சரியான கோட்பாடும், அதற்கான போராட்டமும்-என்ன செய்ய வேண்டும்?-2

என்ன செய்ய வேண்டும்? – நம் இயக்கத்தின் சூடேறிய பிரச்சனைகள் : வி.இ.லெனின்

மார்க்ஸ் லஸ்ஸாலுக்கு எழுதிய கடிதம் – 1852, ஜூன் 24

முன்னுரை

1. வறட்டுவாதமும், விமர்சன சுதந்திரமும்
அ. விமர்சன சுதந்திரம் என்பதன் பொருள் என்ன?
ஆ. விமர்சன சுதந்திரத்தின் புதிய ஆதரவாளர்கள்
இ. ரசியாவில் விமர்சனம்
ஈ. சித்தாந்த போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி எங்கெல்ஸ்

2. உழைக்கும் மக்களின் தன்னெழுச்சியும், சமூக ஜனநாயகவாதிகளின் உணர்வுபூர்வமும்
அ. “தன்னியல்பான எழுச்சிகளின் தொடக்கம்”
ஆ. தன்னியல்புக்கு தலைபணிதல் – ரபோச்சியே மிசல்
இ. சுய விடுதலைக் குழுவும் ரபோச்சியே தேலோவும்

3. தொழிற்சங்கவாத அரசியலும், சமூக-ஜனநாயகவாத அரசியலும்
அ. அரசியல் கிளர்ச்சியும் அதை பொருளாதாரவாதிகள் கட்டுப்படுத்துவதும்
ஆ. பிளக்கனோவின் அறிவை மார்தீனவ் ஆழப்படுத்திய கதை
இ. அரசியல் அம்பலப்படுத்தல்களும், “புரட்சிகரமான” நடவடிக்கைகளுக்கான பயிற்சியும்
ஈ. பொருளாதாரவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் பொதுவாக இருப்பது என்ன?
உ. ஜனநாயகத்துக்கு முன்னணிப் போராளி தொழிலாளி வர்க்கம் (பக்கம் 108 முதல் 128 வரை)
ஊ. மீண்டும் “தூற்றுவோர்”, “மருட்டுவோர்” எனும் பேச்சு (129 முதல் 133 வரை)

4. பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும், புரட்சியாளர்களின் அமைப்பும் (பக்கம் 134 முதல் 206) IV The Primitiveness of the Economists and the Organisation of the Revolutionaries (pages 87 to 132)
அ. பக்குவமின்மை என்பது என்ன? (பக்கம் 135 முதல் 139 வரை) A. What is Primitiveness (Page 87 to 90)
ஆ – பக்குவமின்மையும் பொருளாதாரவாதமும் (பக்கம் 140 முதல் 149 வரை) B. Primitiveness and Economism (Pages 90 to 96)
இ. தொழிலாளிகளின் அமைப்பும், புரட்சியாளர்களின் அமைப்பும் C. Organization of Workers and Organization of Revolutionaries
ஈ. அமைப்பு வேலையின் செயல்பரப்பு (171-180) – The Scope of Organizational Work (110-116)
உ. “சதி வேலைக்கான” அமைப்பும், “ஜனநாயக வாதமும்”
ஊ. உள்ளூர் வேலையும் அனைத்து ரசிய வேலையும் 192 முதல் 206 வரை F. Local and All Russian Work 123 to 132

5. ஓர் அனைத்து ரசிய பத்திரிகைக்கான “திட்டம்” (207 முதல் 242 வரை)
அ. “எங்கிருந்து தொடங்குவது” எனும் கட்டுரையால் கோபமடைந்தவர்கள் யார்? (208 முதல் 214 வரை)
ஆ. “எங்கிருந்து தொடங்குவது” எனும் கட்டுரையால் கோபமடைந்தவர்கள் யார்? (215 முதல் 231 வரை)
இ. “எங்கிருந்து தொடங்குவது” எனும் கட்டுரையால் கோபமடைந்தவர்கள் யார்? (232 முதல் 241 வரை)

6. முடிவு (242 முதல் 246 வரை)

7. பிற்சேர்க்கை “ரபோச்சியே தேலோவுடன்” “இஸ்க்ரா”வை ஒன்றுபடுத்தும் முயற்சி ( 244 முதல் 256 வரை)

என்ன செய்ய வேண்டும்? – நம் இயக்கத்தின் சூடேறிய பிரச்சனைகள் : வி.இ.லெனின்
மார்க்ஸ் லஸ்ஸாலுக்கு எழுதிய கடிதம் – 1852, ஜூன் 24
கட்சிப் போராட்டங்கள் → கட்சிக்கு வலிமை, உயிர்சக்தி. கொள்கையில் தெளிவின்மை, தெளிவான பாகுபாடுகளை பிரித்தல் இவற்றில் குழப்பம் → கட்சியில் பலவீனம். தன்னைத் தானே தூய்மைப் படுத்திக் கொள்தல் → வலிமை
முன்னுரை

  1. மே 1901-ல் எங்கிருந்து தொடங்குவது என்ற வெளியீட்டில் பேசப்பட்டிருந்த கருத்துக்களை விரிவாக விளக்குவதுதான் நோக்கம். ஆனால், எதிர்பார்த்ததை விட இந்த வெளியீடு தாமதமாக வெளியாகிறது. ஜூன் 1901-ல் வெளிநாடுகளில் உள்ள சமூக ஜனநாயக அமைப்புகளை ஒன்றுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி வெற்றிபெற்றிருந்தால், கட்சி அமைப்பு பற்றிய இஸ்க்ராவின் கருத்துக்களை மாறுபட்ட கண்ணோட்டத்திலிருந்து விளக்க வேண்டியிருந்திருக்கும். மேலும், அத்தகைய ஒற்றுமையோடு சமூக ஜனநாயக இயக்கத்துக்குள் நிலவும் இரண்டு போக்குகள் முடிவுக்கு வந்திருக்கும்.
  2. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. ரபோச்சியே தேலோ தனது 10-வது இதழில் தெளிவான பொருளாதாரவாதப் போக்கை வெளிப்படுத்திய பிறகு தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது என்பதை விளக்கவுள்ளேன். இந்தத் தெளிவற்ற, குழப்பமான ஆனால், விடாப்பிடியான போக்கை, பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் இந்தப் போக்கை எதிர்த்த உறுதியான போராட்டத்தை ஆரம்பிப்பது மிக மிக அவசியமானதாகியிருக்கிறது. அந்த வகையில் இந்த வெளியீட்டின் முந்தைய திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டியதாகிறது.
  3. அடிக்குறிப்புகள் – எங்கிருந்து தொடங்குவது, இஸ்க்ரா வரலாறு, வெளிநாட்டில் உள்ள சமூக ஜனநாயக அமைப்புகளுக்கிடையே பேச்சுவார்த்தை, ரபோச்சியே தேலோ வரலாறு
  4. எங்கிருந்து தொடங்குவது வெளியீட்டின் மூன்று பேசுபொருட்கள் – நமது அரசியல் கிளர்ச்சியின் தன்மையும், உள்ளடக்கமும். நமது அமைப்புத் துறை பணிகள். எல்லா பக்கங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் ஒரு அகில ரசிய அமைப்பை கட்டியமைப்பதற்கான திட்டம். இவற்றை ரபோச்சியே கசோத்தா பத்திரிகையில் வெளியிட முயற்சி எடுக்கப்பட்டது. முடிந்த வரை நேர்மறையான தொனியில், விவாதப் போக்கில் இல்லாமல் எழுதுவது என்பது சாத்தியமில்லாமல் போனது.
  5. பொருளாதாரவாதம் (பொருளாதாரவாதத்தை ஆதரிப்பவர்களுடன் ஒரு உரையாடல் என்ற கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட விரிவான பொருளில்) நாம் எதிர்பார்த்ததை விட உறுதியாகவும், விடாப்பிடியாகவும் தொடர்கிறது. முந்தைய கட்டுரையில் பேசப்பட்ட 3 விஷயங்களில் இருதரப்புக்கும் இடையேயான வேறுபாடுகள், அடிப்படை கோட்பாட்டு வேறுபாட்டில் இருந்து எழுபவை; ஒரு சில விபரங்கள் தொடர்பான கருத்து வேறுபாடு மட்டும் இல்லை என்பது தெளிவானது. மேலும், இஸ்க்ராவில் வெளியிடப்படும் கருத்துக்கள் பொருளாதார வாதிகளுக்கு ஏற்படுத்திய குழப்பம், இரு தரப்பும் வெவ்வேறு மொழிகளில் பேசுவது போல இருப்பதை தெளிவுபடுத்தியது. எனவே, அடிப்படையிலிருந்து தொடங்காமல் அடிப்படை புரிதலுக்கு வர முடியாது. எனவே, முடிந்த அளவு எளிய மொழியில், ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக் கொண்டு விளக்குவது என்று முடிவு செய்தேன். அதன்படி இந்த வெளியீட்டின் அளவு அதிகமாக வளர்ந்தது. எனவே தாமதத்துக்கு மன்னிப்பு கோருவதோடு, இந்த உரைநடையின் இலக்கிய தரத்தையும் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
  6. மேலே சொன்ன மூன்று பிரச்சனைகள் மையமான பங்கு வகித்தாலும் கூடவே இரண்டு கேள்விகளை பேச வேண்டியிருக்கிறது. “அப்பாவித்தனமான”, “சரியான” விமர்சன சுதந்திரம் என்ற முழக்கம் நம்மைப் பொறுத்தவரை போர்ப் பறை முழக்கமாக ஏன் இருக்கிறது என்பதையும், தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களில் நமது பங்கு என்னவாக இருக்க வேண்டும் போன்ற அடிப்படை கேள்விகளில் கூட இரு தரப்பும் ஒத்து போக முடியாததற்கு காரணம் என்ன என்பதையும் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
    அரசியல் கிளர்ச்சியின் தன்மை, உள்ளடக்கம் பற்றி பேசும் போது தொழிற்சங்க வாத அரசியலுக்கும் சமூக ஜனநாயக அரசியலுக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்க வேண்டியிருக்கிறது.
    நமது அமைப்புத் துறை பணிகளைப் பற்றி பேசும் போது, பொருளாதாரவாதிகள் தொழில்முறையற்ற முறைகளில் திருப்தி அடைவதையும், தொழில்முறை புரட்சியாளர்களைக் கொண்ட அமைப்பு இன்றியமையாதது என்ற நமது நிலைப்பாட்டையும் விளக்க வேண்டியிருக்கிறது.
    மேலும், அகில ரசிய செய்தித்தாள் பற்றிய நமது நிலைப்பாட்டை நான் விரித்து கூறியிருக்கிறேன். அதை எதிர்த்த ஆட்சேபங்கள் எதுவும் நிற்க முடியவில்லை, அகில ரசிய சமூக ஜனநாயக அமைப்பை கட்டுவதற்கு மாற்றுவழிகள் எதையும் இதுவரை யாரும் முன்வைக்கவில்லை.
    இறுதியாக, பொருளாதாரவாதிகளுடன் தீர்மானகரமான முறிவை தவிர்க்க இயன்ற முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் செய்தோம். ஆனால், ரபோச்சியே தைலோ பொருளாதார வாதத்துக்கு மட்டுமின்றி ரசிய சமூக ஜனநாயக இயக்க வரலாற்றின் ஒரு காலகட்டம் முழுமைக்குமான குழப்பம், ஊசலாட்டம் இவற்றையும் முழுமையாக, தெளிவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறது. எனவே ரபோச்சியே தைலோவுடனான விவாதம், கொஞ்சம் அளவுக்கு அதிகமாக விபரமானதாக தோன்றினாலும், இந்த காலகட்டத்துக்கு ஒரு முடிவு கட்டினால் ஒழிய நாம் எந்த முன்னேற்றத்தையும் சாதிக்க முடியாது.

A. வறட்டுவாதமும், விமர்சன சுதந்திரமும்

அ. விமர்சன சுதந்திரம் என்பதன் பொருள் என்ன?

  1. விமர்சன சுதந்திரம் என்பது அந்த காலகட்டத்தில் மிகவும் பயன்படுத்தப்படும் சொற்றொடராக, சோசலிஸ்டுகளுக்கும், ஜனநாயகவாதிகளுக்கும் இடையேயான விவாதங்களில் புழங்கும் சொற்றொடராக இருந்தது. அறிவியல், அறிவியல் ஆய்வுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை ஐரோப்பிய நாட்டு அரசியல் சட்டங்கள் ரத்து செய்து விட்டது போல தோன்றுகிறது? விவாதத்தின் ஒருதரப்பு விமர்சன சுதந்திரம் பற்றி அடிக்கடி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
  2. இந்த விவாதங்களின் உள்ளடக்கம் என்ன என்று பார்க்காமல் மேலோட்டமாக வெளியிலிருந்து ஒருவர் பார்க்கும் போது, “இதைப் பற்றி ஏன் பேச வேண்டும்? விமர்சன சுதந்திரம் என்பது பொதுவான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகத்தானே இருக்கிறது” என்று நினைப்பார்.
  3. சர்வதேச சமூக ஜனநாயக இயக்கத்தில் இரண்டு தெளிவான போக்குகள் உள்ளன. அவை அவ்வப்போது கொளுந்து விட்டு எரிகின்றன, இடைப்பட்ட காலங்களில் சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரில் நெருப்பாக கனன்று கொண்டிருக்கின்றன. “காலாவதியாகிப் போன வறட்டு சூத்திரவாத” மார்க்சியத்துக்கு எதிராக விமர்சன அணுகு முறையை கடைப்பிடிக்கும் புதிய போக்கின் சாராம்சம், பெர்ன்ஷ்டைனால் முன்வைக்கப்பட்டு மில்லராண்ட் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
  4. சமூக ஜனநாயக இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டங்கள் தேசிய எல்லைகளைக் கடந்து சர்வதேச அளவில் நடைபெறுகின்றன. முன்னர் லசாலியர்களுக்கும் ஐசநாகர்களுக்கும் இடையே, கெட்டு ஆதரவாளர்களுக்கும் சாத்தியப்பாடுவாதிகளுக்கும் இடையே, ஃபேபியன்களுக்கும் சமூக ஜனநாயகவாதிகளுக்கும் இடையே, நரோத்னியா வோல்யாவை பின்பற்றுபவர்களுக்கும் சமூக ஜனநாயகவாதிகளுக்கும் இடையே போராட்டங்கள் தேசிய எல்லைக்குள், தேசிய இயல்புகளுடன், வெவ்வேறு தளத்தில் நடைபெற்றன. ஆனால், இப்போது இங்கிலாந்து ஃபேபியன்களும், பிரெஞ்சு அமைச்சரவைவாதிகளும், ஜெர்மன் பெர்ன்ஷ்டைன் ஆதரவாளர்களும், ரசிய விமர்சகர்களும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் பாராட்டுகின்றனர், ‘வறட்டுச் சூத்திரவாத’ மார்க்சிசத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்துகின்றனர். இதுதான் சர்வதேச அளவில் சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக நடக்கும் சமூக ஜனநாயகவாதிகளின் போராட்டத்தின் பின்னணி. இந்த போராட்டம் பல ஆண்டுகளாக சர்வதேச சமூக ஜனநாயக இயக்கத்தில் நிலவும் சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கருதுகிறோம்.
  5. சமூக ஜனநாயகக் கட்சி சமூகப் புரட்சிக்கான கட்சியிலிருந்து சமூக சீர்திருத்தங்களுக்கான ஜனநாயகக் கட்சியாக மாற வேண்டும் என்ற கோரிக்கைக்காக பெர்ன்ஷ்டைன் பல புதிய வாதங்களையும், நியாயங்களையும் முன் வைக்கிறார்.
  6. சோசலிசத்துக்கு அறிவியல் அடிப்படை வழங்கி, வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வின்படி சோசலிச சமூகம் உருவாவதன் அடிப்படையையும், தேவையையும் நிரூபிப்பதன் அவசியம் மறுக்கப்படுகிறது.
  7. மக்கள் மேலும் மேலும் ஏதுமற்றவர்களாக்கப்படுவது, வறியவர்களாக்கப்படுவது, முதலாளித்துவ முரண்பாடுகள் கூர்மையடைவது போன்ற உண்மைகள் மறுக்கப்படுகின்றன.
  8. இறுதி இலட்சியம் என்ற கருத்துருவமே தவறானது என்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிராகரிக்கப்படுகிறது.
  9. மிதவாதத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையேயான கோட்பாட்டு வேறுபாடுகள் மறுக்கப்படுகின்றன.
  10. பெரும்பான்மையின் எண்ணப்படி ஆளப்படும் கறாரான ஜனநாயக சமூகத்தில் வர்க்கப் போராட்டம் என்ற கோட்பாடே தேவை இல்லை என்று அது மறுக்கப்படுகிறது.
  11. புரட்சிகர சமூக ஜனநாயகத்தை முதலாளித்துவ சமூக சீர்திருத்தம் நோக்கி திருப்புவதோடு கூடவே மார்க்சியத்தின் அடிப்படை அம்சங்கள் அனைத்தின் மீதான முதலாளித்துவ விமர்சனங்கள் சேர்ந்து வருகின்றன. பல காலமாகவே இத்தகைய விமர்சனங்கள் அரசியல் தளத்திலிருந்து, பல்கலைக் கழக பதவிகளிலிருந்து, வெளியீடுகள், பிரசுரங்கள் வடிவில் வெளியாகி வந்திருக்கின்றன. படித்த பிரிவினரின் இளையதலைமுறையினர் இந்த விமர்சனங்களை ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கின்றனர். எனவே, சமூக ஜனநாயக இயக்கத்தின் புதிய விமர்சனப் போக்கு ஜோவின் தலையிலிருந்து மினர்வா தோன்றுவது போல எழுவதில் வியப்பில்லை. இந்த புதிய போக்கின் உள்ளடக்கம் வளர்ந்து உருப்பெற வேண்டியதில்லை. முதலாளித்துவ புத்தகங்களிலிருந்து நேரடியாக சமூக ஜனநாயக புத்தகங்களுக்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
  12. பெர்ன்ஷ்டைனின் கோட்பாட்டு விமர்சனங்களும், அரசியல் விருப்பங்களும் யாருக்காவது புரியவில்லை என்றால் பிரெஞ்சுக் காரர்கள் இந்த புதிய போக்கை நடைமுறையில் அமல்படுத்தி காட்டியிருக்கிறார்கள். வர்க்கப் போராட்டத்தை ஒரு தீர்மானகரமான முடிவு வரை நடத்திச் செல்வது என்ற தமது பழைய பெருமையை பிரான்ஸ் இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது. பிரெஞ்சு சோசலிஸ்டுகள் கோட்பாடுகளிலிருந்து இன்றி நடைமுறையில் செயல்படுத்தியிருக்கின்றனர். மிகவும் முன்னேறிய ஜனநாயக சூழல்கள், பெர்ன்ஷ்டைன் வாதத்தை உடனடியாக நடைமுறையில் அமல்படுத்துவதை அதன் விளைவுகள் அனைத்தோடும் சாத்தியமாக்கியிருக்கிறது.
  13. மில்லராண்ட் அரசியல் பெர்ன்ஷ்டைன் வாதத்துக்கான மிகச் சிறந்த உதாரணத்தை வழங்கியுள்ளார். அதனால்தான் பெர்ன்ஷ்டைனும், வோல்மாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் நியாயப்படுத்தவும் விரைந்தனர்
    1. சமூக ஜனநாயக இயக்கத்தின் நோக்கம் ஜனநாயக சீர்திருத்தங்கள்தான் என்றால், சோசலிஸ்டுகள் ஏன் முதலாளித்துவ அமைச்சரவையில் சேரும் உரிமை இருப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு பங்கேற்க முயற்சிக்கவும் வேண்டும்.
    2. ஜனநாயகம் என்பது வர்க்க ஆதிக்கத்தை ஒழித்து விடுவது என்றால், அத்தகைய அமைச்சர் ஒருவர் வர்க்க ஒத்துழைப்பு பற்றி முதலாளிகளின் மனம் குளிரும்படி ஏன் உரையாற்றக் கூடாது!
    3. தொழிலாளர்களை ஆயுதப்படையினர் சுட்டுத் தள்ளி, வர்க்கங்களின் ஜனநாயக ஒத்துழைப்பின் உண்மையான தன்மையை வெளிப்படையாக அறிவித்த பிறகும் அமைச்சரவையில் ஏன் தொடரக் கூடாது!
    4. தூக்குமரம், குண்டாந்தடி நாடு, கடத்தலின் வீரன் என்ற பெயர்களால் சோசலிஸ்டுகளால் அழைக்கப்படும் ஜார் மன்னனை வரவேற்பதற்கு அந்த அமைச்சர் நேரடியாக பங்கேற்பதில் என்ன தவறு!
  14. தொழிலாளர்களின் சமூக ஜனநாயக உணர்வை மழுங்கடிக்கச் செய்வது (அந்த உணர்வுதான் நமது வெற்றிக்கான ஒரே அடிப்படை) என்ற இந்த நடவடிக்கைகளுக்கான ஒரே பிரதிபலன், முதலாளித்துவ சீர்திருத்தங்கள் என்ற படோடபமான அறிவிப்பு மட்டும்தான். இதைவிட அதிகமாக முதலாளித்துவ அரசுகளிடமிருந்து வெல்லப்பட்டிருக்கிறது.
  15. கண்ணை வேண்டுமென்றே மூடிக் கொள்ளாத யாரும் சோசலிச இயக்கத்தின் புதிய போக்கான விமர்சனப் போக்கு என்பது சந்தர்ப்பவாதத்தின் புதிய வெளிப்பாடுதான் என்று புரிந்து கொள்ள முடியும். நபர்களை பகட்டான சீருடைகளையும், தமக்குத் தாமே அவர்கள் கொடுத்துக் கொள்ளும் பெயர்களாலும் மதிப்பிடாமல் அவர்களது நடத்தையிலிருந்தும், உண்மையில் எதை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதிலிருந்தும் மதிப்பிட்டால் விமர்சன சுதந்திரம் என்பது சந்தர்ப்பவாதத்துக்கு சுதந்திரம் அளிப்பதுதான், சமூக ஜனநாயகத்தை சுதந்திரத்துக்கான ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதுதான், முதலாளித்துவ கருத்துக்களை, முதலாளித்துவ கூறுகளையும் சோசலிசத்துக்குள் கொண்டு வருவதுதான் என்று புரிந்து கொள்ள முடியும்.
  16. சுதந்திரம் என்பது மிகவும் பகட்டான வார்த்தை. ஆனால்,
    1. தொழில்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில் மிகவும் கொடூரமான போர்கள் நடத்தப்படுகின்றன.
    2. தொழிலாளர்களுக்கு உழைப்பு சுதந்திரம் என்ற பெயரில் உழைக்கும் மக்கள் மோசமாக சுரண்டப்படுகிறார்கள்.
    3. அது போல விமர்சன சுதந்திரம் என்பதன் நவீன பயன்பாட்டில் ஒரு உள்ளார்ந்த போலித்தன்மை உள்ளது.
    அறிவியலில் உண்மையான முன்னேற்றம் அடைந்ததாக கருதுபவர்கள், பழைய கருத்துக்கள் புதிய கருத்துக்களுடன் அக்கம்பக்கமாக இருக்கலாம் என்று வாதிட மாட்டார்கள். பழைய கருத்துக்களின் மேல் புதிய கருத்துக்கள் எழுதப்பட வேண்டும் என்றுதான் கூறுவார்கள். “விமர்சன சுதந்திரம் வாழ்க” என்ற முழக்கம், வெற்று பீப்பாய் பற்றிய கதையை நினைவூட்டுகிறது.
  17.  நாம் ஒரு செங்குத்தான, கடினமான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம். நம்மை எதிரிகள் சூழ்ந்திருக்கிறார்கள், அவர்களது தாக்குதலை எதிர்கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். நாம் ஒருவர் ஒருவர் கைகளை பிடித்துக் கொண்டு உறுதியாக நடக்கிறோம். சுதந்திரமாக எடுக்கப்பட்ட முடிவின்படி எதிரிகளை எதிர்த்து போராடவும், அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் பின்வாங்காமல் இருக்கவும் தீர்மானித்துள்ளோம்.
  18. அந்த சதுப்பு நிலத்தில் வசிப்பவர்கள் பல காலமாகவே நமது போராட்டப் பாதையை விமர்சித்து அவர்களுடன் சமரசத்துக்கு வராமல் இருப்பதை குறை கூறி வருகிறார்கள். இப்போது நம் மத்தியில் உள்ள சிலர் சதுப்பு குழிக்குள் போய் விடலாம் அழைக்கிறார்கள். அது குறித்து அவர்களை அவமானப்படுத்தினால், “நீங்கள் பிற்போக்குவாதிகள், சிறந்த ஒரு பாதையில் நடப்பதற்கு உங்களை அழைப்பதற்கான எங்கள் சுதந்திரத்தை மறுக்கிறீர்கள்” என்கிறார்கள். “உண்மைதான் நண்பர்களே, சிறந்த பாதைக்கு போவதற்கு உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் சதுப்பு குழிக்குள் தாராளமாக போகலாம், அதுதான் உங்களுக்கு சரியான இடம் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், சுதந்திரம் என்ற வார்த்தையை களங்கப்படுத்தாதீர்கள், எங்கள் கையையும் விட்டு விடுங்கள். நாங்கள் விரும்பும் பாதையில் செல்வதற்கு எங்களை விடுங்கள். சதுப்பு குழியை எதிர்த்து மட்டுமின்றி அதற்குள் எங்களையும் இழுத்துப் போக நினைக்கும் உங்களையும் எதிர்த்து போராட எங்களுக்கு சுதந்திரம் உள்ளது.”

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்