மாபெரும் சோசலிச அக்டோபர் புரட்சிக்கு பல காலம் முன்னதாகவே பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவு புகட்டவும் அரசியல் ரீதியாக போதனை பெறவும் லெனின் தலைமையில் தொடர்ந்து போராடியது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கலாச்சாரத்தை கல்வியையும் சாதாரண பொதுமக்களும் எளிதில் பெறக்கூடிய அமைப்பு கொண்ட சோசலிச சமுதாயமாக முதலாளித்துவச் சமுதாயத்தை மாற்றுவதற்கும் பாட்டாளிகளை ஆயத்தம் செய்ய வேண்டுவது ஓர் இன்றியமையாத நிலை என்பது இதில் கண்டது .
மக்களின் கல்விக்கு லெனின் எல்லாவற்றிற்கும் மேலான முக்கியத்துவம் கொடுத்தார் சமுதாய வளர்ச்சியில் இந்த அல்லது அந்த கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பொதுப்படையான அரசியல் கடமைகள் சம்பந்தப்பட்ட போதனைகள் அவர்களது கல்வி பயிற்றுவிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றில் லெனின் கவனம் செலுத்தினார் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜார் ஆட்சி நிலைமைகளில் பாட்டாளிகளிடம் முன்னேற்றமான வர்க்க விழிப்புணர்வை வளர்க்கும் பணிகளுடன் லெனின் இணைத்தார் .
சர்வாதிகாரத்தை எதிர்த்து புரட்சிகரமாக போராடாமல் நிலப்பிரபுக்கள் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆகியோரின் ஆட்சி தூக்கி எறியாமலும் பொதுக் கல்வியை அடிப்படையாக மாற்றி அமைப்பது இயலாது என்ற கருத்திற்கு ருஷ்ய பாட்டாளிகளை லெனின் தட்டி எழுப்பினார் .
வர்க்க சமூக சமுதாயத்தில் கல்வியின் வர்க்கத் தன்மையை பற்றிய மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் போதனையை லெனின் தெளிவாக வெளிப்படுத்தி வளர்த்தார். சாதாரண பொதுமக்கள் அறிவு பெறும் வழியை ருஷ்ய சர்வாதிகாரம் திட்டமிட்டு வேண்டுமென்றே தடுத்து வந்திருப்பதை லெனின் இந்த நிதர்சனப்படுத்தி விளக்கினார் .நமது அமைச்சர்கள் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அவருடைய கட்டுரையில் பின்வருமாறு எழுதினார் (1895) : "அமைச்சர் தொழிலாளர்களை துப்பாக்கி ரவைகள் எனவும் அறிவையும் கல்வியையும் தீப்பொறி எனவும் கருதுகின்றார் ;இந்த தீப்பொறி துப்பாக்கி ரவையில் விழுந்தால் அந்த வேட்டு அரசாங்கத்திற்கு எதிராக முதலாவதாக முக்கியமாகும் திரும்பிவிடும் என்று அமைச்சர் நன்கு புரிந்து இருந்தார் ".
வர்க்க சமுதாயத்திலான கல்வியை கலாச்சாரத்தை மற்றும் கல்விக் கூடத்தில் வர்க்கத் தன்மையை மறைக்க முயன்ற எல்லாவித சந்தர்ப்பவாதிகள் திருத்தல்வாதிகள் ஆகியோரின் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக புரட்சி இயக்க வளர்ச்சியில் எல்லா கட்டத்திலும் லெனின் உறுதியாக முன்வைத்தார்.
மகத்தான சோசலிசப் புரட்சி ஆனது ஆளும் வர்க்க ஒடுக்குவோருக்கான கல்வி என்பதை தனி சலுகையை முடிவு கட்டியது விஞ்ஞான கலாச்சார கலை சாதனைகள் அனைத்தையும் வெகுஜனங்கள் எளிதில் பெறக்கூடிய நிலைக்கு கொண்டு வந்தது .
சமுதாய புரட்சியானது கலாச்சாரப் புரட்சிக் ஓர் இன்றியமையாத முன் நிபந்தனையாகும் என்று லெனின் கருதினார். முதலாளித்துவ சமுதாய நிலைமைகளில் முதலாளித்துவத்தில் இருந்து இதற்கான மாற்றத்தை அமைதியான வழியில் மட்டுமே செய்து முடிக்க முடியும் எனவும் உற்பத்தி சக்திகளும் கலாச்சாரம் ஒரு நிச்சயமான வளர்ச்சி கட்டத்தை அடைந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் எல்லா சீர்திருத்தவாதிகளும் வெளியிட்ட துணிபுகளை லெனின் கடுமையாக விமர்சித்தார் நமது புரட்சி என்ற கட்டுரையில் அந்த கருத்து நிலையை விரிவாக விளக்கி, "சோசலிசத்தை கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் தேவை என்றால் அந்த குறிப்பிட்ட கலாச்சாரத்துக்கு தேவையான முன் தேவைகளை புரட்சிகரமான வழியில் முதலில் அடைவதன் மூலம் எனவே நாம் ஆரம்பிக்க கூடாது ".(Lenin selected works volume 33 pp.478-79).
கலாச்சாரப் புரட்சியின் வெற்றி சாதனை ஒரு நாளில் பெறக்கூடிய விஷயமல்ல அது நீடித்த நடைபெற நடைமுறை விசியம் ஆகும் என்பதனை லெனின் அறிவுறுத்தினார். செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் சர்வப் பொதுவான முறையில் கல்வி அளிப்பது, எல்லா தேசிய இனங்களையும் சார்ந்த உழைக்கும் மக்களின் கலாச்சார தரத்தை உயர்த்துவது உண்மையான ஒரு மக்கள் அறிவுஜீவிகள் பகுதியை உருவாக்குவது ஆகியவை அதன் முக்கியமான பணிகள் ஆகும்.
பழைய பள்ளி கல்வி முறையை விமர்சிக்கும் போது அது "உண்மையான கம்யூனிஸ்ட் கல்விக்கான " பள்ளியாக அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று லெனின் கூறினார் .பழைய கல்விகளில் பேராதிக்கம் செலுத்தி வந்த மனப்பாடம் போடும் பழக்கத்தை உறுதியாக கண்டித்த லெனின் " நன்கு கற்ற இன்றைய மனிதனுக்கு இன்றியமையாத எல்லா விவரங்களும் அடங்கிய அறிவை" ஒவ்வொரு மாணவரும் வளர்ந்து அதில் பரிபூரண அடைய வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார் .உயர்ந்த கல்வி உடையவர்களாக உயர்ந்த பண்பாடு உடையவர்கள் உயர்ந்த கோட்பாடு உடையவர்களாக கம்யூனிசத்தை கட்டுவதற்கு மனிதனும் இனம் சேகரித்த அறிவை பயன்படுத்தும் ஆற்றல் உடையவர்களாக, இளைஞர்களை உருவாக்கும் அடிப்படையில் பொதுக் கல்வியை பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது லெனின்னுடைய கருத்து .
கல்வி இடம் புதிய கடமைகளை நம்முடைய காலம் எதிர்பார்க்கிறது சமுதாய உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தை உறுதிசெய்யவும் மேலும் விஞ்ஞான தொழில் நுணுக்க முன்னேற்றத்தை உறுதி செய்யும் விஞ்ஞான ரீதியில் முன் முறைப்படுத்தப்பட்ட உழைப்பை பயன்படுத்தி அதனுடைய உற்பத்தி திறனை மேலும் மேலும் உயர்த்தவும் அறிவை சுயேட்சையாக பெற்று அதனை நடைமுறையில் பயன்படுத்தி தங்களை முழுமையாக தயார் செய்து கொண்ட மக்கள் தேவை .(பொதுக்கல்வி பற்றி லெனினுடைய நூலின் முன்னுரையில் இருந்து சுருக்கம் என்னுடையவை) .
நமது கல்வி முறையும் இந்திய சமூகம்
தற்போது நமது நாட்டில் சமூக அரசியல் சூழ்நிலையில் புதிய அம்சம் என்னவென்றால் பெரும் முதலாளி வர்க்கமானது அரசு அதிகாரத்தை அன்னிய நிதி மூலதனத்துடன் சேர்ந்து நாடு முழுவதிலும் பொருளாதார வாழ்வை ஏகபோகமாக்க முயற்சித்துக் கொண்டு உள்ளது . இங்கே அரசின் அமைப்பிலும் மாற்றம் கொண்டுவர அவர்கள் விரும்புகின்றனர் .எல்லா அதிகாரங்களையும் ஒன்றியத்தில் குவித்து அதாவது ஒரு கட்சி ஆட்சிக்காக பாசிச நிலையில் முன்னேறிக் கொண்டுள்ளது.
ஆளும் கும்பலுக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவே ஏற்கனவே நிலவுகின்ற சில உரிமைகளையும் பறிக்கிறது முன் கண்டிராத அளவிற்கு கருப்பு சட்டங்களால் தன்னை ஆயுதபாணி ஆக்கிக் கொள்கிறது.
இன்றைய பாசிச நிலையில் நமது கல்விக் கொள்கையும் மக்கள் மீது திணிக்கப்படும் பல்வேறுவிதமான கருத்தாக்கங்களின் புரிந்து கொள்வதற்காக கல்வி பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டத்திற்கு நாம் செல்வோம்.
எங்களின் முயற்சி ஒரு தொடர் போராட்டமாக இந்த பணியினை எடுத்து செல்கிறோம் இதில் மார்க்சிய லெனினியத்தை வளர்பதன்றி வேறோன்றுமில்லை... மார்க்சியம் லெனினியம் அல்லாத கருத்துகள் இருக்குமேயாயின் அவசியம் கண்டிக்க விமர்சிக்க அழைக்கிறோம் தோழர்களே
- இலக்கு இதழ் -1
- இலக்கு இதழ் -2
- இலக்கு இதழ் -3
- இலக்கு இதழ் -4
- இலக்கு இதழ் -5
- இலக்கு இதழ் - 6
- இலக்கு இதழ் - 7
- இலக்கு இதழ் - 8
- இலக்கு இதழ் - 9
- இலக்கு இதழ் -10
- இலக்கு இதழ் - 11
- இலக்கு இதழ் - 12
- இலக்கு இதழ் - 13
- இலக்கு இதழ் - 14
- இலக்கு இதழ் - 15
- இலக்கு இதழ் - 16
- இலக்கு இதழ் - 17
- இலக்கு இதழ் - 18
- இலக்கு இதழ் - 19
- இலக்கு இதழ் - 20
- இலக்கு இதழ் - 21
- இலக்கு இதழ் - 22
- இலக்கு இதழ் - 23
- இலக்கு இதழ் - 24
- இலக்கு இதழ் - 25
- இலக்கு இதழ் - 26
- இலக்கு இதழ் -27
- இலக்கு இதழ் - 28
- இலக்கு இதழ் - 29
- இலக்கு இதழ் - 30
- இலக்கு இதழ் - 31
- இலக்கு இதழ் - 32
- இலக்கு இதழ் - 33
- இலக்கு இதழ் - 34
- இலக்கு இதழ் - 35
- இலக்கு இதழ் - 36
- இலக்கு இதழ் - 37
- இலக்கு இதழ் - 38