அம்பேத்காரின் வரலாற்று பக்கங்களிலிருந்து
இருபதாம் நூற்றாண்டில் இந்தியத் - துணைக் கண்டத்தில் பெருந்தலைவர்கள் பலர் வாழ்ந்தனர் . அவர்களுள் முன்னணித் தலைவராக வாழ்ந்த அம்பேத்கரின் பெருவாழ்வோ ஒரு தன்மையில் மற்ற எல்லாத் தலைவர்களின் வாழ்வினையும் விஞ்சி நிற்கிறது புழுப்பூச்சியாய் , புன்மைத்தேரையாய் , நாயினும் கீழாய்ச் சமூகத் தில் நடத்தப்பட்ட தீண்டப்படாத ஒரு வகுப்பில் தோன்றி உலகில் உள்ள எந்தவொரு தலைவருக்கும் சரிநிகர் சமானமாகத் தன்கடும் உழைப்பால் , ஒப்பரிய ஆற்றலால் உயர்நிலை எய்தியவர் அம்பேத்கர் .
1920 ஆம் ஆண்டு முதல் 1956 டிசம்பர் 6 ஆம் நாள் தன் இறுதி மூச்சு அடங்கும் வரை இந்திய நாட்டில் சமூகம் , அரசியல் தொடர்பாக நடந்த நிகழ்ச்சிகள் , எடுக்கப்பட்ட முடிவுகள்முதலானவற்றின் பேரில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்த வரலாற்று நாயகர் அம்பேத்கர் . சுயமரியாதைச் சுடரொளியாக , தன்னம்பிக்கையின் ஊற்றாக , அஞ்சாமையின் உறைவிடமாக , உயரிய கல்வியாளராக , சிறந்த பொருளியல் வல்லுநராக , ஆற்றல் மிக்க எழுத்தாளராக , பேராசிரிய ராக , வழக்கறிஞராக , மக்கள் தலைவராக , சட்ட மேதையாக ,சமத்துவவாதியாக , ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வீரராக வாழ்ந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யும் பொறுப்பை எனக்கு நல்கிய மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன் - முன்னுரையில்.க . முகிலன தனஞ்சய் கீர் நூல் மொழியாக்கத்திலிருந்து.
கற்றறிந்த அறிஞராகவும் இந்தியாவின் சிறந்த அரசியல் மேதையாகவும் , சிறந்த தலைவராகவும் , விடுதலை வீரராகவும் , இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியாகவும் விளங்கிய டாக்டர் அம்பேத்கரின் முழுமையான இதுநாள் வரையிலான நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய , அதிகாரப்பூர்வமான முதலாவது வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருப்பதில் பெருமகிழ்வும் பெருமிதமும் கொள்கின்றேன் . அரசியல் , சுதந்திரத்தை அடைந்துள்ள இந்தியாவைச் சமூகத் தளத்திலும் பொருளா தார நிலையிலும் சனநாயகம் உடையதாக ஆக்க வேண்டியது இப்போதுள்ள இன்றியமையாத தேவையாகும் . மற்ற தலைவர்
களின் வாழ்க்கையைவிட டாக்டர் அம்பேத்கரின் வாழ்வுதான் இக்குறிக்கோளை உள்ளடக்கியதாகத் திகழ்கிறது . ஒப்பரிய தியாகங் களும் எண்ணற்ற போராட்டங்களும் உயரிய மேதைமையும் கொண்டிலங்கிய அம்பேத்கருடைய வாழ்வின் பெரும்பகுதிபன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த ஆறு . கோடி மக்களான தீண்டப்படாத வகுப்பினரின் விடுதலைக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது ; ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது . இந்தியாவில் சமூகச் சனநாயகத் தையும் பொருளாதாரச் சனநாயகத்தையும் ஏற்படுத்த வேண்டும்என்பதற்காகத் தீரமுடன் போராடிய தலைவரின் பெருமைமிகு வாழ்வு இது !சமூகத்தால் ஒதுக்கிவைக்கப் பட்ட , இழிவாகக் கருதப்பட்ட , தீண்டப்படாத வகுப்பில் தோன்றிய அம்பேத்கர் புகழின் - உச்சிக்குச் சென்றார் . வெறுத்துஒதுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அவர் இந்நாட்டிற்கே சட்டத்தைவரைந்தளிக்கும் நிலைக்கு உயர்ந்தார் . நசுக்கப்பட்டுக் கிடந்த தீண்டப்படாத வகுப்பு மக்களைச் சமூகத்தில் மற்ற மனிதர்களுக்குச் சமமானவர்களாக ஆக்குவதற்காக அம்பேத்கர் தீரமுடன் நடத்தியபோராட்டங்கள் இந்திய நாட்டின் வரலாற்றிலும் , மானுடவிடுதலையின் வரலாற்றிலும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பட்ட ஓர் அத்தியாயமாகத் திகழும் .டாக்டர் அம்பேத்கர் எனக்கு அளித்த பேட்டிகளுக்காகவும் , சில நிகழ்ச்சிகள்பற்றிய என் அய்யங்களைத் தெளிவுபடுத்தியமைக் காகவும் அன்னாருக்கு நான் மிகுந்த நன்றிக்கடப்பாடு உடையவனாக உள்ளேன் . கையெழுத்துப் படிகளையும் அச்சு மெய்ப்பு களையும் அன்புடன் படித்துத் திருத்திய என் நண்பர்களுக்கும் , இந்நூலின் உருவாக்கத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னைஊக்குவித்த , என் வாழ்வின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டி ருப்போர்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .-தனஞ்சய் கீர் எழுதிய முதற்பதிப்பின் முன்னுரை
இந்துச் - சமூகஅமைப்பில் கடைநிலை மக்கள் இவர்களே. பல நூற்றாண்டுகளாகச்சாதி இந்துக்கள் இவர்களைத் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கிவைத்துள்ளனர் . 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம்தீண்டாமையை ஒழிப்பதற்கு வழிவகை செய்வதற்கு முன்னர்வரைதீண்டப்படாதவர் , அணுகக்கூடாதவர் , காணக்கூடாதவர் என்றமுப்பிரிவினராகத் தீண்டப்படாதவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர் .முப்பது கோடி இந்துக்களில் தீண்டப்படாதவர்கள் ஆறு கோடிபேர் . அதாவது இந்துஸ்தானத்தில் இவர்கள் இருபது விழுக்காடு இருக்கின்றனர் . சுருங்கக் கூறுவதானால் ஒவ்வொருஅய்ந்தாவது இந்துவும் தீண்டப்படாத ஆணாகவோ ,பெண்ணாகவோ , குழந்தையாகவோ இருக்கிறார்கள்தீண்டப்படாதவர்கள்நாட்டின்பல்வேறுபகுதிகளில் பல பெயர்களால் குறிக்கப்படுகின்றனர் .
கிராமத்திற்குத் தொண்டூழியம் செய்பவர்கள் . இவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் உணவு , மற்றும் தானியத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் ; செத்த ஆடுமாடுகளை உண்கின்றனர் . இவ்வாறாக இவர்களுக்குச் சமுதாய , மத மற்றும் குடிமை உரிமைகள் மறுக்கப்பட்டன . அதனால் இவர்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்ள வாய்ப்பே இல்லை . எனவே , தீண்டப்படாத இந்துக்களின் வாழ்க்கை மிகப் பழங் காலத்து வாழ்க்கையாகவே இருக்கிறது . சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட , கொஞ்சமும் போதாத , தூய்மையற்ற சூழலில் பல துன்பங்களுடன் இவர்கள் வாழ்க்கை தொடர்கிறது . சுருக்கமாகச் சொல்வதானால் இவர்கள்கடனில் பிறந்து கடனிலேயே மடிகிறார்கள் ; தீண்டப்படாதவர்களா கவே பிறக்கிறார்கள் ; தீண்டப்படாதவர்களாகவே வாழ்கிறார்கள் ; தீண்டப்படாதவர்களாகவே இறக்கிறார்கள்.
கிராமத்திற்குத் தொண்டூழியம் செய்பவர்கள் . இவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் உணவு , மற்றும் தானியத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் ; செத்த ஆடுமாடுகளை உண்கின்றனர் . இவ்வாறாக இவர்களுக்குச் சமுதாய , மத மற்றும் குடிமை உரிமைகள் மறுக்கப்பட்டன .
தீண்டாமை எவ்வாறு தோன்றியது என்பது வரலாற்று வல்லுநர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது . ஆயினும் சாதியமைப்பு பற்றிய பிறழ்வான உணர்ச்சியின் தீய விளைவே தீண்டாமை என்று பொதுவாகக் கருதப்படுகிறது . வேதக் காலத்து ஆரியர்களிடையே வருணப் பிரிவினை இல்லை .
வெவ்வேறுபட்ட தொழில்கள் , பிரதேசப் பிரிவினைகள் , பல்வேறுபட்ட வாழ்க்கை முறைகள் , உணவுப் பழக்கங்கள் , மூட நம்பிக்கைகள் , பழக்கவழக்கங்கள் ஆகியவை முதன்மையான நால் வருணத்தை மேலும் கூறுபோட்டு மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட உள்சாதிகளை உருவாக்கின
இந்தியாவின் ஆதிக் குடிமக்களுடன் இனக் கலப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக ஆரியர்கள் சாதி முறையை வகுத்தனர் என்றும் கருதப்படுகிறது
மூன்றாவதாக ஒரு கருத்தும் நிலவுகிறது . பண்டை நாளில் குலக் குழுவிலிருந்து பிரிந்த மக்களே ( Broken Men ) இன்றைய தீண்டப்படாதவர்கள் என்றும் , பின்னாளில் இவர்கள் புத்த
மதத்தைத் தழுவினர் என்றும் கருதப்படுகிறது . இவர்கள் தாழ்வுற்றிருந்த காலத்தில் வேத இந்து தருமத்தை ஏற்க மறுத்தனர் ; மாட்டிறைச்சி உண்பதையும் கைவிடவில்லை ; எனவே இவர்களைத் தீண்டப்படாதவர்கள் என்று பிரித்து ஒதுக்கினார்கள் .
பிரித்தாளும் இந்தச் சாதிய முறைமை எதிர்ப்பு என்பதே இல்லாமல் தொடர்ந்ததா ? உறுதியாக இல்லை
இவ்வாறு கூறும் வரலாற்று பக்கங்களின் நமது பணியை நாம் பதிவு செய்ய வேண்டும் அல்லவா அதன் மூலம் தொடரவே என் முயற்சி இவை