இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1). வெகுஜனங்களிடையே கட்சிப் பணி. - லெனின். பாகம்-2
2). மார்க்சிய லெனினியத்தின் இன்றைய தேவை
3). மார்க்சிய லெனினிய தத்துவத்துவமும் இன்றைய பொருத்தப்பாடும்
4. உதிரி தொழிலாளர்களாக சுரண்டலுகேற்ற வகையில்
உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களிடத்திலுள்ள மனப்பாங்கையும் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொண்டு மக்களிடம் உள்ள மனப்பாங்கை புரட்சிகரமானதாக மாற்றுவதற்கு கம்யூனிஸ்டுகள் பாடுபட வேண்டும். உழைக்கும் மக்களின் உணர்வுகளை வளர்த்து புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றார் லெனின்.
ஆனால் இந்தியாவில் சோசலிச சிந்தனைமுறையை மக்களிடம் வளர்ப்பதற் கான பிரச்சாரப் பணியையே இதுவரை கம்யூனிஸ்டுகள்செய்யவில்லை. மார்க்சிய லெனினிய தத்துவத்தின் அடிப்படையில் புரட்சிகரமான திட்டம் போர்த்தந்திரம் அமைப்புக் கோட்பாடுகளையும் உருவாக்கவில்லை. இதன் அடிப்படையில் புரட்சியை நடத்துவதற்கான கட்சி இங்கு கட்டப்படவில்லை. இதற்கு மாறாக தான்தோன்றித்தனமாக கொள்கை முடிவுகளை எடுத்து பெயரளவிலான, அதாவது கட்சி என்று சொல்லமுடியாத அமைப்பை உருவாக்கி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் குறிப்பாக தலைகணம்பிடித்த குறுங்குழுவாதிகள் ஒருசிலபேரை திரட்டிக் கொண்டு புரட்சி என்று பேசி வாய்வீச்சாளர்களாகவலம்வருகிறார்கள். இவர்களில் யாரும் மார்க்சிய ஆசான்களது
போதனைகளை கற்றுக்கொள்ளவும் இல்லை, அணிகளுக்கு கற்றுக் கொடுக்கவும் இல்லை. மொத்தத்தில் புரட்சிகரமான கட்சியை கட்டும் நோக்கமும்
இலக்கு இணைய இதழ் 59 PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்
மார்க்சிய லெனினியத்தை கற்க இணைந்து செயல்புரிய அழைகிறோம் உங்களின் மார்க்சிய புரிதலை கட்டுரை வடிவில் அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.
அனுப்ப வேண்டிய இமெயில்விலாசம்- cpalani.cpalani@gmail.com
அல்லது வாட்சாப் எண்- 7010134299