வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பதுவிஞ்ஞான சிந்தனையின் வளர்ச்சிக்கு மார்க்சும் எங்கெல்சும் அளித்த மகத்தான பங்களிப்பு என்னவெனில் அவர்கள் பகுதியளவு கட்டியிருந்த பொருள்முதல்வாதம் எனும் மாளிகையை முழுமை செய்தனர் .அதாவது அதை சமுதாயம் பற்றிய ஆய்வுக்குள் விரிவாக்கினர்.
தத்துவஞான பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெற செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். அவரது வரலாற்றுப் பொருள்முதல்வாதம் விஞ்ஞான சிந்தனை கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது.
மார்க்ஸின் சாதனைகள் அவருக்கு முன்னர் வாழ்ந்த பெரும் அறிஞர்களதும் சிந்தனையாளர்களதும் எழுத்துகளை ஆய்ந்து அறிந்து சமூகத்தில் அதன் பங்களிப்பு அதன் அடிப்படையிலானவற்றை விமர்சித்து மார்க்ஸ் நமக்கு வழங்கியது ஒரு வலிய ஆய்வு முறை; அதைச் சரிவரப் பயன்படுத்துவதிலேயே மார்க்ஸியத்தின் புரிதலும் வளர்சியும் உள்ளது. மார்க்ஸ் தொடாத விஷயங்கள் மார்க்ஸியம் தொடக்கூடாதவையோ தொட இயலாதவையோ தொட அஞ்சுவனவோ அல்ல. மார்க்ஸ் மனித வரலாற்றை ஆராய்ந்து அதன் பொதுவான போக்கைச் சரிவரக் கூறினாரேயொழிய மனித இனத்தின் எதிர்கால வரலாற்றை இம்மியும் பிசகாதபடி ஆரூடங்கூற முற்படவில்லை. ஏகாதிபத்தியம் எவ்வாறு வளச்சியடையும் என்பது பற்றி மார்க்ஸ் தெளிவுபடுத்தவில்லை யென்பதால், ரஷ்யப் புரட்சிக்கு வழிகாட்டிய லெனின் மார்க்ஸை மிஞ்சினாரென்றோ பொய்ப்பித்தாரென்றோ நாம் கருதுவதற்கில்லை. புதிய நெருக்கடிகளும் மார்க்ஸால் ஆராயப்படவில்லை என்பதனால் அவை மார்க்ஸியத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகிவிடவில்லை. அவற்றின் வளர்ச்சி வர்க்கப் போராட்டத்தைப் பொய்ப்பித்துவிடவில்லை; மாறாக, ஏகபோக முதலாளித்துவம் எவ்வாறு சமுதாய நெருக்கடியை மேலும் உக்கிரமாக்கி வருகிறது என்றே உணர்த்துகிறது.
வர்க்க சமுதாயத்தில் பல்வேறு சமுதாய முரண்பாடுகளிருந்தபோதும் வர்க்க முரண்பாடே முதன்மையானது. ஆயினும் அது எப்போதுமே நேரடியாகத் தன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. பிரதான முரண்பாடு தீர்க்கப்படாத நிலைமைகளிற்கூட இரண்டாம்பட்சமான முரண்பாடுகள் உக்கிரமடையலாம். அதனால் பிரதான முரண்பாடு இல்லாமற் போவதில்லை; அதன் முக்கியத்துவம் குறைந்து விடுவதில்லை சமுதாய முரண்பாடுகளின் முக்கியத்துவத்தை, சமுதாய முழுமையின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக மதிப்பிட இயலுமே அல்லாமல், வரையரைக்குட்பட்ட நிலைமைகளின் கீழும் குறுகிய கால அளவிலுமல்ல.
மார்க்ஸியத்தைக் கடந்து செல்லுகிறதாகவும் மார்க்ஸியம் தொடத் தவறியவற்றை மார்க்ஸியத்திற்கு வழங்குவதாகவும் பாசாங்கு செய்வோர் பலர் சிலர் எங்கேயோ எவரோ சொன்னதன் உண்மையை ஆராயாமலே கருத்துகளை இரவல் வாங்கித் தமக்கு விளங்காத மார்க்ஸியத்துக்கு மருத்துவம் செய்ய முற்படுவார்கள் சிலர் மார்க்ஸிய நடைமுறையின் பிரச்சனைகளை சமுதாய நடைமுறையினை ஆராயாமல் கருத்து முதல்வாதத்திற்குள் தீர்வுகளைத் தேடுவார்கள். வேறு சிலர் அதிதீவிர நிலைப்பாடுகளை மேற்கொள்வார்கள் அல்லது நவ மார்க்ஸியவாதிகள் என்ற போர்வையுடன் உலவுவார்கள். எவ்வாறாயினும் அவர்களது நோக்கம் மார்க்ஸிய லெனின்ய இயக்கங்களையும், வெகுஜன இயக்கங்களையும் தூற்றிப் பழிப்பதும் மார்க்சியம் பேசுவோரையே குழப்புவதோடு அல்லாமல் அவர்களை சீர்குழைபதும் இவர்கள் வேலையாக உள்ளது என்பேன்.
இடதுசாரிகட்சிகள் இயக்கங்கள் நடைமுறை சார்ந்து செயல்படும் பொழுது அதன் வளர்ச்சி போக்கில் தவறுகள் நேராமல் இருக்க முடியாது. ஆயினும் அவைதன் தவறுகளை சுயபரிசீலனை சுயவிமர்சனம் செய்துக்கொள்ளும் பொழுது பாட்டாளிவர்க்கச் சார்பு அத்தகைய தவறுகளைத் திருத்தி இயக்கத்தை மேலும் வலிமைப்படுத்தி முன் செல்லுமாறு உந்துகிறது. விமர்சனங்கள் இல்லாமல் தவறுகள் திருத்தப்பட முடியாது. விமர்சனங்கள் நேரடியானவையாக,ஆக்கபூர்வமானவையாக, அழிவுத் தன்மையில்லாதையாக, நட்புரீதியாக, பகைதன்மையற்றவையாக இருத்தல் அவசியம் என்பதும் முக்கியமானது என்பதே எனது அனுபவம். அந்த அடிப்படையிலேயே விமர்சனங்கட்கு மார்க்ஸிய லெனினிய இயக்கங்களும் முகங்கொடுக்க வேண்டும் என்பதே என் அவா.அவை என் எதிர்பார்ப்பு.
மார்க்ஸிய லெனின்ய இயக்கத்துள் பெரும் விவாதங்கள் பல நிகழ்ந்துள்ளன. சண்டைகளும், சச்சரவுகளும் பின் பிளவுகளும் நிகழ்ந்துள்ளன. இவை ஒருபுறம் மார்க்ஸிய லெனின்ய இயக்கத்தைப் பலவீனப்படுத்தினாலும் தவறுகளை அடையாளங் காணவும் திருத்தவும் வழிகோழிய அளவில் பயனுள்ளவைதான்.
அதே நேரத்தில் மார்க்ஸிய விரோதிகள் பரப்பும் மார்க்ஸிய விரோத போக்கை இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாதகமான எதையுமே வரவேற்றுப் போற்றக் கூடியதில்லை இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் ஒடுக்கப்பட்ட மக்களது பாட்டாளி வர்க்கத்தினதும் போராட்டங்களைப் பிளவுப்படுத்திப் பலவீனப்படுத்தும் தேவை அவர்கட்கு உண்டு. அந்தத் தேவையை நிறைவு செய்ய மார்க்ஸியம் பற்றிய ஆராய்வு என்ற பேரில் மார்க்ஸிய விரோதப் பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன; மார்க்ஸியத்தைத் திருத்தி அமைக்கிறோம் என்ற பேரில் மார்க்ஸிய இலக்கை திசை திருப்பும் முயற்சிகள் ஊக்குவிக்கப் படுகின்றன.
நமது சமுதாயச் சீரழிவின் விளைவாக, போலித்தனமான புத்திஜீவி மனோபாவம் நமது மத்தியதர வர்க்கத்தினர் நடுவே மலிந்துள்ளதால் மார்க்ஸியம் பற்றி தவறான பரப்புறைகளை நாம் அடிக்கடி கேட்க நேருகிறது. சில வேளைகளில் அதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவை நமக்கு ஏற்படுகிறது. மார்க்ஸியம் பற்றிய எல்லாப் பொய்ப் பிரசாரங்கட்கும் பதில் எழுதிக் கொண்டிருக்க முடியாது. இருந்தும் சில முக்கியமான விஷயங்கள் பற்றி மார்க்ஸியத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகிறது.
தொடர்ந்து மார்க்சியத்தை குழப்பும் ஒரு போக்காய் உள்ள முதலாளித்துவ பகுத்தறிவாதம் பற்றி ஒரு தேடல்தான் இது....
மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பன பற்றியும் மரபுவாதிகள் கொண்டுள்ள கருத்துகளும் மார்க்ஸியவாதிகள் கொண்டுள்ள கருத்துகளும் அடிப்படையில் முரணானவை. அதேவேளை மார்க்ஸியவாதிகளது நிலைப்பாடு பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோரதும் அவர்களைச் சார்ந்தோரதும் நிலைப்பாட்டினின்று மிகவும் வேறுபட்டது. இந்த வேறுபாடு அடிப்படையான சிந்தனை முறை சார்ந்தது. சில சமயங்களில் நடைமுறைப் பிரச்சனைகளை மார்க்ஸியவாதிகள் அணுகும் முறையும் கையாளும் விதமும் மரபு பேணும் நிலைப்பாடு சார்ந்ததாகவே சிலருக்குத் தென்படலாம். பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோர் இதன் காரணமாக மார்க்ஸியவாதிகளுடன் பெரிதும் முரண்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆயினும், பகுத்தறிவு இயக்கத்தின் நடைமுறை, தமிழகத்தில் அவர்களையே தம் சிந்தனை முரண்பாடுகளது கைதிகளாக்கிவிட்டதை நாம் காணலாம்.
மனித வாழ்க்கையை நாம் உற்று கவனித்தால், எத்தனையோ, பகுத்தறிவுக்கு ஒவ்வாத, தேவையற்ற காரியங்களைக் காணலாம். இவை இல்லாமற் போவதால் மனிதனது நேரமும் உழைப்பும் பெருமளவில் மீதப்படுத்தப்பட்டுப் பயனுள்ள திசைகளில் பிரயோகிக்கப்படலாம் என்ற வாதம், மேலோட்டமாக நோக்கும்போது, மிகவும் சரியாகவே படலாம்.ஆயினும் இது சமுதாய வளர்ச்சியில் மனிதனின் பாத்திரத்தை தன்மையை அதன் வரலாற்றுச் சூழலினின்று பிரித்துப் பார்ப்பதன் விளைவேயாகும். இந்த இடத்தில்தான் மரபுவாதியும் பகுத்தறிவுவாதியும் தமது மாறா நிலையியலில் ஒருமை காண்கிறார்கள். மரபுவாதி சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நிரந்தரமான நியதிகளாக, சமுதாயச் சூழலுக்கு அப்பாற்பட்ட உண்மை சார்ந்தவையாகவே எண்ணுகிறான். பகுத்தறிவுவாதியும் அவற்றைச் சமுதாயத்தின் வரலாற்றுச் சூழலுக்குப் புறம்பாகவே வைத்து நோக்குகிறான். பண்டைய இந்தியப் பொருள் முதல்வாதம் (லோகாயதம்) நால் வேதங்களின் அடிப்படையிலான மதங்களை இவ்வாறே அணுகியது. மரபின் வலிமையும், மரபை எதிர்த்தோர்க்கு அதனை முழுதாக விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லாமையும் பொருள் முதல்வாதிகளது வீழ்ச்சிக்குக் காரணமாயின. இந்திய மெய்யியல் வரலாற்றில் அவர்களது தோல்வி அவர்களது மாறாநிலையியல் அணுகுமுறையின் தோல்வியே எனலாம். இன்றைய பகுத்தறிவுவாதியின் நிலைப்பாடு பழைய லோகாயதவாதியினதினின்றும் அதிகம் முன்னேறிய ஒன்றல்ல.
இந்திய மரபும், வாழ்க்கை முறையும் பற்றிய ஆராய்வை அதற்குரிய வரலாற்றுப் பின்னணியில் மேற்கொள்வதன் மூலமே மரபை சரியாக விளங்கிக் கொள்ளவும் இந்தியத் துணைக் கண்டச் சமுதாயத்தை அதன் சீரழிவினின்று மீட்கவும் முடியும். மரபுடன் குருட்டுத்தனமாக மோதுவது, இறுதி ஆராய்வில் பிற்போக்கான சக்திகளையே ஆதரித்து நிற்கிறது. இந்திய சமுதாயத்தின் மரபுகட்கு அடிப்படையாக அமைந்துள்ள நால் வேதங்களையும், அதற்குப் பிற்பட்ட பழம் நூல்களையும் மரபுவாதிகள் தெய்விகமானவையாகப் போற்றினர். காலப்போக்கில் சமுதாய மாற்றங்கள் அவற்றை வியாக்கியானம் செய்வதில் புதிய பிரச்சனைகளை உண்டாக்கின. இதன் விளைவாக வேத நூல்கள் வேத மரபு சார்ந்தவர்கள் மத்தியில் முரண்பாடான கருத்துகளை உருவாக்கியது மட்டுமன்றி, வேத நூல்களை முற்றாகவே நிராகரிக்கும் சிந்தனை முறைகளும் ஏற்படுத்தப்பட்டன. வேதங்கள் சொல்வன சரியா பிழையா, சரியாயின் அதன் உண்மைப் பொருள் என்ன என்ற விதமாக வாதங்கள் வளர்ந்தனவேயொழிய, நவீன சிந்தனையும் மார்க்ஸிய வரலாற்று அணுகுமுறையும் பரிச்சயமாகும் வரை, வேதங்கள், தம் ஆரம்பத்தில் கூற முனைந்தவை யாவை, அவை எதைப் பிரதிபலித்தன என்பதில் அதிகம் தெளிவு பிறக்கவில்லை எனலாம்.
கொசாம்பி போன்றோர் வேத நூல்கள் அவை உருவான காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையையே அடிப்படையில் பிரதிபலித்தன என்பதை விளக்கினார்கள். சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாமே ஒரு கூட்டு சமுதாய வாழ்க்கை முறையினின்றும் உருவானவை என்று தெளிவுபடுத்தினர். சமுதாய அபிவிருத்தி, வர்க்க சமுதாயத்தின் வளர்ச்சி என்பன நீதிகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றுக்கு வழிகோலின. ஒரு சுரண்டல் சமுதாய அமைப்பு ஸ்திரமானபோது இவ்வாறான மரபுகள் எல்லாம் ஆளும் வர்க்கத்தினருக்குச் சாதகமான முறையில் அச்சமுதாய அமைப்பைப் பேணும்விதமாக ஒரு நிரந்தரத் தன்மை எய்தின. அந்த அமைப்பு, ஒரு நீண்ட வரலாற்றுக் காலக்கட்டத்துக்குப் பின்பு, சமுதாய மாற்றங்கட்கு ஈடுகொடுக்க முடியாமலும் சமுதாய மாற்றங்களை வேண்டி நின்ற சூழ்நிலைகட்கு முரண்பட்டும் நின்றது. இதன் விளைவாக, இம்மரபுகள் அவற்றின் சாராம்சத்தின்ன்று விடுபட்டு யந்திர ரீதியாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளன. சில சூழ்நிலைகளில் சமுதாயச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றைக் குரூரமாக விகாரப்படுத்தியதும் உண்டு. இவ்வாறான விகாரப்படுத்தல் ஆளும் வர்க்கத்தின் குறுகிய கால நலனையொட்டி அமைவதும் பெரும்பாலும் தவிர்க்க முடியாததே.
மரவு வழியாக வந்த விஷயங்கள் எல்லாமே சரியானவை - உள்ளபடியே பேணப்பட வேண்டியவை என்ற வாதம், சமுதாய மாற்றங்களின் விளைவாகத் தம் வர்க்க நலன்களும் அதிகாரங்களும் அழிந்துவிடுமே என்று அஞ்சும் ஒரு வர்க்கத்துக்கு உரியன. எனினும், மனித சமுதாயத்தின்மீது மரபின் பிடிப்பு மிகவும் பலமானது: பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் போன்றன காலப் போக்கில் மக்கள் மத்தியில் ஊறிப் போய்விடுகின்றன. சமகாலச் சூழலில் அவசியமற்றன மட்டுமன்றிக் கெடுதலானவை என்று பரவலாகவே தெரிந்த சில மரபுவழிப் பயிற்சிகளும் கடைபிடிக்கப்படுகின்றன. நீண்ட கால நடைமுறையும் சமுதாய மாற்றங்களின் நிர்ப்பந்தங்களுமே மனிதனை அவற்றின் பிடிப்பினின்று மெல்ல மெல்ல விடுவிக்கின்றன. அப்படியுங்கூடச் சில காரியங்கள் குறைந்தபட்சம் பாசாங்காகவேனும் கடைபிடிக்கப்படுவதை நாம் உணராம். இத்தகைய சூழ்நிலையில் மரபை அப்படியே பேண விரும்புவோர், அது சாத்தியமற்றது என்று தெரிந்தும் அதன் காரணங்களை உணரவோ, ஆராயவோ முடியாமல் "கலி முற்றிவிட்டது, காலம் கெட்டுப் போயிற்று" என்று முணகிக்கொண்டே நொடிந்து சிதைந்த மரபைத் தம்மால் முடிந்தவாறு பேண முனைகிறார்கள். சில சூழ்நிலைகளில் சமுதாயச் சிக்கல்கள் இவர்கட்குச் சாதகமாக அமையும்போது வேதகாலத்தை நோக்கிச் சமுதாயத்தைச் செலுத்தப் போராடுவார்கள். இவர்கள் கூறும் வேதகாலம் என்னவென்று இவர்கட்குத் தெரியுமா என்பது வேறு விஷயம். ஆயினும் படுபிற்போக்குச் சக்திகள் இவர்களுடன் ஒன்றிணைவது மட்டும் தவிர்க்க முடியாதது.
மரபு வழி வந்த மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவுக்கொவ்வாத பழக்க வழக்கங்களையும் களைந்தொழிய முனையும் பகுத்தறிவுக்காரர்கள், அவற்றைச் சமுதாய முழுமையின் கூறுகளாகவும் வாழ்க்கையினின்று ஒரேயடியாகப் பிரித்து நோக்கமுடியாத விஷயங்களாகவும் அறிந்துகொள்வதில்லை. எனவே, இவர்கள் சமுதாயத்தைப் பகுதி பகுதியாகக் கழற்றிச் சீர்திருத்த முனையும் "மெக்கானிக்குகளாகி விடுகிறார்கள். இந்தப் பழுதுப் பார்த்தல் சீர்திருத்தத் திருமணம், 'கலப்புத் திருமணம்', 'பிள்ளையார் சிலை உடைப்பு, ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்வது போன்று துண்டு துண்டாக நடைபெறும். இதன் ஒட்டுமொத்தமான விளைவு என்னவென்றால், ஒரு சடங்கின் இடத்தில் இன்னொரு சடங்கும் ஒரு சமுதாய ஊழலின் இடத்தில் இன்னொரு சமுதாய ஊழலும் வந்து அமைவதுதான். மரபின் பொருந்தாமை காரணமாக ஏற்படும் பிரச்சினைகளையே பிரதான முரண்பாடு என்று இனங் காண்பதால் இவர்களால் பெரும்பான்மை மக்களை வென்றெடுக்க முடிவதில்லை. முடிவில் இவர்களது வைத்தியமே ஒரு நோயாகி விடுகிறது. சாதி எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாகி இன்று அதுவே பிராமணரல்லாத உயர்சாதியினரின் பார்ப்பணியமாகி விட்டமை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
பகுத்தறிவுவாதிகள் தாம் தூக்கியெறிய முனைந்த பழைமையின் இடத்தில் எதை வைப்பது என்பது பற்றிய தெளிவில்லாமலே இருந்தார்கள். இவர்களது வரலாறு சாராத கண்ணோட்டம் முழுமையும் தெளிவுமற்ற ஒரு சிந்தனை போக்குக்கே இடமளித்தது. ஆரம்ப காலங்களில் (பல்வேறு அரசியல், சமுதாய காரணங்களால்) இவர்களை நோக்கி வந்த இளைஞர்களை இவர்களால் வழிகாட்டி வளர்த்தெடுக்க முடியவில்லை. புராணப் படத்தின் இடத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி பாணியில் காதல், சரித்திர, சமுதாயச் சீர்திருத்த அரை வேக்காடுகளையே இவர்களால் தர முடிந்தது. சமஸ்கிருத எதிர்ப்பு தனித் தமிழுக்குப் போக முனைந்து திசை தெரியாமல் திண்டாட நேர்ந்தது. கலை இலக்கியத் துறையிலும் மேடைப் பேச்சிலும் கூட இவர்கட்கு தாமே உருவாக்கிய ஒரு போலித்தனத்தின் விளிம்பைத் தாண்ட முடியாமல் போய் விட்டது. இன்றைய அரைகுறை முதலாளித்துவ வளர்ச்சி, புதியகாலனித்துவத் தாக்கத்தின் விளைவுகளைச் சரிவர அடையாளங் காண முடியாமை இவர்களது அணுகுமுறையின் இயங்கியல் சாராத தன்மையையும் அதன் தோல்வியையுமே குறிக்கின்றது.
மார்க்ஸியவாதிகளது அணுகுமுறை எப்போதுமே சரியாக இருந்தது என்றோ அவர்களது நடைமுறை தவறுகட்கு அப்பாற்பட்டது என்றோ மார்க்ஸியத்தின் பேரில் வரட்டுத்தனமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வில்லை என்றோ வாதிட நான் முனையவில்லை. ஆயினும் மனித அறிவின் வரையறைகளையும், ஆராய்வு முறைகள் தவறுகட்கு உட்படலாம் என்பதையும் மார்க்ஸியம் மறுக்கவில்லை. வரட்டுத்தனமான பகுத்தறிவுவாதம் மார்க்ஸியத்துக்கு என்றுமே உடன்பாடானதல்ல. தவறுகளும், தோல்விகளும்கூட ஒரு மார்க்ஸியவாதியின் அறிவுத் தேடலில் பயன்படவே செய்கின்றன. எனவே மார்க்ஸியவாதி தன் அறிவை என்றைக்குமே சரியானதாகவும், முழுமையானதாகவும், மாற்ற முடியாத ஒன்றாகவும் கருதுவதில்லை. புதிய தகவல்களுக்கும் அனுபவங்கட்கும் சூழ்நிலைகட்கும் வரவேற்புள்ள மனத்தில் மூடப்பட்ட சிந்தனைக்கு இடமில்லை.
மார்க்ஸியவாதிகள் மரபை மனித சமுதாய வரலாற்றின் அடிப்படையில் வைத்து நோக்குவதால் அங்கு ஒருபுறம் சம காலத்துக்குப் பயனுள்ள வரலாற்றுவழிச்சாதனைகளையும், இன்னொருபுறம் வளர்ச்சியின் போக்கிற்கு இசையாமல் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கும் விஷயங்களையும் வேறுபடுத்தி அடையாளம் காணமுடிகிறது. பயனுள்ள அம்சங்கள் என்பவைகூட முற்றாகவே ஏற்ககூடிய வடிவில் குறைபாடுகள் இல்லாமல் இருப்பவையும் அல்ல பயனற்றவை யாவுமே ஒரே வீச்சில் பாரதூரமான எதிர் விளைவுகள் இல்லாமல் நீக்கப்படக்கூடியனவும் அல்ல. எனவே சமுதாய யதார்த்தத்தை மனத்தில் வைத்துக்கொண்டே மரபு சார்ந்த விஷயங்களை அணுக வேண்டியுள்ளது. கழிக்கப்பட வேண்டிய எந்த அம்சமும் பரவலான சமுதாய அங்கீகாரமின்றிக் கழிக்கப்படுவதில்லை. எனவே பரந்துபட்ட மக்களது நலன்களுக்கு விரோதமாக அமையும் அம்சங்களைத் தெளிவாக இனங்காண்பதும் எடுத்துக்காட்டுவதும் ஒரு முக்கியத் தேவையாகிறது. அது மட்டுமன்றி நிராகரிக்கப்படும் ஓர் அம்சம் போவதால் ஏற்படும் வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது என்ற கேள்வியும் முக்கியமாகிறது. இந்த அடிப்படையில்தான் மத சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம், மரபுகட்கு மதிப்பளித்தல் என்பன சோஷலிஸ் சமுதாய அமைப்பில் வலியுறுத்தப்படுகின்றன. சமய, கலாச்சார மரபுகள் சமுதாய விரோதமான முறையில் பிற்போக்குச் சக்திகளால் பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளிலும் சமுதாய மாற்றத்துக்கு.முரணாக நிற்கும் சூழ்நிலைகளிலும் மட்டுமே சம்பந்தப்பட்ட அம்சங்கள் பிரச்சனைக்குரியனவாகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது குறிப்பாக மூன்று முக்கியமான மகத்தான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன
1). உயிர்ச் செல் பற்றிய கண்டுபிடிப்பு,
2). சக்தி இடைவிடாது மாறிக் கொண்டே இருக்கிறது.
3).பரிணாம கோட்பாடு டார்வின் கண்டுபிடிப்பு,
இவை இயந்திர வகைப்பட்ட பொருள் முதல்வாத குறைபாடுகளை களைந்து இயக்கவியல் பொருள்முதல்வாத கோட்பாடுகளை மார்க்சும் எங்கெல்சும் உருவாக்குவதற்கு இக் கண்டுபிடிப்புகள் இடமளித்தன.
பெரியாரின் தத்துவக் கண்ணோட்டம் இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் என்று சொன்னோம் அவர் மனிதனின் உயிரியல் பண்பையும் சமூகவியல் பண்பையும் அறியாதவராக மனித உயிரின் இயக்கம் மனிதனின் குணாம்சம் மனிதனின் உணர்வு பேச்சு மற்றும் சிந்தனை பற்றி தத்துவ விளக்கம் அளிப்பது இதற்கு மேலும் சான்றாகும்.
மனிதன் பிறப்பில் இருந்து வேறுபடும் ஒரு உயிர் பிராணி அவன் பிற பொருள்களில் இருந்து வேறுபடும் ஒரு இயக்கம் வடிவத்தை உயிரியக்க வடிவத்தை கொண்டிருக்கிறான் உயிரில் இயக்கம் என்பது வளர்சிதை மாற்றம் கொண்டது இனப்பெருக்க சக்தி கொண்டது உறுத்துணர்ச்சியும்(Irritability) உலகின் மீது விளைவும் எதிர்வினையும் கொண்டது இப்பண்புகள் எவையும் இயந்திர இயக்கத்தில் இல்லை எனவே இயந்திர இயக்கத்தினோடு உயிருள்ள மனிதனை சமன்படுத்தி பேசுகிறார். இவை ஏற்புடையவை இல்லை.
பெரியார் கூறுகிறார் "உயிர் என்பது பொருள் தன்மையற்றது பொருள் தன்மையற்றது என்றால் இயங்கும் தன்மையுடையதாகும்.இயங்கும் தன்மை உடையது என்றால் அதற்கு வேலை செய்து கொண்டிருக்கும் இயந்திரத்தை அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் தன்மை சொல்லலாம் .எது போல என்றால் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலவும் ஒரு எஞ்சின் ஓடிக் கொண்டிருப்பது போலவும் ஒரு எஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பது போலவும் அசைவின் காரணமாக அதனுடன் இணைக்கப்பட்ட பல இயந்திர சாதனங்கள் இயங்குவது போல இயங்கும் தன்மை உயிருக்கு இருப்பதாக...." ( பெரியாரின் தத்துவ விளக்கம் பக்கம் 35-38).
பெரியாரைப் பொருத்தவரை ஒரு இயந்திரம் பல்வேறு பாகங்களை உருவாக்கப்பட்டிருப்பது போல மனிதன் ஒரு சரீர கூட்டமைப்பு ஆகும் இயந்திரங்கள் மின்சாரம் அல்லது டீசல் மூலம் இயங்குவது போல மனிதனின் ஆகராதிகள் மூலம் இயங்குகின்றன அவ்வளவுதான் பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் மனிதன் உயிரியல் இயக்க வடிவம் எவ்வித முக்கியத்துவம் பெறவில்லை .அது மட்டுமன்றி மனிதனின் சமூகவியல் இயக்கம் கூட பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் எவ்வித முக்கியத்துவம் பெறுவதில்லை மனிதன் பிற பொருள்களில் இருந்து வேறுபட்ட ஒரு உயிரினம் என்பது மட்டுமல்ல பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட ஒரு சமூக பிரியாணியும் ஆவான் .அவன் ஒரு சமூக வாழ்க்கை வாழ்கிறான் அவனுடைய வாழ்க்கை உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரமாகி அவனுக்கே உரிய பண்புகள் ஆகும்.
அவனுடைய சமூக வாழ்க்கை பொருளாதார வாழ்க்கை கலாச்சார ஆன்மீக வாழ்க்கை என இரு பக்கங்களாக கொண்டிருக்கிறது. மனிதன் ஒரு உயிர் பிரியாணி என்ற முறையில் அவன் உயிரற்ற பிற பொருள்கள் இருந்து வேறுபட்ட முறையில் உயிரியக்க வடிவத்தை கொண்டிருப்பது போல அவன் ஒரு சமூக பிரியாணி என்ற முறையில் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட முறையில் சமூகவியல் இயக்க வடிவத்தையும் கொண்டிருக்கிறான்.
பெரியார் கூறுகிறார்,"இன்றைய தினம் மனித சமுதாயத்திற்கு ஒன்று கூடி வாழ்வதற்கு அரசனும் சட்டமும் தண்டனையும் இல்லாவிட்டால் பாதுகாப்புடனும் சாந்தியும் சமாதானமும் சிறிதாக இருக்க முடியுமா நாம் யாவரும் இந்த அளவுக்கு வாழ்வது அரசாங்கம் சட்டம் தண்டனை ஆகியவை பாதுகாப்பு நிலை மனித சமுதாய கூட்டு வாழ்க்கைக்கு இவை போதும் என்றாலும் ஒரு அளவுக்குதான் போதுமானதாகும்....( பெரியாரின் தத்துவம் நூல் பக்கம்..(17-19)
பகைவர்கங்கள் தத்தம் நலனுக்காக மோதிக் கொண்டதன் விளைவாக குறிப்பாக சுரண்டும் ஆதிக்க வர்க்கங்கள் எதிராக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மோதி இதன் விளைவாக சமுதாயம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது என்பதே வரலாறு. ஆண்டைகளின் நலனுக்கு எதிராக அடிமைகள் மோதி இதன் விளைவாக ஆண்டான் அடிமை சமுதாயம் வீழ்ந்தது அதனை விட உயர்வான நிலப்பிரபுத்துவ சமூகம் தோன்றியது நிலப்பிரபுக்களுக்கு எதிரான பண்ணைஅடிமைகளின்போராட்டத்தால் நிலப்பரப்பு சமூகம் வீழ்ந்தது அதனிடத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றியது.
முதலாளி வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் போராட்டம் இதன் விளைவாக முதலாளித்துவ சமுதாயம் வீழ்ந்து சோசலிச சமுதாயம் மலர்ந்தது, இங்கெல்லாம் நாம் காண்பது என்னே அடிமைகளும் பண்ணையடிமைகள் தொழிலாளி வர்க்கமும் போராடியதன் விளைவாக ஓர் உயர்வான சமூகம் மலர்ந்தது.இவை கேடு விளைவிப்பதாக இல்லை எனலாம்.
மனிதனே அச்சுறுத்தி நேர் பாதையில் செலுத்துவதற்காக கடவுளையும் மதத்தையும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட பெரியோர்கள் படைத்தார்கள் என்று கூறும் பெரியார் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கும் மதத்திற்கும் தீவிரமான எதிரியாக திகழ்ந்தார் ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கடவுள் மதம் தோன்றுவதற்கு நிலவும் காரணமாக இருக்கும் அடிப்படைகளுக்கு எதிராகத் இல்லை. ஏன் அதைப் புரிந்து கொண்டதாக கூட தெரியவில்லை.
கடவுளும் மதமும் சில பெரிய மனிதர்களால் படைக்கப்பட்டு பரப்பப்பட்டது என்று அதன் தோற்றம் வளர்ச்சி பற்றி பெரியார் கருதுகிறார் எனவே அதற்கு எதிரான பிரசாரங்கள் மூலமே கடவுளையும் மதத்தையும் ஒழித்துவிட முடியும் என அவர் நம்புகிறார் ஆனால் கடவுளும் மதமும் தோன்றுவதற்கும் அது நிலவுவதற்கான காரணம் அவ்வளவு எளிமையானது அல்ல.
"எல்லா மதங்களும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்தும் புற சக்திகளைப் பற்றி அவர்களின் மனதில் ஏற்படும் வினோதமான பிரதிபிம்பமே மண்ணுலக சக்திகள் இயற்கை கடந்து சக்திகளின் வடிவத்தை ஏற்க்கும் ஒரு பிரதிபிம்பம்" என்று எங்கெல்ஸ் கூறினார்.
எனவே கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே மதம் உருவாக்கப் பட்டது என்றாலும் மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்திவரும் முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்படவேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனிஉடைமையை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகத்தின் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் சமுதாயத்தின் அங்கத்தினர்களும் சமுதாயத்தோடு விடுதலை பெறமுடியும் அப்போது தான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனை முடிக்க முடியும் அந்த காலத்தில்தான் மதம் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் என்ற கடைசி சக்தியும் மறைந்துவிடும்.
எனவே உண்மையிலேயே கடவுளையும் மதத்தையும் ஒழிக்க விரும்புபவர் ஒருவர் தனியுடமை ஒழித்து பொதுவுடமை சமூகத்தை வைப்பதையே நோக்கமாகக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை கட்டமைப்பு ஆக இருக்க வேண்டும்
ஆனால் பெரியாரை பொருத்த வரையில் அவருடைய நிலை இதற்குத் தலைகீழானதாகும் அவர் பல சமயங்களில் தனியுடமை ஒழிப்பிலும் சமூக தர்மத்திலும் நம்பிக்கையும் ஆர்வம் தெரிவித்து இருக்கிறார் என்பது உண்மை என்றாலும் , புதிய சமுதாயத்திற்கான வர்க்கப் போராட்டத்தை கடவுள் மத ஒழிப்புக்கான முன்நிபந்தனையாக எங்கும் கருதவில்லை மாறாக கடவுள் மத ஒழிப்பை வர்க்கப் போராட்டத்தின் கொள்வதன் மூலம் உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்
இதனால்தான் பெரியாரின் பொருள்களைப் பற்றிய விளக்கம் ஒவ்வொரு பொருளும் அவற்றின் உள் முரண்பாடுகளின் சுயமாக இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டு உயிரியல் பண்பை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது மனிதன் உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரம் மாற்றுவது ஆகியவற்றால் மற்ற உயிரினங்களை விட வளர்ந்தும் வேறுபட்டும் ஒரு சமூக வாழ்க்கை பெற்றிருப்பது காண மறுக்கிறது.
இன்றும் முதலாளித்துவ நாட்டு அரசுகள் எதுவும் மதத்தில் இருந்து விடுபட்டு விட்டதாக கூற முடியாது மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பெரும்பாலான மக்களின் மதத்தையே அரசுகள் சார்ந்து இருப்பதை காணலாம் இன்று இந்திய ஆளும் கட்சியான பிஜேபி மதத்தை தனது தேவைகளுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பது கண்கூடாக நாம் அறிந்த ஒன்றல்லவா இவை பின்னர் பார்ப்போம்.
இன்று பள்ளி கல்லூரிகளில் இந்த ஆளும் வர்க்க சித்தாந்தம் மாணவர்களிடையே பரப்பப்பட்டு இது நீதி படுத்தப்படுவது இந்த அரசு தனது சுரண்டலை மூடி மறைப்பதற்காகவே என்றால் மிகை ஆகாது .சித்தாந்தமும் வெறும் கருத்துக்களால் ஆன கருத்தியலே மூட நம்பிக்கைகளையும் பொய்மைகளையும் கொண்டது.மக்களுக்கு புரிய முடியாத மயக்க வார்த்தைகளில் கூறப்படுவது.மதம் தவிர்த்து எவ்வித நடைமுறையில் கொண்டது அல்ல இச் சித்தாந்தம்.
தொடரும்...