1. அரைநிலப்பிரபுத்துவம் என்றகருத்து நியாயமானது என்பதற்கான கோட்பாடு.
இந்தியாவில் அரைநிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் கொள்ளை என்ற தலைப்பில் முற்போக்குவெளியீட்டில் 2017ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தகட்டுரை வெளியிடப்பட்டது. அந்தப் பகுதியே இங்கே தற்போது வெளியிடப்படுகிறது.
(1) நிலப்பிரபுத்துவத்தை முறியடித்து முதலாளித்துவ வளர்ச்சிக்கு இரண்டுபாதைகள் உள்ளது. ஒருபாதை, உண்மையிலேயே புரட்சிகரமானபாதை. மற்றொருபாதை பிரஷ்யன்பாதை. லெனினது மொழியில்சொல்வதெனில் பிரஷ்யன்பாதையானது இரட்டைத்தன்மை கொண்டதாகும். இந்தமுறையில் நிலப்பிரபுத்துவத்தின் மீதுஅழுத்தம்கொடுத்து நத்தைபோன்று மெதுவாக குறிப்பிட்ட எல்லைக்குஉட்பட்டு முதலாளித்துவ மாற்றம் கொண்டுவரப்படுகிறது. மறுபுறத்தில் இந்த சீர்திருத்தமுறையானது நிலப்பிரபுத்துவத்தை தக்கவைத்துக்கொள்ள ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்தவகையான மாற்றத்தின் இரட்டைத்தன்மையை ஒருவர் புரிந்துகொள்ளவில்லைஎன்றால் பத்தொன்பதாம் நூற்றிண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின்முதலாம் ஆண்டுகளிலும் நடந்த மாற்றங்களை மிகைப்படுத்திக்காட்டி தவறான புரிதலுக்கு அவரை இழுத்துச்செல்லலாம். ரஷ்ய விவசாயத்தில் 1861ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தத்தினால் தூண்டப்பட்டு முதலாளித்துவம் கொண்டு வரப்பட்டதை லெனினும் ரஷ்ய மார்க்சியவாதிகளும் சரியாக கணக்கிட்டனர். அதிலிருந்து ரஷ்ய சமூகஜனநாயக கட்சியின் முதலாவது விவசாயத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை லெனின் சுயவிமர்சனமாக குறிப்பிட்டார். 1912ஆம் ஆண்டில் லெனினால் எழுதப்பட்ட இறுதிவாழ்வு என்னும் கட்டுரையில் (லெனின்தொ.நூ. 18) இவ்வளவு சீர்திருத்தத்திற்குப் பின்பும் நிலப்பிரபுத்துவம் வலிமையாக நீடிக்கிறது ஏன் என்பதை தெளிவாக விளக்கினார். பெரிய நிலவுடமைகள் பாதுகாக்கப்பட்டது ஸ்டோலிபினது சீர்திருத்தங்கள் உழைப்புச்சேவை மற்றும் அதன் அடிமைத்தனத்தை ஒழிக்கவில்லை என்று லெனின் சொன்னார். பெரிய நிலவுடமையைச் சார்ந்து சிறிய நிலவுடமையும் அங்கு இருந்தது. இந்த பெரிய நிலவுடமையாளர்கள் பண்ணை அடிமைகளை சுரண்டுவது மட்டுமல்லாமல் கோர்வி அமைப்பின் விளைவாக சிறு விவசாயிகளையும் சுரண்டினார்கள்.
இந்தவகையான சீர்திருத்தமானது முதலாளித்துவத்திற்கு முந்தைய முறையை சிதைத்தபோதும் பெரியநிலவுடமையை பாதுகாக்கவும் செய்தது. ஆகவே இந்தமாதிரியான மெதுவான செயல்முறையானது தற்போது நடைமுறையிலுள்ள உழைப்புசேவை மற்றும் அடிமைத் தனத்திலிருந்துவிடுவித்து முன்னேறுவதற்கு எவ்விதமான உத்திரவாதத்தையும் வழங்காது.
2. ஏகாதிபத்தியத்தில் பொருள்களின் ஏற்றுமதிக்கு மாற்றாக மூலதன ஏற்றுமதி.
ஏகாதிபத்தியங்களின் சொந்தநாட்டில் பின்தங்கிய விவசாயத்தின் காரணமாகவும் அவர்களது நாட்டிலுள்ள மக்களின் வறுமையின் காரணமாகவும் அவர்களிடத்திலுள்ள மூலதனத்தை லாபகரமாக முதலீடுசெய்ய வளர்ச்சியடைந்த முதலாளிகளால் இயலாததால் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு மாற்றாக மூலதனத்தை ஏற்றுமதி செய்தனர் என்று லெனின் சொன்னார். இந்த மூலதனமானது உபரி மூலதனமாகும் என்றும், ஏகாதிபத்தியமானது உற்பத்தியைப் பெருக்குவதற்காகவே மூலதனத்தை ஏற்றுதிசெய்கிறது என்ற குட்டிமுதலாளிகளின் வாதத்தை லெனின் புறக்கணித்தார். மார்க்ஸ் மூலதனம் என்ற நூலில்(வால்யூம்-2) மற்றும் உபரிமதிப்புக்கோட்பாடு, இதனைமறுத்திருந்தார். மக்களின் நுகரும் சக்தி மெதுவாக வளர்ந்த போதிலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கான சந்தையில் வளர்ச்சி இருந்ததற்கு காரணம் உற்பத்திக் கருவிகளுக்கான சந்தை வளர்ந்ததே ஆகும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். மார்க்ஸ் இதனை தெளிவாக விளக்கும்போது முதல்வகையான அதாவது பொருள்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியானது பின்னதற்கு அதாவது தொழில்கருவிகளை உற்பத்திசெய்வதற்கானதொழில்நுட்பத்தைவிட அதிகமாக வளர்ந்திருந்தது ஆகவே அதற்காக மூலதனமிடுவது எப்போதும் அதிகரித்துக்கொண்டே சென்றது. (மூலதனத்தின்கரிமஅமைப்பு) மேலும் இந்தவகையான மூலதனமிடுவது தொடர்ந்து அதிகரிப்பது கிடைக்கும் லாபவிகிதம் குறைவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இட்டுச்சென்றது. ஆகவே இந்த மூலதனமானது லாபகரமாக இல்லாதுபோயிற்று.
இரண்டாவதாக குறைவான செல்வவளம் கொண்ட பின்தங்கிய நாடுகளின் நிலையைப் பயன்படுத்தி அத்தகைய பகுதிகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்தார்கள். இதுபோன்ற நாடுகளில் மூலதனம் இடுவதன்மூலம் ஏகாதிபத்தியவாதிகள் கூடுதலான லாபத்தை அடைந்தார்கள். குறைவான லாபங்கள் கிடைத்ததற்கு மாறாக இருப்பதை இது அவர்களுக்கு சரிபார்ப்பதற்கு உதவியது.இதுபோன்ற பின்தங்கிய நாடுகளில் தேவையான மூலதனம் பற்றாக்குறையாக இருந்தது மேலும் உழைப்பாளர்களின் கூலி குறைவாக இருந்தது மேலும் நிரந்தரமான மூலதனத்தேவை ஒப்பீட்டளவில் குறைவாகவும் தொழிற்சாலைகள் அடிப்படையில் அதிகமாக மூலதனத்தைச் சார்ந்தில்லாமல் கூலிஉழைப்பாளர்களை சார்ந்துஇருந்தது. தவிரவும் மூலப்பொருள்களின் தேவைக்கான மூலதனமானது குறைவாகவே தேவைப்பட்டது.
லாபவிகிதம் இவ்வாறு அதிகமாக இருந்தபோதும் அனைத்து மூலதனங்களையும் இந்த பின்தங்கிய நாடுகளுக்கு மாற்றம் செய்யவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த இயலாமைக்கு முக்கிய காரணம் பின்தங்கிய நாடுகளின் பொருளாதார அடிப்படை அதனை செயல்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை. பின்தங்கிய மற்றும் முன்னேறிய நாடுகளில் சமமாக மூலதனமிடும் சூழல் ஏற்படுமாயின் இவ்விரு நாடுகளிலும் பொருளாதாரம் பண்பாடு போன்றவற்றில் சமநிலை ஏற்படும். கோட்பாட்டளவில் பார்த்தால் உருவாக்கப்படும் லாபவிகிதம் இவ்விருவகையான நாடுகளிலும் சமமாகிவிடும். இதுபோன்ற உபரிமூலதன ஏற்றுமதிக்கு தற்போதுஉள்ள ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் பின்தங்கிய பகுதிகளும் இருப்பது தவிர்க்கமுடியாத தேவையாக உள்ளது. மிகப்பொரும்பாமையான பகுதிகளுக்கு உபரிமூலதனத்தை ஏற்றுமதி செய்திடுவதை தக்கவைத்திட இந்த பகுதிகளை நிரந்தரமாக பின்தங்கிய நிலையில் வைத்திருக்கவேண்டியது அவசியமாக உள்ளது. அதற்கான கட்டுமானசூழல் ஏகாதிபத்திய வாதிகளுக்கு அவசியமாக உள்ளது. மேற்குலக உபரிமூலதனத்தை இந்தநாடுகள் உள்வாங்கிக்கொண்டு முன்னேறவேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். உலகமுதலாளித்துவ அமைப்பு சீரழியாமல் பாதுகாத்திட மேற்குலக நாடுகளுக்கும் மூன்றாம்உலக நாடுகளுக்குமான இடைவெளியை விட்டுவிடாமல் இருக்க இந்தநாடுகளுக்கு அதிகமான மூலதனத்தை ஏற்றுமதி செய்வதை விரும்புவதில்லை. நிலவுடமையை ஒழித்துக்கட்டும் பணியை நிறைவேற்றிடும் கடமை தொழிலாளர்களின் மேல்விழுந்துள்ளததற்கு இதுபோன்ற முதலாளித்துவ வளர்ச்சிப் பணியே காரணமாகும்..
எனினும் ஏகாதிபத்தியத்தை சார்ந்திருக்கும் இந்த நிலையானது பின்தங்கிய நாடுகளில் குறைந்த அளவிலாவது முதலாளித்துவ வளர்ச்சிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது மேலும். ஏகாதிபத்தியவாதிகளின் இந்த நாடகம் வரலாற்றில் மயக்கும் கருவியாக பயன்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளின் மூலம் நிலவுடமையில் ஏற்படும் மாற்றமும் நிலவுடமை அமைப்பை பலவழிகளிலும் பலப்படுத்துவதும் ஒரேநேரத்தில் இணைந்தே நடத்தப்பட்டது. இது பகுதியளவில் சந்தைசார்ந்த தொழில்துறை உற்பத்தியையும் தொழில்துறைக்கான மூலப்பொருள்கள் மற்றும் நகரத்திற்கான உணவுப்பொருள் உற்பத்தியையும் உருவாக்கியது. வேளாண்மை உற்பத்தியிலும் குறைவானஅளவு லாபம் என்ற கருத்து உருவானது அதன்படி கிராமப்புற பொருளாதாரத்திலும் மீண்டும்மீண்டும் உற்பத்தியில் ஈடுபடுத்துவதும் அதற்கு மீண்டும்மீண்டும் மூலதனமிடுவதும் நடந்தது. அதனால் ஒருகுறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட அளவிற்கு உற்பத்திசக்திகள் வளர்ந்தன. இவ்வாறு மீண்டும்மீண்டும் மூலதனமிடும் போக்கு ஒருகட்டாய சூழலின் காரணமாகவே நடந்தது.
ஏகாதிபத்திய கட்டுப்பாடு என்ற சூழலில் நிலவுடமையாளர்களின் ஏகபோக சொத்துவுடமையை அடிப்படையில் பாதுகாத்துக்கொண்டே விவசாய உற்பத்தித்துறையில் குறைவான வரையறைக்கு உட்பட்ட வளர்ச்சியை உற்பத்திசக்திகளால் காணமுடிந்தது. தொழில்துறையில் ஏகாதிபத்தியம் மற்றும் தரகுமுதலாளிகளின் மூலதன ஊடுருவலானது மறைமுகமாக விவசாய உற்பத்தி சக்திகளில் குறைவான வளர்ச்சிக்கான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏகபோக ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் உள்நாட்டுத் தரகுமுதலாளிகளின் மூலதனமானது வேளாண்மை சரக்குக்கான சந்தையில் குறைவான முன்னேற்றத்தையே கொண்டுவந்தது. அதனால் சந்தையிலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்து மீண்டும் மறுமூலதன சுழற்சிக்கான நம்பிக்கையை குறைவாகவே விட்டுச்சென்றது. தொழில்துறையில் புதிதாக மூலதனமிடுவதற்கு முதலாளித்துவத்துக்கு முந்தைய செல்வங்கள் அல்லது புதிய சரக்குகள் சிக்கலான வகையில் ஊணமுற்று உள்ளது.
முதலாளித்துவ முன்னேற்றம் மற்றும் நவீனமயமாக்கம்என்ற வகையில் சீர்திருத்தபாதையை துவங்குவதன் மூலம் ஏகாதிபத்தியம் மற்றும் புதியகாலனிய ஆட்சி சூழலில் புரட்சியை தவிர்க்க முயல்கிறார்கள்.
3)இந்தியாபோன்ற புதியக்காலனி அரைநிலபிரபுத்துவநாடுகளில் தேசியமுதலாளிகளும் அவர்களுடன் பாட்டாளிகளும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு விவசாய வளர்ச்சியையும் மற்றும் போராட்டத்தையும்விரும்புகின்றனர்.ஆனால் பலவீனமான இந்த தேசியமுதலாளிகள் தரகுமுதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் மூலதனத்தோடு பல்வேறு வகையில் பிணைக்கப்பட்டு உள்ளனர் ஆகவே இவர்களது போராட்ட செயல்பாடு ஒரு எல்லைக்குள் குறுக்கப்பட்டுள்ளது.
4)இந்தியாபோன்ற பின்தங்கிய நாடுகளில் பெரியநிலவுடமையாளர்களை முற்றிலும் அழித்துவிடவேண்டும் என்று ஏகாதிபத்தியவாதிகள் விரும்புவது இல்லை. மாறாக குறுகிய அளவில் நிலச்சீர்திருத்தம் செய்கிறார்கள்.
புதியக்காலனி நாடுகளில் இந்த செயல்முறையானது ஒரேநேரத்தில் நிலப்பிரபுத்துவத்தை அரிப்பது மற்றும் அதனை வாழவைப்பது என்ற இரண்டையும் எடுத்து செயல்படுத்துகிறது. வேளாண்மைத்துறையில்இந்த நீண்டகால திட்டமிட்ட பகுதியளவிலான மூலதன ஊடுருவும் செயல்முறையானது விவசாயத்தில் மெதுவான முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவியது. காலனி மற்றும் அரைக்காலனி நாடுகளில் நிதிமூலதனகும்பல் தொடர்ந்து மூலதனமிடும் போக்கானது அதன் கொள்ளை லாபவிகிதத்தை குறைக்க முனைகிறது என்பதை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். இதனை சோதித்து புரிந்துகொண்ட ஏகாதிபத்தியமானது இதுபோன்றநாடுகளுக்குமூலதனத்தை குறைவாகவே விரிவாக்கம் செய்து உதவுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை மேற்குஐரோப்பியநாடுகள்சந்தித்ததேஇல்லை.
5)நிலப்பிரபுக்கள் ஏராளமான விவசாயிகளை வெளியேற்றி வேளாண் நடவடிக்கைகளில் நேரடியாக மேற்பார்வை செய்தால் அதுதானாகவும் அடிப்படையாகவும்முதலாளித்துவ மாற்றத்தை கொண்டுவரும் என்று சொல்வது உண்மையல்ல.
நிலவுடமையாளர்கள் நேரடியாக விவசாயத்தில் மேற்பார்வை செய்யும் பணியை செய்வதால் ஒரேநேரத்தில் தவிர்க்கமுடியாதபடி முதலாளித்துவம் வந்துவிடும் என்ற முடிவு தவறானது.
6)விவசாயத்துறையில் முதலாளித்துவம் பற்றி காரல்மார்க்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்....நிலத்தின்மீதான மதிப்பு உண்மையில் அது பொருளாதாரரீதியாக எவ்வளவு வாடகையை உருவாக்குகிறது என்பதிலிருந்து மதிப்பிடப்படுகிறது. மேலும் நவீனகாலச் சமுதாயத்தின் கட்டமைப்பை உருவாக்கும் அங்கங்களும் தமக்குள் ஒன்றைஒன்று எதிர்த்து நிற்பவையும் ஆகிய மூன்று வர்க்கங்களுமே இங்கு இடம்பெறக் காணலாம் கூலித்தொழிலாளர்கள், தொழில்துறை முதலாளிகள், நிலவுடமையாளர்கள் ஆகியோர்களே ஆவர். (மார்க்ஸ்- மூலதனம் மாஸ்கோ, 1986 பக்கம் 618)
சமமான அளவுகொண்ட வெவ்வேறு இடங்களிலுள்ள நிலங்களில் சமமான மூலதனத்தை பயன்படுத்தினாலும் அதிலிருந்து கிடைக்கும் நிலவாடகையின் வேற்றுமைக்கு காரணம் அதிலிருந்து பெறப்படும் உபரிமதிப்பின் வேற்றுமையே ஆகும், நிலங்களில் தனிச்சொத்துடமையானதுஉபரிலாபமாக மாற்றப்படும்போது அந்தநிலத்தின் அளவிற்கேற்ப மதிப்பை உருவாக்கிவிடாது. என்ற குறிப்பை மார்க்ஸ் ஏற்கவில்லை. உபரிலாபத்தில் மாற்றப்படும் மதிப்பு அந்த பகுதியை நிலத்தில் தனியார் சொத்தால் உருவாக்க முடியாது. ஆனால் கூட்டப்பட்ட உபரிலாபமானது தொழில்துறை முதலாளிகளின் பாக்கெட்டிருந்து வெளியேறி இவர்களுக்கு சொந்தமாவதன் மூலம் இது வெறுமனே நிலவுடமையாளருக்கு உதவுகிறது. உபரிலாபம் உருவாவது இதற்குகாரணம் அல்ல மாறாக நிலவாடகையாக மாறுவதுதான் இதற்கு காரணமாகும்.
7)முதலாளித்துவ பொருளாதார அமைப்பு என்பது சரக்கு பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இங்கு உழைப்பானது கூலிஉழைப்பாகவும் மேலும் அது சரக்காகவும் ஆகிறது. இங்கு உழைப்புசக்தியின் சொந்தக்காரர் என்ற வகையில் தொழிலாளி உழைப்புசக்தியை விற்கவும் வாங்குவதற்கான சந்தையில் சுதந்திரமாக பங்குகொள்கிறார். இரண்டாவதாக இந்த முதலாளித்துவ அமைப்பானது மீண்டும்மீண்டும் உற்பத்தியை அதிகரித்துச் செல்வது என்ற விதிக்கு உட்பட்டும் உபரிமதிப்பை புதிய மூலதனமாக மேலும் உற்பத்தியை பெருக்கிடுவதற்கு போடுவது என்ற விதிக்கு உட்பட்டு செயல்படுகிறது. இதுபோன்று மறுமூலதனமிடுவது நிலவுடமை அமைப்பில் காணமுடியாது. அங்கு உபரியானது நிலவுடமையாளர்களின் ஆடம்பரத்திற்கும் கடும்வட்டி மூலதனமாகவும் பயன்படும். இத்தகைய சாத்தியத்தை மறுக்கலாமா.
8) விவசாய முதலாளித்துவ பொருளாதாரம் அத்தியாவசியமாக கூலிதொழிலாளர்கள் இருப்பது மற்றும் விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது என்ற கூறுகளின் அடிப்படையில் வெளிப்படையாகவே நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயத் தொழிலாளர்கள் இரண்டு அர்த்தத்தில் சுதந்திரமானவர்கள். எந்தவொரு விவசாய முதலாளிகளிடமும் தனது உழைப்புசக்தியை விற்பதற்கான சுதந்திரம் உள்ளவர் மேலும் வேளாண்மையில் ஈடுபடுவதற்கான கருவிகள் இல்லாதவராவார். ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் தோற்றமும் கூலித்தொழிலாளர்களும்என்ற தலைப்பில் மார்க்ஸ் கட்டுரை எழுதினார். இதோடு ஒப்பிடும்போது இந்தியாவில் நிலவுகின்ற சாதி அடிப்படையிலான சமூகமானது கற்பனைக்கு அப்பால் உள்ளது. கைவினைஞர் அல்லது விவசாயி அவரது சொந்த கருவிகளைக்கொண்டு விவசாயத்தில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறி ஒரு முதலாளியாகமாறி மற்றவர்களை சுரண்டலாம் அல்லது உற்பத்திகருவிகளை இழந்து கஷ்டப்படும் கூலிதொழிலாளியாக மாறலாம்.
முதலாளித்துவ வடிவத்திலான உற்பத்தி மேலோங்கியுள்ள சமூகத்தில் இத்தகைய போக்கு நிலவும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். (உபரிமதிப்புபற்றியகோட்பாடு -- மார்க்ஸ்பாகம்-3 பக்கம்-409) இது முதலாளித்துவ மாற்றத்திற்கான கீழிருந்து உருவாகும் புரட்சிகரமான பாதையாகும் என்பது வெளிப்படை. ஒருவர் முதலாளியாக ஆவதற்கும் கூலித் தொழிலாளியாகவும் ஆவதற்கும் சக்தி படைத்தவராக இருப்பதை விலக்கிவைத்திட சாதி அமைப்பின் ஆதிக்கம் அதன் எதிரொலியாகும் என்ற சூழ்நிலையை நாம் இப்போது கருத்தில் கொள்ளலாம்.
மார்க்சின் மூலதனம் என்ற நூலில் பாகம் மூன்றில் மூலதனத்தின் தோற்றம் என்ற அத்தியாயத்தில் வர்க்கத்திற்கான (முதலாளி அல்லது நிலப்பிரபு) வரையறை சம்பந்தமான முக்கியமான குறிப்பை மிகவும் அற்புதமாக மார்க்ஸ் விளக்கியிருப்பார். உற்பத்திச் சாதனங்களின் காரணமாகவும் அதனோடுகூட சுதந்திரமான அல்லது சுதந்திரமற்ற கூலிபெறும் அடிமைகளைப் பெற்றிருப்பதும் நிலப்பிரபுகளே விவசாய உற்பத்திக்கு மாறுவதும் என்பதை கீழ்கண்ட மார்க்சின் வார்த்தைகளிலிருந்து புரிந்துகொள்வோம்.
அடிமைபொருளாதாரத்தைப் பற்றி மேலும் சரியாக ஆய்வு செய்யவேண்டிய அவசியமில்லை (இதுபோல முதன்மையாக வீட்டுஉபயோகத்திற்கானஆணாதிக்கமுறையிலிருந்து உலகச் சந்தைக்கான பயிரிடும்முறையாக ஒரு உருமாற்றத்தின் வழியாகச் செல்கிறது.) அல்லது நிலவுடமையாளர்களேதோட்டங்களை நிர்வகிப்பது அதன்படி நிலவுடமையாளர்கள் அவர்களே சுதந்திரமாக பயிர்செய்பவர்களாகவும் அனைத்து உற்பத்திச் சாதனங்களை உடையவராகவும் சுதந்திரமான அல்லது சுதந்திரம்அல்லாத அடிமைகளுக்கு பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுத்து சுரண்டுபவராகவும் இருப்பர். நிலவுடமையாளர், மற்றும் உற்பத்தி சாதனங்களுக்கு சொந்தக்காரர், இதன்மூலம் தொழிலாளர்களை நேரடியாக சுரண்டுபவர் ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்திகூறுகளில் இங்கு அனைத்து கூறுகளிலும் ஒருநபரே உள்ளார். இதுபோலவே வாடகையும் லாபமும் ஒன்றாகிவிடுகிறது. இரண்டு வகையான உபரிமதிப்பு உருவாவதில்லை. (காரல்மார்க்ஸ்- மூலதனம் பாகம் 3 பக்கம் 804)
மேலேகண்டது நிலப்பிரபுகளின் பண்பைப்பற்றிய அருமையான விளக்கமாகும். நவீன அடிமை முறையை உள்ளடக்கிய அடிமை முறையை மார்க்ஸ் இங்கு விளக்குகிறார். உற்பத்திச் சாதனங்களை கட்டுப்படுத்தும்போது தோட்டங்களில் பயிர்தொழில் செய்யும் நிலப்பிரபுக்கள் கூலித்தொழிலாளர்களை (பண்ணையடிமையிலிருந்து சுதந்திரம் பெற்றவர்களும் கூட) வேலையாட்களாகக் கொண்டவகையில் மாறிக்கொண்டிருக்கிறார்கள். 1960ஆம் ஆண்டுகளிலிருந்து கூலிக்காக வேலையாட்களை அமர்த்திக்கொள்வது, உற்பத்திச் சாதனங்களை சொந்த உடமையாகக் கொண்டிருப்பது போன்று பெரியஅளவில் ஒற்றுமையான நிலைக்கு அனேக நிலப்பிரபுக்கள் மாறிக்கொண்டிருந்தார்கள். இதுபோன்ற நிலையில் அதாவது விவசாயிகள் இல்லாதது போன்று தோற்றமளிக்கும் நிலையில் நிலவாடகை நிறுத்தம் என்பது இல்லை என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். முதலாளித்துவத்துக்கு மாறாக இதுபோன்ற வழக்கில் இங்கே நிலவாடகையானது வாடகை மற்றும் லாபம் போன்றவை ஒன்று கலந்து விடுகிறது. வேறுபட்ட உபரிமதிப்புகளுக்கு இடையிலான பிரிவுகள் இல்லை என்றநிலை உருவாகிறது. இத்தகைய சூழலில் மிகவும் முக்கியமான வேறுபாடான நிலவாடகை மற்றும் லாபத்திற்கு இடையிலான வேறுபாடு அகற்றப்பட்டுள்ளது. இது முதலாளித்துவ உற்பத்தி இல்லை. மார்க்ஸ் இதோடு நிறுத்தவில்லை. முதலாளித்துவத்தின் அல்லது நிலப்பிரபுத்துவத்தின் கலாச்சார அம்சத்தையும் கருத்தில் எடுத்துக்கொண்டார். முதலாளித்துவ கண்ணோட்டத்தைப் பற்றி அவர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். எங்கு அமெரிக்காபோன்ற விவசாய உற்பத்தி முதலாளித்துவ கண்ணோட்டத்தில் உள்ளதோ அங்கு இந்த மொத்த உபரியானது லாபமாக கருதப்படும். எங்கு முதலாளித்துவ வடிவத்திலான உற்பத்திமுறையோ அல்லது அதனுடன் தொடர்புடைய பார்வையோ இல்லையெனில் அங்கு முதலாளித்துவ நாடுகளிலிருந்து முதலாளித்துவம் கொண்டுவரப்படும் அங்கு உபரி வாடகையாகத் தோன்றும். (இங்கே நிலவாடகையும் லாபமும் ஒருவர் கைக்குச் செல்வதால் இவ்விரண்டுக்கும் இடையிலான வேறுபாடு அகற்றப்படுவதால் இது முதலாளித்துவ உற்பத்தி முறையாகும்-இந்த விமர்சனம் நம் ஆசிரியர் வைத்தது ஆனால் மூல கட்டுரையை நான் மாற்றவில்லை).
மூன்றாவதாக உபரிஉழைப்பு என்பதை அடிப்படையில் பொருத்திக்காட்டி முதலாளித்துவ உற்பத்தியா?அல்லது நிலப்பிரபுத்துவ உற்பத்தியா?என்பதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். அவருடைய வார்த்தையில் சொல்லும்போது--------நிலப்பிரபுவின் வருமானமானது அதனை எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம் கிடைக்கும் உபரிஉழைப்பானது அவரால் நேரடியாக கைப்பற்றப்படுகிறது. இது இங்கு சாதாரணமாக நடைமுறையிலுள்ள வடிவமே. அதன்படி கொடுபடாத உபரிஉழைப்பு முழுவதையும் நேரடியாக கைப்பற்றுவது மற்றும் இத்தகைய கைப்பற்றுதலின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்படுகிறது.-----------பக்கம் 804
இந்திய சூழலில் அந்த மூன்று அம்சங்களை மேலே குறிப்பிட்டதுபோல் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். நிலச்சொத்துடமை என்ற வடிவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம். நிலஉரிமையாளர்களால் நடத்தப்படும் சாகுபடி தவிர்க்கமுடியாதபடி இயல்பிலேயே முதலாளித்துவமயமானதுஆகவே இதுபோன்ற கடுமையான முடிவெடுப்பது தவறானதாகும். உற்பத்தி செயல்முறை, நிலப்பிரபுக்களின் கண்ணோட்டம் வாடகைக்கு ஒதுக்கீடு போன்றவை முதலாளித்துவ உற்பத்திமுறைக்குமாறாகஉள்ளது என்று மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். மேலும் இதுபோன்ற நிகழ்வுகளில் நிலச்சொத்துடமையானதுமூலதன முதலீடாகாது. இதுவே அடிப்படையான பொருத்தப்பாடாகும். இங்கு உபரியானது உபரிமதிப்பாக வருவது அவசியம் இல்லை மாறாக வாடகையாக வருகிறது. பணம் செலுத்தும் காரணிகள், சுதந்திரமான அல்லது சுதந்திரம் இல்லாத அடிமைகளை வேலைக்கு அமர்த்தியிருப்பது உற்பத்திச்சாதனங்களை நிலப்பிரபுக்கள் அவர்களது உடமையாகக் கொண்டிருப்பது போன்றவை தோற்றத்தில் முதலாளித்துவமாக இருந்தபோதும் உண்மையில் நிலப்பிரபுத்துவமுறையிலான உற்பத்தியே. நிலப்பிரபுத்துவமானது மூலதனத்தை உருவாக்குவதில்லை மாறாக நிலச்சொத்தையே உருவாக்குகிறது என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.
ஒரு முதலாளி உற்பத்திச் சாதனங்களை வாங்குவதற்கோ அல்லது கடனாகப் பெறுவதற்கோ மூலதனமிடுகிறார். நிலத்திற்கான வாடகைக்கு பொருத்தமான மூலதனமதிப்பின் அடிப்படையில் நிலத்தை வாங்குகிறார். தொழிலாளர்களின் அவசியமான உழைப்பை செலுத்தியபின்பு மற்றும் முதலாளித்துவ மதிப்பிலான நிலவாடகையை சொலுத்தியபின்பு இதுபோன்று மூலதனமிடுவது உபரிமதிப்பை உருவாக்குகிறது. விவசாய உற்பத்தி சரக்கின் மதிப்பு பொதுவாக உற்பத்திச் செலவைவிட கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உபரிமதிப்பானது லாபத்தைக்காட்டிலும் கூடுதலாக இருக்கும். உபரிமதிப்பின் ஒருபகுதியை முழுமையாக நிலவாடகைக்கு கொடுத்துவிடுவதால் நிலத்தின்மீதான தனியார் உடமையானது உபரிமதிப்பை குறைத்து லாபத்திற்கு சமமாக ஆக்கிவிடுகிறது. இந்த வழக்கில் நிலவாடகையினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு மத்தியிலும் நாம் கவனிக்கும்போது இந்த உற்பத்தியின் அடிப்படையானது நிலம் அல்ல மூலதனமே என்பதை உபரிமதிப்பு பிரதிபலிக்கிறது.
இரண்டு நிகழ்வுகளிலும் (முழுமையான மற்றும் வித்தியாசமான) வாடகைக்கு வரம்புகளானது கூடுதல் பொருளாதாரதன்மை மற்றும் பிற வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. உழைப்புசக்தியும் முதலாளித்துவத்தின் அடிப்படையிலேயே செயல்படுகிறது. நிலம் உரிமையாக்கப்படுதலானது அபகரிப்பின் அடிப்படையாக இருக்கும்போது இது தலைகீழாகக் காணப்படுகிறது. இங்கே சந்தைவிதிகள் வெற்றிபெறவில்லை, உழைப்புசக்தியை வாங்குவதற்கும் விற்பதற்கும் சந்தை அவசியமில்லை. இத்தகைய வழக்குகளில் சொத்துரிமை நிலப்பிரபுத்துவ அடிப்படையில் இருப்பதை அடையாளம்கண்டு இது முதலாளித்துவ முறையல்ல என்று மார்க்ஸ் விளக்கினார். முதலாளித்துவ நிலவாடகை என்பது நிலப்பிரபுத்துவ வாடகைக்கு வேறுபட்டது என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.
9) ஜெர்மனியில் 1848ல் புரட்சி தோழ்வியடைந்த பின்பு பிஸ்மார்க்கால் தொடங்கப்பட்ட சீர்திருத்தங்களால் அங்கு முதலாளித்துவ மாற்றங்கள் மெதுவாக வளர்ந்தது மேலும் அங்கு முதலாளித்துவத்துக்கு முந்தைய சக்திகளுடன் தன்னைத்தானே சரிசெய்துகொண்டது. இது பிரஷ்யன் பாதையாகும். நிலப்பிரபுத்துவ ஜங்கர்களின் நிலச் சொத்துரிமையைப் பாதுகாத்துக் கொண்டே முதலாளித்துவத்தை கொண்டுவரும் முறை. இத்தகைய சீர்திருத்தத்தில் சாதாரண விவசாயிகளுக்கு பங்குஇல்லை. இருப்பினும் பிறநாடுகளும் பிரஷ்யன் பாதையை பின்பற்றினார்கள். ரஷ்யாவிலும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்காக இந்தப்பாதை பின்பற்றப்பட்டது. ரஷ்யாவில் 1861ல் முதலாளித்துவ விடுதலையை அறிவித்தபோதும் நிலப்பிரபுத்துவத்துடன் நூற்றுக்கணக்கான உறவுகளை நிலைநிறுத்த ஒரு சீர்திருத்தவாத வழியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது என்று சொல்லாமல் இருக்கமுடியாது. 1906 மற்றும் 1914க்கு இடையில் ஸ்டோலிபின் காலத்தில் விவசாயிகளுக்கு நிலங்களை விற்கவும் வாங்கவும் அனுமதித்ததன்மூலம் இரண்டாவதுகட்ட சீர்திருத்தம் துவங்கப்பட்டது. இது நிலங்கள் கைமாறுவதற்கு வழிவகுத்தது, எனினும் ஏழைவிவசாயிகளைக்காட்டிலும் அதிகமாக நிலங்களை நிலப்பிரபுக்கள் பெற்றனர். லெனின் இதனை பிரஷ்யன்முறை என்று அழைத்தார்.
விவசாயத் தொழிலாளர்களை அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்றுவது முதலாளித்துவ வகைப்பட்ட உபரியை பிரித்தெடுப்பதை உருவாக்குகிறது என்பது தெளிவாகிறது, வெளியேற்றுவது, உபரியை பிரித்தெடுப்பது என்ற இந்த செயல்முறைகளை நிலப்பிரபுக்கள் செயல்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களை உருவாக்குவதைவிட விவசாயிகளை வெளியேற்றுவதாகவே உள்ளது,இணைக்கப்பட்ட தொழிலாளர்களின் இணைப்பு என்ற இந்த ஒழுங்குமுறையின் தன்மையானது சாத்தியமானது. மாற்றுமுறையில் உறிஞ்சப்படுவதற்கான குறைந்த வாய்ப்பு அதாவது முதலாளித்துவ தொழில் நிலையங்கள் பாட்டாளிமயமாவதை வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது. இந்தியாவில் வறுமையாதல் என்ற பொதுவான அம்சத்தைக்கொண்டு இங்கு விவசாயத்தில் முதலாளித்துவம் இல்லை என்று சொல்லக்கூடாது. இத்தகைய இடர்பாடுகளை சந்திக்கும் விவசாயிகள் சுதந்திரமானவர்களாக இல்லை மாறாக நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். விவசாய வேலையாட்கள் பாட்டாளிமயமாகும்போதுநிலைத்துநிற்கும் மெதுவான தொழில்துறையின் வளர்ச்சி என்ற பொதுவான செயல்முறையானது முக்கியமற்றதாகிவிடும்.மேலும் இந்தியாவில் தொந்தரவுமிக்க இந்த செயல்முறையானது முக்கியமற்றதாகிவிடும். இதனால் விவசாயத்தில் நிலப்பிரபுத்துவத்தை அடிப்படையாகக்கொண்டமாற்றமானது தடையில்லாமல் விவசாயத்தில் முதலாளித்துவ மாற்றம் என்ற முதல்கொள்கையை நிறைவேற்றாமல் தோழ்வியடைகிறது.
11) இதுபோன்று விவசாயத்தில் நிலப்பிரபுத்துவ அடிப்படையிலான முதலாளித்துவ மாற்றம் குறித்து அடுத்த முக்கியமான கேள்வி விரிவடைந்த மறுஉற்பத்தி என்ற விதி பின்பற்றப்படுகிறதா? என்பதாகும். உபரிமதிப்பின் ஒருபகுதி மூலதனமாக மாற்றப்படுகிறதா, மற்றும் அது மீண்டும்மீண்டும் நடைபெறுகிறதா. உபரிமதிப்பானது இந்தவகையில் மூலதனமாக மாற்றப்பட்டு சுயமாக விரிவடைவதானது மூலதனக்குவியலாகும். விவசாயத்திலும் தொழில்துறையிலும் முதலாளித்துவ முறையானது விரிவடைந்த மறுஉற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதை இணைத்துப் புரிந்துகொள்ளவேண்டும். அதன்படி உபரிமூலதனமானது உற்பத்திக்காக மறுமுதலீடு செய்யப்படும். ஆடம்பரமாக செலவுசெய்வது, பணத்தை பதுக்குவது போன்றவை முதலாளித்துவ மறுஉற்பத்திக்கு எதிரானதாகும். எளிமையான மறுஉற்பத்தியில் நிலப்பிரபுக்கள் உபரியை வணிகத்திற்கும், கந்துவட்டி போன்றவற்றிற்கும் பயன்படுத்துவார்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தமாட்டார்கள் இதுவே முக்கியபோக்காக இருக்கும்.
12) நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவது தீவிரமாவதால் விவசாயிகள் நிலமற்றவராகிறார். மேலும் பிச்சைக்காரராக மாற்றப்படுகிறார், ஆனால் பொதுவாக இந்த வெளியேற்றம் வெளியேற்றப்பட்ட இந்த ஏழைகளை பாட்டாளிகளாக மாற்றும் மற்றும் நிலமற்ற விவசாயிகள் மீண்டும் அவர்கள் இழந்த நிலத்தை மீண்டும் பெறுவோம் என்ற நம்பிக்கைகொள்வர். இதுதான் நிலப்பிரபுத்துவ அடிப்படையிலான விவசாய உற்பத்தியின் பண்பாகும். இதுபோன்று வறுமைக்குள்ளாக்கும் வகையானது முதலாளித்துவ அடையாளமாகாது.
13) நிலத்தின் போதாமையாலும் வரிச்சுமையினாலும் பரந்த பகுதிகளிலுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தோடு இணைக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கிறது ஆனால் இது முதலாளித்துவத்தை வளர்க்கவில்லை என்று லெனின் சொன்னார். இணைக்கப்பட்டதொழிலாளர்களின் எண்ணிக்கைநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர் களைஉள்வாங்கும் நோக்கத்திலிருந்துஅதிகரிக்கிறது. இந்தியாபோன்ற நாடுகளில் இதுதொடர்ந்த செயல்முறையாக உள்ளது.இதுபோன்ற நிலையானதுகூடுதலான பொருளாதார சுரண்டலை அடிப்படையாகக்கொண்டதாகும்.
14) வணிக மற்றும் கடுவட்டி மூலதனமானது சிறிய உற்பத்தியாளர்களை பராமரிக்கவே விரும்புகிறது. பின்னர் பெரியளவிலான உற்பத்தி அல்லது பெரியளவிலான உற்பத்திச் செயல்களை அதிகரிக்க முயற்சிப்பதும் இல்லை. கூடுதலான பொருளாதார வழிமுறைகளின் மூலம் சிறிய உற்பத்தியாளர்கள் கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இது மறுஉற்பத்தி விரிவாக்கத்திற்கு பயன்படாது. இதன் காரணமாகவே வணிகம் மற்றும் கடுவட்டி மூலதனமானது மறுஉற்பத்தி விரிவாக்கத்திற்கு பயன்படாது என்கிறோம். இருந்தபோதிலும் நிலப்பிரபுத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்திலிருந்து உருவாகும் விவசாய விளைபொருள்களும் மற்றவையும் உபரி மூலதனத்தின் ஒரு சிறிய பகுதிக்கு அதாவது நிலைத்த மூலதனம் மற்றும் மாறும் மூலதனத்திற்கு வழிவகுக்கிறது இதன் மூலம் மறுஉற்பத்திக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறது.
15) நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படையிலான விவசாய உற்பத்தியில் சுதந்திரமான தொழிலாளர்கள் இல்லாமல் போகலாம் மேலும் முதலாளித்துவ விதிகளை பின்பற்றாமல் போகலாம். இதுபோன்ற வட்டி மற்றும் வணிக நடைமுறையிலான பயிர்தொழிலானது உற்பத்தி வளர்ச்சிக்கு இடையூறாகவே இருக்கும். இருந்தபோதும் மற்ற நிலமைகள் இதுபோன்ற விவசாயத்தின் மூலம் முதலாளித்துவ பாதைக்கான வழியை திறக்கப் பயன்படுகிறது. வணிகமும், வட்டியும் அதிக லாபம் தரக்கூடியது. மேலும் பின்தங்கிய நாடுகளில் இதுபோன்ற நிலப்பிரபுகளால் இது எளிதாக மேற்கொள்ளப்படுகிறது ஆகவே விவசாயத்தில் மூலதன முதலீடு செய்வதற்கு அவர்கள் விரும்புவதில்லை.
16) நிலவுரிமையாளர்களுக்கு நிலவுரிமையாளரின் ஏகபோகத்திற்காக கொடுக்கப்படும் வாடகையானது நிலப்பிரபுத்துவ வாடகையின் தொடர்ச்சியாக உள்ளது என்று மேலே குறிப்பிட்ட பத்தாவது பாயின்டுக்கு கூடுதலாக சொல்லப்பட்டது. முதலாளித்துவத்தில் முதலாளித்துவ மதிப்பிலான நிலவாடகையின் அடிப்படையிலான முழுமையான மற்றும் விசேஷமான வாடகையிலிருந்து இந்த வாடகை மாறுபட்டது. இது தனித்துவமான சந்தை நடவடிக்கையை தடைப்படுத்துகிறது. இந்த வகையான சுரண்டல் முதலாளித்து அடிப்படையிலானது அல்ல, மாறாக நிலவுரிமையாளரது சுரண்டல் முறையாகும். சந்தை விதிகளை பின்பற்றாமல் இத்தகைய சுரண்டல் முறையானது நிலப்பிரபுத்தவத்தின் அடிப்படையிலான விவசாய நடவடிக்கையாக இணைக்கப்பட்ட உழைப்பாக, சாதி அடிப்படையிலான சுரண்டலாக, நிலப்பிரபுத்துவ வாடகை முறையின் வளர்ந்த வடிவமாக, நிலமே சுரண்டலுக்கான அடிப்படை ஆதாரமாக இருப்பது என்ற வகையில் வெளிப்படுகிறது
17) நிலத்தில் பயிரிடுவதற்காக நிலப்பிரபுகள் ஒரு பகுதி மாறும் மூலதனத்தை முதலீடு செய்யும்போது பர்க்கா அமைப்பு முறையில் அவர்கள் நிலவாடகை பெறுகிறார்கள். இங்கு நில வாடகை என்ற அடிப்படையில் நிலம் வாடகைக்கு எடுக்கப்படுகிறது. கூடுதலாக மூலதனத்திற்கான வட்டி முதலீடாகிறது. இது முதலாளித்துவத்திற்கான அறிகுறி இல்லை. இந்த நிகழ்வுப் போக்கை அசலான வாடகை வடிவத்திலிருந்து முதலாளித்துவ வாடகையாக மாறுவதற்கான இடைக்கால வடிவமாக இதனை மார்க்ஸ் குறிப்பிட்டார். ஆகவே இது முழுமையான நிலப்பிரபுத்துவ வாடகையும் இல்லை, முதலாளித்துவ வாடகையும் இல்லை. மார்க்சின் மூலதன நூலில் இருந்து எடுத்துக்காட்டு கீழ்கண்டவாறு. ஆரம்ப வடிவிலான வாடகையிலிருந்து முதலாளித்துவ வாடகைக்கு மாறிச் செல்லும்போது இடையில் வருகிற வடிவம் என்ற முறையில் பங்கு வார அமைப்பு, அல்லது வாரப் பகிர்வு முறை என்பதை எடுத்துக்கொள்வோம், இதில் குத்தகையாளர் (சாகுபடியாளர்) உழைப்பை (அவரது உழைப்பையும் ஏனையோரது உழைப்பையும்) வழங்குவதோடு நடப்பு மூலதனத்தில் ஒரு பகுதியையும் வழங்குகிறார், நிலவுடமையாளர் நிலத்தை வழங்குவதோடு நடப்பு மூலதனத்தில் மற்றொரு பகுதியை (எடுத்துக்காட்டாக கால்நடைகளை) வழங்குகிறார். விளைபொருளானது குத்தகையாளருக்கும் நிலவுடமையாளருக்கும் இடையே குறிப்பிட்ட விகிதத்தில் பிரித்துக்கொள்ளப்படுகிறது. இந்த விகிதம் நாட்டுக்கு நாடு மாறுபடுவதாகும். ஒருபுறம் இங்கு சாகுபடியாளர் முழுமையான முதலாளித்துவ சாகுபடிக்குத் தேவையான போதிய மூலதனம் இல்லாதவராய் இருக்கிறார், மறுபுறம் இங்கு நிலவுடமையாளருக்குப் போய்சேரும் பங்கு வாடகையின் தூய வடிவம் பூணுவதில்லை. உள்ளபடியே அதில் அவரால் முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் மீதான வட்டியும் அதற்கு மேல் மிகையளவான வாடகையும் அடங்கியிருக்கக் கூடும். நடைமுறையில் அது சாகுபடியாளரின் உபரி உழைப்பு அனைத்தையும் உறிஞ்சிவிடக் கூடும், அல்லது கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இந்த உபரி-உழைப்பில் ஒரு பகுதியை அவருக்கு விட்டுவைக்கவும் கூடும். ஆனால் சாராம்சத்தில் வாடகை என்பது இங்கே முன்போல் பொதுவான உபரி-மதிப்பின் இயல்பான வடிவமாக காட்சியளிப்பதில்லை. ஒருபுறம் பங்கு வாரச் சாகுபடியாளர் தமது உழைப்பை ஈடுபடுத்தினாலும் சரி, ஏனையோரின் உழைப்பை ஈடுபடுத்தினாலும் சரி, உழைப்பாளி என்ற முறையில் அல்லாமல் உழைப்புக் கருவிகளில் ஒரு பகுதியை வைத்திருப்பவராக தமக்குத்தாமே முதலாளியாக விளைபொருளில் ஒரு பகுதிக்கு உரிமை கொண்டாடுகிறார். மறுபுறம் நிலவுடமையாளர் பிரத்தியோகமாய் தமது நிலவுடமையின் அடிப்படையில் மட்டுமல்லாமல் இரவலாய் மூலதனம் கொடுத்திருப்பவர் என்ற முறையிலும் தமது பங்குக்கு உரிமை கொண்டாடுகிறார். (Karl Marx, Capital, Volume-3, progress publisher, Mascow, 1986, p.803)
18) முதலாளித்துவத்திற்கான அம்சங்கள்.
அ) பெரிய அளவில் நிலங்களை விவசாயத்திற்கு வைத்திருப்பது முதலாளித்துவத்தை தீவிரப்படுத்தும். சிறிய அளவில் வைத்திருப்பதைக் காட்டிலும் இவ்வாறு வைத்திருப்பது வருமானம் அதிகரிப்பதை உறுதி செய்திடும். இரண்டு வகையான சிறிய மற்றும் பெரிய அளவிலானதை செயல்பாட்டிற்காக நிலங்களை வைத்திருப்பது இணைந்து பல காலம் இருந்தால் முதலாளித்துவத்திற்காக இன்னும் சரியான அணுகுமுறையை நாம் மேற்கொள்ளவேண்டும் என்பது நியாயமான அவசியம் ஆகும். நிலபிரபுத்துவம் அல்லது அரை நிலபிரபுத்துவத்தில் அதிகமான நிலங்களை வைத்திருப்பது சந்தை விதிகளுக்கு அப்பாற்பட்டு வலிமையை பயன்படுத்துவதிலேயே முனைப்புக்காட்டுகிறது. சிறிய, நடுத்தர நில கைப்பிருப்பின் ஒப்பீட்டு அளவிலான முக்கியத்துவமானது ஒரு காலகட்டத்திற்கு பிறகு முதலாளித்துவத்தை அல்ல நிலபிரபுத்துவத்தையே உறுதி செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆ) குறிப்பிட்ட நிலச்சொந்தக்காரர் கூலி உழைப்பாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு (ஆண்டு கணக்காக, அதுபோன்று) செய்வதற்கு எந்த கடமையும் இல்லை.
இ) தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்போது விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை குறையும்.
ஈ) செழிப்பான குத்தகை விவசாயிகளின் எண்ணிக்கை கூடுவதும் அவர்கள் வளர்வதும் குத்தகைதாரர்கள் சிறிய அளவிலான நிலங்களில் வேலைசெய்வதால் முதலாளித்துவத்துக்கு முந்திய அம்சங்களையே உறுதி செய்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
உ) குறைந்த அளவிலான கடுவட்டி மூலதனம்
ஊ) பொருள்களின் மீது வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டை வெறுமனே செலுத்துவதன் மூலம் மட்டுமல்லாமல், வணிக மூலதனமானது உற்பத்தி நடவடிக்கையை வளர்ப்பதற்கு உறுதிசெய்திட முயலுகிறது.
எ) தொழில்நுட்பத்தை நிலையாக வளர்க்கிறது.
19) முழுமையான வாடகை பற்றி ஒரு சில வார்த்தைகள் அவசியமானது. மிகவும் மோசமான நிலத்திலிருந்து எந்த வாடகையும் கிடைக்காது என்பதை மார்க்சிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். உபரி லாபத்தை உற்பத்தி செய்யும் அத்தகைய நிலங்களில் இருந்தே வாடகை கொடுக்க முடியும். ஆனால் இது முழு உண்மை அல்ல.எங்கு நிலங்கள் தனியாருக்குச் சொந்தமாக இருக்கிறதோ அங்கு மோசமான நிலங்கள் கூட வாடகையை பெற்றுத்தரும். குறைந்தபட்ச பணம் வாங்காமல் விவசாய முதலாளியை அவரது நிலத்திலிருந்து சுரண்டுவதற்கு நிலத்தின் சொந்தக்காரர் அனுமதிக்க மாட்டார் இதுவே முழுமையான வாடகையாகும். மிகவும் மோசமான நிலமும் வாடகை கொடுக்காமல் உழவுக்கு கொண்டுவர முடியாது. இதுபோன்ற வாடகைப் பணத்தினால் அதன் உற்பத்தியின் சந்தை விலையானது அதன் உற்பத்தியின் உண்மையான விலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கவேண்டும் நிலச்சொத்துரிமையின் காரணமாக எழுப்பப்பட்ட தடையினால்நிலத்தில் உற்பத்திக்கான விலையில் உபரியை உற்பத்தி செய்வதன் மூலம் சந்தை விலை ஒரு நிலைக்கு உயரலாம். அதாவது அது வாடகையை உருவாக்குகிறது என்றார் காரல்மார்க்ஸ். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் விவசாய உற்பத்தியின் மதிப்பிற்கும் அதன் உற்பத்தி செலவிற்கும் இடையிலான வேறுபட்ட தொகையைக் கொண்டு முழுமையான வாடகை தீர்மானிக்கப்படுகிறது. மறுபுறத்தில் வேறுபட்ட வாடகையானது மிகவும் மோசமான நிலத்தில் செலுத்தப்படும் உற்பத்தி சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது.
இங்கு குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் முழுமையான வாடகை என்பது முதலாளித்துவத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் காணக்கூடிய நிகழ்வாகும். அது முதலாளித்துவ கட்டத்திலும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடையாக தொடர்கிறது. ஆகவே நிலங்களை தேசியமயமாக்குவதன் மூலமே இதனை ஒழிக்க முடியும் என்று லெனின் சொன்னார்.
20) கடந்த மூன்று தசாப்தங்களாக விவசாத்திற்குள் முதலாளித்துவம் ஊடுருவியுள்ளது. மின்சாரத்தின் நுகர்வு, உரங்களின் பயன்பாடு அதிகரித்தல் HYV விதைகள் அதிக அளவில் பயன்படுத்துதல், போன்றவை முதலாளித்துவத்திற்கான வெளிப்பாடுகளாகும். இத்தகைய சம்பிரதாயப்படியான வளர்ச்சியானது மேலிருந்து கொண்டுவரப்படுகிறது.
விவசாயத்தில் முதலாளித்துவம் உள்ளது என்ற கருத்தின் ஆதரவாளர்கள் மேலும் கீழ்கண்ட நிகழ்வுகளை குறிப்பிடுகிறார்கள்.
அ) சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் கூட விவசாய உற்பத்திகளின் ஒரு பகுதியை சந்தையில் விற்கிறார்கள்.
ஆ) கிராமத்தில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கூலித் தொழிலாளர்களை நம்பியுள்ளனர்.
இ) மின்சார மோட்டார்களையும், HYV விதைகளையும் போன்றவற்றை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
ஈ) விவசாயத்திற்குத் தேவையான கருவிகள் முக்கியமாக தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு விவசாய உற்பத்திக்காக கொண்டுவரப்படுகிறது.
உ) குத்தகையின் பல்வேறு வடிவங்கள் குறைந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவ குத்தகைதான் எஞ்சியுள்ளது.
100% பாதிக்கு மேலான உணவு மற்றும் தானியங்கள், மற்றும் தொழில்துறை வேளாண் பொருட்களை சந்தையில் விற்பணை செய்யப்படுகிறது என்பதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தியாகும். விவசாய சரக்குகளுக்கான உபரி சந்தையில் பல ஆண்டுகளாக அதிகரிக்கிறது என்பது உண்மையே. இருந்தபோதிலும் முதலாளித்துவத்திற்கான அளவுகோலில் இது தேவையான அளவில் குறியீடாக ஆகாது. மொத்தவணிகத்திற்குள் வணிக மூலதனம் புகுவது அதிகரித்துள்ளது என்ற அடிப்படையைத்தான் இது குறிக்கிறது. வணிக மூலதனமானது விவசாய உற்பத்தியை கட்டுப்படுத்தும்போது அது விவசாயிகளை அவர்களது விளையொருளை சந்தை விலைக்கும் குறைவான விலைக்கு விற்கும்படி கட்டாயப்படுத்துகிறது. இதுபோன்ற சமனற்ற வியாபாரத்தால் விவசாயிகள் துயருறுகிறார்கள்.
இதுபோன்ற சமனற்ற வியாபாரத்தால் விவசாயிகள் துயருறுகிறார்கள். இது விவசாயத்தில் முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சிக்காக மறுஉற்பத்தியில் ஈடுபடுவதற்கான மறுமுதலீடு செய்வதற்கு வழிவகுக்காது. இது முதலாளித்துவத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் நிகழ்கின்ற விவசாயப் பொருள்களின் விலையில் ஏற்படுகின்ற ஏற்றம் மற்றும் இறக்கமானது முதன்மையாக முதலாளித்துவத்தை வெளிப்படுத்தவில்லை.
காரல்மார்க்ஸ் வணிக மூலதனத்தைப் பற்றி என்ன சொன்னார் என்பதை பார்ப்போம். நிலபிரபுத்துவ உற்பத்தி வடிவத்திலிருந்து மாறுதலானது இரண்டு வகையிலானது. இயல்பான விவசாயப் பொருளாதாரத்திற்கு மாறாக உற்பத்தியாளர் வணிகர் மற்றும் முதலாளியாக மாறுகிறார். அதாவது இடைக்கால நகர்ப்புற கைவினைபொருள் உற்பத்தியாளராக மாறுகிறார். இது உண்மையில் புரட்சிகரமான பாதையாகும். இல்லையெனில் வியாபாரி நேரடியாக அடியெடுத்துவைத்து ஒரு வழியை உருவாக்குகிறார். (17ஆம் நூற்றாண்டின் நெசவு உற்பத்தியாளர்கள் இதற்கு சாட்சியாக உள்ளனர். தங்களிடம் உள்ள கம்பளியை விற்பனை செய்து சுதந்திரமான நெசவாளர்களிடமிருந்து துணிகளை விலைக்கு வாங்குவதன் மூலம் அந்த நெசவாளர்களை அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.) இது பழைய முறையிலான உற்பத்தியானது தன்னைத்தானே வீழ்த்திக் கொள்வதற்கு பயன்படாது. ஆனால் இதற்கு மாறாக பாதுகாத்து தக்கவைப்பதற்கு முன்நிபந்தனையாக இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை பிரஞ்சு பட்டுத்தொழில் உற்பத்தியாளர்களும் ஆங்கில உள்ளாடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்களும் பெரும்பாலும் இல்லையெனிலும் பெயரளவிலாவது இவ்வாறு இருந்தார்கள். உண்மையில் இவர்கள் வெறுமனே வணிகர்கள், உண்மையில் யாருக்காக வேலைசெய்கிறோம் என்று தெரியா நிலையில் அமைப்பாக இல்லாத நெசவாளர்களை வணிகர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவர்கள் இவர்களே. இந்த அமைப்பு முறையானது எல்லா இடங்களிலும் உண்மையான முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் வளர்ச்சிக்கு தடையாகவே உள்ளது. புரட்சி இல்லாமல் வேறுவகையிலான உற்பத்தி முறை மாற்றமானது நேரடியான உற்பத்தியாளர்களின் நிலைமைகளை மோசமாக்குகிறது. அவர்களை வெறுமனே கூலித் தொழிலாளர்களாக ஆக்குகிறது. மூலதனத்தின் உடனடியான கட்டுப்பாட்டிலுள்ள பாட்டாளிகளைக் காட்டிலும் இவர்களது நிலை மோசமானதாக உள்ளது. மேலும் பழைய உற்பத்தி முறையிலான உபரி உழைப்பு என்பதற்கு பொருத்தமாகவே உள்ளனர்.(Karal Marks Capital, Vol-3, Progress Publishers, Moscow, 1986, pp 334-335)
சந்தையைப் பற்றி விவாதிக்கும்போது வணிக மூலதனம் சமனற்ற வர்த்தகத்தின் மூலம் எவ்வாறெல்லாம் சரக்குகளின் பறிமாற்ற செயல்முறையை .தவிடுபொடியாக்கி எதிர்புரட்சிகர பங்ககாற்றியது என்பதைப் பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். விவசாய உற்பத்திப் பொருள்களை வேதனை உண்டாக்கும் வகையில் விற்பனை செய்வதோ,அல்லது உற்பத்தி விலைக்கும் குறைவான விலைக்கு விற்பனை செய்வதோ விவசாயத்தில் முதலாளித்துவத்தை கொண்டுவருவதற்கான முன்அறிவிப்பாக இருக்காது. முதலாளித்துத்துக்கு சந்தை நடவடிக்கையை ஆதாரமாக குறிப்பிடுபவர்கள் பழைய உற்பத்தி முறையிலான உபரி உழைப்பிற்கு பொருத்தமான அடிப்படை கொண்ட வணிக மூலதனத்தின் எதிர் புரட்சிகர பங்கை கணக்கில் எடுத்துக்கொள்ளவதில்லை. இவர்கள் வணிக மூலதனத்தின் செயல்முறையை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. உற்பத்தியாளர்கள் வணிகர்கள் மற்றும் முதலாளிகளாக மாறும் புரட்சிகரமான பாதை இந்தியாவில் அப்பட்டமாக காணப்படவில்லை அல்லது அது ஒரு பொது விதிமுறையாகவும் இல்லை.
21) இந்திய சூழலில் விவசாயத் தொழிலாளர்கள்.
விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது முதலாளித்துவம் வளர்கிறது என்பதற்கான தெளிவான அடையாளமாகும் என்று மரபுவழி குட்டி முதலாளித்துவ கட்சியினர் மார்க்ஸ், மற்றும் லெனினது பெயரைச் சொல்லியே உறுதி செய்கிறார்கள். கடுமையான நெருக்கடி மற்றும் கடுமையான சூழலின் காரணமாக வறுமையில் வாடும் விவசாயிகளுக்கும் லெனினால் சொல்லப்பட்ட சுதந்திரமான அதாவது அவர் உயிர் வாழ்வதற்குத் தேவையான ரொட்டியை சுதந்திரமாக சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.
தென்இந்தியாவில் நிலம் மற்றும் சாதி என்ற தரம்குமார் அவர்களது புத்தகத்தில் ஏராளமான நிலமற்ற விவசாயிகள் உருவானதற்கு ஏகாதிபத்தியம் காரணம் என்ற கருத்தை அவர் நிராகரித்தார். அவருடைய சொந்த மதிப்பீட்டில் முன்னால் சென்னை மாகான சாதி வாரியான மக்கள் தொகை கணக்கீட்டின்படி தீண்டத்தகாதோர் சாதியைச் சேர்ந்த அனைவரும் பண்ணை அடிமைகள் என்று அனுமானித்தார். அது கிராமப்புர மக்கள் தொகையில் 12லிருந்து 15சதவீதமாக இருந்தது., 1871 மற்றும் 1901ல் நான்கு சதவீதமாக குறைந்துவிட்டது.1921ல் சென்னை மாகானத்தில் கிராமப்புர மக்கள் தொகையில் 36.1 சதவீதமாக விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து 1931ல் இன்னும் கூடுதலாக 52.1 சதவீதமாக உயர்ந்தது.
இந்தவகையான முதலாளித்துவத்தை விவசாயத்தில் முதலாளித்துவம் என்று சொல்லமுடியாது என்று உட்சபட்நாயக் குறிப்பிட்டுள்ளார். முதாளித்துவத்துக்கு முந்தைய முதலாளி, தொழிலாளி உறவு தீவிரமான மாற்றம் அடைவதற்கு விவசாயிகள் பாட்டாளிமயவாவது போன்றவைகள் தேவைப்படுகிறது, விவசாய முதலாளித்துவத்தை வரையறுப்பதற்கு தொழிலாளர்கள் வாடகைக்கு அமர்த்தி குவிக்கப்பட்டிருக்கவேண்டும் ஆனால் இந்த நிலை இங்கு போதுமானதாக இல்லை, அதாவது உபரி மூலதனமாக மாறி விரிவாக்கம் வேண்டும். இன்று இந்த தீர்ப்பை மாற்றுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று நாங்கள் பார்க்கிறோம் என்று உட்சா 1985ல் எழுதினார்.(உட்சா மற்றும் மஞ்சரிடிங்வானி, இந்தியாவில் அடிமைச்சங்கிலி, கட்டுண்ட மற்றும் அடிமைத்தனம், சங்கம் புத்தகம் பக்கம் 6, 1985.) இந்தியாவில் நிலமற்றவர்கள் அதிகமாவதும், தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் உருவாவதும் நிலையானதாகிக் கொண்டிருக்கிறது.. 1961ல் இந்திய விவசாயத்தில் மொத்த விவசாயிகளில் 24.04சதவீதம் விவசாய தொழிலாளர்கள்(விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள வேலைகளில்) விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை 1991ல் 32.65சதவீதமாகவும்,அல்லது 81.2மில்லியனாகவும் அதிகரித்தது. 2001ல் இந்த எண்ணிக்கை மேலும் கூடுதலாக 34.2சதவீதமாகவும் அல்லது 102.89 மில்லியனாகவும் அதிகரித்தது. முழுமையான வகையில் இந்த எண்ணிக்கையானது 1991ல் 86895லிருந்து 2001ல் 21600000ஆக அதிகரித்தது. 1981லிருந்து 1991வரையிலான இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிப்பது என்னவென்றால் பெண் உழைப்பாளர்களின் எண்ணிக்கை 38.15சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கிறது.
மறுபுறம் குறிப்பிட்ட அளவில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது என 1947 மற்றும் 1991ன் தேசிய மாதிரி ஆய்வு தெளிவுபடுத்துகிறது.
(மூல கட்டுரை தோழர் இணையத்தில் பகிர்ந்தவையே. நான் மாற்றமின்றி பகிர்கிறேன்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++