இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை
நூல் அறிமுகம்-விமர்சனம்/நக்ஸல்பாரி: ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல – இரா.முருகவேள் நூலாசியர் இயக்க வரலாற்றின் பக்கங்களை நம் முன் விரித்து வைக்கிறார்.
இன்று அன்றைய உழைக்கும் மக்களின் விடுதலைக்காக வீருகொண்டெழுந்த கட்சியானது இன்று ஏன் பின்னடைவை சந்தித்துள்ளது என்றால் உலகமயமாக்கல் மட்டுமல்ல உழைக்கும் மக்களின் அரசியலை பேச முன்வராத நம் இன்றைய தலைவர்கள் நம் ஆசான்கள் புரட்சிக்கான கட்சி கட்டி தன் நாட்டில் புரட்சியை சாதிக்க செயல்பட்ட நிகழ்வுகளை. இங்கே தாங்கள் மட்டும்தான் கட்சி தாங்கள் முன் வைக்கும் செயல்தந்திரங்கள் புரட்சிக்கானவை என்றும் தனித்தனி குழுக்கள் தங்களின் குறுங்குழுவாத நிலையில் நின்று செயலாற்றிக் கொண்டிருப்பதை கணக்கில் கொள்ள வேண்டும் புரட்சியை நேசிப்பவர்கள்.
ஆக வரலற்றை மீண்டும் வாசிக்கும் பொழுது சரியானவற்றை கணகில் கொள்வதும் எதிர்கால தவறுகளை களைவதற்கான வழிகாட்டியாகவும் கொள்ள வேண்டியுள்ளது.அவசியம் வாசிக்க வேண்டிய நூல்... தோழருக்கு வாழ்த்துகள்.
கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் ஏற்கெனவே நாங்கள் தெரிந்து வைத்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, எங்களுக்கு இன்னமும் தெரியாமல் இருக்கும், எங்கள் தொழிற்சாலை அனுபவத்தில் இருந்தும், பொருளாதாரப் போராட்டத்தில் இருந்தும் என்றைக்கும் கற்றுக் கொள்ள முடியாத, கம்யூனிச அரசியலை அதிகமாகப் பேச வேண்டும்.
கம்யூனிஸ்ட்டான நீங்கள் இவ்வறிவை பெற முடியும், இதுவரை செய்ததைக் காட்டிலும், நூறு மடங்காக, ஆயிரம் மடங்காகக் கம்யூனிச அறிவை எங்களிடம் கொண்டுவர வேண்டியது உங்களது கடமை. -மிகவும் காட்டமாகத்தான் லெனின் தொழிலாளர் பார்வையில் கூறினார்.
ஆகையால் ஒரு நாட்டில் பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சி இல்லை என்றால் பாசிசத்தை எதிர்த்துப் போராடி வீழ்த்த முடியாதா?, நிச்சயமாக முடியாது. இதில் எவ்விதமான சந்தேகமும் வேண்டாம். இத்தகைய சூழலில் பாசிஸ்டுகளின் ஒடுக்குமுறைகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் போராட்டங்கள்தான் நடக்கும். அத்தகைய போராட்டங்களும் பெரும்பாலும் மக்களின் தன்னியல்பான போராட்டங்களாகவே இருக்கும். இத்தகைய சூழலில் கம்யூனிஸ்டுகள் என்ன செய்ய வேண்டும்? கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. அத்தகைய ஒன்றுபட்ட பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டாதவரை கம்யூனிஸ்டுகளால் ஒன்றுமே செய்ய இயலாது. இதுதான் இன்றைய இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. இங்கே போல்ஷ்விக் பாணியிலான பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சி இருக்கிறதா? இல்லை என்பதே உண்மையாகும். கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் ஒற்றுமை இருக்கிறதா? இல்லை என்பதே உண்மையாகும். பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் தடுக்க முடிந்ததா? இல்லை என்பதே உண்மையாகும். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கொண்டுவரப்படும் பிற்போக்கு மற்றும் மக்களுக்கு கடுமையான பாதிப்பை கொடுக்கும் கல்வியை தடுக்க முடிந்ததா? ஆகவேதான் தற்போதைய சூழலில் பாசிச ஆட்சியாளர்கள் தொடுக்கும் அடக்குமுறைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்துப் பிரிவினரும் ஒன்றுபட்டு போராடுவதும், மறுபுறத்தில் மிகச் சிறந்த கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்டும் பாடுபட வேண்டும்.
கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் எந்த அளவுக்கு மார்க்சிய லெனினிய அறிவுள்ளவர்களாக வளர்க்கப்படுகிறார்களோ அந்தளவுக்கு ஒரு ஒன்றுபட்ட பலம் வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியை நாம் கட்ட முடியும். ஆகவே கட்சிக்குள் தனிநர்கள் அல்ல முக்கியமான பிரச்சனையாகும். கொள்கைதான் முதன்மையான பிரச்சனையாகும் என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உணர்ந்துகொள்கைகளில் எது சரியானது எது தவறானது என்பதை வேறுபடுத்திப் பார்க்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்குமாறாக தனக்குப் பிடித்தவர்கள் சொல்வதெல்லாம் சரி என்று கண்மூடித் தனமாக நம்பக் கூடாது.
இந்த அமைப்புகளின் தலைவர்கள் தனிவுடமை சிந்தனைமுறையையும் பழக்க வழக்கங்களையும் கைவிடாதது மட்டுமல்லாமல் கட்சி உறுப்பினர்களும் இவர்களைப் போலவே பிற்போக்கு சிந்தனையாளர் களாகவே வளர்த்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்கமுடிகிறது. திட்டம் போர்த்தந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் இவர்கள்,சரியானது எது? தவறானது எது? என்று பிரித்துப் பார்க்கும் மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கட்சி உறுப்பினர்களும் வளர்த்துக்கொள்வதற்கு முயற்சி செய்யாமல் ஏதேதோ பேசி தங்களை பெரிய அறிவாளிகள் போல் கட்சி உறுப்பினர்களிடம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். கட்சிக்குள் நான் பெரிய அறிவாளியா? அல்லது நீ பெரிய அறிவாளியா? என்ற போட்டி உருவாகி தனிநபர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுவிட்டால் அமைப்பு பிளவில் போய் முடிந்துவிடுகிறது.
இந்த அமைப்புகளின் பிளவிற்கான வரலாற்றை நாம் ஆராய்ந்து பார்த்தால் தனிநபர்களுக்கு இடையிலான முரண்பாடே பிளவுகளுக்கு பெரும்பாண்மையாக காரணமாக இருப்பதை நாம் அறியலாம். இதற்கு எதிராக நாம் போராட வேண்டுமானால் மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழியில் நாம் மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை வளர்க்க வேண்டும், சுய வளர்ச்சி பயிற்சியைப் பெற வேண்டும். இவ்வாறு பல சிறுகுழுக்களாக பிளவுபட்டவர்களால் எதையுமே சாதிக்க முடியாது என்பதுஇவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருந்த போதிலும் இவர்கள் குழுவாகவே நீடிக்க விரும்புகிறார்களே ஏன்? இவர்களது நோக்கம் மக்கள் விடுதலையோ சமூக மாற்றமோ அல்ல. மாறாக இவர்களை சிலர் புகழ வேண்டும், இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களது லட்சியம். இத்தகைய தலைவர்களையும் இத்தகைய அமைப்பையும் நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதாகவே அமையும். எனினும் இந்தத் தலைவர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து மார்க்சிய லெனினிய வழியில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு முயற்சி செய்வாகள் என்றால் அவர்களை நாம்ஆதரிக்கலாம், வரவேற்கலாம்.
இலக்கு 57 இணைய இதழ் pdf வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே