பொருள் முதல் வாதமும் அனுபவ வாத விமர்சனமும் -4

 இன்றைய வகுபிற்கான தேடலுக்கு முன் சற்று தத்துவம் புரிந்துக் கொள்வோம் அதனை அடுத்து தொடர்ச்சியாக வகுபிற்கான கருபொருளை பார்ப்போம்.

அறிமுகம்

தத்துவம்‌ என்பது என்ன?, அது எவ்வாறு தோன்றி வளர்ந்தது?

தத்துவம்‌ என்பது, நம்மைச்‌ சுற்றி நிலவும்‌ யதார்த்தம்‌ பற்றி முழுமையாகவும்‌ மனிதனால்‌ அது அறியப்படுதல்‌ பற்றியும்‌ உள்ள கருத்துக்களின்‌ தொகுப்பாக விளங்குகிறது. 

பல்‌வேறு சமூக வார்க்கங்கள்‌, குழுக்களின்‌ நலன்களைத்‌ தத்துவம்‌ வெளியிடுகிறது. பிரபஞ்சம்‌ முழுவதற்கும்‌ அடிப்படையாக இருப்பது எது என்பதை விளக்கவும்‌, மனிகனது இயல்பையே புரிந்துகொள்ளவும்‌, சமூகத்தில்‌ மனிதன்‌ வகிக்கும்‌ இடம்‌யாது, பிரபஞ்சத்தின்‌ இரகசியங்களை உட்புகுந்து தெரிந்துகொள்ளவும்‌ இயற்கையின்‌ பெருவிறல்‌ வாய்ந்த சக்திகளைப்‌ புரிந்துகொண்டு மக்களின்‌ நன்மைக்காக அவற்றைப்‌ பயன்படுத்தவும்‌ மனிகனது அறிவால்‌ முடியுமா என்பவற்றைக்‌ தீர்மானிக்கவும்‌ தத்துவமான்‌து தோன்றிய கணம்‌ முகுலே முயன்று வந்திருக்கிறது. இவ்வாறாகத்‌ தத்துவம்‌ மிகவும்‌ பொதுப்படையான, அதே சமயம்‌ மிகவும்‌ முக்கியமான அடிப்படைப்‌ பிரச்சினைகளைக்‌ கிளப்புகிறது. வாழ்க்‌கை, அறிவு, இவற்றின்‌ மிக மிகப்‌ பல்வகைப்பட்ட துறைகள்‌ பால்‌ மனிதனது அணுகுமுறையை நிர்ணயிப்பவை இவை. இந்தப்‌ பிரச்சினைகளுக்கு மிகமிக -வெவ்வேறான, சில சந்தர்ப்‌ பங்களில்‌ ஒன்றை ஒன்று நிராகரித்து விளகுகிற விடைகளைத் தத்துவவாதிகள்‌ அளிக்துவதந்திருக்கிறார்கள்‌. 

தத்துவம்‌ சுமார்‌ மூவாயிரம்‌ ஆண்டுகளாக நிலவிவருகிறது. ஒன்றுக்கொன்று எதிரான கருத்தோட்டங்களுக்கிடையே போராட்டம்‌ அதில்‌ இந்தக்‌ காலமெல்லாம்‌ தொடர்ந்து நடந்து வந்‌திருக்கிறது. இந்தப்‌ போராட்டம்‌ தற்போதும்‌ நின்றபாடில்லை. 

ஏன்‌ இந்தப்‌ போராட்டம்‌ நடக்கறது? அதன்‌ காரணங்கள்‌ யாவை? தத்துவக்‌ கருத்தோட்டங்களின்‌ மோதுதலில்‌ மைய இடம்‌ வகிப்பது உணர்வுக்கும்‌ இருத்தலுக்கும்‌ இடையே நிலவும்‌ உறவு பற்றிய பிரச்சினை, வேறு வார்த்தைகளில்‌ சொல்‌வதானால்‌ கருத்தியலானதற்கும்‌ பொருளியலானதற்கும்‌ இடையே நிலவும்‌ உறவு பற்றிய பிரச்சினை. 

உணர்வு கருத்தியலானது என்று சொல்லுகையில்‌ நமது எண்ணங்கள்‌, அனுபவங்கள்‌, உணர்‌வுகள்‌ ஆகியவற்றையே நாம்‌ மனத்தில்‌ கொள்ளுகிறோம்‌ என்பதை இங்கே குறிப்பிட்டுவிட வேண்டும்‌. இருத்தல்‌, பொருளியலானது என்னும்போது புறநிலையில்‌, நமது உணர்வுக்குச்‌ சார்பு இன்றி நிலவுபவை அனைத்தும்‌, அதாவது, வெளியுலகின்‌ பொருள்‌களும்‌ பண்டங்களும்‌, இயற்கையிலும்‌ சமூகத்திலும்‌ நடைபெறும்‌ நிகழ்ச்சிகளும்‌ செயல்முறைகளும்‌ குறிக்கப்படுகின்றன. தத்துவ அர்த்தத்தில்‌ கருத்தியலானது (உணர்வு), பொருளியலானது (இருத்தல்‌) என்பவை மிக விரிவான விஞ்ஞானக்‌ கருதுகோள்கள்‌ (வகைப்பிரிவுகள்‌) ஆக விளங்குகின்றன. பிரபஞ்சப்‌ பொருள்கள்‌, நிகழ்ச்சிகள்‌, செயல்முறைகள்‌ ஆகியவற்றின்‌ மிக மிகப்‌ பொதுமை வாய்ந்த, அதே சமயம்‌ எதிரெதிரான பண்புகளை அவை பிரதிபலிக்கின்றன.

தத்துவத்தின்‌ அடிப்படைப்‌ பிரச்சினைக்குத்‌ தீர்வு காண்‌கையில்‌ விஞ்ஞானிகள்‌ இருபெரும்‌ முகாம்களாகப்‌ பிரிவுபட்‌டிருக்கிறார்கள்‌. பொருளை, இருத்தலை, இயற்கையை முதன்மையானது என்றும்‌ உணர்வை, சிந்தனைத்‌ திறமையை, ஆன்மாவை இரண்டாவது என்றும்‌ ஏற்றுக்கொள்ளும்‌ தத்துவ அறிஞர்கள்‌ பொருள்முதல்வாதம்‌ எனப்படும்‌ தத்துவப்‌ போக்கின்‌ பிரதிநிதிகள்‌ ஆவர்‌. விஞ்ஞான விவரங்களையும்‌ மக்களின்‌ பல்வகைப்பட்ட நடைமுறைச்‌ செயல்கள்‌ யாவற்றையும்‌ ஆதாரமாகக்‌ கொண்டு பொருள்முதல்வாதித்‌ தத்துவ அறிஞர்கள்‌ பிரபஞ்சம்‌ யாராலும்‌ படைக்கப்படவில்லை என்றும்‌, அது என்றுமுள்ளது என்‌றும்‌ எல்லையின்றிப்‌ பல்விதப்பட்டது என்றும்‌ நிரூபிக்கிறார்கள்‌. பொருளியலான பிரபஞ்சத்தின்‌ நம்மைச்‌ சூழ்ந்துள்ள வஸ்துக்‌களும்‌ தோற்றங்களும்‌ நம்மீது சார்பு இல்லாமலே நிலவிவருகின்றன. எந்த உணர்வையும்‌ சாராத பெருந்தொகையான பல்வேறு நிகழ்முறைகள்‌ புறநிலைப்‌ பிரபஞ்சத்தில்‌ எப்போதும்‌ நடந்துவந்துள்ளன, என்றென்றும்‌ நடந்துவரும்‌. பொருளியலானது கருத்தியலானதற்கு முன்பே நிலவியது. மனிதனது சிந்தனைத்திறன்‌ பொருளியலானது இன்றி நிலவமுடியாது. இப்‌படிப்‌ பொருள்முதல்வாதத்‌ தத்துவ அறிஞர்கள்‌ கருதுகிறார்‌கள்‌. சித்தனை என்பது மூளையின்‌ விளைபொருள்‌. எனவே மூளை சிந்தனை உறுப்பாக விளங்குகிறது. சிந்தனைத் திறன்‌ கருத்தியலானது என்பது புறநிலைப்‌ பிரபஞ்சத்தைப்‌ பிரதிபலிப்பதற்கு மூளைக்கு உள்ள திறனே ஆகும்‌. ஆதலால்‌ கருத்தியலானது, அதாவது உணர்வ, புறநிலைப்‌ பிரபஞ்சத்தின்மீது சார்பு இல்லா மல்‌ முற்றிலும்‌ தன்னிச்சையாக நிலவ முடியாது. இவ்வாறு பொருள்முதல்வாதித்‌ தத்துவ அறிஞர்கள்‌ சொல்கிறார்கள்‌.

பொருள்முதல்வாதத்துக்கு எதிர்நிலையான கருத்துமுதல்‌ வாதப்‌ போக்கு தத்துவத்தில்‌ நிலவுகிறது. நிலவுவது அனைத்திற்‌கும்‌ தொடக்கமாக விளங்குவது உணர்வே, சிந்தனைத்திறனே,ஆன்மாவே, அதாவது கருத்தியலானதே எனக்‌ கருத்துமுதல்‌ வாதத்‌ கத்துவ அறிஞர்கள்‌ ஏற்கிறார்கள்‌. கருத்துமுதல்வாகப்‌ போக்கு இரு அடிப்படை வகைகள்‌ கொண்டது. அகநிலைக்‌ கருத்துமுதல்வாதம்‌, புறநிலைக்‌ கருத்து முதல்வாதம்‌ என்பன அவை. சிந்தனை செய்யும்‌ அகநிலைப்பொருள்‌ ஆகிய மனிதனது தனிப்பட்ட உணர்வே முதன்மையானது என்று ஒப்புக்கொள்ளும்‌ தத்துவக்‌ கருத்துமுதல்வாதத்தின்‌ பிரதிநிதி கள்‌ அகநிலைக்‌ கருத்துமுதல்வாதிகள்‌ஆவர்‌. பொருள்கள்‌ எதார்த்‌தத்தில்‌ நிலவுகின்றன, அவை நமக்கு வெளியே நிலவுகின்றன என்று நமக்கு வெறுமே தோன்ற மட்டுமே செய்கிறது. அவற்‌றை நாம்‌ பார்க்கிறோம்‌, கேட்கிறோம்‌, தொடுகிறோம்‌ என்பதே இதன்‌ காரணம்‌. உண்மையிலோ காணல்‌, தொடுதல்‌, கேட்டல்‌ என்பவை புலனுணர்ச்சிகளே ஆகும்‌. இவ்வாறு அவர்கள்‌ சொல்‌கிறார்கள்‌. பிரபஞ்சம்‌ முழுவதும்‌ சிந்தனை செய்யும்‌ அகத்தினால்‌, அசுநிலைப்பொருளின்‌ தன்னுணர்வால்‌ படைக்கப்பட்டிருக்கிறது என்றோ, அல்லது நிலவும்‌ பொருள்கள்‌, வஸ்துக்கள்‌, தோற்றங்‌கள்‌ ஆகியவை அனைத்தும்‌ நமது உணர்ச்சிகள்‌, அனுபவங்கள்‌ ஆகியவற்றின்‌ மொத்தமே, தொகுதியே ஆகும்‌ என்றோ நிரூ பிக்க அவர்கள்‌ முயல்கிரார்கள்‌. திரிபான தத்துவவகைப்பட்ட இந்தப்‌ பிரபஞ்ச அறிவு மனிதனுடைய உணர்வைப்‌ பொருளியலான பிரபஞ்சத்துக்கு எதிர்நிறுத்துகிறது. மனிதனுக்கு இயல்‌பாக வழங்கப்பட்டிருப்பவை அவனுடைய அறிவின்‌ விளைபொ ருள்களான கருத்துக்களும்‌ உணர்ச்சிகளும்‌ மட்டுமே என்று அகநிலைக்‌ கருத்து முதல்வாதிகள்‌ கூறுகிறார்கள்‌. மனித உணர்‌வே தொடக்கப்‌ புள்ளி என்றும்‌ பின்பு அதிலிருந்து இயற்கை வெளிப்படுகிறது என்றும்‌ அவர்கள்‌ வாதித்து, இந்த வாதத்தின்‌, அடிப்படையில்‌ பொருள்களும்‌ பிரபஞ்சம்‌ முழுவதுமே புறநிலை யாக நிலவுவதையும்‌ அதன்‌ வளர்ச்சியின்‌ ஓழுங்குழுறையையும்‌ ஒருவகையில்‌ அல்லது மறுவகையில்‌ மறுக்கிறார்கள்‌. புறநிலைக்‌ கருத்துமுதல்வாதிகள்‌ மனித சிந்தனைகள்‌,கருத்துக்‌கள்‌ஆகியவையும்‌, இயற்கையுமே கூட, பரம கருத்து, பிரபஞ்ச வியாபகமான அறிவு, பொருளியலானதற்கு அப்பாற்பட்ட எதார்த்தம்‌ ஒன்றின்‌ துணுக்கு மட்டுமே எனக்‌ கருதுகிறார்கள்‌.

மனிதன்மீது சார்பு அற்ற பிரபஞ்சம்‌ நிலவுவது சாத்தியமே எனப்‌ புறநிலைக்‌ கருத்துமுதல்வாதிகள்‌ ஒப்புக்கொள்கிறார்கள்‌. அகநிலைக்‌ கருத்துமுதல்வாதிகள்‌ போன்று அகநிலைப்பொருளின்‌ தன்னுர்வையோ, மனிதனது உணர்ச்சிகளையோ அவர்கள்‌ முதன்மையாக ஏற்றுக்கொள்வதில்லை. தானேயான கருத்து, அதாவது '“பிரபஞ்சக்‌ கருத்து தான்‌ முதன்மையானது என்‌ றும்‌, இந்தக்‌ கருத்தியலானதிலிருந்கே, ஆன்மீகமான திலிருந்தே இயற்கை, வெளிப்‌ பிரபஞ்சம்‌, நிலவுபவை அனைத்தும்‌ தோன்‌றின என்றும்‌ அவார்கள்‌ முடிவு கட்டுகிறார்கள்‌. இவ்வாறாக, புறதிலைக்‌ கருத்துமுதல்வாதமும்‌ அகநிலைக்‌ கருத்துமுதல்வாதமும்‌ கருத்துமுதல்வாதத்‌ தத்துவத்தின்‌ வகைகள்‌ ஆகும்‌. ஆனால்‌ முக்கியமான, அடிப்படையான விஷயத்‌தில்‌ அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை அல்ல. இரண்டு மே கருத்தியல்‌ தொடக்கத்தை அடிப்படையாக வைத்துக்கொள்கின்றன. கருத்து, அன்மா, அதாவது உணர்வு முதன்மையானது என்றும்‌ யதார்த்தப்‌ பிரபஞ்சம்‌, அதாவது இயற்கை இரண்டாவது என்றும்‌ இரண்டுமே ஒப்புக்கொள்கின்றன.

சரி நாம் தத்துவத்தை ஏன் பயில வேண்டும் எப்படி பயில வேண்டும் தொடர்ந்து பார்ப்போம்.

இன்றைய விஞ்ஞான- தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனுடைய ஆற்றலை அளவிட இயலாதவாறு அதிகப்‌ படுத்தியுள்ளது.

மிகப்‌ பெரிய பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தொழில்நுணுக்கச்‌ சாதனைகளும்‌, பூமி கோளத்தின் முழுமையையும் தன் தேவைக்காக மாற்றிவிட்ட துடிக்கும் பிரமாண்டமான இயற்கை உருமாற்றங்களும்‌, சமூக வாழ்வின்‌ எல்லாப்‌ பகுதிகள்‌ மீதும்‌ ஏற்படுத்தும் பாதிப்பு விளைத்துள்ள புரட்சிகரமான மாறுதல்களும்‌ நிகழ்ந்திருப்பகனால்‌ சிறப்பாகக்‌ குறிப்பிடத்தக்கது நமது காலம்‌.

நடக்கும்‌ நிகழ்ச்சிகளின்‌ பொருளைப்‌ புரிந்தகொள்ள வேண்டும்‌, சென்ற காலத்தையும்‌ நிகழ்காலத்தையும்‌ சரியாகத்‌ தெரிந்தகொள்ள வேண்டும்‌, வருங்காலத்தில்‌ பார்வையைச்‌ செலுத்த வேண்டும்‌ என்னும்‌ விருப்பம்‌ இயல்பாகவே ஓவ்வொரு மனிதனுக்கும்‌ உண்டாகிறது. தற்கால வாழ்க்கையின்‌ எல்லாத்‌ துறைகளிலும்‌ ஏற்பட்டுள்ள மாபெரும்‌ மாற்றங்களை அதிக ஆழத்‌தில்‌ புகுந்து காண்பதற்கு விஞ்ஞானக்‌ கண்ணோட்டம்‌ இன்றியமையாதது. இத்தகைய கண்ணோட்டமாக விளங்குகிறது மார்க்‌ஸீய-லெனினீய தத்துவ பொருளாதார சமூக-அரசியல்‌ கருத்துக்களின்‌ முரணின்றிப்‌ பொருந்திய தொகுப்பு மார்க்சிய லெனின்ய தத்துவம் அதனை சற்று பயிலுவோம் தோழர்களே.

மார்க்ஸீய-லெனினீயத்‌ தத்துவம்‌ உலகை அறிதல்‌ புரட்சி கரமாக மாற்றி அமைத்தல்‌ ஆகியவற்றுக்குரிய பொதுச்சித்தாந்‌கக்‌ கோட்பாடுகளை ஆதாரபூர்வமாக நிலை நாட்டுகிறது, இயற்‌கை, சமூகம்‌ ஆகியவற்றின்‌ வளர்ச்சி பற்றிய மிக மிகப்‌ பொதுவான விதிகளைத்‌ தெளிவுபடுத்துகிறது, சோஷலிஸ அமைப்பின்‌ மேம்பாட்டையும்‌ கம்யூனிஸ சமூக உறவுகள்‌ உருவாவதன்‌ சாத்தியக்கூற்றையும்‌ புலப்படுத்துகிறது. மார்க்ஸீய-லெனினீயத்‌ தத்துவக்‌ கல்வி மக்களுக்குக்‌ கொள்கை பற்றிய ஆழ்ந்த திட நம்பிக்கை ஏற்படுத்துகிறது. அறிவும்‌ செயலும்‌ ஒன்றாயிருத்தல்‌, கம்யூனிஸக்‌ குறிக்கோள்கள்‌ பற்றிய தெளிந்த உணர்வு, அவற்றைச்‌ செயல்படுத்துவதற்கான தீவிரப்‌ போராட்டம்‌ ஆகியவற்றில்‌ இந்தத்‌ திட நம்பிக்கை வெளிப்படுகிறது. வாழ்க்கைப்‌ போக்குடன்‌ இணைந்து முன்செல்ல விரும்பும்‌ எல்லோருக்கும்‌ மார்க்ஸீய-லெனினீயக்‌ தத்துவ அறிவு இன்றியமையாதது ஆகும்‌. யாவற்றிலும்‌ சிக்கலான இடையூறுகளையும்‌ கஷ்டங்களையும்‌ சமாளிப்பதற்கு வேண்டிய வலிமையையும்‌ தன்னம்பிக்கையையும்‌ அது மனிதனுக்குத்‌ தருகிறது. அவன்‌ செயலாக்கமும்‌ லட்சியத்தை நோக்கிய முன்னேற்றமும்‌ வாய்ந்தவன்‌ ஆவதற்கு உதவுகிறது. ஆவேசம்‌ பொங்கும்‌, உண்‌மைத்‌ தேட்டங்களும்‌ படைப்புத்‌ துணிவும்‌ நிறைந்த இளமைப்‌ பருவத்திலும்‌ சரி, ஆழ்ந்த சிந்தனையும்‌, அனுபவங்களையும்‌ உண்மை நிலவரங்களையும்‌ நிகழ்ச்சிகளையும்‌ நிதானமாகப்‌ பகுத்தாயும்‌ பான்மையும்‌ வாய்ந்த, பயன்பாடுள்ள படைப்புக்கள்‌ புரியும்‌ முதிர்ந்த பருவத்திலும்‌ சரி, தத்துவம்‌ மனிதனது நம்பகமான வழித்துணை ஆகும்‌.

தொடரும் வகுபிற்கு பிறகு தோழர்களே எழுத்து பணி....

தொடர் வாசிப்பில் பகுதி 3 நை வாசிக்க இந்த லிங்கை அழுத்தவும்

முந்தைய பகுதியை வாசிக்க இந்த லிங்கை அழுத்தவும் 2

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்