சோஷலிசப்புரட்சிதோற்பதில்லை:-1990களில் கிழக்கு ஐரோப்பிய நாடுளில் நடைபெற்ற “மீண்டும் ஜனநாயகத்திற்கு” என்ற கூக்குரலும் "சோஷலிசம் தோற்றுவிட்டது" என்ற பிரச்சாரமும் சாதாரண மக்களுக்கும் சோஷலிச அனுதாபிகளுக்கும் இடையே குழப்பமேற்படுத்தவே செய்தன இன்றும் சிலர் அவை சோசலிச நாடுகள் என்று பேசுவோரும் உள்ளனர்.
ஆனால்மார்க்சிய லெனினியவாதிகள் சோவியத்தில் குருசேவின் தலைமை ஏற்பட்ட காலத்திலிருந்தே மார்க்சிய சித்தாந்தவாதிகள் அங்கு ஏற்பட்டு வரும் திரிபுவாதப் போக்கைப் பற்றி விமர்சித்துக் கொண்டே வந்தனர். பின்னர்-மாவோ ‘சோவியத்திரிபுவாதத்தை 'சமூக ஏகாதிபத்தியம்’ என வர்ணித்தார். பேச்சளவில் சோஷலிசமும் நடைமுறையில் ஏகாதிபத்தியப் போக்கு எனவும் விளக்கம் கொடுத்தார்.
போல்சுவீசி போன்ற மார்க்சிய அறிஞர்கள் சோஷலிச நாடுகள் என்று ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கூறுவதை விட்டு "புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள்” என்று அவற்றைக் குறிப்பிடத் தொடங்கினர்.
பிரெஞ்சு அறிஞர் பெத்தெல்கெம் போன்றோர் சீனகலாச்சாரப் புரட்சியின் தோல்விக்குபின் சீனாவிலும் திரிபுவாதம் ஏற்படுவது பற்றி அச்சுறுத்தினர்.மார்க்சிய அறிஞர்களின் முன்னைய கணிப்பு இன்று இதனை தெளிவாகியுள்ளதைக் தெளிவாகக் காண்கிறோம் அவ்வளவே. சோஷலிசப் புரட்சிகளை சீரழிப்பதற்குத் தலைமை தாங்கிய கொர்பச்சேவை முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகள் ‘உலகின் வீரபுருஷன் என்று பாரட்டின. அந்த சகாப்தத்தின் வீரபுருஷன் என அமெரிக்க பிரபல வார சஞ்சிகை டைம்" கணிப்பிட்டுள்ளது. அந்நாடுகள் தமது நண்பனாக கொபச்சேவைக் கொள்ளத் தொடங்கி செயல்பட்டதன் விளைவு நாம் அறிந்துள்ளவைதானே?. எதிரிகளின் பாராட்டு முதலாளித்துவத்துக்குத் தலைமைதாங்கும் அமெரிக்கா கனடாவை முன்னர் விழுங்கியது தொடர்ச்சியாக பனமா மற்றும் பல நாடுகளை நசுக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியம் இக்கொடுங்கோலர் கொபச்சேவைப் பாராட்டுகின்றனர் எனும் பொழுது அவர்கள் யாரென்று சொல்ல வேண்டுமா?உழைக்கும் பெரும் பான்மையான பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காகக் கட்டப்படும் சோஷலிஷமும்-சிறுபான்மை யினரான முதலாளிகளின் வாழ்வுக்காக கட்டிக்காக் கப்படும் முதலாளித்துவமும் பகைமை கொண்ட அமைப்புகள், அவற்றிடையே சமரசம் ஏற்படுவதும் “சோஷலிசத் தலைவனை" முதலாளித்துவம் பாராட்டுவதும் விழிப்போடு கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களே.
நிலப்பிரபுத்துவ உற்பத்திஉறவை உடைத்து கூலி அடிமைச் சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்கு 200-300 ஆண்டுகள் பிடிந்தன. இக்கால கட்டத்திலேயே எத்தனை ஏற்றத் தாழ்வுகள், யுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள், போட்டா போட்டிகள். பல கோடி மனித உயிர்ப் பலிகள் ஏற்பட்டன. இது தவிர பெரும் பான்மையினரான பாட்டாளிகளை அடக்கி ஒடுக்க சிறுபான்மையினரான முதலாளிகள் வன்முறையான அரசை நிலைநாட்டி உயிர்ப் பலிகளை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கினர்.
அன்றைய சோசலிச நாடுகளில் எதிர்பாராது ஏற்பட்ட பகைமை முரண்பாடுகள் பல மடங்குகளாகப் பெரிது படுத்தப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன/படுகின்றன இன்றும் சில கம்யூனிசவிரோதிகள் செய்கின்றனர்.
முதலாளித்துவம் 2, 3 நூற்றாண்டுகளில் சாதித்ததை சோசலிசப் புரட்சியின் மூலம் சில பத்தாண்டுகளிலேயே சாதிக்க முடிந்ததை வரலாறு மறக்க முடியாது. சோஷலிசத்தின் வளர்ச்சியைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியமே அஞ்சியதை நாம் கண் கூடாகக் கண்டோம். இன்று எதிரியின் அச்சம் நீங்கி யதோடு எதிர்புரட்சிகர சக்திகளை வளர்ப்பதோடு மார்க்சியத்தை குழப்ப மடை மாற்ற பல்வேறு முன்னால் கம்யூனிஸ்ட்டுகளை தங்களின் ஏவளால்களாக கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.
ரஷ்யா கிழக்கைரோப்பிய நாடுகள், சீனாவின்சந்தைகள் ஏகாதிபத்திய பன்னாட்டு கம்பெனிகளுக்கு இன்று திறந்துவிடப்பட்டுள்ளன." முன்னால் சோஷலிச நாடுகள்" என்று கூறப்படும் நாட்டுத் தொளிலாளர்கள் முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டப்பட்டு கொண்டிருகின்றனர். இன்று மூன்றாம் உலகநாடுகளைச் சுரண்டுவதில் அமெரிக்காவுடன் ரஷ்யாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டுள்ளது. ஒருபுறம் தமது தொழிலாளர்களேச் சுரண்ட அனுமதிக்கப்படும் போது மறுபுறம் ஏழைநாட்டுத் தொழிலாளர்களும் சுரண்ட அனுமதிக்கப் படுகின்றனர். இது வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானதுமான முரண்பாடே...
சோஷலிசமும் அதன் வீழ்ச்சியும்- போல்சுவீசி கருத்துகள் கீழே:-
1917ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியை முன்வைத்தே நடைமுறையிலுள்ள சோஷலிசம் என்று பெரும்பாலும் பேசுகிருேம். இந்தச் சோஷலிசம் தோல்வியடைந்துவிட்டதாகஇன்று உலகெங்கும்பேசப்படுகிறது. சோஷலிசம் என்பதன் இலக்கணம் வகுக்கும் பிரச்சினையில் இன்றைய பேச்சில் நான் ஈடுபடவிரும்பவில்லை. ஆனால் இன்று நடைமுறையிலுள்ள சோஷலிசம் தோல்வியடைந்துவிட்டது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். பிரச்சினை யாதெனில், அங்கிருந்து நாம் எங்கே போகிறோம்?
பொதுமையாகப்பேசப்படும்கருத்துயாதெனில், சோஷலிசம் தோல்வியடைந்து போனதால் முதலாளித்துவம் வென்றுவிட்டது என்பதே. ஏனெனில் உலகில் இன்று யதார்த்த வாய்ப்பாக இருப்பது இவ்விரண்டு அமைப்பு களுமேயாகும். தர்க்கரீதியாகவும், அனுபவவாதமாகவும் இது பொய்யாகும். இவ்விரு அமைப்புகளும் (நடைமுறை யிலுள்ளதாகக் கருதப்படும் முதலாளித்துவமும், சோஷலிசமும்தோல்வியடையவேசெய்யும்.)இரண்டும்தோல்வியடைந்துள்ளது என்ற முடிவுக்கு ஆதாரம் தர முடியும்.
முதலாளித்துவத்தைப் பொறுத்தவரையில் மிக நீண்டகால ஏற்றஇறக்க வளர்ச்சியின் பின்னரும் முன்னேறிய நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் வரலாற்று ரீதியில் பார்க்கும்போது உச்சமட்டத்திலேயே இன்றும் உள்ளது; இளம்சந்ததியினர் பயன்தரத்தக்க உழைப்பு வாய்ப்பற்ற எதிர்காலத்தை நோக்கவேண்டியுள்ளது. இதனிலும் மோசமான நிலையில் வளர்ச்சியடையாத நாடுகளின் நிலைஉள்ளன. பெரும்பாலான மக்களின் உண்மை நேர்மையான வருமானமும், வாழ்க்கை நிலையும் 1980 களின் சகாப்தத்தில் குறுக்குவெட்டாக வீழ்ச்சி அடைந்துள்ளன. இதற்கு மேலாக முதலாளித்துவத்தின் தோல்வி பற்றிக் குறிப்பாகக் கூறுவதற்கு எதுவும் வேண்டியதில்லை.
ஒரு சோசலிசப் புரட்சிக்குப் பிந்தைய சமூகத்தின் சோசலிசப்பொருளாதார நிர்மாணத்தில் ஏறத்தாழ இருபதாண்டுகள் (1946-1976) நடைமுறை அனுபவம் கொண்ட மாசேதுங், இடையறாத இருவழிப் போராட்டத்தின் ஊடாக முதலாளியச் சிந்தனையாளர்களால் முன்மொழியப் பட்ட முதலாளியப் பாதையை அரசியல்தளத்தில் வெகுவாக அம்பலப்படுத்தி உள்ளார். மாவோவின் படைப்பு களில் (புரட்சிக்குப் பின்வந்த) சோசலிசஉருவாக்கம் குறித்த பொருளாதாரப் பிரச்சினைகள் நிரம்ப விவாதிக்கப் பட்டிருக்கின்றன. ரசிய அனுபவப்களை விமரிசிக்கும்பொழுது (ரசியப் பொருளாதாரம் ஒரு விமரிசனம், மாசேதுங்) சீன அனுபவத்தையும் சீனயதார்த்த நிலைகளையும் மட்டுமே பெரிதாக மாவோ மனதில் கொண்டிருந்தார். ரசியாவின் சோசலிச உருவாக்கத்திலிருந்து சீனா எந்தெந்த விதங்களில் வேறுபடவேண்டியுள்ளது என்பதையும் அந்நூலில் மாவோ தொகுத்துக் கொடுத்துள்ளார். இதில்முதலாளிய மீட்சி குறித்த ஆய்வு இல்லையெனினும் சீனாவில் சோசலிச உறவின் வடிவங்கள் குறித்த ஆய்வு காணப்படுகின்றது. ஆனால் முதலாளிய மீட்சி குறித்த பொருளாதார, அரசியல் விளக்கங்களை சீனப் பொதுவுடைமைக் கட்சி யூகோஸ்லேவியா குறித்து ரசியப் பொதுவுடைமைக் கட்சிக்கு எழுதிய கடிதத்தில் (மக்கள் தினசரி 26--9-1969, மாபெரும் விவாதம், தமிழ்மொழி பெயர்ப்பு, பக். 842-860; 865-806; 884) காணலாம்.
ஸ்டாலினின் தொடக்ககால பங்களிப்பை நடுநிலையுடன் கணித்த பால். எம். சுவீசியின் கூற்று, இங்கு கருதத்தக்கது. ஸ்டாலினை,'வன்முறை வெறி மனோபாவம் கொண்ட அரசியல்சித்தப் பிரமையாளனாக மட்டுமே வருணித்த குருச்சேவ் முதல் கோர்ப்பச்சேவ்' வரை தம் முதலாளியமீட்சி நிலைபாட்டை மறைக்கும் கேடயமாக ஸ்டாலினின் செயலை மிகைவன்முறை என்று காட்டியவை இது ஒரு இழிவான சந்தர்ப்பவாதமாகும்-ஸ்டாலினின் பாட்டாளி வர்க்கசர்வாதிகாரத்தை பயன்படுத்தியதை வன்முறை என்று கூக்குரலிடுவதை பால்.எம்,சுவீசி கண்டிக்கும் அதேவேளையில் ஸ்டாலினின் சோசலிசத்தை வளர்க்கும் பணி உள்ளங்கியுள்ளதை விவரிக்கிறார். அதாவது சோசலிசத்தை காப்பதற்காக அவரின் செயல் மிகை வன்முறை வடிவம் தாங்கியுள்ளது. இந்த வடிவத்தைத் தாக்குபபவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம். ஏகாதிபத்திய அறிவாளிகள் மார்க்சிய லெனினியவாதிகள். குறிப்பீட்ட காலத்திய வரலாற்றுப் பருண்மையோடு இணைத்துக் காணப்பட வேண்டியவையாகும். இவர்கள் முன் வைக்கும் விமரிசனத்தில் உள்ள நியாயத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஏகாதிபத்திய பிரிவினர், மிகை வன்முறை என்ற வடிவத்தைத் தாக்குவதின் ஊடாக சோசலிச உள்ளடக்கத்தைத் தாக்குவது என்ற இறுதி நோக்குடன் தம் கருத்துகளை முன் வைக்கின்றனர்.
இன்றைய நெருக்கடி சோஷலிசத்தின் நெருக்கடியல்ல - திரிபுவாதத்தின்
நெருக்கடி-என். சண்முகதாசன்
சோஷலிச சமுதாயம் என்பது ஆகாயத்திலிருந்து விழுவதில்லே பழைய சமுதாயத்தின்கல்லறையிலிருந்தேவெளிவருகிறது;ஆயிரமாயிரம்ஆண்டுகால வர்க்க சமுதாயத்தில் உருவான தனிச்சொத்துடமை, அதைச் சார்ந்த கருத்தியல்கள், கலாச்சாரங்களை வேரறப்பது என்பது எளிதானதல்ல என்றார் லெனின்.
உற்பத்திச்சாதனங்களை சமூகஉடைமை ஆக்கிய பின்னரும் வர்க்கங்கள், வர்க்க முரண்பாடுகள், போராட்டங்கள் நிலவவே செய்யும் என்றார் மாவோ. சீனாவில் கலாச்சாரப் புரட்சியினூடாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த மாவோ முயன்றார். 1976 இல் மாவோவின் மரணத்தின் பின் நவீன திரிபுவாதிகள் தோன்றினர்.சோவியத் யூனியனில் ஸ்டாலினின் மரணத்தின் பின் அதிகாரத்துக்குவந்த குருசேவ் நச்சுத்தனமான தத்துவங்களை அறிமுகப் படுத்தினார், முதலாளித்துவப் போக்கை இவர்கள் புகுத்தினர். தனியார் இலாபமே முதலாளித்துவத்தின் முதல் நோக்கு. தனியார் இலாபம் மூலதன திரட்டலுக்கு வழிவகுக்கிறது. இதுவே முதலாளித்துவத்தின் போக்கு; சுரண்டலுக்கானப் பாதை. இதை ஒழிப்பதே சோஷலிசம்.
குருசேவ் இத்தாலிய பியட் கம்பனி முதல் அமெரிக்க ஏகாதிபத்திய வங்கிகள் வரை நாட்டில் நுழைய அனுமதித்தார். ஜப்பான் சைபீரியாவை சுரண்ட இடமளித்தனர். கூட்டு விவசாயம் ஒழிக்கப் பட்டு (நடுத்தர) சிறு பண்ட விவசாய உற்பத்திக்கு வழிவிடப்பட் டது. முதலாளித்துவ பாதைக்கு இதுவே முன்னோடி என மா-லெ போதிக்கும்.
சீனாவில் திரிபுவாதிகள் மாவோவின் மகத்தான சாதணையான கம்யூன்களை ஒழித்து குடும்பங்களுக்கு நிலம் வழங்கினர், முதலாளித்துவத்தில் மக்கள்நலனை ஒட்டிய திட்டமிடல் கிடையாது. தொழிற்சாலைகள், நாடுகளிடை போட்டாபோட்டி, முதலாளித்துவ் நெருக்கடிகள் யுத்தங்கள் நடைபெறுகின்றன. அரசியல் பொருளியல் இதை அறிவர். மத்தியஸ்துவ திட்டமிடல் முறை சோஷலிசத்தில் இப் பிரச்சினையைத் தீர்க்கிறது. மூலதன வளங்களை ஒட்டி மக்கள் தேவைகள் சம நிலைப்படுத்தப்பட்டு அனைத்தும் திட்டமிடப்படுகின்றது.
தவறுகள் ஏற்படலாம். அனுபவம், நடைமுறை மூலம் அவை திருத்தப்படுகின்றன.
'மத்தியதுவம்,ஜனநாயகம்’ ஆகிய இரண்டும் முரண்பாடான இரண்டு அம்சங்கள்: மத்தியதுவ தீர்மானங்கள் அடிமட்டம்வரை பரிசீலனைக்கு அனுப்பப் படும்."அது மீளவும் மத்தியஸ்துவத்தால் பரிசீலிக்கப் படும். ஜனநாயக மத்தியஸ்துவம் என்றும் காப்பாற்றப்பட வேண்டும்”."தனியார் சொத்துடைமை இடையிட்டு வந்ததே. ஆயினும் பல நூற்றாண்டு கால தனிச் சொத்துடைமைச் சமூகஉணர்வுகளை முற்றாக அழிப்பதும் சிரமமே, சோஷலிச நாட்டு மக்களை முதலாளித்துவ பிற்போக்குச் சக்திகள் இழுக்க முயல்கின்றன. காரணம் ஆற்றலின்மை யல்ல. இரு சமூகத்திலும் ஆற்றலின்மை உள்ளன. சோசலிசம் ஆக்கத்தன்மை கொண்டதல்ல என்று கூறுவது அபத்தமானது.லெனின், ஸ்டாலின் தலைமையில் ரஷ்யா கனரக உற்பத்தி தொடக்கம் கலை, கலாசார வளர்ச்சி வரை முதலாளித்துவத்தால் 200 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை சோஷலிச வளர்ச்சியின் போது 30-35 ஆண்டுகளில் சாதிக்க முடிந்தது.முதலாளித்துவத்தின் இயந்திர உற்பத்தி மூலதனத்திற்கும் வளர்ச்சிக்கும் 200 ஆண்டுகளுக்கு மேலான காலனித்துவ சுரண்டல் பயன்பட்டது. ரஷ்யா, சீன இத்தகைய சுரண்டலின்றியே வளர்ந்தது. கனரக உற்பத்தியில் ரஷ்யா 2 ஆம் உலக யுத்த காலத்தாலும் முதலாளித்துவ பயமுறுத்தலாலும் ஈடுபட நேர்ந்தது. நுகர்பண்ட உற்பத்தியில் இந்நாடுகள் சிறிது பின்னடைவாக இன்று தோன்றலாம். முதலாளித்து வத்தின் 2-3 நூற்றாண்டுகளோடு 4-6 சகாப்தங்களை ஒப்பிட முடியாது.1990களில் அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் சிதைவு அமெரிக்காவின் ஏற்றத்தையும் வீழ்ச்சியையும் பின்வரும் காலப் பகுதிகளாகப் பிரித்து ஆராயலாம்:-1. 1940கள் 1950ன் ஆரம்ப காலம் வரை முதலாளித்துவ' அமைப்பின் உச்சநிலை.2. உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் வீழ்ச்சியின் அறிகுறிகள். 1960களின் ஆரம்ப காலத்திலிருந்து 1973 - 74பொருளாதார வீழ்ச்சி யும் வியத்நாம் யுத்த தோல்வியும்.3. உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் 1970களின் நடுப்பகுதிவரை யிலான தொடர்ந்த வீழ்ச்சி.4. ரீகனின் காலகட்டம் (1980 - 88) மீண்டு எழும் முயற்சி யின் தொடர்ந்த வீழ்ச்சி.5. 1990களுக்கு பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிதைவும் போட்டியுமான வாணிப, நிதிக் குழுக்களின் ஏற்பட்ட நிலையும் உள்ளது.முதலாளித்துவ நாடுகள் தமது இனமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மாறுவதைப் பாராட்டுகின்றன.ஏகாதிபத்தியவங்கிகள் போலந்து ஹங்கேரிக்கு போட்டியிட்டு கடன்கள்வழங்குகின்றன. கிழக்கு ஜெர்மனியரை மேற்குஜெர்மனி பணம் கொடுத்து கவர்ந்திழுக்கிறது. கொபச்சேவ் வீழ்ச்சியை மேற்குநாடுகள் அஞ்சுகின்றன. ரஷ்யாவில் சோஷலிசம் கட்டப்படுமானல் முதலாளித்துவம் அஞ்சியல்லவா இருக்கும்.
முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கான மாற்றம் என்பதன் சாராம்சம் ஒன்றே - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்.
தாராள ஜனநாயகம், பூர்ஷ்வா ஜனநாயகம் என்பவை முதலாளித்துவ சர்வாதிகாரமே.
ரஷ்யா, சீன மற்றும் கிழக்கு ஐரோப்பாவை ஆகர்சித்திருக்கும் நெருக்கடி சோஷலிசத்தின் நெருக்கடியல்ல; திரிபுவாதத்தின் நெருக்கடியே.
மற்றொரு பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் மாத்திரமே இந்த நாடுகளில் சோஷலிசத்தை மீள்விக்க முடியும்,’’(நன்றி.வீரகேசரிகட்டுரைச்சுருக்கம் இதில் சில பகுதி அந்த கட்டுரையின் சாரமே)
இனி சோசலிச வீழ்ச்சி குறித்த வேறு கட்டுரைகள்
லெனின் புரட்சிக்கு முன்பும் புரட்சிக்குப் பின்பு சில ஆண்டுகளும் வாழும் வாய்ப்பைப் பெற்றதாலும் புரட்சியில் வீழ்ச்சியடைந்த வர்க்கங்களையும் கட்சியின் புதியவர்க்கத் தன்மையையும் ஓரளவே கண்டுணரும் வாய்ப்பைப் பெற்றதாலும் லெனின் காலத்தில் இத்தகைய நிகழ்வுப் போக்கு யதார்த்தமாகாததாலும் முதலாளிய மீட்சி குறித்த தொடக்கப் புரிதலோடும் வரையறையோடும் மட்டுமே இருக்கநேர்ந்தது. எனினும் ரசியாவின் பழைய வர்க்கங்களிலிருந்து ஒரு புதிய முதலாளிய வர்க்கம் தோன்ற இயலும் எனத் தெளிவாக லெனின் குறிப்பிட்டார் (00/29 : 189). *விந்தையாகத் தோன்றக்கூடிய இந்த உண்மை சரக்கு உற்பத்தியிலும் சிறு உற்பத்தியிலும் புதைந்து கிடப்பதாகவும் இது சாதாரண முதலாளிய ஜனநாயகம் வரை கொண்டு வந்துவிடும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார் (ஸ்டாலின் தொகுப்பு நூல் 11: 285, 7: 950). ஒருசோசலிசப் புரட்சிக்குப் பிந்தைய சமூகத்தின் சோசலிசப் பொருளாதார நிர்மாணத்தில் ஏறத்தாழ இருபதாண்டுகள் (1916-1976) நடைமுறை அனுபவம் கொண்டமாசேதுங், இடையறாத இருவழிப் போராட்டத்தின் ஊடாக முதலாளியச் சிந்தனையாளர்களால் முன் மொழியப்பட்ட முதலாளியப் பாதையை அரசியல் குளத்தில் வெகுவாக அம்பலப்படுத்தி உள்ளார். மாவோ வின் படைப்புகளில் (புரட்சிக்குப் பின்வந்த) சோசலிச உருவாக்கம் குறித்த பொருளாதாரப் பிரச்சினைகள் நிறையவே விவாதிக்கப்பட்டிருக்கின்றன. ரசிய அனுபவங்களை விமரிசிக்கும் பொழுது (ரசியப் பொருளாதாரம்-ஒருவிமரிசனம்,மாசேதுங்) சீன அனுபவத் தையும் சீன யதார்த்த நிலைகளையும் மட்டுமே பெரிதாக மாவோ மனதில் கொண்டிருந்தார். ரசியாவின் சோசலிச உருவாக் கத்திலிருந்து சீனா எந்தெந்த விதங்களில் ேவறுபட வேண்டியுள்ளது என்பதையும் அந்நூலில் மாவோ தொகுத்துக் கொடுத்துள்ளார். இதில் முதலாளிய மீட்சி குறித்த ஆய்வு இல்லையெனினும்சீனாவில் சோசலிச உறவின் வடிவங்கள் குறித்த ஆய்வு காணப்படுகின்றது. ஆனால் முதலாளிய மீட்சி குறித்த பொருளாதார, அரசியல் விளக்கங்களை சீனப் பொதுவுடைமைக் கட்சி யூகோஸ்லேவியா குறித்து ரசியப் பொதுவுடைமைக் கட்சிக்கு எழுதிய கடிதத்தில் (மக்கள் தினசரி 26--9-1969, மாபெரும் விவாதம், தமிழ்மொழி பெயர்ப்பு, பக். 842-860; 865-806; 884) காணலாம்.
சீனாவில் லியோசோஷி தலைமையிலான முதலாளியப் பாதையை எதிர்க்கும் காலத்தில் மாவோவின் தலைமையி லான சீனப் பொதுவுடைமைக் கட்சி எழுதிய இக் கடிதத்தில் விவசாயத்திலும் தொழில்துறையிலும் முதலாளியஉறவுகள் மீண்டும் கொண்டுவரப்படும் வடிவங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய மீட்சி நிலைக்கு மாவோவுக்குப் பிந்தைய சீனமும் பலியானதையும் வரலாற்றில் காண்கிறோம்.
முதலாளிய மீட்சி குறித்த இத்தகைய புரிதல்களோடு முதலில் ரசிய அனுபவத்தைக் காண்போம்.உலகில் மிகக்குறைவாக இரத்தம் சிந்தி நடத்தப்பட்ட ரசிய சோசலிசப்புரட்சி, அரசியல்-இராணுவ ரீதியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நான்குஆண்டுகள் ஆயின. அதன்பின் அது பொருளாதார நிலைநிறுத்தலுக்குப் போராடியது. இந்தப் பத்தாண்டுக் காலத்தை (1917-1921) சோசலிசத்துக்குச் செல்வதற்கான இடைக்கட்டம் எனலாம். இதையும் இரண்டு துணைக் கட்டங்களாகப் பிரிக்கலாம். 1) கட்டுப்படுத்தப்பட்ட முதலாளியம் மற்றும் போர்க்காலப் பொதுவுடைமை
(நவம்பர் 1917-மார்ச்1921)
2) புதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டம் (1921-1921)
முதல்துணைக்கட்டம், உள்நாட்டு யுத்தக்காலமாகும்; இக்காலத்தில் ஆலைகள், வங்கிகள், வர்த்தகம் ஆகியவை அரசுடைமையாக்கப்பட்டன. பெருநிலவுடைமைபறித்தெடுக்கப்பட்டு,விவசாயிகட்கு நிலங்கள்தரப்பட்டன. தொழிலாளிக் குழுக்கள் ஆலைகளை நிர்வகித்தன. விளைபொருள்கள் அரசின் மூலமே விற்கப்பட்டன. இக்கட்டத்தில் உற்பத்தி குறைந்தது; விலைவாசி அதிகமாயிற்று. சர்வதேசச் சந்தையில் ரூபாயின் மதிப்பு 3 ஆண்டுகளில் (1918-1920) 120 மடங்கு வீழ்ச்சியடைந்தது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும், உள்நாட்டுப் போரிலிருந்து கிடைத்த ஓய்வைப்பயன்படுத்திக்கொண்டு சோசலிசத்துக்கான பொருளாதார அடித்தளம்இடவும் புதியபொருளாதாரக்கொள்கை உருவாக்கப் பட்டது. லெனின் வார்த்தைகளில் சொன்னால் இது இடைக்காலத்திய கலப்புப்பொருளாதாரம் ஆகும்; அரசுடைமையாக்கப்பட்ட ஆலைகள் சில, முன்னாள் முதலாளிகட்குக் குத்தகைக்குவிடப்பட்டன (மே 1921). அவை நிர்வகிக்கும் தொழிலாளர் குழு கலைக்கப்பட்டு, ஆலைகள் லாபத்தில் இயங்குவதற்குரிய வகையில் நடத்தும் திறன்பெற்ற ஒரு நிர்வாக வாரியம் நியமிக்கப்பட்டது உள்நாட்டு வணிகம் முதலாளிகளிடம் ஒப்படைக் கப்பட்டது. வெளிநாட்டு வணிகத்தை அரசு நடத்தியது. விவசாயி களிடமிருந்து கட்டாயக் கொள்முதல் நிறுத்தப்பட்டு, பண்ட வடிவிலான வரிவசூலிக்கப் பட்டது. எஞ்சியதை, சுதந்திரமாக சந்தையில் விற்றுக் கொள்ளலாம்.இதனடிப்படையில்விவசாயிகட்கும்தொழிலாளர்கட்கும் இடையில் சுதந்திர சந்தைஉறவுகள் புதுப்பிக்கப் பட்டன. உள்நாட்டில் தொழில்கள் தொட்ங்க அன்னிய முதலாளிகட்கு இசைவு தரப்பட்டது. அன்னியத் தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்பட்டது . இந்தக் காலத்தில் (1921-1920) ஆலை உற்பத்தி 5 மடங்காகவும் விவசாய உற்பத்தி 3 மடங்காகவும் உயர்ந்தன. இந்தப் பொருளாதாரம் முதலாளியக் கூறுகளை உள்ளடக்கியது என்றும் முதலாளிய மீட்சிக் கூறுகள் இதில் உள்ளன என்றும் ஒப்புக்கொண்ட லெனின் இதைப் “பின் வாங்கல்” என்று வர்ணித்தார். சிறுவீத பண்ட உற்பத்தியிலிருந்து சோசலிசத்துக்குச் செல்லும் இடைக்கட்டம் (ருது: 3: 349) என வர்ணித்தார். உள்நாட்டிலும் உலகளாவிய முறையிலும் முதலாளியத்தைவிட பலவீனமான நிலையில் உள்ளபொழுது இது தவிர்க்க இயலாத பின்வாங்கல் என லெனின் வர்ணித்தார் (51: 515). புரட்சிக்குப் பின் சோசலிசம் கட்டியமைப்பதற்கான தயார்நிலையை உருவாக்க 14 ஆண்டுகள்ஆயின. இந்த இடைக்கட்டத்தில் நாட்டின் நிலைகள் பின் வருமாறு இருந்தன:
1) உற்பத்தி சாதனங்களில் அரசுடைமை, தனியுடைமை, கூட்டுடைமை இருந்தன. தொழில்துறையில் அரசுடைமையும் விவசாயத்துறையில் தனியுடைமையும் பிரதான வடிவங்களாகும்.
2) முதலாளியப் பொருளாதார விதிகள் மீது அரசின் கட்டுப்பாடு மிகவும் குறைவு. மதிப்புவிதி, சந்தைப் பொருளாதாரம், பண்டஉற்பத்தி ஆகியவை முதலாளிய நோக்கிலேயே செயல்பட்டன.
3) சிறு விவசாயிகளின் தனியுடைமையே பிரதான உற்பத்தி வடிவம்.
4) ஆலைகளை நிர்வகிக்கத் தொழிலாளர் குழுக்கள் என்ற சோசலிச நோக்கிலான நிர்வாகமுறை பின்னுக்குத் தள்ளப்பட்டு, உற்பத்திப்பெருக்கு நோக்கிலான நிர்வாக வாரியம்நியமிக்கப்பட்டது.
இது சோசலிசக் கட்டமல்ல. சோசலிசத்தைக் கட்டுவதற்கான சில பொருளாதார முன்னிபந்தனைகளை உருவாக்குவதற்கான காலம் ஆகும்.
1928இல் மாபெரும்தொழில்மயமாக்கலைத்தொடர்ந்து சோசலிசப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்கும் பணிகள் தொடங்கின. ஒருநாட்டில் சோசலிசத்தின் இறுதிவெற்றி சாத்தியம் என்றும் அதற்கான தேவைகள் ஏற்கனவே ரசியாவில் உருவாகிவிட்டன என்றும் கருத்துடைய ஸ்டாலின் தலைமையில் இந்தப் பணி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது:அதாவது உலகளாவிய ஏகாதிபத்திய வேலைப் பிரிவினையும் வர்க்கங்கள் மற்றும் வர்க்க முரண்பாடுகள் ஆகியவையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒரு நாட்டில்மீட்கப்பட்டு விடலாம் என்ற கருத்தியலோடு இந்தப்பணி தொட்ங்கப்பட்டது:மேலும் கிராமப்புற முதலாளிகட்கும் தொழிலாளி: வர்க்கத்துக்கும்இடையில் இணக்கம்காாணஇயலா பகைமுரண்கள் இருக்கின்றன என்ற புரிதலோடும் (ஸ்டாலின் தொகுப்பு நூல் 12:82) இதன் தொடக்கத்தைக் காணவேண்டும்.ஸ்டாலின் தலைமை யிலான போக்கின் இந்தக்கோட்பாட்டு அம்சங்கள் முதன்மையானவை. ரசியா ஒரு சோசலிசநாடாக மலர்வதற்குத் தேவையான மூலதனத்தை உள்நாட்டிலே திரட்டியாகவேண்டும். விவசாயிகள், நகர்ப் பொருள்களுக்கு அதிகவிலைகள் கொடுத்தும் தம் "பொருள்களைக் குறைவான விலைக்கு விற்றும்மூலதனம் திரட்டப்பட்டது.இந்த மூலதனத்திரட்டல் தொழில் மயத்துக்குறிய மூலதனமாயிற்று. நகரங்களில் ஆலைகளும் தொழிலாளர்களும் பெருமளவில் வளர்ந்து கொண்டு போயினர். தொழிற்சாலைப் பொருள்களின் உற்பத்தி பற்றி பல புள்ளி விவரங்கள் உள்ளன. குத்தகைக்கு விடப்பட்ட ஆலைகள் மீண்டும் அரசுமயமாயின. ஆலைநிர்வாகத்தில் 1923 வரை இருந்த தொழிலாளர் குழு மீண்டும் கொணரப்படாமல் புதிய பொருளாதாரக் கொள்கைக்காலத்தில் கொணரப்பட்ட நிர்வாகவாரியம் (தொடர்ந்து இருந்தது. இதில் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் கட்சியால் நியமிக்கப்பட்டவர்களும் இருந்தனர். இந்த நிர்வாகமுறை முக்கியமானது. புதிய பொருளாதாரக் கொள்கைக் காலத்தில் இருந்த தனியார் முதலாளியத் தையும் அரசு முதலாளியத்தையும் நிர்வகித்த அதேமுறை 'முதலாளியத்தின் ஊடே சோசலிச முறைக்கு’ச் செல்லும் கட்டத்திலும் பயன்பட்டு வந்தது என்பது கவனிக்கத் தக்கது.
சோசலிச உருவாக்கத்தில் ஸ்டாலினின் பங்களிப்பு குறிப்பிட்க்தக்கது. தனியார் முதலாளியத்தைக் கட்டுப்படுத்தி அரசு முதலாளியத்தின் ஊடாக சோசலிசப் பாதைக்குச் சென்றடையும் ஒரு தொலைதூர தோக்கை மட்டுமே லெனின் வகுத்துக் கொடுத்திருந்தார். ஒருநாட்டில் சோசலிசத்தின் இறுதிவெற்றி, சோசலிசத் தாக்குதல் காலம், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக் கோட்பாடு. சோசலிச நாட்டில் பகைவர்க்கங்களையும் நட்பு வர்க்கங் களையும் கையாள்வதில் வேறுபாடின்மை ஆகிய ஸ்டாலின் நிலை பாடுகளுக்கு ஊடே மிகை வன்முறையுடன் இணைந்த கூட்டுடைமையாக்கமும் ஒரு பாய்ச்சலான வளர்ச்சியுடன் கூடிய தொழில் மயமாக்கமும் நடந்தேறின என்பது உண்மை. சோசலிசத்துக்கான உற்பத்தி நிகழ்வுப் போக்கில் இவை இரண்டுக்கும் வெகுவான மதிப்புகள் உண்டு. லெனினியத்தின் சில அம்சங்களில் இருந்து ஸ்டாலின் விலகியிருப்பினும், இத்தகைய ஆக்கபூர்வமான மதிப்புகளுடன் ஸ்டாலின் இணைத்தும் காணப்பட்டாக வேண்டும்.அளவற்ற அதிகாரங்களைத் தம்கையில் குவித்துக் கொண்டிருந்த அதிகார வர்க்கம் சலுகை பெற்றதாகவும் ஒடுக்கு முறைச் சாதனமாகவும் மாறிக் கொண்டிருந்த ஒரு நிகழ்வுப்போக்கை--சோசலிசத்தைத் தலை கீழாகப் புரட்டி எடுக்கும் திறன்கொண்ட எதிர்மறை அம்சத்தை - தடுத்து நிறுத்துவதற்கான ஒரே சாத்தியம், வர்க்கப் போரட்டத்தை சகலமட்டங் களிலும் விரிவுபடுத்தி தொடர்ந்து நடத்துவதாகும்1935இல் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் தளர்த்திக் கொள்ளும் சாத்தியத்தை வரலாற்றுக்கு வழங்கியது.
இந்த சோசலிசஉருவாக்கக்காலத்தில் எழுந்த ஆக்கபூர்வமற்ற கூறுகள் அனைத்தும், தம்மைத் தொகுத்துக்கொண்டுஒருபுதியகோட்பாட்டு உருவாக்கத்தின் கீழ் குருச்சேவ்காலத்தில் கனிந்து திரண்டன. இந்தப் புதியகோட்பாடு, மார்க்சியத்தைத் திருத்தி விளக்கியது. சோசலிசத்தைக் கட்டி அமைக்கும் ஸ்டாலினிய முயற்சிகளின் துணைவிளை பொருளான (by product) புதியமுதலாளியவர்க்கத்கை ஆளும்வர்க்கமாக நிறுவுவதும் அதற்கு கேற்பசோசலிசத்தை அதிகாரவர்க்க அரசுமுதலாளியமாகக் குறுக்கிக்கொள்வதும் புதிய கோட்பாட்டின் இலக்குகளாக இருந்தன. மரபுவழிப்பட்ட முதலானியைப் போல இந்தப் புதிய முதலாளிய வர்க்கத்துக்கு உற்பத்திசாதன உடைமையில் எவ்விதத் தனியுரிமைப்பங்கும் இல்லை. ஆனால் தமக்குள்ள சிறப்பு நிலைகளைக் கொண்டு உற்பத்தி சாதனங்களைத் தம்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். உற்பத்தி நிகழ்வுப் போக்கில் இவர்கள்-பங்கே தீர்மானகரமானது. உற்பத்திப் பொருள் வினியோகத்தில் இவர்கள் தமக்கென்று ஒரு பெருத்த பங்கை அபகரித்துக் கொள்கின்றனர்.இந்தவர்க்கத்தினருக்கென்றஉரிமைகளும் வசதிகளும் இவர்களின் இரத்த வாரிசுக்களுக்கு பரம்பரையாகச் சென்றடைய வேண்டும் என்ற சட்டபூர்வ வசதி இல்லையெனினும் இத்தகைய குடும்பங்களிலிருந்து வரும் பெரும்பான்மையினரே இவற்றைத் தொடர்ந்து அனுபவிப்பதற்குரிய ஒரு சூழல் இடையறாது நிலவிக் கொண்டிருக்கிறது.
உற்பத்திச் சாதனங்களின் மிகப்பெரும்பான்மை, அரசுடைமையாகவே இருக்கும் பொழுது பண்டப் பரிவர்த்தனை, மதிப்புவிதி, சந்தைப் பொருளாதாரம் என்பன போன்ற முதலாளியப் பொருளாதார விதிகள் மீது குறைந்த அளவே கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சிறுபான்மைத் திரள் அரசியல்- நிர்வாக அதிகாரத்தின் துணை கொண்டு உற்பத்தியின் நிகழ்வுப் போக்கையும் உற்பத்திப் பொருள்களையும் தம்முழுக்கட்டுப் பாட்டில் கொண்டு செயல்படும் பொழுது அது சோசலிசஉறவாக அமையாமல் அதிகார வர்க்க அரசுமுதலாளியஉறவாகவேஉள்ளது.இவர்கள்மரபுவழிப்பட்டமுதலாளிகளைப் போல உற்பத்திசாதனங்களின்மீது தனியுடைமையை அனுபவிக்கவில்லை.
இங்கு மூலதனம் சிதைந்த தன்மையில் இல்லாமல் குவிமையப் பட்டும் (not fragmented but concentrated) உள்ளது. இவையனைத்தும் மரபு வழிப்பட்ட முதலாளியத்திலிருந்து புதிய முதலாளியவர்க்கத்தை வேறுபடுத்தி நிற்கின்றன. ஆனால் இந்த வேறுபாடுகள், இவர்களை முதலாளிய உறவில் உள்ள வர்க்கத்தினரா இல்லையா என்பதனைக் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. மேலும் இந்த நிகழ்வுப்போக்கை, முதலாளியமீட்சி என்று வரையறைப்படுத்துவதை நிறுத்துகிறதா என்பதே இப்போதைய பிரச்சனையாகும்.
ஒரு பாட்டாளி வர்க்கப்புரட்சி நடந்துமுடிந்து சோசலிச உறவுகள் கட்டியமைக்கப் பட்டு அதன்பின் சீர்குலைவு ஏற்பட்ட சமூகங்களில் முதலாளியமும் இல்லாமல் சோசலிசமும் இல்லாமல் ஒரு புதிய வகை சமுதாயம் தோன்றியிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் பால். எம். சசுவீசி, மரபு வழிப்பட்ட முதலாளியத்தின் மூன்று தீர்மானகரமான அம்சங்களைக் குறிப்பிரு கின்றார். (புரட்சிக்குப் பிந்திய சமுதாயம், பக், 232).
“புரட்சிக்குப் பிந்திய சமூகத்தில் ஒரு புதிய *அரசு முதலாளியம்/கட்சி முதலாளியம் உருவாக இயலும் என்றும் இவற்றை வெட்டிச் சாய்த்துவிட்டு சோசலிசப் பாதையில் பயணம் செய்ய வேண்டுமெனில் அந்தத் திசை நோக்கிலான 41 எத்தவொரு போக்கையும், எல்லாப் போக்குகளையும் எதிர்த்து உறுதியான போராட்டம் தேவை என்னும் மாவோ குறிப்பிட்ட கருத்து அவரது புதுமையான கருத்துகளுள் ஒன்று” எனப் பால், எம்.சுவீசி அங்கீகரித் துள்ளமை குறிப்பிடத்தக்கது (74௦ Review. Sept, 1986, ம. 27). உற்பத்தி சாதனங்களின் அரசுடைமையே சோசலிச 'சமூகமாகி விடாது என்பதே சுவீசியின் கருத் தாகும். இதைத் தொடர்ந்து அழுத்தமாகத் தன் கருத்து களை அவர் வைக்கிறார். எல்லோரும் பணக்காரர்களாக ஆவதை உற்சாகப் படுத்துவதே சீனார்வின் அதிகாரப்பூர்வமான கொள்கையாகத் தெரிகிறது. கடின உழைப்பு அவ்வாறு ஆதலுக்குரிய ஒரு வழியாக இருக்கலாம். சீனப் பத்திரிகைகளில் வருவதை நம்பினால் இதற் குப் பல வழிகள்-சட்டரீதியாகவும் சட்டவிரோதமாக வும்--இருப்பதைக் காணலாம். இவை அனைத்தும் முதலாளிய சமூகங்களில் பழக்கப்பட்டவையாகும் ; இவற்றில் எதுவும் சோசலிசத்தோடு எந்தவொரு சம்பந்தமும் கொண்டுள்ளதாகக் கருதப்படலாகாது. (Monthly Review, Sept. 86, p. 28). இங்கு நமக்கு முக்கியம், சீனாவில் இன்று சோசலிச உறவுகள் இல்லை என்பது மட்டுமல்ல; முதலாளிய சமூகத்துக்குப் பழக்கப்பட்ட பலமுறைகள் சீனாவில் உண்டு என்பதை சுவீசி அங்கீகரித்தலாகும். எனினும் முதலாளியமீட்சியைக் கோட்பாட்டு அளவில் மறுத்துரைக்கும் பேரறிஞர் சுவீசியின் கூற்று மிகவும் உன்னிப்பாகக் கருதத்தக்கது ஆரும். பால் எம். சுவீசி, முதல் இரண்டு தீர்மானகரமான பண்புகள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்கிறார். உற்பத்தி? சாதனவுடைமையை சட்டவழிப்பட்ட உரிமையோடு மட்டுமே இணைத்து. எண்ணுவதாகவுள்ளது. மேலும் 42 சீனாவிலும் ரசியாவிலும் இன்றுள்ள நடைமுறைகளைக் காணும்பொழுது சட்டப்படி அரசுடைமையும் (Public Ownership) நடப்பின்படி உண்மையான தனிஉடமையின்(Defacto Private Ownership)இருக்கின்றன. சட்ட வழிப்பட்ட உரிமையை மட்டுமே வைத்துக் கொண்டு முதலாளியமா இல்லையா என முடிவுசெய்து விடல் முடியாது. முதலாளிய உற்பத்திஉறவு என்பது சாராம்சத்தில் கூலிஉழைப்பு அடிப்படையிலான உற்பத்திப் போக்காகும். இந்த உற்பத்திப்போக்கு, உற்பத்தியில் ஈடுபடாத மிகச்சிறிய சலுகை பெற்ற வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் தொழிலாளர்களின் உபரி மதிப்பைச் சுரண்டி பண்டப்பரிவர்த்தனை மூலம் அதை அவர்கள் துய்ப்பதற்கு ஏற்றதாகும். இத்த உற்பத்திப் போக்கு ரசியாவில் ஏற்பட்டுவிட்டதா இல்லையா என்பதே இப்போதைய கேள்வியாகும். இது சோவியத்அமைப்பிலும் தங்கியுள்ளது என்பதைப் பால் எம். சுவீசி ஒப்புக்கொண்டாலும், (புரட்சிக்குப் பிந்திய சமுதாயம், பக்,218), சோவியத் தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான வேலை பாதுகாப்பு உண்டு எனக் குறிப்பிடு கின்றார். ஆனால் இந்த சட்டரீதியான பாதுகாப்பும் நடைமுறையில் நீர்த்துப் போயிருப்பதை ரசிய நிகழ்வுகளே குறிப்பிடுகின் றன . ..
இந்தப்பகுதி பல்வேறு ஆசிரியர்களின் நூல்களின் துணைக் கொண்டு அதன் அடிப்படையில் தொகுக்க பட்டவைதான் இதில் ஏற்பட்டிருக்கும் கருத்து மற்றும் தகவல் பிழை இருக்குமேயாயின் தொகுத்தவரின் குறைபாடுதான் அதனை விமர்சனபூர்வமாக ஏற்கிறோம்- சிபி.