மனித சமுகம் தன்னால் செய்யக் கூடிய பணிகளை தனக்கு விதிக்கிறது. ஏனெனில், இவ்விடயத்தைக் கூர்ந்து நோக்குவோமாயின்,எப்போதும் ஒரு பணியை நிறைவேற்றுதற்கு அவசியமான நிலைமைகள் ஏற்கெனவே உள்ளபோது அல்லது உருவாகிவருகின்றபோதே அப்பணியும் தோற்றம் பெறுகிறது என நாம் காணலாம். எனவே வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நமக்குக் கற்பிப்பது ஏதெனின், பிறநிகழ்வுகள்பொருளின் பிற வடிவங்களை போன்று, சமுதாயமும் என்றுமே நிலையாய் நிற்பதில்லை.
பிற அனைத்தும் போன்று அதுவும் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உட்படுகிறது. எனவே சுரண்டலும் செல்வர்களும் ஏழைகளும் என்றும் நிலையானவையோ மாறாதனவையோ அல்ல.அவை எல்லாக் காலத்திலும் இருந்தனவுமல்ல. இச்சமூக மாற்றங்கள் சமுதாயத்தின் உள்இயல்பான முரண்பாடுகளின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன.
இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்
கம்யூனிஸ்ட் கட்சியும் அமைப்பு கோட்பாடுகளும்
உயிரின் தோற்றம் -2 ஏ.ஐ.ஓபரின்
நமது இயக்கத்தின் அவசர, அவசியப் பணிகள்-லெனின்
உட்கட்சி ஒற்றுமையை கட்டு வதற்கான இயக்கவியல் அணுகுமுறை - மாவோ
மனித இனதின் ஆரம்பகாலம்
PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்- இலக்கு 38 இணைய இதழை