின்

லெனின் பிறந்தநாளில் லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !தோழர் லெனினின், அவர் எடுத்துக் கொண்ட சமூகப் பொறுப்பை நிறைவேற்ற அவர் தன்னை வளர்த்துக் கொண்டதை உட்கிரகித்துக் கொண்டு அவரது வழிகாட்டலை ஏற்று வளர்வதுதான்.

சித்தாந்தத்தை, கொள்கைகளை முதலாளித்துவத்திடம் அடகுவைத்துவிட்டு சொல்லில் சோசலிசம் பேசுகின்ற பலவண்ண திரிபுவாதிகள் உலகெங்கும் இருக்கின்றனர்.

உலகெங்கும் நடைபெறுகிற உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள், எழுச்சிகளைப் புரட்சியை நோக்கி வளர்த்துச் செல்லாத இத்திரிபுவாதிகள்தான் புரட்சியின் தடையரண்கள்.

லெனின் மாணவர்களாக அவருக்கு நாம் செய்யும் உண்மையான நினைவு கூர்வதற்தானது. அவரின் கொள்கை கோட்பாடுகளை நமது நாட்டு சூழலுகேற்ப அறிந்து செயல்படுவதே. அதற்கு உண்மையான மார்க்சிய லெனின்னியம் கற்று தேர்வதே, இல்லையேல் புஜை அறையில் பூஜிக்கும் கடவுள்கள் வரிசையில் அவரையும் வைத்து அந்நாளில் பூஜிப்பதோடு நம் பணி முடிந்து விடும்.

5). மே தினம் (May Day / தொழிலாளர் தினம்)

ஒரு புறத்தில் உழைப்பை பயன்படுத்து வதற்குரிய உழைப்பு சாதனங்கள் அனைத்துக்கும் சொந்தக்காரர்களான முதலாளிகள், மறுப்புறரத்தில் தம் சொந்த உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவும் சொந்தமாக இல்லாத தொழிலாளிகள் என்ற முக்கியமான இரண்டு பகைமையான இரும்பெரும் வர்க்கங்களாக தற்கால சமுதாயம் பிரிந்துள்ளது. அருவருப்பான உண்மைகளை, இனிப்பான சொற்றொடர் களால் மூடி மறைக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பினுடைய உற்பத்தி பொருளை இவ்விரு வர்க்கங்களுக்கு இடையே பகிர்ந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இந்த பகிர்மானம் நியாயமானதாக இல்லை.

அரசாங்கத்தின் சட்டத்தின் உதவி கொண்டு செயல்படும் முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டம் தொழிலாளி வர்க்கம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. இவ்வளவு உழைப்பு தியாகம் துன்பம் பட்டும் இறுதி விளைவு தொழிலாளர்கள் வறுமையிலேயே இருக்க வேண்டி உள்ளது. தொழிலாளி வர்க்கம் கடைசியில் இந்த விசவட்டத்தை முறிக்குமா?, அன்று கூலி முறையை முற்றிலும் ஒழித்து விடுகிற அந்த இயக்கத்திற்கு முடிவு தேடிக்கொள்ளுமா? என்று கேள்வி கேட்கிறார் எங்கெல்ஸ் 1881 ல் The labour standard இதழில்.

முழுமையாக இதழை பதிவிறக்கம் செய்து வாசியுங்கள்  விவாதிக்க வாருங்கள் தோழர்களே...

இலக்கு 71 இணைய இதழ் PDF வடிவில் இந்த இணைப்பில் அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே




இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்