பொருள் முதல் வாதமும் அனுபவ வாத விமர்சனமும் இன்றைய விவாதம் இதுவரை வாசித்த பகுதியை மீண்டும் 01/02/2025

தோழர்களுக்கு வணக்கம் 
நாம் இந்த நூலை வாசிக்க தொடங்கியது 17 ஆகஸ்ட் 2024 அன்று. அறிமுக உரையாக மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் தோழர் தோதாத்ரி அவர்களின் உரையை சற்று ஒலி பரப்பி விவாதத்தை தொடங்கினோம். அந்த நேர்காணல் முழுமையாக சரியாக பதிவு செய்ய முடியாமல் எல்லோராலும் கேட்க முடியவில்லை.
24/08/2024 அன்று நூலின்  மொழிபெயர்ப்பாளரின் அறிமுக உரையை நேரடியாக வாசித்து விவாதித்தோம்.
தத்துவத்தில் உள்ள இரு முகாம்களை அவர் மிகத் தெளிவாக காட்டுவதோடு பொருள் முதல் வாதம் கருத்து முதல் வாதம் பற்றி அவ்வற்றின் பல்வேறு பிரிவுகளை அதனுடன் இணைத்து காண்பித்தார்.
உதாரணத்திற்கு கருத்து முதல்வாத பிரிவான அகவய கருத்து முதல் வாதம் புறவய கருத்து முதல் வாதம் என்று பிரித்ததோடு அவற்றின் அங்கமான நம்பிக்கை வாதம், அறியொணாவாதம், அய்யுறுவாதம், ஆன்மீகவாதம் , ஆவின் நம்பிக்கை போன்றவை அடங்கும் என்கிறார்.

கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் இரண்டு தத்துவத்தின் அடிப்படை புரிதல் இல்லையேல் இத்தத்துவ நூலை புரிந்து கொள்ள முடியாது என்கிறார் இந்த நூல் ஆசிரியர்.  
மேலும் ஆசான் லெனின் காண்ட் பெர்க்கிலி ஹியூம் ஆகியோரின் நிலைப்பாட்டு மிகத் தெளிவாக முன்வைத்து அவர்களை விமர்சிக்கிறார். டேவிட் ஹியூம் ஓர்  உளவியல் அறிஞரும் வரலாற்று ஆசிரியராக ஆவார். இவரைப் பொருத்தமட்டில் அறிவிற்கு பொருத்தமானது கணிதம் ஏனென்றால் அது பொதுமைகள் பற்றி சந்தேகங்கள் மூலம் பேசுகிறது உதாரணமாக எக்ஸ் (X)என்பது எதையும் குறிக்கலாம் குறிக்காமலும் இருக்கலாம். எல்லாமே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை எதார்த்தம் என்பது மனப்பதிவுகளின் வெளிப்பாடு ஆகும் இதற்கான காரண காரியத்தை அறிய இயலாது. புறவயமான உலகம் இருக்கிறது இல்லை என்பதற்கு தீர்வு காண முடியாது காரண காரிய தொடர்பு என்பது இல்லை. நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை (பக்கம் 13). இவை அறிவொணாவாதம் ஐயுறுவாதம் மற்றும் நேர்க்காட்சி வாதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த நிகழ்வின் ஞானக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் தான் அனுபவ வாத விமர்சனங்களான ரிச்சர்ட் அவெனரியஸ், எர்னஸ்ட் மாக், போக்தனோவ் ஆகியோர். இவர்களின் விஞ்ஞான ரீதியான தத்துவம் என்பது பொருள் முதல்வாதம் கருத்து முதல் வாதம் என்பவற்றை சாராமல் இருக்க வேண்டும் என்பதாகும். அனுபவ வாத விமர்சனம் என்ற கொள்கை உருவாக்கி அவினரியஸ் இதன்படி சுத்த அனுபவத்தின் மூலம் உலகைப் பற்றிய இயல்பான கருத்து உருவாக்க வேண்டும் என்றும் இவர் கூறினார். இதனைப் பெற வேண்டும் என்றால் அனுபவத்தின் மூலம் பெறும் தகவல்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதில் கருத்து முதல் வாதம் பொருள் முதல்வாதம் என்று குறிக்கீடு இருக்கக் கூடாது என்றும் ஒவ்வொரு மனிதனின் அனுமானங்களின் மாறுபட்ட வடிவமே அறிதலின் உள்ளடக்கம் ஆகும் .விஞ்ஞான அறிவு என்பது அதற்கு முன்பிருந்த அறிவின் விரிவாக்கம் தவிர வேறு எதுவும் இல்லை. (14).
புலன் உணர்வுகள் மூலம் கிடைக்கும் அனுபவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவர்கள் மாக்கியவாதிகள். அறிவுக்கு மாற்றாக நம்பிக்கை வாதத்தை முன் வைத்தனர்.
மார்க்சியத்தின் அடிப்படை கருத்துகள் இருந்து விலகியதன் காரணமாக திரிப்பு வாதிகள் மோசமான புகழை தான் பெற்றனர். அவர்கள் கைவிட்ட கருத்துகளுடன் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் அவர்களது கணக்கை தீர்த்துக் கொள்ள முடியாமல் அச்சம் அல்லது இயலாமை உறுதியற்ற நிலை ஆகியவற்றையும் பெற்றனர் பழமைவாத மார்சியவாதிகளின் மார்க்சியத்தின் சில காலங்கடந்த கருத்துக்களுக்கு எதிராக நிற்கும் பொழுது(உதாரணமாக சில வரலாற்று கூற்றுகளை மறுக்கும் பொழுது) மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் இதனை செய்தனர் இந்த கூற்றுகளில் யாரும் ஐயத்துக்குரியவற்றை காண முடியவில்லை. 

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்