புரட்சியை நேசிப்போர் ஒன்றிணைய வேண்டியதும் நமக்கான எல்லை கோடும்

 பால் கெட்டால் கெட்டதுதான் ஆனால் அது பால் ஆகாது

கடவுளை பற்றி நாத்திகனும் ஆத்திகனும் பேசுகின்றனர் ஆனால் இருவரின் நோக்கமும் வேறுவேறு- நாத்திகன் கடவுளை மறுப்பவன் ஆத்திகன் கடவுளை ஏற்பவன். 

மார்க்சியத்தை பேசுபவர்கள் அதனை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஆகும் ஆனால் இருவரின் நோக்கம் ஒன்று அல்ல இருந்தும் இருவருமே மார்க்சியத்தை பேசுகின்றனர்.
சுரண்டலாளாரின் கருத்து முதல் வாதமும் பல்வேறு விதமான அடக்குமுறை ஒடுக்கு முறை சுரண்டலுக்கு எதிரான மார்க்சிய தத்துவமும் ஒன்றல்ல.
சுரண்டும் கூட்டத்தின் மாறாநிலைவாதம்
திருத்தல்வாதமாக- உள்ள சமூக அமைப்பிற்குள்ளே தாமும் வாழ வழி தேடும் முறை,
சீர்திருத்தவாதம்-தனக்கான இடத்தை தேடும் சமரசவாதம் ஒடுக்குமுறை சுரண்டல்முறைப்பற்றி கவலையின்றி இதற்குள்ளே ஒரு சிலர் வாழ சொல்லும் முறை.
ஏகாதிபத்திய சரக்கான- புதிய இடதுகள், நவ மார்க்ச்சியம் 
மண்ணுகேற்ற மார்க்சியம், பிராங்கபர்ட் பள்ளி, பின் நவீனத்தும் அதன் கள்ளகுழந்தைகள் பல குறிப்பாக அடையாள அரசியல் பேசும் தலித்தியம், பெண்ணியம் இன்னும் சில நாம் நடைமுறையில் காண்கிறோம்.

ட்ராட்ஸ்கியம்- மார்க்சிய ஆசான்கள் தவறானவர்கள் ட்ராட்ஸ்கிதான் ரசிய புரட்சியை நடத்தினார். உலக பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகானவை, உலகில் எல்லா நாடுகளும் முதலாளித்துவவமாக மாறி சோசலிச புரட்சி தான நடைப்பெறும் எனும் சமூக ஏற்ற தாழ்வை மறுக்கும் நிரந்தர புரட்சி கோட்பாடு மார்க்சியத்தை ஏற்காதவர்கள்.
பின்நவீனத்துவம் அதன் பலகிளைகளில் முக்கியமானவை அடையாள அரசியல் இதில் முக்கியமானவை தலித்தியம் பெண்ணியம்.

இவர்களோடு மார்க்சியத்தையே மறுத்து இவர்களின் கருத்து மட்டும்தான் மார்க்சியம் என்று பேசும் பிராங்க்பர்ட் பள்ளியின் கருத்துக்கள். பிராங்க்பர்ட் பள்ளியின் நோக்கமே மார்க்சியத்தை மடை மாற்றுவதுதான்.

ஆக எதிரியை இனம் கண்டு சரியான எல்லை கோடாக மார்க்சிய லெனினிய தத்துவத்தை அடிப்படையாக கொண்டோரை இனம் காணல் அவசியம் என்பதனையும் கருத்தில் கொளல் முன்தேவை உள்ளது.

மார்க்சிய லெனினியம் எல்லை கோட்டை வரையாமல் சரியான மா-லெ மாவோ சிந்தனை உள்வாங்காவிட்டால் ஏகாதிபத்திய ஏவள் கூட்டமான பின் வருபவை ஆளுமை புரியும்.

மார்க்சிய லெனின்யத்திற்கும், வலது சந்தர்ப்பவாததிற்க்கும் இடையேயான அடிப்படை வேறுபாடாக இருந்தது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற போராட்டங்களின் அனுபவம் தெளிவாக காட்டுவதைப் போல பாராளுமன்ற பாதையைப் பின்பற்றுவதன் மூலமாக அரசாங்கங்கள் மட்டுமே மாற்றபட முடியும், ஆனால் அனைத்துவகையான அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு ஆணிவேராக உள்ள தற்போதைய பொருளாதார அரசியல் அமைப்பை மாற்ற முடியாது. வன்முறை புரட்சியின் மூலம் மட்டுமே தற்போதுள்ள ஆளும் வர்க்கமும் அவர்களுடை அரசும் தூக்கியெறியப்படும் ஒரு புதிய பொருளாதார, அரசியல் அமைப்பு உருவாக்க முடியும் என்கின்றது மா-லெ-யம், “வன்முறைதான்புதியசமூகத்தை பிரசவிக்கப் போகும் பழைய சமூகத்தின் மருத்துவச்சியாக உள்ளது,” என்றார் மார்க்ஸ்.

ரசிய புரட்சியை நாம் மீண்டும் பேசுவது அங்கே நடந்தேறிய சமூக மாற்றமானது அங்கிருந்த ஒடுக்குமுறை ஏற்றதாழ்வு இன்றுள்ள பல பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. ஆம் உழைக்கும் மக்கள் தங்களின் உண்மையான வாழ்க்கை வாழ்ந்தனர்.

குழந்தைகளிலிருந்து படிக்கும் வரை இலவச கல்வி படித்து முடித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு படிப்புக்கான வேலை உத்திரவாதம். முதியோருக்கு ஏற்ப்ப ஓய்வூதியத்துடன் கூடிய வாழ்க்கை. அடுப்பறையில் முடங்கி கிடந்த பெண்களுக்கு ஆணுக்கு நிகரான உழைப்பில் ஈடுபடுத்தியமை. எல்லோரும் உணவருந்தும் சமூக சமையல் கூடங்கள். குழந்தைகளை பராமறிக்கும் குழந்தை காப்பங்கள் மருத்துவ வசதியுடன்.

நாம் இன்றும் கனவு கண்டுக் கொண்டுள்ள பலவற்றை அன்றைய சோவியத் புரட்சி இம்மண்ணில் படைத்துக் காட்டிற்று.

நாமும் அதன் அடிதொற்றி இம்மண்ணில் அதற்கான சரியான வழியில் பயணித்து மக்களை புரட்சிக்கு அணி வகுக்க செய்ய வேண்டியது புரட்சிகர கட்சியின் கடமை என்பதனை உறக்க சொல்லும் அதே நேரத்தில் புரட்சியாளர்கள் ஒரே அணியாக ஒரே கட்சியாக வேண்டாமோ? அப்படி ஒன்றிணைய தடுப்பது எவை தொடர்ந்து பரிசீலிப்போம் தோழர்களே!.

“தவறான கருத்துகள் தவறான கொள்கையை தவறான வேலைமுறைகள்" ஆகியவை புரட்சியின் எதிரிகள் என்று சாரூ அக்டோபர் 8-1970 இல் கூறியதற்கு மேல் உள்ள பதிலாக மாவோ கூறியுள்ளார். இது பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் பேசப்பட்டுள்ளது .

எதிரிக்கு எதிரான தாக்குதல் பற்றி "கஷ்டமும் இல்லை சாவும் இல்லை" என்பதை இயங்கியல் ரீதியில் எடுத்துக் கொள்ளலாம் .கஷ்டங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர்களிடமிருந்து ஒதுங்கி விடாதீர்கள். சகாசத்திற்காக தியாம் செய்யவேண்டாம்; எதிரிகளை எதிர்த்துப் போராடுங்கள்; தனிநபர்களை இரகசியமாக அழித்தொழிப்பது அராஜகமானது .இது நீண்ட காலம் நீடிக்காது; இது மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடும். ஒரு புரட்சியை நேசிக்கும் புரட்சியாளர் தங்களுடைய புரட்சிகர உறுதிப்பாட்டை பேணுவதிலும் எடுத்துக்காட்டாக இருக்கின்ற தோழர்கள்” மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின்அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வதும் எவ்வித அவசியமற்ற பயங்களை சந்தேகங்களை ஆகியவை போலிமதிப்பு உணர்வும் இல்லாமல் புரட்சியை வெற்றிகரமாக ஆக்குவதற்கு தேவையான படிப்பினை பெறுவது முதன்மையான கடமையாக உள்ளன.

இந்தக் கடமையை வெற்றிகரமாக செய்து முடிப்பது மூலம் மட்டுமே கட்சிக்கு அதனை என்று நெருங்கி தாக்கிக் கொண்டிருக்கும் தத்துவார்த்த தவறுகள் குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து அது விடுபட்டு வெளி வருவதற்கும் நாம் உதவி செய்ய முடியும் ஸ்தாபனத்தை பற்றிய லெனின்ய அடிப்படைகளுக்கு உட்பட்டு ஒரு பலமான கட்சியை கட்டவும் புரட்சிக்கான முன்னெடுத்துச் செல்ல சரியான கட்சி ......


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்