தத்துவம் நடைமுறைக்குமான தொடர்பு பற்றி மார்க்சிய கண்ணோட்டம்

புரட்சிகரத் தத்துவம் இல்லாவிட்டால், புரட்சிகர இயக்கம் என்பது இருக்க முடியாதுஎன்று லெனின் அவர்கள் நமக்குப் போதித்துள்ளார்.

தத்துவம் என்பது வரட்டு வேதாந்தம் அல்ல. அது செயலுக்கு ஒரு வழிகாட்டி, "இது வரையில் தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் மாத்திரம் செய்துள்ளனர். நமது கடமை அதை மாற்றுவதாகும்" என்று மார்க்ஸ் அவர்கள் கூறினர்.

ஒருபுறம் சொத்துடைய கூட்டம் இன்னொறுபுறம் வாழ்வா சாவா தினம் தினம் வாழ்க்கை வாழ போராடிக் கொண்டிருக்கும் கூட்டம். இவை ஏன் இதனை மாற்ற முடியாதா? மாற்றுவதற்கான வழிவகை என்ன இதனை பற்றி  நமது ஆசான்கள் கூறியுள்ள தத்துவதிற்கும் நடைமுறைக்குமான தொடர்பும் மற்றும் இங்கு கடைப்பிடிக்கப்படும் நடைமுறையில் உள்ள கோளாறுகளையும் எங்களால் முடிந்தவரை விமர்சன ரீதியாக முன் வைத்துள்ளோம்.

தோழர்களே நேற்றைய இரவு 8 மணிக்கு நடந்த விவாதம் கிளப் அவுஸில் ஒலி வடிவில் நேற்றைய வகுப்பை கேட்கலாம் தோழர்களே இந்த லிங்கை அழுத்தி

தத்துவஞான பொருள் முதல்வாதத்தின் பொதுவான கோட்பாடுகளையும் இயக்கவியல் விதிகளையும் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. சமுதாய வரலாற்றிலும் சமுதாய வாழ்விலும் அவை செயல்படும் வடிவங்களை பயில் வேண்டும்.
பகை முறையான கட்டமைப்பு உள்ள ஒரு சமுதாயத்தில் தான் ஒற்றுமை மற்றும் எதிர் நிலைகளின் மோதல் விதி வர்க்க போராட்ட வடிவத்தை எடுக்கிறது. பல்வேறு வரலாற்று சகாப்தங்களில் வர்க்கப் போராட்டம் எத்தனை பன்முக வடிவங்களில் போக்குகளில் தோற்றமளித்துள்ளது.
சமுதாயத்துக்கு பிரயோகப்படும் இயக்கவியல் முறையும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமுறையும் சாரத்தில் ஒரே மாதிரியான கருத்துகளாகும். சமுதாயத்தின்பால் பிரயோகிக்கப்படும் பொழுது இந்த இயக்கவியல் முறை சொல்ல முடிகிறது. இதன் அர்த்தம் பொதுவாக தத்துவ ஞான வகை இனங்களுக்கு கூடுதலாக சமுதாய வாழ்வினை சமுதாய உணர்வு பொருள் வகை மற்றும் சித்தாந்த உறவுகளை உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள், உற்பத்திப் பாங்கு, சமுதாய பொருளாதார அமைப்பு. கட்டுமானமும் சமுதாய வர்கங்கள் தேசங்கள், இத்யாதி மற்றும் சமூக இயல் வகையானங்களானவை இந்த வகையினங்கள் சமூக வாழ்நிலை மற்றும் சமூக வரலாற்று அறிவின் முக்கிய விதிகளை தொகுக்கின்றன.
மார்க்ஸ் எங்கெல்ஸின் 1840 ஆம் ஆண்டுகளில் 1844 பொருளாதார தத்துவமான ஏற்பாடுகள். புனித குடும்பம் ஜெர்மன் சித்தாந்தம் மற்றும் குறிப்பாக மேலும் முதிர்ச்சியடைந்த வடிவில் மெய்யறிவின் வறுமை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இவை போன்ற நூல்களில் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை அறிவுரைகளை வகுத்து முன்வைத்தனர். வரலாற்றில் சமுதாய வளர்ச்சியின் புதிய கண்ணோட்டம் முதலில் ஒரு கருதுகோள் ஆகும் முறையாக மட்டுமே இருந்தது. ஆனால் இது முதல் தடவையாக வரலாற்று விஞ்ஞான முறையில் அணுகும் சாத்தியமாகும். கருதுகோள் மற்றும் முறையாக இருந்தது. லெனின் எழுதியபடி அவர்கள் சமூகவியலை ஒரு விஞ்ஞானமாக்கினார்கள். காரணம் அவை சமூக உறவுகளின் வளர்ச்சியின் மறுநிகழ்வையும், ஒழுங்குமுறையும் வெளிப்படுத்துவதை சாத்தியமாக்கின.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இயற்கை விஞ்ஞானங்கள் ஏற்கனவே பேர் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருந்தனர். சமுதாயத்தின் பொது விஞ்ஞானம் இன்னமும் கரு உருவில் மட்டுமே இருந்தது. படிப்படியாக மனிதர்களும் இயற்கையின் விதிகளையும், சக்திகளையும் அறிந்து கொள்ளத் தொடங்கியது. தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாயிற்று. ஆனால் மானுட சமுதாயத்தின் மெய்யான தன்மையையும் அதன் விதிகளையும் கண்டறிவது மிக மிக கடினமான பணி என்று தெரிய வந்தது.
சமுதாய விதிகளையும், நடைமுறைகளையும் அறிந்து ஆட்சி செய்வதும், சமுதாயத்தின் கட்டுப்பாட்டுக்குள் அவற்றை கொண்டு வருவதுமானப்பணி. இதைவிட அதிக கடினமானதும் காலம் நீடித்ததுமாக இருந்தது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சாத்தியப்பாடு மார்க்சிய விஞ்ஞானம் படைத்து உருவாக்கப்பட்டதோடும். சமுதாய வாழ்வையும் புரட்சிகரமாக மாற்றி அமைத்திடும் நடைமுறை கடமைகளை இவற்றோடு பிரயோகப்படுத்தும் முறைமைகளையும் ஒரு நாட்டில் பொதுவுடமை கட்சியின் செயல்பாடுகளையும். சமுதாயம், சமூக புலப் பாடுகள், நடைமுறைகள், பல்வேறு விஞ்ஞான ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
வரலாற்றுப் பொருள் முதல்வாதம் சமுதாய வாழ்வின் தனித்தனி அம்சங்களை எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால் அதன் பொது விதிகளையும் சமுதாய வாழ்வின் ஒரு இணைந்த முழுமையாகக் கொண்டு செயல்படும் முன்னேறி வரும் அதனை இயக்க சக்திகளையும் இதனால் சகல அம்சங்களையும், உறவுகளிலும் அதன் முதன்மையான சமுதாய வாழ்நிலை சமுதாய உணர்வு அந்த உறவுகளின் உள்ளார்ந்த தொடர்புகள் முரண்பாடுகள் பற்றி எடுத்து விளக்குகிறது.
சமுதாய வளர்ச்சி ஆக பொதுவான விதிகள், சமூக, பொருளாதார அமைப்புகளின் தோற்றம். நிலவுதல் வளர்ச்சியின் இயங்கு சக்திகளின் விதிகளை ஆராய்கிறது. முதல் வாதம் வரலாற்றின். விஞ்ஞானத்திலிருந்து வேறுபடுகிறது. வரலாற்று விஞ்ஞானம் என்பது நாடுகள், மக்களினங்கள், நிகழ்ச்சிகளை காலக் கிரமப்படி வரிசையில் ஆராய்வதை உணர்த்துகிறது. மறு புறம் வரலாற்றுப் பொருள் முதல்வாதமோ ஒரு பொதுவான தத்துவார்த்த முறையை விஞ்ஞானம் ஆக்குகிறது. இது குறிப்பிட்ட நாட்கள் அல்லது குறிப்பிட்ட நாடு பற்றி ஆராயவில்லை. ஆனால் மனித சமுதாயம் முழுவதையும் பெரும்பாலான பொது விதிகள் அதன் வளர்ச்சியின் இயங்கு சக்திகளின் நோக்கு நிலையில் நின்று ஆராய்கிறது. பொதுவிதிகள் அதன் வளர்ச்சியின் இயங்கு சக்திகளின் நோக்கு நிலையில் நின்று ஆராய்கிறது. வரலாற்றுப் பொருள் முதல்வாதம் பொதுவாக மார்க்சியத் தத்துவ ஞானத்தைப் போலவே தத்துவம் முறை இரண்டையும் ஒன்றாக சேர்த்துள்ளது. சமுதாய விஞ்ஞானத்தின் அருகில் தத்துவ கேள்விக்கான சமுதாய ஜீவிகள் சமூக உணர்வுக்கும் இடையிலான உறவு சம்பந்தமான கேள்விக்குரிய இயக்கவியல் பொருள் முதல்வாத விடையும் வழங்குகிறது.
பெரும்பாலான பொது விதிகள் பற்றிய சமுதாயத்தில் இயக்க சக்திகள் பற்றியும் நமக்கு இது கூறுகிறது. எனவே இது ஒரு விஞ்ஞான பூர்வமான பொது சமூக தத்துவமாக விளங்குகிறது.
மார்க்சிய அரசியல், பொருளாதாரம், வரலாற்றுப் பொருள் முதல்வாதம், விஞ்ஞான கம்யூனிசத்தின் பிரதான ஆதார சக்தி இது. தொழிலாளி வர்க்க போராட்டத்தின் ஆதார நெறிகளையும், போர் தந்திரங்களையும் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் ஒட்டுமொத்த புரட்சிக்கான விதிகளையும். இயக்கு சக்திகளையும் ஆராய்கிறது இது. பொதுவுடமை சமூகத்தில் கம்யூனிச நிர்மானத்திற்கான கட்டத்தில் இதர மானுடவியல்களுடன் சமுதாயத்தின் சமூக அரசியல் அகவளர்ச்சி அம்சங்களையும் சேர்ந்து ஆராய்கிறது. சமுதாய வாழ்வின் பல்வேறு அம்சங்கள் சம்பந்தப்பட்ட புள்ளியல் மற்றும் இதர அனுபவவாத விவரங்களை சார்ந்திருக்கிறது. பிரத்தியேக சமூகவியல், புத்தாராட்சி எல்லாவிதமான நிலைமைகளிலும் சமூகவியல் விதிகள் எவ்வாறு பணிக்கப்படுகின்றன என்பதன் அறிமுறையை வெளிப்படுத்துகிறது.
வரலாற்று பொருள் முதல் வாதம் வரலாற்று நிகழ்வுகளில் ஒரு விஞ்ஞான முறையிலான திசை வழிக்கான புற நிலை அடிப்படையை தருகிறது. இது அவற்றை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் இயலுமாறு செய்கிறது விஞ்ஞான முறையில். முன்னறிந்து கூற உதவுகிறது. சமூக வளர்ச்சியின் எதிர்கால வாய்ப்பையும் போக்குகளையும் காண துணை செய்கிறது. இவ்வாறு புரட்சிகர போராட்டத்துக்கான தத்துவார்த்த அடித்தளத்தை வழங்குகிறது.
சமுதாய வளர்ச்சியின் விதிகளும், அவற்றின் புறநிலை தன்மையும் காணும் பொழுது தன்னைப் பற்றியே தான் என்ன நினைக்கிறான் என்பதை வைத்து ஒரு நபரை யாரும் எடைபோட மாட்டார்கள். அதேபோன்று இந்த மாறுதல்கள் காலகட்டத்தை அதன் உணர்வை வைத்து எடை போட கூடாது. மாறாக இந்த உணர்வை பொருளாயுத வாழ்க்கையில் முரண்பாடுகளிலிருந்து உற்பத்தியின் சமுதாய சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதலில் இருந்து விளக்க வேண்டும். அது போதுமானதாக இருக்கும். எல்லா உற்பத்தி சக்திகளும் வளர்ச்சியுருவதற்கு முன்னால் எந்த ஒரு சமுதாய அமைப்பும் அழிக்கப்படுவது இல்லை. அவற்றின் நிலை உருவாவதற்கு பொருள் வகை நிலைகள் பழைய அமைப்பின் கட்டுக்கோப்புக்குள்ளே முதிர்ச்சி அடைவதற்கு முன்னால் புதிய உயர்வான உற்பத்தி உறவுகள் பழையவற்றை என்றுமே மாற்றீடு செய்ய மாட்டா. இவ்வாறு மனித குலம் தன்னால் எவற்றையும் செய்து தீர்க்க முடியுமோ அத்தகைய கடமைகளை மட்டும் தவிர்த்து முடியாத வகையில் தனக்கு வகுத்துக் கொள்கிறது. காரணம் இதை நெருக்கமாக பரிசீலித்த இந்த பிரச்சனை இதன் தீர்வுக்கான பௌதிகநிலைமைகள் ஏற்கனவே இருந்தோ அல்லது உருவாகும் நிலையிலிருந்தோ வரும் போது தான் எழுகிறது என்பதை எப்பொழுதும் காணலாம். (அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு கார்ல் மார்க்ஸ் பக்கம், 20-21.)
வரலாற்றில் இந்த இயக்கமே ஒரே மாதிரியாக இருக்கவில்லை. இதன் பன்முக தன்மை பல்வேறுபட்ட மக்கள் இனங்களில் வளர்ச்சியின் பிரத்தியேக இயல்புகள் நிலைமைகளுடன் தொடர்புடைய தனிச் சிறப்பான அம்சங்களை சேர்த்து இணைத்துக்கொண்டு இருக்கிறது. இதில்தான் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் மகத்தான முக்கியத்துவம் காணக்கிடைக்கிறது. அதேசமயம் இது வெளித் தோற்றத்திற்கான குழப்பத்திலும் விதியின் எல்லையற்ற பல்வகை தன்மையிலும் மனித குலத்தின் முன்னேற்றத்தினை தன்மைக் குறிக்கும் பிரதானமான முக்கியமான கூறுகளின் முறைமையையும் மறுதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.

சமுதாயத்தின் வரலாறு ஒவ்வொரு சகாப்தத்திலும் தனக்கே உரித்தான திட்டவட்டமான உள்ளடக்கத்தை கொண்டிருந்தது. மக்களினங்கள் வரலாற்றை உருவாக்கும் முற்போக்கு சமுதாய சக்திகள் மேலும் முன்னேற்றமான பொருளாதார, அரசியல் மற்றும் இதர சமுதாய உறவுகளுக்கு குமுறி எழுந்து வெளி காட்டி ஒரு சில வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றுவதாய் போராடின மக்களுக்கு இந்த கடமைகள் பற்றி கிட்டத்தட்ட முழுமையாகவே தெரிந்திருக்கலாம். இல் லையில் சில சமயம் மருட்டுகின்ற சமய ஆகாச கற்பனை வழியில் அவர்கள் அவற்றை தவறாக புரிந்து கொள்வர். வரலாற்றில் மாபெரும் மாறுதல்கள் கட்டத்தில் மக்கள் திரளின் முற்போக்கு வர்க்கங்களின் உணர்வு பூர்வமான படைப்பாற்றல் செயல்பாடு புதிய சிகரங்களை ஏற்படுகிறது.(நூல் ஆதாரம் வரலாற்று பொருள்முதல்வாதம் மாஸ்கோ வெளியீடு).
அதேவேளையில், நாம் புரிந்துக் கொள்ள மாவோவிடம் செல்வோம்... நமது மூளைகள் வெற்றிடமாக ஒருபோதும் இருக்கமாட்டா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதில் முதலாளித்துவ சிந்தனை இருக்கும், அல்லது பாட்டாளி வர்க்க சிந்தனை இருக்கும். நமது மூளைகளுக்குள் இந்த இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையில் சர்வசதா போராட்டம் நடந்து கொண்டிருக்கும். 'நமது மூளையில் இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையில் நீண்டகாலம் சமாதான சகவாழ்வு இருக்க முடியாது. இறுதியில் முதலாளித்துவ சித்தாந்தம் வெற்றிபெறும், அல்லது பாட்டாளி வர்க்க சித்தாந்தம் வாகைசூடும்என்று தோழர் மாஓசேதுங் அவர்கள் கூறியுள்ளார்.

நாம் பிறந்தது முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், பழைய சமுதாயத்தின் மூலம், அதன் பிற்போக்கு சமூக பழக்க வழக்கங்கள் மூலம், ள்ளிகல்வி மூலம், மதநம்பிக்கை மூலம் திரைப்படம் சின்னத்திரை தொல்லைகாட்சி போன்ற ஒளி ஒலி ஊடகங்கள் மூலம், முதலாளித்துவ பத்திரிகைகள் மூலம், இன்றைய டிஜிட்டல் உலகின் மூலம்,மேற்கத்திய நவ நாகரிகப் பாவனைகள் மூலம் பரவும் முதலாளித்துவ எதிர்ப் புரட்சிக் கருத்துகளால் நமது மனம் தாக்கப்பட்டவண்ணம் இருக்கின்றது. நாம் முதலாளித்துவ கருத்துகளின் அழுத்தமான விற்பனையால் தாக்கப்படுகின்றோம். அவை மக்கள் மீது, சிறப்பாக இளைஞர்கள் பெண்கள் மீது வெற்றிகரமாகச் செல்வாக்கு வகித்து, அவர்களை எதிர்நோக்கியுள்ள உண்மையான பிரச்சினைகளிலிருந்து அவர்களுடைய மனதைத் திருப்பி, அவர்களை ஊழல்படுத்துகின்றன.

நாம் இதை எதிர்த்துப் போரிடவேண்டும். நாம் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தின் மேம்பாட்டுக்காக, மார்க்ஸி லெனினி மேலாதிக்கத்துக்காக போராடவேண்டும். எல்லாக் கஷ்டங்களும் நமக்கெதிராகவே உள்ளன. உண்மை மாத்திரம் நம் பக்கத்தில் உண்டு. இங்கு தான் புரட்சிகர தத்துவத்தில் தேர்ச்சிபெறுவதன் முக்கியத்துவம் புதைந்து கிடக்கின்றது.நமது தோழர்களை புரட்சிகர தத்துவத்தால் ஆயுதபாணிகளாக்க இது துணை செய்யும்.

லெனின் அவர்கள் உலகின் முதலாவது தொழிலாளர் வர்க்கப் புரட்சியை வெற்றி கரமாக வழிநடத்தி, உலகின் முதலாவது சோஷலிஸ் அரசை சிருஷ்டித்தார். அது அடக்கி ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அனை வருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. இப்படிச் செய் வதன் மூலம் லெனின் தத்துவத்தை நடைமுறையாக்கினர்; கனவை நனவாக்கினர். இத்துடன், முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகா ரத்தை ஸ்தாபித்து, பாதுகாப்பது சம்பந்தயான பல பிரச்சினை களுக்கும் தீர்வு கண்டார். ஆனல், படித்தறிய முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சிஸத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி விட்டார்.

ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியனில் சோஷலிஸத்தைக் கட்டியமைப்பதில் ஈட்டிய வெற் றியும், உலக பாசிஸத்தை நிர்மூலமாக்குவதில் அது வகித்த முக்கிய பாத்திரமும் சோஷலிஸம் ஒரு தனிநாட்டின் எல்லைக்கு அப்பால் பரவுவதற்கு துணைசெய்தது மாத்திரமல்ல, உலகத்தில் முற்றிலும் புதிய ஒரு நிலைமையையும், அதாவது, சோஷலிஸம் புரட்சி இவற்றிற்காக நிற்கும் சக்திகளுக்குச் சாதகமான ஒரு பலாபல நிலைமையையும் தோற்றுவித்தது. இந்த தீர்க்கமான மாற்றம், 1949ல் சீன புரட்சியின் வெற்றியுடன், மனித குலத் தில் நாலில் ஒரு பகுதி ஏகாதிபத்தியம், பிரபுத்துவம், அதிகார முதலாளித்துவம் ஆகிய மூன்று மலைகளையும் தூக்கி வீசிவிட்டு, சோஷலிஸத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியது்.

வெளிநாட்டு ஏகாதிபத்தியம், உள்நாட்டு நிலப்பிரபுத்துவம், அதிகார முதலாளித்துவம் இவற்றுக்கு எதிரான நீடித்த போராட்டத்தின் வளைவுசுளிவுகளுக்கு ஊடாகச் சீன புரட்சி வெற்றிபெற வழிகாட்டி, தலைமை கொடுப்பதன் மூலமும், சீனாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதன் மூலமும், தோழர் மாஓ சேதுங் அவர்கள் மார்க்சி - லெனினித்தின் பொது உண்மைகளை சீனாவின் ஸ்தூலமான புரட்சி நிலைமைக்கு இனங்கப் பிரயோகிப்பதில் தமது ஈடுஇணையற்ற திறமையைக் காட்டினார்.

லெனின் அவர்கள் தமது காலத்தில் செய்த அதே கடமையை, தோழர் மாஒசேதுங் அவர்கள் தன் காலத்தில் செய்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் மாபெரும் தலைவர் தோழர் மாஒசேதுங் அவர்கள் தலைமையில், நவீன திரிபுவாதத்துக்கு எதிராக நடத்திய சித்தாந்தப் போராட்டத்தின் மகோன்னதமான வரலாற்று முக்கியத்துவத்தையும், மகோன்னதமான சர்வதேசிய முக்கியத்துவத்தையும் உணர வேண்டுமானல்,சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கம் முழுவதுக்கும் புதிய தெம்பை ஊட்டியுள்ளது.உலக ஏகாதிபத்தியத்தின் இறுதித் தோல்வியையும், அதன் டாக விளங்கும் நவீன திரிபுவாதத்தின் தோல்வியையும் கூட நிச்சயமாக்கியுள்ளது.

 

இங்கு தான் புரட்சிகர தத்துவத்தில் தேர்ச்சிபெறுவதன் முக்கியத்துவம் புதைந்து கிடக்கின்றது. முன்பு கூறியதுபோல, நமது தோழர்களை புரட்சிகர தத்துவத்தால் ஆயுதபாணிகளாக்க இது துணை செய்யும், சாத்தியமான அளவு விரைவில் சமுதாயத்தில் புரட்சிகர மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அவர்கள் இதை உபயோகிப்பர் என்ற நம்பிக்கையுடன் தொடருகிறேன்.

பொருளா? சிந்தனையா? இரண்டில் பொருள் முதன்மை வகிப்பதுபோல, நடைமுறை, தத்துவம் இரண்டில், நடைமுறை முதன்மையானது என்பதில் சந்தேகமே இல்லை. னால், (சிந்தனை அல்லது) மனம் பொருளின் அதியுயர்ந்த வடிவமாக விளங்குவதுபோல, தத்துவம்கூட நடைமுறை யிலிருந்தே எழுகின்றது. இருந்தும், தத்துவத்தின் பிழையின்மை, அதன் மீண்டும் செழுமைப்படுத்துகின்ற நடைமுறையில் தான் பரீட்சிக்கப்பட முடியும்.ஆகவே, தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம். தோழர் மாஒசேதுங் அவர்கள் ஒருகால் குறிப்பிட்டது போல, மார்க்ஸிம்-லெனினிம் என்பது அம்பு போன்றது. னால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை டையாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது.

ஆகவே, தத்துவத்தையும் நடைமுறையையும் யந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது. சொந்த நாட்டின் ஸ்தூலமான நடைமுறையைப் படிக்க மறுக்கும் அதேவேளையில், தத்துவத்தின் முக்கியத்துவத்தை யார் மிகைப்படுத்திக் கூறுகிறாரோ, அவர் வரட்டுவாதியாவர், அல்லது யார் (அனுபவத்தில்) நடைமுறையில் மாத்திரம் அக்கறை செலுத்தி தத்துவத்தின் முக்கியத்துவத்தை மறக்கிறாரோ, அவர் அனுபவவாதியாவர்.

வரட்டுவாதம், அனுபவவாதம் இரண்டும் தவறானவை. நடைமுறை இல்லாத தத்துவம், தத்துவம் இல்லாத நடைமுறை இரண்டும் பயனற்றவை. இரண்டினதும் ஐக்கியம்தான் நமக்கு வேண்டும்.

தத்துவ புரிதலுக்கு நமது ஆசான் களிடம் செல்வோம்

 ஏங்கெல்ஸ் அவருடைய வேலையை தொடர்ந்து செய்தார்.அவருடைய தலைமையில் இரண்டாவது சர்வதேசியம் தோன்றியது.இந்த சர்வதேசியத்தில் அங்கம் வகித்த சில கட்சிகள் இன்று வரை இருக்கின்றன. உதாரணமாக பிரிட்டிஷ் தொழில் கட்சி, பிரெஞ்சு, இத்தாலிய சோஷலிஸ் கட்சிகள்,ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

னால்,ஏங்கெல்ஸ் இந்தக் கட்சிகளின் சீரழிவைக் கண்ணால் காண்பதற்கு முன் மறைந்து விட்டார்.இந்த போக்கு அவர் மறைவுக்குப் பின் நிகழ்ந்தது.மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் இருவருக்கும் பின்,மார்க்சிய இயக்கத்தின் தலைமை காவுட்ஸ்கி,பெர்ன்ஸ்டீன் போன்ற அசல் சந்தர்ப்பவாதிகளின் கைகளில் வீழ்ந்தது. அதே வேளையில் காவுட்ஸ்கியும்,பெர்ன்ஸ்டீனும் இரண்டாவது சர்வதேசிய காலத்தில் பலம்பெற்று விளங்கிய ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இருவரின் போதனைகளில் உள்ள புரட்சிச் சாராம்சத்தை நீக்கி விட்டு,அவர்களுடைய தத்துவங்களை திரித்துப் புரட்டி,எழுதி வைத்தார்கள். அவர்கள் பாராளுமன்றப் பாதை மூலம் சோஷலிஸத்துக்குச் செல்லும் சமாதான மாற்றம் பற்றி உபதேசம் செய்து வந்தார்கள். இந்த நோக்கத்துடன் இரண்டாவது சர்வதேசியத்திலிருந்த கட்சிகளை பாராளுமன்றக் கட்சிகளாக மாற்றினர்கள். முதலாவது உலக யுத்தத்துக்கு முன் இந்த ஜெர்மன் கட்சியில் 100க்கு மேலானேர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தனர். இந்த கட்சி 1912ல் நிகழ்ந்த பஸில் சர்வதேசிய மாநாட்டில் எல்லா ஏகாதிபத்திய யுத்தங்களையும் எதிர்க்கும் தீர்மானம் ஒன்றை விசுவாசமாகவும்,ஏகமனதாகவும் அங்கீகரிக்க உழைத்த கட்சி.னால்,இதேதீர்மானத்துக்கு எதிராகச் செல்லுமளவுக்கு அக் கட்சி பின்னர் சீரழிந்து,புரட்சிகரக் கோட் பாடுகள் அனைத்தையும் கைகழுவி விட்டது. இக் கட்சியில் இருந்த ஒரே ஒரு கம்யூனிஸ்ட்,கார்ல் லீப்நெக்ட்தான் வில்லியம் கெய்ஸருக்கு யுத்தக் கடன்கள் வழங்குவதை எதிர்த்து வாக்களித்தவர் ஆவர். மார்க்ஸ்,சிகர தத்துவங்களைத் திரித்துப் புரட்டிப் பொய்மைப்படுத்தும் இந்த முயற்சிக்கு எதிராகத் தான்,லெனின் அவர்கள்,ரஷிய புரட்சி இயக்கத்தின் உற்சாகமான தலைமைக்கு வந்த பின்னர், பிரமாண்டமான சிந்தாந்தப் போராட்டத்தை நடத்தினர்.  

லெனின் அவர்கள் தமது காலத் திரிபுவாதிக ளுக்கு எதிராக நடத்திய சித்தாந்தப் போராட்டமும்,குறைந்த பட்சம் அது ரஷிய புரட்சி இயக்கத்தில் ஈட்டிய வெற்றியும் தான் 1917ம் ஆண்டு ரஷியாவில் அக்டோபர் புரட்சியின் வெற்றியைச் சாத்தியம் ஆக்கின என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.திரிபுவாதிகளுக்கு எதிராக லெனின் ஒய்வு ஒழிச்சலின்றி நடத்திய சிந்தாந்தப் போராட்டமும், ரஷியாவில் அது ஈட்டிய வெற்றியும் இல்லாவிட்டால், அக்டோபர் புரட்சி நடந்திருக்கவே முடியாது

 

ஸ்டாலின் அவர்களின் மறைவுக்கு பின்னர்,சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அபகீர்த்திமிக்க எதிர்ப் புரட்சி 20வது,22வது காங்கிரஸ்"களில் தான்,குருசேவ் என்பவன் பழைய கால திரிபுவா தத்தத்துவங்கள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி,முழுமையான ஒரு தத்துவமாக்கி,உலகத்துக்குக் காட்டினன்.குருசேவ் தனது தவருன நவீனதிரிபுவாத தத்துத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவற்றின் மீது திணிக்க சோவியத் ஆணைக்கோலை உபயோகித்தான். தனது நோக் கம் பலிக்காத இடங்களில் பிளவுகளை உண்டாக்கினன்.ஸ்டாலின் காலம் முதல் இருந்து வந்த சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கத்தின் ஒற்றைப் பாதை போன்ற ஒற்றுமையை உடைத்தெறிந்தான்.

பெரும் சந்தடியுடனும்,ஏகாதிபத்தியவாதிகளும்,முதலாளித் துவப் பத்திரிகைகளும் கொடுத்த மறைமுக ஆதரவுடனும், அவன் ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வு, முதலாளித்துவத்து டன் சமாதானப் போட்டி,சோஷலிஸத்துக்கு பாராளுமன்றத்தின் மூலம் சமாதான மாற்றம் ஆகிய தத்துவங்களை எக்காளத்துடன் பிரசாரம் செய்தான். மானங்கெட்ட தனது அமெரிக்க விஜயத்தின் மூலம் அவன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அரசியல் ரீதியில் கூட்டுச் சேரும் சகாப்தம் ஒன்றைத் தொடக்கி வைத்தான். இதன் விளைவாக தேசிய விடுதலை இயக்கங்கள் அனைத்தையும் காட்டிக் கொடுத்தான். பொருளாதார ரீதியில்,சோவியத் யூனியனிலும்,நவீன திரிபுவாதிகள் ஆட்சி செலுத்தும் இதர நாடுகளிலும் முதலாளித்துவ மீட்சிக்கு வழிகோலிய கொள்கைகளைத் தொடக்கி வைத்தான்.

நவீன திரிபுவாதிகள் ஆளும் இதர நாடுகளும் சோஷலிஸ் நாடுகள் அல்ல. அங்கெல்லாம் முதலாளித்துவம் மீட்கப்பட்டு விட்டது;புதிய ரக முதலாளி வர்க்கம் தோன்றி விட்டது.

கூட்டுறவு விவசாயிகளுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இரட்டி மடங்காகி விட்டன. இவ்வாறு நாட்டுப் புறத்திலும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றது. தொழில் துறையில் லாபத் தூண்டுதல்,பொருளாயத நலன்கள் என்ற முதலாளித்துவ கோட்பாடு புகுத்தப்பட்டு,அதன் விளைவாக வேலை நிறுத்தங்களும்,தொழில் குழப்பங்களும் தலைவிரித்தாடுகின்றன.அந்நிய ஏகபோக முதலாளித்துவம் மக்களைச் சுரண் டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மக்கள் அனைவரின் சர்வாதிகாரம் என்ற சுலோகத்தின் கீழ் புதிய முதலாளித்துவ சர்வாதிகாரமாக மாற்றப்பட்டு விட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரம் கைவிடப்பட்டு விட்டது. பாராளுமன்றம், பல கட்சி முறை ஆகிய அலங்காரங்களுடன் முதலாளித்துவ ஜனநாயக முறையைப் புகுத்துவதற்கும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டு விட்டன.

அமெரிக்க ஏகாதிபத்தியம்,இதர பிற்போக்கு சக்திகள் எல்லா வற்றுடனும் கள்ளக் கூட்டுச் சேர்ந்து,புரட்சி இயக்கங்கள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கும் வெளிநாட்டுக் கொள்கை, உள்நாட்டில் சகல துறைகளிலும் முதலாளித்துவ மீட்சியை அடிப்படையாகவும்,அதன் விளைவாகவும் அமைந்துள்ளது.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாஒ சேதுங் ஆகிய சர்வதேசிய கம்யூனிஸ் புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களின் போதனைகளை நாம் சுருக்கிக் கூறினால், பின்வருமாறு தொகுக்கலாம்:-

நாம் எல்லாரும் வர்க்க சமுதாயத்தில் வாழ்கிறோம் சமுதாயத்தில் ஒரு வர்க்கம் இன்னொறு வர்க்கத்தை அடக்கி ஒடுக்குகின்றது;சுரண்டுகின்றது.இன்னொறு வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி,நசுக்கும் ஒரு வர்க்கம் அதன் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உதவியாக ஒரு யந்திரத்தைப் பெரும் செலவில் கட்டியமைத்திருக்கிறது.இந்த யந்திரம் அரசு யந்திரம் என அழைக்கப்படுகின்றது. இதன் பிரதான பகுதி ஆயுதப் படைகள்.அரசு யந்திரத்தின் பிரதான பணி சுரண்டலைப் பாதுகாப்பது சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக அடக்கி ஒடுக்கப் பட்ட வர்க்கங்கள் கொந்தளித்து எழும்போது அவற்றைத் தடுத்து நசுக்குவது.சுரண்டும் வர்க்கங்களின் காவல் நாய்களின் கரங்களில் துப்பாக்கிகள் இல்லாவிட்டால்,சுரண்டல் ஒரு கனம் கூடத் தொடர்ந்து நடக்க முடியாது. ஆகவே,அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் தம்மை விடுதலை செய்து கொள்ள விரும்பினல்,தம்மை நசுக்குகின்ற அடக்குமுறை அரசு யந்திரத்தை பலாத்காரத்தால் சுக்கு நூருக்கவேண்டும்; அதாவது, அவர்கள் புரட்சியை நடத்தி,அடக்குமுறை முதலாளித்துவ அரசு யந்திரத்துக்குப் பதிலாக தொழிலாளர் வர்க்கத்தின் அரசு யந்திரத்தை அமைக்க வேண்டும். இதைத்தான் மார்க்ஸ் அவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று வருணித்தார்.

கடைசியாக,இதைப் புரட்சியால் அன்றி,பாராளுமன்ற வழிகளில் சமாதான மாற்றத்தின் மூலம் செய்ய முடியாது.பாராளுமன்றம் என்பது மூலதனத்தின் அம்மணமான சர்வாதிகாரத்தை அலங்கரிக்க, நமது வர்க்க உணர்வை மழுங் கடிக்க, நம்மைக் குழப்பிகாட்ட, ஆயுதப் படைகள் என்ற உண்மையான அதிகாரபீடத்திலிருந்து நமது கவனத்தைத் திசைதிருப்பு, பிற்போக்குவாதிகள் கண்டுபிடித்த ஒரு ஆயுதம். இது ஆயுதப் போராட்டத்துக்குப் பதில் சொற் போராட்டத்தை வைக்கும் ஒரு முயற்சி. எனவே, இந்தப் பாராளுமன்ற மாயைகளால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. மார்க்ஸி்-லெனினியத்தை யார் ஏற்றுக்கொள்ளவில்லையோ,யார் எதிர்க்கிருர்களோ அவர்கள் திருத்தல்வாதிகள்; திரிபுவாதிகள், இதுதான் மா-லெவாதிகளையும், நவீன திரிபுவாதிகளையும், புரட்டல்வாதிகளையும், திருத்தல்வாதிகளையும் பிரித்துக் காட்டும் எல்லைக் கோடாகும். இவற்றிற்குப் பதில், ஒரு மத்திய பாதையைக் காண, நடு வழியைக் காண முயல்கின்ற, பாலங்கள் அமைக்க, மா லெ திற்கும் நவீன திரிபுவாதத்துக்கும் இடையில் சமரசம் கொண்டுவர முயல்கின்ற சிலரும் இருக்கின்றனர். இது சந்து செய்ய முடியாதவற்றை சந்து செய்ய முயல்கின்ற, நீரையும் நெய்யையும் கலக்கின்ற ஒரு முயற்சியன்றி வேறல்ல.

யார் நவீன திரிபுவாதத்தை எதிர்க்கவில்லையோ,அவர் இன்றே நாளையோ ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை நிறுத்துவது நிச்சயம். இந்த விஷயத்தில் மயக்கம் இருக்கக்கூடாது. லெனின் தமது காலத்தில்,திரிபுவாதம் என்பது தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் முதலாளிவர்க்க இயக்கத்தின் செல்வாக்கே என்று தெளிவாக விளக்கியுள்ளார்.

உலக ஏகாதிபத்தியத்தைப் போல, நவீன திரிபுவாதமும் அழிவது திண்ணம். நவீன திரிபுவாதிகள் எவ்வளவுதான் காட்டிக் கொடுத்த போதிலும்,உலகப் புரட்சி இயக்கம் தொடர்ந்து முன்னேறுகின்றது. மரம் அமைதியை விரும்பு கின்றது; னால் காற்று ஒய்வதில்லை. அதேபோல நவீன திரிபுவாதிகள் சமாதான சகவாழ்வு, சமாதான போட்டி,சோஷலிஸத்துக்கு சமாதான மாற்றம் ஆகியவை பற்றி எவ்வளவுக் குச் செபம் செய்தாலும்,வர்க்கப் போராட்டத்தின் உண்மைகள் வாழ்வை வேறு திசையில் செலுத்துகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான உலக ஏகாதிபத்தியம், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை பிரதான மையமாகக் கொண்ட நவீன திரிபுவாதம், பிற்போக்குவாதம் இவற்றுக்கெதிரான புரட்சிப் போராட்டங்களின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.(மாவோவின் சிந்தனைகள் நூலிலிருந்து)

லெனின் அவர்களின் உண்மையான மேற்கோள் பின்வருமாறு:-"முதலாளி வர்க்கம் தூக்கியெறியப்பட்டதனால் (அது / ஒரு நாட்டிலாயிருந்தாலும் கூட) அதன் எதிர்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது;அதன் பலம் சர்வதேசிய மூலதனத்தின் பலத்தில்,முதலாளி வர்க்கத்தின் சர்வதேசிய தொடர்புகள் நீடித்திருக்கும் தன்மையில் தங்கியிருக்கின்றது;பழக்கவழக்க சக்திகளிலும்,சிறு உற்பத்தி முறையின் பலத்திலும் கூட இருக்கின்றது.துர்அதிர்ஷ்டவசமாக சிறு உற்பத்திமுறை உலகில் மிக மிக விரிந்த அளவில் நிலவுகின்றது.சிறு உற்பத்திமுறை முதலாளித்துவத்தையும்,முதலாளி வர்க்கத்தையும் தொடர்ச்சியாக, நாளுக்கு நாள், மணிக்கு மணி, இயல்பாகவே பெருமளவில் தோற்றுவிக்கின்றது'.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்