செப்டம்பர் 12 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மறந்து போனவை

 அரசியல் சூழ்நிலைகள் புரியாப் புதிர்களான சட்டங்கள் கடும் சிக்கலான தத்துவங்கள் ஆகியவற்றாலாகிய புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்க போராட்டத்தை பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடமை அற்றோர் அனைவரின் தலைமையில் நிற்கும் சொத்திலா பெருந்திரளாகிய பாட்டாளி வர்க்கத்திற்கு இடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படி கண்டறிந்து கொள்வது என்று அது நமக்கு கற்றுக் கொடுத்தது. புரட்சிகர கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுப் படுத்திற்று: சமுதாயத்தை திருத்தி அமைப்பதற்கு திட்டங்களை வரைவது அல்ல தொழிலாளர்களுடைய நிலைமைகளை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவது அல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெல்வதையும் சோசலிச சமுதாய ஒழுகமைக்கப் படுவதையும் இறுதி குறிக்கோளாய் கொண்ட இந்த வர்க்க போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று.இங்கே இந்த தத்துவத்தை புதுப்பிப்பதாக சிலர் கூறிக் கொள்கிறார்கள்” என்கிறார் ஆசான் லெனின். 

ஆனால் ஒவ்வொருஆண்டும் 12 செப்டம்பருக்கு தன் இயக்க முன்னோடிகளும் இயக்கதிற்காக தியாகம் செய்த தோழர்களின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்தும் விதமாக தருமபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் நக்சல்பாரியின் தொடர்சியாக உதித்த பிளவுண்ட ஒரு குழுவின் அன்றைய அரசியல் போராட்டத்தில் மக்கள் மத்தியில் களமாடிய தோழர் களின் பணியானது பல்வேறு அடக்குமுறைகளை உடைத்தெரிந்து மக்களின் பிரச்சினையை தீர்க்கவல்ல தாக அவர்களின் உற்ற தோழனாக அன்றைய தோழர்கள் செயல்பட்டதனால் அவர்கள் மக்களின் நண்பர்களாக ஆளும் வர்க்கதின் எதிரியாக அவனின் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்துகுரல் கொடுத்தமையால் அவர்கள் பின் உழைக்கும் மக்கள் அணிதிரண்டனர். இன்று நிலை என்ன இவர்கள் சிந்திக்க தயாரா?

தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதன் நோக்கம் என்ன? இவர்கள் சிந்தித்திருப்பார்களா? மாலை போடுவதும் கோஷமிடுவதும் உண்மையான அஞ்சலியாகி விடுமா? தியாகிகளின் இலட்சியம் கானல் நீராக உள்ளது ஆனால் இங்கே குழுக்களே புரட்சியை சாதித்து விடுவது போல் வின்னதிர முழக்கமிடுவது அரசிற்கு சொல்லவா அல்லது உழைக்கும் மக்களை அணி சேர்க்கவா?வருத்தமாக உள்ளது இந்த குறுங்குழுவாதத்தில் மூழ்கி போன ஒவ்வொரு அமைப்பின் செயலும். எந்த குழுவையும் தனித் தனியாக நான் விமர்சிப்பதனால் பெரிய மாற்றத்தை உங்களிடம் வந்துவிட போதில்லை இருந்தும் இவர்ககளை போன்றோர் புரட்சிக்கான பணியினை செய்ய போவதில்லை என்பதனை புரட்சிக்கு ஏங்கும் கூட்டம் புரிந்துக் கொள்ளவாவது உதவும் என்ற நோக்கதில் இதனை எழுதுகிறேன்.

குறுங்குழுவாத தோழர்களே.

நான் இலக்கு ஆசிரியர் சார்பாக ஜீலை மாதம் (2024) இங்கு மாலை அணிவிக்கும் அமைப்பின் முக்கிய மூன்று பிரிவின் முதனமையான் தோழர்களிடம் ஒரு கடிதம் கொடுத்தேன். அவை பிரிந்துக் கிடக்கும் பல அமைப்புகள் ஒருநாள் அந்த நிகழ்வில் ஒன்றுபட்டு மாலை அணிவித்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத என்ற கேள்வியின் அடிப்படையில் சந்தித்து உறையாடி ஒரு பயனும் இல்லை அதனை பற்றியே இந்த பகுதியை எழுதுகிறேன்.

கீழ்காணும் கடிதத்தை யாருக்கு கொடுத்தேன் என்ன பதில் என்பதல்ல விவாதம்.

அன்று மூன்றாக பிரிவாக பிரிந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதில் புதிய ஒரு முன்னேற்றமோ அல்லது திசை விலகளோ மூன்றாம் ஒரு போக்கை இந்த 12 செபடம்பர் நிகழ்வில் காண நேர்ந்தது. அதனை பற்றி பின்னர் எழுதப்போகிறேன். அதற்கு முன்னர் நாங்கள் முன் வைத்த கடிதம் எழுத்து வடிவில் அப்படியே கீழே...

கூட்டுமுயற்சிக்கான ஒரு விவாதம்.

தோழர்களுக்கு வணக்கம்,

செப்டம்பர் 12 தியாக தோழர்களின் நினைவு நாளில் ஒன்றுபட்டு கொடியேற்றுவதும் மாலை அணிவிப்பதும் குறித்து விவாதிக்கதான் தோழர்களே.

நக்சல்பாரிகளின் தொடர்ச்சியாய் தமிழகத்தில் உதித்த புரட்சிக்கான வித்தான கட்சி அதன் தொடர்ச்சி இன்று பல்வேறு பிரிவாக பிரிந்துக் கிடகின்றன. அதில் மார்க்சிய லெனினியத்தை ஏற்பவர்கள் குறித்து மட்டுமே இங்கே விவாதிக்கிறோம். மா-லெ ஏற்காதவர்களை பற்றி இங்கு பேச்சு இல்லை.

எத்தனை பிரிவாக இருந்தாலும் மார்க்சிய லெனினியத்தை நேசிப்போர் உண்மையிலுமே சமூக மாற்றத்தை விளைவோரே ஆக அவர்கள் தேடும் வழிமுறைகள் வேறாக இருக்கலாம் ஆனால் கண்ணோட்டம் நோக்கம் ஒன்றாக உள்ளவர்களை தற்காலிக தேவையில் இணைக்கலாமே தோழர்களே

சில முதலாளித்துவ கட்சிகள் பின்னால் கூட சில நேரங்களில் அணி சேர அவசியம் ஆகிறது. அதற்காக கொள்கை கோட்பாடுகளை துறந்துவிட்டு அவர்கள் பின்னால் செல்வதில்லை. ஆனால் குறிப்பான பிரச்சினைக்காக ஒன்று சேர்வது போல், நமது முன்னோடிகள் நமது வழிகாட்டிகள் சென்ற பாதையை நாம் பின்பற்றும் பொழுது அவர்களை நினைவை அவர்களின் சபதத்தை நிறைவேற்ற நினைக்கும் எல்லோரும் ஒரு நிகழ்வில் ஒன்றாக சில மணி நேரம் இணைந்து செயல்படமுடியாதா தோழர்களே?

நம்மை ஒன்றிணைய தடுப்பது எவை சற்று அலோசியுங்கள். மா-லெ நமக்கான வழிமுறையை தெளிவாக காண்பிக்கிறது தோழர்களே. அந்த பாதைக்கான பயணம் தோழர் லெனின் குழுக்களை இணைக்க கூறியவைதான், “ஜார் கொடூரனை எதிர்த்து தனித்தனியான குழுக்களாக பிரிந்துக் கிடக்கும் பொழுது அவனை வீழ்த்த முடியாது, அதனால் சக்தி வாய்ந்த கட்சியின் அவசியம் என்பதோடு புரட்சிகர கட்சியை கட்டியதும் புரட்சி நடத்தியதும் எல்லோரும் அறிந்தவைதானே”. நாம் பிரிந்து கிடப்பதனால் பயன் உண்டா? சிந்தியுங்கள் தோழர்களே?

இந்த தற்காலிக நிகழ்வு பயனளித்தால் தொடர்ந்து விவாதித்து செயல் படுங்கள் இல்லையேல் இந்த நிகழ்வு பயனுள்ளதா இல்லையா பரிசீலிக்கவும் தோழர்களே.

தோழமையுடன்

இலக்கு ஆசிரியர் குழு

உங்களின் மேலான கருத்துகள் மேலும் தொடர்ந்து விவாதித்து கூட்டு முயற்சியை எட்டும் வரை மார்க்சிய லெனினிய வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவோம் தோழர்களே.

வாட்சாப் எண்- 7010134299 மற்றும் பதிலளிக்க இமெயிலிலும் இலக்கு இணையபகுதியில் அளிக்கலாம் தோழர்களே.

ஒவ்வொரு குழுவும் தாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் என்றும் குறுங்குழுவாத நிலையில் உள்ளவர்கள் இன்றுவரை பதிலளிக்கவே இல்லை அதனை பற்றி நான் பேசப்போவ தில்லை. ஆனால் குறிப்பான ஒருவரின் உறையாடலை சுட்டிக்காட்ட விளைகிறேன். “சிலர் ஒன்றுபடுவதற்கு தடையாக உள்ளதாகவும் அவை ஏன் என்றும்” கூறினார். அவர்களிடம் நாம் ஏன் விவாதிக்க கூடாது என்றேன் பார்கலாம் என்ற அந்த தோழரை மூன்றுமுறை சந்தித்தும் அவர்கள் மாறாநிலைவாதிகளாக உள்ள பொழுது உண்மையில் தங்களுக்குகான பணியினை புரிந்துக் கொள்ளாமல் சிந்திகிற பொழுது அவர்கள் ஒன்றினைவதற்கான விருப்பத்தை விட தலைமையும் தற்புகழ்சியும் அவசியம் போல் தெரியவே அவர்களின் குழுவாதபணி தொடரவே செய்கிறது.

இந்த விவாதம் குறுங்குழுவாத நிலையில் உள்ளதை கணக்கில் கொள்வதோடு இவர்கள் மா-லெ- மாவோ சிந்தனையை புரிந்திருப்பார்களா என்பதே கேள்வியாக இருப்பதால் இவர்களை விமர்சித்தே தொடரும் இந்தப் பகுதி.

சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது புரட்சி நடத்தி சாதனைபுரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் சில அறிவுஜீவிகள் அகம்பாவம் பிடித்து தற்புகழ்ச்சிக்கு ஆளாகினார்கள். அத்தகைய தோழர்களால் கட்சிக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தே சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு இதுபோன்ற குட்டிமுதலாளித்துவ பண்புகளை கைவிடவேண்டும் என்று கூறியது.

ஆனால் சீனாவைப் போல் இங்கு புரட்சி எதுவும் நடத்தப்படாத சூழலிலும், ஒரு பலம் வாய்ந்த கட்சி இல்லாமலும் குழுக்களாகவே நீடித்துக்கொண்டுள்ள சூழலில் இந்த குழுக்களிலும் கட்சிக் குள்ளும் செயல்படும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் இந்த குட்டிமுதலாளித்துவ நோயான தற்பெருமை, அகம்பாவம், பிறரை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் தன்மைகள் நீடிப்பது எவ்வளவு பெரிய அபாயம் என்பதை உணர்த்தி இத்தைய குட்டிமுதலாளித்துவ பண்புகளான அகம்பாவத்தை கைவிட்டு பாட்டாளி வர்க்க பண்பை உயர்த்திப் பிடித்து செயல்பட வேண்டும்.

மேலும், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மார்க்சிய லெனினிய வாதிகள் பல குழுக்களாக பிளவுபட்டு சிதைந்து இருக்கிறார்கள். அதற்கு முதன்மையான காரணம் அந்த குழுக்களின் தலைவர்களிடமுள்ள குட்டிமுதலாளித்துவ பண்பான “தான்” என்ற அகம்பாவம்தான். தமிழகத்தி லுள்ள குட்டிமுதலாளித்துவ வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இந்த பண்பு இயல்பாக காணப்படுகிறது. இந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களி லிருந்து வருபவர்கள்தான் இந்தக் குழுக்களில் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இயல்பாக உள்ள இந்த குட்டிமுதலாளித்துவ பண்பை கைவிட்டு பாட்டாளி வர்க்க பண்பை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவும் பிறரிடமிருந்தும் பிற குழுக்களிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவதன் மூலமே பாட்டாளிவர்க்க முன்னணியில் பலரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பொதுக்கொள்கையை உருவாக்கி ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்ட முடியும்.

மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் – செருக்கையும் சுயதிருப்தியையும் ஒழித்துக்கட்டுதல் குறித்து மத்தியக் குழுவின் வழிகாட்டுதல்.

டிசம்பர் 13, 1963.

(மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி ஒன்பது – பக்கம் 56)

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அறிக்கை கீழே:-

நமது தோழர்களிடம் பொதுவாகக் காணப்படும் குறைகளை இப்படிப் பட்டியலிடலாம். சுயதிருப்தி, தற்பெருமை; மார்க்சிய இயக்கவியல், பகுப்பாய்வு அணுகுமுறை – அதாவது ஒன்றை இரண்டாகப் பகுத்து ஆய்தல் (சாதனைகள், குறைபாடுகள் என இரண்டாக) இவற்றை தமது செயல்பாடுகளில் பொருத்திப் பார்க்கத் தவறுதல்; தமது தளத்தில் என்ன வேலை உண்டோ அதை மட்டும் செய்வது; சாதனைகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது, குறைபாடுகளையும் தவறுகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பது; முகஸ்துதியை விரும்புவது, விமர்சனங்களை வெறுப்பது; உயர், நடுத்தர கட்சி ஊழியர்களை அவர்களது மாகாணங்கள், நகரங்கள், ஊர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறைகளில் மட்டும் அல்லாது, பிற மாகாணங்கள், நகரங்கள், ஊர்கள், பிற துறைகளிலும் களப்பணி ஆற்றச் செய்து தமது அனுபவங்களை தமது பிரதேசம் மற்றும் துறைகளிலும் பொருத்திப் பார்த்து ஒப்பீடு செய்து தமது பணிகளை மேலும் கூர்மைப்படுத்துவது ஒரு சிறந்த அணுகுமுறை.

ஆனால் இத்தகைய களப்பணிகளில் ஆர்வமின்றி இருப்பது; தமது மாவட்டத்தில், தனது துறையில் மட்டும் கவனம் செலுத்துவது, (குறுகிய பிரதேசமான) அங்கே தனது பணிகளைப் பற்றித் தானே பீற்றிக்கொண்டு அகங்காரம் கொள்வது, இதனால் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றிவருவது, வெளியே இருக்கும் ஒரு மிகப்பரந்த உலகைப் பற்றிய பார்வையோ அறிவோ இன்றி இருப்பது; மத்தியக் குழுவால் ஆங்காங்கே அனுப்பப்படுகின்ற வெளிநாட்டு விருந்தினர்கள், நாட்டின் பிற பகுதிகளிலிருந்துவரும்விருந்தினர்களுக்கு, தத்தமது சாதனைகளைப் பற்றி மட்டுமே பெருமையாக எடுத்துக் கூறுவது, குறைகளை மறைப்பது, தமது பணிகளைப் பற்றியே கூட மேம்போக்காகப் பேசுவது, ஆர்வமின்றி இருப்பது.

இதுபோன்ற குறைபாடுகளை நமது தோழர்களிடம் பலமுறை சுட்டிக்காட்டி “திருந்துங்கள்”என்று வேண்டிக் கொண்டோம். ஒரு கம்யூனிஸ்டின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

எந்த ஒரு விசயத்தையும் மார்க்சிய இயக்கவியல் பார்வையோடு அணுக வேண்டும். சாதனைகள் இருக்கும்போது குறைபாடுகளும் இருக்கும். உண்மை இருக்கும்போது உண்மைக்கு நேர்மாறான தவறுகளும் இருக்கும்.

எல்லா விசயங்களும் இயக்கங்களும் எப்போதும் இயங்கிக்கொண்டே வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. பொருளாதாரம், அரசியல், தத்துவம், கலாச்சாரம், ராணுவம், கட்சி எனவும் இன்னபிற அனைத்தும். இதுதான் ஒரு மார்க்சியவாதியின் பொதுவான அடிப்படை புத்தியாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறை என்னவாக இருக்கின்றது? மத்தியிலும் கீழ்மட்டங்களிலும் இருக்கின்ற பல தோழர்களுக்கு இதுபோன்ற பார்வையும் இல்லை, தமது பணிகளில் இதுபோன்ற அணுகுமுறையும் இல்லை. அவர்கள் மனங்களில் மரத்துப்போன பழங்கோட்பாடு ஆழமாக வேர்விட்டுப் பதிந்துபோய் உள்ளது.

அவர்களால் அதைப் பிடுங்கி எறியமுடியாத அளவுக்கு அது பலமாக உள்ளது. மரத்துப்போன பழங்கோட்பாட்டு எதிர்மறைக்கூறுகளின்ஒருங்கிணைவை மறுக்கின்றது, எதிர்மறைக் கூறுகளின் நேரெதிர் குணாம்சங்களை மறுக்கின்றது (ஒன்றை இரண்டாகப் பிரித்துப் பார்ப்பது), ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இரண்டு நேரெதிர் கூறுகள் தனது குணாம்சங்களை தலைகீழாக மாற்றிக்கொள்ளும் என்ற கோட்பாட்டை மறுக்கின்றது. விளைவு என்ன? இந்த தோழர்களுக்கு சுயதிருப்தியும், அகங்காரமும் தலைக்கு ஏறுகின்றது; தமது சாதனைகளைப் பற்றி பெருமை பேசுவார்கள், பலவீனங்களையோ குறைகளையோ கண்டுகொள்ள மாட்டார்கள்; தமக்கு இதமானவற்றை மட்டுமே மற்றவர்கள் பேசினால் கேட்ப்பார்கள், விமர்சனம் இவர்களுக்கு வேப்பங்காய்; சுயவிமர்சனமோ சுத்தமாக இல்லை (இரண்டாக பிரித்துப் பிரித்துப் பார்ப்பது); மற்றவர்கள்விமர்சித்தால்பயப்படுவார்கள். ‘அகங்காரம் தன்னை அழிக்கும் பணிவு ஒருவனை மேம்படுத்தும்’ என்ற நமது பழமொழி இன்றும் பொருந்தும். பாட்டாளி வர்க்கப் பார்வையிலிருந்தும் சாமானியர்களின் பார்வையிலிருந்தும் இந்த பழமொழி எப்போதும் சரியாகவே இருக்கின்றது.

1)அகங்காரம் எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா வடிவங்களிலும் தலையெடுத்து வளர்கின்றது. பொதுவாக, வெற்றி பெற்றவர்களிடம் அகங்காரம் தலையெடுக்கிறது. ஏன்? மிக மோசமான ஒரு சூழலில்தான் ஒருவனுக்கு தனது குறைபாடுகள் என்ன என்பது தெளிவாகத் தெரிகின்றது, எனவே அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பான். மிக இக்கட்டான சூழலில் அடக்கமும் எச்சரிக்கையும் மட்டுமே ஒருவனை காப்பாற்றும். ஆனால் வெற்றி பெற்ற ஒருவனைச் சுற்றி மக்கள் பணிவுடன் நிற்கின்றார்கள்; எதிரிகள்கூட புகழாரம்சூட்டக்கூடும். இவையாவும் வெற்றி பெற்றவன் தலையில் அகந்தையையும் அகங்காரத்தையும் திணித்துவிடுகின்றன.

“இனி எனது ராஜ்யத்தில் எல்லாம் சுகமே” என்று அவன் கனவுகளைத் தொடங்குவான். வெற்றி நமது பக்கம் இருக்கும்போது அகங்காரம் என்னும் வைரஸ் நம்மை மிக எளிதாகத் தொற்றித் தாக்கிவிடும் என்பதை நமது கட்சி நன்றாகவே உணர்ந்துள்ளது.

2) அகங்காரமும் தன்முனைவும் வெற்றிபெற்றவனைத் தழுவும்போது தற்பெருமை தானாகவே தலைதூக்கி ஆடும். இது ஒருவகை அகங்காரம். மற்றொருவகை தற்பெருமை உண்டு. அது சாதாரண சூழலில் தலைதூக்குவது. ஆரவாரமான வெற்றியுமல்ல, மோசமான தோல்வியுமல்ல என்ற சூழலில் “மிக நன்று என்று சொல்லமுடியாது; ஆனால் மிக மோசம் என்பதையும் விட பரவாயில்லை”, “இருபத்து நான்கு வருசம் மருமகளாக இருந்தால், ஒருத்தி தானாகவே மாமியார் ஆகிவிடுவாள்தானே” – இதுபோன்ற பிற்போக்குத்தனமான நொண்டிச் சமாதானங்களை நியாயப்படுத்தும் போது தற்பெருமை தலைதூக்குகின்றது.

மூன்றாவது வகை தற்பெருமை உண்டு. அது பின்தங்கியிருக்கின்ற சூழலில் தலைதூக்கும். தாங்கள் பின்தங்கியிருப்பதைக் கூட சிலர் பெருமையாகக் கருதுகின்றார்கள். “எங்களது பணிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது உண்மைதான்; ஆனால் கடந்தகாலத்தை விட எவ்வளவோ மேல்”, “அவர்களைப் பாருங்கள்! எங்களை விடவும் படு மோசம்!” என்று நினைத்துவிட்டால் தாங்கள் பின்தங்கியிருந்தாலும் அவர்களுக்கு தற்பெருமை தலைதூக்கி விடுகின்றது. இவர்களிடம் பேசிப்பாருங்கள், அவர்களது செயல் பாடுகளைப் பற்றிப் பேச ஏதாவது ஒரு சந்து கிடைத்தால் போதும், “முன்னொரு காலத்தில்…..” என்று மிகப் பிரகாசமான முகத்தோடு தமது வரலாற்றைக் கதைக்கத் தொடங்கி விடுவார்கள்.

3) மக்கள் சக்தியை எப்போது குறைத்து மதிப்பிடத் தொடங்குகிறோமோ அப்போதே தற்பெருமை தலைதூக்கத் தொடங்கி விட்டது. எதார்த்தத்தை உணராதபோதும் தமது பணிகளை அளவுக்கு அதிகமாக ஊதிப் பெரிதாகக் காட்டிப் பெருமை கொள்ளும் போதும் தற்பெருமை தலைதூக்கும்.

4) தற்பெருமை, தற்பற்றுப் (தன்நலம்) பார்வையிலிருந்து பிறக்கிறது; தற்பெருமை தற்பற்றுப் பார்வையை வளர்க்கின்றது. அது தற்பற்று சார்ந்தது.

5) வர்க்கப் பார்வையுடன் ஆய்வோமானால், தற்பெருமை அடிப்படையில் சுரண்டல் வர்க்கக் கோட்பாட்டிலிருந்து பிறப்பதாகும்; இரண்டாவதாக சிறு உற்பத்தியாளர்கள் கோட்பாட்டிலிருந்து பிறக்கின்றது.

6) தொழிலாளி என்ற நிலையில் பார்த்தால், சிறு உற்பத்தியாளர்கள் பல சிறப்பான குணங்களைக் கொண்டவர்கள்தான். அவர்கள் கடும் உழைப்பாளிகள், சிக்கனமானவர்கள், எதார்த்தவாதிகள், எச்சரிக்கை உணர்வுடன் கூடிய எதையும் எதிர்நோக்கி சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், சிறு உடமையாளர்கள் என்ற நிலையில் அவர்கள் தற்பற்றாளர்கள் (தன்நலக்காரர்கள்) என்பதும் உண்மையே. முக்கியமாக, இவர்களது பணிக் கலாச்சாரம் மற்றும் பண்டையகால உற்பத்திமுறைகளின் காரணமாக இவர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், குறுகிய மனப்பான்மையும் உலக ஞானமும் இல்லாத தற்பற்றாளர்களாக இருக்கின்றார்கள். ஒன்றுபட்டு நிற்பதன் மகத்தான பொருளை உணராதவர் களாகவே இருக்கின்றார்கள். இதனால் அவர்கள் தன்னலம் பற்றிய சிந்தனையில் திளைத்தவர்களாகவே இருக்கின்றார்கள். சிறுசிறு சாதனைகளில் கூட இவர்கள் திருப்தி அடைந்து விடுகின்றார்கள். “ஆஹா, இதுவல்லவோ சாதனை”, “மிக நன்று என்று சொல்ல முடியாது; ஆனால் மிக மோசம் என்பதை விடவும் பரவாயில்லை” என்று தற்பெருமையில் மூழ்கி விடுகின்றார்கள்.

7) தற்பெருமை என்பது, முதலாளி வர்க்க, கருத்தியல்வாதக் பார்வையிலிருந்து பிறக்கிறது. (அதாவது முதலாளி வர்க்க கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத் திலிருந்து பிறக்கிறது). தற்பெருமை ஒருவரை மிகமிக மோசமான மனிதராக்கிவிடும். எதார்த்தத்துடன் மோதவேண்டிய சூழலுக்கு ஒருவரைத் தள்ளிவிடும். சமூகம் வளர்ந்துகொண்டே செல்லும், நிலைத்து நிற்பதில்லை என்பதுதான் எதார்த்தம். ஆனால் அத்தகைய எதார்த்தத்துடன் ஒருவர் மோதுகின்றார் என்றால் அவர் இயற்கை விதியை மீறுகின்றார் என்றே பொருள்; விளைவு என்ன? அவர் தோல்வியையே சந்திப்பார். பொருள்முதல்வாதி வரலாற்றை எப்படிப் பார்க்கின்றான்? சமூக வளர்ச்சி வரலாறு என்பது யாரோ ஒருசில பெரிய மனிதர்களின் வளர்ச்சியைக் குறிப்பதல்ல; உழைப்பாளிகள் திரளின் வளர்ச்சிதான் சமூக வளர்ச்சி என்பதன் உண்மையான பொருள். அகங்காரம் தலைக்கேறி விட்டால் “நான் யார் தெரியுமா”, “என்னால்தான் எல்லாமும்” என்ற போக்குகள் தானாகவே தலைதூக்கும். மக்கள் திரளின் மகத்தான சக்தியை துச்சமாக மதிப்பிடுவார்கள்.

8) எனவேதான், தற்பெருமை, தற்புகழ்ச்சி – இவை மார்க்சிய – லெனினியத்துக்கு எதிரானவை; நமது கட்சியின் இயக்கவியல் பொருள்முதல்வாத – வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வைக்கு எதிரானவை என்று சொல்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிய-லெனினிய)கட்சியானதுவிவசாயிளையும்,தொழிலாளர்களையும்,மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டிப் போராடியது. இந்த கட்சி நடத்திய போராட்டங்கள் வீரத்தெலுங்கானா போராட்டப் பாதையையே பின்பற்றியது. இவர்கள் நக்சல்பாரியிலும், கல்கத்தா நகர வீதிகளிலும், ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் போன்ற பகுதிகளிலும் தமிழகத்தில் தருமபுரி, வடஆற்காட்டுப் பகுதிகளில் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது.அப்போது இந்த கம்யூனிஸ்டுகளின் மீது ஆட்சியாளர்கள் கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தியதன் காரணமாக பல தியாக கம்யூனிஸ்டுகள் வீரமரணம் அடைந்தார்கள். பலர் வாழ்க்கையை இழந்தார்கள். இந்த கம்யூனிஸ்டுகளின் போராட்டங்கள் ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டாலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை மக்கள் இன்றும் மறக்க வில்லை. அவர்களின் தியாகமும் போராட்டமும் எதிர்கால படிப்பினைக்கு ஆம் தவறுகளை புரிந்து அதனை களைந்து சரியான பாதையில் பயணிக்க வழி கிடைக்கும்.

ஆக இதற்கு நமது ஆசான் ஸ்டாலின் வழிகாட்டுதல் பயனளிக்கும்.

‘பிரிக்க முடியாத ஒரே ரசியா’ என்று மக்கள் துணிச்சலாகப் பறைசாற்றிய காலம் போய்விட்டது. நீண்டகாலத்துக்கு முன்பே ரசியாவானது பாட்டாளிகளும் முதலாளிகளும் என்று இரு எதிரெதிரான வர்க்கங்களாகப் பிளவுபட்டு விட்டதால் ‘பிரிக்கமுடியாத ஒரே ரசியா’ என்று ஒன்றுமில்லை என்பது ஒரு குழந்தைக்குக்கூட தெரியும். தற்போது இந்த இரு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டத்தை அச்சாகக் கொண்டே நமது சமகால வாழ்வு சுழல்கிறது என்பது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமும் இல்லை”.

இருந்தபோதிலும், நம்மால் சமீப காலம் வரை இவை அனைத்தையும் காண்பது கடினமானதாக இருந்தது. தனிப்பட்ட குழுக்கள் மட்டும், நாட்டின் பல பாகங்களிலும் உள்ள தனிப்பட்ட நகரங்களில் போராடியதால், நாம் இதுவரை போராட்ட அரங்கில் தனிப்பட்ட குழுக்களை மட்டும் சந்தித்தோம். எனவேதான் நம்மால் சமீப காலம் வரை இக்காரணத்தினால் இதைக் காண்பது கடினமாக உள்ளது. மேலும் வர்க்கங்களாகப் பாட்டாளிகளும் முதலாளிகளும் உள்ளதை அவ்வளவு எளிதாக உற்றுப்பார்த்து அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் தற்போதோ நகரங்களும்கிராமங்களும்,பாட்டாளிகளின் பல்வேறு குழுக்களும் கைகோர்த்து உள்ளார்கள், கூட்டுப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வேலை நிறுத்தங்களும் வெடித்து வெளிப்பட்டுள்ளதோடு – நமக்கு முன்பாக இரு ரசியாக்களின்,– முதலாளித்துவ ரசியாவுக்கும் பாட்டாளி களின் ரசியாவுக்கும் இடையிலான போராட்டத்தின் சிறப்பான காட்சி வெளிப்பட்டுள்ளது. போராட்ட அரங்கில் இரு பெரிய இராணுவங்களும்– முதலாளிகளின் இராணுவமும், பாட்டாளிகளின் இராணுவங் களும் – நுழைந்து இருக்கின்றன, நமது சமூக வாழ்வு முழுவதையும் இந்த இரு இராணுவங்களுக்கும் இடையிலான போராட்டம் தழுவியுள்ளது.

தலைவர்களின்றி ஒரு இராணுவம் செயல்பட முடியாது என்ற காரணத்தாலும், ஒவ்வொரு இராணுவத்துக்கும் ஒரு முன்னணிப்படை அதன் முன்பு அணிவகுத்துச் சென்று அதன் பாதையை ஒளியூட்ட வேண்டும் என்ற காரணத்தாலும், இந்த இரு இராணுவங்களுக்கும் ஏற்புடைய தலைவர்களின் குழுக்கள், அதாவது வழக்கமாக அழைக்கப்படும் வகையில்ஏற்புடைய கட்சிகள் தோன்ற வேண்டும் என்பதில் ஐயத்துக்கிடமில்லை.(புரோலிடேரியடிஸ் இப்ர்ட்சோலா (பாட்டாளி வர்க்கப் போராட்டம்) எண் 8

ஜனவரி 1, 1905)

ஆக குறுங்குழுவாதிகள் கட்சி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர் ஏனெனில் தங்களை துதிபாட ஆட்கள் வேண்டும் என்பதே. ஆனால் நமது ஆசான்கள் வழிகாட்டியுள்ளதை பாருங்கள்.

மார்க்சியம், பாட்டாளி வர்க்கம் தனக்கென்று ஒரு கட்சியின்றி முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவோ, அதிகாரத்தை வெல்லவோ, சோசலிசத்தைக் கட்டியமைக்கவோ முடியவே முடியாது என்று கற்பிக்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சியின் தேவையை எல்லாவற்றிற்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். முதலாம் அகிலத்தில் அவர்களால் வகுக்கப்பட்ட விதி ஒன்று “தனக்கென்று தனித்தன்மையுடைய ஒரு கட்சியை, உடைமையாளர்களது பழைய கட்சிகளனைத்திற்கும் எதிராக கட்டியமைத்தாலன்றி ஒருபோதும் ஒரு வர்க்கமாகச் செயல்பட முடியாது” என்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர். கட்சியைப் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவவும், அவற்றிற்கு தொழிலாளி வர்க்க நிறுவனங்களை வென்றெடுக்கவும் முயன்றனர். இதுதான் அவர்களின் அரசியல் செயற்பாடாக இருந்தது. மேலும் அவர்கள் பாட்டாளி வர்க்கம் எவ்வகைப் போக்கை பிற வர்க்கங்களின் மீது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பாக விவசாயி வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியத் துணைவர்களாகக் கருதி வரையறுப்பதில் கவனம் செலுத்தினர்.

லெனின் போல்சுவிக் கட்சியை ஏகாதிபத்திய சகாப்தத் தொடக்கத்தில் கட்டினார். மேற்கத்திய நாடுகளின் சோசலிசக் கட்சிகளின் “அமைதியான” வளர்ச்சி கொண்ட பல பத்தாண்டுகளின் முடிவில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைவிரித்தாடின. அகிலத்தின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் பரிசோதித்துச் சரி செய்வதும் சந்தர்ப்பவாதத்தை முற்றாக நிராகரிப்பதும் மிக முக்கியத் தேவையானது. போல்சுவிக் கட்சியை அவர் புதிய வகையானதாக முதலாளித்துவத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்துத் தலைமை தாங்குவதாகக் கட்டியமைத்தார். இக்கட்சி ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை, சுய ஒழுங்கை உள்ளடக்கி, புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையிலானதாய் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி, முன்னெடுத்துச் செல்லக்கூடியதாய் இருந்தது.

அப்படிப்பட்ட கட்சி புரட்சிகர தத்துவ அடிப்படையிலமைந்து பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைப்பிரிவாய் அதிகாரத்தை வெல்ல, சோசலிசத்தைக் கட்டியமைக்க, தொழிலாளி வர்க்க இயக்கங்களை ஈர்த்து, வழி நடத்தி, தலைமை தாங்கிச் செல்வதால், பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு வடிவமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு கருவியாக உள்ளது. ஒற்றுமையை, ஒழுங்கைக் காப்பதாக, எந்த குழுப்போக்கும் அதன் ஒற்றுமையைக் சிதைந்துவிடாது இருக்கும்படி காக்கிறது. தானே சந்தர்ப்பவாதிகளை வெளித்தள்ளி தூய்மை அடைகிறது. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது கொள்கையை எந்த எதிரிக்கு மரண அடி கொடுப்பது என்பதை நிர்ணயிப்பதாக தாக்குதல் திசைவழியை அமைத்துக் கொள்கிறது. அனைத்து கூட்டாளி வர்க்கங்களையும் இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான எல்லா நட்பு சக்திகளையும் ஒன்றிணைக்கிறது.

போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில் பிறந்தது. (போல்சுவிக் கட்சி வரலாறு, லெனினியத்தின் அடிப்படைகள் 1, 8 அத்தியாயங்கள்).

“என்ன செய்ய வேண்டும்” ருஷ்யப் பாட்டாளி வர்க்கக் கட்சி தொடங்கிய பின் தொழிலாளிகளின் பொருளாதாரப் போராட்டங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும், அரசியல் பிரச்சினைகளை விடவும் வயிற்றுப் பிரச்சினைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கற்பிக்க முயன்றவர்களுக்கெதிராக எழுதப்பட்ட நூல். இந்த வகைப் போக்கில் சந்தர்ப்பவாதத்தின் உட்கரு உள்ளது என்பதையும், வர்க்க சமரசத்தை கட்சிக்குள் கொண்டுவரும் என்பதையும் லெனின் கண்டுகொண்டார்.

“பொருளாதாரவாதிகள்”என அழைக் கப்பட்டவர்கள் கட்சிக்குள் “விமரிசன சுதந்திரத்தை”க்கோரியும்,லெனினுடையவை “குறுகிய அரசியல் பார்வை” எனத் தாக்கியும், தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். லெனின், அவர்கள் கோருகின்ற “விமரிசனசுதந்திரம்” உண்மை யில் மார்க்சியத்திற்கு பதில் முதலாளித் துவக் கருத்துக்களைத் தழுவுவதற்கு வேண்டும் சுதந்திரம் என்பதையும், முதலாளித்துவ வாதிகளுடன் சமரசத்திற் கான பாதையைத் திறந்துவிடும் என்பதையும் காட்டுகிறார். “சரிதான், பொருளாதாரவாதிகளுக்கு வர்க்க சமரசப் பாதையைத் தழுவும் சுதந்திரம் உண்டு, ஆனால் கட்சியையும் சேர்த்து இழுக்காதீர்கள்” என்று கேலியாகச் சொல்கிறார் லெனின்.

தொழிலாளி வர்க்க இயக்கத்தை பொருளாதாரப் போராட்டத்திற்கு மட்டும் சுருக்குவது என்பது அரசியல் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, தொழிலாளர்களை என்றென்றைக்கும் கூலி அடிமை முறையோடு பிணைப்பது என்று பொருளாகிறது என்கிறார் லெனின். பொருளாதாரவாதிகள் மோசமான நிலைகளுக்கெதிராக தொழிலாளிகள்தன்னெழுச்சியாகத் திரண்டெழுவதைச் சார்ந்து இருந்தனர். இப்போக்கை, லெனின், தலைமை தாங்குவதற்குப் பதில் மக்களின் பின்னே செல்லும் வால்வாதம் (குவோஸ்திசம்) என்றழைக்கிறார். பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னெழுச்சியான பொருளாதாரப் போராட்டங்களினால் மட்டும் தன்னெழுச்சியாக அரசியல் அறிவு வந்து விடாது என்கிறார் லெனின். அரசியல் அறிவு, புரட்சிகரத் தத்துவம் பாட்டாளி வர்க்க இயக்கத்தினுட் புகுத்தப்பட வேண்டும். பொருளாதாரவாதிகள் தத்துவத்தின் பங்கைச் சிறிதாக்கினர். ஆனால் “புரட்சிகரத் தத்துவம் இல்லையேல் நிச்சயம் புரட்சிகர இயக்கமும் இல்லை.”

பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதக் கருத்துக்களின், திட்டங்களின் வேர், தத்துவத்தின் பங்கைச் சுருக்கி, தன்னெழுச்சியான இயக்கத்தைச் சார்ந்திருப்பதில் இருக்கிறது என லெனின் காட்டுகிறார்.

  • எவ்வாறு பொருளாதாரப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. பாட்டாளி வர்க்க அரசியல் போராட்டங்கள் “தொழிற்சங்க அரசியலை” விடவும் விரிவானவை. வர்க்க தொழிலாளிகள் “பல்வேறு வர்க்கங்களின் இடையிலான உறவுகள்” குறித்து அக்கறை கொள்ள வேண்டும். எதிர்ப்புரட்சியின் எல்லா வெளிப்பாடுகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட வேண்டும். பொருளாதாரப் போராட்டத்தை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதன் மூலம் பொருளாதாரவாதிகள் சீர்திருத்தவாதம், சந்தர்ப்பவாதத்தினுள் ஆழ்கிறார்கள். சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களும் விடுதலைக்கான சோசலிசத்திற்கான போராட்டங்களாக மாற்றப்பட வேண்டும்.(“என்ன செய்ய வேண்டும்” )

நமது பணி பெரும் முதலாளிகளை வீழ்த்துவது மட்டுமல்ல கூடவே, (அதைவிடக் கடினமான) சிறு உற்பத்தியாளர்களை மறு ஒழுங்கமைப்பதும், மறு கல்வியளிப்பதும் என்கிறார். இதற்கு நெடிய, கடின போராட்டம், பழைய அமைப்பின் மரபுகள், சக்திகளுக்கெதிரே நடத்தப்பட வேண்டும். அதைச் செய்ய மத்தியப்படுத்தப்பட்ட கட்டுப்பாடான கட்சியாலேயே முடியும். மேலும் லெனின் எவ்வாறு இடதுசாரிப் போக்குகள் “தூண்டி விடுகிற ஏஜெண்டுகள்” கையில் போய் செயல்படுகிறது என்பதையும் காட்டுகிறார்.

லெனின் ஒரு “வெகுஜனக் கட்சியின்” அவசியத்தைக் காட்டுகிறார். கட்சியை மட்டுமல்ல மக்களையும் தலைமை தாங்குவதே நமது பணி என்கிறார். பல்லாயிரக்கணக்கான மக்களை செயலுக்கு இட்டுச் செல்வது என்பதே அதன் பொருள். கட்சி எங்கெல்லாம் வெகுஜனங்கள் உண்டோ அங்கெல்லாம் பணிபுரிவது கட்சிக்கு அவசியம், எங்கும் ஊடுருவுவது, மக்களை எழுச்சியூட்டிப் போராட்டத்திற்கு இழுப்பது அவசியமானது என்கிறார் லெனின்.

இதன் தொடர்பாக தொழிற்சங்கங்களில் வேலை எவ்வளவு அவசியமானது என்பதை வலியுறுத்துகிறார். தொழிற்சங்கங்கள் “எதிர்ப்புரட்சிகரமானவை” என்ற பெயரில் அவற்றில் வேலை செய்யாது இருப்பது பெருந்திரளான மக்களை ஒருசில எதிர்ப்புரட்சித் தலைவர்கள் கையில் விட்டுவிடுவது என்று பொருள்.12 எங்கெல்லாம் பெருந்திரளான மக்கள் உண்டோ அங்கெல்லாம் அவர்களின் வளர்ச்சி நிலைக்கேற்ப பணிபுரிய வேண்டும். செயற்கையான “இடதுசாரி” முழக்கங்களை முன்வைத்து விட்டு நம்மை வேலியிட்டுக் கொள்ளக் கூடாது என்கிறார்.

ஆக நமது மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலிலிருந்து நாம் எங்கே விலகி நிற்கிறோம் என்று இங்குள்ள குறுங்குழுவாத தலைவர்கள் புரிந்துக் கொண்டால் இந்த பிளவு பட்டுள்ள நிலைக்கு முடிவு கட்ட முடியும் அதற்கு அவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் அதற்கு மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிபடையில் இருக்குமேயாயின் இந்த பரிதாபகரமான அத்தியாயதிற்கு முடிவு காண முடியும் என்று கூறுகிறேன்.

வியாட்நாம் படிப்பினைகளோடு முடித்துக் கொள்வோம்

ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்கத்தை எதிர்த்த, இருபதாம் நூற்றண்டின் காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பாளர் களை எதிர்த்த வியட்நாம் தனது வெற்றிகரமான போராட்டத்தின் மூலமாக, முறியடிக்க முடியாத போர்க்குணத்திற்கும், ஆக்கபூர்வமான அறிவிற்கும், இராணுவ வலிமைக்கும், மக்கள் யுத்த முறையின் மேன்மைக்கும் அடையாளமாக விளங்குகின்றது. இருபதாம் நூற்றண்டின் மிகச் சிறந்த அம்சமாக வியட்நாமிய மக்கள் யுத்தம் விளங்குகின்றது. வியட்நாம் மக்கள் பின்வரும் ஒளிரும் உண்மையை உலக மக்களுக்குப் புலப்படுத்துகிறர்கள். அதாவது ஒரு சிறிய, பரந்த பரப்பில்லாத, மக்கள் தொகை அதிகமில்லாத, பொருளாதார வலிமை இல்லாத நாடு திடமனதுடன் ஒன்றுபட்டு, சரியான புரட்சிகர மார்க்கத்தைக் கொண்டு, நாடு தழுவிய ஆயுத எழுச்சி மற்றும் மக்கள் யுத்தம் பற்றிய மார்க்சிய-லெனினிய கோட்பாட்டை தங்கள் நாட்டுக்குரிய வகையில் பிரயோகித்து, முற்போக்கான மனித இனம் மற்றும் சகோதர சோஷலிச நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் முதன்மையான ஏகாதிபத்திய அரசான அமெரிக்கா உள்ளிட்ட வலுமிக்க ஆக்கிரமிப் பாளர்களை முறியடிக்க முடியும்.

வியட்நாம் நாட்டுக்குரிய புரட்சிக்கும், புரட்சிப்போருக்குமான சரியான மற்றும் ஆக்கபூர்வமான மார்க்கத்தை நமது கட்சியானது வகுத்தெடுக்க, நமது சமூக வளர்ச்சியின் விதிகளையும், நமது நாட்டின் புரட்சிப் போரின் வளர்ச்சி விதிகளையும், புரட்சிகர வன்முறையின் வளர்ச்சி விதிகளையும் கண்டறிந்து அவற்றைக் கற்றுத் தேர்ந்து புரட்சிகர வன்முறை என்ற விதியின் சாரம் அரசியல் சக்திகளே ஆயுதப் படைகளுடன் இணைப்பதும், அரசியல் போராட்டங்களை ஆயுதப் போராட்டங்களுடன் இணைப்பதும், ஆயுத எழுச்சியை புரட்சிப்போருடன் இணைப்பதுமாகும்.

இதற்கான படிப்பினைகள் நம் முன் உள்ளன. அதற்கான கட்சிதான் இங்கில்லை என்பது நம் முன் உள்ள எதார்த்தமாக உள்ளன. அதனை செய்வதே நமக்கான கடமை. தொடரும்...

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்