தத்துவம் மற்றும் இந்திய தத்துவங்கள் பற்றி ஓர் தேடல் -2

 முந்தைய பகுதியின் தொடர்ச்சியே தோழர்களே

வர்க்கப் போராட்டத்தின் சாரமே

'தத்துவப் போராட்டம் என்பது அடிப்படையில் எதிர் வர்க்கங்களுக்கிடையே நடைபெற்ற போராட்டத்தின் சாரமே' என்கிறார் லெனின். இந்தியாவில் நடைபெற்ற இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற தத்துவப் போராட்டமும் வர்க்கங்களுக்கிடையேயான போராட்டம் தான். இந்தியாவில் நடைபெற்ற தத்துவப் போராட்டத்தில் கருத்து முதல்வாதத்தை எதிர்த்தவர்களை அழித்தது மட்டுமின்றி அவர்களின் கருத்துக்கள் அடங்கிய நூல்களும் அழிக்கப்பட்டன.

"இந்துமதம் சகிப்புத் தன்மை மிக்கது. பிற கருத்துக்களை மதித்து நடப்பது” என இந்துத்துவவாதிகள் கூறுவது கடந்த காலத்தில் நடந்த தத்துவப் போராட்டங்களையும் சனாதனவாதிகள் கடைப்பிடித்த அடக்கு முறைகளையும் மறுதலிப்பதாகும். மார்க்ஸியவாதிகள் இந்திய சிந்தனை மரபை உயர்த்திப் பிடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் வர்க்க ரீதியாக அதனை பேச வேண்டும்.

இயக்கவியலின் அடிப்படை அம்சங்கள்- பிரபஞ்சத்தைப் பார்ப்பதில் இரண்டுவிதக்கோட்பாடுகள் உள்ளன.

1).Metaphysics என்ற மாறாநிலைக்கோட்பாடு இயக்க நிலையைப் புறக்கணித்து அசையா நிலையை அங்கீகரிக்கிறது. மாறுதலைப் புறக்கணித்து ஒற்றை நிலையையே ஏற்கிறது. அதாவது இயற்கையும் சமுதாயமும் மனிதனும் தோன்றியதிலிருந்து மாறாமல் இருந்து வருகின்றன என்ற கண்ணோட்டம் இது. அதேபோல் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் தனித்தனியானவை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது.

2).Dialectics என்ற இயக்கவியல் கோட்பாடு, மாறா நிலைக்கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. இயக்கவியல் அனைத்துப் பொருட்களும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதாகக் கூறுகிறது. அனைத்துப் பொருட்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கருதுகிறது. ஒரு பொருளை ஆராயும் போது அந்தப் பொருள் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறது. செயல்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்கிறது. நிலைமாறாத் தத்துவத்திற்கு மாறாக இயக்கவியல் பார்வை அனைத்தையும் அவற்றின் இயக்கத் தன்மையில் வைத்துப் பார்க்கிறது; புரிந்து கொள்கிறது. இயற்கை, சரித்திரம், சிந்தனை எல்லாவற்றிலும் மாறுதலும் இயக்கமும் இருக்கின்றன. ”மாறும் என்ற விதியைத் தவிர மற்றவையெல்லாம் மாறிக் கொண்டேயிருக்கின்றன என்றார் மார்க்ஸ்.

முரண்பாடு

அனைத்தும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதற்கு அடிப்படையான காரணம் அனைத்துப் பொருட்களிலும் முரண்பட்ட அம்சங்கள் உள்ளடங்கியுள்ளதே. "இயக்கவியல் என்பதே இந்த முரண்பாடுகளை ஆராய்வதுதான்" என்கிறார் லெனின் கண்ணுக்கெட்டாத சின்னஞ்சிறு அணுவிலிருந்து அனைத்துக்குள்ளும் முரண்பட்ட சக்திகள் மோதிக் கொண்டே இருக்கின்றன. இந்த எதிர்மறை சக்திகள் ஒரு கட்டம் வரை இணைந்தே இருக்கும். இந்த ஒற்றுமை என்பது தற்காலிகமானது. இந்த சக்திகளின் மோதல் மட்டுமே நிரந்தரமானது. இயக்கவியலுக்கே உரித்தான மூன்று அடிப்படை விதிகள் முதல் விதி: எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமும்

ஒவ்வொரு பொருளிலும் எதிரும் புதிருமான சக்திகள் ஒன்றோடொன்று போராடியவாறு இருக்கின்றன. காரணம் அப்பொருளுக்குள் இணக்கமில்லை. தனக்குள்ளேயே அது முரண்பட்டிருக்கிறது என்கிறது இயங்கியல், "வளர்ச்சி என்பது எதிர்சக்திகளிடையே நடக்கும் போராட்டம்தான்",

அஞ்ஞானத்திலிருந்து விஞ்ஞானம் தன்னை மாற்றிக் கொள்கிறது. பூரண அறிவு என்று ஒன்றுமில்லை. அறிதற்குரிய விசயம் வற்றாத ஊற்றுப் போல் தொடரும். முரண்பட்ட சக்திகள் இடைவிடாமல் போராடிக் கொண்டேயிருக்கிற நேரத்தில் வளர்ந்து கொண்டும் இருக்கின்றன. இதனை 'எதிர்மறைகளின் ஒற்றுமை' என்கிறோம். அனைத்துப் பொருட்களின் அணுவிற்குள் புரோட்டான், எலக்ட்ரான் என்ற முற்றிலும் எதிரான இரு பொருட்களின் போராட்டமும் இணைப்பும் நிகழ்கிறது. இந்த முரண்பாட்டினையும் ஒற்றுமையையும் எல்லா அணுக்களிலும் காணலாம். உயிருள்ள உடலில் வாழ்வு, சாவு இரண்டும் உள்ளன. செல்கள் அழிவதும், புதிய செல்கள் உருவாவதும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன.

உயிரியலில் உட்கொள்ளலும், வெளித் தள்ளுதலும், மூச்சை உள்ளுக்கு இழுப்பதும் வெளியே விடுவதும் எதிர்மறைகளின் ஒற்றுமைக்கும் போராட்டத்திற்குமான உதாரணமாகக் கொள்ளலாம். இந்த சமநிலை நீடிக்கும் வரை உயிர் வாழ முடியும். எப்பொழுது இந்த முரண்பாடு முற்றி சமநிலை பாதிக்கப்படுகிறதோ அப்பொழுது வாழ்வு முடிந்து சாவு வந்து விடுகிறது. பொருள் மாற்றமடையக் காரணம் அதனுள் முரண்பாடுகள் எதிர்மறைகள் போரிடுவதால்தான்.

போராட்டத்தின் தீர்வுதான் மாற்றம் முதலாளித்துவ சமுதாயத்தில் சுரண்டுவோர் சுரண்டப்படுவோருக்கிடையிலான முரண்பாடு கிட்டத்தட்ட சமநிலையில் நீடிக்கும் வரைதான் முதலாளித்துவ சமுதாயமாக நீடிக்க முடியும். சுரண்டப்படும் மக்களின் சக்தி மேலோங்கி விட்டால் முதலாளித்துவ சமுதாயம் மாறிவிடும்.(அதற்கான பணியினை சுரண்டும் வர்கதிற்கு எதிராக செய்திருக்க வேண்டும்).

பொருட்கள் அசைகிறநிலையில் இருப்பதாகக் கருதுவதை விட அசையா நிலையில் இருப்பதாகக் கருதுவதுதான் சுலபம், மனிதமனத்தின் வளர்ச்சிக்கும் கூடப் பொருந்தும், பொருட்களை இயங்கும் நிலையில் வைத்துப் பரிசீலிப்பதற்கு முன்னால் அவற்றை இயங்காத நிலையில் பார்த்துப் பரிசீலிப்பதுதான் நம் வழக்கம், ஏனெனில் பொருட்கள் அசைந்து கொண்டு, இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாமலே இருந்து வந்தது. கருத்துமுதல்வாதி உலகத்தில் ஏழை. பணக்காரர்கள் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வருவதாகக் கூறுவார். அதன் அர்த்தம் எதிர்காலத்திலும் இந்த இரு பிரிவினர் இருப்பார்கள். அதில் எந்த மாற்றமும் நிகழாது என்பது ஆனால் பொருள்முதல்வாதி முதலாளிவர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்று பிரித்துப் பார்க்கிறான். அவ்விரண்டு வர்க்கத்திற்கிடையேயுள்ள முரண்பாட்டினையும் இடைவிடாத மோதலையும் பார்க்கிறான். முதலாளித்துவ சமுக அமைப்பில் எதிரும் புதிருமான இவ்விரு வர்க்கங்கள் இணைந்தே வாழும், ஆனால் அவற்றுக்கிடைய மோதலும் நடக்கும்.

ஒவ்வொரு மோதலுக்கும் பின் ஒரு சமரசம் ஏற்படும். ஆனால் அந்த சமரசம் தற்காலிகமானதே மீண்டும் மோதல்களும் சமரசங்களும் தொடரும். முதலாளித்துவத்தை வீழ்த்துகிற பலம் வருகிற வரை இது தொடரும், இறுதி மோதல் வரும் போது முதலாளித்துவ சமூகம் அழிக்கப்பட்டு புதிய சமூகம் தோன்றும். இந்த வர்க்க மோதலுக்குக் காரணமான முரண்பாடுகளின் தன்மையைக் கற்றறிவது அவசியம்.

ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக மக்களைத் தயார்படுத்துவது மக்களிடைய சோசலிச உணர்வை மேம்படுத்தும். எதிர்வர்க்க உள் முரண்பாடுகளை முற்ற வைப்பது, வெடிக்கச் செய்வது நமக்குச் சாதகமாக்குவது மிகவும் தேவை. முன்னுக்கு வருகிற முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி நமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். அந்நிய மூலதனத்திற்கும் உள்நாட்டு மூலதனத்திற்கும் முரண்பாடு வரும் போதும் விதேசிப் பொருளுக்கும் சுதேசிப் பொருளுக்கும் முரண்பாடு வரும்போதும் நாம் அந்த முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி, அந்நிய மூலதனத்திற்கும், விதேசிப் பொருளுக்கும் எதிரான நிலையைத் தோற்றுவிக்க வேண்டும்.

உலகில் தோன்றிய எல்லா தத்துவங்களும் தனி உடமை சமூகம் தோன்றிய பிறகு அந்தத் தனி உடையும் சமூகம் சார்ந்த கருத்துக்களை விதைத்தது ஆக தத்துவத்தின் தேவை அந்த மனித இனங்களில் வாழ்வியலைப் பற்றியது ஆக ஒருபுறம் உடமையாளர்களின் சொந்தக்காரர்களான ஒடுக்குபவனும் உடைமையற்றோர் ஆகிய ஒடுக்கப்படுபவனும் ஒரே சமூகத்தில் வாழும் பொழுது இருவரையும் ஒருமுகப்படுத்துவதும் ஒழுக்கு படுத்துவதும் என்ற பெயரில் நீதி நியாயம் என்ற கோட்பாடுகளை வழங்கியது இந்த தத்துவங்களை இவை மதத்தின் அடிப்படையில் மக்களை ஒன்று படுத்தவும் அதிகாரத்தின் அடிப்படையில் மக்களை மிரட்டி அடிபணி வைப்பதும் எதுவாக இருந்தாலும் அன்று இவை இருந்தது இன்று அதன் தேவைகளை புரிந்து கொண்டால் சரியாக இருக்கும் என்பதே.

தத்துவம் என்றால் என்ன இந்தியாவில் தோன்றி பல்வேறு தத்துவங்கள் எவை எவை இன்றுள்ள இந்திய தத்துவம் எவை அவை என்ன பணி செய்து கொண்டுள்ளது என்று சுருக்கமாக விளக்கினேன் இருந்தும் இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு தத்துவ மரபுகளையும் ஆய்வு செய்தோமானால் அதனுடைய வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இங்குள்ள ஆளும் வர்க்கமே காரணமாகும். ஆளும் வர்க்கத்தை உயர்த்திப்பிடித்த பல்வேறு தத்துவங்கள் நிலைத்து நிற்பதும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருத்துக்களை விதைத்த தத்துவங்கள் தொடர்ந்து காணாமல் போய்விட்டது எனலாம். குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு விதமான தத்துவங்களை ஆய்ந்தறிந்த ஆங்கிலேயர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு தத்துவங்களின் கலவைகளை ஒன்றாக்கி சமஸ்கிருத மயமாக்களையும் சனாதனத்தை தூக்கி பிடிக்கும் தத்துவங்களை முதன்மைப் படுத்தியும் வேத நாகரீக காலம் தான் உயர்ந்தது என்று வேதத்தை தாங்கிப் பிடிக்கும் வேலையையும் அவர்கள் தான் தொடங்கி வைத்தார்கள் அதற்கு முன் இருந்த பல்வேறு தத்துவங்கள் தங்களுக்கு இடையிலே போட்டி போட்டு வாழ்ந்து மறைந்தும் கொண்டிருந்தது ஆனால் ஆங்கிலேயர் இந்திய மயங்காதலும் அன்றைய தத்துவங்களுக்கு உயிர் கொடுத்தனர் எனலாம். இதனை புரிந்து கொள்வதற்கு மார்க்சிய பார்வை அவசியம்.

இந்தியாவில் தோன்றிய எல்லா தத்துவங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்து தத்துவங்கள் தான் இன்று அதன் பயன் என்ன என்பதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ள வர்க்க சமுகத்தில் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் தீர்வு காணும் மார்க்சியம் மட்டுமே உழைப்பு தான் மனித அறிவைத் தோற்றுவித்தது புராதன மனித மந்தையை ஒழுக்க நெறி விஞ்ஞானம், கலை ஆகியவை கொண்ட மனித சமூகமாக மாற்றியது மனிதன் நாகரீக வளர்ச்சி பெற்றதற்குப் பொருள் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றமே காரணமாகும்.உலகில் உயர்ந்த தத்துவம் மார்க்சியம் மட்டுமே.

ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவானவழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது. ஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம்மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்து எடுக்க விரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக்கொள்ளக்கூடாது, மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது.

ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனிதசமூகம் உயிர்வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.

 

சமூகத்தின்‌ முற்போக்கான வளர்ச்சியால்‌ முன்வைக்கப்‌ படும்‌ கடமைகளை நிறைவேற்றுவதில்‌ தங்கள்‌ புறநிலையான நிலைமை காரணமாகப்‌ பங்கு எடுத்துக்கொள்ளும்‌ வர்க்கங்களும்‌ சமுதாயப்‌ படிவுகளும்‌ குழுக்களுமே மக்கள்‌, அல்லது திரளான வெகுஜனங்கள்‌ ஆவர்‌. மனிதர்களின்‌ வரலாற்றுப்‌ போக்கால்‌ வரையறுக்கப்பட்ட, மாறிக்கொண்டிருக்கிற பொதுமையே மக்கள்‌. “தாமேயான மக்கள்‌” இல்லவும்‌ இல்லை, இருக்கவும்‌ முடியாது.

சமூக வரலாற்றின்‌ குறித்த கட்டத்தில்‌ உள்ள மனிதர்கள்‌ இருக்கிறார்கள்‌. ஆகவே மக்கள்‌ என்பவர்கள்‌ வரலாற்று நிகழ்ச்சியே ஆவர்‌, பண்டைச்‌ சமூகத்தில்‌ மக்கள்‌ தொகை அனைத்தும்‌ மக்கள்‌ அமைப்பில்‌ அடங்கியிருந்தது. சுறண்டுவோர்‌ வர்க்கங்களும்‌ சுறண்டப்படுவோர்‌ வர்க்கங்களும்‌ நிலவும்‌ சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகள்‌ கொண்ட சமூகங்களில்‌ பொருளியல்‌ தலங்களின்‌ நேரடியான உற்பத்தியாளர்கள்‌ ஆகிய உழைப்‌ பாளிகளே மக்களின்‌ பிரதானத்‌ இரளாக விளங்குகிரார்கள்‌. உதாரணமாக, முதலாளித்துவச்‌ சமூகத்தில்‌ மக்கள்‌ என்‌ பவர்கள்‌, தொழிலாளர்களும்‌ குடியானவர்களும்‌ கம்மியர்‌ களும்‌ உழைக்கும்‌ அறிவுஜீவிகளும்‌ ஆவர்‌. அதாவது பிறரு டைய உழைப்பைச்‌ சுறண்டாதவர்கள்‌ எல்லோரும்‌ ஆவர்‌. ஏகாதிபத்திய ஏகபோக ஸ்தாபனங்களை எதிர்த்து, தேசீய விடுதலையின்‌ பொருட்டுப்‌ போராடும்‌ ஐனப்‌ படிவுகளும்‌ மக்களில்‌ அடங்கியவையே. பிற்போக்காளர்‌ வர்க்கங்கள்‌ மக்களைச்‌ சேர்ந்தவை அல்ல. ஏகபோக பூர்ஷ்வா வர்க்கம்‌ இத்தகையதே. சமரசப்படுத்த முடியாக முரண்பாடுகள்‌ கொண்ட வர்க்‌கங்களோ வர்க்கப்‌ போராட்டமோ இல்லாத சோஷலிஸச்‌ சமூகத்தில்‌ தொழிலாளர்கள்‌, குடியானவர்கள்‌, அறிவுஜீவிகள்‌ ஆகிய எல்லா வர்க்கங்களும்‌ சமுதாயக்‌ குழுக்களும்‌ மக்களில்‌ அடங்கியவையே. மக்கள்‌ என்பதற்கு இவ்வாறு அர்த்தம்‌ செய்துகொள்வது உண்மையில்‌ விஞ்ஞான ரீதியானது. சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகள்‌ கொண்ட சமூகங்களில்‌ சுறண்டுவோருக்கும்‌ சுறண்டப்படுவோருக்கும்‌ இடையே நிலவும்‌ வர்க்க முரண்பாடு களை மூடி மறைக்க விரும்பும்‌ பூர்ஷ்வாக்‌ கொள்கைவாதிகளின்‌ முயற்சிகளை அம்பலப்படுத்த இந்தப்‌ புரிவு உதவுகிறது. 

வரலாற்‌றில்‌ திரளான பொதுமக்களின்‌ பங்கு என்ன என்பதைச்‌ சரியாகப்‌ புரிந்துகொள்வது இதனால்‌ சாத்தியம்‌ ஆகிறது. மக்கள்‌ வரலாற்றைப்‌ படைப்பவர்களாக இருப்பது எவ்வாறு? முதலாவதாக, சமூகம்‌ நிலவுவதற்கு இன்றியமையாத பொருளியல்‌ நலங்களைத்‌ திரளான வெகுஜனங்களே உண்டாக்குகிறார்கள்‌. உழைப்பாளி மக்கள்‌ உழைக்கிறார்கள்‌,பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்‌, ஆலைகளும்‌ தொழிற்சாலைகளும்‌ கட்டுகிறார்கள்‌, கால்வாய்கள்‌ தோண்டுகிறார்கள்‌, இருப்புப்‌ பாதைகள்‌ போடுகிறார்கள்‌, விவசாயப்‌ பண்டங்களைப்‌ பயிர்‌ செய்கிறார்கள்‌. வேறு வார்த்தைகளில்‌ சொல்வதானால்‌ இவையாவும்  இன்றிச்‌ சமூகம்‌ உயிர்‌ வாழவும்‌ வளரவும்‌ முடியாதோ அவை யாவற்றையும்‌ உழைப்பாளிகளே உருவாக்குகிறார்கள்‌. 

பொருளியல்‌ பண்பாட்டின்‌ எல்லா நலங்களும்‌ மனிதனுடைய உழைப்பால்‌ படைக்கப்பட்டவை என்றும்‌ மனிதர்களுடைய பல தலைமுறைகளினுடைய உழைப்பின்‌ பயன்‌ இவை என்றும்‌ கார்ல்‌ மார்க்ஸ்‌ சிறப்பாக தெளிவுடன்‌ வலியுறுத்தினார்‌. திரளான வெகுஜனங்‌களே பிரதான உற்பத்திச்‌ சக்தியாக விளங்குகிறுர்கள்‌. அவர்‌களது செயல்கள்‌ உற்பத்தி முறைகளின்‌ மாற்றங்களுக்கும்‌, விளைவாகச்‌ சமூக-பொருளாதார அமைப்புக்கள்‌ மாறுவதற்‌கும்‌ வழி வகுக்கின்றன. இரண்டாவதாக, மக்களே சமூக-பொருளாதார மாற்றங்களை நிர்ணயிக்கும்‌ சக்தியாகவும்‌ விளங்குகிறார்கள்‌. திரளானவெகு ஜனங்கள்‌ நிர்ணயகரமான பங்கு ஆற்றாத பெரிய நிகழ்ச்சி ஒன்றுகூட இல்லை என்று வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. 

சமுதாயப்‌ புரட்சிகளின்‌ காலப்பகுதிகளில்‌ திரளான வெகுஜனங்களின்‌ பங்கு சிறப்பாக முக்கியமானது. “புதிய சமூக ஒழுங்குகளின்‌ ஊக்கமுள்ள படைப்பாளிகளாகச்‌ செயல்படத்‌ திரளான வெகுஜனங்கள்‌ வேறு ஒருபோதும்‌ புரட்சிக்‌ காலத்தில்‌ போலக்‌ திறன்‌ கொண்டிருப்பதில்லை. இத்தகைய காலங்களில்‌ மக்கள்‌ அற்புதங்கள்‌ விளைக்க வல்லவர்கள்‌....” (வி. இ. லெனின்‌ முழு நூல்திரட்டு, தொகுதி 11, பக்கம்‌ 103). என்று எழுதினார்‌ வி. இ. லெனின்‌. அடிமைகளின்‌ கிளர்ச்சிகளே அடிமைச்‌ சொத்தக்கார அமைப்பு அழிவதற்கு உதவின, பண்ணையடிமைகளின்‌ கிளர்ச்சிகளோ, நிலப்பிரபுத்துவத்தின்‌ இடத்துக்கு முதலாளித்துவம்‌ வருவதை விரைவுபடுத்தின என்று சமூக வரலாறு காட்டுகிறது. 

திரளான வெகுஜனங்களின்‌ பங்கும்‌ முக்கியத்துவமும்‌ சோஷலிஸப்‌ புரட்சியின்‌ காலப்பகுதியில்‌ அளவிட இயலாதவாறு அதிகரிக்கின்றன. ஏனெனில்‌ மிகப்‌ பெரும்பான்மையான உழைப்பாளிகள்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ தலைமையில்‌ அதில்‌ பங்கெடுத்துக்‌ கொள்கிறார்கள்‌. சோஷலிஸப்‌ புரட்சியில்‌ மிக மிக விரிவான மக்கள்‌ திரள்‌ பங்கெடுத்துக்கொள்வது நிகழும்‌ புரட்சிகர மாற்றத்தின்‌ ஆழம்‌ மிக மிக அதிகமானது என்பதற்‌குச்‌ சான்று பகர்கிறது. மக்கள்‌ ஒழுங்கமைக்கப்பட்டு, ஒற்றுமை கொண்டு முன்னணியிலுள்ள புரட்சிச்‌ சித்தாந்தத்தால்‌ கொள் கையில்‌ உரம்‌ பெற்றிருக்கையில்‌ எத்தகைய பெருமைமிக்க படைப்பு ஆற்றலாகத்‌ திகழ்கிறார்கள்‌ என்பதை மாபெரும்‌ அக்டோபர்‌ சோஷலிஸப்‌ புரட்சி காட்டியது. தாங்கள்‌ வரலாற்றைப்‌ படைப்‌பவர்கள்‌ என்பதை உழைப்பாளி மக்கள்‌ முன்‌ ஒருபோதும்‌ இல்‌லாத அளவு இந்தப்‌ புரட்சியில்தான்‌ காட்டிக்கொண்டார்கள்‌. 

மூன்றாவதாக, திரளான வெகுஜனங்கள்‌ ஆன்மீகப்‌ பண்பாட்‌ டின்‌ படைப்பாளிகளாகவும்‌ செயல்படுகிறார்கள்‌. மக்கள்‌ எல்லாப்‌ பொருளியல்‌ செல்வங்களையும்‌ படைக்கும்‌ சக்தி மட்டும்‌ அல்ல, ஆன்‌ மீகச்‌ செல்வங்களுக்கும்‌ வற்றாத ஓரே ஊற்றுக்கண்‌ணாகவும்‌ காலத்தாலும்‌ படைப்பு எழிலினாலும்‌ மேதையாலும்‌ முதல்வார்களாக விளங்கும்‌ தத்துவவாதிகளாகவும்‌ கவிகளாகவும்‌ திகழ்கிறார்கள்‌. எல்லாப்‌ பெருங்‌ காவியங்களையும்‌ உலகின்‌ துன்பியல்‌ ககைகள்‌ யாவற்றையும்‌ அவற்றில்‌ மாண்பு சிறந்ததான உலகப்‌ பண்பாட்டின்‌ வரலாற்றையும்‌ படைத்த வர்கள்‌ அவார்களே என்று எழுதினார்‌ மக்ஸீம்‌ கோர்க்கிய்‌. ஆன்மீகப்‌ பண்பாட்டின்‌ வளர்ச்சியில்‌ திரளான பொதுமக்களின்‌ பங்கை ஒப்புக்கொள்ள பூர்ஷ்வாக்‌ கொள்வைவாதிகள்‌ மறுக்கிறார்கள்‌. ஆளும்‌ வர்க்கங்களைச்‌ சேர்ந்து மாபெரும்‌ தனி நபர்கள்‌, மேதை வாய்ந்த ஒற்றையார்கள்தாம்‌ ஆன்மீகப்‌ பண்‌ பாட்டை வளர்க்கிறார்கள்‌ என்று இவர்கள்‌ வலிந்துரைக்கிறார்‌கள்‌.இத்தகைய தனிநபர்கள்‌ சிறந்தோர்‌ குழாம்‌ எனப்படுவதாக அமைந்து, “கும்பலுக்கு" அதாவது உழைப்பாளி மக்களுக்கு உயரே எழுகிறார்கள்‌ என்றும்‌ உழைப்பாளி மக்கள்‌ ஆன்மீகப்‌ படைப்புக்குத்‌ திறன்‌ அற்றவர்கள்‌ என்றும்‌ சாசுவத அறிவீனமே அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்றும்‌ பூர்ஷ்வாக்‌ கொள்கைவாதிகள்‌ கூறுகிறார்கள்‌. ஆனால்‌ அன்மீகப்‌ பண்பாட்டின்‌ படைப்பிலும்‌ வளர்ச்சியி லும்‌ திரளான வெகுஜனங்கள்‌ மிகப்‌ பெரிய பங்கு ஆற்றுகிறார்‌ கள்‌ என்பதற்குச்‌ சமூக வளர்ச்சியின்‌ வரலாறு அனைத்தும்‌ சான்று பகர்கிறது. சிறந்த விஞ்ஞானிகளும்‌ எழுத்தாளர்களும்‌ இசைஞர்களும்‌ ஓவியர்களும்‌ உயிர்‌ வாழ்வதற்கும்‌ விஞ்ஞான, கலைப்‌ படைப்புக்களில்‌ ஈடுபடுவதற்கும்‌ தங்கள்‌ உழைப்பினால்‌ வகை செய்பவர்கள்‌ மக்களே. சுறண்டலிலிருந்து விடுபடுவதற்‌ காகவும்‌, பொருளாதார, அரசியல்‌, ஆன்மீக அடிமைத்தனக்‌ துக்கு எதிராகவும்‌ திரளான வெகுஜனங்கள்‌ நிகழ்த்தும்‌ போராட்டம்‌, வாழ்க்கை நிகழ்ச்சிகள்‌ பற்றிச்‌ சரியாகச்‌ சிந்திக்கவும்‌ அவற்றைச்‌ சரியாகச்‌ சித்திரிக்கவும்‌ முயலும்‌ சிந்தனையாளர்‌களுக்கும்‌ கலைஞர்களுக்கும்‌ உத்வேகமூட்டும்‌ வற்றாத ஊற்றுக்‌ கண்ணாக விளங்குகிறது. மொழியின்‌ படைப்பாளர்களும்‌ காப்பாளர்களும்‌ மக்களே ஆவர்‌. மாபெரும்‌ எழுத்தாளர்களின்‌ சிறந்த படைப்புக்கள்‌ யாவும்‌ மக்களது படைப்பை ஆதாரமாகக்‌ கொண்டே தோன்று கின்றன என்பதைப்‌ புனைவு இலக்கிய வரலாறு காட்டுகிறது. மக்கள்‌ கவிதை, மக்களது ஆன்மாவில்‌ வாழும்‌ இறந்த ஆதர்சங்களைப்‌ பிரதிபிம்பிக்கும்‌ கண்ணாடியாகத்‌ திகழ்கிறது. நாடோடிக்‌ சதைகள்‌, மரபுவழிக்‌ கதைகள்‌, பாட்டுக்கள்‌, நடனங்கள்‌, மக்களது அன்றாட வாழ்க்கையை அணிசெய்யும்‌ கலைப்‌ பொருள்கள்‌--இவை யாவுமே கூட்டுப்‌ படைப்புச்‌ செயலால்‌ ஆக்கப்பட்டவையே. - பல விஞ்ஞானக்‌ கண்டுபிடிப்புக்களும்‌ திரளான மக்களின்‌ படைப்புச்‌ செயலின்‌ விளைவுகள்கதாம்‌.

சோஷலிஸப்‌ புரட்சியின்‌ வெற்றிக்குப்‌ பிறகு விஞ்ஞானம்‌ மக்கள்‌ திரளின்‌ செயல்களுடன்‌ உறுப்பிணைவு கொண்டு ஒன்று கலந்துவிடுகிறது. அப்போது, தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில்‌ மக்கள்‌ பங்காற்றுவதற்கான முன்‌ கண்டறியா புதிய வாய்ப்புக்கள்‌ ஏற்படுகின்றன. இயந்திரத்‌ தொழில்‌, விவசாய உற்பத்தியில்‌ புதுமை புகுத்துவோர்‌, சீருறுப்‌ புகுக்துவோர்‌ ஆகியோரின்‌ எண்ணிக்கை சோவியத்‌ யூனியனில்‌ மிக அதிகமாக உயர்ந்தது புதிய சமூகத்தின்‌ கட்டமைப்பின்‌ தொடர்பாகவே ஏற்பட்டது. ''கோடிக்கணக்கான படைப்பாளிகளின்‌ அறிவு, மிக மிக மாண்புள்ள, மேதைவாய்ந்த முன்காணலைக்‌ காட்டிலும்‌ அளவிட இயலாதவாறு உயர்த்து ஒன்றை சிருஷ்டிக்கிறது” (லெனின்‌முழு நூல்திரட்டு, தொகுதி 35 பக்கம்‌ 281)  என்னும்‌ வி. இ. லெனினுடைய சொற்களை இவை எல்லாம்‌ உறுதிப்படுத்துகின்‌றன. 

மார்க்சிய-லெனினியத்தின்‌ அமர ஆசிரியார்கள்‌ சமூக வாழ்‌வில்‌ உழைப்பாளிகளின்‌ மாட்சிமைமிக்க பங்கை எப்போதும்‌ வலியுறுத்தி வந்துள்ளனர்‌. திரளான வெகுஜனங்களே வரலாற்‌றைப்‌ படைக்கிறார்கள்‌ என்பதையே தங்கள்‌ சித்தாந்த, நடை முறைச்‌ செயல்களுக்கு அவர்கள்‌ ஆதாரமாகக்‌ கொண்டார்கள்‌. 

சோஷலிஸத்துக்கு முந்திய அமைப்புக்களில்‌ சமூக வளர்ச்‌சியில்‌ திரளான வெகுஜனங்களின்‌ பங்கு அளவறுத்தே இருந்தது. மனிதனை மனிதன்‌ சுறண்டுவது மக்களின்‌ படைப்பு ஆற்றல்‌ கட்டின்றி முழுமையாகச்‌ செயல்பட வாய்ப்பு அளிப்பதில்லை. சமூகத்தின்‌ அரசியல்‌ வாழ்விலும்‌ ஆன்மீகப்‌ பண்பாட்டின்‌ வளர்ச்சியிலும்‌ செயலூக்கமுள்ள பங்கு ஆற்றுவதிலிருந்து திரளான வெகுஜனங்களை விலக்கி ஒதுக்கிவிடச்‌ சுறண்டுவோர்‌ முயல்கிறார்கள்‌. எனினும்‌ இவ்வாறு செய்வதில்‌ அவர்களுக்கு ஒருபோதும்‌ வெற்றி கிடைக்கவில்லை. அடிமைச்‌ சொந்தக்கார அமைப்பிலும்‌ நிலப்பிரபுத்துவ அமைப்பிலுமே கூடத்‌ திரளான வெகு ஜனங்களின்‌ செயலூக்கம்‌ வரலாற்று நிகழ்ச்சிகள்மீது அழ்ந்த பதிவை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாளித்துவத்தில்‌ சமூக வாழ்க்கைமீது, சிறப்பாகப்‌ பொருளாதார, அரசியல்‌ துறைகளில்‌, மக்களின்‌ பாதிப்பு கணிசமாக அதிகரிக்கிறது. சுறண்டலுக்கு எதிரான போராட்டத்தில்‌ தொழிலாளி வர்க்கம்‌ கலந்து கொள்வதே இந்த அதிகரிப்புக்குக்‌ காரணம்‌. தொழிலாளி வர்க்கம்‌ தற்போதையச்‌ சமூகத்தில்‌ யாவற்றிலும்‌ வளர்ச்சி மிக்கதும்‌ ஒருங்கமைந்ததும்‌ ஆன வர்க்கம்‌. தனக்கே உரிய அரசியல்‌ கட்சியை அமைத்துக்கொண்டிருக்கும்‌ வர்க்கம்‌ அது. சோஷலிஸத்துக்கான போராட்டத்தில்‌ மிக மிக விரிவான மக்கள்‌ திரளைக்‌ தொழிலாளி வர்க்கம்‌ ஈடுபடுத்துகிறது. முதலாளித்துவத்திலிருந்து சோஷலிஸத்துக்குப்‌ பரிணமிப்‌ பே தற்போதையச்‌ சகாப்தத்தின்‌ பிரதான உள்ளடக்கம்‌ ஆகும்‌. இந்தச்‌ சகாப்தத்தில்‌ புரட்சிச்‌ செயல்முறையின்‌ சமுதாய அடிப்‌ படை கணிசமாக விரிவடைகிறது. வாழ்வு தீர்ந்துவிட்ட முத லாளித்துவத்துக்கு எதிராகத்‌ தற்போது பெரும் சக்திகள்‌ செயல்பட்டு வருகின்றன. 

தொடரும்... இன்னும் சில போக்குகளை விவாதிப்போம் தோழர்களே

இதற்கு முந்தைய பகுதியை வாசிக்க இந்த லிங்கை அழுத்து உள் சென்று வாசிக்கவும் தோழர்களே

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்