"சமூக ஜனநாயவாதி" என்னும் பதம் விஞ்ஞான வழியில் தவறானது என்று நிலை நாட்டுகையில் எங்கெல்ஸ் இப்பொருள் குறித்து தமது கருத்துக்களைக் கூற நேர்ந்தது.
நீங்கள் உங்களை கம்யூனிஸ்டுகளாக பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும் கற்றறிதல் ஒழுங்கு அமைத்தல் ஒன்றுபட செய்தல் போராடுதல் ஆகியவற்றின் மூலம் இளைஞர் கழக உறுப்பினர்கள் தம்மை பயிற்றுக் கொண்டு இளைஞர் கழகத்தை தம் தலையாய் கருதுவோர் எல்லோரையும் பயிற்றிவிருக்கும் படியான முறையில் தனது நடைமுறை செயல்பாட்டை ஏற்பாடு செய்து கொள்வதுதான் இளைஞர் கழகத்தின் பணி. எல்லோரையும் கம்யூனிஸ்டுகளை பயிற்றுவிக்க வேண்டும் என்ற இளைஞர்களுக்கு தரப்படும் பயிற்சி கல்வி போதனை ஆகிவிட்டது நோக்கம் எல்லாம் கம்யூனிஸ்ட் அறநெறி ஊட்டுவதாக இருக்க வேண்டும்.
கம்யூனிஸ ஒழுக்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதா? நிச்சயமாய் இருக்கிறது! நமக்கு என்று ஒரு தனி அறநெறி கிடையாது என்று அடிக்கடி பேசப்படுகிறது. ஒழுக்கநெறி அனைத்தையும் நிராகரிப்பவர்கள் என்பதை கம்யூனிஸ்ட களாகிய நம் மீது முதலாளித்து வர்க்கத்தினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள் பிரச்சனையை குழப்பதற்கான தொழிலாளர் விவசாயிகளில் கண்களில் மண்ணைத் தூங்குவதற்கான ஒரு உபாயமே இது. எந்த அர்த்தத்தில் நாம் அறநெறியை ஒழுக்க நெறியை நிராகரிக்கிறோம். முதலாளி வர்க்கத்தினர் அதற்கு அளித்திடும் அந்த அர்த்தத்தில் நிராகரிக்கிறோம். கடவுள் கட்டளைகளை அவர்கள் அறநெறி அடிப்படையாகக் கொள்கிறார்கள் எங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நாம் கூறுகிறோம்.
மனிதனுக்கு புறம்பான வர்க்கத்திற்கு புறம்பான கருத்து இனங்கள் அடிப்படையாய் கொண்ட எந்த ஒழுக்க நெறியும் நாம் நிராகரிக்கிறோம். அது ஏமாற்று வித்தை மாய்மாலம் நிலப்பிரப்புத்துவ முதலாளிகள் நலனை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கு உபாயம் செய்கிறார்கள். எங்களுடைய ஒழுக்க நெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க போராட்டத்தில் நலன்களுக்காக முற்றிலும் கீழ்ப்படிந்தது என்று நாம் கருதுகிறோம்.
எங்கள் ஒழுக்க நெறி பாட்டாளி வர்க்க போராட்டத்தின் ஒழுங்கிலிருந்து உதிக்கிறது பழைய சமுதாயம் எல்லாம் தொழிலாளர் விவசாயின் மீதும் நிலப்பிரப்புகள் முதலாளித்துவ புரிந்த ஒடுக்கு முறையின் அடிப்படையில் அமைந்திருந்தது. நாம் அதை அடியோடு அழிக்க வேண்டி இருக்கிறது, அவர்களை வீழ்த்த வேண்டி இருக்கிறது. ஆனால் இதை செய்ய, நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டி இருக்கிறது. அது கடவுளால் உண்டாக்கப்பட கூடிய ஒன்று அல்ல. இந்த ஒற்றுமையை தொழிற்சாலைகளால் மட்டும்தான் அளித்திட முடியும். நீண்ட நெடிய உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தால்தான் உண்டாக்க முடியும். இந்த வர்க்கம் உருவான பிறகு வெகுஜன இயக்கம் ஒன்று தோன்றி மிகவும் பலவீனமான ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றியடைந்திருப்பதை நாம் காண்கிறோம். இந்த வெற்றிக்கு வழி செய்தது இந்த பாட்டாளி வர்க்க புரட்சி அனைத்து உலகில் முதலாளித்து வர்க்கதினால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறவர்கள் இடையில் ஒற்றுமையும் மற்றும் சிதறுண்டுள்ள விவசாயிகளை தன்னை பின்பற்றி வர செய்துள்ளது. சுரண்டலாளர்களின் எல்லா தாக்குதலையும் சமாளித்து நிற்பது திடமான இசக்தியை பாட்டாளி வர்க்கம் தன் அணியில் அரவனைத்து வர்க்க சமூகத்தில் இன்று சிதறுண்டுள்ள உழைப்பாளிகள் வெகுஜனங்கள் ஒன்றுபடவும் தமது அணியில் ஒன்று திரட்டி கொள்ளவும் கம்யூனிச சமுதாயத்தை முடிவாய் பாதுகாத்துக் கொள்ளவும், முடிவாய் உறுதிப் பெரும்படியும் செய்ய, முடிவாய் பாட்டாளி வர்க்க கட்சி துணை புரிய முடியும். எனவேதான் மனித சமுதாயத்திற்கு மேலானது எந்த ஒழுக்க நெறி என்பதாய் நமக்கு ஏதுமில்லை என்று கூறுகிறோம்.
நமது ஒழுக்க நெறியானது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தினுடைய நலன்களுக்கு கீழ்ப்பட்டதாகும் இந்த வர்க்க போராட்டம் எதில் அடங்கி உள்ளது?
இன்றைய ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் வர்க்கத்தை ஒழித்தல் இதில் அடக்குவது.
வர்க்கங்கள் என்பவை யாவை சமுதாயத்தில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவின் உழைப்பை அபகரித்துக் கொள்ள வழி செய்வது இங்குள்ள ஒழுங்கு. சமுதாயத்தின் ஒரு பிரிவு எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளுமாறு அந்த வர்க்கதின் ஒழுங்காக இருக்க காண்கிறோம். சமுதாயத்தின் இந்த ஒருபிரிவை ஒழித்துக் கட்ட வேண்டிய தேவை இன்னொரு பிரிவுக்கு உள்ளது.
ஜாரை விரட்டுவது கடினமாய் இருக்கவில்லை ஒரு சில நாட்களை தேவைப்பட்டன. நிலப்பிரப்புகளை விரட்டுவது அதிக கடினமாய் இருக்கவில்லை ஒரு சில ஒரு சில மாதங்களில் இதில் செயல்பட்டுவிட்டது. முதலாளிகளை விரட்டுவதும் அதிக கடினமாக இருக்கவில்லை. ஆனால் வர்க்கங்களை ஒழித்தல் இதையெல்லாம் விட சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் கடினமானதாகும்.
வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் வடிவங்கள் மட்டுமே மாறி இருக்கின்றன. பழைய சுரண்டலாளர்கள் திரும்பி வந்து விடாப்படி தடுப்பதற்காக அறிவொளி இல்லாத விவசாயிகள் வெகுஜனங்களை ஒரே கூட்டணியாய் ஒன்று படுத்துவதற்காக நடைபெறும் வர்க்கப் போராட்டம் இது. தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு எல்லா நலன்களையும் கீழ்பட செய்வது நமது பணி. நமது கம்யூனிஸ்டுகளின் ஒழுக்க நெறியும் இப்பணிக்கு கீழ்ப்பட்டது தான். பழைய சுரண்டல் சமுதாயத்தை அழிக்கவும் ஒரு புதிய கம்யூனிஸ்ட் சமுதாயத்தை கட்டிஅமைத்திடவும் பாட்டாளி வர்க்கத்தை மையமாகக் கொண்டு உழைப்பாளி மக்கள் அனைவரையும் ஒன்றுபட செய்யவும் உதவுவது ஒழுக்கநெறி என்று கூறுகிறோம். இந்தப் போராட்டத்திற்கு உதவி புரியும் உழைப்பாளி மக்களை எல்லாவித சுரண்டலையும் எதிர்த்து அற்ப தனியார் சொத்துரிமை அவற்றின் எதிர்த போராட்டம் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டமாகும்…
இல்லையேல் பழைய சமூக ஒழுங்காக கொள்ளையடி அல்லது கொள்ளைக்கு இலக்காகு அனைவருக்கும் வேலை செய் அல்லது அனிவரையும் உனக்கு வேலை செய்யும்படி வை, அடிமை உடைமையாளனாய் இரு அல்லது அடிமையாக இரு. இந்த விதி தான் பழைய சமுதாயத்துக்கு அடிப்படையாய் இருந்தது. ஒன்று நீ அடிமை உடைமையாளன் அல்லது அடிமை இல்லையே சிறு உடைமையாளன் சிறு அதிகாரி அல்லது அறிவுத்துறையாளன் அதாவது சுருங்க கூரின் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்து ஏனையோர் பற்றியும் கவலைப்படாத தன்நல மனப்பான்மை கொண்டோர் கம்யூனிஸ்டாக இருக்க முடியாது. அதிகார வர்க்கத்தின் முன் அடிபணிந்து தன் வாழ்க்கை காப்பற்றிக் கொள்ள அடிமை சேவகம் செய்ய நினைப்போர் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க முடியும்.
சுரண்டலாளர்களுக்கு எதிரான உணர்வு பூர்வமான போராட்டத்தின் மூலமும் கம்யூனிஸ்ட்டுகள் பெறும் ஒழுக்க நெறி இச்சமூகத்தில் பேசும் ஒழுக்கநெறியிலிருந்து வேறானது. அவை சுரண்டலை ஒழித்து சமத்துவத்தை பேசும் மனித சமூக உயர்ந்த ஒழுக்க நெறியான கம்யூனிச ஒழுக்க நெறியாகும். இங்கே எழுத பயன்பட்ட கட்டுரை (இளைஞர் கழகங்கனின் பணிகள் அக்டோபர் 1920 லெனின் ஆற்றிய உரைகளிலிருந்து).