‘’வர்க்கப்பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும்வெளியீடுமே அரசு’’இதுதான் அரசு பற்றிய மிகத்தெளிவான மார்க்சியகோட்பாடாகும். எங்கே, எப்பொழுது எந்தளவுக்குவர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம்காண முடியாதவை ஆகின்றனவோ,அங்கே அப்பொழுது, அந்தளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானதுவர்க்கப் பகைமைகள் இணக்கம்காணமுடியாதனவாய் இருத்தலை நிருபிக்கிறது என்பது மார்க்சியம் ஆகும்.
முதலாளிகளும் சீர்திருத்த திருத்தல்வாதிகளும் அரசை புனிதமானது என்றே
சித்தரிக்கின்றனர். சமுதாயத்தின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில்,
வர்க்கங்கள் தோன்றி முரண்பாடுகள் தோன்றி பகைத்தன்மை
வளர்ந்து,
இந்தப் பகையை தீர்க்க முடியாதநிலை ஏற்பட்டபோதுதான் அரசு தோன்றியது. இந்த
வர்க்க பகைமையானது பயனற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சமுதாயமே அழிந்து விடாமல்
பாதுகாப்பிற்கான ஒழுங்கைஏற்படுத்துவதற்காகவே அரசு அவசியம் என்ற தோற்றத்தை
ஏற்படுத்தி அரசானது சமூகத்திற்கு மேலானது என்றும் அதற்குகட்டுப்பட வேண்டியது
அவசியம் என்ற கருத்தை விதைத்துஉருவாக்கப்பட்டதுதான் இந்த அரசாகும்.
மேலும் சமூகத்திற்கு மேலானதாக நிறுவிக்கொண்ட அரசானது மேலும் மேலும் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு மக்களுக்கு எதிரான பகை சக்தியாகவே அரசு மாறிவிட்டது. இந்தஉண்மையை மூடிமறைத்துவிட்டு அரசை மக்களின் நண்பனாகவும், மக்களுக்காக பாடுபடும் நிறுவனமாகவும் அதிலுள்ள சிலர் தவறு செய்வதால்அரசே தவறானது என்று கருதக்கூடாது என்று முதலாளித்துவ வாதிகளும் சீர்திருத்த திருத்தல்வாதிகளும் கருதுகிறார்கள்.
இன்றைய காலத்திலும் காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் மட்டுமல்ல ஏராளமான திருத்தல்வாதிகள் அரசுபற்றிய மார்க்சிய கோட்பாடுகளை திருத்தியும் மார்க்சியத்திற்கு நேர் எதிரான கொள்கைகளையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள். அவர்களைமுறியடிக்க அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை படித்து உள்வாங்கி முன்னணிகளை வளர்த்திடுவோம்...
முதலாளித்துவ அரசுகளில்தான் ஏராளமான குட்டி முதலாளித்துவ பிரிவினர்கள் அரசு அதிகாரிகளாக ஆனார்கள். ஆகவே இந்த முதலாளித்து அரசுகளை குட்டிமுதலாளித்துவ வர்க்கங்கள் ஆதரிப்பதோடு முதலாளிகளின் பக்கம் ஆதரவு கொடுக்கிறார்கள். இந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கப் பிரிவினர்கள்தான் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் இருந்துகொண்டு முதலாளி வர்க்கங்களின் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து பாதுகாக்கிறார்கள். இந்த உண்மையை வர்க்க உணர்வுள்ள பாட்டாளி வர்க்கம் பார்க்கிறது, மேலும் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ சமுதாயத்துக்கும் இணக்கம் காண முடியாத பகை உள்ளது என்பதை தனது சொந்த அனுபவங்களிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் வர்க்கமானது முதலாளித்துவ சமூகத்தை அழித்திடுவதற்கான சமூக சக்திகள் அனைத்தையும் ஒன்றுகுவித்து அரசுப் பொறியமைவை மேம்பாடு செய்வதல்ல, அதனை தகர்த்து நொறுக்கும் லட்சியத்தை கொள்கையாக ஏற்று செயல்படுகிறது.
இவ்வாறு முதலாளித்துவ அரசு அமைப்பை நொறுக்கிவிட்டு அதனிடத்தில் எவ்வகையான அரசமைப்பை பாட்டாளி வர்க்கம் அல்லது கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப் போகிறது என்ற கேள்விக்கும் மார்க்சியம் போதனை அளிக்கிறது. அதாவது இந்த அரசுக்கு மாற்று சோசலிச அரசுதான் என்கிறது. ரஷ்யாவில் தொழிலாளர்களின் சோவியத்து, விவசாயி களின் சோவியத்து, படையாட்களின் சோவியத்து என்ற சோவியத்துக்கள் உருவாக்கப்பட்டது. அனைத்து அரசியல் அதிகாரமும் இந்த சோவியத்துக்களே வழங்கப்பட்டது. இந்த சோவியத்துக்கான உறுப்பினர் களை மக்களே தேர்ந்தெடுத்தனர், மேலும் சோவியத்து உறுப்பினர்கள் தவறு செய்தால் அவர்களை திருப்பி அழைக்கும் உரிமையும் அதிகாரமும் மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்களிடம் விவாதித்தே சட்டங்கள் போடப்பட்டது. மக்களால் ஒரு சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அந்தச் சட்டம் விலக்கிகொள்ளப் பட்டது.
பெருமுதலாளிகளிடமிருந்து மூலதனங்களை சோவியத்து அரசு பறிமுதல் செய்து மக்களுக்குச் சொந்தமாக்கியது. இதுபோன்ற அரசமைப்புதான் உண்மையிலேயே மக்களுக்கான மிகச் சிறந்த ஜனநாயக அரசாகும். இத்தகைய அரசமைப்புக்காகப் பாடுபடுபவர்கள்தான் கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.
1. குடியிருப்பு பிரச்சினை (பக்கம் 81லிருந்து)
கம்யூனுடைய அனுபவத்தின் முக்கியத்துவம் பற்றிய அடிப்படைகளை மார்க்ஸ்
எடுத்துரைத்தார். எங்கெல்ஸ் திரும்பத் திரும்ப அதே விடயத்திற்குத் திரும்பினார்;
மார்க்சின் பகுப்பாய்வு மற்றும் முடிவுகளை விளக்கினார்;
சில சமயங்களில் பிரச்சினையின் மற்ற அம்சங்களை அவ்வளவு
வலிமையுடனும் தெளிவுடனும் தெளிவுபடுத்தியதால், அவரது விளக்கங்களை விசேஷமாக பரிசீலிப்பது அவசியமாகிறது.
குடியிருப்புப் பிரச்சினை (1872) என்ற தமது படைப்பில் எங்கெல்ஸ் ஏற்கெனவே கம்யூனுடைய
அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அரசு சம்பந்தமாகப் புரட்சிக்குள்ள கடமைகளைப் பல முறை
பரிசீலித்துள்ளார். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பரிசீலித்ததில்,
ஒரு புறத்தில், பாட்டாளி வர்க்க அரசுக்கும் இன்றைய அரசுக்கும் இடையிலான
ஒற்றுமைக் கூறுகள் தெளிவாக வெளிப்பட்டன - இரு நேர்வுகளிலும் அரசு குறித்துப்
பேசுவதற்கு அவசியமான அம்சங்கள் - மறு புறத்தில், அவற்றுக்கிடையேயான வேறுபாட்டின் அம்சங்கள்,
அல்லது அரசு அழிக்கப்படுவதற்கான இடைக்கால நிலமைகளை தெளிவாக
வெளிப்படுத்தப்பட்டன என்பதைக் கவனிப்பது அவசியமானது.
மார்க்சியம் வரலாற்று வழியில் முதலாளியத்துக்குச் சவக்குழி தோண்டி, வர்க்கங்களும் மனிதனை மனிதன் சுரண்டும் நிலையும் இல்லாத கம்யூனிச சமுதாயத்தைக் கட்டுவது தான் சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையென வரையறுத்துக் கூறிய மார்க்சும், ஏங்கெல்சும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்வதற்குகந்த மிகச் சிறந்த வழியையும் சுட்டிக் காட்டினர். அதாவது, தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்று, விவசாய வர்க்கத்துடன் நெருக்கமான கூட்டேற்படுத்திக் கொண்டு, முதலாளி வர்க்கத்தின் அரசியந்திரத்தை உடைத்து நொறுக்கப் புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்த வேண்டும்; பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவ வேண்டும்; பாட்டாளிய ஆட்சியைப் பாதுகாக்கவும் கம்யூனிச நெறிகளின் அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கவும் இவ்வரசை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பானது, முக் கியமாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத் தின் இந்த மாபெரும் இலட்சியத்திற்காகத் தான் உருவாக் கப்படுகிறது.
இன்று மார்க்சின் போதனைகளிலுள்ள புரட்சிகர சாரத்தை மூடி மறைத்துவிட்டு, அதனை திருத்தி முதலாளி வர்க்கத்தாருக்கு சாதகமான முறையில்
மாற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை முதலாளி வர்க்கங்களிடம் அடிமைப்
படுத்துவதில் முதலாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும்
ஒன்றுபடுகிறார்கள்.
இவ்வாறு முதலாளித்துவ அறிவாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கங்களிலுள்ள
சந்தர்ப்பவாதிகளாலும் மிகவும் அதிகமாக மார்க்சியத்தை திருத்தி மக்களை
குழப்பத்திற்குள் ஆழ்த்திய மார்க்சிய போதனைகளில் மிகவும் முதன்மையானது அரசு பற்றிய
மார்க்சிய போதனையையே ஆகும்.
ஏனெனில் மார்க்சின் போதனைகளிலேயே மிகவும் முதன்மையான,
மற்றும் உழைக்கும் மக்களாலும்,
அதன் முன்னணிகளாலும் உணர்ந்து,
புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டிய கொள்கை என்பதுஅரசு
பற்றிய மார்க்சியக் கொள்கையாகும். அரசு பற்றிய மார்க்சிய கொள்கையில் உழைக்கும்
மக்களுக்கும் அதன் முன்னணிகளுக்கும் குழப்பம் இருந்தால் ஆளும் முதலாளி வர்க்கமும்,
தொழிலாளிவர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும்,
மக்களும் அதன் முன்னணிகளும் மார்க்சியத்தின் அடிப்படைகளையே
புரியவிடாமல் செய்துவிட முடியும், மேலும் மார்க்சிய சித்தாந்தத்தின் மீதே நம்பிக்கை
இழக்கச்செய்ய முடியும்.
உலக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் முதலாளித்துவ (ஏகாதிபத்திய) வர்க்கமும்,
சந்தர்ப்பவாதிகளும் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை
திருத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தார்கள். அதன் மூலம்
முதலாளிகள், அவர்களை
பாதுகாத்துக்கொண்டு தற்போது கொடூரமான முறையில் அதாவது பாசிச முறையில்உழைக்கும்
மக்களை சுரண்டிக் கொண்டும் ஒடுக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.
இந்த சூழலில் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை உழைக்கும்
மக்களும் அதன் முன்னணியினரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிகவும்
அவசியமாகும்.
‘’அரசுகுறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை
எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும்,
குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின்
செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.’’
என்றார் லெனின்.
முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய
சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற
சந்தர்ப்பவாதிகளுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை
வேறுபாடு எப்போதும் இருந்து வந்திருக்கிறது
முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும்
மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும்
குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு
கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று
மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும் தேவைப்படும்போது இந்த
சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும் ஆனால் பாட்டாளி
மக்கள் கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக பாராளுமன்ற போராட்டத்தை
கருதக்கூடாது அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம் சாதித்து
விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன
போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .