இந்த விவாதம் லெனின் எழுதிய நூலை புரிந்துக் கொள்வதிலா அல்லது தத்துவ குழப்பமா என்ற கோணத்தில் அணுகுவதே சரியாக இருக்கும் என்று இலக்கு ஆசிரியர் குழு தெரிவிக்கிறது ஆம் தோழர் அ.க. ஈஸ்வரன் அவர்களின் ஒரு கட்டுரை மீதான விமர்சனம் மற்றும் அதன் மீதான பதிலுரைகளும் இந்தப் பகுதி.
தோழர் அ.க.ஈஸ்வரன் எழுத்து “அனுபவவாதம்” என்பது எதைக்குறிக்கிறது என்பதிலும், “அனுபவவாத விமர்சனம்” என்பதில் யார், யாரை விமர்சிக்கிறார் என்பதிலும் நம் நாட்டு இடதுசாரிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதை தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
மேலும் இவர் வைக்கும் முதல் கேள்வி
1. இதில் “அனுபவவாதம்” என்பது எதைக்குறிக்கிறது என்பதிலும், “அனுபவவாத விமர்சனம்” என்பதில் யார், யாரை விமர்சிக்கிறார் என்பதிலும் நம் நாட்டு இடதுசாரிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.
முதல் குழப்பம் “அனுபவவாதம்” என்கிற சொல்லில் இருக்கிறது. அனுபவவாதம் என்கிற சொல் அகநிலைவாதம் என்கிற போக்குடையவர்களைக் குறிக்கிறது. குறிப்பாக மாவோ கட்சிக்குள் இருக்கும் போக்காகக் குறிப்பிடுகிற அகநிலைவாதம் (Subjectivism) என்பதையே லெனின் இந்த நூலில் அனுபவவாதம் என்று கூறி விமர்சித்துள்ளார் என்று பல தோழர்கள் கூறுகின்றனர்.
இரண்டாவது கேள்வியையும் பார்ப்போம்.
2. மற்றொரு குழப்பம் என்னவென்றால், பொருள்களின் வழியாகக் கிடைக்கும் அறிவு மட்டுமே உண்மை என்று கூறுகிற போக்கினை அனுபவவாதம் என்று கூறுவது. பொருள்களின் மூலமாகக் கிடைக்கும் அறிவை மறுக்கிற விமர்சனம் ‘அனுபவவாத விமர்சனம்”. அதாவது பொருள் வழியில் கிடைக்கிற அனுபவத்தை அடிப்படையாக் கொண்ட பொருள்முதல்வாதத்தை விமர்சிப்பதே “அனுபவவாத விமர்சனம்” என்பதாகப் புரிந்து கொள்வது.
இவ்விரண்டு புரிதலும், லெனின் எழுதிய இந்த நூலின்படி எவ்வாறு தவறு என்பதை பார்ப்போம்.
இவ்வாறு தொடங்கும் இவரின் கட்டுரைக்கு பதிலாக லெனின் நூலின் முன்னுரையிலே உள்ளன. அதனை தோழர் நன்றாக படித்திருப்பார் இருந்தும் அவர் கூறும் குழப்பம் என்ன? எப்படி பார்ப்போமே!?
முதலில் தோழர் அடுக்கியுள்ள கேள்வி "அனுபவவாதம்” என்பது எதைக் குறிக்கிறது என்பதிலும், “அனுபவவாத விமர்சனம்” என்ன என்பதுமே.
சரி பார்ப்போம் நம் ஆசான்கள் என்ன சொல்கின்றனர்?
மார்க்சியம்-லெனினிய தத்துவத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட, சுயவிமர்சன முறையைப் பயில்கின்ற, பொது மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய, சிறந்த கட்டுப்பாடுடைய ஒரு கட்சி; இத்தகைய கட்சியின் தலைமையிலுள்ள ஒரு ராணுவம்; இத்தகைய கட்சியின் தலைமையிலுள்ள புரட்சிகர வர்க்கங்கள், புரட்சிகாக உள்ள குழுக்கள் எல்லாவற்றினதும் ஒரு ஐக்கிய முன்னணி - இந்த மூன்றும்தான் நாம் எதிரியைத் தோற்கடித்த மூன்று பிரதான ஆயுதங்கள்.-மாசேதுங்.
மேலும்
புரட்சியா? சீர்திருத்தமா?
கடந்த காலத்தின் குறிப்பிட்ட மிச்ச சொச்சங்களே, உதாரணமாக, முடியாட்சி, நிரந்தரப் படை முதலியவற்றை சார்ந்திருப்பது முதலாளி வர்க்கத்துக்கு சாதகமானது பாட்டாளி வர்க்கத்துக்கு பாதகமானது. முதலாளி வர்க்கப் புரட்சி கடந்த காலத்தின் மிச்ச சொச்சங்கள் அனைத்தையும் அவ்வளவு உறுதி யாகத் துடைத்தெறியாமல், அவற்றில் சிலவற்றை விட்டுச் சென்றால், அதாவது, இந்தப் புரட்சி முழுமையான உறுதிப்பாட்டுடன் நடைபெறாவிட்டால், அது முதலாளி வர்க்கத்துக்கு சாதகமானது. முதலாளித்துவ ஜனநாயகத் திசையில் தேவையான மாற்றங்கள் புரட்சி மூலம் நடவாமல், சீர்திருத்தங்கள் மூலம் மெது மெது வாக, படிப்படியாக, மேலும் அபாயமின்றி, மேலும் மென்மையாக நடைபெற்றால். இந்த மாற்றங்கள் பொது மக்களின், அதாவது விவசாயிகளினதும், சிறப்பாக தொழிலாளர்களினதும் சுதந்திரமான புரட்சிகர நடவடிக்கை, முன்முயற்சி, ஆற்றல் ஆகியவற்றை சாத்தியமான அளவு சிறிது சிறிதாக வளர்த்தால், அது முதலாளி வர்க்கத்துக்கு மேலும் சாதகமானது; அவை துரிதமாக வளர்ந்தால், தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், பிரெஞ்சு மக்கள் கூறுவதுபோல, துப்பாக்கியை ஒரு தோளிலிருந்து மறு தோளுக்கு மாற்றுவது வெகு சுலபமாகும்; அதாவது, முதலாளித்துவ புரட்சி தமது கைகளில் கொடுக்கும் துப்பாக்கிகளை, புரட்சி தமக்கு வழங்கும் சுயாதீனத்தை, அடிமைமுறை இல்லாத அடிப்படையிலிருந்து தோன் றும் ஜனநாயக உரிமைகளை, முதலாளி வர்க்கத்துக்கு எதிராகத் திருப்புவது வெகு சுலபமாகும். மறுபுறம், முதலாளித்துவ ஜனநாயகத் திசையில் தேவையான மாற்றங்கள் சீர்திருத்தங்கள் மூலம் நடவாமல், புரட்சி மூலம் நடைபெறுவது, தொழிலாளர் வர்க்கத்துக்கு மேலும் சாதகமானதாகும். காரணம், சீர்திருத்த வழி என்பது தாமதமான வழியாகும்; காலத்தைக் கடத்தும் வழியாகும்; அழுகிய பொருள்களின் துர்நாற்றம் வீசுவதுபோல் சமூக சீர்கேடுகள் மலிந்து புரட்சியை கஷ்டப்பட்டு தாமதமாக்கும் வழியாகும். அவை வீசும் துர்நாற்றம் முதன்முதலாகவும், எல்லாவற்றுக் கும் மேலாகவும் பாட்டாளி வர்க்கத்தையும், விவசாயி வர்க்கத் தையும்தான் துன்புறுத்தும். புரட்சி வழி என்பது விரைந்து துண்டிக்கின்ற, பாட்டாளி வர்க்கத்துக்கு மிகக் குறைந்த கஷ்டமுடைய வழியாகும். ஒற்றையாட்சிக்கும் அதோடு சம்பந்தப் பட்ட மிக வெறுக்கத்தக்க, இழிந்த, உழுத்துப்போன, நோய் பரப்புகின்ற நிறுவனங்களுக்கும் மிகக் குறைந்த அளவு சலுகை கொடுக்கின்ற, மிகக் குறைந்த அளவு அக்கறை செலுத்துகின்ற வழியாகும்.- லெனின்
சரி சரி நாம் பேச வந்தவை அனுபவவாதம் என்ன?
அதற்கு முன் நம் மத்தியில் உள்ள தத்துவ குழப்பமானதை தேலிவுப்படுத்திக் கொள்ள மார்க்சிய தத்துவம் பற்றி சற்று புரிந்து மேலே செல்வோம்.
முதலாளித்துவ ஊடங்கள் மூலம் பரவும் முதலாளித்துவ எதிர்ப் புரட்சிக் கருத்துகளால் நமது மனம் தாக்கப்பட்டவண்ணம் இருக்கின்றது. நாம் முதலாளித்துவ கருத்துகளின் அழுத்தமான விற்பனையால் தாக்கப்பட்டுதான் வாழ்கிறோம். அவை மக்கள் மீது, குறிப்பாக இளைய சமூகத்தின் மீது வெற்றிகரமாகச் செல்வாக்கு செலுத்துகிறது. அவர்களை எதிர்நோக்கியுள்ள உண்மையான பிரச்சினைகளிலிருந்து அவர்களுடைய மனதைத் திருப்பி, அவர்களை இந்த சமூக அவலங்களை ஏற்று வாழும் நிலைக்கு ஆளும் வர்க்க சித்தாந்திகள் மிகத் தெளிவாக செய்துக் கொண்டுள்ளனர். ஆக நமக்கான பணி நாம் இதை எதிர்த்துப் போரிடவேண்டும். நாம் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தின் மேம்பாட்டுக்காக, மார்க்சிய லெனினிய தத்துவத்தின் மேலாதிக்கத்துக்காக போராடவேண்டும் அல்லவா?.
எல்லாக் கஷ்டங்களும் நமக்கெதிராகவே உள்ளன. உண்மை மாத்திரம் நம் பக்கத்தில் உண்டு. இங்கு தான் புரட்சிகர தத்துவத்தில் தேர்ச்சிபெறுவதன் முக்கியத்துவம் புதைந்து கிடக்கின்றது. மேலே கூறியதுபோல, நமது தோழர்களை புரட்சிகர தத்துவத்தால் ஆயுதபாணிகளாக்க சரியான முறையில் நாம் கற்றுதேற வேண்டாமா?
அனுபவவாதம் என்பது-நடைமுறைதான் தோழர்களே! அப்போ என்ன நடைமுறை என்பதனை பார்ப்போம்!
தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம். தோழர் மாசேதுங் அவர்கள்.
தத்துவத்தையும் நடைமுறையையும் இயந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது.
சொந்த நாட்டின் ஸ்தூல மான நடைமுறையைப் படிக்க மறுக்கும் அதேவேளையில், தத்துவத்தின் முக்கியத்துவத்தை யார் மிகைப்படுத்திக் கூறுகிறாரோ, அவர் வரட்டுவாதியாவர்.
நடைமுறையில் மாத்திரம் அக்கறை செலுத்தி தத்துவத்தின் முக்கியத்துவத்தை மறுக்கிறாரோ, அவர் அனுபவவாதியாவர்.
வரட்டுவாதம், அனுபவவாதம் இரண்டும்
தவறானவை. நடைமுறை இல்லாத தத்துவம், தத்துவம்
இல்லாத நடைமுறை இரண்டும் பயனற்றவை. இரண்டினதும்
ஐக்கியம்தான் நமக்கு வேண்டும்.
சடப்பொருள், சிந்தனை இரண்டில்
சடப்பொருள் முதன்மை வகிப்பதுபோல, நடைமுறை, தத்துவம்
இரண்டில், நடைமுறை முதன்மையானது என்பதில் சந்தேகமே
இல்லை. ஆனால், (சிந்தனை அல்லது) மனம் சடப்பொருளின் அதியுயர்ந்த வடிவமாக விளங்கு வதுபோல, தத்துவம்கூட
நடைமுறையிலிருந்தே எழுகின்றது.
இருந்தும், தத்துவத்தின்
பிழையின்மை, அதன் மீண்டும் செழு மைப்படுத்துகின்ற
நடைமுறையில் தான் பரீட்சிக்கப்பட முடியும்.
ஆகவே, தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம்.
கார்ல் மார்க்ஸ், பி. ஏங்கெல்ஸ் இருவரும் விஞ்ஞான சோஷலிஸத்தின் ஆசான்கள் ஆவர். அவர்கள் முதலாளித்துவ வளர்ச்சியடையும் காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்து, அவற்றை தொழிலாளி வர்க்கம் புரிந்து, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்காக, அவ்விதிகளை தொழிலாளி வர்க்கத்துக்கு போதித்தனர். மார்க்சும், ஏங்கெல்சும் வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றின் விதிகள் பற்றியும், அரசு பற்றிய தத்துவத்தையும் நமக்குப் போதித்தனர். ஆனால், அவர்கள் தமது கனவு நனவாவதைக் காண, தமது தத்துவங்கள் நடைமுறையாதைக் காணக்கொடுத்து வைக்கவில்லை.(மார்க்சிய தத்துவம்).
லெனின் அவர்கள், முதலாளித்துவத்தின் அதன் இறுதிக் கட்டமான ஏகாதிபத்திய
கட்டத்திற்கு வளர்ந்த காலத்தில் புரட்சி இயக்கத்தின்
ஊக்கமாக உழைத்த ஒரு மார்க்சியவாதியாவார். வேறுவார்த்தைகளில்
சொன்னல், அவர் ஏகாதிபத்திய யுத்த சகாப்தத்தில்,
சோஷலிஸ் புரட்சி சகாப்தத்தில் வாழ்ந்தார். தமது காலத்தின் மாறிய நிலைமைகளுக்கு
ஏற்ப அவர் மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுத்தார்.
இவ்வாறு, அவர் மார்க்சியத்தை லெனினியம் என்ற உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தார்...
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சித் தத்துவங்களைத் திரித்து பலர் முதலாளித்துவதிற்கு வால் பிடித்தனர் அவர்களை லெனின் அவர்களை திரிபுவாதிகள் என்று அழைத்தார். அதுபோன்ற போக்குதான் நாம் இங்கே பேச வந்தவை.
ஆக, மார்க்சியத்தின் அடிப்படை புரட்சிகர உண்மைகளைக் கண்டுபிடித்து, அவற்றை உறுதியாகவும், ஒளியுடனும் ஒருங்கமைத்தது லெனினின் முதல் கடமையாக இருந்தது. இந்தக் கடமையை, அவர் தன் பல வாதப்பிரதிவாதப் படைப்புகள் மூலம் நிறைவேற்றினர்.அதுபோன்ற தத்துவ பிரச்சினைதான் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் நூல்.
லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல. அவர் ஒரு செயல் வீரனும் கூட, மார்க்சியக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில் புதிய ரகக் கட்சியொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும். இதன் பிரகாரம் அவர் ஸ்தாபித்த போல்ஷிவிக் கட்சி, அக்டோபர் புரட்சியை நடத்தும் ஆயுதமாகச் சேவை செய்தது, இது உருக்குப்போன்ற கட்டுப்பாடுடைய, புரட்சிகர மார்க்சிய உண்மைகளால் ஆயுதபாணியாகிய, சந்தர்ப்பவாதத்திலிருந்து விடுதலைபெற்ற, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகின்ற, சுயவிமர்சனத்தை ஆயுதமாகக் கொண்ட பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய ஒரு புரட்சிகரக் கட்சியாகும். இத்தகைய ஒரு கட்சியின் உதவியுடன், லெனின் அவர்கள் உலகின் முதலாவது தொழிலாளர் வர்க்கப் புரட்சியை வெற்றி கரமாக வழிநடத்தி, உலகின் முதலாவது சோஷலிஸ் அரசை அமைத்தார். அது அடக்கி ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அனை வருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. இப்படிச் செய் வதன் மூலம் லெனின் தத்துவத்தை நடைமுறையாக்கினர்; கனவை நனவாக்கினர். இத்துடன், முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகா ரத்தை ஸ்தாபித்து, பாதுகாப்பது சம்பந்தயான பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார். ஆனல், படித்தறிய முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சியத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி விட்டார். அதுமுதல், மார்க்சியம் என்பது மார்க்சிய-லெனினியம் என அழைக்கப்படுகிறது.
அனுபவவாத விமர்சனம் என்றால் என்ன?(நூலிலிருந்தே).
என்னைப் பொறுத்தவரை நானும் தத்துவத் துறையில் ஒரு "தேடுபவன்"தான். அதாவது, இந்த விளக்கங்களில் நான் எனக்கு ஏற்படுத்திக் கொண்ட வேலை என்னவென்றால், மார்க்சியப் போர்வையில் இந்த நம்பமுடியாத அளவிற்கு குழப்பமான, தெளிவற்ற, பிற்போக்குத்தனமான ஒன்றை முன்வைக்கும் இவர்களுக்கு எது முட்டுக்கட்டையாக இருந்தது என்பதைக் கண்டுபிடிப்பதே ஆகும்.- விளாடிமிர் லெனின். செப்டம்பர் 1908.
சுத்த அனுபவத்தின் மூலம் உலகம் பற்றி ஓர் இயல்பான கருத்து உருவாக்க வேண்டும்
என்று எர்னெஸ்ட் மாக், ரிச்சர்ட் அவனேரியஸ் மற்றும் போத்தனோவ் இவர்களின்
கருத்துப்படி விஞ்ஞான ரீதியான தத்துவம் என்பது பொருள் முதல்வாதம் கருத்து முதல்
வாதம் என்பவற்றை சாராமல் இருக்க வேண்டும்என்பதாகும்.
இதன்படி அனுபவத்தின்
மூலம் பெறும் தகவல்களை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொருள் முதல்வாத
கருத்து முதல்வாத குறுகியீடு இருக்கக் கூடாது (பக்கம் 13)
என்றார் அவினரியஸ்.
மேலும் மாக்
விஞ்ஞான விவரங்கள்
யாவும் நாம் உருவாக்கியவை எனவே இவை முன்கூட்டியே
தீர்மானிக்கப்பட்டவை.
அவை இருக்கவே முடியாது எனவே விஞ்ஞான விவரங்களுக்கான அடிப்படை அனுபவம் மட்டும் தான்
என்ற இந்தக் கண்ணோட்டம் கொண்ட மாக் பொருள் முதல் வாதத்தை மறுத்தார்.இவர் ஒரு
அகவய கருத்து
முதல்வாதி ஆவார் இந்த போக்கினை விஞ்ஞானத்துடன்இணைத்தார்.
போக்தானோவ் என்பவர்
அனுபவவாத ஒருமை வாதியாக இருந்த இவர் எல்லா விஞ்ஞானங்களையும் ஒன்றாக இணைக்கும்
டெக்னாலஜி என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இவர் மார்க்சிய இயங்கியலை மறுத்தார்
இதற்கு மாறாக சமநிலைக் கொள்கை என்ற ஒரு கோட்பாட்டை முன் வைத்தார்.இவர் அனுபவங்களை
மூலங்கள் என்று அழைத்தார்.(இவை மொழி பெயர்ப்பு
நூலில் பேசப்பட்டவை).
மேலும்
ஒரு விரிவுரையாளரிடம் பத்து கேள்விகள்- லெனின் தொ.நூ(ஆ) தொகுதி 14, இந்த நூலில் பக்கங்கள் 13-16.
1.மார்க்சியத்தின் தத்துவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பதை
விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா? அவர் அவ்வாறு ஏற்கவில்லை என்றால், இந்த விடயம் குறித்த எங்கெல்ஸின் எண்ணற்ற கூற்றுகளை அவர்
ஏன் ஒருபோதும் பகுப்பாய்வு செய்யவில்லை? அவ்வாறு ஏற்றால், மாக்கியர்கள் ஏன் தாம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை "திருத்துவது" என்பதை "மார்க்சிய மெய்யியல்" என்று அழைக்கின்றனர்?
2. தத்துவ ரீதியான அமைப்புகளைக் கருத்துமுதல்வாதம் என்றும் பொருள்முதல்வாதம் என்றும் எங்கெல்ஸ் அடிப்படையிலேப் பிரித்து கையாள்வதை விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா? இந்த இரண்டிற்கும் இடையில் ஊசலாடும் அந்த இடைநிலைகளை நவீன
தத்துவத்தில் ஹ்யூமின் வழிமுறை,
இந்த வழியை
"அறியொணாவாதம்" என்று அழைக்கிறார், மேலும் கான்ட்டியனிசத்தை ஒரு வகையான அறியொணாவாதம் என்று
அறிவிக்கிறார் எங்கெல்ஸ் அதை அறிவாரா?
3. புற உலகை அங்கீகரிப்பதும், மனித மூளையில் அதன் பிரதிபலிப்பும்
இயக்கவியல் பொருள்முதல்வாத அறிவுக் கோட்பாட்டின் அடிப்படையாக அமைகிறது என்பதை
விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா?
4. "தானாக உள்ளபொருட்கள்"
எனப்படுபவை "நமக்கான பொருட்களாக"
மாற்றம் பெறுவது குறித்த எங்கெல்சின் வாதம் சரியானது என்று
விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா?
5. "உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாயதத் தன்மையில்
அடங்கியுள்ளது" என்ற ஏங்கெல்ஸின் கூற்று சரியானது என்று விரிவுரையாளர்
ஒப்புக் கொள்கிறாரா? (டூரிங்கிற்கு எதிர்ப்பு, இரண்டாம் பதிப்பு, 1886, பக்கம் 28, பிரிவு I, உலக வரைபடவாதம் பற்றிய பகுதி IV.)
6. "பருப்பொருள் இல்லாத இயக்கத்தை எண்ணி பார்க்க முடியாத்து போலவே இயக்கம்
இல்லாத பருப்பொருளும் நினைத்துப் பார்க்க முடியாதது" என்ற ஏங்கெல்சின் கூற்றை
சரியென விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா? (ஆன்டி-டூரிங், 1886, 2 வது பதிப்பு, பக். 45, பகுதி 6 இல் இயற்கை தத்துவம், அண்டவியல், இயற்பியல் மற்றும் வேதியியல்.)
7. காரண காரிய தொடர்பு
கோட்பாடு இன்றியமையாமை, விதி போன்ற
இதரவை யதார்த்த உலகின் இயற்கையின் விதிகளாக மனித
மூளையில் பிரதிபலிப்பாக உள்ளன என்பதை
விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா? அல்லது எங்கெல்ஸ் அப்படிச் சொன்னது தவறானதா? (டூரிங்கிற்கு மறுப்பு,
பிரிவு 20-21, பகுதி III
காரணகாரியம் தொடர்புவாதம்
மற்றும் பிரிவு
103-04, பகுதி XI
இல் சுதந்திரம் இன்றியமையாமையும் பற்றியது).
8. மாக் தனது உடன்பாட்டை ஷூப்பேயுடன் வெளிப்படுத்தினார்
என்பதும், தனது கடைசி மற்றும் முக்கிய தத்துவ படைப்பை அவருக்கு அர்ப்பணித்தார் என்பதும் விரிவுரையாளருர் அறிவிப்பாரா?
மதகுருமார் வாதத்தின்
பாதுகாவலரும், பொதுவாக தத்துவத்தில் ஒரு வெளிப்படையான பிற்போக்குவாதியுமான ஷுப்பேயின்
வெளிப்படையான கருத்துமுதல்வாத தத்துவத்தை மாக் பின்பற்றுவதை விரிவுரையாளர் எவ்வாறு விளக்கம் அளிக்கிறார்?
9. நேற்றுவரை தனது தோழராக இருந்த மென்ஷிவிக்கான யுஷ்கேவிச்சுடன் (ஆய்வுகளின்படி) விரிவுரையாளர் ஏன் "சாகசம்"
பற்றி மௌனமாக இருந்தார், அவர் இன்று போக்டானோவை (ரக்மெடோவைத் தொடர்ந்து) ஒரு கருத்துமுதல்வாதி என்று அறிவித்துள்ளார்? பெட்ஸோல்ட் தனது சமீபத்திய புத்தகத்தில் மாக்கின் பல சீடர்களை கருத்துமுதல்வாதிகளிடையே
வகைப்படுத்தியுள்ளார் என்பது விரிவுரையாளருக்குத் அறிந்திருக்கிறாரா?
10. போல்ஷிவிசத்துடன் மாக்கிசம் பொதுவானது எதுவுமில்லை என்ற
உண்மையை விரிவுரையாளர் உறுதிப்படுத்துகிறாரா? லெனின் மீண்டும் மீண்டும் இயக்க மறுப்பியல் (மாறாநிலை)வாதத்தை எதிர்த்திருக்கிறார் என்பது, மென்ஷிவிக்குகளான யுஷ்கேவிச் மற்றும் வாலண்டினோவ் ஆகியோர்
"தூய" அனுபவ-விமர்சகர்கள் என்பதா?
இந்தப் பகுதி 1908 மே-ஜீனில் எழுதப்பட்டது.
அடுத்த பகுதி
1908 இல் சில "மார்க்சியவதிகளும்"1710 இல் சில கருத்துமுதல்வாதிகளும் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு மறுத்தனர் (பக்கம் 28 லிருந்து)
தத்துவ நூல்களில் சிறிதளவேனும் பரிச்சயமுள்ள ஒருவருக்கு பொருள்முதல்வாதத்தை மறுப்பதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடாத தத்துவத்தின் (அல்லது இறையியல்) சமகால பேராசிரியரை கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். பொருள்முதல்வாதிகளை அவர்கள் ஆயிரம் தடவை மறுத்துள்ளனர். ஆயினும் ஆயிரத்தோரவது தடவையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். நமது திருத்தல்வாதிகள் அனைவரும் பொருள்முதல்வாதத்தை மறுப்பதில் ஈடுபட்டுள்ளனர், உண்மையில் அவர்கள் பொருள்முதல்வாதியான பிளெக்ஹானோவை மறுப்பது போலவும், அல்லது பொருள்முதல்வாதி எங்கெல்ஸை அல்லது பொருள்முதல்வாதி ஃபாயர்பாக்கை அல்லது பொருள்முதல்வாதி ஜே. டிட்ஸ்ஜெனின்— மறுக்காது
போலவும் நடிக்கிறார்கள். மேலும் அவர்கள் "சமீபத்திய" மற்றும் "நவீன" நேர்க்காட்சிவாதம், இயற்கை விஞ்ஞானம் போன்றவற்றின் அடிப்படையில் பொருள்முதல்வாதத்தை மறுதலிக்கிறார்கள்.
மேற்கூறிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்ட விரும்பும் எவரும் நூற்று கணக்கான மேற்கோள்களைக் காட்ட முடியும்
என்றாலும் அவற்றை கூறாமலே, பஸாரோவ், போக்டனோவ், யுஷ்கேவிச், வாலண்டினோவ், செர்னோவ் [வி. செர்னோவ், தத்துவ மற்றும் சமூகவியல் ஆய்வுகள்,
மாஸ்கோ,
1907) ஆகியோரால்
பொருள்முதல்வாதத்தை எதிர்த்துப் போராடி வரும் வாதங்களை நான் குறிப்பிடுகிறேன்.
நூலாசிரியர் அவெனேரியஸின் தீவிர ஆதரவாளரும், பஸாரோவ் அண்ட் குழுவை போலவே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் எதிரியும் ஆவார்] மற்றும் பிற மாக்கியர்கள்.
இந்த பிந்தைய வார்த்தையை நான் முழுவதும் "அனுபவ-விமர்சகர்"
என்பதற்கு ஒத்த சொல்லாகப் பயன்படுத்துவேன், ஏனென்றால் இது சுருக்கமாகவும் எளிமையாகவும் உள்ளது,
மேலும் ரஷ்ய வழகாற்றில் ஏற்கனவே அங்கீகரிக்கப் பெற்றுள்ளது. எர்னஸ்ட் மாக் இன்று அனுபவத் திறனாய்வின் மிகவும்
பிரபலமான பிரதிநிதியாக இருக்கிறார் என்பது தத்துவ இலக்கியங்களில் உலகளவில்
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடரும்....