பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சன்மும் நூலை புரிந்துக் கொள்ள-2

 தத்துவம் நடைமுறையாக்கியதில் ரசிய கம்யூனிஸ்ட் கட்சி

சமூக வரலாற்றில்‌ திரளான பொது மக்களின்‌ இடத்தையும்‌ பங்கையும்‌ பற்றிய கேள்விக்கு விடை காண்பது அதன்‌ வளர்ச்சி விதிகளைச்‌ சரியாகப்‌ புரிந்துகொள்வதற்கு மிகவும்‌ முக்கியமானது. வரலாற்றை ஆக்குவது யார்‌? சமூகத்தின்‌ வளர்ச்சியின்‌ இயக்கு சக்தியாக விளங்குவது யார்‌ திரளான உழைக்கும் மக்களா, அல்லது தனித்தனி அசாதாரண நபார்களா? இந்தக்‌ கேள்வியைக்‌ குறித்துத்‌ தத்துவத்தில்‌ கடுமையான விவாதங்கள்‌ வெகு காலமாக நடந்து வருகின்றன. வரலாற்றில்‌ திரளான பொதுமக்களின்‌ பங்கைக்‌ குறைவாக மதிப்பிடுவதற்குச்‌ சுறண்டுவோர்‌ வர்க்கங்களின்‌ கொள்‌ கைவாதிகள்‌ எல்லா வகையிலும்‌ முயன்றுவருகிறார்கள்‌. வலிமைமிக்க தனி நபருக்கோ, செல்வமும்‌ அதிகாரமும்‌ படைத்தவர்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட, சிறந்தோர்‌ குழாம்‌ எனப்படுகிற, சமூகத்‌ தலைமைக்‌ குழுவுக்கோதான்‌ அவர்கள்‌ சமூக வாழ்க்கையில்‌ முதல்‌ இடம்‌ தருகிறாகள்‌. பிற்போக்குள்ள இந்த நோக்குக்கு எதிர்நிலையாக, திரளான பொதுமக்களே வரலாற்றின்‌ பிரதானப்‌ படைப்பாளி ஆகவும்‌ சமூக வளர்ச்சியின்‌ இயக்கு சக்தியாகவும் விளங்குகிறார்கள்‌ என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கிறது மார்க்சிய-லெனினியம்‌. அதே சமயம்‌ சமுதாய வாழ்வில்‌ தனிநபருக்கும்‌ முக்கியப்‌ பாத்திரத்தை அது மறுக்கவில்லை, மாறாக வலியுறுத்துகிறது. உச்சத்திலுள்ள, பணம்படைத்த வர்க்கங்களும்‌ அவற்றின்‌ பிரதிநிதிகளும்‌ மட்டுமே வரலாற்றில்‌ நிர்ணயகரமான பங்கு ஆற்றுகின்றனர் என்ற அபத்தமான, அசட்டுத்தனமான தப்பெண்‌ணத்தைச்‌ சமூக வளர்ச்சியின்‌ போக்கு நிராகரித்துவிட்டது. சமூகத்தின்‌ வளர்ச்சியில்‌ திரளான பொதுமக்கள்‌ நிர்ணயகரமான பங்கு ஆற்றுகிறார்கள்‌ என்ற மார்க்சிய-லெனினியப்‌ போதனை சரியானது என்பதைச்‌ சமூக வரலாறு உறுதிப்‌ படுத்திவிட்டது.

உழைக்கும் மக்களின் தலைவனாக கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு

முதலாளித்துவ அமைப்பின்‌ நிலைமைகளில்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி தொழிலாளி வர்க்கத்தின்‌ அரசியல்‌ தலைவனாகவும்‌ பூர்ஷ்வா வர்க்கத்துக்கு எதிரான அதன்‌ போராட்டத்தில்‌ படைத்‌ தலைமை நிர்வாகமாகவும்‌ விளங்குகிறது. கம்யூனிஸ்ட்‌ கட்சி உழைப்பாளிகளை உறுதியாக ஒன்றுபடுத்தி, பூர்ஷ்வா வர்க்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றவும்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ கைகளில்‌ ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கவும்‌ அவர்களது சக்தியை ஒன்று படுத்தி இயக்கிச்‌ செலுத்தும் வலிமை க.க இடமுள்ளது அதன் சாட்சிதான் முதன்முதலில்  மாபெரும்‌ லெனினால்‌ நிறுவப்பட்ட சோவியத்‌ யூனியன்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி இதற்கு ஒளிமிக்க எடுத்துக்காட்டு ஆகும்‌. இந்தக்‌ கட்சி முன்‌னாள்‌ ஜாராட்சி ரஷ்யாவின்‌ உழைப்பாளி மக்களை சமூகத்தைப்‌ புரட்சிகரமாக மாற்றி அமைக்கும்‌ பாதையில்‌ செலுத்தியது. வரலாற்று நோக்கில்‌ மிகக்‌ குறுகிய கெடுவுக்குள்‌ அவர்களை அணி திரட்டி சோஷலிஸக்‌ கட்டுமானத்திலும்‌ ஈடுபடுத்துவதில்‌ வெற்றி அடைந்தது. பிரமாண்டமான நாட்டை நூற்றாண்டுக்கணக்கான பொருளாதாரப்‌ பின்தங்கிய நிலையிலிருந்து மீட்டு, சமுதாய, விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றத்தின்‌ மிக மிக முன்னணி நிலைக்குக்‌ கொண்டுவந்தது. இதற்கு காரணம் லெனினின் மார்க்சிய தத்துவத்தின் அடிபடைகளை நடைமுறை படுத்தியதிலே அடங்கும்.

இந்த வெற்றிகளின்‌ ஊற்றுகண் எதில்‌ உள்ளது? கட்சியின் வாழ்க்கையில்‌ அதன்‌ தலைமைப்‌ பாத்திரம்‌ எதனால்‌ நிச்சயிக்கப்படுகிறது? முதன்‌ முதலாக, ரசிய கம்யூனிஸ்ட்‌ கட்சி யாவற்றிலும்‌ முன்னணியிலுள்ள புரட்சிச் சித்தாந்தமான மார்க்சிய-லெனினியத்தால்‌ உரம்‌ பெற்றது. சமூக வளர்ச்சிக்கு உரிய புறநிலை விதிகளை அறியவும்‌, இந்த விதிகள்‌ பற்றிய அறிவை ஆதாரமாகக்‌ கொண்டு வரலாற்று நிகழ்ச்சிகளில்‌ சரியான திசையைத்‌ தெரிந்துகொள்ளவும்‌, விஞ்ஞான அடிப்படை கொண்ட பொதுப்‌போக்கை வகுக்கவும்‌, இந்தப்‌ போக்கைச்‌ செயல்படுத்துவதற்குத்‌ திரளான வெகுஜனங்களை ஒழுங்கமைத்து அணிதிரட்டவும்‌ மார்க்சியம்‌-லெனினியம்‌ அதற்கு வாய்ப்பு அளிக்கிறது. 

கம்யூனிஸ்ட்‌ கட்சி தொழிலாளி வர்க்கத்தின்‌ நலன்களை, மிக விரிவான வெகுஜனத்‌ திரளின்‌ நலன்களை வெளிப்படுத்துகிறது. இதுவே அதன்‌ வலிமைக்குக்‌ காரணம்‌. கம்யூனிஸ்ட்‌ கட்சி உழைக்கும் மக்களுக்கான ஒன்றான முழுமையான கட்சியாகும்‌. 

சமூக பொருளியல்‌,  நலங்‌களின்‌ பிரதான உற்பத்தியாளியாக விளங்கும்‌ உழைப்பாளி மக்களுக்குத்‌ தொண்டு செய்வதே கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ குறிக்‌ கோளாகவும்‌ கடமையாகவும்‌ விளங்குகிறது. “கட்ச மக்களுக்காகவே நிலவுகிறது, மக்களுக்குத்‌ தொண்டு புரிவதையே தனது நடவடிக்‌ கைகளின்‌ அர்த்தமாகக்‌ கருதுகிறது'' என்று ரசிய  கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ செயல்திட்டத்தில்‌ கூறப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ வலிமைக்கும்‌ அதன் செயலுக்கும்  முதன்மையான ஊற்றுக்கண்ணாக விளங்குவது அதன்‌ தத்துவ், அரசியல்‌, ஸ்தாபன ஒற்றுமை ஆகும்‌. 

“பாட்டாளி வர்க்கக்‌ கட்சியின்‌ எஃகுக்‌ கட்டுப்பாட்டை (சிறப்பாக அதன்‌ சார்வாதிகாரக்‌ காலத்தில்‌) சிறிதளவாயினும்‌ பலவீனப்படுத்துபவன்‌ பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக பூர்ஷ்வா வர்க்கத்துக்கே உண்மையில்‌ உதவுகிறான்‌”(வி. இ, லெனின்‌. முழு நால்திரட்டு, தொகுதி 41, பக்கம்‌ 28. )என்று எழுதினார்‌ வி. இ. லெனின்‌. உணர்வுபூர்வமான கட்டுப்பாடும்‌ ஸ்தாபன அமைப்புமே உருவாகத்‌ திகழும்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி தனது நடவடிக்கைகளின்‌ எல்லாக்‌ கட்டங்களிலும்‌ உழைப்பாளி மக்கள்‌ திரள்களுக்கு வெற்றிகரமாகத்‌ தலைமை வகித்து இயக்கிச்‌ செல்கிறது, அவற்றின்‌ போராட்டத்தில்‌ கட்டுப்பாடு, ஒழுங்கமைப்பு ஆகியவற்றின்‌ உணர்வைப்‌ புகுத்துகிறது. 

மார்க்சிய-லெனினியச்‌ சித்தாந்தக்தாலும்‌ சமூக வளர்ச்சிக்கு உரிய விதிகள்‌ பற்றிய அறிவாலும்‌ உரம்‌ பெற்றுள்ள கட்சிதான்‌ மனிதகுல வரலாற்றிலேயே யாவற்றிலும்‌ மகத்தான சமூக மாற்றியமைப்புக்குத்‌ திட்டமிட்ட, விஞ்ஞான அடிப்படை கொண்ட பண்பை அளிக்க வல்லது. 

கம்யூனிஸக்‌ கட்டுமானக்‌ காலப்பகுதியில்‌ கட்சியின்‌ பங்கு அதிகரிப்பதற்குப்‌ பின்வரும்‌ காரணங்கள்‌ ரசிய  கம்யூனிஸ்ட்‌ கட்சிச்‌ செயல்திட்டத்தில்‌ குறிக்கப்பட்டுள்ளன:-

1). கம்யூனிஸக்‌ கட்டுமானத்தின்‌ பரிமாணமும்‌ சிக்கலும்‌ அதிகரித்‌தல்‌; பொதுமக்களின்‌ படைப்புச்‌ செயல்கள்‌ மிகுதல்‌; அரசாங்க நிர்வாகத்திலும்‌ உற்பத்தி நிர்வாகத்திலும்‌ அவர்கள்‌ ஈடுபடுத்தப்படுதல்‌;  விஞ்ஞானக்‌ கம்யூனிஸச்‌ சித்தாந்தத்தின்‌ முக்கியத்துவம்‌ அதிகரித்தல்‌; 2).உமைப்பாளிகளைக்‌ கம்யூனிஸ முறையில்‌ பயிற்று வதையும்‌ மனிதர்களுடைய உணர்விலிருந்து பழைமையின்‌ மீதி மிச்சங்களை அகற்றுவதற்கான போராட்டத்தையும்‌ தீவிரப்‌ படுத்துவதன்‌ இன்றியமையாமை. 

3). உழைப்பாளி மக்களின்‌ கூட்டுப்‌ பயிற்சி ஆசானாகவும்‌ அரசி யல்‌ தலைவனாகவும்‌ விளங்கும்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி, கம்யூனிஸதின்‌ பொருளியல்‌-தொழில்நுட்ப அடிப்படையை உருவாக்குவதிலும்‌, முதலாளித்துவ சமூக உறவுகளை சோசலிச சமூக உறவுகளாக மாற்றி அமைப்பதிலும்‌ மக்களின்‌ பிரமாண்ட மான ஆற்றலைத்‌ திறமையாக கையாண்டது. 

4). ரசிய  மக்களைக்‌ கம்யூனிஸ உணர்வில்‌ அது பயிற்றுவித்தது. திரளான வெகுஜனங்களின்‌ வரலாற்றுப்‌ படைப்பை ஒழுங்கமைப்பதும்‌ தூண்டிய தத்தவதுமாகக்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி விளங்கியதே இங்கே சிறப்பான துலக்கத்துடன்‌ புலப்படுகின்றது. 

வெகு ஜனங்களுடன்‌ தனது தொடர்புகளைக்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி விரிவாக்கி வலுப்படுத்துகிறது. சிக்கலான எல்லாப்‌ பிரச்‌சினைகளிலும்‌ அது மக்களைக்‌ கலந்து ஆலோச்சிக்கிறது, மக்களின்‌ கூட்டு அறிவையும்‌ அனுபவத்தையும்‌ ஆதாரமாகக்‌ கொள்‌கிறது. புதியவற்றைக்‌ கூர்ந்து கண்டுகொள்ளவும்‌ அதற்கு வழியைச்‌ செப்பஞ்செய்யவும்‌ முறைகளைகளையும்‌ இதனால்‌ அதற்கு முடிகிறது.  



இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்