நேற்றைய பகுதியில் அம்பேத்கார் பற்றி அவரின் வாழ்க்கை சரித முன்னுரையிலிருந்து சிலப்பகுதிகளை உங்கள் முன் வைத்தேன் இன்று "அம்பேத்கரும் கம்யூனிசமும்" என்கிற குறித்த புத்தகத்திலிருந்து பார்ப்போம்.
உலக தொழிலாளிவர்க்க விடுதலையின் பெரும்ஆளுமையான மார்க்சை இவர் புரிந்துக் கொண்டாரா என்பதனை இவர் எழுதிய நூல்களின் வாயிலாக் தேட முயலுவோம்.இனி நூலாசிரியரின் முன் உரையை சற்று பார்ப்போம்.
புத்தர் குறித்து தான் ஏராளம் படித்தது போலவே மார்கஸ் குறித்தும் மற்ற எவரையும்விட அதிகமாக படிதீததாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் அவர் மார்க்சின் எந்த எந்த நூல்களை அல்லது மார்கஸ் குறித்து எழுதப்பட்ட நூல்களில் எவற்றையெல்லாம் படித்தார் என்பதை நம்மால் சரியாக தெரிந்து கொள்ளமுடியவில்லை. இந்திய சமூகம் குறித்தும் சாதி குறித்தும் அவர் ஏராளம் எழுதியுள்ளார். அன்றாட அரசியல் நிகழ்வுகள் தொழிற்சங்கம், பிரிட்டிஷாருடன் உறவு, காங்கிரஸ் காந்தியடனான உறவு, இந்து மதம் சாதி படிநிலைகள் போன்ற பல்வேறு அம்சங்களில் அவர் தனது கருத்துக்கள் தனது அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக மேற்கூறிய சக்திகளுடன் உறவையும் மோதலையும் அவர் கைக்கொள்ள நேர்ந்தது. இதன் ஒரு பகுதியாக அவரின் மார்க்சியம் குறித்த கம்யூனிஸ்ட்கள் குறித்த கருத்துக்களை நாம் புரிந்துகொள்ளமுடியும்.
இந்திய சமூகத்தை புரிந்துகொள்வதற்கான் விமர்சன குறிப்புகளாக அம்பேத்கர் அவர்கள் கம்யூனிஸ்ட்கள் மீது வைத்த விமர்சனங்களை புரிந்துகொள்ளலாம் என்றால் வர்க்கப் போராட்டம் அதில் அம்பேத்கரின் நடைமுறைகள் விடுதலைப் போராட்டம் அதில் அம்பேத்கரின் நடைமுறைகள் குறித்த விமர்சனங்களாக கம்யூனிஸ்ட்களின் எதிர்வினையை புரிந்துகொள்ளலாம்..
அம்பேத்கர் இந்தியாவில் கம்யூனிசம் என்பதை எழுத ஆரம்பித்து அப்படியே நின்று போன சிறு ஆக்கங்கள் குறித்தும், அதனை தனிப்புத்தகமாக்கி அதற்கு ஆனந்த டெல்டும்டே எழுதிய முன்னுரையும் சாதியை ஒழிக்க எனும் அம்பேத்கர் ஆக்கத்தில் அம்பேத்கர் கம்யூனிஸ்ட்களை குறித்து முன்வைத்த விமர்சனங்களும், அம்பேத்கர் பல்வேறு கூட்டங்களில் எத்தகைய (புத்தரா கார்ல் மார்க்ஸா உள்ளிட்டு) கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பதை தொகுத்த அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தமிழ் வால்யூம் 37ம் (ஆங்கிலம் 7/7 பகுதி 3) விவாதிக்கப்பட்டுள்ளனன. அம்பேத்கர் குறித்து உயர் மதிப்பீடுகளுடன் கூடிய 17/ 3 குபர் ஆய்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பேத்கர் கம்யூனிசம் குறித்து பேசிய அனைத்துமோ, கம்யூனிஸ்ட்கள் அம்பேத்கர் குறித்து முன்வைத்த அனைத்துமோ இந்தநூலில் முழுமையாக இடம்பெற்றுள்ளது என ஏதும் சொல்லமுடியாது. ஆனால் ஓரளவிற்கு விவாத பரப்பை அறிமுகப்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது எனச் சொல்லமுடியும்.-ஆர். பட்டாபிராமன் (நூலாசிரியரின் முன்குறிப்பு)
இந்தியாவும் கம்யூனிசமும் என்கிற புத்தகத்தை அம்பேத்கர் எழுத முற்பட்டார் ஆனால் அது முழுமை பெறவில்லை. மார்க்ஸ் குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட்கள் குறித்தும் அவ்வப்போது அம்பேதகர் தனது விமரசனபார்வையை முன்வைத்துள்ளார். அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள என்கிற இரு ஆக்கங்களும்பார்க்கப் படவேண்டியவை. இந்த ஆக்கங்கள் அம்பேத்கரின் ஆங்கில வால்யூம் 3ல் இடம்பெற்றவைதான். இதை தனியாக எடுத்து டெல்டும்டே அறிமுகத்துடன் லெஃப்ட்வேர்ட் பதிப்பகமும் வெளியிட்டுள்ளது.
இந்து சமூக அமைப்பு சுதந்திரமான ஒன்றா என்ற கேள்வியை எழுப்பி அம்பேத்கர் தன் ஆய்வை மேற்கொண்டார் தனிமனிதர் தனக்குத்தானே முழு எல்லையாகிறார். தனி மனிதர் சமூகத்தில் தன்னை உட்படுத்திக்கொள்வது என்பது தன் மேம்பாட்டிற்காகவும், அவசியமான அளவிற்கும்தான். சமூக வாழ்வில் அதன் உறுப்பினர்கள் மத்தியிலான உறவு சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும்.
இவ்விரண்டு அம்சங்களும் அடிப்படைகள் என்றார் அம்பேத்கர். கார்ல் மார்க்சின் எழுத்துக்களால் வர்க்க உணரவு, வர்க்கப்போராட்டம் என்ற கோட்பாடுகள் தோன்றின என்று எண்ணப்படுகிறது. இது முற்றிலும் தவறு. இந்திய மண்ணில்தான் வர்க்க உணர்வும், வர்க்கப் போராட்டமும் நடந்தேறின. ( தமிழ் வால்யூம் 6 பக் 143) (மார்க்சின் சமூகம் பற்றிபுரிதலையோ வர்க்கம் பற்றிய புரிதலையோ அம்பேத்கார் வந்தடையவில்லை அவர் மார்க்சின் வர்க்க போராட்டம் என்றால் என்ன்வென்றே புரிந்துக் கொள்ளாத நிலையில் இந்து மதம் சாதிய பிரச்சினையை மட்டுமே கணக்கில் கொண்டு எதிரி யார் நண்பன்யார் என்பது என்பதனை கணிப்பதில் தவறிழைத்தார் என்பேன்-எனது கருத்து)
அம்பேத்கார் குறிபிடுகிறார், 'சாதி என்பது பன்மையிலதான் இருக்கிறது; ஒருமையில் இல்லை. சாதி என்பது ஒன்றே ஒன்று என்று இருக்க முடியாது- பன்மையிலதான் இருக்கமுடியும். பிரிந்து நிற்பதும் தனித்து நிற்பதுமான வெளிப்பாட்டை சாதி முறையில் காணலாம். இந்த சாதிகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு நடந்துகொள்கின்றன? தனியாக இரு, ஒன்றாக உண்ணாதே, மணவுறவு கொள்ளாதே, தீண்டாதே என்று வழி நடத்துகின்றன.
இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றன் மேலொன்று அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலுள்ள வகுப்பினரை வெறுக்கிறார்கள், கீழமுள்ளவரை அவமதிக்கிறார்கள்.
இந்து சமூக அமைப்பு வரிசைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாடு அடிப்படையானது. வேறுபட்ட 4 வருணங்கள் ஒறு சமமான படுக்கைக்கோட்டில் அமைந்தவை அல்ல. செங்குத்தாக அமைந்தவை. சூத்திரனுக்கு கீழ் தீண்டாதார் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசைப்படுத்தப்பட்ட சமமின்மை கோட்பாடு பொருளாதாரத் துறைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது' என்கிறார்.
தொடரும்....நாளை இன்னும் புரிதலுக்கு