அது என்னப எம் எல் வாதிகள் இது வரை கம்யூனிஸ்டாக மாறத நீங்கள் இப்படியே அடுத்தவர்களை குறை கூறியே தன்னை முன்னிலை படுத்தி வாழும் முதலாளித்துவ் சிந்தனை மரபுதான் இவை இதுவும் ஒரு குறுங்குழுவாத மனனிலை போன்ற அபாயகரமானது உங்களை சிந்திக்க விடாது என் சிந்தனைதான் பெருசு என்னை இவர்கள் கண்டு கொள்வதில்லை என்ற பொறாமையின் வெளிப்பாடு இவை.ஆக நீங்கள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் இல்லையேல் வீண். நான் உங்களை நட்பு சக்தியாக பார்பதனால்தான் உங்களின் புலம்பலுக்கு பதிலளிக்காம்லே கடந்து சென்றுவிடுவேன் ஆனால் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் ஆணவமாக நடந்துக் கொள்ளும் உங்களை கண்டிக்கிறேன் இனி தொடர்ந்தால் தேவையற்ற நட்பாகி போய்விடும் அவ்வளுவே... எந்த வரலாற்று ஆவணத்தையும் படித்ததில்லை எந்த மார்க்சிய அடிப்படையையும் புரிந்துக் கொள்ளவில்லை முகநூலில் புலம்பிக் கொண்டிருப்பது அடுத்தவரை குறைக் கூறுவதுமல்ல விமர்சனம். உங்களை நீங்கள் பரிசீலிக்க முடியுமா? ஏன் அடுத்தவர்களை கூறுகிறீர்கள் நீங்கள் வாருங்கள் நடைமுறை பணி என்னவென்று காட்டுங்கள் வர நான் தயராக இருக்கிறேன். முதலில் புலம்புவதை விடுத்து ஆரோகியமாக சிந்திக்க தொடங்குங்கள்.
தொடர்ந்து விவாதிக்க அழைக்கிறேன் தோழர்களே
CPM மக்கள் மத்தியில் பணியாற்றவில்லையா? CPIயிலிருந்து வெளியேறியவர்கள்தானே இவர்கள். இவர்களின் ஆவணங்கள் சற்று பாருங்கள்.(SUNDARAYYAPEASANT MOVEMENT IN INDIA 1920-1950 PAGE 198).(112) தங்கள் கட்சி திட்டத்தின் 113 வது பிரிவு மக்கள் ஜன்நாயகத்தை நிறுவுவதற்கும் சோசலிச மாற்றத்தை அடைவதற்கும் போராடுவோம்…
இவையெல்லாம் தன் அணிகளை மயக்கதான் பேசப்பட்ட வீரவசனங்கள் என்பது விரைவிலே அம்பலமாகியது.
அன்றைய உள்துறை அமைச்சரை நந்தாவை சந்தித்த சுந்தரய்யா மக்கள் ஜன்நாயக புரட்சி என்ற முழக்கம் மட்டுமே வைத்துள்ளோம், சட்டரீதியாகவும் வெளிப்படையாகவும்தான் செயல்படும் தெலுங்கான போன்ற போராட்டம் தலைமறைவு இருக்காது என்று உறுதி அளித்தார். விரைவிலே குருசேவிய திருத்தல்வாத்தை பின்பற்றி ஆளும் வர்க்கத்தின் பின் அணி சேர்ந்துக் கொண்டது
CPML மக்கள் மத்தியில் பணியாற்றவில்லையா? CPMயிலிருந்து வெளியேறியவர்கள்தானே இவர்கள். இவர்களின் ஆவணங்கள் சற்று பாருங்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிபிஐ ஆகட்டும் 60 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய சி பி எம் ஆகட்டும் 50 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிபிஐஎம்எல் ஆகட்டும் இன்று அவர்களின் நடைமுறை திட்டத்தில் தோல்வி கண்டு உள்ளார்கள்தானே?
அப்படி என்னும் பொழுது அவர்களோடு நடைமுறையில் ஏதோ சிக்கல்தான் உள்ளது.
ஒவ்வொரு செயலையும் நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களுக்கான ஒரு திட்டம் தேவைப்படுகிறது அந்தத் திட்டத்தின் தோல்வி தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது அப்படி என்னும் பொழுது அந்த திட்டத்தில் எப்படி தோல்வி அடைந்தார்கள்?
அவர்கள் பரிசீலிக்க தயாரில்லாமல் அதே ஒருபக்கம் பாராளுமன்றம் மூலம் சமாதான வழியில் சோசலிசத்தை நிர்மாணித்து விடலாம் என்ற மார்க்சியம் அல்லாத காவுத்ஸ்கிய குருசேவிய பாணியிலான நடைமுறை இது ஆபத்தில்லாது. ஆளும் வர்க்கத்துடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டே அவர்கள் இவர்களுக்கான வழிவிடும் வரை காத்திருந்து அடிமைகளாக வாழ சொல்லும் தந்திரம்தான் CPI CPM மற்றும் தேர்தல்பாதையை ஏற்பவர்களின் நடைமுறையாக உள்ளது. மற்றோரு பகுதியினர் உள்ளனர் அவர்களை பற்றி நான் பேசவில்லை வேறோரு நேரத்தில் கணக்கில் கொள்வேன்.
நாம் புரிந்துக் கொள்ள இன்று இந்திய சமூகத்தில் எது சரியான திட்டமாக இருக்கும் அதற்கான ஆய்வையும் அதற்கான புரிதலையும் ஏற்படுத்தாமல் திடீரென்று நடைமுறை என்பது எவ்வகையில் சரியாக இருக்கும். தோல்விகளின் படிப்பினைகளும் நமது ஆசான்களின் வழிகாட்டுதலையும் புரிந்து செயல்பட முதலில் ஆய்வை செய்து அதனை நடைமுறையில் காண்போம்...
தோழர்களே