லெனினியத்தின் இன்றைய தேவை-1

‘’வர்க்கப்பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும்வெளியீடுமே அரசு’’இதுதான் அரசு பற்றிய மிகத்தெளிவான மார்க்சியகோட்பாடாகும். எங்கே, எப்பொழுது எந்தளவுக்குவர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம்காண முடியாதவை ஆகின்றனவோ,அங்கே அப்பொழுது, அந்தளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானதுவர்க்கப் பகைமைகள் இணக்கம்காணமுடியாதனவாய் இருத்தலை நிருபிக்கிறது என்பது மார்க்சியம் ஆகும். இதிலிருந்து நாம் வந்தடையும் முடிவுஎன்ன? அரசு ஒன்று இருந்தால்அங்கே வர்க்கங்கள் இருக்கிறது மேலும் அங்கே வர்க்கப்பகைமைகள் நிலவுகின்றது என்பது பொருளாகும்.

மார்க்சியம் கூறும் இந்த உண்மையைதிருத்தி, புரட்டிடும்முதலாளித்துவவாதிகளும், சீர்திருத்த திருத்தல்வாதிகளும் இரண்டுவகையாகமார்க்சியத்தை திருத்துகிறார்கள். எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டங்களும் உள்ளனவோஅங்கே மட்டும் அரசு இருக்கிறதுஎன்ற புறநிலை உண்மையை மறுக்கமுடியாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். எனினும் இந்த வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காண்பதற்காகவே அரசு உருவாகிறது என்றும் அரசானது பகைவர்க்கங்களுக்குஇடையே இணக்கம் காண்பதற்கான நிறுவனம்தான் அரசு என்று வாதிடுகிறார்கள். ஆனால் பகை வர்க்கங்களுக்கு இடையே இணக்கம்காண முடிந்திருந்தால் அரசு என்பதே தோன்றுவதற்கு அவசியமில்லை என்பதுதான் மார்க்சின் கருத்தாகும்.

அரசுப்பொறியமைவை‘’அழித்தொழிப்பதற்காக’’1852 ஐக் காட்டிலும் தற்போது ஒப்பீடில்லாப் பெரிய அளவில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ‘’எல்லாச் சக்திகளும் ஒன்றுகுவிக்கப்படுவதை’’ நோக்கி உலக வரலாறு நடைபோடுகிறது என்பதில் ஐயமில்லை. அழித்தொழிக்கப்படும் அரசுப் பொறியமைவின் இடத்தில் பாட்டாளி வர்க்கம் அமர்த்தப் போவது என்னவென்பதை பாரிஸ் கம்யூன் அளித்திடும் படிப்பினை மிக்க விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

சமூகத்தை மாற்றுவதற்கான வழிகளில் ஒன்றுதான் புரட்சி என்ற கருத்தை பாரிசில் நடைபெற்ற புரட்சிகளின் அனுபவத்திலிருந்து காரல்.மார்க்ஸ் முடிவுக்கு வந்தார். புரட்சிதான் சமூகத்தில் தேவையில்லாத அல்லது சமூக வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள, சமூகத்திற்கு எதிராக வுள்ள அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி தீயவற்றை அழிப்பதில் ஆர்வமுள்ள சமூக சக்திகளை அதாவது வர்க்கங்களை ஒன்றுதிரட்டி அழிக்கிறது என்றார் கா.மார்க்ஸ். அவரது இந்தக் கருத்துக்கு நடைமுறை சான்றாக பாரிசில் நடைபெற்ற புரட்சியை கா.மார்க்ஸ் ஆதாரமாகக் காட்டுகிறார்.ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சமூகத்தில் பல்வேறுவிதமான அநியாயங்கள் நடக்கலாம். ஆனால் இந்த அநியாங்கள் எதையும் புரட்சிகர சக்திகள் அதாவது வர்க்கங்கள் ஒன்றுதிரண்டு ஒரு புரட்சியின் மூலமாக அல்லாது வேறு எந்த முறையிலும் ஒழிக்க முடியாது.

கீழ்காணும் பல்வேறு தேடல் ரசிய புரட்சியை லெனின் எப்படி சாதித்தார் என்பதற்கானவை வாசிக்க விளைவோர் அந்த இணைய பகுதியை அழுத்தி உள் சென்று வாசிக்க கருத்திடவும் தோழர்களே 


அரசு பற்றி மயக்கத்தில் உள்ளவர்களுக்கு 

ரசிய புரட்சியும் லெனினியமும்

லெனின் எழுத்துகள் ஓர் தேடல்

லெனினியத்தின் அவசியம்

லெனினியம் கற்போம்









இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்