ஜாதியம் தோற்றம் மற்றும் இன்றைய இருப்பு பற்றி ஓர் தேடல்-சிபி 49 இதழிலிருந்து

 இன்று ஜாதியும் மதமும் ஓட்டரசியலுக்கும் ஆளும் வர்க்கதிற்கும் உறுதுணையாக இருக்கும் பொழுது. உழைக்கும் மக்கள் பல்வேறு ஜாதியில் பிரிந்து கிடக்கின்றனர்.தலித்தாக பிரிந்து நிற்பதாலோ அல்லது மேல்ஜாதி பெருமை பேசுவதாலோ எந்த உழைக்கும் மக்களுக்கும் விடுதலை இல்லை!

நாம் வாழும் இன்றைய சமூகத்தில் உலகின் அதிநவீன விஞ்ஞான வளர்ச்சியை பணம் உள்ளவன் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரத்தில் பணம் என்ற பொருள் இல்லாதவன் இங்கே மதிப்பற்றவன் வாழ முடியாது. இவைதான் இன்றைய ஏகாதிபத்திய நியதி. விஞ்ஞான வளர்ச்சியும்,புதிய கண்டுபிடிப்புகளும் உலகத்தை மின்னல் வேகத்தில் முன்னெடுத்துச் சென்றுக் கொண்டுள்ளது. ஆனால் அவை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளதா என்றால்? இல்லை என்பதுதானே பதில் நாட்டில் பெரும் பகுதி மக்கள் ஜாதி, மத நம்பிக்கை மூடப்பழக்க வழக்கங்களின் காரணமாக அறியாமையில் மூழ்கடித்துள்ளது இங்குள்ள ஆளும் வர்க்கம் தன் தேவைக்காக ஆம். ஜாதியும் மதமும் ஓட்டரசியலுக்கும் ஆளும் வர்க்கதிற்கும் உறுதுணையாக இருக்கும் பொழுது. உழைக்கும் மக்கள் பல்வேறு ஜாதியில் பிரிந்து கிடக்கின்றனர். உழைப்பில் ஒன்றிணையும் பல்வேறு ஜாதியினர் ஊரில் ஜாதியால் பிரிந்து கிடகின்றனர்.

அந்தந்த பகுதியில் வாழும் உழைக்கும் மக்கள் உழைக்கும் பொழுது ஒன்றிணைவதும் ஆனால் இருப்பிடத்தில் மக்கள் ஜாதியாக பிளவுப்பட்டுள்ளதையும் ஜாதி கட்சிகள் வெகு இலகுவாக பயன்படுத்திக் கொள்கிறது. அதில் எல்லா ஜாதியும் அடக்கம்..

இருந்தும் ஏதுமற்ற பட்டியலின ஜாதி மக்களை ஒடுக்குவதில் அரசு இயந்திரங்கள் முன்நிலை வைப்பதோடு பிரச்சினையின் சூத்திர தாரியை மூடி மறைக்கவும் செய்கிறது. தீவட்டிபட்டியில் நடந்தேறிய பிரச்சினையில் கோயில் நூழைய அனுமதித்காதவர்கள் இது போன்ற இழிவான செயல் செய்தவர்களையும் இதன் பின்னணியில் இயங்கும் ஜாதி கட்சிகளையும், ஜாதி அரசியலை அடிப்படையாக கொண்டுள்ள அரசியல்வாதிகளையும் நம்பி இதற்கு தீர்வு கிடைக்காது என்பது திண்ணம்.. உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கொடுமைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முன் வரவேண்டும்.. அதற்கு முன் நிபதனை எல்லா உழைக்கும் மக்களும் ஓரணியில் இணைய வேண்டும். அது இல்லாமல் தன் ஜாதிகாரன் தன் சொந்தகாரன் அடிப்படையில் இயங்கும் பொழுது வேவ்வேறு வர்க்க நலன் கொண்ட ஒரே ஜாதியில் உள்ளவர்கள் ஒன்றுபட்டு என்ன பயன்? ஆக தலித்தாக பிரிந்து நிற்பதாலோ அல்லது மேல்ஜாதி பெருமை பேசுவதாலோ எந்த உழைக்கும் மக்களுக்கும் விடுதலை இல்லை! பொது எதிரியை வீழ்த்தாத வரை விடிவில்லை... ஆக ஒற்றுமையும் இது போன்ற இழி செயல்களை முழுமையாக மறுக்க ஜாதி கடந்து உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம். உழைக்கும் மக்களுக்கு விரோதமான ஜாதிவாத மதவாத கட்சிகளை அம்பலப்படுத்துவதோடு அவர்களை தடைப்படுத்த போராட வேண்டும்.. உழைக்கும் மக்களை ஒன்றிணைப்பதில் தடுக்கும் ஜாதி வாத மதவாத கட்சிகளை வேரறுப்பதோடு அவைகளிலிருந்து உழைக்கும் மக்கள் வெளியேறாமல் ஜாதிவாத மதவாத மயக்க பிஸ்கட்களில் மயங்கி கொண்டு இருக்கும் வரை இவை தொடரத்தான் செய்யும்... ஒரே தீர்வு இது போன்ற பிற்போக்கு குப்பைகளை தூக்கி எறிவதும் மக்கள் ஒன்றிணைந்து இதற்கு முடிவு கட்டுவதும் தான்.கொடுமைகளுக்கும் உழைக்கும் மக்கள் ஒன்றாக இருந்து போராடினால் மட்டுமே...எல்லா தீமைகளுக்கும் கொடுமைகளுகும் அடிவேரை சாய்க்காத வரை நம்மில் நாமே மோத அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பர்..

ஒரு சாதியினர் ஒரே தொழிலைச் செய்தனர், வேறு எந்த தொழிலையும் செய்யவில்லை. சாதிய சமூக அமைப்பு முழுவதற்கும் சில பொதுவான உறவுமுறை இயங்கிக்கொண்டிருக்கிறது. பார்ப்பனர் மலர் தூவி வழிபாடு செய்தனர். பஞ்சமர் துப்புரவு செய்தனர். இதற்குள் சாதியத்தின் பிறவி வழி தனி வழி சித்தாந்தம் ஆகும். கைவினை சாதிகளும் பிரதேச விதிவிலக்கின்றி ஒரே தொழிலில் இருந்தனர். நிலவுடைமை சாதிகளும் நிலத்தில் உழும் சாதிகளும் பிரதேசத்துக்கு ஏற்பவும் காலத்துக்கு ஏற்பவும் விதிவிலக்காக அமைந்தன.

சாதியம் என்பதை நிலவுடைமை உற்பத்தி முறை அல்லது முதலாளியத்துக்கு முந்தைய உற்பத்தி முறை கொண்ட ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானமாக (சித்தாந்தமாகவும் கருத்துருவமாகவும்) மார்க்சிய அறிஞர் கருதுகின்றனர். டி.டி. கோசாம்பி சாதியத்தை ஒரு உற்பத்தி முறை அடிப்படையிலான மேற்கட்டுமானமாக கண்டறிந்தனர். இனக்குழு தன்மைகள் சாதியமைப்பில் தொடர்ந்து நீடிப்பதைக் கண்டறிந்து வெளிப்படுத்திய கோசாம்பி நிலவுடைமை உற்பத்தி முறையால் தான் சாதியம் உறுதிப்பட்டது என்று கூறுகிறார். மேலும் இத்தகைய உற்பத்தி முறையை அடிப்படையில் மாற்றி தொழில்நுட்ப படுத்துவதன் மூலம் சாதியத்தை ஒழிக்க இயலும் என்று குறிப்பிடுகின்றார். (இந்திய வரலாறு பற்றிய ஆய்வின் அறிமுகம் நூலில் இருந்து)

இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதால் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமயமாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்ற தாழ்வை போக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது

அண்மையில் நடந்த கோயில் நுழைவை எதிர்ப்பும் அதன் பின்னணி பற்றிய புரிந்துக் கொள்ள.

இரு வேறு அறிக்கை கீழ்காணும் இணைப்பில் வாசித்து பதிலிளிப்பீர்களா அல்லது கள்ள மௌனம் சாதிப்பீரா தோழர்களே.

1) https://namaduillakku.blogspot.com/2024/05/blog-post_18.html உண்மை அறியும் குழுவின் அறிக்கை இந்த இணைப்பில்.

2). https://namaduillakku.blogspot.com/2024/05/blog-post_88.html உண்மை அறியும் குழுவின் அறிக்கை மீதான விமர்சனம்(தோழர் ரவீந்திரன் முகநூல்பகுதின் தொகுப்பு).

ஆக தோழர்களே சற்று ஜாதியை புரிந்துக் கொள்ள சமூக வளர்ச்சி விதிகளையும் ஜாதியின் தோற்றம் பற்றியும் சிறிய தேடல் வாருங்கள் முயற்சிக்கலாம்.

மார்க்சிய தத்துவத்தை பயின்றால் மட்டும் போதும் என்பதோ நடைமுறைக்காக மட்டும் ஓடிக் கொண்டிருப்பது மார்க்சியம் அல்ல. உலக சமூக வரலாறு என்பது மனிதர்களால் படைக்கப்பட்டது தான். மனித சமூக இயக்கம் என்பது மனித சமூகத்திற்கு அப்பாற்பட்ட அல்ல மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காக தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான கட்டுதல்களை உடைத்து எறிந்து அவர்களுக்கான விடுதலை அடைவதற்கான வழிவகைதான் மார்க்சியம் சொல்லுகிறது.

சமூக மாற்றத்திற்கான இயக்கம் என்பது வர்க்கப் போராட்டமே. மானுட வரலாற்றை இயக்கும் சக்தியாகவும் இதே உள்ளது.வர்க்கம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே வர்க்க போராட்டமும் துவங்கி விட்டது. ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையே நடந்த வர்க்கப் போராட்டம். நிலப்பிரப்புதுவத்திலும் விவசாயக் கூலிகளுக்கான போராட்டம் முதலாளித்துவத்திலும் பாட்டாளிகளுக்கும் இடையிலான போராட்டம்.

ஆக வர்க்கப் போராட்டத்தின் முழுமையும் புரிந்து கொள்வோம். இங்கே பொருளாதாரப் போராட்டத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களையும் தொழிற்சங்ககளின் பணி என்பது ஒரு பகுதி தான் அதனூடாக அரசியல் போராட்டத்தை நடத்த தேவை உள்ளது. அரசியல் போராட்டத்தை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு தத்துவ போராட்டமும் தேவைப்படுகிறது. இதனை எல்லாம் மக்களுக்கு போதித்து மக்களை பயிற்று வித்து அரசியல் ரீதியாக வளர்த்தது போலவே ஆயுதப் போராட்டத்திற்கும் தயார் செய்து சமூக மாற்றத்தை நடத்த வேண்டும். ஆக இங்குள்ள சுரண்டல் முறை அடக்குமுறை ஒடுக்கு முறைக்கு தீர்வு என்பது பலாத்காரமான சமூகப் புரட்சி ஒன்றின் மூலம் தான் சாத்தியம். இதனைப் புரிந்து கொள்ள கவிஞர் பட்டுக்கோட்டையின் பாடலைப் பாருங்கள் "தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா " இதிலிருந்து விடுபடாமல் நாம் தத்துவ போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தை ஆயுத போராட்டத்தை புரிந்து கொள்ள முடியாது.

ஜாதி பற்றி அடிப்படைகளை புரிந்துக் கொள்ள

ஜாதியும் வர்க்கம் பற்றி இங்கு பல்வேறு நூல்கள்பல் வேறு எழுத்தாளர் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பலநூல்கள் எழுதிஉள்ளனர். மார்க்சிய சமூக விஞ்ஞானமானது சமூகத்தின் ஒவ்வொரு வளர்ச்சி போக்கையும் மிகத் துல்லியமாக ஆய்வு செய்து அதனை விளக்கியுள்ளது.

உலகில் தோன்றிய ஒவ்வொரு நிகழ்வுகளை நாம்கணக்கில் எடுத்துக்கொண்டால் சமூகத்தேவைகளை ஒட்டியே அவை நிகழ்கின்றன தோன்றுகின்றன். அதாவது ஒவ்வொன்றின் தோற்றமும் அதன் மறைவும் சமூக தேவையை ஒட்டியே நிகழ்கிறது; தேவையற்று போகும் பொழுது அவை சிறிது சிறிதாக தேய்ந்து மறைந்து விடுகிறது. அப்படி என்னும் போது நமது சமுதாயத்தில் தோன்றிய ஜாதியின் தோற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையாக இருந்தது. இன்று அவை சமூகத்தில் விரோதமாக இருக்கிறது, அவை தோன்றியகாலத்தின் தேவைபோல் இல்லை என்பதே பதிலாகும் அப்படி எனும் பொழுது ஜாதி மறையாமல் ஏன் கட்டிக்காக்கப்படுகிறது ஏன் உள்ளது ? சற்று சிந்தியுங்களே தோழர்களே. அன்று ஜாதியை கட்டி காக்க சட்ட திட்டங்களான கோட்பாடுகள் வகுத்து அதனை நடைமுறை படுத்தியது போல் இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் சட்டம் தீட்டி அதனை ஒழிக்கும் நடைமுறைக்கு வரவில்லை. ஏனெனில் இன்றை சமூக ஒடுக்குமுறையிலிருந்து உழைக்கும் மக்கள் ஒன்றினைந்து தனக்கெதிரான போராட்டதிற்கு குதித்து தன்னை தூக்கி எறிந்து விடக்கூடாது என்பதற்காக கட்டிக்காக்கப்படும் இந்த அழுகி போன குப்பை ஆளும் வர்க்கம் வாழ்வதற்கு உறுதுணையாக உள்ளது உங்களுக்கு புரிதல் வேண்டும்.1945 க்கு பிறகு ஜப்பானில் ஜாதியை ஒழித்து அந்த தீண்ட தகாதோரை தங்களின் தேவைக்காக ஆளும் வர்க்கம் அரவணைக்கவில்லையா? ஒரே இரவில் சட்டமியற்றி உங்கள் கையில் உள்ள பணம் செல்லாது என்று அறிவிக்கவில்லையா? நீங்கள் ஆதார்கார்ட் கட்டாயம் எடுத்தே ஆகவேண்டும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை என்று பணமில்லாத டிஜிட்டலை புகுத்தவில்லையா அரசு எல்லாம் முதலாளிகள் தேவையும் உங்களை கண்காணிக்கவும் எத்தனிக்கும் அரசு இந்த சமூகத்தின் சாப கேடா ஒருபிரிவு மக்களை கேவலப்படுத்தும் இந்த முறைமைக்கு முடிவு கட்ட முடியாதா? முடியும் அவை செய்தால் அதன் பின் இவர்கள் ஆட்சி செய்ய முடியாது ஆம் அன்றைய மன்னர்கள் முதல் இன்றைய மந்திரிகள் வரை மக்களை ஒடுக்குவதற்கான கருவியாக ஜாதியாக உள்ளது என்பது தெளிவு.

எங்கெல்ஸின் வார்த்தைகளில் சொன்னாள், " செல்வத்தின் பால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக சமுதாய அமைப்பு பாதிக்கப்பட்டது பரம்பரை பிரபுதுவத்திற்கும் அரசும் அரசு முறைக்கும் கொழுந்துகள் துளிர்த்தன, அடிமைமுறை போர்க்கைதிகளோடு நின்று இருந்தபோதிலும், ஏற்கனவே குலத்தின் உறுப்பினர்களையும் கூட அடிமைப்படுத்துவதற்கு வழிவகை செப்பனிட்டு வந்தது. கால்நடைக்கு நடைபெற்ற சண்டைகள் நிலத்துக்கான திட்டமிட்ட படையெடுப்புகளாக இழிந்து ஒரு முறையான தொழிலாகிவிட்டது. உயர்விலும் உயர்வான சம்பத்தாக செல்வம் புகழப்பட்டது..... தனிநபர்கள் புதிதாக சேர்த்த சொத்தை பாதுகாக்கவும் அதைப் பெருக்குவதற்கும் படிப்படியாக வளர்ந்து வரும் புதிய வடிவங்களுக்கும் பொதுமக்கள் அங்கீகாரம் எனும் முத்திரையைப் பதிக்க வைப்பதற்கும் வேண்டிய ஒரு நிறுவனம் இல்லாதிருந்தது. சமுதாயத்தில் ஆளும் வர்க்கமானது, வர்க்கப்பிரிவினையை நிரந்தரமாக்குவதோடு மட்டுமல்லாமல் உடைமை அற்றவர்களை உடைமை உள்ளவர்கள் சுரண்டுவதற்கான உரிமையை நிரந்தரமாக்கும் நிறுவனம் வர தொடங்கியது அதுதான் அரசு என்பது என்கிறார்.

ஜாதி என்றால் என்ன?•சாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்ல. இவை தனி உடமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும். அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.

•அதாவது உலகில் உள்ள மற்றச் சமூக அமைப்பு போலவே இந்தியச் சமூக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு (வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்).இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும்ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.

•நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது. இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது (சட்ட ரீதியா).

ஜாதி தொடக்கம்

சாதியின் ஆரம்பம் என்பது குல சமூகம் உற்பத்தியில் ஈடுபடலான போது அவர்களுகிடையிலேயான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் அவரவர்களுக்கான வேலைபிரிவினையில் செயல்பட்டதன் விளைவு குழுவிற்குள்ளே இருந்த சமத்துவம் குழைந்து தலைமை பொறுப்பில் இருந்த தலைவர், பூசாரி என்ற பிரிவினர் சமூகத்தில் உற்பத்தியான உபரியை கைப்பற்றி தனது சொந்த சொத்தாக ஆக்கிக்கொண்டனர். ஒரு பக்கம் சொத்தும் இன்னொரு பக்கம் சொத்தற்றவர்களும் பிரிவினை ஏற்றதாழ்வு உருவாயிற்று. அன்று இந்தப் பிரிவினை சாதியாக இருக்கவில்லை. பல நூறு ஆண்டுகள் பல மாற்றங்களின் ஊடாக சாதியின் உரு திரண்ட நிலை கிமு 2 நூற்றாண்டிலிருந்து தெரிந்தாலும் துலக்கமாக கிபி 2ம் நூற்றாண்டில் கோலோச்ச ஆரம்பித்தது எனலாம்.

சரி சங்க கால நூல்களிலிருந்து தமிழ் சமூகம் பற்றி சற்று தேடுவோம்

மக்களைப்‌ பிரிக்கும்‌ பிரிவினைகள்‌ பல அவற்றுள் இரண்டு இப்போது பெரும்‌ பிரச்சினைகளாக உள்ளன. ஒன்று சாதி மற்றொன்று மதம்‌. ஒரு காலத்தில்‌ அவசியமாக இருந்தவை இன்று தீமையாக உள்ளன.வள்ளலார்‌ கூறுகிறார், கல்வி, காவல்‌, வணிகம்‌, வேளாண்மையும்‌ பிற தொழில்களும்‌ என்று தொழிலை "முன்னிட்டு மக்களை நான்கு பெரும்‌ பிரிவுகளாக பிரித்தார்கள்‌.“தொடக்கத்தில்‌ தொழிலால்‌ ஏற்பட்ட பிரிவு வரவரப்‌ பிறப்போடு பின்னிக்கொண்டு தொழிலால்‌ சாதி என்றது போய்‌, பிறப்பால்‌” என்றாகிவிட்டது. இன்று எல்லாத்‌ தொழில்களையும்‌ எல்லாச்‌ சாதி யாரும்‌ செய்கின்றனர்‌. தொடக்கப்பள்ளி முதல்‌ பல்கலைக்‌கழகம்வரை கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ அனைவரும்‌ (* பழங்காலத்தில்‌ எகிப்து முதலிய நாடுகளிலும்‌ தொழிலின் அடிப்படையில் பிரிவினைகள்‌ இருந்திருக்கின்றன (கலைக்களைஞ்சியம்‌ 4-562)).

பழங்காலத்தில்‌ தமிழகத்தின்‌ நிலப்பரப்பு முல்லை, குறிஞ்சி, மருதம்‌, நெய்தல்‌ என நான்காகப்‌ பிரிக்கப்பட்டிருந்தது. நானிலம்‌ - நால்வகை நிலம்‌. இப்பிரிவு இயற்கையமைப்பை ஒட்டி இயல்பாகப்‌ பிரிக்கப்பெற்ற பிரிவு, காடுகளும்‌ காடுசார்ந்த இடங்களும்‌ - முல்லை நிலம்,‌ மலைகளும்‌ மலைசார்ந்த இடங்களும்‌ - குறிஞ்சி நிலம்,‌ வயல்களும்‌ வயல்‌ சார்ந்த இடங்களும்‌ - மருத(ம்‌) நிலம்,‌ கடற்கரையும்‌ கடலோர இடங்களும்‌ - நெய்தல்‌ நிலம்.‌ இவற்றைக்‌ காட்டுப்பகுதி (வனப்பகுதி forest areas), மலைப்பகுதி (Hill areas), சமவெளிப்‌ பகுதி (plains), கடற்கரைப்‌ பகுதி (seashore areas) எனலாம்‌. இப்படிப்‌ பார்த்தால்‌ இன்றைய சென்னை செங்கற்பட்டு மாவட்டப்‌ பகுதிகள்‌ நெய்தல்நிலம்‌, வடஆற்க்காடு (வேலூர்‌- திருவண்ணாமலை) மாவட்டப்‌ பகுதிகள்‌ முல்லை நிலம்‌, சேலம்‌, கோயம்புத்தூர்‌, தருமபுரி மாவட்டப்‌ பகுதிகள் குறிஞ்சி நிலம்‌, திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர்‌ மாவட்டப்‌ பகுதிகள்‌ மருதநிலம்‌. தமிழ்நாட்டில்‌ பாலைவனம்‌ இல்லை பழந்தமிழ்நாட்டு நிலப்‌பிரிவில்‌ ‘பாலை’ என்றொரு பிரிவு இல்லை, “பாலை” என்றொரு பிரிவு பின்னாளில்‌ சேர்க்கப்பெற்றது.

“முல்லையும்‌ குறிஞ்சியும்‌ முறைமையில்‌ திரிந்து நல்லியல்‌ பிழந்து நடுங்குதுயா்‌ கறுத்துப்‌ பாலை என்பதோர்‌ படிவங்‌ கொள்ளும்‌” என்பது சிலப்பதிகாரம்‌ காடுகாண்காதை அடி 64-67.

பழந்தமிழர்‌ வாழ்வு இயற்கையோடியைந்த வாழ்வு. பழந்தமிழர்‌ நிலத்திற்கே முதன்மை தந்தனர். தொல்காப்பியத்தின்‌ பொருளதிகாரம்‌ உண்மையிலேயே பொருளுள்ளது;ஆம் அந்த மக்கள் சமூகத்தின் பற்றிய பொருள்‌ பொதிந்தது.

நால்வகை நிலத்தும்‌ மருவிய குலப்பெயராவன: குறிஞ்சிக்குக்‌ கானவர்‌ வேட்டுவர்‌ குறவர்‌ இறவுளர்‌ குன்றுவர் வேட்டுவித்தியர் குறத்தியர் குன்றுவித்தியர்.முல்லைக்குக்‌ கோவலர்‌ இடையர்‌ ஆயர்‌ பொதுவர்‌ இடைத்தியார்‌ கோவித்தியர்‌ ஆய்த்தியர் பொதுவியர்‌. நெய்தற்கு நுளையர்‌ இமிலர்‌ பரதவர்‌ நுளைத்தியர் பரதீதியர். மருதத்திற்குக்‌ களமர்‌ உழவர்‌ கடையர்‌ உழத்தியர்‌ கடைச்சயர்.பாலைக்குத்‌ திணைதொறுமர் இயற்பெயருந்‌ திணைநிலைப்‌ பெயரும்‌ கொள்க, எயினர்‌ எயிற்றியர்‌ மறவர்‌ மறத்தியர்‌ எனவும்‌ மீளி விடலை காளை எனவும்‌ வரும்‌. தலைமக்கள்‌ பெயர் இலக்கியங்களிற்‌ காணப்பெறுகிறது.

பொதுமக்கள்‌ பெயர்‌, குலப்பெயர்‌ சாதிப்‌ பெயராக இன்றும்‌ வழங்கி வருகிறது, குலப்பெயர்கள்‌ தொழிலால்‌ அமைந்துள்ளன:மூல்லை நில மக்களின்‌ முக்கிய தொழில்‌ ஆடு மாடுகளை வளர்த்தல்‌ — ஆயர்‌, இடையர்‌, குறிஞ்சி நில மக்களின்‌ முக்கியதொழில்‌ வேட்டையாடல்‌ -- வேட்டுவர்‌, வேடர்‌, குறவர்‌. மருத நில மக்களின்‌ முக்கிய தொழில்‌ உழவு, வேளாண்மை -- உழவர்‌, வேளாளர்‌, நெய்தல்நில மக்களின்‌ முக்கிய தொழில்‌ மீன்‌ பிடித்தல்‌, உப்பு விளைத்தல்‌ -- பரதவர்‌, உமணர்‌, பாலை நில மக்களின்‌ மூக்கிய கொழில்‌ ஆறலைத்தல்‌ (வழிப்பறி), எயினர்‌, மறவர்‌. நிலத்துக்கு(ஊருக்கு)த்‌ தகுந்த தொழில்‌. தொழிக்குத்‌ தகுந்த பெயர்‌, எல்லாமே இயற்கையாக அமைந்திருக்கின்றன. குலப்பெயர்கள்‌ எப்படி ஏற்பட்டன என்பதை விளக்கவே இவ்வளவு தூரம்‌ கூறினோம்‌. இன்னும்‌ இவை போன்ற சில பல குடிப்‌ பெயர்களும்‌ குலப்பெயர்களும்‌ உள்ளன. அவையெல்லாம்‌ பழைய இலக்கியங்களில்‌ ஆங்காங்கே பரவலாகக்‌ காணப்படுகின்றன. புறநானூற்றில்‌ ஒரு பாட்டு, மாங்குடி இழார்‌ பாடியது. அறிஞர்‌ பலராலும்‌ எடுத்துக்காட்டப்‌ பெறுவது.

அடல்‌அருந்‌ துப்பின்‌ ......... .

குருந்தே முல்லை என்று

இந்நான்கு அல்லது பூவும்‌ இல்லை;

கருங்கால்‌ வரகே, இருங்கதிர்த்‌ தினையே

சிறுகொடிக்‌ கொள்ளே, பொறிகிளர்‌ அவரையொடு

இந்நான்கு அல்லது உணாவும்‌ இல்லை;

துடியன்‌, பாணன்‌, பறையன்‌, கடம்பன்‌ என்று

இந்நான்கு அல்லது குடியும்‌ இல்லை;

ஒன்னாத்‌ தெவ்வர்‌ முன் நின்று விலங்கி,

ஒளிறு ஏந்து மருப்பின்‌ களிறு எறிந்து வீழ்த்தென,

கல்லே பரவின்‌ அல்லது நெல்‌ உகுத்துப்‌ பரவும்‌ கடவுளும்‌ இலவே. — 335

இப்பாடலின்‌ 7: 8- ஆவது : அடிகளில்‌ ‘துடியன்‌' பாணன்‌, பறையன்‌, கடம்பன்‌ என்று இந்நான்கல்லது குடியும்‌ இல்லை” என்று பாடலாசிரியர்‌ கூறுகிறார்‌.

திணைமரபுகளின்‌ அடிப்படையில்‌ வளமையான பகுதியான மருத நிலப்பகுதியிலேயே முதன்முதலில்‌ அரசு உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தினை முன்மொழிகின்றனர் சங்க கால இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு‌. இது உழவுத்தொழிலைப்பெரிதும்‌ நம்பி அதன்மூலம்‌ ஏற்பட்ட உபரி உற்பத்திப்பெருக்கத்தை மனத்தில்‌ கொண்டு இந்நிலைப்பாட்டை இவ்வாய்வாளர்கள்‌ எடுத்திருக்க வேண்டும்‌. வளமையான பகுதிகளிலேயே அரசு உருவாகியிருக்க முடியும்‌ என்றகருதுகோளின்‌ அடிப்படையில்‌ எழுந்த ஒருமுடிவு இதுஎனலாம்‌.

குரவம்‌, தளவு, குருந்தம்‌, முல்லை - இந்நான்கு தவிர வேறு பூக்கள்‌ இல்லை. வரகு, தினை, கொள்ளு, அவரை - இந்நான்கு தவிர வேறு உணவில்லை. துடியன்‌, பாணன்‌, பறையன்‌, சுடம்பன்‌ - இத்நான்கு தவிர வேறு குடிகள்‌ இல்லை. வீரர்களின்‌ நடுகல்‌ தவிர வேறு கடவுள்‌ இல்லை என்பது இப்பாடலின்‌ பொருள்‌, குறித்த நான்கு பூக்கள்‌ தவிர வேறு பூக்கள்‌ இல்லையா? நான்கு தானியங்கள்‌தவிர வேறு இல்லையா? நான்கு குடிகள்‌ தவிர வேறு இல்லையா? நடுகல்‌ தவிர வேறு கடவுள்‌ இல்லையா? என்றால்‌, இவர்‌ பாடும்‌ அந்த ஊரில்‌ இல்லை. இவ்விளக்கம்‌ ஒளவை துரைசாமி பிள்ளை உரையால்‌ தெரிகிறது. பாடப்பெறும்‌ அவ்வூரில்‌ (அப்பகுதியில்‌) இல்லை எனப்‌ பொருள்‌ கொள்ளவேண்டும்‌, அன்றிப்‌ பொதுவாகக்‌ குடியே இந்நான்குதான்‌, இவையன்றி வேறு இல்லை என்று பொருள்‌ கொள்ளலாகாது.மண்‌ வேலை செய்வோர்‌ குயவர்‌, கல்‌ வேலை செய்வோர்‌ கற்றச்சா்‌, மரவேலை செய்வோர்‌ தச்சர், பொன்வேலை செய்வோர்‌ தட்டார்‌, பொற்கொல்லர்‌ இரும்பு வேலை செய்வோர்‌ கருமார்‌, கொல்லர்‌ வெண்கலம்‌ முதலிய உலோக வேலை செய்வோர்‌ கன்னார்‌, இவர்களெல்லாம்‌ பூணூல்‌ அணியும்‌ உரிமை பெற்றனர்‌. இவர்களுள்‌ குயவர்‌ தவீர ஏனையோர்‌ விஸ்வப்பிராமணர்‌ எனப்‌ பேர்பெற்றனர்‌. பள்ளர்‌, பறையர்‌, சக்கிலியர்‌ தமிழ்நாட்டின்‌ பழங்குடிகள்‌.வயலில்‌ - உழவு செய்வோர்‌ பள்ளர்‌, இவர்களது வாழ்வு, பணியைப்‌ பற்றிய சிற்றிலக்கியம்‌ (பிரபந்தம்‌) பள்ளு, வயலும்‌ வயல்‌ சார்ந்த இடங்களும்‌ மருதநிலத்தில் பள்ளர்கள்‌ பலர்‌ விவசாயத்‌ தொழிலாளர்களாக - விவசாயக்‌ கூலிகளாக - இருந்தாலும்‌ சிலருக்குச்‌ சொந்த நிலம்‌ உண்டு‌.பள்ளர்களுக்கு மன்னர்‌ என்ற பெயரும்‌ உண்டு, இலக்கியங்களில்‌ காணப்படுகிறது, பறையறைவோர்‌ பறையர்‌. பறை வல்லிசை, துன்ப காலத்தில்‌ முழங்கப்பெறுவது, பள்ளர்களுக்கு உழவுத்‌ தொழில்‌. பறையர்களுக்கு இழவு வீட்டில்‌ வேலை. பள்ளர்களுக்கு வயலில்‌ வேலை, பறையர்களுக்குச்‌ சுடுகாட்டில்‌ வேலை.

இன்னும்‌ இவ்வாறு தொழிலாளர்‌ பெயர்கள்‌ நீள்கின்றன. எல்லாவற்றையும்‌ பட்டியலிட்டால்‌ மிக நீளும்‌, எல்லாம்‌ தொழில்வழிக்‌ குடிப்பெயராகத்‌ தோன்றிக்‌ காலஅடைவில்‌ குலப்பெயராக மாறிப்‌ பின்னாளில்‌ பிறப்பு வழிச்‌ சாதிப்‌ பெயராக ஆகிவிட்டன.

இன்னொறு ஆசிரியர் இப்படி கூறுகிறார் ‘பழந்தமிழ் சமூகத்தில் சாதி - தீண்டாமை’ என்ற கோட்பாடுகள் தென்படுகின்றனவா என்கிற ஆராய்ச்சி முயற்சியின் விளைவாக எழுதிய நூல் “சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை”. இதற்காக சங்க இலக்கியம் தொடங்கி சங்கம் மருவிய இலக்கியங்கள் வரை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்திருக்கிறார். அவையும் விதிவிலக்காக இன்று பேசுபவைக்கு உள்ளது.

நமது வரலாற்று பக்கங்கள் கூறுகின்றன:- கி.மு. ஆயிரம்‌ முதல்‌ கி.மு.ஐந்தாம்‌ நூற்றாண்டு வரை பல்வேறு பண்பாட்டுப்‌ படிநிலைகளைக்கடந்து வந்து பின்னர்‌ கி.மு.5ஆம்‌ நூற்றாண்டின்‌ இறுதிப் பகுதியில்‌ வரலாற்றுக்‌ காலத்திற்குள்‌ நுழைந்தனர்‌ எனலாம்‌. வரலாற்றுக்‌ காலமான சங்ககாலத்தில்‌ கோலோச்சிய பண்பாடு கி.பி. முதலாம்‌ நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்திருப்பதைத்‌ தமிழகத்தில்‌ அண்மையில்‌ கிடைத்த பல்வேறு அகழாய்வுச்‌ சான்றுகள்‌ புலப்படுத்துகின்றன.

தொல்லியல்‌ அகழாய்வுகளில்‌ வெளிப்படுகின்ற தரவுகள்‌ நமக்கு வேறொரு தோற்றத்தை வழங்குகின்றன. அகழாய்வுகளில்‌ கிடைத்துள்ள தமிழ்ப்‌ பிராமி வரிவடிவத்தில்‌ பொறிக்கப்பட்ட பானைஓடுகள்‌ எம்மதத்தையும்‌ சாராது நிற்கின்றன. இது கல்வெட்டுத்‌ தரவுகள்‌ காட்டும்‌ சமய உணர்வுகளுக்கு மாறாக உள்ளது.

இலக்கியம்‌, கல்வெட்டு, நாணயம்‌, அயல்நாட்டவர் குறிப்புகள்‌, அகழாய்வுச்‌ சான்றுகள்‌ போன்ற அனைத்து இலக்கியங்களில்‌ காணப்படும்‌ திணைக்கோட்பாட்டைஅடிப்படையாகக்‌ கொண்டு ஐந்திணைகளில்‌ ஏற்படுகின்ற, ஏற்பட்டபல்வேறு சமூகச்‌ சூழல்களைச்‌ சுட்டிக்காட்டி அதனடிப்படையில் எழுந்த அரசு உருவாக்கத்தைவிளக்கியுள்ளனர்‌. இங்கு நம் ஆய்வு களத்தில் அந்த பகுதி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட முடிவுகள் தொகுப்பாக சிலவற்றை பார்த்தோம் பார்க்க போகிறோம்.

சங்க இலக்கியப்‌ பாக்கள்‌ பலவும்‌ - மருதப்பாடல்கள்‌ உட்பட சமுதாயத்தில்‌ உயர்ந்தநிலையில்‌ வாழ்ந்தமன்னர்களைதலைமக்களாகக்‌ கொண்டுபாடியவையாகும்‌. மன்னர்களைப்‌ பாடிய இலக்கியத்தில்‌ மக்களைப்‌ பற்றியவரலாறும்‌ தவிர்க்கமுடியாத அளவுக்குஇடம்பெற்று விடுவதைக்‌ காண்கிறோம்‌.

அவற்றைத்துருவித்‌ தொகுப்பதன்‌ மூலமே சங்ககாலச்‌ சமுதாயத்தில்‌ குறிப்பாக மருதநிலத்தில்‌ வாழ்ந்த மக்களின்‌ வாழ்வியல்‌ தன்மையைஓரளவுக்கேனும்‌ வெளிக்கொணர முடியும்‌. அதை நோக்கிப்பயணிக்கவே இவ்வாய்வு.

உணவு தேடும்‌ வாழ்க்கையிலிருந்து மனித சமூகம்‌ உணவுஉற்பத்திக்கு மாறியது இந்த நிலப்பகுதியில்தான்‌. குறிஞ்சி, முல்லைநிலங்களில்‌ வாழ்ந்த மக்கள்‌ தமக்கு வேண்டிய உணவுகளைத்‌ தாமேஉற்பத்தி செய்து கொண்டதில்லை. வேட்டைச்‌ சமூகத்தில் விலங்குகளை வேட்டையாடி அவற்றின்‌ மாமிசங்களை எல்லோருமாக பங்கிட்டு உண்டு வந்ததை வரலாறு காட்டுகிறது, சமூகத்தில் அனைவரும்‌ சேர்ந்தேதான்‌ தேடவேண்டும்‌. சேர்ந்தேதான்‌ உண்ண வேண்டும்‌. ஒன்றும்‌ கிடைக்கவில்லையெனில்‌ சேர்ந்தேதான்‌ பட்டினிகிடக்க வேண்டும்‌. சமூகத்தில்‌ தனிப்பட்ட யாருக்கும்‌ எந்த உரிமையும்‌ கிடையாது. ஆனால்‌ மருதநிலத்தில்‌ மண்வளமும்‌, நீர்வளமும்‌ மிகுதியாக இருந்தமையால்‌ இப்பகுதி வேளாண்‌ உற்பத்திக்குஏற்ற வகையில்‌ அமைந்தது.

மருத நிலத்தில்‌ வாழ்ந்த மக்கள்‌ ஆறுகளில்‌ உண்டான வெள்ள நீர்பெருக்கினையும்‌, மழைக்காலங்களில்‌ கிடைக்கும்‌ நீர்ப் பெருக்கினையும்‌ கண்டு முதலில்‌ துன்புற்றனர்‌. பின்னர்‌ ஆறுகளில் பெருகிவந்த வெள்ளநீரைக்‌ கட்டுப்படுத்தியும்‌, பள்ளமான இடங்களில் ஏரி, குளங்களை அமைத்து நீரைப்‌ பாதுகாத்தும்‌, கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரைப்‌ பயன்படுத்தியும்‌ உழவுத்‌ தொழிலை மேற்கொண்டு தங்கள்‌ முயற்சியினாலும்‌, உழைப்பினாலும்‌ உயர்வு பெற்றனர்‌. நீர்வளம்‌ நிறைந்த இடங்கள்‌ சதுப்பு நிலங்களாகவும்‌,காடுகளாகவும்‌ இருந்தன. இவற்றை நன்னிலங்களாக மாற்றுவதற்குக் காடுகளை அழித்து நாடாக்கியும்‌, குளம்அமைத்து வளம்‌ பெருக்கியும் மருதநில நாகரிகத்தை வளர்த்தனர்‌.

காடும்‌ மேடுமாய்‌, செடியும்‌ புதருமாய்‌ இருந்த பகுதியை வயலாக்க இங்கு வாழ்ந்த மக்கள்‌ என்ன பாடுபட்டிருப்பார்கள்‌; எத்தகு உழைப்பைச்‌ செலுத்தியிருப்பார்கள்‌ என்பதை நம்மால்‌ யூகிக்க முடிகிறது. பயன்படுத்திய நிலத்தை உருவாக்கிய இவர்கள்தானே பண்பாட்டுக்கு உரியவர்களாகவும்‌ இருந்திருப்பார்கள்‌?

சங்கப்‌ புலவர்கள்‌ தரும்‌ வருணனையினின்றுமருதநிலத்தை ஆறுஅடிப்படைப்‌ பகுதிகளாகப்‌ பிரித்துக்‌ காட்டுவர்‌.

ஊர்:-மக்கள்‌ வாழுமிடம்‌ ஊர்‌ எனப்படும்‌. பல சிற்றூர்களும்‌, சிலபேரூர்களும்‌ இருந்தன என்பதை அறிகிறோம்‌. மருதப்‌ பாடல்களில். தலைவன்‌ “ஊரன்‌” என்றே சுட்டப்படுகின்றான்‌. ஊரை உடையவன்‌, ஊருக்குக்‌ கிழவன்‌ என்று பொருள்படும்‌ அச்சொல்‌ பிற்காலத்தில்‌ வழக்கிற்கு வந்த “உடையான்‌” என்னும்‌ சொல்லை ஒத்ததாகும் என்பார்‌ அறிஞர்‌ ௧. கைலாசபதி.

நகரம்:- உலகம் முழுவதுமே ஆற்றோரங்களில்‌ நகரங்கள்‌ உருவாகி நாகரிங்கள் வளர்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள்‌ கருதுகின்றனர்‌. மன்னர்களும்‌, செல்வந்தர்களும்‌ வாழ்ந்த இத்தகைய நகரங்கள்‌ பாக்கம்‌ எனவும்‌ அழைக்கப்பட்டன. இங்கு தேரோடும்‌ வீதிகளும்‌, மாடமாளிகைகளும்‌, ஆறு போன்ற அகன்ற பெரியத்‌ தெருக்களும்‌ அமைந்திருந்தன. காவலும்‌ மிக்கிருக்கும்‌ எனவே இதனை கடிநகர்‌ என்றனர்‌.

சேரி:-பலர்‌ சேர்ந்து வாழும்‌ இடமே சேரி எனப்படும்‌. பார்ப்பனச்சேரி, வாணிகச்‌ சேரி, ஊருக்குப்‌ புறத்தே அமைந்த புறச்சேரி பற்றியெல்லாம்‌ அறிகிறோம்‌. நாளடைவில்‌ சமூகத்தில்‌ ஒதுக்கப்பட்டவர்கள் குடியிருக்கும்‌ இடமே சேரி எனலாயிற்று ஆனால் சங்ககால நிலையில் வேறாக இருந்ததை கவனத்தில் கொளல் சிறப்பு.சோழர்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்து எழுதிய நொருபு கரோசி அவர்களின் நூலில் சுட்டப்பட்டுள்ள பகுதி வெகு மாறுபட்ட நிலையில் இன்று பேசப்படும் நிலையிலிருந்து விளக்கி இருப்பார்.

மருதப்பாடல்களில்‌ பரத்தை குடியிருக்கும்‌ இடம்‌ சேரி எனவும்‌, தலைவன்‌ குடியிருக்கும்‌ இடம்‌ ஊர்‌ எனவும்‌ குறிக்கப்படுவதை நோக்கினால்‌ இவ்விருவருக்குமான சமூக ஏற்றத்‌ தாழ்வுபுலப்படும்‌.ஆக காலவோட்டத்தில் இதனையும் புரிந்துக் கொள்வோம்.

மக்கள்‌ பிரிவினர் அன்றே சமூக ஏற்றத்தாழ்வுகள்‌ வந்துவிட்டன. அதையொட்டி மக்களும்‌ பலபிரிவினராக வாழத்‌ தலைப்பட்டனர்‌. தமிழ்‌ இலக்கணம் யாத்த தொல்காப்பியரும்‌ சமூக ஏற்றத்தாழ்வுகள்‌ குறித்துப்‌ பல சூத்திரங்களில்‌ கூறுகிறார்‌. நால்வகை நிலங்களைப்‌ பற்றிப்பேசுமிடத்து திணைப்‌ பெயர்களைக்‌ குலப்பெயர்கள்‌ என்றும்‌ தலை மக்கள்‌ பெயர்கள்‌ என்றும்‌ பாகுபாடு செய்கின்றார்‌.

இருவகைப்‌ பிரிவும்‌ நிலைபெறத்‌ தோன்றலும் உரியது ஆகும்‌ என்மனார்‌ புலவர்‌ (தொல்‌. 959)

அடியோர்‌ பாங்கிறும்‌ வினைவலர்‌ பாங்கிறும்கழிவரை இல புறத்து என்மனார்‌ புலவர்‌ (தொல்‌. 97)

போன்ற நூற்பாக்கள்‌ மக்களை உயர்ந்தோர்‌, தாழ்ந்தோர்‌ என்று வகைப்படுத்துவதைக்‌ காண்கிறோம்‌. பின்வந்த உரையாசிரியர்கள்‌ மருத நிலத்தில்‌ வழங்கும்‌ குலப் பெயர்களாகக்‌ களமர்‌, உழவர்‌, கடையர்‌, கடைசியர்‌, உழத்தியர்‌ என்பன வற்றைக்‌ கூறிவிட்டு, அந்நிலத்து உரிப்பொருளுக்குரிய தலைமக்கள்பெயர்களாக மகிழ்நன்‌, மனையோன்‌, ஊரன்‌ என்பவற்றைக்‌ காட்டுவர்‌.

குலமக்கள்:-தொல்காப்பியராலும்‌, மருதப்‌ பாடல்களைப்‌ பாடிய புலவர்களாலும்‌ காட்டப்பெறும்‌ இக்குலமக்கள்‌ உரிப்பொருளுக்கு உரியவர்களாக இல்லாவிட்டாலும் ‌ சமுதாயத்தில்‌ இவர்களே பெரும்பான்மையோர்‌.

தலைமக்களைச்‌ சிறப்பித்துப்‌ பாடிய பாடல்களில்‌ தவிர்க்கவியலாது இவர்களும்‌ இடம்பெற்றார்களே தவிர, இவர்களின்‌ வாழ்க்கை பாடப்படவில்லை. இவர்களின்‌ வாழ்க்கையைப்‌ பாடுவதும்‌ புலவர்களின் நோக்கமில்லை. ஐந்திணைக்‌ காதல்‌ கவிதைகளில்‌ அடிமைகள்‌, ஏவலர்‌, பணியாட்களைக்‌ கதை மாந்தராகச்‌ சித்திரிக்கக்‌ கூடாது என்ற தொல்காப்பிய விதி அன்றையப்‌ புலவர்களால்‌ அப்படியே பின்பற்றப்பட்டது. ஆனால்‌ இவர்களே சமுதாயத்தின்‌ உற்பத்தி சக்திகளாய்த்‌ திகழ்ந்த காரணத்தால்‌ சமூக வளர்ச்சியிலும்‌, மாற்றத்திலும்‌ இவர்களின்‌ பங்களிப்பு முக்கியமானது என்பதை மறந்துவிடுவதற்கில்லை.

உயர்குடியினர்‌, சமூகத்தின்‌ : மேல்வர்க்கத்தினர்‌ ஆகியோரைத்‌ தான்‌ சங்கப்‌ புலவர்களும்‌, தொல்காப்பியமும்‌ - தலைமை மாந்தராக இலக்கியத்தில்‌ படைத்தனர்‌ என்னும்‌ கைலாசபதியின்‌ கருத்து இங்கே எண்ணத்தக்கது. காப்பியப்‌ புலவன்‌ இளங்கோவும்‌ இதற்கு விதிவிலக்கல்ல.

முந்தைய வாழ்க்கை ‌ வேட்டையாடியும்‌, கால்நடைகளை வளர்த்தும்‌ நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார்கள்.இப்பொழுது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலையாகத்‌ தங்கியிருக்க அவர்களுக்கு வாய்ப்பானது, இயற்கையைத்‌ தமது ஆற்றலுடன்‌ பயன்படுத்திக்‌ கொள்ள தெரிந்த மருதநில மக்கள்‌ காட்டைத் திருத்தி கழனியாக்கினர்‌. ஆற்றை திருப்பி நீரைத்‌ தேக்கினர்‌. வேளாண்மைசிறு சிறு குழுக்களாக வாழத்‌ தலைப்பட்டார்களே தவிர குடும்ப அமைப்பு ஒரு நிறுவனமாக உருக்கொள்ளவில்லை. உணவுதேடும்‌ வாழ்க்கையில் ஈடுபட்டனர்‌. தங்களின்‌ விளைநிலங்களுக்கு அருகிலேயே சற்று மேடான பகுதிகளில்‌ ஊர்களை உருவாக்கிக்கொண்டு ஓரிடத்தில் வாழத்‌ தலைப்பட்டனர் பின்னர் குடும்பம்‌ குடும்பமாக வாழ வழிவகுத்து‌. உணவைத்‌ தேடி வாழ்ந்த முந்தைய மக்களைப்‌ போலல்லாமல்‌ இவர்கள்‌ உணவை உற்பத்தி செய்தனர்‌. உணவுஉற்பத்தி என்பது ஓரிருநாளில்‌ நடந்து முடிவதல்ல. அதற்கு பல நாட்கள்‌, பல மாதங்கள்‌ காத்திருக்க வேண்டும்‌. அதனால்‌ உற்பத்தியில்‌ ஈடுபடும்‌ அம்மக்கள்‌ இடம்பெயர்வது என்பது சாத்தியமற்றது. எனவேதான்‌ ஒரேஇடத்தில்‌ நிலையாகத்‌ தங்க தலைப்பட்டனர்‌. தமிழர்கள்‌ என்று உழவுத்‌ தொழிலைச்‌ செய்யக்‌ கற்றுக்கொண்டார்களோ அன்றே. பாசன முறையையும்‌ பயன்படுத்தத்‌ தொடங்கினர்‌. வேளாண்‌ தொழிலுக்கு இன்றியமையாது தேவைப்படும்‌ நீரை பாழாக்காமல்‌ போற்றிப்‌ பாதுகாக்கத்‌ தலைப்பட்டனர்‌. ஆறுகளில்‌ பெருக்கெடுத்து ஓடிவரும்‌ நீரைத்‌ தடுத்து நிறுத்த அணைகளைக்‌ கட்டி ஏரிகளையும்‌ குளங்களையும்‌ அமைத்து நீரை அவற்றுக்கு கொண்டு சென்றனர்‌. பின்னர்‌ கால்வாய்‌ வழியாக நீரினை வயல்களுக்குக்‌ கொண்டு சென்று பாய்ச்சும்‌ பணியினை செய்தனர்‌. இவ்வாறு நீர்‌ மேலாண்மையில்‌ இம்மக்கள்‌ சிறந்திருந்த காரணத்தால்‌ விளைச்சல்‌ அதிகமானது. தங்களின்‌ தேவைக்குமேல்‌ உற்பத்தி அதிகரிக்கும்போது அதனால்‌ ஏற்பட்ட உபரியைச்‌ சேர்த்து வைத்தனர்‌. இப்படிச்‌ சேர்ந்த உபரி நாளடைவில்‌ அவ்வக் குடும்பத்தின்‌ சொத்தாயிற்று. வலிமையும்‌, திறனும்‌ உள்ள ஒரு சிலர்‌ தங்களின்‌ விளைநிலங்களை விரிவுபடுத்தினர்‌. அவசியமான உணவுப்‌ பயிரிட்டனர்‌. உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க அபரிதமான உபரி சேர்ந்தது. உபரி சேரச்‌ சேர மற்றவர்களை விட அவர்கள்‌ மேல்நிலைக்கு வந்தனர்‌. மேல்நிலைக்கு வந்தவர்கள்‌ அதிக நிலங்களை அபகரித்துக்‌ கொண்டனர்‌. இவர்கள்‌ “நிலக்கிழார்‌” என அழைக்கப்பட்டனர்‌. தங்களின்‌ நிலங்களைப்‌ பாதுகாக்க அடியாள்‌ படைகளை அமைத்துக்‌ கொண்டனர்‌. படைகளுக்கு போர்ப்‌ பயிற்சி அளிக்கப்பட்டது. படைகளின்‌ வலிமையால்‌ நிலக்கிழார்களாக இருந்த பலர்‌ சிறுசிறு பிரதேசங்களைத்‌ தமது கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டு வந்தனர்‌.‘சிறுசிற பிரதேசங்களில்‌ குறுநில மன்னர்கள்‌ தோன்றினர்‌. பெரிய ஆறுகளின்‌ நீரை முழுவதும்‌ பரந்தளவு நிலத்தில்‌ பாய்ச்சி உழவுத்‌ தொழில்‌ செய்யவும்‌, பலபகுதியினரையும்‌ ஒருங்கு உழவுத்‌ தொழிலிலே ஈடுபடுத்தவும்‌ மத்தியப்படுத்தப்பட்ட ஆட்சி தேவையாயிற்று.‘பரந்தநிலப்பரப்பின்’தலைவர்களாய்‌ இருந்தவர்கள்‌ முடியுடை மன்னர்களானார்கள்‌. எந்தப்‌ பகுதி விளைச்சல்‌ அதிகமோ தானியம்‌ மிஞ்சியதோ அப்பகுதி வலிமையுடையதாயிற்று. பக்கத்திலுள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைப்‌ போரின்‌ மூலம்‌ தன்ஆட்சிக்குக்கீழ்‌ கொணர்ந்தது. இவ்வாறு நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்கள்‌ சேர, சோழ, பாண்டியரது ஆட்சிக்கு உட்பட்டனர்‌.தனித்தனியே வாழ்ந்த மலை நாட்டினரும்‌, காட்டுபகுதியினரும்‌ பயிர்செய்து உற்பத்திச்‌ சக்திகளாய்‌ வளர்ந்துவிட்ட மருதநிலத்தவரது ஆதிக்கத்திற்கு உட்பட்டனர்‌ என்பார்‌ நா. வானமாமலை. இந்த சமூகத்தில்‌ தமிழ்‌ மக்கள்‌ உற்பத்திச்‌ சக்திகளுக்கும்‌, தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இருபிரிவாகப்‌ பிரிந்தனர்‌. ஒன்று “நிலக்கிழார்‌” அல்லது நிலவுடைமையாளர்‌. மற்றொரு பிரிவினர்‌ அவற்றில்‌ உழைத்துப்‌ பிழைக்கும்‌ உழவர்கள்‌. இச்சமூகத்தில்‌ வர்க்கப்‌ பிரிவினையும்‌, முரண்பாடும்‌ தோன்றிவிட்டன.

இதுகாறும்‌ பார்த்தவற்றால்‌ வேட்டை, கால்நடை ஆகிய சமூக அமைப்புகளைவிட வேளாண்‌ சமூகஅமைப்பு அடிப்படையில்‌ வேறுபட்டது என்பதையும்‌, முந்தைய சமூகங்களில்‌ காணப்படாத அளவிற்கு இச்சமூக அமைப்பில்‌ தனிஉடைமையும்‌, வர்க்கவேறுபாடும்‌ தோன்றிவிட்டன என்பதையும்‌ வர்க்கங்களுக்கிடையிலான உழைப்பும்‌, ஓய்வும்‌ வேறுபட்டன என்பதையும்‌ அறிகிறோம்‌.

குடும்பமும் ‌உடைமையும்‌ பாலுணர்வும்‌, அதனால்‌ ஏற்படுகின்ற ஆண்‌ பெண்‌ உறவும்‌ அனைத்து உயிர்களுக்கும்‌ பொதுவானவை. மனிதன்‌ மட்டுமே அவற்றை நெறிப்படுத்தி வாழக்‌ கற்றுக்‌ கொண்டான்‌. சமூகத்தின்‌ பல்வேறு பிரிவுகளுக்கும்‌ குடும்பம்‌ அடிப்படையானது. “இரத்த உறவுமுறைகளும்‌ பிற உறவுமுறைகளும்‌” என்ற நூலை எழுதிய மார்கன்‌ என்ற மானிடவியலறிஞர்‌ குடும்பம்‌ பற்றி விளக்கும்போது “குடும்பம் என்பது இயக்கமுள்ள சித்தாந்தத்தையே குறிக்கிறது. அது என்றைக்கும்‌ இயங்காதிருப்பதில்லை. சமுதாயம்‌ கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு முன்னேற முன்னேற அதுவும்‌ கீழான வடிவத்திலிருந்து மேலான வடிவத்திற்கு முன்னேறிச்‌ செல்கிறது” என்பதுதான் இயங்கியலாகும்‌. திருமண அடிப்படையில்‌ உருவாகும்‌ ஓர்‌ உயிரினக்‌ குழுவே குடும்பம்‌ ஆகும்‌. இக்குடும்பம்‌ மக்கட்‌ பேற்றின்மூலம்‌ விரிவடைகிறது. உறவுமுறையால்‌ தொடர்பைத்‌ தெளிவுபடுத்துகிறது. பண்பாட்டு அமைப்பைக்‌ காத்துவருகிறது. உறுப்பினர்களின்‌ தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்குரிய வழி வகைகளை வகுக்கிறது. மணமான கணவன்‌, மனைவி இருவரும்‌ தம்‌ மக்களுடன்‌ சேர்ந்து வாழ்வதே குடும்பம்‌ எனப்‌ பொதுவாகக்‌ கொள்ளப்பெறுகிறது. தமிழிலக்கியத்தில்‌ “குடும்பம்‌” என்ற சொல்லை முதன்முதலாகக்‌ கையாள்கிறவர்‌ திருவள்ளுவரே. (சங்க இலக்கியத்திலோ, தொல்காப்பியத்திலோ குடும்பம்‌ என்ற சொல்‌ இடம்பெறவில்லை. மனை, இல்‌, இல்லம்‌, குடி ஆகிய சொற்கள்‌ குடும்பம்‌ என்ற பொருள்‌ தருவதாகக்‌ கொள்ள முடிகிறது. குடும்ப இயலையே கற்பியல்‌ என்றார்‌ தொல்காப்பியர்‌ எனக்‌ கருதலாம்‌; குடும்பத்தின்‌ தோற்றம்‌ மனித குல வளர்ச்சியை மூன்று படி நிலைகளாக வகுத்த எங்கெல்ஸ்‌, காட்டுமிராண்டி நிலையில்‌ குழு மணமும்‌, அநாகரிக நிலையில்‌ இணைமணமும்‌, நாகரிக நிலையில்‌ ஒருதாரமணமும்‌ இடம்பெற்றிருந்ததாகக்‌ குறிப்பிடுகிறார்‌. குலக்குழு வாழ்க்கையின்‌ படிநிலை வளர்ச்சியின்‌ இறுதிநிலையே ஒருதார மணமாகும்‌. இவ்வொருதார மணமே குடும்பத்‌ தோற்றத்தின்‌ அடிப்படையாய்‌ அமைந்தது எனலாம்‌.

தாய்வழிச்‌ சமூகத்தில்‌ குடும்பம்‌. தொடக்கக்‌ காலத்தில்‌ உலகம்‌ முழுவதுமே தாய்வழிச்‌ சமூக அமைப்பே நிலவி வந்ததாகச்‌ சமூகவியல்‌ அறிஞர்களும்‌, வரலாற்றாய்வாளர்களும்‌ அறுதியிட்டுரைத்துள்ளனர்‌.

ஒரு காலத்தில்‌ பெண்‌ பெற்றிருந்த தலைமைப்‌ பண்புதான்‌ என்பதையும்‌ அறிகிறோம்‌. தந்தைவழிச்‌ சமூகத்தில்‌ குடும்பம்‌ வேட்டையாடித்‌ திரிந்த மனிதகுலம்‌ மெல்லமெல்ல கால்நடைகளை வளர்க்கப்‌ பழகியது. முதல்‌ நாகரிக அடையாளங்கள்‌ தோன்றத்‌ தொடங்கின, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‌ கால்நடை செல்வமாக குழுவின்‌ பொதுச்‌ சொத்தாக விளங்கியது. பின்னர்‌ தனியொரு ஆண்மகனின்‌ தனிச்சொத்தாக மாறியது. சமுதாயத்தில்‌ வேலைப்‌ பாகுபாடுகள்‌ ஏற்பட்டபோது முன்னர்‌ குடும்பத்தின்‌ தலைவியாக இருந்த நிலையைப்‌ பெண்‌ இழந்தாள்‌. தொல்காப்பியர்‌ காட்டும்‌ குடும்பம்‌ தந்தை வழி சார்ந்தது. ஆண்மகனே குடும்பத்‌ தலைவனாக இருந்து ஆட்சி புரிகிறான்‌. “பெருமையும்‌ உரனும்‌ ஆடூஉ மேன” (தொல்‌. 1041) எனக்‌ குறிப்பதற்கேற்ப ஆண்‌ தலைமைச்‌ சிறப்பு பெற்றிருந்தான்‌. மாறாகப்‌ பெண்ணோ.அச்சமும்‌, நாணமும்‌ நிரம்பியவளாகக்‌ குறிக்கப்‌ பெறுகிறாள்‌. அச்சமும்‌ நாணும்‌ மடனும்‌ முந்தறுதல்‌ நிச்சமூம்‌ பெண்பாற்கு உரிய என்ப (தொல்‌. 1042) பெண்‌ குழந்தை பிறப்பது மகிழ்ச்சியற்ற நிகழ்ச்சியாகக்‌ கூறப்படாவிடினும்‌ மருதத்‌ திணைப்‌ பாடல்களில்‌ ஆண்குழந்தையின்‌ பிறப்பு சிறப்புக்குரிய நிகழ்ச்சியாகவே பேசப்படுகின்றது.

ஆணின்‌ கையில்‌ கணிசமான அளவுக்குச்‌ செல்வம்‌ குவிந்ததிலிருந்துதான்‌, இந்த செல்வத்தைப்‌ பிற குழந்தைகளுக்கு‌ அல்லாமல்‌ தன்‌ சொந்தக்‌ குழந்தைகளுக்கு விட்டுச்‌ செல்ல வேண்டுமென்ற விருப்பத்திலிருந்துதான்‌ ஒருதாரமணம்‌ தோன்றியது. இந்த நோக்கத்திற்குப்‌ பெண்‌ ஒருதார மணத்திலிருப்பது மிகஅவசியம்‌. ஆனால்‌ ஆணுக்கு அப்படி அவசியமில்லை. எனவே பெண்ணுக்குரிய இந்த ஒருதார மணம்‌ ஆண்‌ பழகும்‌ வெளிப்படையான அல்லது மறைவான பலதார மணத்திற்குத்‌ தடையாயிருக்கவில்லை என்ற எங்கெல்ஸின்‌ கருத்து தமிழ்ச்‌ சமுதாயத்திற்கும்‌ பொருத்தமாயிருத்தலைக்‌ காண்கிறோம்‌. பண்டைத்‌ தமிழ்ச்‌ சமுதாயத்தில்‌ பரத்தை ஒழுக்கம்‌ ஒருவகைக்‌ குடும்ப ஒழுக்கம்‌ போலவே பரவிக்கிடந்தது. இடையறாஇன்பப்புணர்வுக்கென்று கணவன்மார்கள்‌ “வைப்பு” எடுத்துக்கொள்ளும்‌ பழக்கம்‌ சமுதாய மரபுபோல்‌ ஊறி நின்றது என்னும்‌ இலக்கியங்களில் காணும்‌ கருத்து ஒப்பநோக்கத்தக்கது.

“தாயுரிமை தூக்கியயெறியப்‌ பெற்றது பெண்ணினம்‌ உலக வரலாற்று ரீதியில்‌ பெற்ற முதல்‌ தோல்வியாகும்‌. வீட்டிலேயும்‌ ஆட்சி சுதந்திரத்தை ஆண்‌ கைப்பற்றினான்‌. பெண்‌ இழிநிலைக்குத்‌ தள்ளப்பட்டாள்‌. ஆணின்‌ காமஇச்சைக்கு அடிமையானாள்‌. கேவலம்‌-குழந்தைகளைப்‌ பெறும்‌ சாதனமாக ஆகிவிட்டாள்‌” என்ற "எங்கெல்ஸின்‌ கூற்றை அப்படியே நமது பண்டைச்‌ சமுதாயத்திற்கும்‌ பொருந்தியுள்ளமையைக்‌ காணலாம்‌.இவ்வமைப்பில்‌ பெண்ணுக்குக்‌ கற்பு வரையறுக்கப்பட்டதுபோல. ஆணுக்கு வரையறுக்கப்படவில்லை என்று எங்கெல்ஸ்‌ கூறுகிறார்‌. ஒடிஸி, இலியாட்‌ ஆகிய கிரேக்கக்‌ காப்பியங்களிலிருந்து பொருத்தமான சான்றுகளையும்‌ எடுத்துக்‌ - காட்டுகிறார்‌.ஒருதாரமணமுறையின்‌ வெளிப்பாடே பரத்தை தோற்றத்திற்கும்‌, பெருக்கத்திற்கும்‌ காரணம்‌ என்று எங்கெல்ஸ்‌ விளக்குகிறார்‌.தமிழ்‌ இலக்கியங்களிலும்‌ பெண்ணுக்கு வற்புறுத்தப்பட்ட அளவுக்கு ஆணுக்கு கற்பு வற்புறுத்தப்படவில்லை எனலாம்‌.

உடைமை - விளக்கம்‌ ஒருவருக்கு உரிமையுள்ள பணமதிப்புடைய பொருளை உடைமை எனப்‌ பொதுவாகக்‌ குறிப்பிடலாம்‌. இதனைத்‌ தமிழில்‌ “சொத்து” எனவும்‌ குறிப்பிடுகின்றனர்‌. செல்வர்கள்‌ முரசங்களையும்‌, குதிரைகளையும்‌ உடையவர்களாய்‌ இருந்தனர்‌” (அகம்‌. 156) எனவும்‌ “நயனும்‌, நண்பும்‌, நாணும்‌ நன்குடைமையும்‌” (நற்‌. 160.] எனவும்‌ வரும்‌ செய்திகள்‌ இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே உடைமை என்பது வெறும்‌ பொருள் அல்ல. மனிதனுக்கும்‌ பொருளுக்கும்‌ இடையேயுள்ள உறவு மட்டுமல்ல. பொருளுக்கும்‌, மனிதனுக்கும்‌ இடையேயுள்ள உறவும்‌ இவை எல்லாவற்றையும்‌ விட முக்கியமாக உற்பத்தி சாதனங்களுடன்‌ மனிதர்கள்‌ கொண்டுள்ள உறவின்‌ மூலம்‌ சக மனிதர்களுக்கிடையே நிறுவப்படுகின்ற - நிலவுகின்ற பொருளாதார உறவுகளுமே சொத்துடைமை ஆயிற்று எனக்‌ கொள்ளலாம்‌. உடைமைக்கும்‌ குடும்பத்திற்கும்‌ உள்ளதொடர்பு மானிடவியலார்‌ கொள்கைப்படி சமூகம்‌ காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை இவற்றைக்‌ கடந்து நாகரிக நிலைக்கு வந்துள்ளது. இயற்கைப்‌ பொருட்களைப்‌ பயன்படுத்தி வந்த காட்டுமிராண்டி நிலையில்‌ வில்‌, அம்பு முதலிய கருவிகளே உடைமைகளாக இருந்தன. கால்நடை வளர்ப்பு, நிலச்‌ சாகுபடி பற்றிய அறிவு பெறப்பட்ட நிலையில்‌ மிருகங்களும்‌ நிலமும்‌ குடும்பச்‌ சொத்தாக இடம்பெற்றன. கைத்தொழிலும்‌ கற்றுக்‌ கொண்டு கருவிகள்‌ மூலம்‌ உற்பத்தியைப்‌ பெருக்கிய நாகரிக நிலையில்‌தனியுடைமை வளர்ந்து வரும்நிலை ஏற்படுகிறது. தொல்காப்பியர்‌ காலத்தில்‌ ஒருதாரமணமுறை வழக்கில் விளங்கின. இக்குடும்ப உறுப்பினர்கள்‌ தங்களுக்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடம்‌ இவற்றைத்‌ தங்கள்‌ உழைப்பின்‌ மூலமாகப்‌ படைத்துக்‌ கொண்டனர்‌ இவ்வாறு உழைப்பின்‌ மூலம்‌ பெற்றவை உடைமைகளாக அமைந்தன. சமூகத்துக்குக்‌ குடும்பம்‌ எவ்வாறு அடிப்படை நிறுவனமாக அமைகிறதோ அவ்வாறே பொருளியலுக்கு உடைமை அடிப்படையாக அமைகிறது. இவை இரண்டுமே அடிப்படைத்‌ தொடர்பு கொண்டவை. தனியுடைமையும்‌ நிலவுடைமையும்‌ மானிட சமுதாயத்தின்‌ படிநிலை வளர்ச்சியை

1. புராதன பொதுவுடைமைச்‌ சமுதாயம்‌,

2. ஆண்டான்‌ - அடிமைச்‌ சமுதாயம்‌,

3. நிலவுடைமைச்‌ சமுதாயம்

4. முதாலாளித்துவ சமூகம்

5. பொதுவுடமை சமுகம்‌ எனப்‌ பகுத்துரைப்பர் மார்க்சிய அறிஞர்கள்.

ஆக இந்தியாவில்ஜாதியின்தோற்றம்

மேலே சங்க இலக்கியங்களை விளக்கியது இதற்குதான் எளிதாக புரிந்துக் கொள்ளதான் .

வேளாண்மை சமூகத்தில் பிரதான உற்பத்தி சாதனமாக நிலம் விளங்கியது. வேளாண்மை சார்ந்த உற்பத்தியில் ஈடுபடும் பல்வேறு விதமான போக்குகள் தொடங்கியது. தொழில் வகுப்புகளும், மூளை உழைப்பு, உடல் உழைப்பு என உழைப்புத் திறன் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருந்தாலும் இரண்டும் அதற்கான தனித்தனியான திறனை கோருகின்றன. நில உடமை சமூக அமைப்பின் தொடக்கத்தில் வேளாண்மை, வேளாண்மை சார்பு கைவினை ஆகியவை மட்டுமின்றி தொண்டூழியத் தொழிலும் இருந்தன. ஒவ்வொரு தொழில் பிரிவினையும் அவர்கள் சார்ந்த தொழில்நுட்ப அறிவு அந்தக் குறிப்பிட்ட தொழில் பிரிவினருக்கே உரியதாக இருந்தது. மேலும் நிலஉடமை உற்பத்தி முறையில் ஒவ்வொரு தொழிலும் முழுமையான ஒரு சுய உள்ளாற்றல்களையும் இயங்குதல்களையும் கொண்டிருந்தது. அதே நேரத்தில் பொதுவான அமைப்புக்குள் இயங்கிக் கொண்டும் இருந்தது. ஒவ்வொரு தொழிலும் தன் சுயேச்சை தன்மையை பேணிக் கொண்டிருந்ததோடு நிலஉடமை பொருளாதாரத்தில் ஒரு கண்ணியாகவும் இருந்தது.

பொது சமூகத்தில் அங்கமாக உள்ளது, தொழில் வகுப்புகள் தொழில் ரீதியாக சுயேச்சையான தங்களுக்கான தனித்தனி தொழில் வகுப்பின் அடிப்படையில் தொழில் ரீதியாக ஒன்று கலக்கவே இயலாது. ஆனால் ஒரு தொழில் வகுப்பின் உற்பத்தி திறனில் உருவான முழு பொருளும் இன்னொரு தொழில் வகுப்பு நுகர்வு பொருளாக அல்லது அதன் உற்பத்திக்கு ஆதாரப்பொருளாக அமைய இயலும். கலப்பை செய்ய தச்சர் ஈடுபடும் போது வேளாளர் அதில் ஒன்று செய்ய முடியாது ஆனால் தச்சரின் கலப்பையை வேளாளர் வேளாண்மை விளைபொருளுக்கு பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் வேளாளர் விளைச்சலை தச்சரும் பயன்படுத்த முடியும்.

தொழில்முறையில் தச்சரின் ஏர் கலப்பையை ஒரு குயவர் நேரடியாக நுகரமுடியாது ஆனால் தச்சரின்கலப்பை பயன்படுத்தி வேளாண்மையால் விளைவிக்கப்பட்ட விளைப் பொருளை குயவரும் நுகரமுடியும்.

நில உடமை சமூகத்தில் வேளாண்மை வகைப்பட்ட கிராமங்களில் வேளாளர்கள் உடல் உழைப்பாளர்களாகவும் நிர்வாகிப்பவராகவும் இருந்தனர்.

இந்த கிராம உற்பத்தி முறையில் மூளை உழைப்பாளர்களும் உடல் உழைப்பாளர்களும் ஆகிய இரு பிரிவினர் கொண்டதாக இருந்தது.கிராம நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் ஒழுங்கமைக்க புரோகிதர்களாக இருந்தனர். அதேபோல தொழில் பிரிவினை அடிப்படையில் கைவினைஞர்களும் சேவை பிரிவினரும் இதே நிர்வாக அமைப்பில் கட்டுண்டு கிடக்க வேண்டிய தேவை இருந்தது. அரசியல் அதிகாரம் கையில் இருந்த புரோகிதர்களும், வேளாளர்களும் கைவினைஞர்களின் உழைப்பையும் சேவை பிரிவினர் உழைப்பையும் ஒரு வகையில் குத்தகை என்ற பெயரில் அபகரிக்க தொடங்கினர். புரோகிதரும் வேளாளரும் தமக்கான உரிமையை பாதுகாப்பது போலவே, தொழில் பிரிவினர் தமக்குரிய தொழில் பிரிவின் ரகசியத்தையும் தனக்கான தேவையாக ரகசியமாக காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நிலஉரிமை கொண்ட பிரிவினரின் பெண்களை உற்பத்தியில் இருந்து ஒதுக்கப்பட்டனர். சேவை தொழில் செய்பவரும் கைத்தொழில் செய்பவரும் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தினர். ஆக தங்களின் தொழிலை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தொழில் ரீதியான மேலாண்மையை தங்களுக்குள் நிர்வகித்துக் கொள்வதற்காகவும் இக்குழுவுக்குள்ளே தங்களுக்கான தொழில் வகுப்புகள் அகமண முறையைக் கட்டிக் காத்துக் கொண்டன.

நிலஉரிமை வகுப்புகளான புரோகிதர்களுக்கும், வேளாளர்களுக்கும் தங்களுக்கான சந்ததிகளுக்கு காப்புரிமைக்காக அகமணமுறையை தேர்ந்தெடுத்தனர். கைவினை பிரிவினருக்கும் சேவைப் பிரிவினருக்கும் இதுவே தேவைப்பட்டது.

இங்கே நாம் புரிந்து கொள்வது புரோகிதப் பிரிவினருக்கு அகமண முறை மட்டுமல்லாது இதற்கும் மேலாக உற்பத்திச்சான உரிமை பாதுகாப்பு, தொழில்நுட்ப ரகசிய பாதுகாப்பு, கருத்துருவ மேலாதிக்கம் போன்றவையும் தேவைப்பட்டது. இவ்வாறாக தொழில்வழி வகுப்புகளுக்கு அகமணமுறை அமைய வேண்டிய தேவை ஏற்பட்டது,இதுவே அன்று சாத்தியமாகியது. இவ்வாறு ஏற்பட்ட தொழிற்பிரிவினையின் தொடர்ச்சிதான் சாதிகளாகவும் வர்க்கங்களும் தோன்றின.

கிராம சமூகத்தில் புரோகிதர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலதானங்கள் பொருள்தானங்கள் ஆதாரங்கள் மனதில் கொண்டால் புரோகிதர்கள் (பார்ப்பனர்கள்) அந்தசமூகத்தில் உச்சத்தில் இருந்தனர். கருத்துப் பரப்புவதன் மூலமாக உள்ள அரசுஅதிகாரத்தை கட்டிகாப்பதற்கு சாத்திர தத்துவசேவை செய்வதிலும் ஈடுபட்டதால் மேம்பட்டு விளங்கினர். எல்லாவித வசதிவாய்ப்புகளையும் பெற்றுள்ள பார்ப்பனர்களும் எவ்வித உற்பத்திசாதனங்களும் இன்றி வெறும் உற்பத்தியில் மட்டும் ஈடுபட்டுள்ள இன்னொரு உழைப்பு பிரிவினையான சேவை பிரிவினர் ஒடுக்கப்பட்டு கடைநிலைக்கு தள்ளப்பட்டனர்.

வர்க்க சமூகத்தில் கூட படிநிலை என்பது குறிப்பிட்ட காலத்திய உற்பத்தி முறையில் குறிப்பிட்ட வர்க்கங்கள் பெறும் இடத்தை பொறுத்து உள்ளது. உற்பத்தி சாதனங்களின் உரிமை, உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தி பொருள் பங்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளது.

இந்தியாவில் நிலஉடமை முறையை ஆராய்ந்த மார்க்சிய அறிஞர் கோசாம்பி மேலிருந்து நிலவுடமை முறை கீழிருந்து நிலவுடமை முறை என இரண்டு விதங்களாக காண்கிறார். புரோகிதர்களுக்கும் (பிராமணர்களுக்கும்) படைத்தலைவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்ட பகுதியில் இருந்ததை மேலிருந்து நில உடமை முறை என்றும் மேலும் அரசுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் உறவில்கேந்திர கண்ணியாக இருந்த கிராம நிர்வாகத் தலைவர்கள் காலப்போக்கில் உருவாக்கிக் கொண்டது கீழிருந்து நிலவுடமை முறை என்பர்.

ஆற்றங்கரைப் பகுதிகளில் நீர்ப்பாசனப் பகுதிகளும் முதலாம் வகை நிலவுடமை இருந்தது. இரண்டு வேளாண்மைமயமாக்கலிலும் பல புதிய தொழில்கள் உருவாகின. வேளாண்மை, வேளாண்மை சார்பு கைவினை தொழில்கள் ஆகியவற்றுடன் கோயிலை ஒட்டியும் பல தொழில்கள் உருவாக்கின.

இவ்வாறாக ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகிய தொழில் பிரிவின் அடிப்படையில் தோன்றிய பல்வேறு பிரிவுகள் பின்னர் ஜாதிகளாக பல்வேறு வகைப்பட்ட வகைகளாக பிரிந்து போயின. இவற்றை அடையாளப்படுத்தவும் இவற்றை பாதுகாக்கவும் பிரிட்டிஷ் அரசானது தனக்கான ஒரு வகைப்பட்ட வேலையை செய்தது. அவை தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஜாதி வாரி பிரதிநிதித்துவம். விரிவாக இதனைப் பற்றி பிறகு பார்ப்போம்.

நிலஉடமை சமூகஅமைப்பின் தொடக்கத்தில் வேளாண்மை வேளாண்மை சார்ந்த கைவினை ஆகியோர் மட்டுமின்றி தொண்டுஊழிய தொழிலும் இருந்தன, இவைபாரம்பரியமாக கையளிக்கப்பட்டன.இவற்றிற்குரிய தொழில்நுட்பம் ஒரு கலையாகமட்டுமின்றி அந்த தொழில்வகுப்பு மட்டுமே தெரிந்ததாக இருந்தது.இதில் கூட ஆணாதிக்கத்தை உற்பத்தி சாதனஉரிமை சாதிகளோடு இணைத்து காண வேண்டும். நிலஉரிமை கொண்டசாதிகளில் பெண்கள் முற்றாக சமூக உற்பத்தியில் இருந்து விலக்கப்பட்டனர். ஆனால் கைவினைஜாதிகள், சேவைஜாதிகள் ஆகியவற்றில் குடும்ப உழைப்பு இருந்ததனால் அங்கு சமூகஉற்பத்தில் பெண்கள் ஓரளவுஈடுபட நேர்ந்தது. எனவேஅத்தகைய தொழில்நுட்பத்தை அந்ததொழில் வகுப்பு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு தமக்குத்தானே ஒரு வேலியிட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த விதத்தில் தொழில் வகுப்புகள் அகமண முறையில் இறுக்கத்தோடு ஜாதியம் நிறுவனம் ஆகியது. மேலும் நிலஉடமை உற்பத்தி முறையில் ஒவ்வொரு தொழிலும் முழுமையான ஒருவித சுய உள்ளாற்றலையும் இயங்குதல்களையும் கொண்டிருந்தது. அதேநேரத்தில் ஒரு பொதுபொருளாதார அமைப்பின் கட்டமைப்புக்குள்ளும் இயங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தொழிலும் தம்சுயேச்சைத் தன்மையை பேணிக்கொண்டிருப்பதோடு நிலவுடமை பொருளாதாரத்தில் ஒருகண்ணியாகவும் உள்ளது. இதற்குஉகந்த விதத்தில் தொழில்வழி வகுப்புக்குள் அகமணமுறை அழுத்தம் பெற்றுசாதியமயமாயிற்று. ஒவ்வொரு தொழில்களிலும் வகுப்பும் உற்பத்தியில் தனித்தன்மை சுயேட்சியை பேணிக் கொண்டு ஒரு ஜாதியாக இருக்கவும்.பொது பொருளாக அமைப்பில் உள்ள ஜாதிசமூகத்தில் ஓர் அங்கமாக இருக்கவும் முடிகிறது. ஒரு தொழில்வகுப்பு இன்னொரு தொழில்வகுப்பில் தொழில் ரீதியில் ஒன்று கலக்கஇயலாது. ஆனால் ஒருதொழில் வகுப்பின் உற்பத்தி திறனில் உருவானமுழு பண்டமும் இன்னொரு தொழில் வகுப்புக்கு நுகர் பொருளாகவோ அல்லது அதன்உற்பத்தி ஆதார பொருளாகவோ அமைய இயலும்.

ஒரு தச்சர்கலப்பை செய்து தரஇயலும் ஒரு வேளாளர் இதில் தலையிடஇயலாது. ஆனால்தச்சரின் கலப்பையைவேளாளரும் வேளாளரின் விளைச்சலை தச்சரும் பயன்படுத்த இயலும்.ஒரு தச்சரின் ஏர் கலப்பையை ஒரு குயவர்நேரடியாக நுகர முடியாது. ஆனால்கலப்பை பயன்படுத்தி உருவான வேளாண்மை விளைச்சலை நுகரஇயலும்.

தொழில் வழிவகுப்புகள் அமைந்த அகமணமுறை தொழில்நுட்ப ரகசியகாப்பீடு சாதிகளின் சுயஇயக்கத்தோடும் இணைந்து காணும்பொழுது அதை நிலஉடமை உற்பத்தி முறியோடு இணைந்தே காணவேண்டி உள்ளது. வேலாண்மை சமூகத்தில் பிரதான உற்பத்தி சாதனம் நிலம், புதிது புதிதாக பயன்படுத்தப்பட்டுவந்து கொண்டிருந்த காலங்களில்;உடல் உழைப்பும் உடல்உழைப்புக்கு திட்டமிடும் மூளைஉழைப்பு வெகுவாக பயன்பட்டன. பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டியதில்லை இவை நிலஉடமை சமூகத்தில் சமூகமரபாக இருந்தது.

அதே நேரத்தில் உடலுழைப்பை மட்டுமே நம்பி வாழும் சேவை சாதியினர் உற்பத்தி சாதனங்கள் உரிமையின்மை,உற்பத்திகருவிகள் இன்மை ஆகிவற்றோடு குடும்ப உழைப்பும் வளர்ச்சியடையாத தொழில்நுட்பம் கொண்ட சேவைசாதியில் ஈடுபடும் அவசியம் அவர்களை இழிநிலைக்கு கொண்டு சென்றது.

சேவைசாதியில் அகமணமுறை நிறையவிதிவிலக்குகள்நெகிழ்ச்சியாக செயல்பட்டது. இருந்தும் இங்கு அரசுஅதிகாரத்தின் வன்முறை பயன்பாட்டையும் கருத்துருவாக்கத்தின் ஆதிக்கத்தையும் காணஇயலும். மேல்நிலை ஜாதியில் தொழில்வகுப்புகள் தமக்குள் அகமணமுறை உருவாக்கி தம்மில் முற்றாக சிறையில் அடைத்துக் கொண்டபின்னர். சேவை சாதியினருக்கும் அதைத் தவிரவேறு வாய்ப்பு இல்லை.

ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் சுரண்டுவோர்க்கு உரியதாக உள்ள அதிகாரத்தை பேணும் பொருட்டு வடிவமைக்கப்பட்டதே ஜாதியம்.

அவ்வாறு ஜாதி தோன்றுவதற்கு முன்னரே ஜாதிகள் தோன்றுவதற்கான அடிப்படைகள் உருவாகிவிட்டது. நிலவிவந்த வாழ்வியல் முறையில் (ஜாதியின்) வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் இயங்கு நிலைக்கான கருத்தியலை தோற்றுவித்தோடு அந்தக் கருத்தியலை வழங்கியவர்கள் சனாதனவாதிகளே.

நிலபிரபத்துவ அமைப்பை வடிவமைக்கும் கருத்தியலை கட்டமைப்பதில் கிபி 3-ஆம் நூற்றாண்டில் தொகுத்து வடிவமைக்கப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு பெரும் பங்குண்டு. மேலும் வர்ணதருமத்தை பேணுவதற்காக பகவத்கீதை இறைவனால் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இவை கி.பி 3-4ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு பின்னர் மகாபாரத இதிகாசகதைகளுடன் இணைக்கப்பட்டது. நிலப்பிரபுத்துவ உடன்பாடான கடவுள் கோட்பாட்டையும் அதற்கான பக்தி கோட்பாட்டையும் வடிவமைத்திருந்த கீதையும் மனுஸ்மிருதியும் பண்பாட்டுத்தளத்தில் வலுவான மாற்றங்களை ஏற்படுத்தியது. நிலப் பிரபுத்துவத்தை உறுதிப்படுத்த வடிவமைத்த சனாதனவாதிகளால் கட்டியமைக்கபட்ட மதபோதனைகளே. கிபி 4-ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 8-ஆம் நூற்றாண்டில் சங்கரரின் அத்வைதம், பகவத் கீதை, மனுதர்மம் ஆகியவை நிலப்பிரபுத்துவ உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும், பூசர்களானவர்கள்- பிராமணர்கள் என்ற மேல்நிலை ஆதிக்கத்திற்கு வழிகோறியது.

காலவோட்டத்தில் வேதங்களைப் போற்றவும் ஏற்பட்ட புதிய வர்க்கப் பிரிவு பிரதேசபூசர்களுடன் இணைந்து உருவான பிரிவுதான் பிராமணர்கள் என்ற ஆரியர்கள் (நமது சமூகத்தில் பேசுபொருளில் வேறுபடுகிறேன் அதற்கான தேடுதல் தகவல்கள் வேறொரு வேளையில் விளக்க நினைக்கிறேன்) என்ற கோட்பாடு. பகவத்கீதை வடிவமைப்பதற்கு முந்திய ஆதிஇயற்கை கடவுள், குலதெய்வ கடவுளுக்கும் நிலப்பரப்புத்துவ தேவையொட்டி உறுதிப்பட்ட எல்லா தெய்வங்களையும் கட்டுப்படுத்தும் முறையில் பரம்பொருள் கோட்பாடுகள் கிபி 4-ம் நூற்றாண்டில் தோன்றி வளரலாயிற்று.

அதற்கான முழுமுதற் பரம்பொருட் கோட்பாடு சங்கரின் அத்வைதம் உயர்வடிவம் பெற்றது. பல்வேறு குலக்கடவுள்களை உள்வாங்கி ஆறு கடவுளை ஏற்றுக்கொண்டு ஆறுமதங்களை சனாதன நெறிக்குரியனவாக வடிவப்படுத்தி அக்கடவுள்களை சங்கரர் தனது மடத்தில் எழுந்தருளவும் செய்தார். அவையெல்லாம் மாயையுடன் இயைந்த பிரபஞ்சத்துத் தேவர்களே.

இவ்வாறு நிலப்பிரபுத்துவ தேவையை ஒட்டி உறுதிபட்ட வேலை பிரிவினையை, மனுதர்மம், பகவத்கீதை, சங்கரர் அத்வைதம் ஆகியன சனாதன ஆன்மீக தலைமை வலுவடை செய்ததோடு. ஜாதிகள் ஒவ்வொன்றுக்கும் தத்தமது தொழில்களை மாறுபாடின்றிச் செய்தொழுகும் வாழ்நெறிக்கு தெய்வஅங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.இவ்வாறு வர்ணாசிரம நெறி புகுத்தப்பட்டது.

அவ்வர்ணாசிரம நெறியைச் சமூகம் பிறழ்வின்றித் தொடர்வதற்கான கண்காணிப்பை அரசருக்கான பணியாக்கி அதற்கு ஏதுவாகக் கடவுளின் மனித உருவாக அரசர்கள் விளங்குவார் என்ற கருத்தியலை சனாதனிகள் விதைத்தனர்.

வர்ணங்கள் தமக்குள் கலந்து தூய்மை கெட்டு உறுப்பெற்றவையே ஆயிரக்கணக்கான ஜாதிகள் என்று மனுதர்மம் சொல்வதும். இனக்குழு கடந்த மணஉறவுகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இனக் குழுக்களுக்கிடையே அகமணத்திற்கு மேலாக புறமணமும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக நிலவுடமை சமூகம் உறுதிப்படுவதற்கு முன் இருந்த நிலைமாறி நிலப்பிரபுத்துவ அமைப்பை கட்டிக் காப்பதற்காக தெய்வீக அங்கீகாரம் பெற்ற அரசு தொழில் ரீதியாக உழைப்பவர்களை நிலத்துடன் இறுகப் பிணைக்கப்பட்ட வம்சாவழியாக அரசு கண்காணிப்பை மேற்கொண்டது.இவ்வாறாக நிலப்பிரப்புதுவ சமூகத்தில் அரசர், பூசர்கள் (பிராமணர்) ஆகியோர் கைவினை சாதிகள் மற்றும் பண்ணையடிமை ஜாதிகளை ஒடுக்கி வந்தனர்.

ஜாதி நம் சமூகத்தில்.

இந்தியாவை ஒரே நாடாக கட்டமைக்கப்பட முயற்சிக்கும் இன்று வருண முறை மற்றும் ஜாதி முறையை நோக்கினால் ஜாதி முறையானது எல்லா மாநிலங்களுக்கும் ஒன்றாக இல்லை. ஏன் திராவிடர்கள் நாடு என்று அழைக்கப்படும் தென்னிந்தியாவிலே ஒன்றாகஇல்லை. தெலுங்கு பேசும் பகுதியில் காணப்படும் கம்மா,ரெட்டி கேரளாவில் நாயர், ஈழவர் கர்நாடகாவில் லிங்காயத்துகள் தமிழ்நாட்டுப் பகுதியில் காணப்படும் பள்ளர் கள்ளர் வன்னியர் மற்ற மாநிலங்களில் காணப்படுவதில்லையே ஏன்?தமிழ்நாட்டிலேயே வடபகுதியில்காணப்படும் வன்னியர் தென் தமிழகத்தில் இல்லை. தென் தமிழகத்தில் உள்ள தேவர் மறவர் வட தமிழகத்தில் இல்லையே.

பகுதி ரீதியாக நாம் இப்படி தேடும்பொழுது வருணங்களாக பிரிக்கப்பட்ட மக்கள் இந்திய அளவில் ஒன்றாக தெரிந்தாலும் ஜாதிகளாக உள்ள பொழுது வேறுபட்டு காணுவது எப்படி? இவை குலக் குழுக்களாக இருந்த பொழுது ஏற்பட்டது என்று கூறுகின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

இந்தியாளவில் வருணமுறையில் ஒற்றை அடிப்படையில் நால்வருணத்தை பொருந்தும் அதேவேளையில் ஜாதீ ஏன் ஒரே பிரதேசத்திற்கு பொருந்தவில்லை யோசித்து பாருங்கள் இதற்கான தேடல் பின்பகுதியில் உள்ளது.

ஜாதியின் குறுக்கிய தன்மையானது மொழி மற்றும் பிரதேசம் சார்ந்ததாக உள்ளது. அதுவும் குறிப்பான பகுதியில் அதே நேரத்தில் வருணம் என்பது இந்தியப் பகுதியின் அனைத்துக்கும் பொருத்தமாக உள்ளது.ஆனால் சாதி குலக்குழுவின் தன்மையோடு இணைந்து கருதவேண்டிய அவசியம் உள்ளது. ஆக ஒரு குலக்குழு பிரதேசத்தில் ஏற்படும் உற்பத்தி சக்திகளின் செழுமை உற்பத்தித்திறன் மேம்பாடு ஆகியவற்றின் விளைவாக பல்வேறு எளிமையான தொழில் பிரிவுகள் தோன்றலாயின. இவ்வாறு உற்பத்தியான பொருள்களின் மதிப்புக்கு ஏற்ப தொழில்களுக்கு இடையில் வேறுபாடுகளும் அரும்பலாயின. ஒரு பிரதேசத்தில் தனித்தன்மை கருதி ஏற்பட்ட இத்தகைய தொழில்பிரிவுகள் ஒவ்வொன்றும் தமக்கென ஒரு கூட்டுணர்வை பேணியது. குலக்குழுவுக்குள் இருந்த பலகணங்களுக்கிடையே அனுமதிக்கப் பட்டிருந்த மனஉறவுமுறையானது சில வம்சாவளியினருக்களுக்குள்ளே மட்டும் என்பதாக குறுக்கப்பட்டது.

இன்னும் சில புரிதலுக்கு

ரிக் வேத சமூகத்தில் நான்கு வருண பாகுபாடு என்பதுகூட முழுமையாகச் செயல்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் தொழில் என்பது ரிக் வேத கால நடைமுறையாக இல்லை. பின் வேதகாலத்தில் கூட வருணங்களிடையிலான இயக்கம் முற்றிலுமாய் தடைசெய்யப்பட வில்லை (கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை).

தமிழகத்திலோ சங்க இலக்கியங்களுக்கு முந்திய காலகட்டத்தில் (கி.மு. 2 நூற்றாண்டுக்கு முன்) சமூக உருவாக்கம் குறித்த விரிவான செய்திகள் இல்லை. இன்றைய வடிவிலான சாதிய உருவாக்கத்தின் தோற்றத்திற்கு ஆதாரமில்லை.

ஆக, சாதியத்தின் மையமான கூறுகளென நாம் வரையறுத்தலை முழுமையாகச் செயற்பட்ட காலமென்பது இந்திய வடிவிலான நிலப் பிரபுத்துவக் காலக்கட்டத்தில்மட்டுமேஎனலாம். தமிழகத்தில் பல்லவர் காலந்தொட்டு வெள்ளையர் காலம் வரை இந்தக் கூறுகளை இறுக்க மாகக் காணலாம்.

எனினும் எல்லாக் காலக்கட்டங்களிலும் ஆதிக்க சக்திகள் சமூகத்தை வகைப்படுத்தி, பெயரிட்டு அதிகாரம் செலுத்தும் நடைமுறைக்கு, சாதி பயன்பட்டு வந்துள்ளது.

ஜாதியும் மதமும் உழைக்கும் வர்க்கத்தை பிரிக்கிறது அதனால் ஜாதியின் இருப்பை நீடிக்கவே ஆளும் வர்க்கம் விரும்புகிறது. ஜாதிகளும் மதங்களும் மக்களின் வாழ்வாதார பிரச்சனையிலிருந்து அவர்களதுகவனத்தைத் திசை திருப்புவதால் ஆளும் வர்க்கம் இதனை ஆழமாக்க வேண்டி நிற்கிறது.

ஜாதியின் ஓர் அம்சம் என்னவென்றால் தீண்டாமை. தீண்டாமை சட்ட விரோதமாகி சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் ஜாதி நிலைத்து நிற்பதற்கு ஜாதியத்தின் அடித்தளங்கள் விரிவாக்கப்படுத்தப்பட்டு கொண்டேயிருக்கிறது. ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது ஜாதி அடையாளங்களை மீட்டுருவாக்கவே செய்கின்றது ஜாதியை வலுப்படுத்தவும் செய்கிறது.

ஜாதியின் இருப்பு இன்னும் பல போக்குகள்

ஆக சாதியம் ஆரம்பம் என்பது குல சமூகம் உற்பத்தியில் ஈடுபடலான போது அவர்களுகிடையிலேயான வேலைப்பிரிவினையின் அடிப்படையில் அவரவர்களுக்கான வேலைபிரிவினையின் அடிப்படையில் செயல்பட்டதன் விளைவு குழுவிற்குள்ளே இருந்த சமத்துவம் குழைந்து தலைமை பொருப்பில் இருந்த தலைவர், பூசாரி என்ற பிரிவினர் உபரியான சொத்து சேரலாயிற்று ஒரு பக்கம் சொத்தும் இன்னொரு பக்கம் சொத்தற்றவர்களும் பிரிவினை ஏற்றதாழ்வு உருவாயிற்று. அன்று இந்தப் பிரிவினை சாதியாக இருக்கவில்லை பல நூறுஆண்டுகள் பல மாற்றங்களின் ஊடாக சாதியின் உருதிரண்டநிலை கிமு 2 நூற்றாண்டிலிருந்து தெரிந்தாலும் துலக்கமாக கிபி 2ம் நூற்றாண்டில் கோலோச்ச ஆரம்பித்தது எனலாம்.

நமது இன்றைய சமூகத்தில் வேர்கொண்டுள்ள-பிராமணிய தத்துவமானது பற்றியும் சிறிய குறிப்பு

ஆட்சியாளர்களும், பெரும்முதலாளிகளும், மடாதிபதிகளும், ஆதீனங்களும், மதவாதிகளும், சாதிமத அரசியல்வாதிகளும் ஓரணியில் திரளுகின்றனர். இவர்களுக்கு பின்புலமாக நவீன காலனிய ஏகாதிபத்தியவாதிகள் இருக்கிறார்கள். இந்த சுரண்டலாளர்களுக்கு ஜாதி மத கலவரங்கள் அவசியமாகிறது. மக்கள் ஜாதியாகவும் மதமாகவும் பிரிந்து கிடப்பது அவர்களின் சுரண்டலுக்கு ஏதுவாக உள்ளது. வர்க்கமாக மக்களை அணி திராளாமல் இருக்க இதுவும் ஒருவகை சூழ்ச்சியே.

மனிதனுக்கு மனிதன் அடிமை. ஆணுக்கு பெண் அடிமை. பிறப்பில் உயர் ஜாதிக்காரன், பிறப்பில் கீழ் ஜாதிக்காரன் இத்தகைய அடிமை முறையை பழங்குடி மக்களிடம் வேத சாஸ்திரங்கள் மூலம்புகுத்திய தத்துவம் தான் பிராமணியம். இந்திய சமுதாயத்தில் இந்து சமுதாய எனும் பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் ஒரு ஜாதி முறையை (Caste System) , ஜாதிய தத்துவத்தை புகுத்தி வளர்த்தது இன்றும் உயிர்பித்து வருவது சனாதன தர்மமுறையான பிராமணியமே. அதனை கட்டிக்காப்பது இன்றைய ஆட்சியாளர்களே. ஆம் அவர்களின் சுரண்டலை மறைக்க.…

உண்மையிலேயே சாதி ஒழிக்கப்பட்டு சமூக மாற்றம் வர வேண்டுமானால், சாதிக்கு ஆதாரமாக இருக்கிற சாஸ்திரங்களோடு, இந்து மதத்தையும் ஒழிக்க வேண்டும். இந்து மதம் என வழங்கப்படுவது உண்மையில் ஒரு மதமே அல்ல. கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்கின்ற ஒரு சட்டங்களின் தொகுப்புதான். எனவே அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மதவிரோதம் என்று எதுவுமில்லை. எனவே, நான் மதம் மாற முடிவு செய்து விட்டேன் என்று தனது உரையை முடிக்கிறார்.(அம்பேத்கர் 1916 இல் எழுதியிருக்கிறார் - இந்தப் பகுதி அம்பேத்கார் சாதியம் என்ற பகுதியிலிருந்து எடுத்தாளாப்பட்டுள்ளது).

ஜாதியின் இருப்பு

ஜாதி தோன்றியிலிருந்து இன்றுவரை பல்வேறு விதமான மாற்றங்களின் ஊடாக ஜாதியே வர்க்கமாக இருந்த காலம் மாறி இன்று ஒவ்வொரு ஜாதியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கங்கள் உள்ளதை காணலாம். ஜாதிகளில் ஏற்பட்டு கொண்டிருக்கும் வர்க்க மாற்றங்கள் நாம் வாழும் சமூகத்தில் சிறிது அசைவை கொடுத்துள்ளது. ஒரே ஜாதிக்குள் இவ்வாறு ஏற்பட்ட வர்க்க மாறுதல்களை இயங்கியல் அளவில் காணும் பொழுது அந்த மாற்றமானது ஜாதி இருப்பை தகர்பதற்கு பதில் நீட்டிக்க செய்கிறது என்பேன். ஏகாதிபத்திய பொருளாதார நலன்களாலும் நில உடமை சமூகத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள புறநிலை வர்க்கங்களாலும் உருவாகும் வர்க்க உணர்வை விட ஜாதி உணர்வு மேலோங்கி உள்ளது. வர்க்கமாக ஒன்றிணைவதில் பல சமூக தடைகள் இருப்பதை காண்கிறோம்.

ன்று கீழ் தஞ்சையில் உழைக்கும் விவசாய கூலித் தொழிலாளர்களை ஒன்றினைத்து, நிலவுடமையாளர்கள் பண்ணை ஆண்டைகளின் கொடுமைகளுக்கு பதிலடியாக, “அடித்தால் திருப்பி அடி” என்று முழகமிட்டார் ஒரு கம்யூனிஸ்ட் தோழர் பி.சீனிவாச ராவ். அதனை இன்று புரிந்துக் கொள்ளாதவர்களாக வர்க்கமாக திரண்டிருந்த மக்களை ஜாதியாக உடைத்து அதிலும் பல பிரிவுகளாக உடைத்து பின் எங்கிருந்து போராட போகிறீர்கள்?.

ஆக தலித்துகளை காப்பாளர்களாக வலம் வரும் கட்சிகள் தினம் தினம் தலித்துகள் படும் அவலங்களை பற்றி துளியும் அக்கரை இன்றி தனது ஓட்டரசியலை மையமாக கொண்டே செயல்படுகின்றனர். வேங்கைவயல் தொடங்கி இதுவரை பல பிரச்சினைகளை இவர்கள் கையாண்ட விதமும் அன்று கீழ்வெண்மணியிலாகட்டும், தருமபுரி வடஆற்காடு பகுதியிலாக்கட்டும் அன்று ஜாதி தீண்டாமை ஒடுக்குமுறைக்கு எதிராக உழைக்கும் ஏழை எளிய மக்களை ஒன்றிணைத்து அன்றைய கம்யூனிஸ்ட்டுகள் போராடினர் அவர்கள் அன்று சாதித்தும் காட்டினர். இன்றுள்ள தலித்தியவாதிகள் பேசுவது போலவோ அல்லது NGOகள் பேசுவது போலவோ திட்டம் தேடிக் கொண்டிருக்கவில்லை செயல்பாட்டில் காட்டினர்கள். இன்று புரட்சிகர கட்சி இல்லாத நிலையில் ஏகாதிபத்திய எதிர்புரட்சிகர சக்திகள் மேலோங்கி உள்ள நிலையில் வர்க்க அரசியலை பேச வக்கற்ற இவர்கள் அடையாள அரசியலில் சிக்குண்டுகிடகின்றனர். ஒரே ஜாதிக்குள் இருக்கும் முதலாளியை, அதிகாரியை ஆளும்வர்க்க பிரதிநிதியை… ….முதலாளியாகவும், அதிகாரியாகவும், ஆளும்வர்க்க பிரதிநிதியாகவும் பார்க்காமல் தன் ஜாதிகாரனாக மட்டுமே பார்க்கும்படி பாமர மக்கள் பழக்கப்படும் வரையில் ஜாதியையும் வர்க்கத்தையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் எளிதில்தீர்க்கப் படாது.இன்று எல்லாம்தனியார் மயமாகிவிட்டது; கல்வியில், மருத்துவத்தில், வேலைவாய்ப்பில் இன்றுமக்களின் வாழ்க்கை தேவைக்கான அனைத்தையும் தனியாரிடம் கொடுத்து விட்டு இடஒதுக்கீட்டால் தன் ஜாதி மக்களுக்கு போராடுவதாக கூறும்ஜாதி கட்சிதலைவர்களின் பேச்சுஎன்பதே பொய்யானது எனும் பொழுதுஇந்த உழைக்கும் ஏழை எளிய மக்களின் ஓட்டைமட்டுமே குறியாகஉள்ள ஓட்டரசியல் கட்சிகள் உள்ள பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை என்பதுதெளிவு. அதேபோல் சாதிச்சங்கங்கள் மற்றும்அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்புஎன்பனவற்றை முன்னணிப்படுத்தாமல், இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு, சலுகைகள் பெறுவது ஆகியவற்றைக் கோருவது என்பதைமுழுமுதல் நோக்கமாகக் கொண்டுள்ள சீர்திருத்தவாதம் மக்களின் இழிநிலைக்கு முடிவுகட்டாது.

இன்று ஜாதியால் படும் பாடு

சிலர் குறிபிடுவதுபோல் ஜாதியானது மனித சமூகம் தோன்றியபோதே தோன்றிய ஒன்றல்ல. அதேபோல் ஜாதியின் ஆதிக்கம் நிலவுடமை சமுகத்தில் கோலோச்சினாலும் அதன் தன்மைகள் இன்றும் அன்றுபோல் இல்லை. இன்று நாம் வாழும் சமூகத்தில் ஜாதி ஏன் உயிர் வாழ்கிறது என்பதனையும். அம்பேத்கார் பெரியார் ஜாதி ஒழிப்பிற்கு போராடினார்கள் என்பதோடு அவர்கள் எந்தளவிற்கு அதில் வெற்றிகண்டனர் என்பதனையும், உண்மையில் சமூகத்தில் இந்த ஏற்றதாழ்வான நிலைக்கு முடிவுகட்ட ஜாதியை கட்டிகாக்கும் அமைப்புமுறையை தகர்த்து ஒடுக்குமுறை அடக்குமுறை சுரண்டல்முறை அற்ற சமத்துவ சமூகத்தில் இந்த ஜாதிய தீண்டாமை கொடுமைக்கு தீர்வு காணப்படும் என்பதனையும் அதற்கான தீர்வு இந்த பிற்போக்கு அம்சங்களை தூக்கியெறிந்து சமத்துவ சமூகத்தில்தான் சாத்தியம். இந்தியாவில் ஜாதி பற்றி பல்வேறு அறிஞர்கள், களப்பணியாளர்கள், எழுத்தாளர்கள், விவாதங்கள் மற்றும் இடைவிடாத போராட்டங்கள் மூலம் தினம் நமது செவிகளுக்கு கேட்ட வண்ணமே உள்ளது. ஆக இந்திய சமூகத்தில் ஜாதியின் பல்வேறு விளைவுகளையும் அதன் தோற்றத்திலிருந்து இன்று பலரும் பேசினாலும் எழுதினாலும் அதற்கான சமூக உறவை மார்க்சியம் மட்டும் விளக்குகிறது. ஜாதியானது இன்றும் இந்திய சமூகத்தில் புதியபுதிய வடிவத்தில் பரிணமித்து வாழ்ந்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் நவீனமயமாதல், வளர்ச்சி, ஜனநாயக, நிர்வாகம் என்று என்னதான் பேசிக் கொண்டிருந்தாலும் இன்றும் நம் சமூகத்தில் சமத்துவமின்மையும் சமூக விலக்குகளும் பெருமளவு தொடரத்தான் செய்கிறது. மார்க்ஸ் சொன்னது போல்,”நவீனகாலத் தீமையோடு மாண்டவற்றாலும் அவதிபடுகிறோம்” (மாண்டவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்)”(மூலதனம் முதல்பாகம் பக்-26) அதுபோலதான நம் சமூகத்தில் பல்வேறு கடந்தகால சமூக குப்பைகள் இச்சமூகத்திலும் தொடரவே செய்கின்றன அதில் ஒன்றுதான் ஜாதி.

இந்தியாவைப் பற்றியும் காலணி நிர்வாக அறிக்கைகளும் தேசிய கற்பிதங்களும் பிரிட்டிஷ் ஆட்சியை கட்டியமைக்க பயன்படுத்தினர். ஆங்கிலேயர்கள் ஜாதிகளின் இருப்பை தீவிரமாக பரிசீலித்தனர். இந்திய மக்கள் அனைவரையும் ஜாதியாகவே பாகுபடுத்த முயன்றனர். எல்லோரும் ஏதோ ஒரு ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஜாதி அடையாளமே உண்மையான அடையாளம் என்றும் கருதினர். இத்தகைய முன்னெடுப்பால் ஜாதி உண்மையானதாகவும் மேலும் வலுப்பெற்றதாகவும் மாறியது. (ஜாதி தோற்றம் வளர்ச்சியும் ஓர் அறிமுகம் சுரிந்தர் எஸ் ஜோத்கா தமிழில் பக்தவத்சல பாரதி நூல் பக்கம் 22 - 23 காலச்சுவடு பதிப்பகம்).இவ்வகையாக மிஷனரிகளும்காலனி அதிகாரிகளும்வெவ்வேறு வகையில்ஜாதி உருவாக்கத்தில்கருத்துகளில் பங்களித்துள்ளனர்.

உண்மையில் சாதியப் பிரச்சினை என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுடன், வர்க்க சமுதாயத்துடன் வேர்கொண்டுகிடப்பதால் மதம் மாறுவதால் மட்டும் இப்பிரச்சினை தீர்ந்துவிடாது. உதாரணமாக சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக கிறிஸ்தவத்தில் சேர்ந்தோரின் நிலை என்ன? அதுமட்டுமின்றி ஒரு லட்சம் மக்களுடன் பௌத்த மதத்தில் இணைந்த போதும் அம்பேத்கரால் இந்தியாவின் சாதியமைப்பை ஒரு அங்குலம் கூடஅசைக்க முடியவில்லை.

அது மட்டுமின்றி, சாதியத்துக்கு எதிரான போராட்டத்தைச் சிலர் தமிழ் தேசிய உரிமைக்கான போராட்டத்துக்கு எதிரான நிலையில் வைக்க முயல்கின்றனர். இதுவும் தவறான ஒரு நிலைப்பாடாகும்.

ஜாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத் தொழிற்பிரிவினையும், அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும்.

இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதால் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமயமாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்றதாழ்வைபோக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது..

ஆக நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை முற்றாக ஒழித்து, புதிய ஜனநாயக அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை உருவாக்கி, சோசலிச சமுதாயத்தை நிறுவும் நிகழ்வுப் போக்கில் சாதி மற்றும் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது சாத்தியமான ஒன்றாகும்.

உழைக்கும் மக்களுக்கு, ஆம் சமூகத்தில் பல சுரண்டல் அடக்குமுறையால் பீடித்துள்ள மக்களுக்கு இதிலிருந்து விடுபட இந்த அமைப்புமுறையில் சாத்தியம் இல்லை எனும் பொழுது அந்த மக்களுக்கான ஒரு ஜனநாயகக் குடியரசு இன்றி, அவர்களால் பரம்பரை வேலைப் பிரிவினையை ஒழித்து ஒரு புதிய வேலைப் பிரிவினையை உருவாக்க முடியாது.

முடிவாக:-சோழர் காலத்தில் முழுமுற்றான நிலவுடமைக் காலத்தில் ஜாதியின் பாரம்பரிய வேலைபிரிவினை கறாராக இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களை ஒட்டி ஏற்பட்ட சிலமாற்றங்கள் இச்சமூகத்தில் சில அசைவுகளை ஏற்படுத்தியது அவை இந்த ஜாதிகளுக்குள் சில இயங்குதல் மாற்றங்களுக்கு உட்படுத்தியது. அதில் எல்லா ஜாதியரும் அவருடைய நிலையிலிருந்து தமக்கான பிரதிநிதித்துவ மாற்றத்தை அடைந்தனர். அவை தான் ஒரே ஜாதிக்குள் பல வர்க்கங்களை புகுத்தியது.

இன்று அதன் நீட்சியாக பல ஜாதி கட்சிகள் தங்களின் ஜாதிக்கான இருப்பிற்கு மக்களை காவு கேட்கிறது உழைக்கும் மக்களை பிரித்து வைத்து தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது இதில் எல்லா ஜாதி கட்சிகளும் அடங்கும் விதிவிலக்கே இல்லை.

விரிவாக நேரம் உள்ள போது உறையாடுவோம்

27-05-2024 அன்று “பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டம்-மாணவர்களின் பரிந்துரைகள் என்ற ஒரு உறையாடல் கேட்டேன். ஜாதி சைந்தனையில் உள்ளதாகவும் அதனை மாற்ற கருத்தியல் போராட்டம் நடத்த போவதாக. ஜாதியின் மீதான ஆளும் வர்க்கத்தின் உண்மையான முகத்தை இவர்கள் கண்டுகொள்ளவில்லை

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்