இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1). தொழிற்சங்கங்கள் குறித்து மார்க்சிய ஆசான்கள்
2). என்ன செய்ய வேண்டும் : லெனின் – ஒரு அறிமுகம்
3). சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?. லியுஷாவோகி-பாகம் 4.
4). ஐக்கிய முன்னணி குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம்
5). அரசும் புரட்சியும் லெனின் நூலை ஏன் படிக்க வேண்டும்?
'சரியானது' என்று எதைச் சொல்கிறீர்கள்?—எங்கெல்ஸ் எது சரியானது, எது நமது நடைமுறையால் உறுதிப்படுத்தப்படுகிறது; இதன் விளைவாக, நமது புலனுணர்வுகள் அனுபவத்தால் உறுதிப்படுத்தப்படுவதால், அவை 'அகநிலை' அல்ல, அதாவது, அவை தன்னிச்சையானவை அல்லது மாயையானவை அல்ல, ஆனால் சரியானவை மற்றும் உண்மையானவை. . . .
1). ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியானது பொருளாதாரப் போராட்டத்தை அதாவது கூலி உயர்வு போனஸ் போன்ற பொருளாதார நலன்களுக்காக தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் நடத்தும் பல போராட்டங்களில் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும் என்கிறார் லெனின்.
பொருளாதாரப் போராட்டம் ஒன்றே ஒரே போராட்டம் என்று கம்யூனிஸ்டுகள் கருதக் கூடாது என்றும் தொழிலாளர்களுக்கு இந்த கருத்தை கம்யூனிஸ்டுகள் போதித்து உணரச்செய்ய வேண்டும் என்றார் லெனின். ஆனால் லெனினது இந்த போதனையை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் பின்பற்றுகிறார்களா? இல்லை என்பதே எதார்த்தமான உண்மையாகும்.
2).அன்றைய ரசியாவில் தொழிற்சங்கம் அமைப்பது சட்ட விரோதமானது, வேலை நிறுத்தம் செய்வது கிரிமினல் குற்றம், மார்க்சிய படைப்புகளை படிப்பது தடை செய்யப்பட்டது என்று கொடூரமான ஜாரிச எதேச்சதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. எனவே, மார்க்சிய வட்டங்களில் இணையும் இளைஞர் குழுக்கள் அடிக்கடி போலீஸ் உளவாளிகளால் கண்காணிக்கப்பட்டு இறுதியில் கூண்டோடு கைது செய்யப்பட்டு வந்தனர்.
3). மகத்தானதும் நீண்டகால தன்மை வாய்ந்ததுமான பாட்டாளி வர்க்கத்தின் மற்றும் திரளான மக்களின் புரட்சி போராட்டங்களில் ஈடுபடும் நெடிய பாதையின் ஊடாகச் செல்வதன் மூலம் நம்மை எல்லா முனைகளிலுமான சுய வளர்ப்பு பயிற்சியில் ஈடுபடுவதன் வாயிலாகவே, நாம் மார்க்சிய லெனினியத்தை தோற்றுவித்தவர்களின் நம்பகமான மற்றும் தகுதி வாய்ந்த மாணவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள முடியும். மார்க்சிய லெனினியத் தத்துவத்தில் சுய வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
மார்க்சிய லெனிய நிலைப்பாட்டில் ஊன்றி நின்று, அதன் கருத்து நிலையையும் சிந்தனை முறையையும் கைக்கொண்டு, எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் ஆய்வு செய்வதிலும் கையாளுவதிலும் சுயவளர்ப்பு பயிற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். (சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி?, லியு ஷாவோகி, நூல் பக்கம் 27)
இந்தச் சமுதாயத்தையும் உலகையும் மாற்றியமைக்கும் பொறுப்பு நம்மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது: இந்த மாறுதலுக்கான இயக்கத்தின் இயங்கு சக்தியாக நாம்தான் இருக்கிறோம். எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிரான விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் போராட்டத்தின் வாயிலாக கம்யூனிஸ்டு களாகிய நாம்தான் சமுதாயத்தையும் உலகையம் மாற்றுகிறோம்; அதேவேளையில் நம்மை நாமே. மாற்றியமைத்தும் கொள்கிறோம்.
"அரசு அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்" பற்றிய மார்க்சின் தத்துவம் வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்குரிய புரட்சிகர பாத்திரம் குறித்த அவருடைய போதனை அனைத்தும் இரண்டற கலந்ததாய் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம்.
ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவ வர்க்கதிற்கு எதிரான பலாத்கரத்தின் ஒழுங்குமைப்புக்குரிய தனி வகை வடிவமான அரசு தேவைப்படுவதால் பின்வரும் முடிவுகள் தானாகவே எழுகிறது: முதலாளித்துவ வர்க்கத்தினர் தமக்கென உருவாக்கிக் கொண்ட அரசுப் பொறியமைவை முதலில் ஒழித்திடாமல் தகர் தெரியாமல் இத்தகைய ஒழுங்கமப்பினை உருவாக்க முடியுமென நினைக்கலாமா? கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நேரடியாக இந்த முடிவுக்கே இட்டு செல்கிறது என்கிறார் லெனின் தனது அரசும் புரட்சியும் நூலில் (பக்கம் 37-39).
இலக்கு 61 இணைய இதழ் PDF வடிவில் இந்த இணைப்பில் அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்