நான் மார்க்சியம் கற்றுக் கொள்ள தொடங்கிய பொழுது சேகரித்தவையே இவை
அரசு பற்றி மயகத்தில் உள்ளவர்களுக்கு சி.பி
தினம் கிளப் அவுஸ் விவாதங்களை கேட்கும் பொழுது பல அப்பாவிதனமான அவர்களின் பேச்சை கேட்கும் பொழுது உண்மையில் வருத்தமாக உள்ளது அவர்கள் பேசும் மார்க்சியம் என்னவென்று அவர்களுக்கும் புரிவதில்லை வெறும் உணர்ச்சி பூர்வமாக உள்ளனர் அவர்களின் சில நிலைப்பாட்டை விமர்சிப்பதோடு உண்மையில் நமது மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றை இவர்கள் கிரகிக்கவே இல்லை அதனையும் பேசுவோம் இந்தப் பதிவில்.இங்குள்ள சிலரின் கோட்பாடு மார்க்சியம் ஒவ்வொருவரின் தேவையைக் கொண்டு தனித்தனியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.அதாவது மார்க்சியத்தில் ரஷ்யா மார்க்சியம் சீனா மார்க்சியம் தமிழகமார்க்சியம் என்று நிறுவ நினைக்கின்றனர்.மார்க்சியம் குறிப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டுமேயன்றி அதாவது சூழ்நிலை ஏற்ப ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை. ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால பாதை மேற்கொள்ளப்பட்டது குடியேற்ற அரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் பாதை மேற்கொள்ளப்பட்டது.மார்க்சியம் வரலாற்று வழியில் முதலாளியத்துக்குச் சவக்குழி தோண்டி, வர்க்கங்களும் மனிதனை மனிதன் சுரண்டும் நிலையும் இல்லாத கம்யூனிச சமுதாயத்தைக் கட்டுவது தான் சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையென வரையறுத்துக் கூறிய மார்க்சும், ஏங்கெல்சும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்வதற்குகந்த மிகச் சிறந்த வழியையும் சுட்டிக் காட்டினர். அதாவது, தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்று, விவசாய வர்க்கத்துடன் நெருக்கமான கூட்டேற்படுத்திக் கொண்டு, முதலாளி வர்க்கத்தின் அரசியந்திரத்தை உடைத்து நொறுக்கப் புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்த வேண்டும்; பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவ வேண்டும்; பாட்டாளிய ஆட்சியைப் பாதுகாக்கவும் கம்யூனிச நெறிகளின் அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கவும் இவ்வரசை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பானது, முக் கியமாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத் தின் இந்த மாபெரும் இலட்சியத்திற்காகத்
தான் உருவாக் கப்படுகிறது. அடிைமைத்தளை களை உடைத்தெறியவும் பழைய உலகைத் தூக்கியெறியவும் கிளர்ந்தெழுகின்ற பாட்டாளி வர்க்கமும், புரட்சிகர மக்களும், புரட்சி இயக்கத்தினூடே, தமது சொந்த இராணுவ அமைப்பைக் கட் டாயம் கட்டியாக வேண்டும். ஏனெனில் ஒரு பெளதீகச் சக்தியை மற்றொரு. பெளதீகச் சக்தியினால்தான் வெல்ல முடியும்; முதலாளிகளின் ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவுதல் என்ற வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும். ஆளும் வர்க்கமும் வரலாற்று அரங்கத்திலிருந்து தானாக வெளியேறச் சம்மதிக்காது. நிலைமை இப்படி இருக்க இந்த அமைப்பு முறையை கேள்வி கேட்காது இதற்குள்ளே சிக்குண்டு கிடக்க சொல்லும் இவர்கள் மார்க்சியவாதிகளா என்பதே என் கேள்வி.....
அரசு பற்றிய மார்க்சிய
கோட்பாடுகளை தெரிந்துக் கொள்வோம் –சி.ப
'அரசு’ என்பது எவ்வாறு தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தது என்பதற்கு
வெவ்வேறு கோட்பாடுகளின்
மூலமாக பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.
வரலாற்று வளர்ச்சியின்
ஒவ்வொரு காலகட்டத்திலும்
அரசு பற்றிய கோட்பாடு ஆளும் வர்க்கங்களுக்குச்
சார்பானதாகவும் அத்தகைய வர்க்கங்களின் ஆட்சி உரிமையை நியாயப்படுத்துவதாகவும் இருந்து வந்துள்ளதைக்
காணமுடிகிறது.
அரசு தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றும் அது தெய்வீகத்துடன்
தொடர்புடையது என்றும் மக்கள் அனைவரும் அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் பயபக்தியுடன் பரப்புரை செய்யப்பட்டு
வந்துள்ளதையும் நாம் கண்டிருக்கின்றோம்.
அரசு அனைத்து மக்களினதும்
தேவைக்கும் நன்மைக்கும்
உரிய நடுநிலையானதும்
நீதியை பாதுகாக்கும்
தூய்மையான நிறுவன வடிவமென்றும் கருத்துருவக்கட்டமைப்பு
தொடர்ந்து பேணப்பட்டுக்கொண்டே வருகிறது.
மனித குலத்தின் வரலாற்று
வளர்ச்சியில் தனிச்சொத்துடமையின்
தோற்றம் மனிதர்களிடையே
ஏற்றத்தாழ்வினையும் வர்க்கங்களையும்
உருவாக்கியது. இத்தகைய வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளும் போராட்டங்களும்
பொதுவாகி போனது. மனித குலத்தின் வரலாறு வர்க்க போராட்டங்களின் வரலாறாகிக் கொண்டது.
இந்த வர்க்க முரண்பாட்டுச்
சூழலில் (ஒருவர்க்கம்
மற்றைய வர்க்கத்தை
அடக்கியாள வேண்டிய தேவை ஏற்பட்டது).
அத்தேவையை நிறைவு செய்வதற்கு ஒரு 'கருவி அவசியமாகியது. அதுவே அரசு எனும்
வடிவில் உருவாக்கப்பட்டது-
என்று மகத்தான மேதைகளான கார்ல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கெல்சுமே
விஞ்ஞான அடிப்படையிலான
வரலாற்றுப் பொருள் முதல்வாத ஆய்வின் மூலமாக அரசு பற்றிய தெளிவான கோட்பாட்டை
முன்வைத்தனர்.
உலகில் முதலாளித்துவத்திற்கு மாறிய முதலாவது நாடாகிய இங்கிலாந்திலேயே
இரண்டும் முதலிற் தோன்றின.
அரசர்களும், தளபதிகளும் யுத்தத்திற்குச்
சென்றபோதெல்லாம் கூலிப் படையினரைத் திரட்டினர். யுத்தத்தின்
முடிவில் படைவீரர்கள்
தமது முன்னைய தொழிலுக்குத் திரும்பினர். இவ்வாறே இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையேயான
நூற்றாண்டு யுத்தம் அல்லது புனித யுத்தம் நடத்தப்பட்டது. படைக்கு ஆள் திரட்டும் அதிகாரி முரசுடன்
சந்தைகளில் போர் வீரர்களைத் திரட்டும் காட்சிகளை
திரைப்படம் பார்ப்பவர்கள்
கண்டிருப்பார்கள். மூன்றாவது
வில்லியத்திற்கு முந்திய காலத்தில் நிரந்தர இராணுவம்
இல்லையென்பதை இது திட்டவட்டமாக நிரூபிக்கின்றது. இன்று நிலையான இராணுவம் இல்லாத நாடே கிடையாது.
அவ்வாறே பொலீஸ் படை இல்லாத நாடே இல்லை. அப்படியானால் எப்பொழுது இது முதன் முதலில் தோன்றியது?
18 ஆம் நூற்றாண்டில் முன் அரைப் பகுதியில் பிற்காலத்தில்
இங்கிலாந்தில், சர் ரோபேர்ட் பீல் உள்நாட்டு
மந்திரியாக இருந்தபோது
தோன்றியது. ஒரு பொலீஸ் படையை தோற்றிவைப்பதற்கான
மசோதாவைப் பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்தது அவரேயாகும்.
வர்க்கங்களற்ற புராதன பொதுவுடைமைச்
சமுதாயத்தில் அரசாங்க இயந்திரம் இருக்கவில்லை. அப்பொழுது
வர்க்கங்களற்ற சமுதாயம்
இருந்தமையால் ஒரு வர்க்கத்தை வேறோரு வர்க்கம்
அடக்கி வைத்திருப்பதற்குத்
தேவையான காரணம் ஏற்படாததேயாகும்.
புராதான பொதுவுடைமைச் சமுதாயத்தின்
கால கட்டத்தில்
அரசாங்க இயந்திரத்தைச்
சிறிதளவாவது ஒத்ததாக ஏதும் இருக்கவில்லையென்பது மிகவும் தெளிவாகின்றது.
எதிர் எதிர் வர்க்கங்கள் ஒரு வர்க்கத்தை ஒரு வர்க்கம் தனக்குக் கீழ்க் கொண்டுவரும் நிலைக்கு வளர்ச்சியடையும்போதே ஓர் அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை ஏற்படுகின்றது. அவ்வாறான முதற் சமுதாயம் அடிமைச் சமுதாயமாகும். அதன் சிறந்த உதாரணங்களை கிரேக்கத்திலும் உரோம சாம்ராஜ்யத்தின் காலப்பகுதியிலும் காணலாம். இந்த சமுதாயம் அடிமையை வைத்திருப்போன் - அடிமை என்ற எதிர் எதிர்வர்க்கங்களாகப் பிளவுபட்டிருந்தது. வல்லமைமிக்க உரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஸ்பார்ட்டகஸ் தலைமை தாங்கிய மிகப் பிரபல்யம் வாய்ந்த கிளர்ச்சிகள் உட்பட பல அடிமைக் கிளர்ச்சிகளை இந்தச் சமுதாயம் கண்டது.
மார்க்ஸ் விளக்கியது போன்று அரசாங்கமென்றால் ஒருவர்க்கும் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான
ஒரு சாதனமாகும்.
அது வர்க்கங்களுக்கு
மேலே, சமுதாயத்திற்கு
மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல.
சுரண்டும் வர்க்கங்கள்,
சுரண்டப்படும் வர்க்கங்களை
அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான
ஓர் அடக்குமுறைச்
சாதனமே அரசாங்கமாகும்.
சுரண்டும் வர்க்கங்கள்,
சுரண்டப்படும் வர்க்கங்களை
கீழே வைத்திருப்பதற்காகப்
படிப்படியாகக் கட்டப்பட்ட
சாதனமே அது.
வர்க்க சமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் சுரண்டும் அமைப்புமுறை
இருக்கும்வரை அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும்.
ஆங்கில ஏகாதிபத்தியத்தால் பயிற்றுவிக்கப்பட்ட
இராணுவ, பொலீஸ் அதிகாரிகளும் அடிப்படையில் அவ்வாறே இருக்கின்றனர். அவர்கள் அதே எஜமானர்களுக்கு, அதே நலன்களுக்குச்
சேவை செய்கின்றனர்.
அந்த மனிதர்கள்
தான் உண்மையில்
ஆட்சி செய்கிறார்கள்.
இவ்வாறான ஓர் ஒடுக்குமுறை
முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் இல்லாமல் சுரண்டல்
ஒரு நிமிடத்திற்குமேல்
நிலைக்காதென்பது நிச்சயமாகத்
தெளிவாகின்றது. ஆயுதப் படையினரதும், பொலீஸ் படையினரதும்
கரங்களில் துப்பாக்கியில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள்
சுரண்டப்படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது.
அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள்.
அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள். அவர்களின்
கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது. அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள்
சுரண்டலுக்கு ஒரு நாள்கூட இடங்கொடுக்கமாட்டார்கள். எவ்வாறாயினும்,
பெரும்பாலான தொழிற்சாலைகளில்
தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு
நூறுக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலைமைகளில்
எவ்வாறு அவர்களால்
இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ளவர்களைப் பலவந்தப்படுத்திச்
சுரண்ட முடிகின்றது.
அவர்களின் காவல் நாய்களான இராணுவம், பொலீஸின்
கரங்களில் உள்ள துப்பாக்கிகளின் சக்தியே அது. அதனாலேயே தோழர் மாசேதுங்,
அரசியல் அதிகாரம்
துப்பாக்கிக் குழலிலிருந்து
பிறக்கின்றது என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் உணர்ந்துகொள்ள
வேண்டும் என நமக்குக் கற்றுத்தந்தது நூறுவீதம்
சரியாகின்றது.
அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சியக்
கோட்பாட்டை இது இரத்தினச் சுருக்கமாகத் தருகின்றது.
மார்க்சிச - லெனினியத்தின்
சாரம் அதுவே.
இந்தக் துப்பாக்கிகள் கைமாறும்
போதே, சுரண்டப்பட்ட
வர்க்கங்கள் புரட்சிகரப்
பலாத்காரத்தினால் இந்தக் துப்பாக்கிகளைப் பறித்துத் தொழிலாளர்களினதும்
அவர்களினது நேச அணிகளினதும் கைகளில் அவற்றை ஒப்படைக்கும்போதே அவர்கள் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள்.
வேறு எந்த மார்க்கமும் இல்லை. மற்றவை யாவும் தொழிலாள வர்க்கத்தை
ஏமாற்றும் ஒரு திட்டமிட்ட முயற்சி அல்லது போலியாகும்.
இந்த உண்மையை மறைப்பதற்கும்,
மக்களைக் குழம்பச்
செய்து அவர்களின்
கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே முதலாளிகளும் மற்றைய பிற்போக்குச்சக்திகளும் பாராளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையைக் கண்டுபிடித்தனர்.
பாராளுமன்றம் வெறுமனே ஏமாற்றும் இடம்தானே அன்றி ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்கான
இடமன்று.
பாராளுமன்றம் மூலதனத்தின் வெளிப்படையான சர்வதிகாரத்தை
மறைப்பதற்கான ஒரு திரை, ஒரு அணிகலனுமாகும்.
அது மக்களை மடையர்களாக்குவதற்கும், பிளவு படுத்துவதற்கும்,
பாராளுமன்றம் மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை
மழுங்கடிப்பதற்கும், ஆயுதப் படையிற்தான் உண்மையான அதிகாரம்
இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து
திசைதிருப்புவதற்கும் முயற்சிக்கின்றது.
ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குப் பதில் வெறும் சொற்களால் போராட்டம் நடத்தும்
மாற்று யோசனையை கூற முயற்சிக்கின்றது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம்மீது கொண்டிருந்த பெரும் அன்பினால்
வாக்குரிமை வழங்கப்பட்டதா? இல்லை. தாம் என்ன செய்கின்றனர்
என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். பொது வாக்குரிமையைக்
கொடுப்பதன் மூலம் வளர்ந்து வரும் ஏகாதிபத்திய
எதிர்ப்பு ஐக்கியத்தை
இன ரீதியிலும்,
சாதி ரீதியிலும்,
வேறு வழிகளிலும்
பிளவுபடுத்த அவர்கள் எண்ணினர். அவர்களின் எண்ணங்கள்
பொய்ப்பிக்கப்படவில்லை. பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியமும் அவர்களது
அடிவருடிகளும் சகல மக்களையும் ஆட்சி செய்து வருகையில் அவர்களோ சாதி, மத
இன ரீதிகளில்
பிளவுபட்டிருந்தனர்.
நமது நாட்டு மக்கள் இதுவரை எத்தனை
தடவைகள் வாக்களித்தனர்.
இந்த பாராளுமன்றம்
சட்டமன்றம் மூலம் சட்டமியற்றும் மெத்த படித்த ஏன்
ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ்
கற்ற திறமைமிக்கோரைப்
பாராளுமன்றம் அனுப்பினர்.
இந்த மனிதர்களும்
பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும்
திறமையாக சொற்பொழிவுகளை
நிகழ்த்தினர்.
ஆனால், இறுதி முடிவுதான்
என்ன? அன்றிலிருந்து இன்று வரை பாராளுமன்றத்திற்கு வெளியே நிலவிய உழைக்கும் மக்களைச்
சுரண்டும் முறையானது
எந்த அளவிலாவது
குறைக்கப்பட்டுள்ளதா? திட்டவட்டமான
பதில் இல்லை என்பதேயாகும். ஏனெனில் சுரண்டலைப்
பாராளுமன்றம் பாதுகாக்கவில்லை.
பாராளுமன்றத்திற்கு வெளியே சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவ
அரசாங்க இயந்திரமே
சுரண்டலைப் பாதுகாக்கின்றது.
பாராளுமன்றத்தில் நடைபெறும்
நாடகமாவது Musical chair விளையாட்டை
ஒத்திருக்கின்றது. கட்சி மாறுகிறது ஆம் ஆட்சி மாறுகிறது ஆனால் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர்,
சுரண்டலின் தரத்திலென்றாலும்
ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? இல்லை. அதே சுரண்டல் தொடர்கின்றது. செல்வந்தர்கள்
மேலும் செல்வந்தர்களாகின்ற
ஏனெனில், முதலாளித்துவப்
பராரளுமன்ற ஜனநாயகத்தின்
மூலம் ஏற்படுத்தப்பட்ட
அரசாங்க மாற்றங்கள்
பொருளாதாரக் கட்டுக்கோப்பில்
அல்லது அதைப் பாதுகாக்கின்ற முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்திலோ எந்தவித அடிப்படைமாற்றமெதுவையும் கொண்டுவரவில்லை.
அதனால்தான் ஒவ்வொரு புரட்சியாளனும்
இப்போதுள்ள ஏகாதிபத்திய
பெரும் முதலாளித்துவ
பொருளாதாரக் கட்டுக்கோப்பை
நொருக்காமலும், அத்துடன்
அதன் காவல்நாயாக
விளங்கும் ஒடுக்குமுறை
அரசாங்க இயந்திரத்தைப்
பலாத்காரத்தினால் உடைக்காமலும்,
முதலாளித்துவ பாராளுமன்ற
ஜனநாயக நாடகத்தின்
மூலம் பதவிக்கு
வரும் எந்த அரசாங்கமும் மக்களின் அடிப்படைப்
பிரச்சினைகளைத் தீர்த்து
வைக்கமாட்டாது என்ற உண்மையை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள
முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத்
தமது நலன்களுக்காக
உபயோகிப்பதும் சாத்தியமில்லை.
அரச இயந்திரம்
முதலாளித்துத்தின் நலன்களைப்
பாதுகாக்கக் கட்டப்பட்டது.
அதைத் தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்கப்
பயன்படுத்த இயலாது. அதனால் தான் மார்க்ஸ்,
லெனின், மாசேதுங்
ஆகியோர் முதலாளித்துவ
அரசாங்க இயந்திரம்
நிச்சயமாத நொருக்கப்படல்
வேண்டும் என வலியுறுத்திக் கூறினர். அதனைச் சீர்திருத்தம்
செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் அமைப்பில்
சீர்திருத்தம் செய்யவோ முடியாது. முதலாளித்துவ அரசு இயந்திரம் இருக்கவேண்டும் அல்லது பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம்
இருக்க வேண்டும்.
இவற்றிற்கு இடைப்பட்டதாக
ஒன்றும் இருக்க முடியாது. அதனால்தான் முதலாளித்துவ
அரசு இயந்திரத்தை
பலாத்காரத்தினால் நொருக்கி
அதனிடத்தில் பாட்டாளிகளின்
அரசு இயந்திரத்தை
தொழிலாளிவர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்தவேண்டியது
பொறுப்பென மார்க்சிய
- லெனினிய - மாவோ சிந்தனை போதிக்கின்றது. பாட்டாளிகளின்
அரசாங்க இயந்திரத்தை
மார்க்ஸ் பாட்டாளிவர்க்க
சர்வாதிகாரம் என விபரித்தார்.
இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. அக்டோபர் புரட்சியும்
சீனப் புரட்சியும்
இதற்கு உதாரணங்களாகும்.
இந்த இரண்டிலும்
பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது. பழைய அரசு இயந்திரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உபயோகிக்கும்
முயற்சி நடைபெறவில்லை.
ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளின்
ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடி நகரத்தைக் காப்பாற்றுமாறு லெனின் கிராட் தொழிற்சாலைகளிலிருந்த தொழிலாளர்களுக்கு
லெனின் அறைகூவல்
விடுத்து துப்பாக்கிகளை
அவர்களுக்கு வழங்கியதன்
மூலமே சோவியத் செஞ்சேனை உருவாகியது.
அவர்கள் பழைய நீதித்துறையை
தொடர்ந்தும் வைத்திருக்கவோ
அல்லது நீதித்துறையின்
சுதந்திரத்தைப் பற்றியோ அதிகம் புலம்பிக்கொண்டிருக்கவில்லை.
சீனாவைப் பொறுத்தமட்டில் விடயம் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகவுள்ளது. சீனாவை முழுமையாக விடுதலை செய்யுமுன்னர்
சீனக் கம்யூனிஸ்டுகள்
சீனப் புரட்சியின்
தொட்டில் என இன்று அழைக்கப்படும் யெனானில்
13 வருடங்கள் தோழர் மாவோ தலைமையில் இருந்தனர்.
புதிதாக விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களின் பரிபாலனத்தை
மேற்கொள்ளும் பொருட்டு
மக்கள் விடுதலைச்
சேனையின் பின்னால்
செல்வதற்காக ஒரு புதிய பாட்டாளி வர்க்க பரிபாலன அமைப்பை இங்கே பயிற்றுவித்துக் கட்டி அமைத்தனர்.
இது ஒரு முழுமையான புதிய பரிபாலன அமைப்பு. அது பழைய அமைப்புடன் எதுவித தொடர்பையோ,
உறவையோ வைத்துக்கொளாதது
மட்டுமல்ல, பழைய ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தை
அடித்து நொருக்குவது
என்ற அடிப்படையில்
அமைக்கப்பட்டது.
இது நடைபெறாத பட்சத்தில்,
1919இன் ஆரம்பத்தில்
ஜேர்மனியப் புரட்சியைப்போல்,
புரட்சியை எதிர்ப்புரட்சி
சுலபமாக அடக்கிவிடும்.
புரட்சியின் வெற்றிக்கு முதலாளித்துவ
ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரம் அடித்து நொருக்கப்படுவது
எவ்வளவு அவசியமோ, அதே போல புதிய பாட்டாளி வர்க்க அரசதிகாரம்
நிலைத்து நிற்பதற்கு
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியமாகும். லெனின் காலத்தில் அராஜக வாதிகள் எனப்பட்ட ஒரு பகுதியினர்
முதலாளித்துவ ஒடுக்குமுறை
அரசு அதிகாரத்தை
புரட்சிமூலம் நிர்மூலமாக்கியபின்
ஒரு பாட்டாளி
வர்க்க அரசதிகாரம்
வேண்டியதில்லை எனக் கூறினர். இந்தக் கோட்பாட்டின்
பிரயோசனமற்ற தன்மையை லெனின் தனது பிரசித்தி
பெற்ற “அரசும் புரட்சியும்” என்ற நூலின் ஒரு பகுதியில் விமர்சித்திருக்கின்றார். சந்தேகத்திற்கு உரிய வகையில் இந்தக் கோட்பாட்டை
ஆதரிப்பவர்கள்
கிட்டத்தட்ட ஒருவருமே இல்லையெனக் கூறலாம். ஆனால், நாம்
பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரம்
பாட்டாளி வர்க்க சர்வாதிகார உருவத்தில் முதலாளித்துவ
சர்வாதிகாரத்தின் இடத்திற்கு
வர வேண்டும்
என்பதை விளங்கிக்கொள்ள
வேண்டும்.
லெனின் குறிப்பிட்டதுபோல, வெற்றியடைந்த
சகல புரட்சிகளும்
சர்வாதிகாரத்தால் பின் தொடரப்பட்டன. ஏனெனில் தோற்கடிக்கப்பட்ட
வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் இல்லை அல்லது இசைந்து போனதும் இல்லை. அது எப்பொழுதும்
அதிகாரத்தை மீண்டும்
பெறுவதற்காக சதி செய்தும், சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டும்
இருக்கும். இம்மாதிரியான
சகல முயற்சிகளும்
ஓர் உருக்குப்
போன்ற சர்வாதிகாரத்தினால்
மட்டுமே அடக்கப்பட
முடியும். அதனால்தான்
தொழிலாளி வர்க்கமும்
அதன் நேச அணிகளும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை அழித்ததும் அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதன்
மூலம் தோற்கடிக்கப்பட்ட
வர்க்கங்களினால் தூக்கியெறியப்படாமல்
இருக்கவும், புரட்சியைப்
பாதுகாக்கவும் முடியும்.
இதைச் செய்யத் தவறினால் புரட்சியின் வெற்றி குந்தகமடையும்.
1848 இல் கம்னியூஸ்ட் அறிக்கையை எழுதியபோது
மார்க்சும், எங்கெல்சும்
கூட முதலாளித்துவ
அரசியல் அதிகாரத்தின்
இடத்தை எவ்வாறு நிரப் புவது என்பதில்
ஓர் இறுதி முடிவை எடுக்கமுடியாதிருந்தனர். 1871இல் பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்து
இரண்டு நாட்களுக்குள்
'பிரான்சில் உள்நாட்டு
யுத்தம்’ என்ற தலைப்பையுடைய அவரது பிரசித்தி
பெற்ற நூலில் மார்க்ஸ், இதனை ஆராய்ந்த
அனுபவங்களைக் கொண்டே, அவரால் ஒரு தீர்மானத்திற்கு
வரக்கூடியதாயிருந்தது. மார்க்ஸ்
இறப்பதற்கு முன் இறுதிக்கூட்டு முன்னுரையாக கம்யூனிஸ்ட்
அறிக்கைக்கு செய்யப்பட்ட
ஒரேயொரு திருத்தத்தை
அவர் சேர்த்துக்
கொண்டார்.
வேறு ஒரு கேள்வியெழுகின்றது.
அரசாங்கம் எந்தக் காலத்திலும் இருந்து வருமா? வர்க்கங்களும், வர்க்கமுரண்பாடுகளும் தோன்றியதன்
விளைவாக அரசாங்கம்
தோன்றியதுபோல வர்க்கங்களையும்
வர்க்க முரண்பாடுகளையும்
அழிப்பதோடு உருவாகும்
வர்க்கங்களற்ற சமுதாயத்தில்
அரசாங்கம் இறுதியில்
‘உதிர்த்து’ விடும் என
ஏங்கெல்ஸ் பதில் கூறுகிறார். அதாவது ஒடுக்குமுறை
என்ற செயல் தேவையற்றது ஆகிவிடும்போது அது இல்லாமல் போய்விடும்.
இது மிகவும் சரியானதே.
ஆனால், ஒரு வர்க்கபேதமற்ற சமுதாயத்தின் சூழலில் மட்டுமே அரசாங்கம் ‘உதிர்ந்து”
விடும். அதற்கு முன்பு அல்ல. ஆனால் வர்க்கங்களும், வர்க்க முரண்பாடுகளும்
சோசலிசப் புரட்சி நடைபெற்றவுடன் மறைந்து விடுவதில்லையென்று
தோழர் மாவோ குறிப்பிட்டுள்ளார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கான
மாற்றத்தின் வரலாற்றுக்
கால கட்டம் ஒரு கணிசமான நீண்டகாலமாகும்.
இந்த முழுக் கால கட்டத்தில் வர்க்கங்களும்,
வர்க்க முரண்பாடுகளும்
இருக்கும். ஆகவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
இருப்பது மட்டுமல்லாமல்
பலப்படுத்தப்படவும் வேண்டும்.
சோசலிச அரசாங்கம்
உள்நாட்டு, வெளிநாட்டு
எதிரிகளுக்கெதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைப்படும் இக்காலகட்டத்தில்
வர்க்கப் போராட்டங்கள்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரச்
சூழலில் இடம்பெறும்.
சீனாவின் மகத்தான பாட்டாளி
வர்க்க கலாசாரப்
புரட்சி ஒன்றுதான்
இதற்கு ஒரேயொரு உதாரணமாகும். தோழர் மாவோ அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தலைமை தாங்கப்பட்ட இந்தக் புரட்சி மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரச் சூழ்நிலைகளில் எவ்வாறு வர்க்கப் போராட்டங்களை நடத்தி தலைமை தாங்குவது எனக் கண்டோம்.
வர்க்கங்கள் அற்ற கம்யூனிச
சமுதாயத்தை அடையுமுன்
நாம் இதுபோன்ற
பல புரட்சிகளை
அநேகம் காண்போம்.
அப்போதுதான் அரசாங்கம்
உதிர்ந்து போவதை எதிர்ப்பார்க்கலாம். நாம்
மீண்டும் அதே இடத்துக்கு திரும்புவோம்.
ஆனால், இது சுற்று வளர்ச்சியின் மிக உன்னதமான உயர்ந்த கட்டமாக அமையும்.
இதிலிருந்து நமக்குத் தெரிந்த அரசாங்கமானது ஒரு குறிப்பிட்ட
வரலாற்றுச் சூழலில் தோன்றி அந்தச் சூழல் அற்றதும் மறைந்துவிடுகிறது. அரசாங்கமென்பது
எப்பொழுதும் இருந்ததுமல்ல
அல்லாவிடில் முடிவில்லாததுமல்ல.
வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு வர்க்கத்தைப் பிறதொரு வர்க்கம்
அடக்கியாள்வதற்காகத் தோன்றி பின்னர் தேவையற்றதும் இல்லாமல்
போய் விடுகிறது.
ஆகவே, அரசாங்கமென்பது
ஒரு வர்க்கத்தைப்
பிறதொரு வர்க்கம்
அடக்குவதற்கான கருவியாகுமென்று
குறிப்பிட்டால் அது சரியானதே. அவ்வாறான ஒரு அரசு இயந்திரம் இல்லாவிடில்
இக்காவல் நாய்களின்
கரங்களில் துப்பாக்கிகள்
இல்லாமல் எந்த ஒரு சுரண்டும் வர்க்கமாவது
சுரண்டப்படும் மக்களைத்
தொடர்ந்தும் சுரண்டமுடியாது.
அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சியக்
கோட்பாடு இதுவாகும்.
இதை ஏற்றுக்கொள்பவர்
மார்க்சிய - லெனினிய புரட்சிவாதிகளாவர். இதை நிராகரிப்பவர்கள்
நவீன திரிபுவாதிகளும்
சீர்திருத்தவாதிகளும், மற்றும் பலவகைப்பட்ட துரோகிகளும் ஆவர். அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சியக்
கோட்பாட்டை முழுமையாக
ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாது
விடுவதுமே புரட்சிவாதிகளை
திரிபுவாதிகளிடமிருந்தும் சீர்திருத்தவாதிகளிடமிருந்தும் பிரிக்கும் எல்லைக்கோடாகும்.
ஆரம்பத்தில் நமது பலம் எதிரியின் பலத்திலும் பார்க்க பலவீனமுடையாதாயிருக்குமானால், எதிரியின்
பலம்மிக்க இடத்தில்
நாம் குறிவைப்பது
பலனற்றதாகுமென்று தோழர் மாவோ குறிப்பிட்டுள்ளார். நமது தலைகள் நொருக்கப்படுமென்பது பெரும்பாலும்
சாத்தியமாகும்.
மறுபுறத்தில் சரியான தந்திரோபாயத்தைப்
பின்பற்றி லெனின் குறிப்பிட்டதுபோல, வெற்றியடைந்த சகல புரட்சிகளும் சர்வாதிகாரத்தால் பின் தொடரப்பட்டன. ஏனெனில் தோற்கடிக்கப்பட்ட
வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் இல்லை அல்லது இசைந்து போனதும் இல்லை. அது எப்பொழுதும்
அதிகாரத்தை மீண்டும்
பெறுவதற்காக சதி செய்தும், சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டும்
இருக்கும். இம்மாதிரியான
சகல முயற்சிகளும்
ஓர் உருக்குப்
போன்ற சர்வாதிகாரத்தினால்
மட்டுமே அடக்கப்பட
முடியும். அதனால்தான்
தொழிலாளி வர்க்கமும்
அதன் நேச அணிகளும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை அழித்ததும் அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதன்
மூலம் தோற்கடிக்கப்பட்ட
வர்க்கங்களினால் தூக்கியெறியப்படாமல்
இருக்கவும், புரட்சியைப்
பாதுகாக்கவும் முடியும்.
தலைமையின்கீழ்
மக்களை அணி திரட்டுவது என்ற அடிப்படையில்
புரட்சிகரத்தளப் பிரதேசங்களை
அமைத்து, மக்கள் படையை அமைத்தும் பயிற்றுவித்ததும்
நிலைமை வேறொரு திருப்பத்தையடைகின்றது. இப்பொழுது எதிரிதான்
நம்மைத் தேடி வரவேண்டியுள்ளது. அவன் தனது முழுப்பலத்தையும் தன்னோடு கொண்டுவர
முடியாது. அத்துடன்
நாம் அதிக எண்ணிக்கையில் புரட்சிகரத் தளங்களை அமைக்க எதிரி தனது படைகளைப் பிளவுபடுத்த வேண்டி ஏற்படும். இவ்வாறு எதிரிக்குச்
சாதகமானதாகவும், மக்களுக்குச்
சாதகமற்றதாகவும் இருந்த நிலைம்ை எதிரிக்குச் சாதகமற்றதாகவும்,
மக்களுக்குச் சாதகமானதாகவும்
மாற்றப்படுகின்றது.
அதன் பின்னர் எமது கரங்களில் ஆரம்ப நடவடிக்கைகளை
வைத்துக்கொண்டு மக்கள் மட்டுமே செய்யக்கூடிய கெரில்லாப்
போராட்டங்கள் மூலம் எதிரியைத் தொந்தரவு செய்து எதிரியின் படைகளுடன் நீண்ட போராட்டங்களில் ஈடுபட்டு மக்களின்
படைகள் பலத்தின்
தரத்தில் எதிரியின்
படைகளைப் பலவீனப்படுத்த
வேண்டும். இந்த நிலைமை வளர்ச்சியடைந்து ஒரு கட்டத்தில் மக்கள் படைகள் கிராமப் பகுதியிலிருந்து நகரங்களைச்
சுற்றி வளைத்து அவற்றை விடுதலை செய்யும்.
இந்தக் கோட்பாடுதான் மக்கள் யுத்தமெனப்படும். இது மக்களை இலட்சோப இலட்சக் கணக்கில்
அணிதிரட்டி மக்கள் யுத்தத்தின் நீண்ட போராட்டத்தின்போது
எதிரியின் தற்காலிகப்
பலத்தை அகற்றிவிட
வேண்டுமென்பதைக் கோருகின்றது.
ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் தலைமைப் பாத்திரத்தை
வகித்து வெற்றிக்கு
வழிவகுத்த சீனப் புரட்சியின்அனுபவங்களிலிருந்து பெறப்பட்டதே
இந்தக் கோட்பாடாகும்.
சீனாவில் ஆயுதம்தாங்கிய
புரட்சி ஆயுதம்தாங்கிய
எதிர்ப்புரட்சியை எதிர்த்துப்
போராடுகின்றது. இது குறிப்பான முக்கிய அம்சங்களில்
ஒன்றாகும். அத்துடன்
சீனப் புரட்சியின்
சாதகமானவற்றுள் ஒன்றாகும்
என ஸ்டாலின்
சரியாகக் குறிப்பிட்டார்.

