இலக்கு 43 இணைய இதழ் PDF வடிவில்

 இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1. பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும்- லெனின் பகுதி-4

2. தாராளியத்தை முறியடிப்போம்.- மாவோ.

3. மது சமூகத்தில் பெண்களின் நிலை மற்றும் பெண் விடுதலை பற்றி தேடல்

4. சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்- மார்ச் 8- அலெக்சாந்த்ரா கொலந்தாய்

5. பெண்விடுதலையும் மார்க்சியமும்

6. பெண் விடுதலையும் சோசலிச சமுகத்தில் பெண்கள் நிலையும்.

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்மார்ச் 8 வர இருப்பதால் அதன் சிறப்பிதழாக இந்த இதழ் கட்டுரைகளை அமைத்துள்ளோம்.

சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் நிலை பற்றி ஆய்வதோடு இன்றுள்ள நிலையை முடிவு கொணர நமது முன்னோடிகளான ரசிய சீன புரட்சிக்கு பின்னர் அந்த சமூகத்தில் பெண்கள் வாழ முடிந்த வாழ்க்கை பற்றியும் சிறிய தேடல் கொடுத்துள்ளோம்.

ஆக பெண்கள் மீதான விடுதலை என்பது இந்த ஒடுக்குமுறைக்கான சமூகத்திலிருந்துதான் விடுதலை வெறும் ஆணுக்கெதிராக போராடி நிற்பதல்ல! 

மூலதன ஆட்சியை தூக்கியெறிவதும், சோவித் அதிகாரத்தை நிறுவுவதுமே உலகைத் துயரிலிருந்தும், உழைக்கும் பெண்களை அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கும் தாழ்மை மற்றும் சமத்துவமின்மை யிலிருந்தும் மீட்கும். ஓட்டுரிமைக்காக நடத்தப்பட்ட உழைக்கும் மகளிர் தினம்இன்று பெண்களுக்கான முழுமையான விடுதலைக்கானதாக, அதாவது சோவியத் மற்றும் கம்யூனிசத்தின் வெற்றிக்கான போராட்ட மாக மாறுகிறது.

உடைமை மற்றும் மூலதன அதிகாரம் ஒழிக !

முதலாளித்துவ உலக மரபுகளான ஏற்றத்தாழ்வு, உரிமையின்மை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவைகளை விட்டொழிப்போம்!

ஆண் பெண் உழைப்பாளர்களின் உலக ஒற்றுமையை முன்னெடுப்போம்!

பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள்!

பாட்டாளிவர்க்கத்தின் இருபாலினரும்!-அலெக்ஸாந்தரா கொலந்தாய்

இலக்கு 43 இணைய இதழை PDF வடிவில் பெற இந்த லிங்கை அழுத்தவும் தோழர்களே






இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்