ஜாரை விரட்டுவது கடினமாய் இருக்கவில்லை ஒரு சில நாட்களை தேவைப்பட்டன. நிலப்பிரப்புகளை விரட்டுவது அதிக கடினமாய் இருக்கவில்லை ஒரு சில ஒரு சில மாதங்களில் இதில் செயல்பட்டுவிட்டது. முதலாளிகளை விரட்டுவதும் அதிக கடினமாக இருக்கவில்லை. ஆனால் வர்க்கங்களை ஒழித்தல் இதையெல்லாம் விட சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் கடினமானதாகும்.- லெனின்
போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற் கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில் பிறந்தது. அதன் திட்டங்களும், அமைப்புக் கோட்பாடுகளும், தொழிலாளிகள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்னும் “பொருளாதாரவாதத்” திற்கெதிரானதாக அமைந்தது. அவர்களோடு கட்சியில் வர்க்கக் கூட்டிணைப்புக் கோட்பாடுகளைப் புகுத்தி அமைப்பைப் பலவீனப்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயன்ற மென்ஷ்விக்குகளுக்கு எதிரானதாக, கட்சியை மக்களிடமிருந்தே பிரித்து, நட்புச் சக்திகளை நிராகரித்து, போராட்டத்தின் வளர்ச்சிக்கட்ட அடிப்படையிலான கோட்பாட்டுக்குப் பதிலாக “வெற்றுப் புரட்சிகர” வாய்வீச்சில் இறங்கிய “இடதுசாரி” களுக்கெதிரானதாக இருந்தது.
உலகெங்கிலும் மூலதனத்தின் சுரண்டலுக்கு எதிராய் போராடிக் கொண்டிருக்கும் மக்களை திசை விலக்குவதற்கான முயற்சிகள் திரும்பவும் சூடு பிடித்துள்ளன. அரசியல் அரங்கில் அன்னதானம், உதவித்தொகை, மனித உரிமை, தன்னார்வ அரவணைப்புகள் என்று ஒரு முனையில் வர்க்கப் போராட்டத்தை வளைக்க முயற்சிப்பது போலவே, மறுமுனையில் சீர்திருத்தவாதம், இருத்தலியம், பின் நவீனத்துவம், விளிம்புநிலைக் கோட்பாடு எனும் பாசக் கயிற்றோடு சுரண்டலின் பங்காளிகள் களம் புகுந்துள்ளனர். முதலாளித்துவத்தின் காலாட்ப் படைகளோடு, இத்தகைய கையாட் படைகளையும் எதிர்த்த புரட்சிகரப் போராட்டத்தின் அனுபவமாய் மீண்டும், மீண்டும் மார்க்சிய லெனினியமே வர்க்கப் போராட்டத்தின் அறுவடைக்குரிய ஆயுதமாய் மக்களின் கரம் கோர்த்து நிற்கிறது.
மார்க்சியத்தை மறுப்பதற்கு காரணம் தேடும் தமிழக தளபதிகள், ஐரோப்பாவிலும், சோசலிச நாடுகளிலும் புரட்சிகர பாட்டாளி வர்க்கம் சித்தாந்தத் துறையில் போஸ்ட்மார்ட்டம் செய்த இசங்களை தமிழகத்தில் ஆவி எழுப்புதல் முயற்சிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் மார்க்ஸ் முதல் மாவோ வரை என்னும் இந்த நூல் மார்க்சிய லெனினிய எதிரிகளை இனம் காட்டவும், மார்க்சிய - லெனினிய மாவோவின் சிந்தனைக்கு வழி காட்டவும் உதவி செய்கிறது.
“வரக்கப் போராட்டத்தை ஏற்பது மட்டுமல்ல, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வரை ஏற்று விரித்துச் செல்வதே மார்க்சியம்” என்ற லெனினிய வாதத்தை முன்வைத்து ரஷ்ய, சீனப் புரட்சிகரப் போராட்டங்களின் வெளிச்சத்தில் நடைமுறைக்கும் தத்துவத்திற்குமான இயங்கியல் உறவை விளக்கும் ஜார்ஜ் தாம்சனின் இந்த நூல் வர்க்கப் போராட்டத்தில் பிணைக்கப்பட்டு இருக்கும் அனைவருக்குமான தெளிவையும் தீர்வையும் வழங்குகிறது.
மார்க்சிய தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தையும் கம்யூனிசஅமைப்பின் அவசியத்தையும் தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் மக்களுக்கு போதிகாகதன் விளைவாகவே இங்கே மார்க்சியத்தை மறுக்கும் தத்துவஅரசியலான பின்நவீனத்துவம், அடையாள அரசியல், பிராங்பார்ட் வாதம்(மார்க்சியம்), திறந்தநிலை வாதம் (மார்க்சியம்) போன்ற பிற்போக்கு தத்துவஅரசியலைப் பரப்பி மக்களிடம் குழப்பம் ஏற்படுத்தி மார்க்சியத்தை மறுத்துஎதிர்க்கும் பிரச்சாரத்தில் தன்னை மார்க்சியவாதி என்று கூறிக்கொண்டே சதித்தனமான பிரச்சாரத்தில் பிழைப்புவாதிகள் முதலாளிகளிடம் சரணடைந்தவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சூழலில் இந்த நூலில் ஜார்ஜ்தாம்சனால் முன்வைக்கப்படும் கருத்துக்களை, அறிந்துகொள்ள வேண்டியது கம்யூனிஸ்டுகளாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்துஇலக்கு இணைய இதழில் இதனை தொடர்கட்டுரையாக வெளியிடுகிறது.
1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியைப் பற்றியும், 1949 ஆம் ஆண்டு சீனப்புரட்சியைப் பற்றியும் ஆராயும் மார்க்சிய ஆய்வு இது. உலக சோசலிசப்புரட்சியின் அடுத்தடுத்து வந்த இரண்டு கட்டங்கள் என்ற வகையில்,அவற்றின் ஒற்றுமையையும் தொடர்ச்சியையும் மெய்பிப்பதே இந்த ஆய்வின் குறிக்கோள். மார்க்சிய இலக்கியங்களில் இருந்தும் குறிப்பாகலெனின் மாசேதுங் ஆகியோரின் படைப்புகளில் இருந்தும் விரிவான மேற்கோள்களை எடுத்தாள்வதன் மூலம், இவ்விரண்டு புரட்சிகளுக்கும் பொதுவான தத்துவ அடிப்படை விளக்கப்படுகிறது. இதனால், இப்புரட்சிகளுக்கு தலைமையேற்றவர்களின் சிந்தனைகளின் வழியாக அவற்றை வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். அதே வேளையில் இம்மேற்கோள்கள், வாசகர்களுக்கு இயங்கியல் வரலாற்று பொருள் முதல் வாதத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அறிமுகம் செய்து வைக்கின்றன. ஏனெனில், புரட்சிகரப் போராட்டங்களின் வெளிச்சத்திலேதான் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். புரட்சிகரப் போராட்டங்களில் இருந்துதான் அது வளர்ந்தது; அவற்றில்தான் தத்துவம் தனது மிக முழுமையான, மிகத் தெளிவான வெளியீட்டை காண்கிறது. (மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை நூல் பக்கம் VII)
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
1917 ஆம் ஆண்டில் நடந்த ரஷ்யப் புரட்சிக்கும் 1949 ஆம் ஆண்டில் நடந்த சீனப் புரட்சிக்கும் இடையில் பொதுவான ஒற்றுமை உள்ளது, அதாவது, இவ்விரண்டு புரட்சிக்கும் வழிகாட்டிய அரசியல் மற்றும் தத்துவமானது மார்க்சியமே என்பதையும், ரஷ்யப் புரட்சியின் தொடர்ச்சியே சீனப் புரட்சி என்பதையும் அதாவது ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களை கற்று உணர்ந்து நடத்தப்பட்ட சீனப் புரட்சியானது ரஷ்யப் புரட்சியின் தொடர்ச்சியே என்பதை இந்த நூல் விளக்குகிறது. இந்த உண்மையை மார்க்சிய இலக்கியங்களிலிருந்தும், குறிப்பாக லெனின் மற்றும் மாவோவின் படைப்புகளிலிருந்தும் வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொல்லி இந்த நூல் நிருபிக்கிறது. இந்தப் புரட்சிகளுக்கு தலைமையேற்ற தத்துவ சிந்தனைமுறையை நாம் புரிந்துகொண்டால் அதன் அடிப்படையில் இந்தியாவிலும் புரட்சி நடத்தி புதிய இந்தியாவை நம்மால் படைக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த நூல் நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த நூலை நாம் படிப்பதன் மூலம் நாம் இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை நாம் பெற முடியும். இந்த நூலை நாம் படிப்பதோடு நின்றுவிடாமல் உழைக்கும் மக்களோடு இணைந்து புரட்சிகரமான போராட்டங்களில் (சீர்திருத்தவாத மற்றும் திருத்தல்வாத போராட்டங்கள் அல்ல) நாம் ஈடுபட வேண்டும். ஏனெனில் நாம் புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலமும் அதன் வெளிச்சத்தில்தான் நாம் படித்து புரிந்துகொண்ட தத்துவம் மற்றும் அரசியலை மேலும் தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்வதோடு கூடவே அதனைப் பயன்படுத்தி சமூக விடுதலைக்கான போராட்டத்தில் நாம் வெற்றிகாண முடியும். இந்த வகையில் நாம் மார்க்சிய தத்துவத்தையும் நமது புரட்சிகரமான நடைமுறையையும் இணைக்க வேண்டும். எனவே நமது நடைமுறையானது புரட்சிகரமான மார்க்சிய தத்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில் நமது புரட்சிகரமான நடைமுறைப் பணியிலிருந்து கிடைத்த அனுபவத்தைக்கொண்டு நமது மார்க்சிய தத்துவத்தை மேலும் வளர்க்க வேண்டும். இதற்குமாறாக நமது நடைமுறையானது மார்க்சியத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், மார்க்சியத்தின் அடிப்படைகளை புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது. மேலும் நமது நடைமுறை அனுபவத்திலிருந்து மார்க்சிய தத்துவத்தை வளர்ப்பதற்கு எதிராக மார்க்சியத்தை திருத்தி சீரழிக்கக்கூடாது. இந்த நூல் டக்ளஸ் கார்மெனின் நினைவுக்கு காணிக்கையாக்கப்படுகிறது.. அவர்தான் எனக்கு ஜார்ஜ் தாம்சனுக்கு) மார்க்சியத்தை பயிற்றுவித்தவர்.. பிரிட்டிஷ் பொதுவுடமைக் கட்சியின் தேசிய கல்வி அமைப்பாளராக இருந்த அவர், கட்சிப் பள்ளிகளை வலைப்பின்னல்களாய் உருவாக்கினார். இப்பள்ளிகளில் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தொழிற்சாலை தொழிலாளர்கள் பயில வந்தனர். அவர்களுக்கு அவரும்; கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட விவாதங்களின் வழியாக கற்பித்தல் என்ற அவரது முறையில் பயிற்சிவிக்கப்பட்ட பிறரும் கல்வியூட்டினர். கட்சியின் தலைமை முன்வைத்த “சோசிலிசத்துக்கான பிரிட்டிஷ் பாதை” என்ற புரட்டல் வழியை அவர் தொடக்கத்திலிருந்து எதிர்த்து வந்தார். இக்கருத்து வேறுபாடு காரணமாக, 1950இல் அவர் இப்பள்ளிப் பணியை கைவிட நேர்ந்தது. இப்போராட்டத்தில் அவர், தோற்கடிக்கப்பட்டு விட்டார்; ஆனால் அவருடைய கட்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற என்னைப் போன்ற பலர் புரட்சிகர இயங்கியலில் அவர் கற்பித்த பாடங்களை ஒருபோதும் மறந்துவிடவில்லை. இன்று புரட்சிகரப் பாதை எங்கு நிலவுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவருடைய போதனை எங்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்துள்ளது. (ஜார்ஜ் தாம்சன்).
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
ஜார்ஜ் தாம்சன் அவர்களின் மார்க்சிய ஆசிரியர், டக்ளஸ் கார்மென். இவர்தான் பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கல்வி அமைப்பாளராக இருந்து பிரிட்டீஷ் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மார்க்சியகல்வியைப் போதிப்பதற்குத் தேவையான பள்ளிகளை பிரிட்டீஷ் நாட்டில்உருவாக்கினார். அந்தப் பள்ளிகளின் மூலம் பிரிட்டனில் ஜார்ஜ் தாம்சன் போன்ற மிகச்சிறந்த மார்க்சியவாதிகளை உருவாக்கினார் என்பதை மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை என்ற இந்த நூலில் ஜார்ஜ் தாம்சன் விளக்கியுள்ளார். இவ்வாறுதான் பிரிட்டனில் மட்டுமல்லாது ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அவர்களது கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பொதுவான மார்க்சியகல்வியை அளித்தனர். அதன் மூலம் அந்த கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் மிகச்சிறந்த மார்க்சிய அறிவாளிகளை உருவாக்கினர். இவ்வாறு உருவாக்கப்பட்ட மார்க்சிய அறிவாளிகளைக் கொண்டு நாட்டு மக்களுக்கும் மார்க்சியத்தைப் போதித்து மக்களிடமும் சிறந்த மார்க்சிய அறிவாளிகளை உருவாக்கினர்.
நம்மிடையே உள்ள குறைப்பாடு மார்க்சியம் கற்பதற்கான பள்ளியோ அல்லது இன்றுள்ள பல்வேறு போக்கில் நாமும் ஒரு போக்கில் ஐக்கியம் ஆக நினைக்கும் தோழர்கள் இத்தனை போக்கு ஏன் இதனை விட்டொழித்து ஒரு சரியான புரட்சிகர கட்சியின் அவசியமும் அதனை சாதிப்பது எப்படி என்பதனை விடுத்து தாங்கள் மட்டுமே சரியான மார்க்சியத்தை கடைபிடிப்பதாக கூறும் ஒவ்வொருவரும் மார்க்சிய ஆசான் கள் போதித்த முறையில் உள்ளோமா என்பதனை விளக்குவார்களா விளக்க கடமை பெற்றவர்களே!???