கம்யூனிஸ்ட்‌ கட்சியை முன்வைத்து- சிறு வெளியீடு ஜூன்‌ 2022 ஆர்‌.பட்டாபிராமன்‌

Skip to main content

Full text of "CPI Constitution"

See other formats


காலமாற்றத்தில்‌ அமைப்புவிதிகள்‌ 


(கம்யூனிஸ்ட்‌ கட்சியை முன்வைத்து) 


சிறு வெளியீடு ஜூன்‌ 2022 


ஆர்‌.பட்டாபிராமன்‌ 


காலமாற்றத்தில்‌ அமைப்பு விதிகள்‌ 


( கம்யூனிஸ்ட்‌ கட்சியை முன்வைத்து) 


ஆர்‌ பட்டாபிராமன்‌ 


இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி 1968ல்‌ பிளவுண்டது. அதிலிருந்து சிபிஅய்‌ (எம்‌) 
உருவானபோது அமைப்புவிதிகளை அவர்கள்‌ எப்படி எழுதிக்கொண்டார்கள்‌ என்ற 
ஆர்வம்மேலிட்டது. அந்த வரலாற்று பக்கங்களுக்கு செல்ல நேர்ந்தது. இப்படி 
அவ்வப்போது செல்வது வழக்கமென்றாலும்‌ இம்முறை 'அமைப்பு விதிகள்‌' என்கிற 
80601௦ அம்சத்தில்‌ எப்படி மாற்றங்கள்‌ உருவாயின என பார்க்கலாம்‌ என்ற உந்துதல்‌ 
எழுந்தது. 


பார்க்கலாம்‌ என தோன்றியபின்‌ ஏன்‌ 1964 ? அதற்கு முன்னர்‌ 1925 இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி 
உதயக்‌ காலத்திற்கே போகலாமே என்கிற வரலாற்று மாணவன்‌ என்னுள்‌ 
விழித்துக்கொண்டான்‌. எந்த சர்ச்சைக்காகவும்‌ இக்கட்டுரை எழுதப்படவில்லை. 
ஆவணங்கள்‌ பேசும்‌ தகவல்கள்‌ அடிப்படையில்‌ பேசப்படுகிறது. அமைப்பு நிலையின்‌ 
ஒவ்வொரு ஷரத்து குறித்த ஆய்வு முயற்சியல்ல இக்கட்டுரை. அது கூட 
செய்யப்படவேண்டும்‌ என்பது வேறு விஷயம்‌. சில மாற்றங்கள்‌ நான்‌ பார்த்த அளவில்‌ 
எவ்வாறு நடந்துள்ளன என சொல்லும்‌ முயற்சியாக இக்கட்டுரையை 
எடுத்துக்கொள்ளலாம்‌. 


1920 அக்டோபர்‌ 17ல்‌ வெளிநாடான தாஷ்கண்டில்‌ ஏழுபேர்‌ (எம்‌ என்‌ ராய்‌, ஆச்சார்யா 
திருமலா உள்ளிட்ட) அமைத்ததாக அறிவித்த நக பார்‌ Party 100 யை தனது பிறந்த 
நாளாக சிபிஎம்‌ அனுசரிக்கிறது. ஒன்றுபட்ட சிபிஅய்‌ இந்தியாவில்‌ கான்பூரில்‌ கூடி 
Communist Party of India  அமைத்துக்கொள்ளப்பட்ட டிசம்பர்‌ 26, 1925 யை பிறந்த நாளாக 
எடுத்துக்கொண்டது. வெளிநாட்டு குறிப்பாக ருஷ்யா மற்றும்‌ அகிலத்தின்‌ 
செல்வாக்கில்‌ செயல்பட்டவர்கள்‌ என்று வேண்டுமானால்‌ விமர்சிக்கலாம்‌. 
வெளிநாட்டில்‌ பிறந்த கட்சி என்ற தாக்குதலை சிபி அய்‌ மீது எவரும்‌ 
தொடுக்கமுடியாது. 


2 


1925 டிசம்பரில்‌ சிபிஅய்‌ தனக்கான ளிய - அமைப்பு விதிகள்‌ ஒன்றை 
வெளியிட்டது. சி அபி அய்‌ வெளியிட்ட வரலாற்று தொகுப்பான D௦cuments of the 
History of the Communist Party of India 1923-ல்‌ இந்த அமைப்பு விதிகள்‌ இடம்‌ 
பெற்றுள்ளன. சிபிஎம்‌ கட்சி வரலாற்று ஆவணங்களை Documents of the Communist 
Movement என்ற பெயரில்‌ வெளியிட்டுள்ளது. அதன்‌ 1917-28 தொகுப்பில்‌ (ரபா 
Communist Conference  எனத்தலைப்பிட்ட ஒரு பகுதியை சேர்த்து கொடுத்துள்ளனர்‌. 
அதில்‌ முசாபர்‌ அகமது நினைவுக்குறிப்புகளில்‌ சொல்லப்பட்ட செய்திகளை மட்டும்‌ 
வெளியிட்டு அந்த 'சாப்டரை அவர்கள்‌ முடித்துக்கொண்டுவிடுகின்றனர்‌. எனவே 
அங்கு சிபிஅய்‌ உதயம்‌- அமைப்புநிலை பற்றிய ஆவணம்‌ சேர்த்து 
வெளியிடப்படாததைக்‌ காண்கிறோம்‌. 


சிபிஅய்யின்‌ அந்த அமைப்பு விதிகள்‌ 12 கரச யைக்‌ கொண்டிருந்தன. முதல்‌ ஷரத்து 
'அமைப்பின்‌ பெயர்‌ என்ன என்பதாக இல்லை. அது 'நோக்கம்‌' என்பதாக இருந்தது. 
தொழிலாளர்‌ விவசாய குடியரசை அமைப்பது- உற்பத்தி விநியோகத்தை 
சோசலிசமாக்குவது- அதற்கு பிரிட்டிஷ்‌ ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை 
போன்றவை நோக்கம்‌ என சுருக்கமாக சொல்லலாம்‌. 


அடுத்த ஷரத்து அகில இந்திய மாநாடு கூடும்‌ காலம்‌ குறித்ததாக இருந்தது. 
காங்கிரஸ்‌ என்பது தான்‌ பெயர்‌. இப்போது போல்‌ மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை 
என்றில்லாமல்‌ 'ஆண்டுதோறும்‌' என எழுதப்பட்டிருந்தது. பொதுவாக அக்டோபரில்‌ 
என்றும்‌ வேறு ஓர்‌ இடத்தில்‌ கிறிஸ்துமஸ்‌ காலத்தில்‌ என்றும்‌ சொல்லப்பட்டுள்ளன. 
அதேபோல்‌ சிறப்பு காங்கிரஸ்‌ கூட்டுவதற்கான தேவை அவசியம்‌ இருந்தால்‌ 
கூட்டப்படூவது பற்றியும்‌ அந்த ஷரத்து பேசுகிறது. 


அடுத்தது 'கட்சியின்‌ உறுப்புகள்‌ எனும்‌ பகுதி. அப்போது '௱றாா5' எனும்‌ பதம்‌ 
பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது '௦ஏகா5' என்று சொல்லப்படுகிறது. அதில்‌ அகில 
இந்திய, பிரதேச (மாநில) , மாவட்ட என்பதுடன்‌ கட்சியுடன்‌ இணைக்கப்பட்ட 
தொழிற்சங்க அமைப்புகள்‌ எனும்‌ தனி காம்பொனட்‌ பேசப்பட்டுள்ளது. 


அடுத்தது 'உறுப்பினர்‌' வயது தகுதி 18 என்பது இன்றளவும்‌ தொடர்ந்து எடுத்துச்‌ 
செல்லப்பட்டுள்ளது. ஆனால்‌ 14-18 வயது பிரிவினர்‌ குறித்து தனி செல்‌ என்று 
குறிப்பும்‌ உள்ளது. இப்போது அப்படி இல்லை. 18 வயது மட்டுமே பேசப்படுகிறது. 


2 


அடுத்து சுவாரஸ்யமான ஷரத்து 'மாநாட்டு தலைவர்‌' எனும்‌ பகுதி. ரகச! எனக்‌ 
குறித்துள்ளனர்‌. அவர்தான்‌ மாநாட்டில்‌ தலைமை உரை தருவார்‌. சிங்காரவேலர்‌ 
1925ல்‌ தந்தார்‌ எனப்‌ பார்க்கிறோம்‌. இந்தப்பெயரை தேர்வு செய்வதற்கு மிகுந்த 
ஜனநாயக முறையில்‌ அமைப்பு விதி பேசுகிறது. மாநிலங்கள்‌ பெயரை 
பரிந்துரைக்கும்‌. செண்ட்ரல்‌ எக்சிக்யூட்டிவ்‌ பரிசிலீத்து திரும்ப மாநிலங்களுக்கு 
அனுப்பி கருத்தறிந்து இறுதி செய்யும்‌ என்ற முறையை அமைப்பு விதியில்‌ 
வைத்திருந்தனர்‌. அப்படி தேர்வான தலைவர்தான்‌ கட்சி காங்கிரசால்‌ 
தேர்ந்தெடுக்கப்படும்‌ ௦6: கூட்டங்களுக்கு தலைமை அந்த ஆண்டில்‌ வகிப்பார்‌. 
இப்போது தலைமைக்குழு (நாஷப்பா) எனப்‌ பயன்படுத்தப்படுகிறது. 


ஆர்ட்டிகல்‌ 12 என்பதுதான்‌ மத்திய செயற்குழுவால்‌ 3 பொதுச்செயலர்களும்‌ இரு 
பொருளர்களும்‌ தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து பேசும்‌ ஷரத்து. பின்னர்‌ ஒரு 
பொதுச்செயலர்‌ முறை வந்துவிட்டது. 


பிறகு ஷரத்து எனச்‌ சேர்க்காமல்‌ உறுப்பினர்கள்‌ தரவேண்டிய ‘declaration’ 
சொல்லப்படுகிறது. அதில்‌ நோக்கத்திற்காக நிற்பேன்‌ என்கிற உறுதிமொழியுடன்‌ மிக 
முக்கிய உறுதிமொழி ஒன்றை வைத்திருந்தனர்‌. 'நான்‌ எந்த வகுப்புவாத 
அமைப்பிலும்‌ உறுப்பினர்‌ இல்லை. அது இங்கு உறுப்பினர்‌ ஆவதற்கு தடை என்பதை 
அறிவேன்‌' எனும்‌ உறுதிமொழியது . 


அதேபோல்‌ ஷரத்து அல்லாத பகுதியில்தான்‌ 1925 டிசம்பர்‌ 26ல்‌ கூடிய முதல்‌ 
கம்யூனிஸ்ட்‌ மாநாடு சிபிஅய்‌ எனும்‌ அமைப்பை உருவாக்கியது. அதன்‌ நோக்கம்‌ 
தொழிலாளர்‌ விவசாயிகளின்‌ சுயராஜ்ய குடியரசு- உடனடி நோக்கம்‌ வாழ்க்கை 
ஊதியம்‌, நிலம்‌ , சுரங்கம்‌, வீடுகள்‌, தந்தி தொலைபேசி, ரயில்வே 
உள்ளிட்டவைகளின்‌ தேசிய மயம்‌ . இதற்காக தொழிற்சங்கம்‌, விவசாய 
சங்கங்களைக்‌ கட்டுவது- எந்த அரசியல்‌ கட்சி ஒத்துழைத்தாலும்‌ 
ஒத்துழைக்காவிட்டாலும்‌ இதை இக்கட்சி நிறைவேற்ற பாடுபடும்‌ போன்றவை 
சொல்லப்பட்டுள்ளன. 


அடுத்து தனியாக ஷரத்து அல்லாத பகுதியாக மத்திய செயற்குழுவின்‌ 
மேற்பார்வையில்‌ கல்கத்தா, கான்பூர்‌, மதராஸ்‌, லாகூர்‌, பம்பாயில்‌ பிரதேச 
கமிட்டிகள்‌ செயல்படும்‌ என்பதும்‌ - உறுப்பினர்‌ சந்தா ( 5020௦) 8 அணா என்பதும்‌ 
சொல்லப்பட்டுள்ளன. 


3 


அடுத்து நான்‌ பார்த்த விதிகள்‌ 1934ல்‌ வெளியிடப்பட்டவை. இதை ‘Constitution’ 
அமைப்பு விதிகள்‌ என்று சொல்லாமல்‌ 'Stயe' சட்டவிதிகள்‌ என்று 
சொல்லியுள்ளனர்‌. இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி 1933 டிசம்பரில்‌ புனரமைக்கப்பட்ட 
பின்னர்‌ இந்த விதிகளை உருவாக்கியுள்ளனர்‌. இந்த விதிகள்‌ இன்பிரிகார்‌ எனும்‌ 
அகிலத்தின்‌ பத்திரிகையில்‌ மே 1934ல்‌ வெளியானது. 1935ல்‌ கட்சிக்குள்‌ சைக்ளோ 
நகல்களை கொடுத்துள்ளனர்‌. மீண்டும்‌ 1941ல்‌ அதை 17-6-1941 கட்சி கடிதத்துடன்‌ 
இணைத்து அனுப்பியுள்ளனர்‌. அதில்‌ கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களின்‌ சாரம்‌ 
மட்டுமே இங்கு சொல்லப்படுகிறது. 


இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி 'கம்யூனிஸ்ட்‌ அகிலத்தின்‌' பகுதியாகும்‌. இந்தியாவில்‌ 
பாட்டாளிகளின்‌ (பிராலிடேரியட்‌ எனும்‌ பதம்‌) ஆக உயர்ந்த வர்க்க ஸ்தாபனமாகும்‌. 


நோக்கமாக சோவியத்‌ அதிகாரம்‌ ஒன்றை தொழிலாளர்‌ விவசாயி அரசாங்கம்‌ 
மூலம்‌ உருவாக்குவது. ஏகாதிபத்திய எதிர்ப்பு விவசாயிகள்‌ புரட்சி முழு விடுதலை 
போராட்டங்களை நடத்துவது என்பன சொல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து கம்யூனிஸ்ட்‌ 
அகில திட்டத்தின்‌ படியான சோசலிச வெற்றி மற்றும்‌ பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்‌ 
என அப்பகுதி பேசுகிறது. 


அடுத்து உறுப்பினர்‌ எப்படிப்பட்ட உறுதிமிக்க கட்டுப்பாட்டுடன்‌ இருக்க வேண்டும்‌- 
இரகசியங்களை காக்கவேண்டும்‌- அரசியல்‌ பங்கேற்பு போன்றவற்றைப்‌ பேசுகிறது. 
எவரெல்லாம்‌ கட்சியிலிருந்து '௯ஐச॥' நீக்கப்படவேண்டும்‌ என்பதையும்‌ அந்த tes 
சொல்கிறது. 


நேரிடையாகவோ மறைமுகமாகவோ 'காந்தியத்தை' ஆதரித்து நிற்பவர்‌ -கட்சி 
இரக்சியங்களை காப்பாற்றாதவர்‌- ராய்‌ குரூப்பிற்கு ஆதரவாக  நிற்பவர்‌- 
கம்யூனசத்திற்கு எதிரானவர்‌ ஆகியவர்‌ நீக்கப்படவேண்டியவர்கள்‌. 


அடுத்து கட்சி தன்னை 'தலைமறைவு வாழ்க்கை' கொண்ட கட்சி எனவும்‌ 
சொல்கிறது. வழிகாட்டுதல்‌ எனும்‌ போது ஜனநாயக மத்தியத்துவம்‌ 'mocratic centralism’ 
என்பதைச்‌ சொல்கிறது. அதாவது பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுதல்‌, 
மேல்கமிட்டிக்கு கீழ்கமிட்டி கட்டுப்படுதல்‌, தனிநபர்‌ கூட்டு முடிவைகளுக்கு நிற்றல்‌ 
போன்றவை சொல்லப்படுகின்றன. 


கட்சி காங்கிரஸ்‌ ஆண்டுக்கொருமுறை என சொல்லப்பட்டுள்ளது. 


இப்போது நீக்கம்‌ என்பதில்‌ மேற்கூறிய காந்தி, ராய்‌ , ரகசியம்‌ போன்ற அம்சங்கள்‌ 
சொல்லப்படுவதில்லை. கட்சி விரோத நடவடிக்கையில்‌ இறுதியான ஆயுதமாகவே 
நீக்கம்‌ என்பது இப்போது பின்பற்றப்படுகிறது. 


( இந்த ஆவணத்தை சிபிஎம்‌ வெளியிட்ட 1939-43 வால்யூமில்‌ பார்க்கலாம்‌) 


4 


அடுத்து நான்‌ பார்த்த விதிகள்‌ கட்சியின்‌ இரண்டாவது காங்கிரஸ்‌ கல்கத்தாவில்‌ 
1948ல்‌ ஏற்கப்பட்‌ ஒன்று. தோழர்‌ ரணதிவே பொதுச்செயலராக வரும்‌ காலம்‌. ஜோஷி 
விமர்சிக்கப்பட்ட காலம்‌. 


இந்த அமைப்பு விதிகளில்தான்‌ ஷரத்துகளுக்கு முன்னர்‌ அமையக்கூடிய 'ஒeamble' 
முகப்புரை ஒன்றை எழுதியுள்ளனர்‌. விடுதலைக்கு முன்னரே ஒன்றுபட்ட 
இந்தியாவில்‌ அமையப்பெற்ற அரசியலமைப்பு சபை நாட்டின்‌ அரசியலமைப்பிற்கான 
முகப்புரையை விவாதித்துக்கொண்டிருக்கும்‌ நேரத்தில்‌ இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி 
தனது அமைப்புநிலையில்‌ முகப்புரை ஒன்றை எழுதி நிறைவேற்றிக்கொண்டுவிட்டது 
என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படவேண்டும்‌. நாட்டின்‌ முகப்புரையும்‌ 
கட்சியின்‌ முகப்புரையும்‌ பேசுவது வேறாக இருந்தாலும்‌ நாடூ தனது முகப்புரையை 
ஏற்கும்‌ முன்னர்‌ ஒரு கட்சி தனக்கான முகப்புரையை உருவாக்கிக்கொண்டது என்பது 
பார்க்கப்படவேண்டிய விஷயமாகும்‌. 


கட்சி முகப்புரையில்‌ தனது 'காரக்டர்‌ பற்றிச்‌ சொல்கிறது. நோக்கம்‌ 
தெளிவாக்கப்படுகிறது. கட்சி எத்தகைய அரசாட்சியைக்கொணர விரும்புகிறது- மக்கள்‌ 
ஜனநாயக அரசு-மார்க்சிய லெனினிய வகைப்பட்ட சோசலிசம்‌- எவர்‌ நாட்டின்‌ 
அரசியலில்‌ தலைமை பாத்திரம்‌ வகிக்கவேண்டும்‌- உறுப்பினர்களின்‌ 
சர்வபரித்தியாகம்‌ போன்றவை முகப்புரை வாசகங்களின்‌ சாரம்‌ எனலாம்‌. 


இங்கு தெளிவாக முதல்‌ ஷரத்தில்‌ “பெயர்‌ என்பது வந்துவிடுகிறது. அடுத்து 
தொடர்ந்த காலங்களில்‌ இன்றுவரை அதுவே முதல்‌ ஷரத்தாக இருந்து வருகிறது. 
பெயர்‌ “இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி. அதேபோல்‌ இங்கும்‌ வழிகாட்ட ஜனநாயக 
மத்தியத்துவம்‌ என்பதே சொல்லப்படுகிறது. இன்றுவரை இதில்‌ மாற்றமில்லை. 


பின்னால்‌ வந்த அமைப்பு விதிகளில்‌ காணப்படாத ஒன்று இந்த விதிகளில்‌ 
காணப்பட்டுள்ளது. ஷரத்துகளின்‌ வரிசையில்‌ கீழ்‌ அமைப்பிலிருந்து மேல்‌ 
அமைப்புவரை- உருவாக்கம்‌- அதிகார வரம்புகள்‌ என்பன பேசப்பட்டுள்ளன. அதாவது 
கிளை அமைப்பு முதலில்‌ பேசப்பட்டிருக்கும்‌. அடுத்தடுத்து மாவட்டம்‌, மாநிலம்‌, 
அகில இந்திய அமைப்பு எனப்‌ பேசப்பட்டிருக்கும்‌. 


இங்கும்‌ ஆண்டுக்கு ஒருமுறை காங்கிரஸ்‌ என்பதே விதியாக இருந்தது. 
காங்கிரஸ்தான்‌ கட்சியின்‌ ஆக உயர்ந்த சுப்ரீம்‌ அதாரிட்டி என சொல்லப்பட்டிருக்கும்‌. 
ஆனால்‌ காங்கிரசை யார்‌ கூட்டுவார்கள்‌ என்பது இதில்‌ வச்‌ ஆக இருக்கும்‌. 
காங்கிரஸ்‌ மத்திய கமிட்டியை தேர்வு செய்யும்‌. சிறப்பு காங்கிரசை இந்த மத்திய 
கமிட்டி தேவையெனில்‌- அல்லது கோரல்‌ இருந்தால்‌ கூட்டும்‌. மத்திய கமிட்டி 
பொலிட்ப்யூரோவை தேர்ந்தெடுக்கும்‌. தற்போது சிபிஎம்‌ இந்த CC-PB 
முறையைத்தான்‌ வைத்துக்கொண்டுள்ளனர்‌. ஒன்றுபட்ட சிபிஅய்‌ தேசியகவுன்சில்‌- 
நிர்வாகக்குழு- செயற்குழு முறைக்கு சென்றது. அதையே இன்றுவரை சிபிஅய்‌ 
பின்பற்றி வருகிறது. 

சிசி கமிட்டி மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூடும்‌ என விதி பேசுகிறது. வெகுஜன 
இயக்கத்தில்‌ பணியாற்றும்‌ கட்சி உறுப்பினர்‌, உட்கட்சி விவாதம்‌, கட்சி கட்டுப்பாடு, 
கட்சி விதிகள்‌ என 14 ஷரத்துகள்‌ கொண்டதாக இந்த 1948 விதிகள்‌ 


அமைக்கப்பட்டிருந்தன. 


( மேலே கண்ட ஆவணம்‌ சிபிஎம்‌ வெளியிட்ட 1944-1948 காலத்தொகுப்பில்‌ உள்ளது) 


5 


அமிர்தசரஸ்‌ சிறப்பு மாநாட்டில்‌ ஏப்ரல்‌ 1958ல்‌ ஏற்கப்பட்ட அமைப்புவிதிகள்‌ 
விரிவானதாகவும்‌ புதிய அனுபவங்களை கணக்கில்‌ கொண்டதாகவும்‌ 
அமைந்திருந்தது. இந்த விதிகள்‌ தோழர்‌ அஜாய்‌ கோஷ்‌ பொதுச்செயலர்‌ காலத்தில்‌ 
உருவானவை. இதன்‌ நகல்‌ மத்திய கமிட்டியால்‌ (சிசி) ஏற்கப்பட்டு அது குறித்த 
அறிமுக கட்டுரையை தோழர்‌ கோஷ்‌ அப்போது மாத இதழாக வந்துகொண்டிருந்த 
நியூஏஜ்‌ பத்திரிகையில்‌ எழுதியிருந்தார்‌. அப்படி ஒரு விரிவுரை அறிமுகவுரை 
நிச்சயமாக அன்று பயன்பட்டிருக்கும்‌- இன்று படிப்பவர்களுக்கும்‌ பயனுள்ளதாக 
இருக்கும்‌. 

தோழர்‌ அஜாய்‌ முகப்புரையில்‌ சில மாற்றங்கள்‌ செய்யப்பட்டதைச்‌ 
சொல்லியிருப்பார்‌. அந்த முகப்புரை மிகத்‌ தெளிவாக எழுதப்பட்டதாகவே எனக்கு 
தோன்றுகிறது. அதே நேரத்தில்‌ அஜாய்‌ மார்க்சியம்‌: லெனினியம்‌ எனும்‌ 
அடிப்படையில்‌ நின்றுகொண்டுதான்‌ முகப்புரை பேசும்‌ என்கிற (0௦௪0௦ 
தன்மையைச்‌ சொல்வார்‌. 


அதேபோல்‌ கட்சியின்‌ காரக்டரில்‌ மாற்றம்‌ சற்று தெரியும்‌ . தொழிலாளிவர்க்கத்தின்‌ 
அரசியல்‌ கட்சி என்று சொல்லப்பட்டிருக்கும்‌. இதில்‌ கட்சிக்குள்‌ விடுதலை அரசியல்‌ 
அமைப்பு சட்டத்தைக்‌ கணக்கில்‌ கொண்டு விவாதம்‌ எழுந்துள்ளது. ஏன்‌ நாம்‌ 
'ஒர்க்கிங்‌ கிளாஸ்‌ கட்சி எனச்‌ சொல்லவேண்டும்‌- 'மக்களுக்கான கட்சி' எனச்‌ ஏன்‌ 
சொல்லக்கூடாது என்பது விவாதம்‌. மாலெ , வர்க்கப்போராட்டம்‌ எனச்‌ 
சொல்லிவிட்டு பொதுப்படையாக மக்கள்‌ என பேசமுடியாது என அக்கருத்து 
நிராகரிக்கப்பட்டது. 


தொழிலாளி வர்க்க அதிகாரம்‌- மக்கள்‌ ஜனநாயக அரசு- சோசலிசம்‌ கம்யூனிசம்‌ 
நோக்கி என்பது இலக்காக சொல்லப்பட்டிருக்கும்‌. 


தனது செயல்களை ஜனநாயக மத்தியத்துவம்‌ அடிப்படையில்‌ கட்சி 
அமைத்துக்கொள்வது பேசப்பட்டிருக்கும்‌ அதற்கு நல்ல விளக்கமும்‌ 
தரப்பட்டிருக்கும்‌. இது குறித்தும்‌ விவாதம்‌ வந்தது. ஜனநாயக மத்தியத்துவம்‌ மிக 
ஆபத்தானது என்ற கருத்து சோவியத்தின்‌ சில நிகழ்வுகளை கணக்கில்கொண்டும்‌ 


பேசப்பட்டது. காங்கிரஸ்‌, பிரஜா சோசலிஸ்ட்கள்‌ போல இந்த கட்சி 
செயல்படமுடியாது என்ற பதில்‌ அவர்களுக்கு கிடைத்தது. புரட்சிகர செயல்களை 
முன்வைத்து போர்க்குணமுள்ள புதியவகை கட்சி ஜனநாயக மத்தியத்துவம்‌ 
அடிப்படையில்தான்‌ செயல்படமுடியும்‌ என ஏற்கப்பட்டு வேறு கருத்துகள்‌ 
நிராகரிக்கப்பட்டன. 


மக்கள்‌ ஜனநாயக அரசு உருவாகி சோசலிசம்‌ கட்டும்போது அதற்கான 
அரசியலமைப்பு விதிகள்‌ இருக்கும்போது அதை ஏற்றால்‌ எதிர்‌ கட்சியாக செயல்பட 
அனுமதி, விரிவான தனிநபர்‌ சுதந்திரம்‌ போன்றவை எதிர்காலத்திற்கானவையாக 
சொல்லப்பட்டன. 


முதல்முறையாக மா-லெ சிந்தனையுடன்‌ 'இந்திய எதார்த்த நிலைமைகளை 
பொருத்தி' என்பது பேசப்பட்டிருந்தது. இந்திய வரலாற்றை கற்பது என்பதன்‌ 
அவசியத்தை தனியாக அஜாய்‌ வற்புறுத்தி சொல்லியிருப்பார்‌. அப்படி ஒரு 
வரலாற்றாய்வு இருந்தால்‌ கட்சியின்‌ திட்டம்‌- கொள்கைகள்‌ வடிவமைப்பில்‌ அவை 
பேருதவியாக இருக்கும்‌ என்ற புரிதலையும்‌ அஜாய்‌ வைத்தார்‌. இந்த நாட்டின்‌ மரபு- 
கலாச்சாரம்‌ ஆகியவற்றுடன்‌ பாராமுகமாக கட்சி இருக்க முடியாதென்பதையும்‌ அவர்‌ 
தெளிவுபடுத்தினார்‌. 


அதே போல்‌ கேடர்களின்‌ சிந்தனையாற்றலுக்கு உகந்த கட்சி வாழ்க்கை சூழல்‌ 
ஏற்படுத்தவேண்டிய அவசியம்‌ பற்றியும்‌ அவர்‌ பேசியிருந்தார்‌. கட்சிக்குள்‌ அது 
விரிந்த ஜனநாயக பரவலை உருவாக்கும்‌ எனக்‌ கருதினார்‌. இந்த விதிகளில்தான்‌ 
கட்சி தேசிய கவுன்சில்‌- சி இ சி என்கிற மத்திய நிர்வாகக்குழு, செயற்குழு எனும்‌ 
அடுக்கு முறைக்கு தன்னை மாற்றிக்கொண்டது. பொதுச்செயலர்‌ என்பது முன்பே 
ஷரத்தின்‌ படியிலான பொறுப்பாக ஆக்கப்பட்டுவிட்டது. 


இனி ஷரத்துக்களின்‌ சில அம்சங்களை பார்க்கலாம்‌. முதலில்‌ ஷரத்தில்‌ இடம்‌ 
பெறாத முகப்புரை. கட்சி தொழிலாளிவர்க்கத்தின்‌ வேன்கார்டு , ஆக உயர்‌ அமைப்பு 
வடிவம்‌ என அதில்‌ சொல்லப்பட்டது. இந்த கட்சி எப்படி பிறந்தது என்பதுதான்‌ இந்த 
முகப்புரையின்‌ சிறப்பம்சம்‌. இந்திய புரட்சியாளர்கள்‌ சோவியத்‌ புரட்சியால்‌ 
ஈர்ப்பகொண்டு இங்கு பிரிட்டிஷ்‌ ஏகாதிபத்தியத்தை விரட்டி சோசலிச சோவியத்‌ 
உருவாக்க விழைந்த பின்னனியில்‌ விடுதலைப்போரில்‌ பிறந்த கட்சி. முதலில்‌ 
முழுவிடுதலை எனப்‌ பேசியவர்களை கொண்ட கட்சி. முதலில்‌ கட்சி என்ற 
வகையில்‌ சோசலிசம்‌ எனும்‌ பேனரை உயர்த்திய கட்சி. தனது கொள்கைக்காக 


விடுதலைப்‌ போராட்டத்திற்காக பல களப்பலிகளைக்‌ கொடுத்த கட்சி என்ற 
சிறப்புகளை முகப்புரை பேசும்‌. 


இந்தியாவில்‌ மக்கள்‌ ஜனநாயகம்‌ ஏற்படுத்தி சுரண்டலை ஒழிப்பது என்கிற 
நோக்கத்தைச்‌ சொல்லும்‌. அதன்‌ வழியில்‌ சோசலிசம்‌- கம்யூனிசம்‌ இந்தநாட்டில்‌ 
என்று முகப்புரை பேசியது. உடனடிக்‌ கடமைகள்‌ குறித்தும்‌ முகப்புரை பேசாமல்‌ 
இல்லை. குறிப்பாக சாதி, வகுப்புவாதம்‌, தீண்டாமை போன்ற காலத்திற்கு 
ஒவ்வாதவை எதிர்த்த போராட்டம்‌ பற்றி பேசும்‌. நாட்டை துண்டாடநினைக்கும்‌ 
பிரிவினை சக்திகளை எதிர்த்து உறுதியான போராட்டம்‌ என்ற பதிவும்‌ அதில்‌ 
இருக்கும்‌. வெளிநாட்டுக்கொள்கையெனில்‌ பஞ்சசீலம்‌ என்பதே என 
ஏற்கப்பட்டிருந்தது. கட்சி மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில்‌ இந்திய தல 
நிலைமைகளை கணக்கில்கொண்டு கொள்கைகளை அமுல்படுத்தும்‌. கட்சி 
பாட்டாளிவர்க்க சர்வதேசியம்‌ என்பதை உயர்த்தி பிடிக்கும்‌. 


சோசலிசத்தை 'அமைதியான வழிகளில்‌ கொணர' அனைத்து முயற்சிகளையும்‌ கட்சி 
எடுக்கும்‌. அதற்காக சக்திவாய்ந்த மக்கள்‌ இயக்கத்தைக்‌ கட்டும்‌. பாராளுமன்றம்‌ 
மூலம்‌ பெரும்பான்மை பெற்று மக்கள்‌ விருப்பங்களை நிறைவேற்றும்‌ இடமாக 
அதை மாற்றும்‌. 


ஜனநாயக மத்தியத்துவம்‌ என்பதற்கு வழக்கமாக தரும்‌ விளக்கத்துடன்‌ ஒரு 
முக்கிய விளக்கமும்‌ இங்கு சேர்ந்துள்ளதைப்பார்க்கலாம்‌ : 
“Democratic centralism means central leadership based on full inner party democracy and inner party 


democracy under the guidance of centralised leadership" 


Minority- Majority, Individual- collective, Lower committee- higher equations வழக்கம்போல்‌ 
சொல்லப்பட்டிருக்கும்‌. 


கட்சி காங்கிரஸ்‌ இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்கிற முடிவை அமிர்தசரஸ்‌ 
எடுத்தது. இம்முறை முகப்புரையைத்‌ தொடர்ந்து 35 ஷரத்துகள்‌ இடம்பெற்றன. 
தொடர்ந்த ஆண்டுகளில்‌ இந்த 35 என்கிற எண்ணிக்கை இருந்து வரலானது. 


( CPIM 1957-61 volume ல்‌ மேற்கூறிய விதிகள்‌ இடம்‌ பெற்றுள்ளன. ஒன்றுபட்ட 0 
தனி வெளியீடாக இந்த விதிகளை வெளியிட்டிருந்தது- தமிழில்‌ அஜாய்‌ கோஷ்‌ 
எழுதியதை மொழிபெயர்த்து அமிர்தசரஸ்‌ காட்டிய வழி என்கிற பிரசுரத்தை மாநில 
கமிட்டி கொண்டு வந்தது.) 


10 


11 


6 


1964 ஏப்ரலில்‌ தேசியகவுன்சில்‌ உறுப்பினர்களில்‌ 32 பேர்‌ கூட்டத்திலிருந்து 
வெளியேறி கட்சிக்கு எதிராக போர்க்கொடி. இணையான கட்சி அமைப்போம்‌ 
என்றனர்‌. இந்த தலைவர்கள்தான்‌ சிபிஎம்‌ என்கிற தனி கட்சியை உருவாக்கினர்‌. 1961 
விஜயவாடா காங்கிரசிலிருந்தே பிரச்னை தொடர்ந்தது. கட்சிக்குள்‌ சமரச முயற்சிகள்‌ 
வெற்றிபெறாமல்‌ போனது. சீனா படையெடுப்பு குறித்த பார்வையும்‌ வேறுபாடுகளை 
அதிகமாக்கியது. 1962 நவம்பரிலிருந்து தனி மய்ய செயல்பாடுகள்‌ உருவாயின. இரு 
பிரிவாக தேசியக்‌ குழு உறுப்பினர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ 7வது கட்சி காங்கிரசை 
கல்கத்தாவில்‌ 1964 நவம்பரில்‌ சிபிஎம்‌ ஆனவர்களும்‌, டிசம்பர்‌ 1964ல்‌ சிபிஅய்யில்‌ 
தங்கியவர்களும்‌ நடத்தினர்‌. இருவரும்‌ அங்கு அமைப்பு விதிகளையும்‌ 
வெளியிட்டனர்‌. 


7வது காங்கிரசிற்கு வைத்த அமைப்பு நிலையில்‌ சிபிஅய்‌ இரு பக்கம்‌ பிரிந்து 
கிடந்தவர்கள்‌ குறித்த எண்ணிக்கையை 1962 உறுப்பினர்‌ அடிப்படையில்‌ 
மாநிலவாரியாக வெளியிட்டது. சிபிஅய்யில்‌ தங்கியவர்‌ 1,07,762 என இருந்தால்‌ ஈக 
ற்‌ பக்கம்‌ 40392 பேர்‌ சென்றதாகவும்‌ , 13048 பேர்‌ பா எனக்‌ காட்டியிருந்தனர்‌. 
இது தமிழ்நாட்டில்‌ 15015, 4300, 2000 எனக்‌ காட்டப்பட்டது. நாடாளுமன்ற 
உறுப்பினர்களாக இருந்த 32 பேரில்‌ 16,11,5 என்ற அளவில்‌ இந்த எண்ணிக்கை 
அமைந்தது.. ராஜ்யசபாவில்‌ இருந்த 11 பேரில்‌ 5,42 என்ற அளவில்‌ பிரிவு இருந்தது. 
30 சத அள்வில்‌ வெளியேறியது என்பதை மிகத்‌ தீவிர பிரச்னைதான்‌ என சிபிஅய்‌ 
கருதியது. 


சிபிஅய்‌ 7வது பம்பாய்‌ காங்கிரஸ்‌ ஏற்றுக்கொண்ட அமைப்புநிலை விதிகளில்‌ 35 
ஷரத்துகள்‌ இருந்தன. ஆனால்‌ முகப்புரை எழுதப்படவில்லை. 7வது காங்கிரசில்‌ 
உருவாக்கப்பட்ட திட்ட அடிப்படையில்‌ சில உரிய மாற்றங்களை தேசியக்‌ கவுன்சில்‌ 
செய்திட அறிவுறுத்தப்பட்டது. முகப்புரை இல்லை என்பதால்‌ அமைப்புவிதிகள்‌ 
அமுலாக்கத்தில்‌ தடையில்லை என்றது கட்சி. காங்கிரஸ்‌ மூன்று ஆண்டுகளுக்கு 
ஒருமுறை கூட்டப்படும்‌ என்ற முக்கிய திருத்தம்‌ தவிர வேறு பெரிய மாற்றங்கள்‌ 
இல்லை எனலாம்‌. 


பிரிந்து சென்றவர்களும்‌ தங்கள்‌ கல்கத்தா நவம்பர்‌ 1964 காங்கிரசை சிபிஅய்யின்‌ 7 
வது காங்கிரஸ்‌ என்றனர்‌. அவர்களும்‌ தங்கள்‌ அமைப்புநிலையை வெளியிட்டனர்‌. 
முகப்புரை என ஏதுமில்லை. 


12 


கட்சியின்‌ பெயரை இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி என்றே முதல்‌ ஷரத்தில்‌ 
வெளியிட்டனர்‌. உறுப்பினராதல்‌ பற்றிய ஷரத்தில்லை. ஆனால்‌ கார்டு- புதுப்பித்தல்‌ 
பற்றி இருந்தது. 


கட்சி காங்கிரஸ்‌ ஆக உயர்ந்த அதிகார அமைப்பு என ஏற்கப்பட்டது. காங்கிரஸ்‌ 
கூடல்‌ அமிர்தசரசில்‌ சொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதே 
சொல்லப்பட்டது. 1958ல்‌ ஒன்றுபட்ட கட்சியில்‌ ஏற்கப்பட்ட தேசியகவுன்சில்‌ 
என்பதற்கு பதில்‌ ரணதிவே கால 1948ல்‌ இருந்த சிசி மத்திய கமிட்டியை 
உருவாக்கினர்‌. 


ஜனநாயக மத்தியத்துவம்‌, கட்சி கட்டுப்பாடு போன்ற ஷரத்துகள்‌ இருந்தன. 
மாநிலம்‌, மாவட்டம்‌, கிளை என அனைத்து கீழ்‌ அமைப்புகளும்‌ ஒரே ஷரத்தில்‌ 
வைக்கப்பட்டன. மொத்த ஷரத்துகள்‌ 25 ஆக குறைக்கப்பட்டன. 


இதில்‌ கவனிக்க வேண்டிய அம்சம்‌ பிரிந்து சென்று தனியாக 7வது காங்கிரசை ஒரு 
மாதம்‌ முன்பாக நவம்பர்‌1964ல்‌ நடத்தியவர்கள்‌ தங்கள்‌ பெயரை அமைப்புவிதியில்‌ 
P| என்றே எழுதிக்கொண்டனர்‌ என்பதாகும்‌. 


(மேற்கூறிய விதிகளை சிபிஅய்‌ பெயரிலேயே ஜனவரி 1965ல்‌ சிபிஎம்‌ தலைவர்கள்‌ 
வெளியிட்டிருந்தனர்‌) 


13 


7 


சிபிஅய்‌ தனது 8வது காங்கிரசை பிப்ரவரி 1968ல்‌ நடத்தியது. அமைப்பு விதிகளும்‌ 
வெளியிடப்பட்டன. முகப்புரையில்‌ இந்தியாவில்‌ சோசலிச சமூகம்‌ அமைப்பது 
பேசப்பட்டது. மார்க்சிய லெனினியத்தை நிதிய நிலைமைகளுக்கேற்ப அனுசரித்தல்‌ 
சொல்லப்பட்டது. proletarian dictatorship என்று சொல்லப்படாமல்‌ pஓpரoletarian statehood 
சோசலிசம்‌ கட்ட அவசியம்‌ எனபது சொல்லப்பட்டிருந்தது. சோசலிசம்‌ அதன்‌ இறுதி 
இலக்கான்‌ கம்யூனிச சமூகத்தை இந்தியாவில்‌ அமைக்க கட்சி பாடுபடும்‌ என்ற 
உறுதிமொழி தரப்பட்டிருந்தது. 


சோசலிச சமூக கட்டமைப்பு காலத்தில்‌ தனிநபர்‌ சுதந்திரம்‌, பத்திரிகை சுதந்திரம்‌, 
அரசியல்‌ சுதந்திரம்‌, அரசாங்கத்தை எதிர்க்க சுதந்திரம்‌ வழங்கப்படும்‌ என்றும்‌ 
தெரிவிக்கப்பட்டது. சோசலிச ஜனநாயகத்தை அரசின்‌ அனைத்து பகுதிகளிலும்‌ கட்சி 
விஸ்தரிக்கும்‌ என்ற வாக்குறுதியும்‌ தரப்பட்டிருந்தது. முன்பு அமிர்தசரசில்‌ பேசிய 
மக்கள்‌ ஜனநாயக அரசு என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக அரசு- அணி என்பது 
தற்போது பேசப்பட்டது. கட்சி இந்திய இறையாண்மையை ஒற்றுமையை உயர்த்திப்‌ 
பிடிக்கும்‌ எனவும்‌ சொல்லப்பட்டது. முகப்புரையை தொடர்ந்து மொத்த ஷரத்துக்கள்‌ 
35 உருவாக்கப்பட்டன. 


சிபிஎம்‌ தனது 8வது காங்கிரசை டிசமபர்‌ 1968ல்‌ கொச்சியில்‌ நடத்தினர்‌. அங்கும்‌ 
அமைப்பு விதிகள்‌ வெளியிடப்பட்டன. முகப்புரை என ஏதும்‌ எழுதப்படவில்லை. 
முதல்‌ ஷரத்தில்‌ கட்சியின்‌ பெயர்‌ 'இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி மார்க்சிஸ்ட்‌ எனச்‌ 
சொல்லப்பட்டது. இந்த அமைப்பு விதியில்தான்‌ முதன்‌ முதலாக சிபிஎம்‌ தன்‌ 
பெயரைப்‌ பெறுகிறது. 


ஷரத்து 2 'இலக்கு' என்று பேசப்பட்டு அதில்‌ ஓரளவு முகப்புரை 
பிரதிபலிப்புக்குள்ளானது. சோசலிசம்‌- கம்யூனிசம்‌ சமூகம்‌ நோக்கமாக 
சொல்லப்பட்டது. பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு என்று திரும்ப 
சொல்லத்துவங்கினர்‌. மார்க்சிய லெனினிய தத்துவத்தின்‌ அடிப்படையில்‌ சுரண்டல்‌ 
ஒழிப்பு- பாட்டாளிவர்க்க சர்வதேசியம்‌ உயர்த்தி பிடிப்பு என்றனர்‌. அமிர்தசரசில்‌ 
ஒன்றுபட்டு இருந்த கட்சியில்‌ பேசிக்கொண்ட 'இந்திய எதார்த்த நிலைகளை 
கணக்கில்கொண்டு' என்பது இங்கு விடுபட்டது. 


14 


'உறுப்பினராதல்‌' ஷரத்து இடம்பெற்றது. அகில இந்திய காங்கிரஸ்‌ மூன்று 
ஆண்டுகள்‌ என சிபிஅய்‌ போல சிபிஎம்‌ கட்சியும்‌ சொன்னது. சிபிஎம்‌ தனது 1948ன்‌ 
வடிவமான சிசி. பொலிட்ப்யூரோ என்பதையே வைத்துக்கொண்டது. மாநில மாவட்ட 
அமைப்புக்கு ஒரே ஷரத்தையும்‌ கிளைக்கு தனி ஷரத்தையும்‌ உருவாக்கியது. 
மொத்தம்‌ 25 விதிகளை மட்டூமே வைத்துக்கொண்டது. 


( மேற்கூறிய சிபிஎம்‌ விதிகள்‌ அதன்‌ வரலாற்று வால்யூம்‌ 12ல்‌ தரப்பட்டுள்ளன) 


15 


8 


௦ 1986ல்‌ செப்டம்பரில்‌ நடத்திய அமைப்புநிலை மாநாட்டின்‌ முடிவுகளைக்‌ கணக்கில்‌ 
கொண்டு சில திருத்தங்களை செய்வதாக அறிவித்தது. அதிலும்‌ முகப்புரை இருந்தது. 
35 ஷரத்துகள்‌ இடம்பெற்றன. ஜனநாயக மத்தியத்துவம்‌ என்று பேசும்போது டள 
Standads என்பது சேர்க்கப்பட்டிருந்தது. தேசிய ஜனநாயக அணி என்பது உடனடி 
கடமையாக பேசப்பட்டது. தேசிய கவுன்சில்‌ தனக்கான பொருளர்‌ துணைப்பொருளர்‌ 
என்பதை உருவாக்கியது. 


தற்போது சிபிஅய்‌ இணையத்தில்‌ இருக்கும்‌ அமைப்பு விதிகளில்‌ முகப்புரையில்‌ 
சோசலிஸ்ட்‌ சமூகம்‌ சோசலிஸ்ட்‌ அரசு' என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவின்‌ 
எப்பகுதியினரும்‌ அவர்‌ தனது மனசாட்சியின்படி மதத்தை பின்பற்ற அனுசரிக்க கட்சி 
நிற்கும்‌. எந்த மதத்தின்‌ மீதான வெறுப்பையும்‌ அனுமதிக்காது என்பது 
சேர்க்கப்பட்டுள்ளதைக்‌ காணலாம்‌. அதேபோல்‌ சமூக நீதி குறித்த உறுதிப்பாடும்‌ 
தெரிவிக்கப்பட்டிருக்கும்‌. இந்திய அரசியல்‌ அமைப்பு சட்டத்தின்‌ மீது நம்பிக்கையுடன்‌ 
அதற்காக நிற்கும்‌ என்பதும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதைக்‌ காணலாம்‌. சாதிய 
எண்ணத்திற்கு எதிரான போராட்டம்‌ மக்கள்‌ ஒற்றுமைக்கு அவசியம்‌ என்ற புரிதல்‌ 
சொல்லப்பட்டிருக்கும்‌. முகப்புரை தொடர்ந்து ஷரத்துகள்‌ இடம்பெற்றுள்ளன. ஆனால்‌ 
கட்சியின்‌ இணையத்தில்‌ முழுமையாக அவை வெளியிடப்படாததைக்‌ 
காணமுடியும்‌. 


சிபிஎம்‌ இணையத்தில்‌ 2015 காங்கிரஸ்வரை ஏற்கப்பட்ட அமைப்புவிதிகள்‌ டிசம்பர்‌ 
2018ல்‌ முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன. 2017 சிசி செய்த விதிகள்‌ திருத்தம்‌ 
உட்பட வெளியிடப்பட்டுள்ளன. அதே 25 ஷரத்துகள்‌ உள்ளன. இலக்கு எனும்‌ ஷரத்து 
2ல்‌ அப்படியே 1968ல்‌ எழுதப்பட்ட 'பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்‌ என்பதை 
வைத்துக்கொண்டுள்ளனர்‌. 


சிபிஎம்‌ தனது நூற்றாண்டு பாரம்பரியம்‌ என்பதை 2020ல்‌ அனுசரித்தது. சிபிஅய்‌ தனது 
95 ஆண்டுகளைக்‌ கடந்து நூற்றாண்டுகள்‌ நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. 
பாட்டாளிவர்க்க சர்வதேசியம்‌- தொழிலாளர்‌ தலைமை- மார்க்சியம்‌ லெனினியம்‌ 


16 


என்பதுடன்‌ இந்திய நிலமைகளுக்கேற்ப- இந்திய வரலாறு பாரம்பரியம்‌ கலாச்சார 
வெளிச்சத்தில்‌ என்ற மாற்றத்தை அது தன்னுள்ளாக எடுத்துக்கொண்டு அமைப்பு 
விதிகளை சரிசெய்துகொண்டு நகர்ந்து வருகிறது. காலத்திற்கேற்ப தன்னை 
முகப்புரை வாயிலாக வெளிப்படுத்திக்கொள்ள விழைகிறது. 


இரண்டு கட்சிகளும்‌ அதிகார பூர்வ 'இந்திய வரலாறு' என இதுவரை எதையும்‌ 
எழுதி அப்டேட்‌ செய்துகொள்ள முடியாத நிலையையும்‌ இருக்கிறது. அப்படி ஒன்றை 
எந்த கட்சியும்‌ எழுதுவது சாத்தியமானதல்ல. பொதுவாக சில இடது 
வரலாற்றாய்வாளர்கள்‌ காட்டிய வெளிச்சத்திலேயே இந்திய வரலாறு சார்ந்த புரிதல்‌ 
இருக்கிறது. 


இந்த கட்டுரை நான்‌ பார்த்த அளவில்‌ என்‌ கண்ணுக்கு தென்பட்ட சில மாற்றங்கள்‌ 
குறித்து பேசுவதாக அமைந்துள்ளது. ஏதும்‌ விட்டுப்போகாத இடைவெளியே இல்லாத 
கபய) அல்ல . எனது போதாமையை நான்‌ உணர்ந்தே இந்த அளவிலான கட்டுரையை 
எழுதி பார்த்துள்ளேன்‌. 


22-6-2022 


17 

 

 

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்